நடிகர்களான விஜய், அஜித்துக்காக முட்டாள்களாக மாறும் யாழ்ப்பாண இளைஞர்கள்!!

 

சமூக ஒழுக்கம் மற்றும் கட்டுப்பாட்டுக்கு பெயர் போன யாழ்ப்பாணம் தற்போது சினிமா மோகத்தில் மூழ்க்கி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் காணப்படும் சினிமா கலாச்சாரம் தற்போது, தாயகத்தையும் முழுமையாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தென்னிந்திய நடிகர் அஜித்குமார் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணத்திலுள்ள அவரது ரசிகர்களும் அவருக்கான பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் அஜித்துக்கு பனர் வைத்து பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர்.

நடிகர் விஜயக்கும் இவ்வாறு பெரிய பனர்கள் வைத்து பால் ஊற்றி பிறந்தநாள் கொண்டாடும் பைத்தியகார இளைஞர்களும் தாயக்தில் உருவாகியுள்ளனர்.

இதேவேளை அண்மைக்காலமாக தென்னிந்திய சினிமா நட்சத்திரங்கள் யாழ்ப்பாணத்தை இலக்கு வைத்து படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மாதத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் உட்பட பலர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். அதிலும் சிலர் தலைவர் பிரபாகரனின் இருப்பிடத்தை பார்ப்பதிலும் ஆர்வம் காட்டியுள்ளனர்.

தாயக இளைஞர்கள் மத்தியில் சமுதாய சீர்கேடுகளை ஏற்படுத்தி, கலாச்சாரத்தை அழிக்கும் வகையில் சில தரப்பினால் திட்டமிட்ட வகையில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறதா என கேள்வி எழுப்பியுள்ளது.

வழமைக்கு மாறாக இவ்வாறான விஜயங்கள் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும், தாயக இளைஞர்களின் சினிமாத்தனமான செயற்பாடுகள் நாளைய சந்ததியின் எதிர்காலம் குறித்து அச்ச உணர்வை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு பேருந்து நிலையத்தில் வெளிநாட்டுக்கு யுவதிக்கு நேர்ந்த அவலம்!!

இலங்கைக்கு சுற்றுலா விஜயம் மேற்கொண்ட வெளிநாட்டு பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இஸ்ரேல் நாட்டிலிருந்து இலங்கை வந்த இளம் ஆசிரியையே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு முகங்கொடுத்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து நீர்கொழும்பு சென்ற அரசாங்க பேருந்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு பேருந்து நிலையத்தில் இருந்து நீர்கொழும்புக்கு செல்வதற்காக பேருந்தில் ஆசிரியை மற்றும் அவரது கணவர் சென்றுள்ளனர்.

ஆசிரியை மற்றும் அவரது கணவர் பேருந்து நிலையத்தில் இறங்கும் சந்தர்ப்பத்தில் குறித்த நடத்துனர் பலவந்தமாக அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பில் வசிக்கும் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தள பரிசு : 18 இலட்சம் ரூபாவை பறிகொடுத்த 5 பேர்!!

பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்காக சமூக வலைத்தள மோசடியாளர்களுக்கு 5 பேர், 1.8 மில்லியன் ரூபா பணத்தை செலுத்தியுள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

பரிசுப் பொருட்களை சுங்கத்திலிருந்து விடுவிப்பதற்காக குறித்த மோசடியாளர்களின் வங்கிக் கணக்கில் அவர்கள் பணத்தை வைப்பிட்டுள்ளதாக, தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதென அதன் தகவல் பாதுகாப்பு அதிகாரி ரொஷான் சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.

முகநூல், வட்சப், வைபர் முதலான சமூக வலைத்தளங்கள் ஊடாக நண்பராக அறிமுகமாகும் மோசடியாளர்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடமிருந்து சமூக வலைத்தள பாவனையாளர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனினால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள யாழ். குடாநாட்டு மக்கள்!!

பல சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு அதிரடியான தீர்ப்புக்களை வழங்கி மக்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய நீதிபதியாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உள்ளார். இந்நிலையில் அவரை யாழ்ப்பாணத்தில் இருந்து மாற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளன.

நீதிபதியின் மாற்றம் தொடர்பான தகவல்கள் யாழ் குடா நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நீதிபதியின் இடமாற்றம் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று நீதிபதி இளஞ்செழியனிடம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு பதிலளித்த நீதிபதி இளஞ்செழியன்,

இடமாற்றம் தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. எனினும் இதுவரையில் அவ்வாறான தகவல் எதுவும் எழுத்து மூலம் அறிவிக்கப்படவில்லை.

நான் அரசாங்க ஊழியர் என்பதனால் எந்த இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டாலும், எங்கும் செல்லத் தயார். யாழ்ப்பாணத்தில் சேவை செய்த காலப்பகுதி என் வாழ் நாளில் மறக்கவே முடியாத காலம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நீதிபதி இளஞ்செழியன் இன்னும் சில காலம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதியாக இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அவரை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதனை இரத்து செய்ய மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொள்வதாக யாழ்ப்பாண பொது மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் நீதிபதியாக செயற்பட்ட போது, 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் நீதிபதி இளஞ்செழியன் மாற்றப்பட்டார்.

நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்புகள் தமிழ் மக்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த இலங்கை மக்களையும் மிகவும் கவர்ந்த ஒன்றாகும்.

அண்மைக்காலமாக தென்னிலங்கை மக்கள் நீதிபதி இளஞ்செழியன் தமது பகுதிகளில் பணியாற்ற வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இன்று காத்திருக்கும் ஆபத்து : வெளியில் செல்வோர் அவதானம்!!

 

நாட்டின் சில மாகாணங்களில் இன்று அதிகளவான வெப்பநிலை உணரப்படுமென காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. இதனால் வெளியில் செல்வோர் மிகவும் அவதானத்துடன் செல்லுமாறு அந் நிலையம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்பாக இன்று வடக்கு, வடமேல், கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிகளவில் வெப்பம் உணரப்படுமென காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் வெப்பநிலை 44 – 45 °C வரை கூட அதிகரிக்கலாம், Heat shock உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியது .குறிப்பாக 45 வயதை தாண்டியவர்கள் நன்கு நீர் அருந்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கனடாவில் ஈழத்து தமிழ் மாணவி ஒருவருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு!!

கனடாவில் வசிக்கும் ஈழத்து மாணவி ஒருவர் Queen’s University Accelerated Route to Medical School (QuARMS) என்கின்ற மருத்துவ படிப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1500க்கும் மேற்ப்பட்டவர்கள் இந்த துறைக்கு விண்ணப்பிப்பார்கள். அதில் 10 பேர் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவர்.

அந்த 10 பேர்களில் ஒருவராக ஈழத்தை சேர்ந்த மாணவியான விதுசா யோகதாசன் என்பவர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பது ஈழத் தமிழர்களாகிய எமக்கு பெருமை சேர்ப்பதாகும்.

இந்த மருத்துவப்படிப்பிற்கு எற்றுக்கொள்ள உயர்நிலை பள்ளியில் எடுக்கப்படும் அதி உச்ச மதிப்பெண்கள் மட்டும் பெற்றிருந்தால் போதாது. இதர பாடத் திட்டங்கள் சாராதச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருக்கவேண்டும் (Extra curricular activities)

சாதாரணமாக 4-5 வருடங்கள் இளங்கலை (undergraduate) படித்துவிட்டு தான் மருத்துவத்துறைக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், இந்த QuARMS ஊடாக ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் 2 வருட இளங்கலை படித்து விட்டு நேரடியாக கனடாவின் பிரசித்திப்பெற்ற மருத்துவத்துறைக்கு செல்லமுடியும்.

இதேவேளை, கனடாவில் மருத்துவத்துறைக்கு மிகவும் பிரசித்திபெற்று விளங்குவது Queen’s பல்கலைக்கழம் ஆகும்.

ஒரு லட்சம் சீனர்களை இலங்கைக்கு அழைக்க நடவடிக்கை!!

அடுத்த 12 மாதங்களில் ஒரு இலட்சம் சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில், சீன நிறுவனம் ஒன்றுடன் அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. கொழும்பில் நேற்று இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவின் முன்னிலையில் குறித்த உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

பீஜிங்கைத் தளமாக கொண்ட யிங்கி ட்ரவல் நிறுவனத்துடனேயே, சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள கிறீன் லீவ்ஸ் லெய்சர் நிறுவனம் இந்த புரிந்துணர்வு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.

சீன சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதன் மூலம், 120 மில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்த்து இந்த உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் சீன சுற்றுலாப் பயணிகளுக்கு சீன முறையிலான திருமணங்களை ஒழுங்கு செய்தல், தொல்பொருள் மற்றும் வரலாற்றுப் புகழ்பெற்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லல், மலையேற்றம் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவுள்ளன.

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் கண்ணீர் பேட்டி!!

உத்தரபிரதேசத்தில் மதரஸாவில் வைத்து 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கிழக்கு டெல்லியின் காசிபூர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி, கடந்த 21ம் திகதி மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார். மாலை நேரம் ஆகியும் சிறுமி வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

உடனடியாக பொலிசார் சிறுமியின் செல்போனை கொண்டு சோதனை நடத்தியதில் உத்தரபிரதேசத்தில் இருப்பது தெரியவந்தது.  அங்கே காசியாபாத்தில் மதரஸாவில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர், அவரை பரிசோதித்து பார்த்ததில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன், சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுவன் உட்பட அவனுக்கு உடந்தையாக இருந்த சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறுவனை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவன் சிறுவன் அல்ல என்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த கண்ணீர் பேட்டியில், தன்னை கட்டாயப்படுத்தி மதரஸாவுக்கு அழைத்து சென்றதாகவும், தன்னையும், தன் குடும்பத்தையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னிடம் இருந்த செல்போனை பிடுங்கி கொண்டதுடன், ஒரு கிளாஸ் தண்ணீரை கொடுத்து அருந்த சொன்னதாகவும் கூறியுள்ளார்.

அதை குடித்தபின்னர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை எனவும், மறுநாள் காலை எழுந்து பார்த்த போது தன் உடைகளை ஈரமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் மதரஸாவின் மௌலவியிடம் விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சொந்த அண்ணனை கொடூரமாக கொன்ற தம்பி : அதிர்ச்சிக் காரணம்!!

தமிழ்நாட்டில் சொந்த அண்ணனை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்த தம்பியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூரை அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் சரவணன் (27). இவர் தம்பி தங்கபாண்டியன் (25). சரவணன் சென்னை ராயபுரத்தில் உள்ள பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வந்த நிலையில் தங்கபாண்டியன் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கூலி வேலை செய்து வந்தார்.

சரவணன், தான் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைத்து மணவாளநகர் வரும்போது தாய் கவுரியிடம் கொடுப்பது வழக்கம். ஆனால், தங்கபாண்டியன் சம்பாதிக்கும் பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்வாராம்.

இந்நிலையில் நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியாக செலவு செய்ய 1,000 ரூபாய் தருமாறு சரவணனிடம் தங்கபாண்டியன் கேட்டுள்ளார்.

ஆனால் தன்னிடம் பணம் இல்லை என சரவணன் கூறிய நிலையில் ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சரவணனின் மார்பில் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் வலியால் அலறிய நிலையில் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். ஆனால் சரவணன் ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கபாண்டியனை கைது செய்த நிலையில் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

திருமணத்துக்கு அழைத்து செல்லாத கணவன் : தூக்கில் தொங்கிய கர்ப்பிணி மனைவி!!

சென்னையில் உறவினர் திருமணத்திற்கு செல்ல முடியாததால் மனமுடைந்த கர்ப்பிணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள திருப்பூர் குமரன் பகுதியை சேர்ந்தவர்கள் நரேந்திரன்(38)- அனிதா (34) தம்பதியினர். பெற்றோர்கள் நடத்தி வைத்த திருமணத்தில் அவ்வப்போது சிற்சில சண்டைகள் ஏற்பட்டாலும் பெரிய அளவில் பாதிப்புகள் நடந்ததில்லை.

இந்நிலையில் நேற்றிரவு தனது உறவினர் திருமணத்திற்காக நரேந்திரன் தனது முதல் குழந்தையுடன் ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது தானும் உடன் வருவதாக அனிதா கேட்டிருக்கிறார், அவரது கர்ப்பத்தை காரணம் காட்டிய நரேந்திரன், இந்த நிலையில் பயணம் செய்ய வேண்டாம் என்று கூறிவிட்டு தான் மட்டும் சென்றிருக்கிறார்.

இதனால் மனமுடைந்த அனிதா திருமணத்திற்கு செல்ல முடியாத விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊரிலிருந்து திரும்பிய நரேந்திரேன், தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த மனைவியை பார்த்ததும் உடனடியாக பதறித்துடித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கிறார்.

ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர், இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நரேந்திரன் மீது வழக்கு பதிந்த பொலிஸ் திருமணமாகி நான்கு ஆண்டுகளில், இந்த மரணம் நிகழ்ந்ததால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவளுக்கு வாழ தகுதியில்லை : மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவரின் கடிதம்!!

கேரளாவில் மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த கணவர் இன்னும் தலைமறைமாக உள்ள நிலையில் அவர் எழுதிய கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

திருச்சூரை சேர்ந்தவர் விராஜ். இவர் மனைவி ஜீது (24). கணவன் மனைவியிடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்த பின்னர் கடந்த ஒரு மாதமாக தனித்தனியாக வசித்து வந்தார்கள்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுகிழமை Chengaloor-ல் உள்ள பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடும் அலுவலகத்துக்கு ஜீது தனது அப்பா ஜனார்த்தனனுடன் வந்துள்ளார்.

அலுவலகத்திலிருந்து ஜீது வெளியில் வந்த நிலையில் அங்கு பெட்ரோலுடன் வந்த அவர் கணவர் விராஜ் மனைவி மீது அதை ஊற்றி தீவைத்து விட்டு தப்பியோடியுள்ளார்.

ஏற்கனவே மனைவியை கொல்லும் திட்டத்தோடு இதை விராஜ் செய்தார் என தெரியவந்துள்ள நிலையில் ஜீது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்திலிருந்து விராஜ் எழுதி வைத்திருந்த கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள். அதில், ஜீது விராஜை ஏமாற்றினார் என எழுதப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் தனக்கு பெரும் கடன் சுமையை ஜீது ஏற்படுத்தியதாகவும், தான் இந்த உலகை விட்டு செல்வதாகவும் அதே போல ஜீதுவுக்கும் வாழ தகுதியில்லை எனவும் எழுதப்பட்டுள்ளது.

பொலிசார் கூறுகையில், ஜீதுவை வேறு ஆணுடன் விராஜ் சேர்ந்து பார்த்ததிலிருந்து அவர்களுக்குள் உறவுமுறை நன்றாக இல்லை. இது ஒரு மாதத்துக்கு முன்னர் நடந்தது, அப்போது காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து இருவரிடமும் பேசினோம். அப்போது மனம் ஒத்து விவாகரத்து பெற இருவரும் முடிவெடுத்தார்கள். ஆனால் அப்போதே ஜீதுவை கொல்ல விராஜ் திட்டமிட்டுள்ளார் என தெரிகிறது என கூறியுள்ளனர்.

நயன்தாராவின் ஒரு படத்திற்குரிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சாய் பல்லவி நடிப்பில் வெளிவந்துள்ள தியா படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘லஷ்மி’ படத்தின் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் விஜய். தற்போது இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட வேலைகள் நடைபெறுகின்றன.

இப்படத்தை அடுத்து இரண்டுக்கு மேற்பட்ட புதிய படங்களை திட்டமிட்டு வைத்திருக்கும் இயக்குநர் விஜய், நடிகை நயன்தாரா நடிப்பில் முழு நீள நாயகி கதை ஒன்றையும் சொல்லி, அவரது கால்ஷீட்டையும் பெற்றிருக்கிறார்.

இப்படத்துக்கு நயன்தாராவின் சம்பளம் 5 கோடி என்று கோலிவுட்டின் சம்பள பட்ஜெட் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

வவுனியா பசங்க அமைப்பினரால் வறிய குடும்பத்தினை சேர்ந்தவர்களுக்கு உதவிகள்!!

 

வவுனியா கோவிற்குளம் சமனங்குளம் பகுதியில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட இரு குடும்பத்தினருக்கு ‘வவுனியா பசங்க’ அமைப்பினரினால் நேற்று (02.05.2018) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

வவுனியா பசங்க அமைப்பினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிக்கிணங்க ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நடராஜா சிவகுமார் அவர்களின் நிதியில் இரு குடும்பத்தினருக்கும் ரூபா 6500 பெறுமதியான இரு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதிகளும் சிறு தொகைப் பணமும் வழங்கி வைக்கப்பட்டது.

இச் செயற்றிட்டத்தில் வவுனியா பசங்க அமைப்பின் தலைவர் பா.கதீஷன், தமிழ்த் தாய் இளைஞர் கழகத்தின் தலைவர் வ.பிரதீபன், அக் கிராமத்தின் சமூக சேவையாளர் கேதீஸ்வரன் தர்சினி, ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கை வந்த நடாராஜா சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறான பலர் ஒரு வேளை உணவிற்கு கூட வழியின்றி தவிக்கின்றனர். புலம்பெயர் உறவுகளை உதவ முன்வருமாறு வவுனியா பசங்க அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.

வவுனியா பசங்க அமைப்பினர் தொடர்புகளுக்கு – 077 266 1413

அறந்தாங்கி நிஷாவின் அந்தரங்கங்களை கிளறிய தனியார் ஊடகம் : வெட்கத்தில் நிஷா!!

விஜய் டி.வி-யின் காமெடி கேடி அறந்தாங்கி நிஷாவுக்கு அறிமுகம் அவசியமில்லை. பெண்களுக்கும் நகைச்சுவைக்கும் இடைவெளி அதிகம் என்கிற கருத்தை உடைத்தவர். பல பெண்கள் பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்டாலும் இறுதி வரை யாரும் தன்னை தக்க வைத்து கொள்வதில்லை.

அந்த வகையில் மக்கள் மனதில் நீங்க புகழுடன் விளங்குபவர் அறந்தாங்கி நிஷா காமெடி எங்க ஏரியா…’ என்று ஆண்கள் கட்டிய அரணைத் தகர்த்து, அதிரடியாக உள்ளே புகுந்தவர்

சமுத்திரக்கனி நடிப்பில் இயக்குநர் தாமிராவின் ‘ஆண் தேவதை’, விஷால் – சமந்தா நடிக்கும் ‘இரும்புத்திரை’ என இரண்டு படங்கள்… கலகலப்பு 2 விலும் ஒரு கதா பாத்திரத்தில் நடித்து இருந்தார் .

மேடையில் மாத்திரம் காட்டிய இவரது திறமையை இந்த உலகம் அறிய வேண்டும் என்பதற்காக கலக்கபோவது யாரு காமெடி ஷோ வில் பங்குபற்றினார். இந்த நிகழ்ச்சி தான் தனக்கு ஆரம்பம், இதன் மூலம் பல பட வாய்ப்புக்களும் வந்தது .

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிஷா அதிலும் தனது நகைச்சுவை உணர்வு ததும்ப ததும்ப பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தார். இதற்கு நடுவில் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நிஷாவின் ஹென் பேக்கை கிளறி அவரின் மேக் அப் பொருட்களை எல்லாம் வைத்து கலாய்த்து விட்டார் . அந்த வீடியோ இதோ..

கனடாவில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு இலங்கையில் நடந்த நிகழ்வு!!

கனடாவில் கொல்லப்பட்ட பெண்ணுக்கு இலங்கையில் உள்ள உறவினர்கள் தான நிகழ்வு ஒன்றை செய்துள்ளனர். கடந்த வாரம் கனடா, டொரொன்டோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த இலங்கை பெண்ணுக்காக தானம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மில்லேவ, கிதேல்பிட்டிய பிரதேசத்தில் இந்த தானம் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ரேனுகா அமரசிங்கவின் இறுதி அஞ்சலி நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை கனடா டொரொன்டோ நகரில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹொரண குடாஓய பிரதேசத்தை சேர்ந்த ரேனுகா அமரசிங்க தனது 46 வயதில் உயிரிழந்துள்ளார். சுமார் 17 வருடங்கள் அவர் கனடாவில் வாழ்ந்து வந்த நிலையில் அவருக்கு கனடாவில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

120 ஆடைகளை அணிந்து கீர்த்தி சுரேஷ் சாதனை!!

தமிழ் சினிமாவில் தற்பொழுது கொடி கட்டி பறக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் முக்கியமானவர். இவர் தமிழில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ரஜினி முருகன் திரைபடத்தில் நடித்ததன் மூலம் தமிழில் முன்னணி நடிகையாக மாறினார் .

இந்நிலையில் சாமி 2 மற்றும் சண்டகோழி 2, நடிகையர் திலகம் என பல படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டு இருகின்றார். அண்மையில் நடிகையர் திலகம் திரைப்படத்தின் சில வீடியோக்கள் வெளியாகிய நிலையில் அந்த படத்திற்க்கா கீர்த்தி மிகவும் கஷ்டப்பட்டு இருகின்றார். அப்படியே சாவித்திரி போலவே மேக் அப்பில் கீர்த்தியை செதுக்கி இருகின்றார்கள்.

மேலும் இந்த படத்திற்காக 120 ஆடைகளை கீர்த்தி அணிந்து நடித்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது எனவும் , இப்படத்திற்காக ஆடை வடிவமைத்தல் மிகவும் கடினமாக இருந்தது எனவும் கீர்த்தி கூறியுள்ளார் . இவ்வளவு கடின உழைப்பிற்கு ஆதாரமான நடிகையர் திலகம் வரும் மே 9 திகதி திரைக்கு வருகின்றது.