இலங்கை நாடாளுமன்றத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட விசேட அறையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
புத்த சாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவின் அலுவலக அறையிலேயே தீ அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. தீ அணைப்பு ஊழியர்கள் தீயை அணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
காற்று சீரமைப்பு ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியாவில் நேற்று மாலை கூமாங்குளம் கோவில் வீதியிலுள்ள வெற்றுக் காணி ஒன்றில் பெருமளவு வெடி பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வன்னி கடற்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் அப்பகுதியில் அகழ்வுப்பணியினை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றின் அனுமதி பெறப்பட்டு நேற்று மாலை அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகள் இரவு நிறுத்தப்பட்டு இன்று (09.05) காலை திரும்பவும் 8மணியளவில் தோண்டப்பட்டது.
எனினும் அப்பகுதியில் வெடி பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை இதையடுத்து 9.30 மணியளவில் அகழ்வுப்பணிகள் நிறுத்தப்பட்டு தோண்டப்பட்ட பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இவ்வாறு வவுனியாவில் பல பகுதிகளிலும் விடுதலைப் புலிகளின் வெடி பொருட்களைத் தேடி மேற்கொள்ளப்படும் அகழ்வுப்பணிகளில் கணிசமானளவு பகுதிகளில் வெடி பொருட்கள் எவையும் படையினரால் மீட்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், திசுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதிலும் ஸ்டெம்செல்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே இந்த ஸ்டெம் செல்களின் முக்கியத்துவத்தையும் பற்றி நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
நமக்கு வயது ஆக ஆக நமது குடலில் உள்ள ஸ்டெம் செல்கள் பல காரணிகளால் காலப்போக்கில் திறம்பட செயல்பட தவறிவிடுகிறன, இதனால் நாம் எளிதில் நோய்வாய்ப்படுகிறோம்.
ஆனால் நாம் உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் 24 மணி நேரத்தில் குடலில் உள்ள ஸ்டெம்செல்கள் புத்துயிர் பெறுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி பல்கலைக்கழக உயிரியல் ஆராய்சியாளர்களான ஓமர் இல்மாஸ் மற்றும் டேவிட் சபாடினி ஆகிய இருவரும் எலிகளை வைத்து ஆய்வு ஒன்றை நடத்தினர்.
அப்போது இரண்டு வகையாக எலிகளை பிரித்து ஆராய்ச்சி செய்ததில் உண்ணாவிரதம் இல்லாத எலிகலின் உடலில் இருந்த ஸ்டெம்செல்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஆனால் உண்ணாவிரதம் இருக்கவைக்கப்பட்ட எலிகளின் உடலில் இருக்கும் செல்களில் குளுக்கோஸ் உருவாவதற்கு பதிலாக கொழுப்பு அமிலங்கள் கரைந்து ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெறுவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உடலில் காயம் அல்லது நோய் தொற்று ஏற்பட்டால் அதை மீண்டும் சரி செய்ய ஸ்டெம் செல்கள் உதவுகின்றன.
நோய்வாய்ப்பட்ட முதியவர்கள் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கீமோதெரபி சிகிச்சை பெருவதால் அவர்களது குடல் செல்கள் பாதிக்கப்படும். எனவே அவை மீண்டும் குணமடைய நீண்ட நாட்கள் ஆகலாம்.
எனவே உண்ணாவிரதம் இருப்பதன் மூலம் ஸ்டெம் செல்கள் புத்துணர்ச்சி பெருவதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் விரைவில் குணமடைய இதனால் அதிக வாய்ப்புள்ளது.
குருணாகல் பகுதியில் மலைபகுதியில் இருந்து கீழே விழுந்தமையினால் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டுவஸ்நுவர ரன்முழுகந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த காதல் ஜோடி ஒன்று மலைபகுதியில் இருந்து கீழே விழுந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அனர்த்தம் காரணமாக 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், 12 வகுப்பில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரத்தில் விகாரைக்கு பெற்றோர் சென்றிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த மாணவி தனது காதலனுடன் ஸ்கூட்டர் ஒன்றில் சென்றுள்ளார். எனினும் இருவரும் மலை பகுதி உள்ள இடம் ஒன்றிற்கே சென்றுள்ளனர். இதன் போது அழுத்தம் அதிகமானதால் மோட்டார் சைக்கில் மலையில் இருந்து கீழே விழுந்துள்ளது.
அரை மணித்தியாலங்களின் பின்னர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் மாணவி அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹட்டன் நகரில் உள்ள அரசாங்க நிதி நிறுவனம் ஒன்றில் தற்காலிகமாக பணி செய்யும் பெண் ஒருவர் அணிந்திருந்த புடவையால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. புத்தர் உருவத்துடனான புடவை அணிந்துள்ளார் என பொலிஸாருக்கு கிடைக்க தகவலுக்கமைய பொலிஸார் அந்த புடவையை மீட்டுள்ளனர்.
பச்சை நிறத்திலான புடவையின் போடர் பகுதியில் புத்தர் உருவம் பொறிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த புடவையில் வெட்டிய பகுதியில் மேல் சட்டை தைத்து குறித்த பெண் அணிந்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்றுள்ள இந்த பெண் பல்கலைக்கழகம் செல்லும் வரையில் தற்காலிகமாக அரசாங்க நிதி நிறுவனத்தில் சேவை செய்கின்றார். அவரால் ஹட்டனில் ஆடையகம் ஒன்றில் நேற்று மாலை 1500 ரூபாவுக்கு புடவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த ஆடையை கடையை பொலிஸார் பரிசோதித்த போது புத்தர் உருவம் அச்சிடப்பட்ட புடவைகள் இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பெண் மற்றும் கடை உரிமையாளரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். புத்தர் உருவம் பொறிக்கப்பட்ட அனைத்து புடவைகளையும் பொலிஸார் தங்கள் பொறுப்பில் எடுத்துள்ளனர்.
இலங்கைப் பயனர்களின் தகவல்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வைபர் தொடர்பாடல் செயலி நிறுவனம் உறுதிமொழி வழங்கியுள்ளது.
இதன்படி, தகவல்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படும் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இணையத்தில் பல்வேறு தகவல் கசிவு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் எட்டு மில்லியன் பயனர்கள் வைபர் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். வைபர் மிகவும் பாதுகாப்பான ஓர் தொடர்பாடல் முறைமை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி தர மறுத்ததால் மனைவி சடலத்தை கணவர் தோளில் சுமந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் படூன் மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு செல்ல பெண்ணின் கணவர் அமரர் ஊர்தியை மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்க அவர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது தோளிலேயே சடலத்தை சுமந்து சென்ற கணவர் வழியில் சென்ற டெம்போ ஓட்டுனர்களிடம் தன்னை வீட்டில் இறக்கிவிடும் படி கெஞ்சியது நெஞ்சை உருக்கும் விதத்தில் இருந்தது.
இதனிடையில் மருத்துவமனையில் இரண்டு அமரர் ஊர்திகள் உள்ளது எனவும், அதை யார் கேட்டாலும் நாங்கள் கொடுப்போம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய தலைமை மருத்துவ அதிகாரி, சம்பவம் குறித்து விசாரணை நடந்த உத்தரவிட்டுள்ளேன். இதில் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என கூறியுள்ளார்
தமிழகத்தில் எரித்து கொல்லப்பட்டதாக கூறப்பட்ட இளைஞன் உயிருக்கு போராடிய நிலையில் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தையடுத்த புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் செளந்தர் ராஜன். மும்பையில் உள்ள கடற்படை விமான தளத்தில் பணியாற்றி வரும் இவரும், திருத்தணி அதிமுக நகர்மன்ற முன்னாள் செயலர் சௌந்தரராஜனின் மகளான அஸ்வினியும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஊருக்கு வந்த ராகேஷ் தன் உறவினர்களுடன், அஸ்வினியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது அஸ்வினியின் தந்தையான செளந்தர் ராஜன் அவரை தீ வைத்து எரித்து கொன்றுவிட்டதாக கூறப்பட்டது.
ஆனால் சவுந்தரராஜன் தரப்பில் ராகேஷ் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது.இதையடுத்து அந்த இளைஞன் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் தீயில் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர், நான் சேர்மேன் பெண்ணை காதலித்தேன், அவர்கள் வீட்டிற்கு பெண் கேட்டுச் சென்ற போது பெட்ரோல் ஊற்றிக் கொள்ளச் சொன்னார்கள், இதனால் பேஸ்புக் மற்றும் எனது நண்பர்கள் எனக்கு ஆதரவு வேண்டும் என்று கூறியுள்ளார்.
70 சதவீத தீக்காயமடைந்த அவர் உடனடியாக சிகிச்சைக்காக மும்பையிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
திருமணம் முடிந்த பத்தே நாளில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்திருக்கும் இளம் பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரமாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் வீரகட்லம் மண்டலை அடுத்த கடேகல்ல கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி. இவருக்கு பேஸ்புக் மூலம் சிவா என்ற இளைஞர் நண்பராகியுள்ளார்.
இவர்களின் நட்பு நாளைடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த போது, சரஸ்வதியின் வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து அதே மாவட்டம் சிட்லபுடிவலசா கிராமத்தைச் சேர்ந்த கௌரிசங்கர ராவ் என்ற இளைஞனுடன் சரஸ்வதியை அவரின் பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இருந்த போதிலும் சிவா மீது கொண்ட காதல் காரணமாக அவருடன் சேர்ந்து கணவரை கொலை செய்வதற்கு சரஸ்வதி திட்டம் தீட்டியுள்ளார். இதனால் திருமணம் முடிந்த 10 நாட்களுக்கு பிறகு சரஸ்வதி-கெளரிசங்கர் ஷாப்பிங் சென்றுள்ளனர். பின்னர் ஆட்டோவில் திரும்பி கொண்டிருந்தனர்.
தங்கள் கொலை திட்டத்தில் பணம், டீசல், விஸ்கி பாட்டில் கொடுத்து ஆட்டோ ஓட்டுநரையும் சேர்த்துக் கொண்டதால், ஓரிடத்தில் கழிவறைக்கு செல்ல வேண்டும் என்று கூறிவிட்டு, சரஸ்வதி இறங்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அந்த ஆட்டோவை சிவா மற்றும் ரெளடிகள் இரண்டு பேர் தொடர்ந்து வந்த நிலையில், ஆட்டோ நின்றவுடன் கெளரி சங்கரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
எல்லாம் முடிந்த பின்பு அங்கு வந்த சரஸ்வதி எதுவும் தெரியாதது போல் கதறி அழுதுள்ளார். இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் சரஸ்வதியின் கைத்தொலைபேசி பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.
அதில் அவர் சிவாவுடன் அதிக நேரம் பேசியது தெரியவந்ததையடுத்து அவரை கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி அவருடன் இருந்த கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஓய்வுபெற்ற சிறைக்காவலர் ஒருவர் 46 ஆண்டுகளாக பர்கர் சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார். 28,788 Big Mac எனப்படும் பர்கர் சாப்பிட்டதற்காக, 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார்.
46 ஆண்டுகளாக தொடர்ந்து பர்கர் சாப்பிட்டு வந்ததில், அதன் எண்ணிக்கை இரண்டு நாட்களுக்கு முன்பு 30,000 பர்கர் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது, ஒரு நாளைக்கு இரண்டு தடவை பர்கர் சாப்பிடுவேன், கடந்த 46 ஆண்டுகளில் 8 நாட்கள் மட்டுமே பர்கர் சாப்பிடாமல் இருந்துள்ளேன்.
இதனால் எனது ஆரோக்கியம் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை. 86 கிலோ எடையில் குதிரையை போல ஆரோக்கியமாக இருக்கிறேன் என்றும் பர்கரில் உள்ள சோஸ் எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். 1972 ஆம் ஆண்டிலிருந்து பர்கர் வாங்கியதற்கான ரசீதை பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.
என் சொந்த சகோதரனை இழந்துவிட்டேன் என்று பார்கவ் மரணம் குறித்து நடிகர் விஷால் கண்ணீருடன் டுவிட் செய்துள்ளார். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளரான கோபால் ரெட்டியின் மகன் பார்கவ்வின் உடல் நேற்று நெல்லூரில் உள்ள வகடா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
1980 மற்றும் 1990-களில் அதிக படங்களை தயாரித்தவர் தான் கோபால் ரெட்டி. தன் மகனான பார்கவ் பெயரில் பார்கவ் ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வரும் இவர் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இவரது மகன் பார்கவ் நேற்று முன்தினம் நெல்லூரில் உள்ள இறால் பண்ணைக்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் வீடு திரும்பாத நிலையில், நேற்று காலையில் அவரது உடல் வகடா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பிரபல திரைப்பட நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், என் சொந்த சகோதரனை இழந்துவிட்டேன்.
இந்த குற்ற உணர்வில் இருந்து என்னால் வெளிவரவே முடியாது. நான் உன்னை இழந்துவிட்டேன். ஏன் இப்படி, உன் பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருப்பேனே. இந்த செய்தியை எழுதும் போதே அழுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சமந்தா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் தற்போது ஆறு படங்களில் நடித்து வருகின்றார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பல படங்களில் இவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவர் சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமந்தாவிடம் பாலியல் தொல்லை குறிப்பாக குழந்தைகளிடம் அப்படி நடந்துக்கொள்பவர்களை என்ன செய்ய வேண்டும்? என்று ஒரு பேட்டியில் கேட்டுள்ளனர்.
அதற்கு சமந்தா ‘கண்டிப்பாக அவர்களை எல்லாம் தூக்கில் போட வேண்டும்’ என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த முஸ்தஃபா என்ற கணினி பொறியாளர், இட்லி மாவு உற்பத்தியில் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் முஸ்தஃபா, கணினி பொறியியல் படித்து முடித்துவிட்டு பின்னர், பெங்களூருவில் உள்ள IIM-யில் மேலாண்மை பட்டம் பெற்றார்.
இவருக்கு உணவின் மீது மிகுந்த ஆர்வம் உள்ளது. எனவே, அதே துறையில் சாதிக்க நினைத்த முஸ்தஃபா, கணினித் துறையில் நல்ல வேலை கிடைத்த போதிலும் இட்லி மாவு தயாரிப்பில் இறங்கினார்.
இதற்காக, தனது நான்கு சகோதரர்களை சேர்த்துக் கொண்ட முஸ்தஃபா, கடந்த 2006ஆம் ஆண்டு பெங்களூருவில் ’iD Fresh’ எனும் நிறுவனத்தை சிறிய அளவில் தொடங்கினார். மாவு தயாரிப்பு மற்றும் அதனை Pack செய்வதற்கு என இயந்திரங்களை வாங்கினார்.
முஸ்தஃபா தனது நிறுவனத்தை தொடங்கிய சில வாரங்களிலேயே நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றது. அதனைத் தொடர்ந்து, உணவினை பதப்படுத்தும் செயற்கை பொருட்களை சேர்க்காமல் வீட்டிலேயே சமைக்கக் கூடிய வகையில் பெரிய அளவில் தயாரிப்பில் ஈடுபட்டார்.
இதனால் இவரது தொழில் விரிவடைந்தது. பெங்களூரு மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேலான சில்லறை வர்த்தக நிலையங்கள் உருவாகின. இவற்றில் 12 ஆயிரம் நிலையங்கள் குளிர்சாதன வசதியை கொண்டவை. தங்களின் தயாரிப்புகளை முடிந்த அளவுக்கு இந்த நிலையங்களுக்கு கொடுப்பதே இவர்களின் இலக்கு.
அதன் பின்னர், சில ஆண்டுகள் கழித்து தங்களின் வர்த்தகத்தை மேலும் விரிவுபடுத்த நிதி திரட்ட விரும்பினார் முஸ்தஃபா. 2014ஆம் ஆண்டு Helion Venture Partners என்ற நிறுவனத்திடமிருந்து 35 ஆயிரம் கோடி நிதி திரட்டினர்.
அச்சமயம் இந்நிறுவனத்தில் 600 பேர் பணி புரிந்தனர். இந்த நிதி மேலும் வளர்ச்சியடையவும், புதிய பொருட்களை சந்தைப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாட்கள், 8 அலுவலகங்கள், 7 தயாரிப்பு நிலையங்களைக் கொண்டு செயல்படுகிறது.
இட்லி, தோசை மாவு தவிர, மலபார் பரோட்டா மற்றும் சட்னி ஆகியவற்றையும் இவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர். தென்னிந்தியாவில் இவர்கள் தயாரிப்பு முன்னணியில் உள்ளது.
ஒவ்வொரு கடையிலும் எவ்வளவு மாவு தேவைப்படும் என்று கணிக்கும் அளவிற்கு இவர்களின் வளர்ச்சி உள்ளது. இன்று இந்நிறுவனம், இந்தியா முழுவதும் சுமார் 9 நகரங்களில் தங்களுடைய கிளைகளை நிறுவியுள்ளது.
நாள் ஒன்றுக்கு சுமார் 50,000 Packets தோசை மற்றும் இட்லி மாவை தயாரித்து, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுமார் 15,000-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு விநியோகம் செய்கின்றனர்.
இது தொடர்பாக முஸ்தஃபா கூறுகையில், ‘சுகாதார முறையில் Pack செய்து நுகர்வோர் பயன்பாட்டிற்கு அளிக்க வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். தரம் மற்றும் Packaging ஆகியவற்றில் நாங்கள் மிகுந்த கவனம் கொண்டுள்ளோம்.
இந்த தயாரிப்புக்கான சந்தை பெரிய அளவிலேயே உள்ளது. 50 ஆயிரம் கிலோ மாவு தயாரிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இட்லி செய்ய தேவைப்படும் அளவாகும்.
தயாரித்த மாவை, Seal Pack செய்து அதிகாலை 5 மணிக்கு குளிரூட்டப்பட்ட வண்டிகளில் ஏற்றுகிறோம். பெங்களூரு மற்றும் இதர நகரங்களுக்கும் இது கொண்டு செல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான சில்லறை வர்த்தக நிலையங்களுக்கு மதியம் 2 மணிக்குள்ளாக எங்கள் தயாரிப்பு சென்றடைந்துவிடும்.
ஒன்லைன் மூலம் நுகர்வோர் தங்களின் தேவைக்கு ஏற்ப Order செய்து கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும், ஒன்லைன் மூலம் நடைபெறும் வர்த்தகம் மிக சிறிய அளவிலேயே உள்ளது. எங்களின் முன்னோடி நிலையை தக்க வைத்துக் கொள்ளவே விரும்புகிறோம்.
2020ஆம் ஆண்டுக்குள் ஆயிரம் கோடி மதிப்புள்ள நிறுவனமாக உருவெடுக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு’ என தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் 90 களில் கொடிகட்டி பறந்த நடிகை ரோஜா. இயக்குநர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.13 ஆண்டுகள் ஆசையாக காதலித்து, சாதியை மீறி பெற்றோர் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர்.
ரோஜா பிரபல நடிகையாக வலம் வந்தபோது, இயக்குநர் செல்வமணி படங்களை இயக்கியது குறைய தொடங்கியது. இதனால் மார்க்கெட் இல்லாத ஒரு இயக்குநரை திருமணம் செய்துகொள்ளபோகிறாயா என ரோஜாவின் மனதை பலர் குழப்பியபோதும், தனது காதலின் மீது உறுதியாக இருந்து செல்வமணியை மணமுடித்தார் ரோஜா.
காதல் அனுபவங்கள் பற்றி ரோஜா கூறியதாவது:-தெலுங்கில் பிற இயக்குநர்களுடன் பணியாற்றினாலும் செல்வாவிடம் இருந்த நற்பண்புகளால் நான் கவரப்பட்டேன்.என்னை பற்றி எனது, அம்மாவிடமும், அண்ணனிடமும் அக்கறையாக பேசி வந்திருக்கிறார் செல்வமணி.
இதனால், அவர்கள் இருவருக்கும் செல்வமணியை ரொம்பவே பிடித்துவிட்டது. `அம்மாவுக்கு செல்வான்னா உயிர்’ என்று நானே சொல்லும் அளவுக்கு எனது தாயாரிடம் நற்பெயர் பெற்றார் செல்வமணி.
காதலை செல்வமணி வெளிப்படுத்தியது பற்றி ரோஜா பகிர்ந்துகொண்டது, செல்வா என்னிடம் எப்போதும் போலவே பழகினார். ஆனால் அம்மாவிடம் என் மீதான அவரது தனிப்பட்ட அக்கறையை வெளிப்படுத்தி வந்தார்.
அவ்வப்போது ஒரு தாய்க்கு உரிய பரிவுடன் என் மீதான அவரது அக்கறையையும் தாண்டிய பிரியம் அம்மாவுக்கு தெரியவர, `நம் மகளுக்கேற்றவர் இவரே’ என்ற முடிவுக்கு அம்மா வந்துவிட்டார். இது பற்றி அண்ணன்களிடமும் அம்மா கூற, அண்ணன்கள் தரப்பிலும் செல்வாவின் விருப்பத்துக்கு தடையில்லை.
எங்கள் `ரெட்டி’ வம்சத்தில், வேறு சாதியில் பெண்ணோ, மாப்பிள்ளையோ பெரும்பாலும் எடுக்கமாட்டார்கள். செல்வா முதலியார் வகுப்பு. கனிவான அணுகுமுறையாலும், பண்பாலும் சாதியை மீறி எங்களைக் கவர்ந்துவிட்டார், செல்வா.
ராஜமுந்திரியில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன். அன்றைக்கு எனது பிறந்த நாளும்கூட. அங்கே வந்த செல்வா, என்னை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறினார்.
நீ இப்போது பிசியான ஆர்ட்டிஸ்ட். உன் ஆசை தீர நடி. எப்போது போதும் என்று தோன்றுகிறதோ, அப்போது நாம் திருமணம் செய்து கொள்வோம் என்றார். அடடா! எப்படிப்பட்ட மனிதர் இவர்!’ என்று எனக்குத் தோன்றியது. நானும் சம்மதம் தெரிவித்து விட்டேன்.
செல்வா எனக்காக 13 வருடம் காத்திருந்து கைபிடித்தார். நிஜமாகவே இப்படி ஒரு காதல் கணவர் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்கிறார் ரோஜா.ரோஜா- செல்வமணி தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்ற செட்டிகுளம் பிரதேச இளைஞர் கழக பிரதேச சம்மேளன பொதுக் கூட்டம் கடந்த 2018.05.05 அன்று காலை 09.30 மணிக்கு நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட உதவிப் பணிப்பாளர், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி சுவானி, வவுனியா பிரதேச இளைஞர் சேவை அதிகாரி இ.சசிதரன், செட்டிகுளம் பிரதேச சபை உறுப்பினர் சி.நிரூஞன், பிரதேச சபை உறுப்பினர் சஜீவன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
செட்டிகுளம் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2018ம் ஆண்டின் புதிய தலைவராக நவநீதன் தெரிவு செய்யப்பட்டார்.
வவுனியா மன்னார் வீதியில் செஞ்சிலுவை சங்கத்தின் ஏற்பாட்டில் தாகசாந்தி பந்தல் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் 155வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக வவுனியா மாவட்ட செஞ்சிலுவை சங்கமானது இவ் ஏற்பாட்டை செய்து பொதுமக்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் வேலைத் திட்டங்களை பரப்புரை செய்துவருகிறது.
செஞ்சிலுவை சங்கத்தினரின் தகாசாந்தி நிலையத்தில் பொது மக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு குளிர்பானங்களை அருந்தியதை காணக்கூடியதாக இருந்தது.