மட்டக்களப்பு மகிழவட்டவான் மகா வித்தியாலய மாணவி 2017ஆம் வருடத்துக்கான சமூக விஞ்ஞானப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.கருணாதாசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மகிழவட்டவான் மகா வித்தியாலய மாணவி கே.நிலாகினி 2017ஆம் வருடத்துக்கான சமூக விஞ்ஞானப் போட்டியில் தரம் 8 வகுப்புப் பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று கொண்டுள்ளார்.
அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூலமாக அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை பெற்றதன் அடிப்படையில் தேசிய மட்டத்தில் சிங்கள மொழி மூலமான மாணவர்களுடனும், ஆங்கில மொழி மூலமான மாணவர்களுடனும் இவரது திறமை கணிக்கப்பட்டு தேசிய ரீதியாக இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு தேசிய ரீதியாக சமூக விஞ்ஞான பாடத்துறை சார்பாக கிடைத்த முதலாவது விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் சிறுவன் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகி உள்ளார். இந்த விபத்து புத்தளம் – கொழும்பு வீதியின் நாகவில பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. புத்தளம், நாகவில்லுவ பிரதேசத்தை சேர்ந்த 12 வயதுடைய சிறுவன் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது சகோதரியுடன் நாகவில்லுவ பிரதேசத்தில் அமைந்துள்ள விற்பனை நிலையமொன்றுக்கு சென்று மீண்டும் வெளியே வரும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை ஏற்படுத்திய வேன் வாகனத்தின் சாரதி தப்பிச் செல்ல முற்பட்ட போது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா இராசேந்திரகுளம் விக்ஸ்காடு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை எக்கர் காணியினை இன்று காலை அப்பகுதியிலுள்ள வேறு ஒரு பிரிவினர் அபகரிக்க முற்பட்டபோது அதனை பொலிசார் தடுத்து நிறுத்தியுள்ளனர்
இச்சம்பவம் குறித்து கிராம அபிவிருத்திச்சங்கம் மேலும் தெரிவிக்கும்போது, பாரதிபுரம், இராசேந்திரகுளம் விக்ஸ்காட்டு பகுதிக்குரிய விளையாட்டு மைதானத்திற்கு என ஒதுக்கப்பட்ட ஒன்றரை ஏக்கர் காணியினை இன்று காலை 6 மணியளவில் அப்பகுதியிலுள்ள வேற்று இனத்தவர்கள்,
சமயத்தலைவர் தலைமையில் சென்ற குழுவினர் அபகரிக்கும் நோக்குடன் டோசரை எடுத்து அப்பகுதியை சுத்தப்படுத்த முற்பட்டபோது இராசேந்திரகுளம் பகுதியிலுள்ள கிராமத்தவர்கள் அதனை தடுத்து நிறுத்தியதுடன் அப்பகுதி இராசேந்திரகுளம் விளையாட்டு மைதானத்திற்குரிய பகுதி என வவுனியா பிரதேச செயலகத்தினால் கடந்த 2007ஆம் ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டு வழங்கப்பட்ட ஆவணங்களை காண்பித்துள்ளனர். இதையடுத்தும் அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை.
இச்சம்பவம் குறித்து நெளுக்குளம் பொலிசாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தியதுடன் காணி அபகரிக்கும் நோக்கில் சென்றவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
விளையாட்டு மைதானத்திற்கு ஒதுக்கப்பட்ட காணி என்பதை இனங்கண்ட பொலிசார் பதட்டத்தினை ஏற்படுத்திய இருபகுதியினரையும் அவ்விடத்திலிருந்து வெளியேற்றியதுடன் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் நோக்கி புகையிரதத்தில் சென்ற தமிழ் பெண் ஒருவருக்கு மிகவும் ஆபசமான வார்த்தைகளால் ஏசிய ஊழியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர், இன்று காலை புகையிரதத்தில் யாழ்ப்பாணம் சென்ற போது, சிங்கள மொழி ஊழியர், குறித்த பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
அத்துடன், “நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன்” என்று மிரட்டும் தொணியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டியுள்ளார்.
இந்த சம்பவம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், பலரும் விசனம் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவும்,
“துன்புறுத்தல்கள் மற்றும் இனவெறிக்கு இந்த நாட்டில் இடமில்லை. இவ்வாறான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேணடும். மீண்டும் இது போல் ஒரு சம்பவம் நடைபெறாமல் இருப்பதற்காக இவருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்” என தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அத்துடன் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சிலாவாவின் கவனத்திற்கு புகையிரத திணைக்களத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.
இதேவேளை, நாமலின் இந்த பதிவிற்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்ததுடன், தமது தரப்பு ஆதங்கத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.
பிரித்தானியாவில் இளம் தாயார் ஒருவர் ஒரே பிரசவத்தில் நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்து வரலாற்று சாதனை படைத்திருந்தார்.
பிரித்தானியாவின் ரோதர்ஹாம் பகுதியில் குடியிருக்கும் கிறிஸ்டின் கிளார்க் என்பவரே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே பிரசவத்தில் 4 பிள்ளைகளை பெற்றெடுத்து வரலாற்று சாதனை படைத்தார்.
உலகில் 70 மில்லியம் பேரில் ஒருவருக்கு மட்டுமே இதுபோன்ற வாய்ப்பு அமையும் என்பதால் கிறிஸ்டின் கிளார்க் வரலாற்றில் இடம்பிடித்தார். அதுமட்டுமின்றி ஒரே கருமுட்டையில் இருந்தே 4 பிள்ளைகளும் பிறந்துள்ளதும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.
தற்போது அந்த 4 குழந்தைகளுக்கும் 5 வயதாகிறது. நான்கு பிள்ளைகளின் பிறந்த நாளையும் சமீபத்தில் கொண்டாடியுள்ள அவர்களது தந்தை ஜஸ்டின், நால்வரும் பிறந்த போது 9lb-கும் அதிகமாக எடை இருந்துள்ளனர்.
அதேபோன்றே அவர்களின் விருப்பங்களும் தனித்தனியாக உள்ளது என்றார். மட்டுமின்றி நால்வருக்கும் வேறு வேறு வண்ணங்களிலான துணிமணிகள் வைக்கும் அலமாரி இருந்தது.
ஆனால் தற்போது அவர்கள் தங்கள் உடைகளை தங்களுக்குள்ளே மாற்றி அணிந்து கொள்ளும் பக்குவத்திற்கு வந்துள்ளனர் என்றார் ஜஸ்டின்.
அவரவர் உடைகளை வேறுபடுத்துவது இயலாமல் போன நிலையிலேயே புத்திசாலித்தனமாக அவர்கள் நால்வரும் தங்களுக்குள்ளே உடைகளை மாற்றிக்கொண்டனர் என்றும் குறும்பாக சொல்கிறார் கிறிஸ்டின் கிளார்க்.
ஒருபோதும் நால்வருக்கும் ஒரே மாதிரியான உடைகளை அனிவித்தது இல்லை எனவும், அவரவர் விருப்பத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதையே ஊக்குவிப்பதாகவும் கிறிஸ்டின் கிளார்க் பெருமையுடம் தெரிவித்துள்ளார்.
குட்டி தேவதைகளான அலெக்சிஸ், எலிஷா, டார்சி மற்றும் கரோலின் ஆகிய நால்வரும் பிறக்கும் முன்னர் சுமார் பத்தாண்டு காலம் மகப்பேறுக்காக பல முயற்சிகளும் மேற்கொண்டதாக கூறும் கிறிஸ்டின்(41) மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
மொத்த நம்பிக்கையும் தொலைந்து இனி ஒருபோதும் எந்த முயற்சிக்கும் இல்லை என முடிவெடுத்த நிலையிலேயே IVF வாயிலாக முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் வியப்பளிக்கும் வகையில் முதல் முயற்சியிலேயே கிற்ஸ்டின் கருவுற்றுள்ளார். ஒரே ஒரு குழந்தைக்காக காத்திருந்த கிளார்க் தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் நால்வர் பிறந்ததும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லமல் போனது எனக் கூறும் கிளார்க், தனது நீண்ட தூர லொறி ஓட்டுனர் பணியை தமது மகள்களுக்காக துறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி தமது மகள்கள் நால்வரை மிகவும் கண்டிப்புடனும் அதே வேளையில் அவர்களின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து வளர்க்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சோனம் கபூர் திருமணத்தின் போது அம்மா ஸ்ரீதேவியின் பாடலுக்கு நடனம் ஆட முடியாது என்று ஜான்வி கபூர் கூறியுள்ளார்.
ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூரின் தம்பி மகளும், பாலிவுட் நடிகையுமான சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை நாளை திருமணம் செய்து செய்ய உள்ளார்.
இந்நிலையில், நேற்று மெஹந்தி நிகழ்ச்சி நடந்தது. இந்நிலையில் இன்று சங்கீத் நிகழ்ச்சி நடக்கிறது.
இதனை தொடர்ந்து ஜான்வி கபூரும், குஷி கபூரும் மெஹந்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இன்று நடக்கும் சங்கீத் நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியின் பட பாடலுக்கு ஜான்வி நடனமாடுவார் என்று கூறப்பட்டது.
ஆனால் அம்மா பட பாடலுக்கு என்னால் நடனமாட முடியாது என்று ஜான்வி கபூர் மறுத்துவிட்டாராம். மேலும் ஸ்ரீதேவியின் தேசிய விருதை வாங்க டெல்லி சென்ற இடத்திலும், அம்மாவை நினைத்து ஜான்வி அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலிவுட் நடிகை சோனம் கபூரின் உடை அணியும் விதத்திற்கு பின்னால் அவரது பெரியம்மா ஸ்ரீதேவி இருப்பதாக முன்பே ஒருமுறை சோனம் தெரிவித்திருந்தார்.
பெரியம்மா இறந்த நிலையில் நடக்கும் இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த வேண்டாம் என்று சோனம் தனது தந்தை அனில் கபூரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஐரோப்பிய மொடல் அழகி Xenia Deli தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படம் எடுத்து தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது அதிகமாக லைக் செய்யப்பட்டுள்ளது.
Xenia Deli வயது 27. இவர் எகிப்து நாட்டை சேர்ந்த பில்லியனர் Ossama Fathi Rabah Al-Sharif, (65) என்பவரை 2016 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்களது திருமணம் கிரீஷ் நாட்டில் வைத்து 860,000 பவுண்ட்ஸ் செலவில் நடைபெற்றது, தன்னைவிட 37 வயதில் மூத்தவரான ஒருவரை பணத்திற்காக திருமணம் செய்துகொண்டார் என இவர்களது திருமணம் குறித்து விமர்சனங்கள் எழுந்தன.
அதுமட்டுமின்றி, திருமணத்திற்கு பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டால், எதிர்மறையான விமர்சனங்கள் இவர்களை இன்றுவரை தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால், தங்களது வயது வித்தியாசத்தை இவர்கள் ஒருபோதும் பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பெண்களுக்கான பேஷன் ஷோவில், அவர்களின் உள்ளாடையில் இந்து கடவுள் உருவம் இருந்ததால் பெரும் சர்ச்சை உண்டாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நகரில் ரோஸ்மவுண்ட் அவுஸ்திரேலியாவின் பேஷன் வீக் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியை பிரபல நீச்சல் உடை தயாரிப்பு நிறுவனமான லிசா புளூ ஏற்பாடு செய்துள்ளது. அப்போது அந்த நிறுவனத்தின் புதிய நீச்சல் உடைகளை அழகிகள் அணிந்து கொண்டு நடந்து வந்தனர்.
அதில் ஒரு பெண்ணின் உடையில் மட்டும் இந்து கடவுளான லட்சுமியின் உருவம் பதிக்கப்பட்டிருந்தது. மேல் சட்டை, கால் சட்டை இரண்டிலும் லட்சுமியின் படம் இடம்பெற்றதால், இதைக் கண்ட இந்து மதத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் இந்து அமைப்புகள் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அவுஸ்திரேலிய கொடிகளை எரித்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
அந்த போராட்டத்தில் இந்து கடவுளின் படம் பதித்த உள்ளாடைகளின் விளம்பரம், விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து லிசா புளூ நிறுவனம் மன்னிப்பு கேட்டதுடன் இந்து கடவுள் படம் பதிந்த உள்ளாடைகள் விற்கப்படாது என்றும் தெரிவித்துள்ளது.
வவுனியாவில் கோழி வளப்போர்கள் மீது பிரதேச சபையினரால் அரச வரி அறவிடப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன்காரணமாக சுயதொழிலான கோழி வளர்ப்பினைக் கைவிட வேண்டிய நிலைக்குச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டடோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து வடமாகாண சபை தலையிட்டு தீர்வினைப் பெற்றுத்தருமாறு பொதுமக்கள் கோரியுள்ளார்கள். இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் மேலும் தெரிவிக்கும்போது,
கடந்த சில தினங்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உத்தியோகத்தர்களினால் சாஸ்திரிகூழாங்குளம், ஈச்சங்குளம் பகுதிகளில் கோழி வளர்ப்பினை மேற்கொள்ளும் பொதுமக்களின் வீடுகளுக்குச் செல்லும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் கோழி வளர்ப்பினை மேற்கொண்டு வருபவர்களுக்கு வரி அறிவீடு செய்து வருகின்றனர்.
சுயதொழில் மேற்கொள்ளும் வறிய மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக இவ்வாறு கோழி வளர்ப்பினை மேற்கொண்டு வருகின்றனர். அதில் கிடைக்கும் வருமானத்தில் தமது வாழ்வாதாரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
வடமாகாணசபை உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து வறிய மக்களின் வாழ்வாதாரத்தினை மேற்கொள்வதற்காகத் தெரிவித்து கோழிகளை வழங்கிவிட்டு தற்போது பிரதேச சபையினூடாக மாதாந்த வரி அறிவிடப்பட்டு வருகின்றனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
அரசாங்கம் சுயதொழில்களை மேற்கொள்வதற்கு எவ்வித அரச வரிகளையும் விதிக்கவில்லை. மேலும் சுயதொழிலினை மேற்கொள்பவர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றது. இவ்வாறு இருக்கும்போது வடமாகாணத்தில் கோழி வளர்ப்பினை மேற்கொள்வதற்கு வரி அறவிடப்படுவதை நாங்கள் முற்றாக ஏற்றுக் கொள்ள முடியாது இவ்விடயத்தில் வடமாகாணசபை உடனடியாக தலையிட்டு ஒரு தீர்வினைப் பெற்றுத்தருமாறு பொதுமக்கள் மேலும் கோரியுள்ளார்கள்.
பிரித்தானியாவிலிருந்து இலங்கை வந்த பெண்ணொருவர் யாழ்ப்பாணம் சென்ற போது, நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.
கொழும்பில் இருந்து ரயில் மூலம் யாழ்ப்பாணம் சென்று கொண்டிருந்த போது, ரயில் ஊழியர் ஒருவர் தகாத வார்த்தைகளால் தமிழ் பெண்ணை திட்டியுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்து வரும் நிலையில், குறித்த ஊழியர் தகாத முறையிலும் இனத்துவேசமாகவும் நடந்து கொண்டமையால் ரயில் பயணித்தவர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டது.
இந்த சம்பவம் இன்றைய தினம் காலை 6.30 மணிக்கு கோட்டையிலிருந்து புறப்பட்டு யாழ்.நோக்கி வந்த புகையிரத நிலையத்திலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பிரித்தானியாவை சேர்ந்த குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து ஏறியுள்ளார். இதன் போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்தி கொண்ட புகையிரதத்தில் பணியாற்றுகின்ற சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர்,
குறித்த பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் குறித்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள் என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார்.
தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதன்போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.
இதன் போது நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிசாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான் தான் பெரியவன் என்று மிரட்டும் தொணியில் குறித்த ஊழியர் அனைவரையும் மிரட்டினார்.
இந்த சம்பவங்கள் நடைபெற்று கொண்டிருந்த போது குறித்த ரயிலில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் எவரும் சம்பவ இடத்திற்கு வருகை தரவில்லை. இதனால் பயணித்த அனைவரும் பயத்தில் உறைந்திருந்தார்கள்.
புகையிரதம் யாழ்.பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், சம்பவம் தொடர்பில் யாழ்.புகையிரத அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டது. இதனை அடுத்து இது தொடர்பில் தான் உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் முறைப்பாடு ஒன்றை செய்வதாக அவர் கூறினார்.
இதேவேளை இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி பொதுத்தராதர உயர்தர மாணவர்களுக்கு இறுதி பரீட்சையின் போது வழங்கப்படும் நேரத்தை விட மேலதிகமாக 15 நிமிடங்களை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இறுதி பரீட்சையின் போது, வழங்கப்படும் நேரம் குறைவாக இருக்கின்றமை மாணவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினையாக உள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு வினாக்களை தெரிவு செய்வதற்காக மேலதிக நேரத்தை வழங்குவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்பிரகாம் பகுதி 2 வினாத்தாளுக்காக மேலதிகமாக 15 நிமிடங்கள் வழங்கப்படவுள்ளதாக பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ். பிரணவதாசன்
சிங்கப்பூரில் இருந்து இலங்கை வந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கொண்டு வந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரண்டு பெண்களின் கைப்பைகளிலும் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபா என விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் தற்போது ரசிகர்களை சந்தித்துள்ளது எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்துள்ளார். அவரின் ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை அருகே உள்ள பனையூரில் கடந்த 2 நாட்களாக ரசிகர்களை விஜய் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
இதனால் அரசியலுக்கு வரப்போவதற்கான அறிவிப்பை விஜய் வெளியிடுவாரா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இது வழக்கமான சந்திப்புதான் என்றும் வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
யாழ். மாதகல் பகுதியில் 13 வயதான மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இசை நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்கு வீட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், குறித்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவியை காணவில்லை என வீட்டார் தேடிய போது, அவர் மரம் ஒன்றில் தூக்கிட்டு கொண்டுள்ளதனை அவதானித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கு வழங்கப்பட்ட இடமாற்றத்தை இரத்து செய்யுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடமையை பொறுப்பேற்றிருந்தார். அதன் பின்னராக காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் நிலவி பல குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டன.
உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பல சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்திருந்தார். அத்துடன் பொலிஸ் அதிகாரிகளுடன் இணைந்து பல்வேறு வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுத்தமையினால் யாழில் அமைதியான நிலை காணப்படுகிறது.
தற்போது யாழ் குடாநாடு அமைதியாக உள்ள நிலையில், நீதிபதிக்கு இடமாற்றம் வழங்கியமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கொடூரமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட பலருக்கு நீதிபதி இளஞ்செழியன் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார். இதில் இராணுவத்தினரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
லண்டனில் உள்ள ஈழத்தமிழர் ஒருவரின் வீட்டில் நேற்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. லண்டன் வெம்பிளி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த வீட்டில் இருந்த கடவுள் படத்திற்கு ஏற்றப்பட்டிருந்த மெழுகுவர்த்தியே, வீடு பற்றி எரிந்ததற்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. லண்டன் வெம்பிளி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.