வவுனியா நகரபிதா இ.கெளதமன் அதிரடியாக சில அரச அதிகாரிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார். வவுனியா நகரபிதாவாக பொறுப்பேற்ற இ.கெளதமன் நகரின் துரித அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் நோக்குடன் அரச திணைக்களங்களின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்நிகழ்வு வவுனியா பொதுநூலக கேட்போர் கூடத்தில் கடந்த (04.05) அன்று காலை 10 மணியளவில் நகரபிதா கெளதமன் தலைமையில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் நகரசபை செயலாளர் தயாபரன் , நகரபிதாவின் ஆலோசகர் சஜீந்திரா ஆகியோருடன் மாவட்ட அரச திணைக்களங்களின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டிருந்ததுடன் நகரின் துரித அபிவிருத்திக்குரிய சில திட்டங்கள் நகரபிதாவினால் முன்மொழியப்பட்டு அதற்கான ஆதரவுகளை அதிகாரிகள் வழங்குவதாகவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 15 வயது சிறுமியை அவரின் இரண்டு அத்தைகள் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் முகமது ஹுசைன் உமர். இவரின் மகள் மைனாஸ் முகமது குரேஷி (15). குரேஷியின் தாய் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில் சிறுவயதிலிருந்து பாட்டி வீட்டில் அவர் வசித்து வந்தார். பாட்டி வீட்டில் அவருடன் இரண்டு மாமாவான யூசுப் மற்றும் சலீமும் அத்தைகளான சபீரா சயித் (45) மற்றும் ஸ்வலிஹா சயித் (35) ஆகியோரும் வசித்து வந்தனர்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சபீராவும் சயித்தும் குரேஷிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக மருத்துவரிடம் இருவரும் கூறினார்கள். குரேஷியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர்.
ஆனால் குரேஷியின் கழுத்தில் அடிப்பட்ட தழும்பு இருந்ததால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
பொலிசார் வந்து விசாரித்து போது முதலில் சரியாக பேச மறுத்த சபீராவும், சயித்தும் பின்னர் குரேஷியை தாங்கள் தான் துப்பட்டா துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக ஒப்பு கொண்டனர்.
மேலும், குரேஷி பிராத்தனை செய்ய மறுத்ததால் ஆத்திரத்தில் இப்படி செய்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்தனர். இதோடு சபீராவின் 17 வயது மகளும் குரேஷியை துன்புறுத்தியாக தெரியவந்த நிலையில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலியில் மர்மநபர்கள் இருவர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாவது நுழைவாயிலில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முகத்தை மூடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நேற்று அதிகாலை எரிபொருள் நிலை ஊழியர்களை துப்பாக்கி மூலம் மிரட்டியுள்ளனர். இதன்போது 38000 ரூபா பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நள்ளிரவு தாண்டிய வேளையில் முகத்தை மூடிக்கொண்டு இலக்க தகடு அற்ற மோட்டார் சைக்களில் வந்த கொள்ளையாளர்கள் இருவரே கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் எரிபொருள் நிலையத்தில் 3 ஊழியர்கள் இருந்துள்ள நிலையில் கொள்ளைக்காரர்கள் துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டியுள்ளனர்.
அந்த சந்தர்ப்பத்தில் துப்பாக்கியை கொள்ளைக்காரர் இயக்க முயற்சித்துள்ளார். இதன் போது இரண்டு தோட்டாக்கள் வெளியாகியுள்ள நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இரண்டு தோட்டக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கொள்ளையடித்தவர்கள் பின்னதுவ பிரதேசத்தில் தப்பி சென்றுள்ள நிலையில், அங்கு எரிபொருள் பெற்றுக் கொள்ள வந்த வேன் ஒன்று கொள்ளையர்களின் மோட்டார் சைக்கிளை துரத்தி சென்ற போதிலும் அவர்களை பிடிக்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த எரிபொருள் நிலையத்தில் கடந்த 8 மாதங்களுக்குள் இரண்டு முறை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதியும் 60000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
க.பொ.த உயர்தர பரீட்சை போது பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்த புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
எதிர்வரக்கூடிய க.பொ.த உயர்தர பரீட்சையில் இருந்தே இதனை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வவுனியா இளைஞர் கழகத்தின் ஏற்ப்பாட்டில் வவுனியா மாவட்ட இளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டியில் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்றது.
சிறிசுமன விளையாட்டுக் கழகமும் கூமாங்குளம் சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்திற்கும் நேற்று (06.05.2018) இறுதி கரப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.
இப் போட்டியில் சிறி சுமன விளையாட்டு கழகத்தினை 2/1 புள்ளிகள் வித்தியாசத்தில் கூமாங்குளம் சுப்பர் ஸ்ரார் விளையாட்டு கழகம் வெற்றி பெற்று தேசிய ரீதியில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவாகியதது
இவர்கள் தொடர்ச்சியாக 5 வருடங்களாக தேசிய ரீதியில் நடைபெறும் கரப்பந்தாட்ட போட்டிக்குத் தெரிவாகி கூமாங்குளம் கிராமத்திற்கு மட்டுமன்றி வவுனியா மாவடத்திற்கே பெருமையினை தேடித்தந்துள்ளனர்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (06.05) நிறைவுக்கு வந்த 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் வவுனியாவைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டி இலங்கை ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பை கொடுத்திருந்தது. இப்போட்டியில் பங்குபற்றியிருந்த இந்திய வீரர்களான அஜய் குமார் பிந்த் (15 நிமிடங்கள் 08.40 செக்.), குர்ப்பிரீத் (15 நிமிடங்கள் 32.53 செக்.) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
எனினும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இலங்கையின் கிந்துஷனுக்கும், நேபாளத்தின் நரேஷ் புதாவுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது.
குறித்த இரு வீரர்களும் கடைசி சுற்றின் இறுதி 100 மீற்றர் தூரத்தை விட்டுக்கொடுக்கமால் சரிசமமாக ஓடியிருந்ததுடன், வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் மைதானத்தில் இருந்த இலங்கை ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், போட்டியின் எல்லைக் கோட்டை ஒரே நிமிடங்களில் குறித்த இரண்டு வீரர்களும் நிறைவுசெய்தாலும், 0.08 மில்லி செக்கன் வித்தியாசத்தில் இலங்கையின் கிந்துஷனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
இதன்படி, குறித்த போட்டியை 16 நிமிடங்கள் 18.43 செக்கன்களில் நிறைவு செய்து கிந்துஷன் 3ஆவது இடத்தையும், 16 நிமிடங்கள் 18.51 செக்கன்களில் நிறைவு செய்த நேபாள வீரர் நரேஷ் புதா 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன்,
கடந்த வாரம் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் போட்டியை 33 நிமிடங்கள் 56.87 செக்கன்களிலும், 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள் 56.10 செக்கன்களிலும் நிறைவு செய்து தங்கப் பதக்கங்களை வென்றதுடன், தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரிற்கும் தெரிவாகினார்.
எனவே, கிந்துஷனின் இந்த வெற்றியானது தெற்காசிய போட்டியொன்றில் முதல் தடவையாக சுவட்டு நிகழ்ச்சியொன்றுக்காக வவுனியா மாவட்டத்துக்கும், வட மாகாணத்துக்கும் கிடைத்த முதல் வெற்றியாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நேற்று (06.05) நிறைவுக்கு வந்த 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாகேந்திரம் உதயவானி பெண்களுக்கான ஈட்டி எறிதலிலும், வட மாகாணத்தைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தினர்.
தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது நாள் போட்டிகள் மைதான நிகழ்ச்சிகளுடன் நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது.
இதில் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் பங்குபற்றிய நாகேந்திரம் உதயவானி (39.12 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார். எனினும், குறித்த போட்டியில் இந்திய வீராங்கனை சன்ஜனா பலோதியா (48.08 மீற்றர்) புதிய தெற்காசிய கனிஷ்ட சாதனையுடன் தங்கப் பதக்கத்தையும், இலங்கையின் டி.எம்.ஐ ஹசன்தி (40.80 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டம் மூதூர் பிரதேசத்திலிருந்து அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பெற்று வருகின்ற நாகேந்திரம் உதயவானி, 3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் தமிழ் பேசுகின்ற ஒரேயொரு வீராங்கனையாக இடம்பெற்றிருந்தார்.
முன்னதாக கடந்தவாரம் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான ஈட்டி எறிதலில் (34.92 மீற்றர்ர) 2ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்ட உதயவானி, அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆசிய தகுதிகாண் போட்டியிலும் பங்குபற்றி (37.00 மீற்றர்) 2ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஈட்டி எறிதல் போட்டிகளில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்ட உதயவானி, முன்னதாக கடந்த வருடம் நடைபெற்ற கனிஷ்ட மெய்வல்லுனரிலும் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகணத்தின் அனுபவமிக்க பயிற்சியாளரும், திருகோணமலை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தருமான எஸ். விஜயனீதன் மற்றும் 2007இல் கொழும்பில் நடைபெற்ற அங்குரார்ப்பண தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்ற முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான கே.எம் ஹாரிஸின் வழிகாட்டலுடன் கடந்த 6 மாதங்களாக பல்வேறு கஷ்டத்துக்கும், இன்னல்களுக்கும் மத்தியில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வந்த உதயவானி,
சர்வதேச மட்டத்தில் தான் பங்குபற்றிய முதல் போட்டியிலேயே சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
தனது வெற்றி குறித்து உதயவானி ஆனந்த கண்ணீருடன் எமது இணையத்தளத்துக்கு கருத்து தெரிவிக்கையில், ”நான் இவ்வளவு தூரம் வருவதற்கு எனது பாடசாலையின் பயிற்றுவிப்பாளர் தினேஷ் குமார் ஆசிரியரே முக்கிய காரணம்.
நான் பாடசாலையில் வலைப்பந்தாட்டம், எல்லே போன்ற போட்டிகளில் விளையாடி வருகின்றேன். ஆனால் எனக்கு ஈட்டி எறிதல் போட்டிகளில் பயிற்சியளித்து இந்த நிலைக்கு தினேஷ் குமார் ஆசியர்தான் கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து விஜயனீதன், ஹாரிஸ் மற்றும் சுரேஷ் ஆசிரியர்களிடம் நான் தொடர்ந்து பயிற்சிகளைப் பெற்றேன். அதன் பிரதிபலனாக இன்று நடைபெற்ற போட்டியில் எனக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
நான் பதக்கமொன்றை பெற்றுக் கொள்வேன் என எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதிலும் குறிப்பாக எனது பெற்றோர்களும் என்னுடன் இருந்தால் இன்னும் சந்தோஷப்பட்டிருப்பேன் என கண்ணீர் மல்க” உதயவானி தெரிவித்தார்.
அத்துடன், ”எனக்கு இங்கு வருவதற்கு உதவி செய்த திருகோணமலை மெய்வல்லுனர் சங்கத்துக்கு நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இறுதியாக நான் நிச்சயம் அடுத்துவரும் ஒருசில மாதங்களில் நடைபெறவுள்ள அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவிலும் போட்டி சாதனையை முறியடிப்பேன்.
அந்தப் போட்டியிலாவது எனது அப்பா மைதானத்துக்கு வந்து எனது திறமையை பார்ப்பார்” என நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
இதேநேரம், போட்டியின் பிறகு உதயவானியின் பயிற்றுவிப்பாளரான எஸ். விஜயனீதன் கருத்து வெளியிடுகையில், ”உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக கனிஷ்ட மெய்வல்லுனர், ஆசிய தகுதிகாண் போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுக்கொண்ட உதயவானி, இன்று நடைபெற்ற போட்டியில் தனது சிறந்து தூரத்தைப் பதிவுசெய்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
உண்மையில் அவர் 40 மீற்றர் தூரத்தை தாண்டுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் காலில் ஏற்பட்ட உபாதையினால் அவரால் அந்த இலக்கை அடைய முடியாமல் போனது. எனவே அடுத்து நடைபெறவுள்ள அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவில் இலங்கை சாதனையை உதயவானி நிச்சயம் முறியடிப்பார்” என நம்பியிருக்கின்றோம் என்றார்.
கிந்துஷனின் போராட்டத்துக்கு வெற்றி
ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டி இலங்கை ரசிகர்களுக்கு மிகவும் விறுவிறுப்பை கொடுத்திருந்தது. இப்போட்டியில் பங்குபற்றியிருந்த இந்திய வீரர்களான அஜய் குமார் பிந்த் (15 நிமிடங்கள் 08.40 செக்.), குர்ப்பிரீத் (15 நிமிடங்கள் 32.53 செக்.) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
எனினும், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இலங்கையின் கிந்துஷனுக்கும், நேபாளத்தின் நரேஷ் புதாவுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவியது.
குறித்த இரு வீரர்களும் கடைசி சுற்றின் இறுதி 100 மீற்றர் தூரத்தை விட்டுக்கொடுக்கமால் சரிசமமாக ஓடியிருந்ததுடன், வெற்றி யாருக்கு என்பதை தீர்மானிப்பதில் மைதானத்தில் இருந்த இலங்கை ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.
எனினும், போட்டியின் எல்லைக் கோட்டை ஒரே நிமிடங்களில் குறித்த இரண்டு வீரர்களும் நிறைவுசெய்தாலும், 0.08 மில்லி செக்கன் வித்தியாசத்தில் இலங்கையின் கிந்துஷனுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
இதன்படி, குறித்த போட்டியை 16 நிமிடங்கள் 18.43 செக்கன்களில் நிறைவு செய்து கிந்துஷன் 3ஆவது இடத்தையும், 16 நிமிடங்கள் 18.51 செக்கன்களில் நிறைவு செய்த நேபாள வீரர் நரேஷ் புதா 4ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
கடந்த 2 வருடங்களாக வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் மரதன் ஓட்ட வீரரான நவனீதன் ஆசிரியரிடம் பயிற்சிகளைப் பெற்று வருகின்ற கிந்துஷன்,
கடந்த வாரம் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனரில் ஆண்களுக்கான 10,000 மீற்றர் போட்டியை 33 நிமிடங்கள் 56.87 செக்கன்களிலும், 5,000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள் 56.10 செக்கன்களிலும் நிறைவு செய்து தங்கப் பதக்கங்களை வென்றதுடன், தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடரிற்கும் தெரிவாகினார்.
எனவே, கிந்துஷனின் இந்த வெற்றியானது தெற்காசிய போட்டியொன்றில் முதல் தடவையாக சுவட்டு நிகழ்ச்சியொன்றுக்காக வவுனியா மாவட்டத்துக்கும், வட மாகாணத்துக்கும் கிடைத்த முதல் வெற்றியாகவும் வரலாற்றில் இடம்பிடித்தது.
800 மீற்றரில் அரவிந்தனுக்கு 4ஆவது இடம்
3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாமில் இடம்பெற்றிருந்த பதுளையைச் சேர்ந்த சந்திரகுமார் அரவிந்தன், ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் குறித்த போட்டியை ஒரு நிமிடம் 55.26 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்த அரவிந்தன், குறித்த போட்டியை ஒரு நிமிடம் 53.46 செக்கன்களில் நிறைவுசெய்து 3ஆவது இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் அவருடைய சிறந்த காலத்தை பதிவு செய்ய முடியாமல் போனது.
2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டத்தில் 800 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றி வருகின்ற அரவிந்தன், அன்று முதல் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா, கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டித் தொடர், ஜோன் டார்பட் கனிஷ்ட மெய்வல்லுனர் மற்றும் தேசிய இளையோர் விளையாட்டு விழாக்களில் வெற்றிகளைப் பதிவுசெய்துள்ளார்.
தட்டெறிதலில் பிரகாஷ்ராஜுக்கு 4ஆவது இடம்
3ஆவது தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடருக்கான இலங்கை குழாமில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நான்கு தமிழ் பேசும் வீர, வீராங்கனைகள் பங்குபற்றியிருந்தனர்.
இதில் போட்டிகளின் முதல் நாளான நேற்று (05) நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதலில் பங்குபற்றிய யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிகாஷ்ராஜ் (44.11 மீற்றர்) தனது சிறந்த தூரத்தைப் பதிவு செய்து 4ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு முதல் தேசிய மட்டப் போட்டிகளில் தட்டெறிதல் மற்றும் சம்மட்டி எறிதல் உள்ளிட்ட எறிதல் நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிகளைப் பதிவுசெய்து வருகின்ற யாழ். பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரி மாணவன் சிவகுமார் பிகாஷ்ராஜ்,
அண்மையில் நிறைவுக்கு வந்த 56ஆவது கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதலில் (39.73 மீற்றர்) புதிய போட்டி சாதனை படைத்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதலில் கலந்துகொண்டு, 42.50 மீற்றர் தூரத்தைப் பதிவுசெய்து 2ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா வரலாற்றில் யாழ். ஹார்ட்லி கல்லூரிக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்தவரும்,
2013 முதல் அக்கல்லூரியின் எறிதல் நிகழ்ச்சிகளின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்ற ஹார்ட்லி கல்லூரியின் பழைய மாணவரான ஹரிஹரனின் பயிற்றுவிப்பின் கீழ் அண்மைக்காலமாக பல வெற்றிகளைப் பெற்று வருகின்ற பிரகாஷ்ராஜ்,
தான் பங்குபற்றிய முதலாவது சர்வதேசப் போட்டியில் சிறந்த தூரத்தைப் பதிவுசெய்து வட மாகாணத்துக்கும் கௌவரத்தைப் பெற்றுக்கொடுத்தார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இளம்பெண் ஒருவர் காதுக்குள் கரப்பான்பூச்சியுடன் 9 நாட்கள் வாழ்ந்து வந்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தின் மெல்போர்ன் நகரில் குடியிருந்துவரும் Katie Holley சம்பவத்தன்று குளிர்ச்சியான ஏதோ ஒன்று காதுக்குள் நுழைந்தது போன்று இருந்ததால் தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு விழித்துள்ளார்.
பின்னர் குளியலறைக்கு விரைந்த அவர் காதை சுத்தம் செய்வதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். இருப்பினும் காதுக்குள் ஏதோ ஒன்று நகர்வது போன்று அவர் உணர்ந்துள்ளார்.
காட்டன் பயன்படுத்தி காதை மறுபடியும் சுத்தம் செய்த அவருக்கு, காதினுள் இருந்து கரப்பான்பூச்சியின் கால்களில் ஒன்று வெளியே வந்துள்ளது.
இதனையடுத்து கணவரின் உதவியுடன் மீண்டும் காதுக்குள் காட்டனை செலுத்தி சுத்தம் செய்துள்ளனர். ஆனால் Katie Holley-ன் காதுக்குள் சென்ற கரப்பான்பூச்சி மிகவும் ஆழமாக உள்ளே சென்றுள்ளது.
இதனையடுத்து சில மைல்கள் தொலைவில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கணவனும் மனைவியும் விரைந்துள்ளனர்.
அங்கே நர்ஸ் ஒருவர் Katie Holley-ன் காதுக்குள் திராவகம் ஒன்றை சில துளிகள் விட்டுள்ளார். சில நிமிடங்களில் கரப்பான்பூச்சியின் நகர்வு நிலைத்துள்ளது. பின்னர் மருத்துவர் உயரிய கருவியை பயன்படுத்தி அந்த கரப்பான்பூச்சியை வெளியே எடுத்துள்ளார்.
சுமார் 2 மணி நேரம் காத்திருந்து தமது காதுக்குள் சிக்கிய கரப்பான்பூச்சியை அகற்றிய பின்னரே நிம்மதி அடைந்ததாக Katie Holley தெரிவித்துள்ளார்.
சம்பவம நடந்து 9 தினங்கள் கடந்த நிலையில் மீண்டும் அவரது காதுக்குள் ஏதோ ஒன்று நகர்வதாக கேட்டி ஹோலிக்கு உணர்வு ஏற்பட்டுள்ளது.
அவரால் அந்த உணர்வை கட்டுப்படுத்த முடியாமல் போனது ஒரு கட்டத்தில், காதில் அழுக்கு சேர்ந்துள்ளதால் தமக்கு அவ்வாறான உணர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் அவர் கருதியுள்ளார்.
இதனிடையே பொதுவாக தாம் முன்பதிவு செய்து சந்திக்கும் மருத்துவரிடம் சென்றபோது தமது காதுக்குள் ஏற்பட்டிருக்கும் உணர்வு தொடர்பில் தெரிவித்துள்ளார்.
அந்த மருத்துவர் கேட்டி ஹோலியின் காதை பரிசோதித்து, காதுக்குள் இருந்து மீண்டும் ஒரு கரப்பான்பூச்சியின் கால் பாகத்தை வெளியே எடுத்துள்ளார்.
மட்டுமின்றி ஒரு முழு கரப்பான்பூச்சியின் உடல் பாகங்களை 6 துண்டாக வெளியே எடுத்துள்ளார் குறித்த மருத்துவர்.
இதனையடுத்து குறித்த மருத்துவரின் ஆலோசனைப்படி காது தொண்டைக்கான சிறப்பு மருத்துவரை சென்று கண்டுள்ளார் கேட்டி ஹோலி.
குறித்த மருத்துவர் விரிவான சோதனைக்கு பின்னர் கேட்டி ஹோலியின் காதுக்குள் இருந்து ஒரு முழு கரப்பான்பூச்சியை மீண்டும் வெளியே எடுத்துள்ளார்.
மட்டுமின்றி காதுக்குள்ளேயே இருந்து இறந்த கரப்பான்பூச்சிகளின் உடல் பாகங்களையும் அவர் வெளியே எடுத்துள்ளார். பின்னர் காதை சுத்தப்படுத்தி கேட்டி ஹோலியை நம்பிக்கையுடன் அனுப்பி வைத்துள்ளனர்.
தமிழகத்தில் மாணவி உருவாக்கிய பூமி மாசுபடுவதை துல்லியமாக கண்டறியும் மினி செயற்கைகோள் இன்று விண்ணில் பாய்கிறது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தை சேர்ந்த தம்பதி ஆல்பர்ட் குமார்-சசிகலா. இவர்களுக்கு வில்லட் ஓவியா என்ற மகள் உள்ளார்.
திருச்சி பெல் வளாகத்தில் உள்ள ஆர்.எஸ்.கே.மேல்நிலைப்பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ள ஓவியா, கடந்த 3ஆண்டுகளாக உழைத்து வளி மண்டலத்தில் கலந்துள்ள மாசு மற்றும் வெப்பமயமாதல் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வகையில், குறைந்த எடைகொண்ட செயற்கைகோள் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிராக போராடி தனது உயிரை கொடுத்த அரியலூர் மாணவி அனிதாவின் நினைவாக, உருவாக்கியுள்ள செயற்கை கோளுக்கு அனிதா சாட் என்ற பெயரை சூட்டியுள்ளார்.
இதுகுறித்து வில்லட் ஓவியா கூறுகையில், இந்த செயற்கை கோளில், வளிமண்டலத்தில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடு, கார்பன்டை ஆக்சைடு, ஆக்ஸிஐன் உள்ளிட்டவற்றின் அளவுகளை கண்டறிவதற்கு தேவையான சென்சார் கருவிகள் உள்ளன.
செல்போன் மூலமாகவே இதை கட்டுப்படுத்தலாம். 15 செ.மீற்றர் க்யூப் வடிவத்தில், ஏறத்தாழ 500 கிராம் எடையுள்ள இந்த செயற்கை கோள், ஒரு கேப்சூலில் (விண்ணுக்கு எடுத்து செல்ல உதவும் கருவி) வைக்கப்பட்டு ஹீலியம் பலூன் மூலம் மெக்சிகோவில் இருந்து இன்று காலை இந்திய நேரப்படி 7.30 மணியிலிருந்து 8.00 மணிக்குள் வளிமண்டலத்தில் ஏவப்படவுள்ளது.
மாணவியின் இந்த கடுமையான உழைப்பிற்கு சமூகவலைத்தளம் உட்பட பல இடங்களிலிருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத சென்ற மகளுக்கு துணையாக சென்ற தந்தை மாரடைப்பால் இறந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வடக்கு தெருவைச் சேர்ந்த தம்பதி கண்ணன்-நர்மதா. சொந்தமாக ஒயில் மில் நடத்தி வரும் இவருக்கு மூன்று பெண் பிள்ளைகள் உள்ளனர்.
இதில் கடைசி பெண் தான் ஐஸ்வர்யா. அங்குள்ள தனியார் கல்லூரியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த அவர் இன்று நடந்த நீட் தேர்விற்காக மதுரை திருமலைநாயக்கர் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
அப்போது இவருடன் அவரது தந்தை சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தேர்வு எழுதி முடித்து திரும்பிய ஐஸ்வர்யாவிடம் கண்ணன் தேர்வு வினாத் தாள் பற்றி கேட்டுள்ளார். அப்போது மிகவும் கடினமாக இருந்தது என்று கூறியதால், அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி வந்துள்ளது.
இதனால் பதற்றமடைந்த ஐஸ்வர்யா உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனை அனுமதித்துள்ளார். ஆனால் அங்கிருந்த மருத்துவர்களோ இங்கு பார்க்க முடியாது என்று கூற, உடனே ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்குச் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். அது வரைக்கும் போராடிய மாணவி ஐஸ்வரியா தன் தந்தையை காப்பாற்ற முடியாமல் தவியாய் தவித்துள்ளார்.
அதன் பின் இது குறித்த தகவல் உறவினருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் மருத்துவமனைக்கு வந்து கண்ணனின் உடலை பெற்றுச் சென்றுள்ளனர்.
நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர் பலி எண்ணிக்கை தமிழகத்தில் இரண்டாக உயர்ந்திருக்கிறது. இதற்கு முன் திருத்துறைப்பூண்டி யை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் இதேப் போன்று இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் காணமல் போன தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தகவல் தெரிவியுங்கள் என்று கேரளா பெண் தமிழக மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜேஸ்னா. இவர் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி புஞ்சவாயல் பகுதியில் உள்ள தனது அத்தையின் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.
சுமார் 20 கி.மீற்றர் தூரம் கொண்ட அந்த வீட்டிற்கு ஜேஸ்னா மூன்று பேருந்துகள் மாறி தான் செல்வார். அது போன்று தான் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி கிளம்பியுள்ளார். ஆனால் வீட்டை வீட்டு கிளம்பிய அவர் அத்தையின் வீட்டை அடையவில்லை.
இதனால் ஜேஸ்னாவின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்துள்ளனர். 46 நாட்களாகியும் ஜேஸ்னாவை பொலிசார் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
அதுமட்டுமின்றி பொலிசார் ஜேஸ்னா சுய விருப்பத்தின் பேரிலேயே வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கலாம் என்று நம்புவதால், அவர்கள் ஜேஸ்னா விவகாரத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து ஜேஸ்னாவின் குடும்பத்தினர் கூறுகையில், ஜேஸ்னாவிற்கு பெரிய அளவில் எந்த நண்பர்களும் இல்லை. வீட்டிலும் பிரச்னை இல்லை. அப்படியிருக்க அவர் ஏன் வீட்டை விட்டுச் செல்ல வேண்டும். அவளை யாராவது கடத்திச் சென்றிருக்கலாம் என அஞ்சுகின்றனர்.
இந்த விவகாரத்தில் பொலிசாரின் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் தன் தங்கையை யாராவது பார்த்தால் தயவு செய்து தெரிவிக்கவும் என ஜேஸ்னாவின் சகோதரி தமிழக மக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்
இந்தியாவில் மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருந்த நிலையில் மன அழுத்தத்தில் இருந்த கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் பெங்களூரை சேர்ந்தவர் மோகன் குமார் (34). இவர் மனைவி லட்சுமி. தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. மோகன் கணக்காளராக கடந்தாண்டு வரை வேலை செய்து வந்த நிலையில் பின்னர் வேலையை விட்டுள்ளார். லட்சுமி தனியார் கேஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அப்போது உயர் அதிகாரியுடன் லட்சுமிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்ட நிலையில் அதை மோகன் கண்டுப்பிடித்துள்ளார். இதிலிருந்தே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த மோகன் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் தனது வீட்டில் மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் மோகன் சடலத்தை கைப்பற்றிய நிலையில் அவர் எழுதி வைத்திருந்த 24 பக்க கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.
அதில், என் மனைவி எனக்கு துரோகம் செய்ததோடு, அதிமாக என்னை துன்புறுத்தினாள், தொடர்பை விட்டுவிடும் படி அவளின் உயர் அதிகாரியான அமித் சேத்திடம் நான் கூறியும் அவர் கேட்கவில்லை என எழுதப்பட்டிருந்தது.
இக்கடிதத்தை அடிப்படையாக வைத்து பொலிசார் லட்சுமி மற்றும் அமித் மீது வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள்.
இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரை கௌரவிக்கும் வகையில், அவர்களது சாதனைகள் பாடப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் உள்ள பாடசாலைகளுக்கான 11ம் தரத்திற்கான (ப்ளஸ் வன்) வகுப்பு சிறப்பு தமிழ் புத்தகத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் இளையராஜா ஆகியோரது சாதனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின்னர் தரம் ஒன்று முதல் 12 (ப்ளஸ் டூ) வரையிலான வகுப்புகளின் புதிய பாட நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. புதிய பாடத்திட்ட நூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிமுகம் செய்து வைத்தார்.
தரம் 1,6,9 மற்றும் 11ம் (ப்ளஸ் வன்) தரங்களுக்கு மட்டும், வரும் கல்வி ஆண்டில், புதிய பாடத்திட்டத்தின்படி புத்தகங்கள் அறிமுகமாகின.
இந்நிலையில், தரம் 11க்கான (ப்ளஸ் வன்) பொது தமிழ் பாட நூலில் ‘இசைத் தமிழர் இருவர்’ என்ற தலைப்பில், ஒரு பாடம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதில் ‘சிம்பொனி தமிழர்’ என்ற பெயரில் திரைப்பட இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா குறித்த பாடமும் ‘ஒஸ்கர் தமிழர்’ என்ற பெயரில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்த பாடமும் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாத்தளை இளைஞன் ஒருவர் விவசாய நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் வகையிலான எளிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்த இயந்திரம் மூலம் மண்வெட்டி இன்றி களைகளை பிடுங்கவும், மண்ணை சமப்படுத்தவும் முடியும்.
அத்துடன் தேவையான அளவில் மண்ணைக் கிண்டி பயிர்களுக்கு பசளையிடவும் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது.
இதேவேளை, இதனை கைகளினாலேயே இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சென்ற 131 இலங்கையர்கள் மலேசியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு, மலேசிய பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டவேளை, மலேசிய தெற்கு கடல் பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் 7 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.
குறித்த இலங்கையர்களை அழைத்துச் சென்ற இந்தோனேஷிய நாட்டவர்கள் 3 பேர் மற்றும் மலேசிய நாட்டவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வு விதிமுறைகளை மீறியமை, மனித கடத்தல், பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவர்கள் யொகோ பாரு எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் அகதி முகாமைத்துவ முகவர் நிலையத்தினால் 43 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இருந்தமையும், ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
சுமார் ஒரு வருடங்களின் பின்னர் வெளிநாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேற முயன்ற பெருந்தொகையினர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கை கடற்பகுதியில் எரிபொருள் உள்ளதா என்பது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் தயாராகி உள்ளன.
இதற்கான ஒப்பந்தங்களை இலங்கை அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொள்ள இரு நாடுகளும் தீர்மானித்துள்ளன.
அதற்கமைய 50000 சதுர கிலோ மீற்றர் கடல் பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு இரண்டு வருடங்கள் வரை செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வு நடவடிக்கைக்காக இரண்டு நிறுவனங்களினாலும் 25 மில்லியன் டொலர் செலவிடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை கடலில் எரிபொருள் வளம் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அதனை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படவில்லை.
இலங்கையின் வருடாந்த எரிபொருள் தேவைக்காக 3 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான பணம் செலவிடுகின்றது. கடந்த வருடம் எரிபொருளுக்காக 3.2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.