காட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நடந்தது என்ன?

 

கேரளாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணின் கொலை வழக்கில் 2 சுற்றுலா வழிகாட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லத்வியா நாட்டைச் சேர்ந்த இளம்பெண் மன அழுத்த நோய்க்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள கடந்த பிப்ரவரி மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள போத்தன்கோட்டில் ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்றுள்ளார். சிகிச்சை பெற்று முடித்த பின்னர், கேரளாவில் இருந்த அவர், மார்ச் 14 ஆம் திகதி கோவளம் கடற்கரைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை.

இதுகுறித்து அவரின் சகோதரி இலீஸ், பொலிசில் புகார் கொடுத்தார். மேலும், இளம்பெண்ணின் கணவர் ஆண்ட்ரூஸ், கேரள டி.ஜி.பி-யைச் சந்தித்து புகார் அளித்தார்.

இளம்பெண்ணின் கணவரும் சகோதரியும் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தெரிவித்தனர்

இதுகுறித்து கடந்த ஒரு மாதகாலமாக பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவளம் வாழமுட்டம் பகுதியில் மாங்குரோவ் காட்டுக்குள் வெளிநாட்டு இளம்பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அழுகிய நிலையில் கிடந்த அந்த உடல், , லாட்வியா நாட்டை சேர்ந்த பெண்ணின் உடல் தான் என உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் கோவளத்தில் சுற்றுலா வழிகாட்டிகளாக வலம் வந்த உமேஷ், உதயன் ஆகிய 2 பேரை பொலிசார் இன்று கைது செய்தனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என கேரள டி.ஜி.பி லோக்நாத் பெகரா கூறியள்ளார்.

தங்களை சுற்றுலா வழிகாட்டிகள் எனக்கூறி இவர்கள் இருவரும் அப்பெண்ணை பலாத்காரம் செய்து காட்டுக்குள் வீசியுள்ளனர். இறந்த இளம்பெண்ணின் உடலில் கிடந்த ஓவர்கோட் உதயனுடையது. உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் சிதறிக்கிடந்த முடிகளும் இவர்கள் இருவருடையதுதான்.

ரசாயனம் மற்றும் தடயவியல் அறிக்கை வந்த பிறகுதான், கொலை என உறுதி செய்த பிறகே இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிரியாவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ரஷ்ய போர் விமானம்!!

 

சிரியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் ரஷ்யாவுக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானிகள் இருவர் உயிரிழந்தனர்.

ரஷ்யா போர் விமானமான SU-30SM இன்று காலை சிரியாவின் Khmeimim ராணுவ தளத்திலிருந்து புறப்பட்டது. இரு விமானிகளுடன் புறப்பட்ட SU-30SM, லடாகியா நகரத்துக்கு அருகே மத்திய தரைக்கடலில் விழுந்தது, இதில் இரண்டு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்தை உறுதி செய்துள்ள ரஷ்ய வெளிவிவகாரத்துறை அமைச்சகம், விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை, பறவை மோதியதன் விளைவாக நடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடைசி நிமிடத்தில் கூட விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர விமானிகள் முயற்சித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டுகளில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் இலக்குகளை குறிவைத்து ஏவுகணைகள், குண்டுகள் வீசி தாக்குதல் நடத்த இந்த விமானம் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஒருதலைக் காதல் : காதலியின் ஆண்நண்பரை கொன்ற காதலன்!!

அமெரிக்காவில் ஒருதலையாக காதலித்து வந்த நபர், அப்பெண்ணின் காதலனை கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கலிபோர்னியாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் கெவின் பிரசாத். அங்கே பணிபுரிந்த நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) மீது கெவினுக்கு காதல் மலர்ந்துள்ளது, இதை அவரிடம் கூறாமல் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இருவரும் நட்பாக பழகிய நிலையில், வெளியில் செல்ல பலமுறை அழைத்தும் நிஷா வரவில்லை என தெரிகிறது.

தொடர்ந்து நச்சரித்துக் கொண்டிருந்த கெவினுக்கு கோபமாக பதிலளித்த நிஷா, தனக்கு மூன்று வயதில் குழந்தை இருப்பதாகவும், மார்க் என்பவருடன் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார். இதை கேட்டு ஷாக்கான கெவினால் நிஷாவை மறக்கமுடியவில்லை.

சில நாட்களில் தன் காதலனுடன் லாஸ் வேகாஸில் தங்கவிருப்பதாகவும், இதனால் வேலையை விட்டு நிற்கப் போவதாகவும் நிஷா கூறியுள்ளார். அப்போது மார்க்கை அழைத்து வந்து கெவினுக்கு அறிமுகமும் செய்து வைத்ததுடன், இதுதான் கடைசி சந்திப்பு என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியில் உறைந்த கெவின், தன் நண்பர் ரிவெரா என்பவரை அழைத்துக் கொண்டு மார்க்கின் காரை பின்தொடரட்ந்துள்ளனர். சுமார் 20 கி.மீவரை பின்தொடர்ந்த நிலையில், ஒரு இடத்தில் கார் நிற்க மார்க்கை மாறுவேடத்தில் இருந்த கெவின் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தியதில் கெவின் மீது சந்தேகம் இருப்பதாக நிஷா கூற, உண்மைகள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து கெவின் மற்றும் ரிவேராவை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கையில் பட்டப்பகலில் மாணவன் மீது கொடூர தாக்குதல் : நெஞ்சை பதற வைக்கும் காணொளி!!

குளியாப்பிட்டி பஸ் நிலையத்திற்கு அருகில் பாடசாலை மாணவர் ஒருவரை கும்பல் ஒன்று கொடூரமான தாக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவம் கடந்த 28 ஆம் திகதி நடந்த போதும், அது தொடர்பான CCTV காணொளி தற்பொழுது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இடையேயான வாக்குவாதம் தாக்குதலாக மாறியுள்ளது. தாக்குதலுக்குள்ளான 18 வயதான மாணவன் குருநாகல் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது மாணவன், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நாளை (04) வரையில் வாரியபொல நன்னடத்தை பிரிவின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். தாக்குதலுடன் தொடர்புடைய மூவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இளம் மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன் : பரபரப்பு வாக்குமூலம்!!

 

இந்தியாவில் ஆண் குழந்தையை பெற்றெடுக்காத மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்த கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் வீரேந்திரா. இவர் மனைவி நிதி அரோரா. தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அரோரா கடந்த செவ்வாய்கிழமை வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

பொலிசார் இது குறித்து வீரேந்திராவிடம் விசாரணை நடத்திய நிலையில் தான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது அரோரா சடலமாக கிடந்ததாக கூறினார். மேலும் கொள்ளையர்கள் தனது மனைவியை கொன்றிருக்கலாம் எனவும் கூறினார்.

இது குறித்து பொலிசார் விசாரணை நடத்திய போது ஆண் குழந்தை இல்லாததால் வீரேந்திரா அடிக்கடி அரோராவுடன் சண்டை போடுவார் என தெரியவந்தது.
மேலும் மூன்றாவது குழந்தையை பெற்று கொள்ள அரோரா விருப்பமில்லாமல் இருந்துள்ளதும் தெரியவந்தது.

இதனால் பொலிசாரின் சந்தேகம் வீரேந்திரா மீது விழுந்ததில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் மனைவியை கொலை செய்ததை அவர் ஒப்பு கொண்டார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், மூன்றாவது குழந்தை குறித்து செவ்வாய்கிழமை எங்களுக்குள் மீண்டும் சண்டை வந்தது. அப்போது ஆத்திரத்தில் தலையணையால் அவர் முகத்தில் அழுத்தி மூச்சு திணறடித்து கொலை செய்தேன் என கூறியுள்ளார்.

இதையடுத்து வீரேந்திராவை பொலிசார் கைது செய்த நிலையில் அவரின் இரண்டு குழந்தைகளும் பாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டன.

பெற்ற தாயை அம்மிக் கல்லால் அடித்து கொன்ற மகன் : அதிர்ச்சிக் காரணம்!!

இந்தியாவில் சொத்து தகராறில் தாயை அம்மிக்கல்லால் அடித்து கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தை சேர்ந்தவர் பாக்கியம்மா (50). இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னர் பாக்கியம்மாவின் கணவர் இறந்துவிட்டார். இந்நிலையில் பாக்கியம்மாவின் மூன்றாவது மகனான விஜய் (35) வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்துள்ளார். மேலும், பாக்கியம்மாவிடம் அடிக்கடி பணம் கேட்டதோடு சொத்தை பிரித்து தருமாறு தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அம்மாவிடம் விஜய் மீண்டும் சண்டை போட்டுள்ளார். அப்போது கோபமடைந்த விஜய் அருகிலிருந்த அம்மிக்கல்லை எடுத்து விஜயம்மாவின் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விஜயம்மாவின் சடலத்தை கைப்பற்றிய நிலையில் விஜய்யை தேடி வருகிறார்கள்.

பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் மர்ம உறுப்பை வெட்டிய பெண்!!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரின் ஆணுறுப்பை பெண் ஒருவர் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் வரிசையாக குழந்தைகள் பலாத்காரம் நடந்து வந்த நிலையில் பெண்ணொருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தவரின் ஆணுறுப்பை வெட்டி இருக்கிறார். தானே நேரிடையாக பொலிசில் இந்த சம்பவம் பற்றி புகார் கூறி இருக்கிறார்.

சம்பந்தப்பட்ட பெண் தனியாக நள்ளிரவில் உறங்கிக் கொண்டு இருக்கும்போது அவரது உறவினர் ஒருவர் அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்றார். தன்னை பாதுகாத்து கொள்வதற்காக சமையலறையில் உள்ள கத்தியை பயன்படுத்தி தன்னை வன்கொடுமை செய்ய வந்த நபரை கடுமையாக தாக்கி இருக்கிறார்.

இதனால் தடுமாறிய அந்த நபர் தப்பித்து ஓட முயற்சிக்கையில் அவரை இழுத்து மின் கம்பத்தில் கட்டிய அந்தப் பெண் பின் சரமாரியாக கத்தி கொண்டு அந்த நபரின் ஆணுறுப்பை வெட்டியிருக்கிறார்.

வலி தாங்காமல் கதறிய அந்த நபரை அப்படியே விட்டு விட்டு காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தகவல் தந்திருக்கிறார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் அந்த நபரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் புகாரின் பேரில் குறித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க போவதாக விகாஸ் திவாகர் எனும் காவல்துறை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீடமைப்பு திட்ட வீதிகளை புனரமைக்க ப.சத்தியலிங்கம் ஒப்புதல்!!

ஓமந்தை அரச ஊழியர் வீடமைப்பு திட்ட கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு கடந்த திங்கட்கிழமை ஓமந்தை அரச ஊழியர் வீடமைப்பு திட்ட முன்பள்ளி கட்டிடத்தில் மாலை நடைபெற்றது

இக்கூட்டத்தில் ஓமந்தை அரச ஊழியர் வீடமைப்புதிட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தினர் வடக்குமாகாணசபை உறுப்பினரை நேரடியாக சந்தித்தும் கடிதமூலம் எமது கிராமத்தில் உள்ள வீதிகள் புனரமைக்கப்படாமையினால் ஏற்பட்டுள்ள அசௌகரியங்களை தெரியப்படுத்தியமைக்கமைவாக அரச ஊழியர் வீட்டுத்திட்ட கிராமத்தின் வீதிகளை வடக்கு மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தனது குறித்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் 10ம் ஒழுங்கை(1KM), 2ம் ஒழுங்கை (1KM), 8ம் ஒழுங்கை (0.5KM), 5ம் ஒழுங்கை (0.5KM), 3ம் ஒழுங்கை (0.5 KM), 1ம் ஒழுங்கையில் கல்வெட்டு இரண்டு அமைப்பது, 11ம் ஒழுங்கைக்கு செல்வதற்கான முன் குறுக்கு வீதி(200M)

6ம் ஒழுங்கையில் சிறு திருத்தம், இவ்வீதிகள் அனைத்தும் திருத்தப்பட்டதன் பின்பு உள்ள மிகுதி நிதியில் 1ம் வீதியின் பிற்பகுதி திருத்தம் மற்றும் 20 மின்விளக்குகள் பொருத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது இவ்வேலைகள் எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்திற்குள் செய்து முடிக்க உத்தேசம் தெரிவிக்கப்பட்டது

இச்சந்திப்பில் ஓமந்தை அரச ஊழியர் வீட்டுதிட்ட கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் க.பேர்ணாட், கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் சு.வரதகுமார், ஓய்வுபெற்ற பொறியியலாளர் கு.சிவகுமாரன், மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சி.குணபாலன் வடக்குமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களின் பிரத்தியேக செயலாளர் ப.சத்தியசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பேஸ்புக்கில் மாப்பிள்ளை தேடிய கேரள பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

 

சமூகவலைதளமான பேஸ்புக்கை, வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பகிரவும், தகவல்களை அறிந்துகொள்ளவும் தான் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கேரளாவை சேர்ந்த ஜோதி என்ற பெண் பேஸ்புக் தளத்தை, திருமண தளமாக பயன்படுத்தியுள்ளது வைரலாகியுள்ளது.

மலப்புரத்தில் வசித்து வரும் ஜோதி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, எனது பெயர் ஜோதி. வயது 28. எனக்கு பெற்றோர் கிடையாது. Fashion Designing படித்து முடித்துள்ள எனக்கு நல்ல வாழ்க்கை துணை வேண்டும். நண்பர்களே…உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துங்கள்.

ஜோதிடம், சாதி இவைகளை நான் பார்ப்பதில்லை என பதிவிட்டுள்ளார். இதனுடன் தனது அண்ணன் மற்றும் சகோதரி ஆகியோரின் படிப்பு அவர்கள் படிக்கும் வேலையையும் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 26 ஆம் திகதி இவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது 6,000 shares பெற்றுள்ளது. மேலும் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஷீபெர்க்குக்கும் சேர்த்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில் என்னை போன்ற தங்களது வாழ்க்கை துணையை தேடிக்கொள்வதற்கு உதவியாக FBMatrimony என்ற வசதியை நீங்கள் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இது சரியான வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க உதவும் என கோரியுள்ளார். பேஸ்புக்கில் புகைப்படத்தை பதிவிடவே பெண்கள் பயந்துகொண்டிருக்கையில், துணிச்சலாக தனது புகைப்படம் மற்றும் விவரங்களை பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

பொது மக்களிடம் அவசர உதவி கோரும் பொலிஸார்!!

படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக தேடப்படும் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார், பொதுமக்களிடம் உதவியை கோரியுள்ளனர். கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 11 பேரை கடத்திச் சென்று சட்டவிரோதமாக தடுத்து வைத்து, கப்பம் பெற்ற பின்னர் படுகொலை செய்த நபரே இவ்வாறு தேடப்படுகிறார்.

நேவி சம்பத் என்ற ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியராச்சி என்ற இந்த சந்தேக நபரை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் பகிரங்க பிடியாணை பிறப்பித்துள்ளது.

சந்தேக நபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர். குறித்த நபரின் தகவல் அறிந்தால், 011-2422176, 011-2320141, 011-2320145, 011-2393621 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிய தருமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோர மணல் புயல் : 100ஐ தாண்டிய உயிரிழப்புக்கள்!!

 

இந்தியாவின் வட மாநிலங்களில் நேற்று ஏற்பட்ட மணல் புயலில் சிக்குண்டு, இதுவரையில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் ஜார்க்காண்ட் ஆகிய மாநிலங்களையே குறித்த புயல் அதிகளவில் தாக்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தை சேர்ந்த மக்களே புயலில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

இதில் ராஜஸ்தானில் மட்டும் 47பேரும், உத்தரப் பிரதேசத்தில் 46பேரும், ஜார்காண்ட் மாநிலத்தில் 2பேருமென, மொத்தம் 100பேர் உயிரிழந்துள்ளதாக இதுவரையிலான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் மூச்சுதிணறல் மற்றும் மின்னல் தாக்குதல் உட்பட, மரங்கள் முறிந்து வீழந்தமை உள்ளிட்ட காரணங்களினாலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விரைவில் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா வடக்கு வலயத்தின் விளையாட்டு நிகழ்வுகள் 2018!!

வவுனியா வடக்கு வலயத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு நிகழ்வுகள் ஓமந்தை மத்திய கல்லூரியில் இன்று (03.05) கல்லூரியில் நடைபெற்றது.

வவுனியா வடக்கை சேர்ந்த 19 பாடசாலைகள் பங்குபற்றிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் கு.அகிலேந்திரன் கலந்துகொண்டு நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்து வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தார்.

தேசியக்கொடி மற்றும் பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானதுடன் மாணவர்களது அணிநடையினை அதிதிகள் ஏற்றுக்கொண்டதுடன், ஒலிம்பிக் சுடரேற்றல் நிகழ்வை தொடர்ந்து வீரர்கள் மற்றும் நடுவர்களின் சத்தியப்பிரமாணம் எடுத்தல் நிகழ்வும் இடம்பெற்றது.

இவ்விளையாட்டுப் போட்டியில் கலாசார நடன நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன. விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விருந்தினர்களால் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

 

வவுனியாவில் இரு பாடசாலைகளில் ஆபத்தான குளவிகள் : மாணவர்கள் வெளியேற்றம்!!

 

வவுனியா பரக்கும் மகாவித்தியாலயத்தில் ஆபத்தான குளவிகள் கலைந்து பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தாக்கியமையால் அப்பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டு உடனடியாக பாடசாலை மாணவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இது தொடர்பாக வவுனியா அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்ட போதிலும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையினால் இன்று பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தந்திருந்த போதும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகையால் பாடசாலையை அதிபரினால் மூடப்பட்டதையடுத்து மாணவர்களை பெற்றோர்கள் அழைத்துச்சென்றிருந்தனர். இதனை செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் மூவருக்கும் குளவி தாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் வவுனியா விபுலானந்தா கல்லூரி பாடசாலை, நீர்த்தாங்கி மற்றும் அரச ஊழியர் விடுதியிலும் பாரிய குளவிக்கூடுகள் காணப்படுகின்ற நிலையில் இக் குளவிக்கூடுகள் பொது மக்களுக்கு ஆபத்தை விளைவிக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்னர் இதனை அழிப்பதற்கு ஏதுவான நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு மேற்கொள்ளவேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது.

தனிமையில் விளையாடிய இலங்கைச் சிறுமிக்கு இந்தியாவில் நடந்த விபரீதம்!!

இந்தியாவில் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை போஸ்கோ சட்டத்தின்படி ராமேஸ்வரம் மகளிர் பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தரம் 6இல் கல்வி பயிலும் சிறுமிக்கே இந்த கொடுமை நடந்துள்ளது.

குறித்த சிறுமி பள்ளி விடுமுறை என்பதால் தனது வீட்டருகே தனிமையில் விளையாடிக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த மண்டபம் சமத்துவ புரத்தைச் சேர்ந்த 35 வயதுடைய சரவணன் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இது குறித்து சிறுமி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அவர்கள், இச்சம்பவம் குறித்து ராமேஸ்வரம் அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய பொலிஸார், சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

மலையகத்தில் இப்படியும் ஓர் அதிசயம் : படையெடுக்கும் மக்கள்!!

 

திம்புள்ள – பத்தனை குயின்ஸ்பெரி தோட்டத்தில் விவசாயி ஒருவரின் தோட்டத்தில் ஒரே வாழைக்குலையில் மூன்று வாழைப் பூக்கள் பூத்துள்ளன. இப்பிரதேசத்தில் முதல் முதலாக இவ்வாறான ஒரு அதிசயம் நடந்துள்ளது.

பத்தனை குயின்ஸ்பெரி கீழ்ப்பிரிவு தோட்டத்தில் கே.எல்.சிரியாவதி என்பவரின் வீட்டுத்தோட்டத்திலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. 10 – 12 அடி உயரத்திலான இந்த வாழை மரத்தில் வாழைசீப்புடன் மூன்று வாழைப்பூ வளர்வது சிறப்பம்சம்.

இதனை இப்பிரதேசத்திலுள்ள பெருந்திரளான மக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றமை குறிப்பிடதக்கது.

13 வயது பாடசாலை மாணவிக்கு நடந்த கொடுமை!!

சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரை செவனகல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தணமல்வில – செவனகல பிரதேசத்தில் 13 வயதான பாடசாலை மாணவியை அவரது வீட்டுக்கு அவ்வப்போது சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய திருமணமான 23 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த ஆண்டு பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது சிறுமியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.

மறுநாள் சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ள சந்தேக நபர், வெளியில் அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் தாய் செவனகல பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.