காதலி மீது ஏற்பட்ட கோபத்தினால் ஏற்பட்ட விபரீதம்!!

கொட்டதெனியா பிரதேசத்தில் வெசாக் பார்க்க வராத காதலியின் வீட்டிற்கு காதலன் தீ வைத்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்திய நிலையில் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மினுவங்கொட நீதிமன்ற நீதவான் ஷிலனி சத்துரன்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

காதலி மீது கோபம் கொண்டு வீட்டிற்கு தீ வைத்து பாரிய நட்டம் ஏற்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் கடந்த 4 வருடங்களாக குறித்த பெண்ணை காதலித்துள்ளார். வெசாக் பார்ப்பதற்காக காதலியை அழைத்து செல்வதற்கு இளைஞன் அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.

எனினும் வீட்டில் ஒருவரும் இல்லாமையினால் கோபமடைந்த இளைஞர் ஜன்னல் ஊடாக வீட்டிற்குள் நுழைந்து காதலிக்கு வழங்கிய ஆடைக்கு தீ வைத்துள்ளார். எனினும் தீ வீடு முழுவதும் பரவியமையினால் வீடு தீப்பற்றியுள்ளதுடன் வீட்டில் இருந்த பொருட்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த வீட்டில் ஏற்பட்ட சேதத்தினால் 6 லட்சத்து 28 ஆம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது. நட்டஈட்டினை செலுத்த சந்தேகநபரின் தந்தை ஆயத்தமாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!!

அரச பாடசாலைகள் அனைத்தும் இவ்வருடம் 210 நாட்களுக்குப் பதிலாக 194 நாட்களே நடத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பான சுற்றுநிரூபம் ஒன்று கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.

வழமையாக அரச பாடசாலைகளில் வருடமொன்றுக்கு 210 நாட்கள் பாடசாலை நடத்தப்படல் வேண்டும் என்பது நியதி. ஆனால் இம்முறை இவ்வருடத்தில் வரும் விடுமுறை தினங்கனைக் கருத்திற்கொண்டால் 210 நாட்கள் நடத்தமுடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனால் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் 194 பாடசாலை நாட்கள் பாடசாலைகளை நடத்துமாறு கல்வி அமைச்சு சுற்றுநிரூபமொன்றை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட 33/2017 ஆம் இலக்க 31.08.2017ஆம் திகதி குறிப்பிட்ட கல்வியமைச்சின் சுற்றுநிரூபம் தற்போது திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி தமிழ் சிங்களப் பாடசாலைகளில் முதலிரு தவணைகளிலும் எந்த மாற்றமுமில்லை. ஆனால் மூன்றாம் தவணை செப்டம்பர் 3ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதி வரை நடைபெறும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணையில் மாற்றமில்லை, ஆனால் 2ஆம் தவணையில் இரண்டு கட்டங்களாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஏப்ரல் 18ஆம் திகதி தொடக்கம் மே 14ஆம் திகதி வரை பாடசாலை நடைபெறும், அதாவது புனித ரமழான் நோன்புக்காக 15.05.2018 தொடக்கம் 17.06.2018 வரைக்கும் முஸ்லிம் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும்.

இரண்டாம் கட்டமாக ஜூன் 18ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் 20ஆம் திகதி வரை பாடசாலைகள் நடைபெறும். முஸ்லிம் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக ஒகஸ்ட் 27ஆம் திகதி தொடக்கம் நவம்பர் 30ஆம் திகதி வரை திறக்கப்பட்டிருக்கும்.

இது தொடர்பான சுற்றுநிரூபம் சகல மாகண கல்விச்செயலாளர்கள் தொடக்கம் பாடசாலை அதிபர்கள் வரை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் எதிர்வரும் 20ம் திகதி வரை காத்திருக்கும் ஆபத்து!!

இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் 20ஆம் திகதி வரை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்க்கின்றது. அதன் பின்னரே இந்த நிலைமை குறைவடையும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடைக்கால பருவக்காலத்தில் நிலவும் வெப்பமான காலநிலை, முன்னர் காண்பட்டதனை விடவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என திணைக்கள இயக்குனர் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும், குருணாகல், கம்பஹா, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களிலும் அதிக வெப்பமான காலநிலை நிலவ கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தென், மத்திய, சப்ரகமுவ, ஊவா உட்பட பல பிரதேசங்களில் நேற்று மாலை அடைமழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மழையுடன் மின்னேரிய சரணாலயத்தின் ஊடாக செல்லும் ஏரியின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் அங்கு சென்றிருந்த வெளிநாட்டு பயணிகள் உட்பட பலர் பல மணித்தியாலங்கள் சரணாலயத்திற்குள் சிக்கியிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

வவுனியா குறவன் குறத்தி கிராமிய குழு நடனத்திற்கு அரச நடன விருது-2018 விழாவில் முதலிடம்!!

 

வவுனியா நிருத்தியார்ப்பண கலாலய மாணவர்களின் கிராமிய குறவன் குறத்தி நடனம் அரச நடன விருது -2018 விழாவில் முதலிடத்தை பெற்றுள்ளது. 2018 அரச நடன விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (04.05.2018) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது.

மேற்படி விழாவில் வவுனியா மாவட்டத்திலிருந்து 15 தொடக்கம் 29 வரையான வயதுப் பிரிவில் கலந்துகொண்ட குறவன் குறத்தி கிராமிய குழு நடனதிற்கே முதலிடம் கிடைக்கப் பெற்றுள்ளது. மேற்படி விருதினை வவுனியா நிருத்தியார்ப்பண கலாலய அதிபர் திரு.சுஜேந்திரா அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு உயர் கல்வி, கலாசார அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நடனக் கலைக்காக பங்களிப்பு செய்த கலைஞர்கள் பாராட்டப்பட்டனர்.

‘நர்த்தன திலக’ வாழ்நாள் விருது பிரபல நடனக் கலைஞர் எஸ்.பி.கவிசேன மற்றும் பிரபல நடனக் கலைஞர் வசந்தி குஞ்சுதபாதம் ஆகியோருக்கு ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் மொஹான்லால் கிரேரோ, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தான, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல, அரச நடன ஆலோசனை சபையின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் ஆரியரத்ன களுவாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

வவுனியா குறவன் குறத்தி கிராமிய குழு நடனத்திற்கு அரச நடன விருது-2018 விழாவில் முதலிடம்!

வவுனியா நிருத்தியார்ப்பண கலாலய  மாணவர்களின்  கிராமிய குறவன் குறத்தி  நடனம்  அரச  நடன விருது -2018  விழாவில் முதலிடத்தை பெற்றுள்ளது.

2018 அரச நடன விருது விழா ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (04.05.2018) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக கலையரங்கில் நடைபெற்றது. மேற்படி  விழாவில்  வவுனியா மாவட்டத்திலிருந்து   15தொடக்கம் 29 வரையான வயதுபிரிவில் கலந்துகொண்ட குறவன் குறத்தி கிராமிய  குழு நடனதிற்கே முதலிடம் கிடைக்கப் பெற்றுள்ளது.மேற்படி விருதினை  வவுனியா நிருத்தியார்ப்பண கலாலய அதிபர் திரு.சுஜேந்திரா  அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வு உயர் கல்வி, கலாசார அமைச்சு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் இவ்விருது விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நடனக் கலைக்காக பங்களிப்பு செய்த கலைஞர்கள் பாராட்டப்பட்டனர்.

நர்த்தன திலக வாழ்நாள் விருது பிரபல நடனக் கலைஞர் எஸ்.பி.கவிசேன மற்றும் பிரபல நடனக் கலைஞர் வசந்தி குஞ்சுதபாதம் ஆகியோருக்கு ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் மொஹான்லால் கிரேரோ, பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவித்தான, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷா கோகுல, அரச நடன ஆலோசனை சபையின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் ஆரியரத்ன களுவாரச்சி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

131 இலங்கையர்களுடன் அவுஸ்திரேலியா சென்ற கப்பல் மலேசியாவில் கைது!!

அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்துக்கு இலங்கையர்களான சட்டவிரோத குடியேறிகளை கடத்திச் சென்ற கப்பலொன்று மலேசிய பொலிஸாரால் இடைமறிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்த 131 இலங்கையர்கள் மலேசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த கப்பல் கடந்த முதலாம் திகதி இடைமறிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ‘எட்ரா’ (ETRA) எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தக் கப்பல் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் நான்கு சிறுவன் மற்றும் ஐந்து சிறுமிகள் என 131 இலங்கையர்களை ஏற்றிச் சென்றதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 இந்தோனேசியர்கள் மற்றும் 4 மலேசியர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய ஐந்து மலேசியர்களையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை மூலம் ஒரு பாரிய மனித கடத்தலை ரோயல் மலேசிய பொலிஸார் வெற்றிகரமாக தோல்வியடையச் செய்துள்ளதாக பொலிஸ் பிரதானி மொஹமட் ஹருன் தெரிவித்துள்ளார்.

2017 நடுப்பகுதியிலிருந்து இயக்கப்படும் இந்த நடவடிக்கையுடன் இலங்கை, அவுஸ்திரேலியா,நியூஸிலாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கிடையில் சர்வதேச தொடர்புகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை அடுத்து இலங்கையையும் மணல் புயல் தாக்கும் பேராபத்தா?

கடந்த வாரத்தில் இந்தியாவை தாக்கிய மணல் புயல், இலங்கையையும் தாக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டிருந்தது. எனினும் அவ்வாறான தாக்கம் இதுவரை இலங்கைக்கு ஏற்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அவ்வாறான ஆபத்து தொடர்பில் எந்தவொரு அறிகுறிகளும் இல்லை என திணைக்கள இயக்குனர் அத்துல கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது திணைக்கள இயக்குனர் அத்துல கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.

உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்காண்ட் ஆகிய மாநிலங்களை மணல் புயல் தாக்கியிருந்தது. அந்த மாநிலத்தை சேர்ந்த 125 பேர் உயிரிழந்துள்ளனர்.

மூச்சுதிணறல் மற்றும் மின்னல் தாக்குதல் உட்பட, மரங்கள் முறிந்து வீழ்தமை உள்ளிட்ட காரணங்களினாலேயே மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா வர்த்தக சங்கத்தினர் மேதினத்தினை முன்னிட்டு விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!!

 

இவ்வருடம் மேதின விடுமுறையை அரசாங்கம் 07.05.2018 திங்கட்கிழமை என்று அறிவித்துள்ளமையினால் தொழிற் திணைக்களமும் அதனை நடைமுறைப்படுத்தவுள்ளது.

எனவே தொழிலாளர் விடுமுறையை எதிர்வரும் 07.05.2018 திங்கட்கிழமை தொழிலாளர் விடுமுறையாக வழங்கி அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுவது என வவுனியா வர்த்த சங்கத்தின் நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

எனவே திங்கட்கிழமை தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்கி வர்த்தக நிலையங்களை மூடி ஒத்துழைக்குமாறு வர்த்தகர்களுக்கு வவுனியா வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தனியாக இருந்த காதலியின் வீட்டிற்கு சென்ற பேஸ்புக் காதலன் : அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

தமிழகத்தில் காதலியின் வீட்டிற்குச் சென்ற பேஸ்புக் காதலன் திடீரென்று இறந்ததால் பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் தென்னவன்(24). திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து வரும் இவர், சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு படித்து வந்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் கவிதா. சட்டக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும், இவரிடம் தென்னவன் பேஸ்புக் மூலம் அறிமுகமாகியுள்ளார். ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்தவர்கள், நாளைடைவில் காதலர்களாக மாறினர்.

கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி கவிதாவிற்கு பிறந்தநாள் என்பதால் ஒரு விழா நடத்தப்பட்டுள்ளது. அந்த விழாவில் தென்னவன் பங்கேற்றுள்ளார். அப்போது தென்னவனை பெற்றோரிடம் கவிதா தன்னுடைய நண்பர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து கடந்த 30-ஆம் திகதி கார்த்திகாவின் பெற்றோர், கேரளா மாநிலம் பாலக்காட்டுக்கு தாத்தாவின் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளனர்.

கார்த்திகா மட்டும் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த தென்னவன் அவரின் வீட்டிற்கு சென்று கார்த்திகா சமைத்து கொடுத்த பிரியாணியை விரும்பி சாப்பிட்டுள்ளார்.

பிரியாணியை சாப்பிட்டு முடித்த பின்பு தென்னவனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கார்த்திகா, அவரிடம் பேசுவதற்குள் தென்னவன் மயங்கியுள்ளார்.

இதனால் கவிதா அருகில் இருப்பவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் தென்னவனை அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இந்த தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டதால், அவர்கள் தென்னவனை உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் தென்னவனின் தந்தை ரவிச்சந்திரன் காவல்நிலையத்தில் தன் மகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கவலைப்படாதே நான் திருமணம் செய்கின்றேன் : நம்பிச் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!

தமிழகத்தில் இளம் பெண்ணை மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தர்மபுரியை சேர்ந்தவர் கவிதா. கணவரால் கைவிடப்பட்டவரான இவரின் தந்தை இறந்துவிட்டார். தாயார் வாய் பேசமுடியாதவர். இந்நிலையில் தனது தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அந்த மருத்துவமனையில் இருந்த ரஞ்சித் என்ற இளைஞர் கவிதாவின் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன் பின் அவரில் செல்போனிலிருந்து அவருக்கு தெரியாமல் இவருடைய போனிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.

அதன் பின் அவரிடம் பேச ஆரம்பித்த நண்பராகியுள்ளார். கணவரால் கைவிடப்பட்டவர் என்பதை அறிந்தவுடன் ரஞ்சித் நான் உங்களை திருமணம் செய்து கொள்கிறேன், பயப்படாதே என்று ஆசைவார்த்தைகள் எல்லாம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து தாத்தாவின் சிகிச்சை முடிந்ததால், கவிதா தர்மபுரிக்கு சென்றுள்ளார்.

தர்மபுரியில் இருந்த கவிதாவை தொடர்பு கொண்ட ரஞ்சித் சேலத்திற்கு வருமாறு அழைத்துள்ளான். அவர் வர மறுப்பு தெரிவித்த போதும்,

ஒரே ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் எனக்கூறி அழைத்துள்ளான் ரஞ்சித். உடனே திரும்பி விடுவேன் என்று நிபந்தனை விதித்து வந்துள்ளார் கவிதா.

நேரில் வந்த அவரை அழைத்துக்கொண்டு பூங்கா, சுற்றுலாத்தளம் என சுற்றியுள்ளான் ரஞ்சித். இப்படியே இரவு ஆகும் வரை கவிதாவை அங்கும் இங்குமா பொய்களைக் கூறி அழைத்துக்கொண்டு சுற்றியுள்ளான். பின்னர் இரவு ஆன பின்பு பிறகு வீடு செல்ல வேண்டாம், இரவு தங்கிவிட்டு காலையில் செல்லுமாறு தெரிவித்துள்ளான்

தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்க வைத்த ரஞ்சித் அதன் பின் தன் நண்பர்கள் நபீஸ் மற்றும் நைவீன் மாலிக் ஆகியோருக்கு தொடர்பு கொண்டு குறித்த விடுதிக்கு வரும்படி அழைத்துள்ளான்.

அவர்கள் வந்த பின்பு தங்களுடைய ஆசைக்கு இணங்கும் படி ரஞ்சித் வற்புறுத்திய பின்பு தான் கவிதாவிற்கு புரிந்தது, இவன் தன்னை காதலிக்கவில்லை, தன் உடம்பை மட்டுமே அடைய இப்படி செய்துள்ளான் என்று, அவர்களின் ஆசைக்கு இணங்க மறுத்ததால், அவர்கள் உடனடியாக மதுவில் மயக்க மருந்தை கொடுத்து கவிதாவை கட்டாயாப்படுத்தி வாயில் மதுவை ஊற்றியுள்ளனர்.

மயங்கிய அவரை இந்த மூன்று பேரும் கூட்டாக வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து கவிதா அடுத்த நாள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால், பொலிசார் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேண்டுமானால் சோதித்துக் கொள்ளுங்கள் : தனது பேச்சால் சிக்கிய திருடன்!!

தமிழகத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர், தான் திருடவில்லை என்று தாமாக கூறியதால் பொலிசாரிடம் சிக்கிய சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

சென்னை கோயம்பேட்டில், பூ வியாபாரம் செய்து வரும் மாரிமுத்து என்பவர் கடந்த 2ஆம் திகதி இரவு, காற்று வர வேண்டும் என்பதற்காக தனது வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கியுள்ளார். திறந்திருந்த வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், சத்தமில்லாமல் பீரோவில் இருந்த 15 சவரன் நகை மற்றும் 35 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, காலையில் கண் விழித்த மாரிமுத்து மற்றும் குடும்பத்தினர், திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், மண்ணடி பகுதியில் இரவில் இளைஞர் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அச்சமயம் அங்கு வந்த பொலிசார், சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞரை விசாரித்துள்ளனர்.

அப்போது குறித்த இளைஞர் தாமாக முன் வந்து தான் திருடவில்லை என்று கூறியுள்ளார். மேலும், தன் உடைகளை சோதித்துக்கொள்ளுங்கள் என்று கூறி தனது உடைகளை கழற்றிக் காட்டியுள்ளார்.

இளைஞரின் செயல் பொலிசாருக்கு சந்தேகத்தை வலுக்கச் செய்தது. இதனைத் தொடர்ந்து, குறித்து இளைஞரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற பொலிசார், அவரிடம் நடைத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், அவரின் பெயர் பவுல்ராஜ் என்றும், பூ வியாபாரி மாரிமுத்துவின் வீட்டில் நண்பருடன் சேர்ந்து அவர் திருடியதும் தெரிய வந்தது.

பின்னர், நகை மற்றும் பணத்தை பவுல்ராஜிடம் இருந்து பறிமுதல் செய்த பொலிசார், தப்பிய மற்றொரு இளைஞரை தேடி வருகின்றனர்.

மேலும், கோடை காலத்தில் காற்றுக்காக கதவை திறந்து வைத்துவிட்டு தூங்க வேண்டாம் என்று, சென்னை பொலிசார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

பலாத்காரம் செய்யப்பட்டு பெற்றோர் கண்முன்னே எரித்துக்கொல்லப்பட்ட சிறுமி!!

கத்துவா சிறுமி சம்பவத்தையடுத்து தற்போது மற்றொரு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் Chatra மாவட்டத்தில் உள்ள Rajakendua என்ற கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

சம்பவம் நடைபெற்ற அன்று, வீட்டில் இருந்த அனைவரும் திருமணத்திற்கு சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த சிறுமியை 4 பேர் சேர்ந்து பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுகுறித்து குடும்பத்தினர் பஞ்சாயத்தில் புகார் அளித்ததையடுத்து, இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு 150 தோப்புக்கரணம் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு 50,000 பணம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டப்பட்டது.

இந்த தீர்ப்பால் கோபமடைந்த குற்றவாளிகள், பஞ்சாயத்து முடிந்த பின்னர் சிறுமியின் வீட்டுக்கு சென்று, குடும்பத்து உறுப்பினர்களை அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல், குடும்பத்தினர் முன்னிலையிலேயே சிறுமியை தீவைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர் இதுகுறித்து பொலிசில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர சிங், ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் எஞ்சிய குற்றவாளிகள் தேடப்பட்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

வட இந்திய மாநிலங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிகமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகி வருவது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 60 வயது முதியவர் தற்கொலை!!

இந்தியாவில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளியான 60 வயது ரிக்ஷா டிரைவர் சுப்பையா தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆந்திராவின் குண்டூரில் சமீபத்தில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது, குற்றவாளிக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன.

நேற்று முதல் அசாதாரண சூழல் நிலவிய நிலையில், குற்றவாளியான சுப்பையா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகனுக்கு போன் செய்த முதியவர், நான் என்ன காரியம் செய்துவிட்டேன், என்னால் உனக்கு அவமானம், நான் வாழவே தகுதியற்றவன் என கூறியபடியே போனை துண்டித்துள்ளார்.

குண்டூரிலிருந்து 15 கிலோமீற்றர் தொலைவில் மரத்தில் தொங்கிபடியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் : சிக்கியது எப்படி?

சென்னையில் மனைவியை கொன்றுவிட்டு மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். மதுரவாயல் கங்கையம்மன் நகர் 6வது தெருவில் வசித்து வரும தம்பதியினர் சீனிவாசன்- இந்திராணி. இவர்களுக்கு திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. சீனிவாசன் பிளம்பராகவும், இந்திராணி அருகிலுள்ள கம்பெனியில் தையல் வேலையும் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்து இருவரும் வீட்டுக்கு வந்துள்ளனர். நள்ளிரவில் திடீரென அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவர இந்திராணி சடலமாக கிடந்துள்ளார், மாரடைப்பால் இறந்துவிட்டார் என சீனிவாசன் கூறியுள்ளார்.

ஆனால் இந்திராணியின் முகம், கழுத்தில் காயங்கள் இருப்பதை பார்த்த உறவினர்களுக்கு சந்தேகம் வலுத்தது.

எனவே மதுரவாயல் பொலிசிடம் புகார் செய்தனர், அத்துடன் இந்திராணியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசார் விசாரணை நடத்தியதில், சீனிவாசன் உண்மையை ஒப்புக்கொண்டார். மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் : சிக்கியது எப்படி?வீட்டு வாடகை தருவது தொடர்பாக இருவருக்கும் பிரச்சனை வந்ததாகவும், குடிபோதையில் இருந்த சீனிவாசன் இந்திராணியை அடித்து உதைத்ததும் தெரியவந்தது.

கழுத்தை நெறித்ததில் இந்திராணி இறந்து விட்டதால், கொலையை மறைக்க நாடகமாடியதும் தெரியவந்தது.

இந்துப் பெண்ணை காதலித்த இஸ்லாமிய இளைஞர் படுகொலை!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இந்து பெண்ணை காதலித்த இஸ்லாமிய இளைஞரை பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் கடத்தி சென்று அடித்து கொன்றுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானீர் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இப்பகுதியில் உள்ள இந்து குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை இஸ்லாமியரான சைஃப் அலி கான்(22) காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வரவே அவசர அவசரமாக குறித்த பெண்ணுக்கு திருமண ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர்.

திருமணத்திற்கு 2 வாரங்கள் உள்ள நிலையில் கடந்த செவ்வாய் அன்று குறித்த இளைஞரை கடத்தி சென்ற பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் கொடூரமாக தாக்கி குற்றுயிராக கழிவு நீர் ஓடையில் விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

பொலிஸ் உதவியுடன் அங்கிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இளைஞர் சைஃப் அலி கான் உயிரிழந்துள்ளார்.

இதனிடையே சைஃப் அலி கானின் தந்தை, குறித்த காதல் விவகாரம் குறித்து மகனிடம் அறிவுரை கூறியதாகவும், பின்னர் இந்த உறவு தேவையில்லை எனக் கூறி எச்சரித்ததாகவும் ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்ததாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த இளம்பெண்ணுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெறுவதாக அறிந்த பின்னர் சைஃப் அலி கான் பெண்ணின் குடும்பத்தினருக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மட்டுமின்றி பெண்ணின் தந்தைக்கு பல முறை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த கொலை விவகாரம் தொடர்பில் பெண்ணின் தந்தை விஜய், உறவினர் விஜேந்திரா ஆகியோரை கடந்த வியாழன் அன்று கொலை குற்றம் தொடர்பாக பொலிசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே குறித்த இளம்பெண்ணை கடத்திச் சென்று விற்றுவிட முயற்சி மேற்கொள்வதாக அவரது தந்தையின் பேரில் பெண்ணின் தாயாரே புகார் ஒன்றை பொலிசாருக்கு புகார் அளித்து பின்னர் திரும்ப பெற்றுக் கொண்டுள்ளார்.

தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணின் வயிற்றில் இருந்து 60 கிலோ கட்டியை அகற்றிய மருத்துவர்கள்!!

 

அமெரிக்காவில் உணவருந்த முடியாமல் தவித்த பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 60 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் அமைந்துள்ள Danbury பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.

இங்குள்ள மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வயிறு உப்பியநிலையில் 38 வயதான பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் 60 கிலோ எடை கொண்ட கட்டி ஒன்று வளர்ந்திருப்பதாகவும், அதனாலையே அவரால் உணவருந்த முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த குறித்த பெண்ணுக்கு அவரது வயிற்றில் வாரம் ஒன்றுக்கு 5 கிலோ எடை அளவுக்கு கட்டி வளர்ந்து வருவதை கண்டறிந்தனர்.

இது அவரது செரிமான அமைப்பை அழுத்தி வருவதால் அவரால் உணவருந்த முடியாமல் கடும் அவதிக்கு பட்டுவந்துள்ளார்.

இதனையடுத்து கடந்த மாதம் மத்தியில் 20 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு ஒன்று 5 மணி நேரம் நீண்ட அறுவை சிகிச்சையின் முடிவில் 60 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றியுள்ளனர்.

தற்போது நலமுடன் இருக்கும் குறித்த பெண் அடுத்த 2 வாரத்தில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.