அமெரிக்காவில் மென்பொறியாளரை சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!!

அமெரிக்காவில் இந்திய மென்பொறியாளரை சுட்டுக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கான்சாஸில் மென்பொறியாளராக பணியாற்றியவர் ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா(வயது 32), இந்தியாவின் ஹைதராபாத்தை சேர்ந்தவர். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கான்சாஸில் உள்ள மதுபான விடுதியில் நண்பர்களுடன் அமர்ந்து தொலைக்காட்சியில் கூடைப்பந்தாட்ட போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கூறியபடியே இந்தியர்களை நோக்கி சுடத் தொடங்கினார். இதில் ஸ்ரீனிவாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இவரது நண்பரும் காயமடைந்தார்.

விசாரணையில் ஸ்ரீனிவாஸை சுட்டது ஆடம் புரிண்டோன்(வயது 52) என்பதும், கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி என்பதும் தெரியவந்தது.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை கான்சாஸ் மாகாண நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நீதிபதி Charles Droege, ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

அமெரிக்காவில் இலங்கைப் பெண் செய்த சாதனை!!

அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த பெண் வைத்தியர் ஒருவரின் மகத்தான பணி குறித்து அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐக்கிய அமெரிக்க முழுவதும் உள்ள வைத்தியசாலை தரவரிசையில் இலங்கை வைத்தியர் இயக்குனராக பயணியாற்றும் வைத்தியசாலை முதல் இடத்தை பிடித்துள்ளது. Health South Desert Canyon Rehabilitation என்ற வைத்தியசாலையே இவ்வாறு முதலிடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்காவில் இந்த வெற்றியை பெறுவதென்றால் வைத்தியசாலை ஒன்று பல்வேறு பிரிவுகளில் வெற்றியை பதிவு செய்திருக்க வேண்டும். நோயாளிகளின் திருப்தி அதன் முதல் அங்கமாகும். அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு, வைத்தியர்களுடன் உள்ள தொடர்பு மற்றும் ஒப்புதல் திட்டம் தொடர்பில் தரப்படுத்தல் என்பன ஆய்வில் கண்காணிக்கப்பட்டுள்ளன.

ரொக் ஹில் ஹெல்த் சவுத் என்ற வைத்தியசாலையில் சேவையை பெற்றவர்களில் 90 வீதத்திற்கும் அதிகமானோர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

குறித்த வைத்தியசாலையில் சுகாதார பாதுகாப்பு இன்னும் ஒரு முக்கிய காரணமாகவே கருதப்படுகின்றது. இந்த வைத்தியசாலை நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்ற நிலையில், நோயாளிகளுக்கு உயர் மட்ட பாதுகாப்பு வழங்கி சாதாரண வாழ்க்கைக்கு செல்வதற்கான உறுதியை வழங்குகின்றது.

நோயாளிகள் குணமடைந்தவுடன் குடும்பத்துடன் தங்கள் வீடுகளுக்கு செல்ல வைப்பதே வைத்தியசாலையின் இறுதி நோக்கமாகும்.

இலங்கை வைத்தியர் மாலிகா ஜயசூரியவின் கண்கானிப்பு மற்றும் ஆலாசனைக்கு கீழ் இயங்கும் ரொக் ஹில் வைத்தியசாலைக்கு நோயாளிகளிடம் இருந்து சிறந்த பாராட்டு கிடைத்துள்ளது.

மாலிகா ஜயசூரிய பேராதனை வைத்திய பீடத்தில் உருவாகிய ஒரு வைத்தியராகும். பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண்டி வைத்தியசாலையில் செயற்பட்டவர் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகின்றார்.

பெண் கேட்டுச் சென்ற காதலனை மோசமாக கொன்ற தந்தை : குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை!!

தமிழகத்தில் பெண் கேட்டுச் சென்ற காதலனை, அந்த பெண்ணின் தந்தை அவரை தீ வைத்து எரித்ததால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தையடுத்த புளியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ். மும்பையில் உள்ள கடற்படை விமான தளத்தில் பணியாற்றி வரும் இவரும், திருத்தணி அதிமுக நகர்மன்ற முன்னாள் செயலர் சௌந்தரராஜனின் மகளான அஸ்வினியும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஊருக்கு வந்த ராகேஷ் தன் உறவினர்களுடன், அஸ்வினியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளனர். அப்போது அஸ்வினியின் தந்தையான செளந்தர் ராஜன் அவரை தீ வைத்து எரித்துள்ளார்.

இதனால் 70 சதவீத தீக்காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக மும்பையிலுள்ள இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார். ராகேஷின் இறப்பை தாங்கமுடியாமல் அவரின் குடும்பத்தினர் இறப்புக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.

வவுனியாவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்து : நால்வர் படுகாயம்!!

வவுனியா வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே இன்று (05.05.2018) மதியம் 2.45 மணியளவில் பேரூந்தில் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸார் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் வைத்தியசாலையிலிருந்து பொலிஸார் தப்பியோடியுள்ளார். இவ் விபத்துச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து பாவற்குளம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேரூந்தின் மீது வேப்பங்குளம் 8ம் ஒழுங்கைக்கு அருகே மன்னார் வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸார் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த பொலிஸார் வைத்தியசாலையிலிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.

தப்பித்து சென்ற முச்சக்கரவண்டியினை பின்தொடர்ந்து ஊடகவியலாளர் சென்ற சமயத்தில் அவர்களை வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அருகே இறக்கி விட்டு முச்சக்கரவண்டி சென்றுள்ளது.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் இருந்தவர்கள் அனைவரும் மதுபோதையில் இருந்துள்ளதாகவும் வேகமாக சென்ற சமயத்திலேயே பேரூந்தில் மோதி விபத்துக்குள்ளானதாக விபத்தினை நேரில் பார்வையிட்டவர்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் மதுபோதையில் சென்றால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் பொலிஸார். தங்களே விபத்துக்குகளுக்கு காரணமாகவிருந்தால் என்ன செய்வது?

குடித்துவிட்டு பறக்கும் விமானத்தில் அட்டகாசம் செய்த பணிப்பெண்!!

 

விமானத்தில் குடித்து விட்டு மோசமாக நடந்துகொண்ட விமானப் பணிப்பெண்ணை United flight Airlines நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியுள்ளது. United flight Airlines நிறுவனத்திற்கு சொந்தமான flight 4689 என்ற விமானம், Denver இல் இருந்து Willston- க்கு பயணித்துள்ளது.

இந்த விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்தவர் குடித்துவிட்டு பணிக்கு வந்துள்ளார். பயணிகள் அனைவரும் அமர்ந்திருக்கையில், அவர்கள் முன்னால் நின்றுகொண்டு அறிவுரைகளை முறையாக வழங்காமல் போதையில் தள்ளாடியுள்ளார்.

மேலும், போதை தாங்கமுடியாமல் விமானம் பயணித்துக் கொண்டிருக்கையில், அங்கிருந்த பயணிகள் மீது விழுந்து அட்டகாசம் செய்துள்ளார், இதனை பயணிகளில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

இதுகுறித்து பயணிகளிடம் நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளனர், இதனைத்தொடர்ந்து இந்த சம்பவத்திறக்க நிர்வாகம் பயணிகள் அனைவரிடமும் மன்னிப்பு கோரியுள்ளது.

பயணிகளின் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கும் நாங்கள், இதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு இனிமேல் இதுபோன்ற தவறுகள் நடக்காவண்ணம் பார்த்துக்கொள்கிறோம் என மன்னிப்பு கோரியுள்ளது.

மேலும், விமானத்தில் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இழப்பீடு வழங்கியதோடு மட்டுமல்லாமல் பணிப்பெண்ணையும் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

இலங்கையில் வாகன சாரதிகளுக்கு மற்றுமொரு நெருக்கடி!!

அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை சூத்திரம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. புதிய எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய இதற்கு முன்னர் நீக்கப்பட்ட வரி மீண்டும் விதிக்கப்படும் என உயர்மட்ட தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதற்கமைய ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாய் வரியும் ஒரு லீற்றர் டீசலுக்கு 12 ரூபாய் வரியும் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற இறுதி கலந்துரையாடல் வார இறுதியில் இடம்பெறவுள்ளது.

குறைந்தபட்சம் ஒரு லீற்றர் பெற்றோல் 15 ரூபாயிலும், டீசல் 10 ரூபாயிலும் அதிகரிக்க கூடும் என அமைச்சரவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எரிபொருளின் விலை உயர்வு காரணமாக எதிர்வரும் நாட்களில் பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்க கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இனி குடிக்கமாட்டேன் : தற்கொலை செய்த மாணவனின் தந்தை உருக்கம்!!

தனது மகனின் விருப்பப்படியே இனிமேல் மது குடிக்க மாட்டேன் என தற்கொலை செய்து கொண்ட தினேஷின் தந்தை உருக்கத்துடன் கூறியுள்ளார்.

நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோவில் அருகே கே.ரெட்டியபட்டியை சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் தினேஷ் நல்லசிவன்(வயது 17), 12ம் வகுப்பு படித்து முடித்துள்ள தினேஷ் இரு நாட்களுக்கு முன் நெல்லையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் எழுதியிருந்த கடிதத்தில், தான் இறந்த பிறகாவது தந்தை மதுப்பழக்கத்தை விட வேண்டும் எனவும், மதுக்கடைகளை மூட மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மகனின் சடலத்தை பார்த்து கதறிய மாடசாமி, மதுவை விடும்படி தினேஷ் எவ்வளவோ கூறியும் என்னால் அப்பழக்கத்தில் இருந்து மீளமுடியவில்லை, மருத்துவராக கனவு கண்ட மகனை இழந்து விட்டேன்.

என் குடும்பத்தை பார்த்தாவது மது அருந்துபவர்கள் திருந்த வேண்டும், இனிமேல் மது அருந்த மாட்டேன், அப்போதுதான் என் மகனின் ஆன்மா சாந்தி அடையும் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

காதலனுடன் ஓடிப்போன பெண்: இறுதிச்சடங்கு செய்த பெற்றோர்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் இறுதிச்சடங்கு செய்த மகள் உயிரோடு திரும்பி வந்ததால் பெற்றோர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். நொய்டாவின் ஷாஜகான்பூரை சேர்ந்தவர் சர்வேஷ் சக்சேனா, அதே ஊரில் மளிகை கடை நடத்தி வருபவருக்கு நீது என்ற மகள் இருக்கிறார்.

இவருக்கும், ராம் லக்ஷமண் என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தன்னுடைய பெற்றோருடனேயே நீது வாழ்ந்த நிலையில், கடந்த மாதம் 7ம் திகதி காணாமல் போயுள்ளார், இந்நிலையில் நீதுவின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து பொலிசாரின் விசாரணையில், கடந்த 24ம் திகதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அது தன்னுடைய மகள் தான் உறுதி செய்த நீதுவின் பெற்றோர், கணவர் குடும்பத்தினர் மீது குற்றம்சாட்டினர். இதனையடுத்து நீதுவின் கணவர் குடும்பத்தினரிடம் பொலிசார் விசாரணை நடத்தினர், அவருக்கு இறுதிச்சடங்கும் நடந்து முடிந்தது.

இந்நிலையில் நீதுவின் கணவர் குடும்பம் மீதான சந்தேகம் உறுதி செய்யப்படாத நிலையில், பொலிசார் வேறு விதமாக விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது நீதுவின் அப்பா கடைக்கு அடிக்கடி வந்து சென்ற பூரன் என்பவர், சமீபகாலமாக கடைக்கு வராதது தெரியவந்தது.

இவரிடம் விசாரணை நடத்தியதில் உண்மையை ஒப்புக்கொண்டார், சில நாட்களில் வீட்டுக்கு திரும்பிய நீதுவும், அப்பா திட்டிகிட்டே இருந்ததால் பூரனோட சேர்ந்து வாழலாம்னு முடிவெடுத்து சென்று விட்டதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் இறுதிச்சடங்கு நடத்தப்பட்ட சடலம் யாருடையது என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழில் சற்றுமுன் பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு!!

ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும், பொலிஸ் உத்தியோகத்தரொருவர் யாழ். நாரந்தனை பகுதியில் வைத்து சற்றுமுன் வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.

சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆயுளை அதிகரிக்கும் 10 விடயங்கள் : கண்டிப்பாக படியுங்கள்!!

தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், இது தவறு என்று தெரிந்தும், ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால் நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய தவறுகள் என்னென்ன என்பது குறித்து, பல்வேறு மருத்துவர்கள் தெரிவித்த முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

தவறு செய்யாத மனிதன் இல்லை. ஆனால், இது தவறு என்று தெரிந்தும், ஒரே விடயத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால் நம் ஆரோக்கியத்துக்கு நாமே வேட்டுவைக்கக்கூடிய தவறுகள் என்னென்ன என்பது குறித்து, பல்வேறு மருத்துவர்கள் தெரிவித்த முக்கியமான 10 தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.


புகைபிடித்தல் மது அருந்துதல்

சந்தோஷம், சோகம், டென்ஷன் என, எந்த ஓர் உணர்ச்சிக்கும் உடனே புகைபிடிக்க வேண்டும் என்ற தூண்டுதல் பலருக்கும் உள்ளது. ஒரு சிகரெட்டைப் பற்றவைக்காமல், இவர்களால் கொண்டாட்டத்தைத் தொடங்க முடியாது.

புகைபிடிப்பது புகைப்பவர் உடலுக்கு மட்டுமல்ல அந்தப் புகையை சுவாசிப்பவர்களின் உடல்நலத்துக்கும் கேடு. புகை பிடிக்கும்போது ரத்தத்தில் ஒக்சிஜன் குறைந்து கர்பன்டை ஒக்ஸைட் அளவு அதிகரிப்பதால், கடைக்கோடி திசுக்களுக்கும் போதிய ஒக்சிஜன் கிடைக்காது.

இதுபோல ஆயிரக்கணக்கான பிரச்னைகள் ஒரு சிகரெட் பிடிப்பதால் ஏற்படுகின்றன. அதேபோல், தினசரிக் கட்டுப்பாடு இன்றி மது அருந்துவதால், கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கப்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க, மது அருந்துவதைக் கைவிடுவது நல்லது.

பல் துலக்காமல் தூங்குதல்

காலை, மாலை இருவேளையும் பல் துலக்குவது அவசியம் என்று எவ்வளவுதான் கூறினாலும், ஒருசிலர்தான் இதைப் பின்பற்றுகின்றனர். பல் துலக்கும் நுட்பம் தெரிந்தவர்களால்கூட, 90 சதவிகிதம் அளவுக்குத்தான் கிருமிகளை அகற்ற முடியும்.

மீதம் உள்ள 10 சதவிகிதம் கிருமி மேலும் பெருக 12 மணி நேரம் போதும். இதைத் தவிர்க்க, இரவு தூங்குவதற்கு முன்பும் பல் துலக்க வேண்டும். ஆனால், தூங்கும் அவசரத்தில், இது என்ன பெரிய விடயமா என்று நாம் ஒதுக்கித் தள்ளுவதால் ஈறு, சொத்தை போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதை நம்மால் தவிர்க்க முடியும்.

வேகமாக உண்ணுதல்

சூடான உணவுகளை, சுவைக்க விரும்புபவர்களும் சரி பசியில் துடிப்பவர்களும் சரி, சாப்பிடும்போது அவர்களை அறியாமல் வேகமாகச் சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். அந்த நேரத்துக்கு அது திருப்தியளித்தாலும், அது ஏற்படுத்தும் விளைவுகள் அதிகம். நம் வாயில் உள்ள சுரப்பிகள் நாம் உட்கொள்ளும் உணவை நன்கு அரைத்துச் செரிமானம் செய்வதற்கு எளிதாக ‘களி’ போன்று ஆக்கி இரைப்பைக்கு அனுப்புகிறது.

ஆனால் ஒருவர் வேகமாக உண்ணும்போது வாயில் மெல்வது தடைபட்டு, நேரடியாக உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இதனால் உணவை, சமிபாடடையச் செய்வதில் வயிற்றுக்குப் பிரச்னை ஏற்படுகிறது. உணவுக் குழாய்க்குப் பதில் மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிடவும் வாய்ப்பு உள்ளது. இது மூச்சுத் திணறலுக்கு வழிவகுத்துவிடும். உணவை மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.

காலை உணவைத் தவிர்ப்பது

அனைவரும் செய்யும் மிகப் பெரிய தவறு, காலை உணவைத் தவிர்ப்பது. காலையில் வெறும் வயிற்றுடனோ அல்லது ஒரு கப் கோப்பி, பால் குடித்துவிட்டு வேலைக்குச் செல்பவராக இருந்தால், உங்கள் எதிர்கால ஆரோக்கியம் கேள்விக்குறியாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதை உணரவேண்டும். இந்தப் பழக்கம், உங்கள் சமிபாட்டு மண்டலத்தின் பணியைப் பாதிக்கும். காலையில் சாப்பிடாதபோது, உடல் பலவீனம் அடையலாம்.

உடற்பயிற்சியைத் தவிர்ப்பது

நாள் ஒன்றுக்கு குறைந்தது 45 நிமிடங்கள் நடைப்பயிற்சி, வாரத்துக்கு மூன்று நாட்களுக்கு உடலை வலுவாக்கும் பயிற்சிகள் செய்வது அவசியம். பயிற்சிக்கு இடையில் இடைவெளி இருக்கலாம். ஆனால், பயிற்சி செய்வதற்கு நீண்ட இடைவெளி கூடாது.

மிக அவசியமான காரணங்களைத் தவிர்த்து வேறு எந்த ஒரு காரணத்துக்காகவும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கக் கூடாது. அலுவலகத்தில் காலார நடக்கப் பழகுங்கள். பேருந்தில் பயணிப்பவர்கள், இறங்குவதற்கு முந்தைய நிறுத்தத்தில் இறங்கி நடக்க ஆரம்பியுங்கள்.

நேரம்கெட்ட நேரத்தில் தூங்குவது

மாணவப் பருவத்தில், பரீட்சைக்கு முந்தைய நாள் மட்டும் விடிய விடியப் படிப்போம். மற்றபடி இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தால், நேரம் கெட்ட நேரத்தில் தூங்குவது, காலையில் அவசர அவசரமாக எழுந்திருப்பது என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம். தூக்கம் குறையும்போது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்.

மேலும், உடலின் செயல்பாட்டிலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிப்பை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது, சாதாரணக் கிருமித் தொற்றைக்கூட, உடலால் எதிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். போதுமான தூக்கமின்மையால் கண் எரிச்சல், பணியில் ஈடுபாடின்மை போன்றவையும் ஏற்படும்.

தொலைகாட்சியில் மூழ்குவது

மணிக்கணக்கில் கணணி, தொலைகாட்சி முன்பு மூழ்கியிருந்தால், இதயம், கண், சாமிபாட்டு மண்டலம் எனப் பலவற்றையும் பாதிக்கும். மாரடைப்பு, பக்கவாதம், உடல் பருமனுக்கான வாய்ப்பை அதிகரிக்கச்செய்யும். டி.வி. பார்க்கும் பாது, நம்மை அறியாமல் அதிகக் கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்கிறோம்.

உடல் உழைப்பு குறைகிறது. இதனால் கலோரி அதிகரித்து, கொழுப்பு படிந்து, உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது, மாரடைப்பு உள்ளிட்ட பிரச்னைக்கு வழிவகுத்துவிடுகிறது. எனவே, குறிப்பிட்ட மணி நேரம் மட்டுமே தொலைக்காட்சி என்று சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால், ஆரோக்கியம் காக்கலாம்.

உணவுப் பழக்கவழக்கங்கள்

இன்றைய குழந்தைகளுக்கு, பாரம்பரிய உணவுகளான இட்டலி, தோசை பிடிப்பது இல்லை. வகைவகையான பாஸ்ட்புட் எனப்படும் உணவுகள்அவர்களை ஈர்க்கின்றன. அவை பெரும்பாலும் கோதுமை மாவில் செய்யப்படுவதால், உடலுக்குக் கேடு. இந்த வகை உணவில், நார்ச் சத்து கொஞ்சமும் இல்லை. இதனால் மலச்சிக்கல் ஏற்படும். சில பாஸ்ட்புட்களில் இருக்கின்ற மெழுகு போன்ற பொருள் உடலினுள் சென்று குடலின் மேல் படிந்து, கேடு விளைவிக்கின்றன.

இத்தகைய உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால், சின்ன வயதிலேயே பெப்டிக் அல்சர், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

ஆறு வேளையும் அரிசிக்கு அடிமை

உணவு விரும்பிகள் இன்று ஏராளம். உணவு, அதன் தரத்தையும் சரிபார்த்த பின்னர் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக நாம் உண்ணும் அரிசியில் கார்போஹைதரேட் மட்டுமே உள்ளது. உடலுக்குத் தேவையான கார்போஹைதரேட் போக மீதம் உள்ளவை கொழுப்பாக மாற்றம் அடையும். இதனால் உடல் பருமன், ரத்தக் குழாயில் கொழுப்பு படிதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

உணவுகளின் கலோரியை அறிந்துகொண்டு, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து ஒரு நாளைக்கு ஆறு வேளைகளாகச் சாப்பிடலாம். பருப்பில் புரதச் சத்து, சாதத்தில் கார்போஹைதரேட், எண்ணெயில் கொழுப்புச் சத்து இருக்கிறது. காய்கறி, பழங்களில் நார்ச் சத்து, விட்டமின், மினரல்கள் உள்ளன. எனவே, இவற்றைச் சரிவிகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடும் உணவைத் தெரிந்து உட்கொண்டால், ஆரோக்கியம் நம் கையில்.

டீ,கோப்பியைத் தவிர்க்கலாம்

டீ, கோப்பி போன்ற பானங்களுக்கு அடிப்படையிலேயே மூளையைத் தூண்டிவிடும் சக்தியுள்ளது. ஒரு நாளுக்கு நான்கு முறைக்கும் மேல் டீ, கோப்பி அருந்துபவர்களுக்கு அந்தத் தூண்டுதல் அதிகமாகி மூளையைத் தொந்தரவு செய்யும் நிலைமைக்குப் போய்விடுகிறது. இதன் விளைவாக மூளை மந்தமடையலாம். மேலும் சர்க்கரை, பாலில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளதால், இதய நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

கலோரிகள் அதிகரிக்கும். கோப்பி , தேநீருக்குப் பதில் அன்டிஅக்சிடென்ட் நிறைந்த கிரீன் டீ அருந்துவது ஆரோக்கியமானது. கிரீன் டீயில் சர்க்கரை, தேன் எதையும் சேர்க்காமல் அப்படியே அருந்துவது முக்கியம்.

கோர விபத்தில் ஸ்தலத்தில் பலியான இளைஞன் : சிசிடீவியில் வெளியான காட்சிகள்!!

மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனது நண்பருடன் வெசாக் பார்க்க செல்வதற்காக மோட்டார் சைக்கிள் பரிசோதிக்கும் போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதற்காக அதிக வேகமாக ஓட்டிய சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் 20 வயதுடைய இளைஞன் உயிரிழந்த நிலையில் அவரது நண்பர் படுகாயமடைந்த நிலையில் மினுவங்கொட மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட சந்தியில் உள்ள மின்சார தூணில் தலை மோதுண்டமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த இளைஞனின் தாயார் மகன் உயிரிழந்த இடத்தில் அழுது புலம்பும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

உயிரிழந்த இளைஞனின் இறுதி நிகழ்வில் மோட்டர் சைக்கிள் அணி வகுப்பு மூலம் சடலம் மாயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இளைஞனின் உயிரை பறிந்த விபத்து தொடர்பான சிசிடீவி காணொளி ஒன்று ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

நீதிமன்றில் உறங்கிய நபருக்கு சிறைத்தண்டனை : இலங்கையின் நடந்த வினோத சம்பவம்!!

மாவனல்ல மாவட்ட நீதிமன்றில் அண்மையில் வழக்கு விசாரணைகளுக்காக சென்றிருந்த நபர் தன்னை அறியாமல் உறங்கியதனால், தண்டனை அனுபவிக்க நேரிட்ட வினோத சமப்வமொன்று இடம்பெற்றுள்ளது.

காணி பிணக்கு தொடர்பான வழக்கிற்காக நீதிமன்றம் சென்றிருந்த குறித்த நபர், தன்னை அறியாமல் உறங்கிய போது அவரது செல்லிடப்பேசி சத்தமாக ஒலித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த நபரை நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்குமாறு நீதவான் மலிந்த லியனகே பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு விசாரணைகளுக்குச் சென்ற நபர் செல்லிடப்பேசியின் அழைப்பு மணியை ஒலியை நன்றாக குறைத்து வைத்துள்ளார்.

தன்னை அறியாமல் உறங்கியதனால் கையில் இருந்த செல்லிடப்பேசி கீழே விழுந்துள்ளது. இதன் போது விழுந்த செல்லிடப் பேசியின் பாகங்களை ஒன்றிணைத்து சட்டை பையில் வைத்துள்ளார்.

செல்லிடப்பேசியின் அழைப்பு மணி ஒலியை குறைக்க மறந்ததனால், எவரோ ஒருவர் அழைப்பினை ஏற்படுத்திய போது நீதிமன்றில் சத்தத்துடன் செல்லிடப்பேசியின் அழைப்பு மணி ஒலித்துள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், குறித்த நபர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் கழிப்பறையில் நடந்த மோசமான செயற்பாடு : மூவர் கைது!!

பல கோடி ரூபா பெறுமதியான தங்கங்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் நேற்று மாலை விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடம் இருந்து ஐந்து கோடிக்கும் மேலான பெறுமதியுடைய தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விமான நிலைய கழிப்பறைக்குள் வைத்து தங்கத்தை கைமாற்ற முயற்சித்த போது குறித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா பகுதியை சேர்ந்த ஒருவரும், இந்திய பிரஜைகள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழில் ஆறு பிள்ளைகளின் தாய் மரணம் : கணவன் கைது!!

யாழ். அச்செலு பகுதியில் ஆறு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அவரது கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் கடந்த முதலாம் திகதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் திருச்செந்தூரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விசாரணைகளை முடியும் வரை உயிரிழந்த பெண்ணின் உடலை புதைக்கவோ, எரிக்கவோ கூடாதென பொலிஸார் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கற்பதற்கு பாடசாலை இன்றி தவிக்கும் இராணுவ வீரரின் மகள்!!

இந்த ஆண்டு முதல் ஒரு பாடசாலை செல்ல ஆரம்பிக்க வேண்டி இருந்தும் பாடசாலை செல்லும் வாய்ப்பை இழந்துள்ள சிறுமி தொடர்பான செய்தி ஒன்று இரத்தினபுரி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

ஆறு வயதுடைய குறித்த சிறுமி தொடர்பில் கல்வித்துறை அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என்று சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பாடசாலைக் கல்வியைப் பெற வேண்டிய வயதை எட்டியுள்ள துளங்சா விக்ரமசிங்க என்ற சிறுமி தற்போது கல்வியின்றி வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தச் சிறுமி இரத்தினபுரியின் மத்தியில் நிரந்தர வதிவிடத்தை கொண்டுள்ள போதிலும் நகரிலுள்ள மூன்று பிரதான பாடசாலைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யுத்த சமயத்தில் அங்கவீனமடைந்த இராணுவ வீரரான சிறுமியின் தந்தை, தனது மகளுக்கு பாடசாலை ஒன்றை வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டுள்ளார்.

வவுனியா மாணவன் கிந்துஜன் தெற்­கா­சிய இள­நி­லை தட­க­ளத் தொடரில் இடம்பிடித்து சாதனை!!

 

தெற்­கா­சிய இள­நி­லைப் பரி­வி­ன­ருக்­கான தட­க­ளத் தொடர் கொழும்பு சுக­த­தாச விளை­யாட்­ட­ரங்­கில் இன்று சனிக்கி­ழமை, நாளை ஞாயிற்­றுக்­கி­ழமை ஆகிய இரண்டு தினங்­கள் நடை­பெ­ற­வுள்­ளன.
இந்­தத் தொட­ருக்­கான இலங்கை அணி­யில் வடக்கு மாகா­ணத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்து தமிழ் வீரர்­கள் இரு­வர் இடம்­பி­டித்­த­னர்.

பருத்­தித்­துறை ஹாட்­லிக் கல்­லூ­ரி­யின் சி.பிர­காஸ்­ராஜ் தட்டு எறி­தல் போட்­டி­யி­லும், வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­ய­லா­யத்­தைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் 5 ஆயி­ரம், 10 ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டப்­போட்­டி­க­ளி­லும் பங்குபற்றவுள்ளார்.

இந்நிலையில், 3ஆவது தடவையாக நடைபெறவுள்ள தெற்காசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரில் இம்முறை இலங்கையிலிருந்து 84 வீர, வீராங்கனைகள் கலந்துகொள்ளவுள்ளனர். இதில் 44 வீரர்களும், 40 வீராங்கனைகளும் உள்ளடங்குகின்றனர்.

அத்துடன், நீண்ட இடைவெளியின் பிறகு இம்முறை 4 தமிழ் பேசுகின்ற வீரர்களும் இலங்கை கனிஷ்ட மெய்வல்லுனர் குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

வவு­னியா தமிழ் மத்­திய மகாவித்­தி­ய­லா­யத்­தைச் சேர்ந்த சிவநாதன் கிந்துஷன் வெற்றிபெற்று வவுனியா மண்ணுக்கு பெருமைசேர்க்க வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

கடந்தவாரம் இடம்பெற்ற இள­நிலைப் பிரி­வி­ன­ருக்­கான தேசி­ய­மட்ட தட­க­ளத் தொட­ரில் 20 வய­துக்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான 5000 மற்­றும் 10 000 மீற்­றர் ஓட்­டங்­க­ளில் வவு­னியா தமிழ் மத்திய மகா வித்­தி­யா­ல­யத்­தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த சிவநாதன் கிந்துஷன் தங்­கப் பதக்கங்­க­ளைச் சுவீகரித்தார். கொழும்பு சுக­ததாஸ விளை­யாட்டு மைதா­னத்­தில் இந்தப் போட்­டி­கள் நடை­பெற்­றன.

20 வய­துக்கு உட்­பட்ட ஆண்­க­ளுக்­கான 5 ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில் வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்தியாலயத்தைப் பிர­தி­நி­தித்­து­வம் செய்த எஸ்.கிந்துஜன் 15 நிமி­டங்­கள் 56 செக்­கன்­கள் 10 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி தங்­கப் பதக்­கத்தை வென்­றார்.

இவர் 10 ஆயி­ரம் மீற்­றர் ஓட்­டத்­தில் 33 நிமி­டங்­கள் 56 செக்கன்கள் 81 மில்லி செக்­கன்­க­ளில் ஓடி தங்­கப்­ப­தக்­கம் வென்­றார்.