காத்தான்குடி – பரீனாஸ் வீதியை அண்டியுள்ள வீடொன்றின் தாழ்வாரப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன முற்றாக எரிந்துள்ளதோடு வீட்டின் முன் பகுதியும் சேதமடைந்துள்ளன. காத்தான்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியர், தனது குடும்பத்தினரோடு மேற்படி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றார்.
முன்பகை காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கென்யாவில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 112 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கென்யாவின் செஞ்சிலுவை சங்க பொதுச்செயலாளர் அப்பாஸ் கெல்லட் கூறுகையில், ´”நாடு முழுவதும் மார்ச் மாதம் தொடங்கி இதுவரை 112 பேர் மழை, வெள்ளத்தால் பலியாகி உள்ளனர்.
இதன் காரணமாக 48,117 குடும்பங்களை சேர்ந்த சுமார் 260,200 பேர் இடம் பெயர்ந்துள்ளனர். 21 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நாசமடைந்தன. 20 ஆயிரம் கால்நடைகள் இறந்துள்ளன” என்றார்.
பேஸ்புக் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி தகவல் அவசர பதிவுத்தளம் அறிவித்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் கடந்த சில தினங்களில் மாத்திரம் ஆறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி தகவல் அவசர பதிவுத் தளத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரோசான் சந்திரகுப்த தெரிவித்தார்.
இந்த முறைப்பாடுகளுக்கு அமைய, 20 இலட்சம் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பேஸ்புக்கில் நண்பர்களாகி ஒரு சில மாதங்களில் பிரத்தியேக குறுந்தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடும் சிலர் இவ்வாறான மோசடியில் ஈடுபடுவதாகவும் ரோசான் சந்திரகுப்த கூறினார்.
தாம் வௌிநாட்டில் வசிப்பதாகக் கூறி இலங்கையிலுள்ளவர்களுக்கு பரிசுப்பொதிகளை அனுப்புவதாகவும் அதற்கான பற்றுச்சீட்டுக்களுக்கான மாதிரிகளும் அனுப்பி வைக்கப்படுவதாகவும் பின்னர் பரிசுகளை சுங்கப் பிரிவினூடாகப் பெற்றுக்கொள்வதற்கு பணம் செலுத்த வேண்டும் என கூறி மோசடியில் ஈடுபடுவதாகவும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
எனவே, பேஸ்புக்கின் ஊடாக மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அதிகக் கவனம் செலுத்துமாறு இலங்கை கணினி தகவல் அவசர பதிவுத்தளத்தின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரோசான் சந்திரகுப்த வலியுறுத்தினார்.
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை கனகா, தனது வாழ்வில் இதுவரை நடந்த பிரச்சனைகள் மற்றும் தான் இறந்துவிட்டதாக வெளியான வதந்தி போன்றவற்றிக்கு தனது தந்தையே காரணம் என தெரிவித்துள்ளார்.
சினிமா வாழ்க்கையில் இருநது இத்தனை ஆண்டுகள் ஒதுங்கியிருந்த கரக்காட்டக்காரன் புகழ் நடிகை கனகா, தற்போது மலையாளத்தில் மோகன்லாலுடன் ஒரு படம் நடித்துவருகிறார்.
திரையுலகில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்குவதற்கு முன்னர் இவர் இறந்துவிட்டதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், இவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்றுவருகிறார்.
மலையாள தொலைக்காட்சி ஒன்றிற்கு இவர் அளித்துள்ள பேட்டியில், என்னைபற்றிய வதந்திகள் வெளியானதற்கு எனது தந்தையே முக்கிய காரணம். நான் நலமுடன் இருக்கிறேன். நீண்டகாலம் நலமுடன் வாழ்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எனது தனிப்பட்ட காரணங்களுக்காக சினிமா வாழ்க்கையில் இருந்து இதுவரை ஒதுங்கி இருந்தேன். தற்போது மீண்டும் வந்துள்ளதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனது வாழ்க்கையில் நடந்த அனைத்து துயரங்களுக்கும் எனது தந்தையே பொறுப்பு. எனது தாயின் வாழ்க்கையை கெடுத்த அவர், நானும் சினிமாவில் நடிக்ககூடாது என்பதற்காக என்னைப்பற்றிய தவறான தகவல்களை பரப்ப ஆரம்பித்தார்.
எனக்கு மனநலம் பாதித்துவிட்டதாகவும், எனது தாய் ஒரு பாலியல் தொழிலாளி எனவும் கூறி எங்களை அவமானப்படுத்தினார். மேலும் நான் போதைமருந்து பயன்படுத்துவதாகவும் கூறினார். இதன் காரணமாக அவருடன் பேசுவதை நான் நிறுத்திவிட்டேன்.
எனது தாய் இறப்பதற்கு முன்னால் எனது தந்தையால் அதிக கஷ்டங்களை எதிர்கொண்டார் என கூறியுள்ளார்
நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்ல பலன்களும் கெட்ட பலன்களும் உள்ளன. நற்பலன் தரும் கனவுகள்: ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவினைக் கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும்.
விவசாயிகள் உழுவதைப் போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். திருமணமாகாதோர் பாம்பு கொத்தியதை போல் கனவு கண்டால், விரைவில் திருமணம் நடைபெறும். திருமணமானவர்க்கு செல்வம் வந்து சேரும். ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவுக் கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.
இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். தெய்வங்களைக் கனவில் கண்டால் புதையல் கிடைக்கும்.
இறந்தவருடன் பேசுவதைப் போல் கனவுக் கண்டால் அதிகாரம், பதவி, லாபம் நிச்சயம் கிடைக்கும். திருமணக் கோலத்தைக் கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். தற்கொலை செய்து கொள்வதைப் போல் கனவு கண்டால் நெருங்கி வந்த ஆபத்துகள் விலகி நன்மை பிறக்கும்.
கர்ப்பிணியைக் கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நன்மை அதிகரிக்கும். ஆமை, தவளை, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களை கண்டால் கவலைகள் பறந்து போவந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும். உயரத்தில் இருந்து விழுவது போல் கனவுக் கண்டால் பணம், பாராட்டு குவியும். நிம்மதி பிறக்கும்.
மயில், வானம்பாடியை கனவில் கண்டால் தம்பதிகளிடையெ நெருக்கம் அதிகரிக்கும். கழுதை, குதிரைகளைக் கனவில் கண்டால் வழக்குகள் சாதகமாக அமையும். மாமிசம் உண்பதைப் போல் கனவுக் கண்டால் பெரிய அதிர்ஷ்டம் அடிக்கும். வாத்து, குயிலைக் கனவில் கண்டால் நம் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மலத்தை மிதிப்பது போல் கனவுக் கண்டால் சுபச் செலவுகள் ஏற்படும்.
மகாராஷ்டிராவில் வரதா எனும் நகரில் 1948 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் திகதி பிறந்தவர் சிந்துதாய். இவரது தந்தை மாடுமேய்க்கும் வேலை செய்து வந்ததால், வறுமையின் பிடியில் இருந்தது இவர்களது குடும்பம். சிந்து தாயை எப்போதும் அவரது அம்மா திட்டிக்கொண்டே இருப்பார்.
நீயெல்லாம் உருப்படமாட்டாய்….எதற்கும் உபயோகம் இல்லாதவள் என்று எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். தாய் இவரைபள்ளி செல்வதற்கு அனுமதிக்கவில்லை. ஆனால், படிப்பதற்கு தந்தை அனுமதியளித்தார். படிப்பதற்கு சிலேடு வாங்க கூட பணம் இல்லாமல் Bharadi மரத்தின் இலைகளில் எழுதி படித்தார்.
இருப்பினும் குடுபத்தின் வறுமை தொடர்ந்ததால், இவருக்கு, 10 வயது இருக்கையில், நவர்கோன் எனும் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஹரி என்கிற ஹர்பாஜி எனும் 30 வயது, மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்த ஆணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். இருபது வயதுக்குள் மூன்று குழந்தைகள் பெற்றெடுத்தார்.
கிராம மக்களிடம் இருந்து மிரட்டி, வரட்டிகளை இலவசமாக பெற்று அதை வனத்துறையினருக்கு எரிவாயுவாக பயன்படுத்த விற்று பணம் பார்த்து வந்த நபரை இவர் எதிர்த்த காரணத்தால், கணவர் சிந்துதாயை விரட்டியடித்துள்ளார்.
ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த இவரை கணவர் விரட்டியடித்தபோது, ஒரு மாட்டு கொட்டகையில் தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்டார் . தொப்புள்கொடியை தன் அருகே இருந்த ஒரு கூர்மையான கல்லை கொண்டு அறுத்து தான் பிரசவம் பார்த்த நிகழ்வை அவரே பகிர்ந்திருக்கிறார்.
பச்சிளம் குழந்தையுடன் தனது அம்மாவின் ஊருக்கு நடந்தே சென்றுள்ளார் சிந்துதாய். ஆனால், பிறந்ததில் இருந்தே இவரை பிடிக்காத தாய், சிந்துதாய்க்கு தங்க இடமில்லை என்று கூறி அனுப்பிவிட்டார்.
இதனால் குழந்தைகளை அழைத்துக்கொண்டு ரயில் நிலையம் சென்ற இவர், அங்கு பிச்சையெடுக்க ஆரம்பித்தார். நாளடைவில் தனது குழந்தைகளுக்காக மட்டுமல்லாமல் ரயில் நிலையத்தில் இருந்த அனாதை குழந்தைகளுக்காகவும் சேர்த்து பிச்சையெடுக்க தொடங்கினார்.
ஆதரவற்ற குழந்தைகள் அனைவருக்கும் தானே தாயாக முடிவு செய்தார். தான் பெற்ற ஒரு குழந்தையை ஸ்ரீமந் டக்டு ஷேத் ஹல்வாய் என்ற டிரஸ்ட்க்கு தானமாக கொடுத்தார்.
தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஆதரவற்ற குழந்தைகளுக்காக அர்பணித்துக் கொண்டார் சிந்துதாய். இவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இன்று இவருக்கு 207 மருமகன்கள், 36 மருமகள்கள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரக்குழந்தைகள் இருக்கிறார்கள்.
தான் வளர்த்த குழந்தைகளை வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக உருவாக்கியுள்ளார் சிந்துதாய். இவருக்கு பிறந்த மகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஆசிரமம் நடத்தி வருகிறார். இவர் வளர்த்த குழந்தை ஒருவர் இவரது வாழ்க்கை குறித்தே பிஎச்டி படித்து வருகிறார்.
இதுவரை சிந்துதாய் 273க்கும் மேற்பட்ட விருதுகள் வாங்கியுள்ளார். விருதுகளுடன் சேர்த்து கொடுக்கப்படும் பணத்தை கொண்டு தான் வளர்க்கும் குழந்தைகளுக்கான வீடுகள் கட்டியுள்ளார்.
இவரது கணவர் தனது 80வயது வயதில் மீண்டும் இவரை தேடி வந்தார். தான் செய்த தவறை எண்ணி வருந்தி மன்னிப்புக் கோட்டார். தான் தத்தெடுத்து வளர்க்கும் மற்ற குழந்தைகளை போலவே, அவரையும் தத்தெடுத்துக் கொண்டார்.
சிந்துதாய் இதுவரை 84 கிராமங்களின் புனர்வாழ்வுக்காக போராடியுள்ளார். 2010ல் சிந்துதாய் பற்றிய திரைப்படம் ஒன்று வெளியானது. இந்த படம் லண்டன் திரை விழாவில் திரையிடப்பட்டது.
பிரித்தானிய அரச குடும்பம் தொடர்பில் அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்ணியவாதி ஒருவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய இளவரசர் ஹரிக்கு திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் ஹரியின் திருமண வாழ்க்கை ஐந்து வருடத்திற்கு பிறகு முறிந்து விடும் என, அவுஸ்திரேலிய நாட்டை சேர்ந்த பெண்ணியவாதி Germaine Greer ஆருடம் கூறியுள்ளார்.
எதிர்வரும் 19ம் திகதி இளவரசர் ஹரி – மெர்க்கல் திருமணம் Windsor Castle – இல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் இவர்களது திருமண வாழ்க்கை குறித்து அவுஸ்திரேலிய பெண்ணியவாதி, Germaine Greer தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு கூறியதாவது, மெர்க்கலுக்கு அரச குடும்பத்து வாழ்க்கை காலம் செல்ல பிடிக்காமல் போய்விடும்.
திருமணமாகி 5 வருடங்களுக்கு பின்னர் அவர் ஹரியை விட்டு பிரிந்து சென்றுவிடுவார். அதுமட்டுமின்றி அரச குடும்பத்துக்கும், அவர் அணியும் ஆடைகளுக்கும் சற்றே பொருத்தமில்லாமல் இருக்கிறது.
கடந்த ஆண்டு அரச குடும்பத்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது, மெர்க்கல் அணிந்திருந்த பழுப்பு நிற கோட், அவரது மோசமான ஆடை தெரிவை வெளிப்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி, நடிகையாக இருக்கும் மெர்க்கல் ஹரியை திருமணம் செய்துகொள்வதற்காக, தனது தொழில், அமெரிக்க நண்பர்கள், தனது சுதந்திரம் என அனைத்தையும் விட்டுக்கொடுத்து பிரித்தானியாவுக்கு சென்றுள்ளார்.
இப்படி, இவர் விட்டுக்கொடுத்துள்ளதால் இந்த பந்தம் திருமணம் வரை சென்றுள்ளது. ஆனால் திருமணத்திற்கு பிறகு, மெர்க்கல் ஒரே மனநிலையில் இருந்தால் பரவாயில்லை, ஆனால் அரச குடும்பத்து வாழ்க்கை அவருக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டால் அவர் அங்கிருந்து வெளியேற நேரிடும்.
இதற்கு உதாரணம், இளவரசர் ஹரியின் அம்மா டயானா. சாதாரண குடும்பத்தை சேர்ந்த டயானாவுக்கு அரச குடும்பத்து வாழ்க்கை பிடிக்கவில்லை. ஒரு இளவரசியாக அவர் பட்ட துயரங்கள் காரணமாகத்தான் அவர் அந்த வாழ்க்கையில் இருந்து வெளியேறினார்.
இது இளவரசர் ஹரிக்கும் தெரிந்திருக்கும் என்பதால் தனது வருங்கால மனைவி மெர்க்கலுக்கு சிறந்த வாழ்க்கையை அவர் அமைத்து கொடுக்க வேண்டும் என கூறியள்ளார்.
அரச குடும்பத்தில் நடக்கும் திருமணத்தை பார்க்க பிரித்தானிய மக்கள் பெரும் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் அவுஸ்திரேலிய பெண்மணியின் கணிப்பானது பலரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
உலகின் மிகச் சிறந்த 18 தொடருந்து சேவைகள் பட்டியலில் இலங்கையின் யாழ் தேவி தொடருந்துச் சேவையும் இடம்பெற்றுள்ளது. அதில் மிகச் சிறந்த மற்றும் அழகிய இயற்கைக் காட்சிகளை இரசிக்கக்கூடிய தொடருந்துப் சேவைகள் பட்டியலை தி கார்டியன் (The Guardian) இணையதளம் வெளியிட்டுள்ளது.
தொடருந்துப் பயணத்தின் போது பயணிகளின் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய இயற்கை காட்சிகள், பல்வேறு கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கட்டடங்கள் எனப் பயணத்தை இனிமையாக்கும் அனுபவத்தை வைத்து இந்தத் தரப்படுத்தல் வெளியாகியுள்ளது.
இன்று (06.05) அதிகாலை வவுனியா ஓமந்தை பகுதியில் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக எடுத்தவரப்பட்ட பெருமளவு கேரள கஞ்சாவினை மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் மூவரைக் கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் கஞ்சா வியாபார நடவடிக்கையினை மேற்கொள்வதற்காக பெருமளவு கஞ்சா மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசியத் தகவல் அடிப்படையில் வன்னிப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சேதபந்து தென்னக்கோனின் வழிநடத்தலில்,
வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் தென்னக்கோனின் உதவியுடன் வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மகிந்த வில்லுவராச்சியின் கீழ் வன்னி மாவட்ட புலனாய்வுத்துறை பொறுப்பதிகாரி பொன்சேகா மற்றும் நிரோசன் (88567) ஆகியோரின் தகவலின் அடிப்படையில் சென்ற குழுவினர்,
வன்னி மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பரிசோதகர் ஈ.எஸ்.அபேசேகர, பொலிஸ் பரிசோகதகர்களான ஜெயரத்தின(42912), நுவான்(55904), சமீர(14414), அசேல(77582), துசார(55868) ஆகியோரின் இந்நடவடிக்கையினால் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 69கிலோ 725கிராம் கேரளா கஞ்சாவினை மீட்கப்பட்டுள்ளதாகவும்,
அவ்வீட்டிலிருந்த வவுனியா திருநாவற்குளம் பகுதியைச் சேர்ந்த வயது 23 நபரையும், மல்லாவியைச் சேர்த்த 23வயது நபரையும், யாழ். தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த 28 வயது நபரையும் கைது செய்துள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவினையும் சந்தேக நபர்களையும் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாவலப்பிட்டியில் மரத்துடன் மண் மேடு வீடு ஒன்றின் மீது விழுந்தமையினால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டிய, கோனாவலபத்தன பிரதேசத்தை சேர்ந்த லஹிரு கமகே என்ற 20 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு மேல் இருந்த பாரிய மரத்துடன் மண் மேடு ஒன்று சரிந்து விழுந்துள்ளது. இதன் போது வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது. இதன்போது உயிரிழந்த இளைஞர் மற்றும் அவரது சகோதரர் டீவி பார்து கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையிலேயே மண் டீவி பார்த்த இருவரும் மண்ணில் புதையுண்டுள்ளனர்.
இருவரையும் மீட்ட போதிலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மற்றைய சகோதரர் சிறிய காயங்களுடன் தப்பியுள்ளனர். அனர்த்தம் இடம்பெற்ற போது வீட்டில் இருந்தவர்கள் வேறு இடத்திற்கு சென்றிருந்தமையினால் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
நாவலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையை தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பிரபல தொலைக்காட்சியின் பிரஜன் நடிப்பில் சின்னதம்பி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் அவருக்கு ஜோடியாக பவானி ரெட்டி என்ற நடிகை நடித்து வருகிறார்.
தொலைக்காட்சித் தொடரில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கும். இந்த தொடர் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியிலேயே இவர்களுக்கு சிறந்த ஜோடி என்ற விருதும் கிடைத்தது. இந்த நேரத்தில் நடிகை பவானி ரெட்டி தனது கணவர் தற்கொலை செய்துகொண்டது குறித்து முதன்முறையாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அவர் பேசும்போது, நானும் என் கணவர் பிரதீப்பும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். திடீரென்று ஒருநாள் அவர் தற்கொலை செய்துகொண்டார், நம்மோடு நெருக்கமாக இருந்த ஒருவர் உயிரோடு இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. மற்றவர்களை விட எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
அவருடைய இறப்புக்கு மற்றவர்கள் சொன்ன காரணம் என்னை அதிகமாக பாதித்தது. அவர் இறப்பில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை, அந்த கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும் என பேசியுள்ளார்.
சமீபத்தில் தொடங்கிய கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் என்பதால் மக்கள் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமை தான் தற்போது நிலவுகிறது.
இந்நிலையில் பிரபல தொகுப்பாளினி கத்திரி வெயிலை சமாளிக்க வேட்டி சட்டையை அணிந்து ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் என்பதால் மக்கள் ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைமை தான் தற்போது நிலவுகிறது.
மன்னார் – மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி மற்றும் அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்களில் உள்ள அதிகளவான பெண்கள் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற போதும் பல்வேறு இடர்களுக்கு மத்தியிலே கடற்தொழிலை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த இரு கிராமங்களையும் சேர்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட பெண்கள் இவ்வாறு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் பெண்கள் மற்றும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற பெண்கள் உள்ளடங்களாக பலர் இவ்வாறு கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பெண்கள் அட்டை, நண்டு, இறால் போன்ற கடல் உணவுகளை பிடித்து விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். குறித்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற பெண்கள் கடலில் பல்வேறு பிரச்சினைகளுக்கும், ஆபத்துகளுக்கும் முகம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
தமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள், தமது அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளுக்கான பணத்தை இவர்கள் கடற்தொழில் நடவடிக்கைகளின் மூலமாகவே பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் தாம் கடலில் உயிர் ஆபத்துக்களை கூட சந்திக்கும் நிலை ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். கடலில் ஆட்டி, கவாட்டி என பல விதமான ஆபத்தான பொருட்கள் கிடப்பதாகவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இந்த பகுதியில் தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஆண்கள் கடந்த 3 வருடங்களாக கூடு வைத்து மீன் பிடிக்கின்றனர்.
இவ்வாறு கடலில் கூடுகளை வைத்து மீன் பிடியினை மேற்கொள்ளுவதினால் இறால், நண்டு போன்றவற்றின் இனம் அழிவடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த பெண்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பில் சகல தரப்பினரிடமும் முறையிட்டும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. இதனால் காலப்போக்கில் அட்டை, நண்டு, இறால் போன்றவற்றின் உற்பத்தி அழிவடையும் நிலை ஏற்படும்.
மேலும் குறித்த பெண்கள் எவ்வித ஆவணங்களும் இன்றி கடலில் இறங்கி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் போதும், கடற்படையினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தியதாகவும், தற்போது 1500 ரூபாய் செலுத்தி அனுமதியை பெற்று கடற்படையினரிடம் காண்பித்து விட்டே கடலில் இறங்குவதாகலும் தெரிவித்தனர்.
எனினும் குறித்த பெண்கள் கடலில் பாதுகாப்பற்ற முறையில் மீன் பிடியில் ஈடுபடுவதை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு அங்கிகளை வழங்கி வைக்கும் வகையில் 30 பெண்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கான பாதுகாப்பு ஆடைகளை மன்னார் சமூக மேம்பாட்டு நிறுவனத்தினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் தற்போதும் கூடுதலாக காணப்படுதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் பதுளை, களுத்துறை மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்ககளம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக முறையில் தங்கம் கடத்துவதனை தடுப்பதற்காக கடுமையான சட்டத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய அடகு வைத்த தங்கங்களை ஏலம் எடுக்கும் குழுவினர் தொடர்பிலான தகவல்களை மத்திய வங்கிக்கு வழங்குமாறு ஏனைய வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளிடம் அடகு வைத்த தங்கத்தினை ஏலத்தின் மூலம் வாங்கிக் கொண்டு, இரகசியமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் மோசடி ஒன்று இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த இலங்கை மத்திய வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
வர்த்தக வங்கிகளிடம் பெருந்தொகை நகையை ஏலத்தின் மூலம் பெற்றுக்கும் நபர்களில் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு – காரமலை பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் செங்கலடி, குமாரவேலியார் கிராமத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நா.சங்கரப்பிள்ளை என்பவரே உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த நபர் காரமலை பகுதியில் சேனைப்பயிர்ச்செய்கை மற்றும் கால்நடை வளர்ப்புகளை செய்துவரும் நிலையில் அங்கு சென்றபோது காட்டுப்பகுதியில் இருந்த யானை இவரை தாக்கியுள்ளது.
உயிரிழந்த நபரின் சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணையை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்