வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி!!

வவுனியா உக்குளாங்குளம் பாரதி முன்பள்ளியின் விளையாட்டுப் போட்டி கிராம அபிவிரித்திச் சங்கத்தின் தலைவர் இ.பரமேஸ்வரன் தலைமையில் நேற்று (07.05) நடைபெற்றது.

நிகழ்வில் விருந்தினர்கள் மாணவர்களால் மாலைபோட்டு வரவேற்கப்பட்டதுடன் பாடசாலை மற்றும் தேசியக்கோடி ஏற்றப்பட்டு உக்குளாங்குளம் சிவன் கோவில் பிரதம குரு சிவசிறி தியாகசக்திதரக்குருக்களால் ஆசியுரை வழங்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தது.

முன்பள்ளி மாணவர்களின் உடற்பயிற்சி, நடன நிகழ்வு மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றதுடன், வெற்றிபெற்ற மாணவர்களுக்கு அதிதிகளால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் பூ.சந்திரபத்மன், வவுனியா சுகாதாரத்திணைக்களம் வைத்தியகலாநிதி எம்.மதிதரன், முன்பள்ளி உதவிக்கல்வி பணிப்பாளர் த.தர்மபாலன், பண்டாரிக்குளம் கிராம உத்தியோகத்தர் எஸ்.பி.உமாபதி, அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி ராதிகா விஜியகுமார் மற்றும் மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

மகனின் உடலுறுப்பை தானம் தர தயாரான பெற்றோர் : திடீரென உயிர்பிழைத்த அதிசயம்!!

 

அமெரிக்காவைச் சேர்ந்த சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த பின் கோமாவில் இருந்து அவன் நலமாகிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த ட்ரெண்டன் மக்ன்லி (13) என்ற சிறுவனுக்கு சமீபத்தில் நடந்த விபத்தில் தலையில் பயங்கரமாக அடிப்பட்ட நிலையில் மூளை பாதிக்கப்பட்டது. ட்ரெண்டனுக்கு 3 முறை தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் அவனுக்கு உடல்நலம் சரியாக வில்லை.

இதையடுத்து ட்ரெண்டன் கோமா நிலைக்கு சென்ற நிலையில் அவன் இனி உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனால் சிறுவனின் பெற்றோர் அவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

இந்நிலையில் ட்ரெண்டன் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்வதற்கு முந்தைய நாள் அவனுக்கு நினைவு திரும்பியது. தற்போது அவன் உடல்நலம் தேறிவருகிறான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

திருமணமான சில மாதங்களில் ஒன்றாக உயிரிழந்த சகோதரர்கள் : சோக சம்பவம்!!

தமிழ்நாட்டில் மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கீழ்வேளூரில் வசித்து வரும் ராமலிங்கத்தின் மகன்களான கணேசனும், ராஜாவும் டிவி கேபிள் ஒயரை சரி செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென இருவர் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதையடுத்து கணேசன் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். விசாரணைக்காக வந்த பொலிசாரிடம் மின்சாரம் தாக்கியது குறித்து விளக்கமளிக்கும்போது ராஜாவும் உயிரிழந்தார்.

இருவருக்கும் திருமணமாகி 9 மாதங்களே ஆன நிலையில், இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தமிழர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை!!

 

இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற கல்வீச்சு சம்பவத்தில் சிக்கி, அங்கு சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர்- குல்மார்க் பகுதியில் போராட்டத்தின் இடையே போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு பதிலடியாக பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்தனர். போராட்டக்காரர்கள் நடத்திய கல் வீச்சு தாக்குதலில் அப்பகுதியில் சுற்றுலா சென்ற சென்னையை சேர்ந்த திருமணி (21) என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சம்பவத்தில் சில வாகனங்கள் கல்வீச்சுக்கு இரையானதாக கூறப்படுகிறது. அதில் ஒரு வாகனத்தில் இருந்த சென்னை இளைஞர் படுகாயம் அடைந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர் மெஹ்பூபா முஃப்தி, வெட்கத்தால் எனது தலை கவிழ்ந்து போயுள்ளது என உருக்கமுடன் தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, நமது மாநிலத்திற்கு வந்த ஒரு விருந்தாளியை கல்லால் அடித்து நாம் கொன்றுள்ளோம், இந்த உண்மையில் இருந்து நம் முகத்தை இனி எங்கே மறைத்து வைப்போம் என முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா வேதனை தெரிவித்துள்ளார்.

கடற்கரையில் சடலமாக கிடந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் மகன்!!

பிரபல மூத்த திரைப்பட தயாரிப்பாளர் கோபால் ரெட்டியின் மகன் பார்கவ் கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக வலம் வந்தவர் கோபால் ரெட்டி. இவர் மகன் பார்கவ் (45). கோபால் ரெட்டி பார்கவ் ஆர்ட்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வந்தார். ரெட்டி கடந்த 2008-ல் உயிரிழந்துவிட்டார்.

பார்கவ் இறால் பண்ணை நடத்தி வந்த நிலையில் நெல்லூரில் உள்ள கடற்கரையில் இன்று காலை மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் பார்கவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் பார்கவின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அறையில் மர்மமாக இறந்து கிடந்த இளைஞர் : உடனிருந்த இளம்பெண் தேடும் பொலிசார்!!

திருப்பதியில் உள்ள ஹொட்டல் அறையில் இளைஞரை கொலைசெய்துவிட்டு தப்பியோடிய இளம்பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர். டெல்லியை சேர்ந்த மோகன் என்ற நபரும், திவ்யா என்ற பெண்ணும் திருப்பதி கோயிலுக்கு எதிரே உள்ள ஹொட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.

6 திகதி மாலை ஹொட்டலில் தங்கியவர்கள் 7 ஆம் திகதி மாலை அறையை காலி செய்து சென்றுள்ளார்கள். பின்னர் மீண்டும் அன்றிரவே வந்து ஹொட்டல் அறையில் தங்கியுள்ளார்கள்.

இந்நிலையில், அடுத்த நாள் மதியம், அறையை விட்டு வெளியே வந்த பெண், எனது கணவர் பிறகு வருவார் என ஹொட்டல் ஊழியர்களிடம் கூறிச் சென்றுள்ளார்.

இப்பெண் சென்ற பின்னர், சந்தேகத்தின் அடிப்படையில் ஊழியர்கள் அறையின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, இளைஞர் இறந்துகிடந்துள்ளார். இதனைத்தொடர்ந்து பொலிசிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விசாரணையில் குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் ஒரு சில ஆதாரங்கள் கிடைத்தன. இவர்கள் உண்மையிலேயே கணவன் மனைவியா? அல்லது கள்ளத் தொடர்ப்பு வைத்து இங்கு வந்தார்களா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கொலை சம்பவம் குறித்து 4 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரனை செய்து வருகிறோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தந்தை திருடிய செல்லிடப்பேசியை அவரிடமிருந்து களவாடிய மகள்!!

செல்லிடப்பேசி ஒன்றை நபர் ஒருவர் களவாடியுள்ளார், அந்த களவாடப்பட்ட செல்லிடப்பேசியை அவரது மகள் அவரிடமிருந்து களவாடி பயன்படுத்திய போது, பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த யுவதி காதலருடன் பேசிக்கொண்டிருந்த போது தொலைபேசி அழைப்பு விபரங்களின் அடிப்படையில், பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். அம்பலான்தொட்ட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அம்பலாந்தொட்ட மாமடல பிரதேசத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவரின் மனைவி தனித்திருந்த போது, வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கையடக்கத் தொலைபேசியையும் களவாடிச் சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

செல்லிடப்பேசி தொடர்ச்சியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தொலைபேசி அழைப்பு விபரங்களின் ஊடாக இந்த கண்டு பிடிக்க முடியாது என சந்தேக நபர் கருதியுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் திருடிச் சென்ற செல்லிடப்பேசியை அவரது மகள் எடுத்து அதனை காதலருடன் பேசுவதற்கு பயன்படுத்தியுள்ளார். தொலைபேசி அழைப்பு விபரங்களின் அடிப்படையில் சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவில் ரகசியமாக வெடிபொருட்களைத் தேடும் பொலிஸார் : மர்மம் என்ன?

வவுனியா கூமாங்குளம் நூலக வீதியிலுள்ள சின்னம்மன் கோவிலுக்கு முன்பாகவுள்ள காணியைச் சுற்றி சுற்றுமதில் அமைக்கப்பட்ட காணி ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று மாலை 5 மணியளவில் வவுனியா நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப்பகுதியில் அகழ்வுப்பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு அகழ்வுப்பணிகளை மேற்கொள்வதற்கு பொலிசார், கடற்படையினர், கிராம சேவையாளர், எனப்பலரும் அங்கு சமூகமளித்துள்ள நிலையில் அகழ்வுப்பணி இடம்பெறும் பகுதிக்கு ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை.

அத்துடன் பிரதேச சபை உறுப்பினர்களையும் அவ்விடத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. கடந்த காலங்களில் வவுனியாவில் பல பகுதிகளில் இவ்வாறு வெடி பொருட்களை தேடும் பணிகள் படையினரால் இடம்பெற்றிருந்தபோதிலும் அங்கு ஊடகவியலாளர்களை அனுமதித்திருந்தனர்.

எனினும் இன்று இடம்பெறும் அகழ்வுப்பணிகள் மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்வதற்கு காரணம் தெரியவரவில்லை.

மூன்று நாளில் இருட்டு அறையில் முரட்டு குத்து படைத்துள்ள வசூல் சாதனை!!

கடந்த வாரம் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இப்படம் இளைஞர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றி நடைபோட்டு வருகிறது. கிட்டதட்ட 3 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படம் வெற்றியடைந்தாலும் அப்படத்தின் நாயகன் கவுதம் கார்த்திக்குக்கு கெட்ட பெயரை சம்பாதித்துக் கொடுத்துவிட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு இப்படியொரு எதிர்மறையான விமர்சனம் வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த கவுதம் கார்த்திக், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமான டயலாக் பேச மாட்டேன் என்று நிபந்தனை விதித்து அதன்படியே நடித்திருக்கிறார்.

ஆனால் அப்படியிருந்தும் சில பேர் ஏன் கவுதம் கார்த்திக் இந்த படத்தை ஒப்புக்கொண்டார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

17 ஆவது முறையாகவும் சீரழிக்கப்பட்ட சிறுமி!!

17 முறை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான சிறுமியொருவர் தொடர்பான செய்தி காலியில் பதிவாகியுள்ளது. இந்த சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானமை தொடர்பில் தற்போது பல வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

இதன்படி, மொரவக நீதவான் நீதிமன்றத்தில் 10 வழக்குகளும், மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் 5 வழக்குகளும், உடுகம நீதவான் நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும்.

இந்நிலையில் சிறுமி இறுதியாக தங்கியிருந்த சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச் சென்றிருந்த வேளை மீண்டும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிய சிறுமி கொழும்பு பகுதிக்கு வந்துள்ளார். இதன்போது இளைஞர் ஒருவர் அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து சென்று சில நாட்களாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் பெண்ணொருவரின் ஊடாக அவருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தான் பணிபுரியும் இடத்தில் இருந்து இது தொடர்பில் தனது தாயிக்கு அறிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பிற்கு வந்த தாய் தனது மகளை அழைத்து சென்று காலி காவல்துறையில் ஒப்படைத்துள்ளார்.

பின்னர் குறித்த சிறுமி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு பொருத்தமான சிறுவர் இல்லம் ஒன்றை கண்டறியுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதுவரை அந்த சிறுமியை காலி பகுதியில் உள்ள சிறுவர் இல்லத்தில் தடுத்து வைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் காலி காவல்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பெண்களை விற்பனை செய்த நபர் கைது : விற்பனைக்கு தங்கவைக்கப்பட்டிருந்த பெண்களும் கைது!!

 

மாத்தறை – வலஸ்முல்ல பகுதியில் மிகவும் சூட்சமமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த விடுதி நேற்று மாலை முற்றுகையிடப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடும் யுவதிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 25, 26, மற்றும் 41 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதோடு குறித்த நிலையத்தினை நடத்திச்சென்றதாக சந்தேகிக்கப்படும் 55 வயதுடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்கள் மூவர் மற்றும் ஆண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் குழந்தைகளை கடத்திய தந்தை!!

தெஹிவளை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரது இரண்டு குழந்தைகளை அவரது கணவரே கடத்திச் சென்றிருப்பதாக தெஹிவளை காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விவாகரத்துக்கு விண்ணப்பித்து நீதிமன்ற அறிவுறுத்தல்படி குழந்தைகள் அவர்களது தாயாரின் பொறுப்பில் இருந்து வந்தனர்.

இந்தநிலையில் கனடாவில் உள்ள அவரது கணவரால் குழந்தைகள் இரண்டு பேரும் கடத்தப்பட்டிருப்பதாக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடத்தல் என்ற அடிப்படையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், குழந்தைகளை கடத்த பயன்படுத்திய சிற்றூர்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தது என்று தெரியவந்திருப்பதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இளம் தம்பதியினருக்கு நடந்தது என்ன : பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பம்!!

குருநாகல் ரிதீகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சடலங்கள் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

34 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

34 வயதுடைய கணவரும் 29 வயதுடைய மனைவியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். சடலங்கள் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காதலனுடன் இறுதிப் பயணம் சென்ற பாடசாலை மாணவி : படங்கள் இணைப்பு!!

 

பண்டுவஸ்நுவர – இரத்முலுகந்தயில் காதல் ஜோடி பயணித்த உந்துருளியொன்று பள்ளத்தில் வீழ்ந்து இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 17 வயதான பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவியின் பெற்றோர் வீட்டில் இல்லாத வேளை, 18 வயதான காதலன் அவரை தனது உந்துருளியில் விகாரை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். குறித்த இளைஞரின் நண்பர்களும் அவர்களுடன் சென்றுள்ளனர். இதன்போது அதிக சரிவை கொண்ட வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையே உந்துருளி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

எனினும் இதனை அவதானிக்காத நண்பர்கள் சற்றுதூரம் சென்ற பின்னர் இவர்களை காணாது தேடியுள்ளனர். இதன்போது அவர்கள் இருவரும் பயணித்த உந்துருளி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதை அவதானித்துள்ளனர்.

பின்னர் குறித்த காதல் ஜோடியை குளியாபிட்டிய மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், மாணவி ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த 18 வயதான இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றியனுப்பப்பட்டுள்ளார்.

   

வவுனியா குறும்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!!

தற்காலதில் இலங்கையில் சினிமாதுறை பல்வேறு வகையில் முட்டிமோதி முன்னேறிக்கொண்டு இருக்கின்றது. அதற்கான அடித்தளமாக தரமான குறும்படங்கள் உள்ளன என்பது நிதர்சனமான உண்மை. அதற்கு வவுனியா மண்ணிலிருந்து வெளிவந்த “மேட்டுக்குடியின் கூப்பாடு” குறும்படம் ஒரு சான்று.

ரிஷாந் மற்றும் ரஞ்சித் இன் கன்னிப் படைப்பாக இருப்பினும் அவர்களின் முற்சியாலும் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பினாலும் நேர்த்தியான முறையில் படம் வெளிவந்துள்ளது.

உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்படும் ஒரு படத்தின் அடிப்படையே அதன் நம்பகத்தன்மை தான். அந்த வகையில் வவுனியாவிலிருந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை கதைக்கருவாக கொண்டு எடுக்கபட்ட “மேட்டுக்குடியின் கூப்பாடு” படத்தின் நம்பகத்தன்மையை விமர்சனத்திற்குட்படுத்த முடியாதுள்ளது.

படைப்பாளிகள் சமூகத்தால் ஆற்றப்படும் எதிர்வினைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில் படைப்பாளிகளின் சமூகப் பிரச்சனையும் அவர்களின் திறனும் தங்கியுள்ளது. படம் வெளியான நாளிலிருந்து இளைஞர்களான ரிஷாந், ரஞ்சித் இருவரும் அவற்றை நேர்மையாக கையாண்டுவருவதை அவதானிக்க முடிகின்றது.

படத்தின் தரம் மற்றும் இருவரின் பொறுப்புணர்ச்சியினதும் விளைவாக மேட்டுகுடியின் கூப்பாடு குறும்படத்தை பற்றிய நேர்காணலுக்கு இலங்கையின் முதன்மையான தமிழ் தொலைக்காட்சியான நேத்ராவினால் படத்தின் இயக்குனர் ரிஷாந்தும் நடிகர் ரஞ்சித்தும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இந் நிகழ்ச்சி நேரடியாக மே 2ம் திகதி ஒளிபரப்பப்பட்டிருந்தது. இதன்போது “மேட்டுக்குடியின் கூப்பாடு” பற்றி கலந்துரையாடியதோடு படத்தின் கருவான மாவட்டளவில் நடைபெறும் பகிடிவதை (District ragging) பற்றியும் இருவரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

தரமான குறும்படத்தை உருவாக்கியதன் மூலம் வவுனியா மண்ணிற்கு பெருமை சேர்த்தவர்கள் நேத்ராவின் நேர்காணலில் பங்குகொண்டதன் மூலம் மேலும் வவுனியாவிற்கு ஒரு வைரத்தை சூட்டியுள்ளனர்.

 

வரலாற்றுச் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவி!!

மட்டக்களப்பு மகிழவட்டவான் மகா வித்தியாலய மாணவி 2017ஆம் வருடத்துக்கான சமூக விஞ்ஞானப் போட்டியில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.கருணாதாசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட மகிழவட்டவான் மகா வித்தியாலய மாணவி கே.நிலாகினி 2017ஆம் வருடத்துக்கான சமூக விஞ்ஞானப் போட்டியில் தரம் 8 வகுப்புப் பிரிவில் அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் பெற்று கொண்டுள்ளார்.

அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழி மூலமாக அதி கூடிய புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினை பெற்றதன் அடிப்படையில் தேசிய மட்டத்தில் சிங்கள மொழி மூலமான மாணவர்களுடனும், ஆங்கில மொழி மூலமான மாணவர்களுடனும் இவரது திறமை கணிக்கப்பட்டு தேசிய ரீதியாக இரண்டாம் இடம் கிடைத்துள்ளது.

இதேவேளை, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு தேசிய ரீதியாக சமூக விஞ்ஞான பாடத்துறை சார்பாக கிடைத்த முதலாவது விருது இது என்பதும் குறிப்பிடத்தக்கது.