இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியிலும், மாவட்ட ரீதியிலும் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இந்து சமய அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் நிகழ்வில் சிறப்பான திறன்களை வெளிப்படுத்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு. கடந்த வியாழன் காலை 9 மணியளவில் வவுனியா கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வில் தமது திறமைகளை வெளிக்காட்டிய அறநெறி மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலர் சோமரத்ன விதான பத்திரண வவுனியா மாவட்ட உதவி மாவட்ட செயலர் நா.கமலதாஸ் வவுனியா நகர பிரதேச செயலர் கா.உதயராஜா, வவுனியா வடக்கு பிரதேசயலர் க.பரந்தாமன், செட்டிகுளம் பிரதேச செயலர் கா.சிவகரன் மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவி பணிப்பாளர் இ.கர்ஜீன் அறநெறி பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
வவுனியா சாரணர் ஜனாதிபதி விருது வாழங்கும் நிகழ்வு (18.04.2018) அன்று சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா மாவட்டத்தின் சார்பில் 45வது தொடக்கம் 49 வரையான ஜனாதிபதி சாரணர்களுக்கான பதக்கங்கள் அன்றய தினம் மாவட்ட ஆணையாளரும், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபருமான ச.பத்மநாதன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
அந்த வகையில் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய சாரணன் ஞா.நவநீதன், தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியாலய சாரணன் பி.கெர்சோன், விபுலாநந்தா கல்லூரி சாரணன் யோ.சதுர்ஷிகன் ஆகியோருடன் கூமாங்குளம் சித்திவிநாயகர் வித்தியாலயம் பெண் சாரணர்களான சா.சுஹானி,
த. தர்சிகா வினோஷனி ஆகியோர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் வவுனியா உதவி மாவட்ட ஆணையாளர்கள், சாரண தலைவர்கள், மாவட்ட சாரண சங்க உறுப்பினர்கள், ஜனாதிபதி சாரணர்கள், சாரணர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
சென்னையை சேர்ந்த அனாமிகா என்ற மாணவி, ஏர்ணாகுளத்தில் சுற்றுலாக்கு சென்றபோது மீன் பிரியாணி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை சேர்ந்த பிளஸ்- 1 படிக்கும் மாணவி அனாமிகா. தனது பெற்றோருடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து குடிபெயர்ந்து எர்ணாகுளத்திற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அந்த மாணவி தனது பெற்றோருடன் அங்கு சுற்றுலாக்கு சென்றார். அப்போது அவருக்கு பசி எடுத்துள்ளது. அதனால் அங்குள்ள ஹோட்டலில் செம்மீன் பிரியாணி சாப்பிட்டுள்ளார். பிரியாணி சாப்பிட்ட சில மணி நேரத்தில் மாணவிக்கு திடீர் வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
இதனால் அந்த மாணவியின் பெற்றோர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் அந்த மாணவி செம்மீன் பிரியாணி சாப்பிடத்தால் ஏற்பட்ட அலர்ச்சியால் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியா சிவலோகநாதனின் மூத்த சகோதரியான யாழ். பல்கலைக்கழகப் பட்டதாரி நிஷாந்தி சிவலோகநாதனுக்கு அபிவிருத்தி அலுவலர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அவர் தனது நியமனத்தை இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த வருடம் ஜனாதிபதி, வவுனியாவுக்குச் சென்ற போது மாணவி வித்தியாவின் வீட்டிற்கும் விஜயம் சென்றிருந்தார். இதன்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு ஏற்ப இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவி வித்தியாவின் தாயாரான சரஸ்வதி சிவலோகநாதன் மற்றும் வித்தியா சிவலோகநாதன் மன்றத்தின் தலைவி திரைப்பட கலைஞர் சுவினீதா வீரசிங்க ஆகியோரும் இந்த நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஓவியா வெளியேறிய படத்தில் ஆத்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். டீகே இயக்கும் காட்டேரி படத்தில் ஆதி ஹீரோவாக நடிப்பதாக இருந்தது. பின்னர் அவருக்கு பதில் வைபவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த படத்தின் ஹீரோயின் ஓவியா என்று அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான பிறகு ஓவியா அந்த படத்தில் இருந்து வெளியேறினார். ஆத்மிகா ஓவியா வெளியேறிய பிறகு அவருக்கு பதில் ஹன்சிகாவை நடிக்க வைக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
ஆனால் இறுதியில் ஹீரோயினாக ஒப்பந்தமாகியிருப்பது மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா. வரலட்சுமி கப்பல் படம் புகழ் சோனம் பாஜ்வா மற்றொரு ஹீரோயினாக நடிக்கிறாராம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறாராம்.
ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் காட்டேரி படத்தில் தான் நடிக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சியில் உள்ளார் ஆத்மிகா. தனது மகிழ்ச்சியை அவர் சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். பிசி சத்தமில்லாமல் வேகமாக வளர்ந்து வருகிறார் வரலட்சுமி.
ஏறத்தாழ இரண்டு பில்லியன் பயனர்களை கொண்ட பேஸ்புக் வலைத்தளத்தில் அதிக அளவில் போலியான செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. இதனால் பேஸ்புக் நிறுவனம் உலக அளவில் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது.
எனினும் இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்படுவதை தடுப்பதற்கு பல்வேறு வழிகளை கையாள முயற்சி செய்து வந்தது. இதன்படி தற்போது Fact Checking எனும் முறையினை தென்னாசியாவில் பரிசோதனை செய்ய தீர்மானித்துள்ளது.
அதிலும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் முதன் முறையாக சோதனை நடத்தவுள்ளது. இச்சோதனை வெற்றியளிக்கும் பட்சத்தில் ஏனைய மாநிலங்கள், நாடுகள் என இம்முறை விஸ்தரிக்கப்படவுள்ளது.
இதன் மூலம் போலியான தகவல்கள் பரப்பப்டுவதை 80 சதவீதம் குறைக்க முடியும் என பேஸ்புக் நிறுவனம் எதிர்பார்க்கின்றது.
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள Johns Hopkins என்ற மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவரது ஆணுறுப்பு பாதிப்படைந்திருந்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஒன்பது பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மற்றும் இரண்டு சிறுநீரக அறுவை சிகிச்சை குழுவினர் ஒன்றிணைந்து சுமார் 14 மணிநேரம் ஆணுறுப்பு மற்றும் விதைப்பை மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இதுவாகும். தற்போது, நோயாளி நலமுடன் இருக்கிறார், ஆனால் சிறிது நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அதன்பின்னரே அவரை நாங்கள் வீட்டுக்கு அனுப்புவோம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அறுவை சிகிச்சையால் தனக்குள் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக இராணுவ வீரர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கணவரையும், குழந்தையையும் ஐந்து நாள் இடைவெளியில் பறிகொடுத்த பெண், நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
தெற்கு வேல்ஸை சேர்ந்தவர் பவுல். இவர் மனைவி ரிஹியன் புர்க் (40). தம்பதிக்கு ஜார்ஜ் (1) என்ற மகன் இருந்த நிலையில் கடந்த 2012-ல் உடல் நலக்குறைவால் திடீரென உயிரிழந்தான். மகனின் இறப்பை தாங்கி கொள்ளாமல் மிகுந்த வேதனையில் ஆழ்ந்திருந்த பவுல், ஜார்ஜ் உயிரிழந்து ஐந்தாவது நாளில் தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ஐந்து நாள் இடைவெளியில் மகன் மற்றும் கணவரை இழந்த புர்க் அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆனால் மனம் தளராமல் வாழ்ந்து வந்த புர்க்கின் வாழ்க்கையில் கிரைக் மன்னிங்ஸ் (49) என்பவர் வந்தார்.
இருவரும் முதலில் நண்பர்களாக பழகிய நிலையில் பின்னர் காதலிக்க தொடங்கினர். இந்நிலையில் கிரைக்கை சமீபத்தில் புர்க் திருமணம் செய்து கொண்டுள்ளார். புர்க் கூறுகையில், நெருங்கிய உறவினர்கள் மட்டும் அறியும்படி நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.
எனக்கு மனதளவில் ஏற்பட்ட காயங்கள் மறைந்துவிடாது, ஆனால் சரியான நபர்கள் நம்முடன் வாழ்க்கையில் இருந்தால் இந்த வித கடினமான சூழலையும் சமாளிக்க முடியும்.
என் கணவர் கிரைக் கோடிகளில் ஒருவர், என் வாழ்க்கையையே அவர் மாற்றிவிட்டதோடு, என் வருங்காலத்தின் நம்பிக்கையாகவும் உள்ளார் என கூறியுள்ளார்.
உத்திரபிரதேசத்தில் 20 வயது இளம்பெண் தனது காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக ஆணாக மாறியுள்ளார். 2 இளம்பெண்கள் காதலித்து வந்துளள்னர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்த நிலையில், இதுகுறித்த தகவல் எதுவும் பெற்றோருக்கு தெரியவரவில்லை.
இரண்டு பெண்களில் ஒருவர் மணமகனாக மாறியுள்ளார். மேலும் தனது ஆதார் கார்டு மற்றும் தனது பெயரையும் கார்த்திக் சுக்லா என மாற்றிக்கொண்டு போலியான பெற்றோரின் உதவியுடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில் இருவரும் மணமகளின் வீட்டில் தங்கியிருந்தபோதுதான் மணமகளின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது மாப்பிள்ளையாக இருப்பது மற்றாரு பெண் என்று மேலும் இவர்கள் தங்கள் திருமண புகைப்படத்தை முகநூலில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து இரண்டு பெண்களையும் வீட்டுக்குள் வைத்து பெற்றோர் அடித்து உதைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து இருவீட்டாரும் ஒருவர் மீது ஒருவர் தங்களை ஏமாற்றிவிட்டதாக குற்றம்சாட்டிள்ளனர்.
இந்த பிரச்சனையை தீர்த்து வைத்த பொலிஸ், இரு பெண்களும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் அவர்களை தனித்தனியாக வசிக்க வேண்டும் என்று கூற இயலாது என தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்தியாவை பொறுத்தவரை ஒரு பாலின திருமணம் என்பது இயற்கைக்கு மீறிய உறவு என்பதால் அதற்கு Section 377 of the IPC – படி தண்டனை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 19 வயதுடைய இளம் பெண்ணை 46 வயதுடைய நபருக்கு, பெண்ணின் பெற்றோரே திருமணம் செய்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் உத்தம் விட்டல் கலி (46). பள்ளிக்கூட ஆசிரியரான இவர் சமீபத்தில் 19 வயதுடைய இளம் பெண்ணை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டார். உத்தம், பெண்ணின் பெற்றோரிடம் பண ஆசை காட்டிய நிலையில், அவர்களே தங்கள் மகளை உத்தமுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து இளம் பெண் பொலிசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், மார்ச் 22-ஆம் திகதி உத்தமுடன் எனக்கு கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டது, உத்தமுக்கு ஏற்கனவே திருமணமாகி டீன் ஏஜ் பருவத்தில் மகள் உள்ளார்.
ஆனால் ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக என்னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார் என கூறியுள்ளார். இது சம்மந்தமாக உத்தம் உட்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய பெண் கோரியுள்ளார்.
இதையடுத்து பொலிசார் உத்தமை கைது செய்த நிலையில், பெண்ணின் பெற்றோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தியாவில் தலையில் ஏற்பட்ட காயத்துக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிக்கு, காலில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில், விபத்தில் சிக்கிய விஜயேந்திரா என்ற நபர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த வியாழக்கிழமை அன்று அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயேந்திராவுக்கு, தவறுதலாக காலில் துளை போட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
விஜயேந்திராவுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு இருந்ததால், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. பின்னர் மயக்கம் தெளிந்து கண் விழித்த அவர், தனது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதுகுறித்து விஜயேந்திராவின் உறவினர்கள் விசாரித்தபோது, காலில் அறுவை சிகிச்சை அனுமதிக்கப்பட்டிருந்த வீரேந்திரா என்ற நபருக்கு பதிலாக, விஜயேந்திராவுக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனை நிர்வாகிகள் நடத்திய விரிவான விசாரணையில், மூத்த மருத்துவர் தவறு செய்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர் தனது தவறு வெளியில் தெரியாமல் இருக்க, விஜயேந்திராவின் மருத்துவ ஆவணங்களை அழிக்க முயன்றுள்ளார் என்பதும் தெரிய வந்தது.
இந்நிலையில், தவறுதலாக அறுவை சிகிச்சை செய்த குறித்த மருத்துவர், தனியாக இனி எந்த அறுவை சிகிச்சையும் செய்யக் கூடாது என மருத்துவ நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உலகிலேயே மிகவும் பிரபலமான சட்டம் பயிலும் மாணவர்களுக்காக Willem C. Vis International Commercial Arbitration Moot போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகின்றது. ஆங்கில மொழியில் நடைபெறும் இந்த போட்டிக்கு உலகெங்கும் பல பாகங்களிலும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள்.
உலகளாவிய ரீதியில் இப்போட்டி இரு பகுதிகளாக இடம்பெற்றன. ஒன்று எழுத்து, மற்றையது வாய்மொழி. இதில் The University of Geneva’s team குழு எழுத்தில் (Written pleadings) முதலிடத்தை பெற்று சரித்திரம் படைத்தது.
உலகெங்கும் இருந்து மொத்தம் 366 குழுக்கள் பங்கு கொண்ட நிலையில், வாய் (Oral pleadings) பேச்சில் 64ஆவது இடத்தை The University of Geneva’s team பெற்றுள்ளது.
ஜெனிவாவில் சட்டத்துறையில் (Master in Business Law) மாஸ்ரர் இறுதியாண்டில் பயிலும் நம் தாய் நாட்டின் பெயர் பொறிக்கும் செல்வி சஜிகா இரத்தினம் முதலிடம் வகிக்கும் ஜெனிவா குழுவில் (The University of Geneva’s Team) உள்ள ஆறு பெண்களில் ஒருவராக இருந்துள்ளார்.
கடல் கடந்து அகதிகளாக சென்றாலும் எதிர்காலச் சந்ததியினர் இங்கு அதிதியாக உயர் கல்வியுடன் வலம் வரும் காலம் ஆரம்பமாகிவிட்டது.
தாயகத்தின் பெருமையை உலகெங்கும் பரவியிருக்கும் நம் எதிர்காலச் சந்ததியினர் வளர்த்தெடுப்பார்கள் என்பது திண்ணம். தமிழ் மக்களின் சொத்து அன்றும் இன்றும் என்றும் கல்வியே. அது எந்த அலையடித்தாலும் கலையாது வளரும், வளர வேண்டும்.
பிரஞ்மொழியில் கற்று ஆங்கில மொழியில் (சர்வதேச போட்டிக்கான) தேர்வு எழுதி, தமிழ் மொழியில் செய்தி சொன்ன சஜிகா இரத்தினம். இந்த வெற்றி குறித்து சஜிகா இரத்தினம் தெரிவிக்கையில்,
“எழுத்தில் நாம் முதல் இடத்தைப் பெற்றோம். நாம் ஆறு பேரும் இரவு பகலாக சிறப்பாதொரு ஆக்கத்தை படைக்கப் பாடுபட்டோம். அப்போது எமக்கு முதல் இடம் கிடைக்கும் என்று எண்ணவில்லை.
ஆனால் நம்மால் முடிந்த உச்சத்தை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். அந்த கடும் உழைப்பு கைமேல் பலன் தந்தது.
வாய் மொழிவாதம் (Oral pleadings): இதில் நாம் 3ஆம் இடத்திற்குள் வராதபோதும், எழுத்து போட்டியில் நாம் முதல் இடம்பெற்றமையால் நம்மை கௌரவப்படுத்தும் முகமாக எமது குழுவையும் சிறப்பாக அறிவித்தார்கள்.
வாதாட்டத்தில் முதலாம் இடத்தை இந்தியா கைப்பற்றும் என நாம் எண்ணிய போதும் ரஷ்யாவே முதல் இடத்தைப் பிடித்துக் கொண்டது.
என்னைப் பற்றி கூறுவது என்றால் நான் Master in Business Lawவும் (இறுதியாண்டில்) Diploma in Accountiongs, Finance and Taxationவும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.
என்னுடைய விருப்பம் Tax Lawவில் ஒரு பிரபல சட்டத்தரணியாக வரவேண்டும் என்பதே” என குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா பல்கலைக்கழகத்தில் பௌத்த ஆலயம் அமைப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
இதன் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தினருக்கும் இடையே நேற்று தர்க்கம் ஏற்பட்டு உத்தியோகத்தர்களை பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேற தடைகளை ஏற்படுத்தியதுடன் வாசலை மறித்து போராட்டத்தினை மேற்கொண்டனர்.
இதையடுத்து பல்கலைக்கழகத்தை வரும் வியாழக்கிழமை வரை மூடிவிடுவதற்கு பல்கலைக்கழகம் நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. இதையடுத்து இன்று பல்கலைக்கழக முதல்வருடன் பொலிசார் நடாத்திய பேச்சுவார்த்தையின்போது ஒரு சுமூகமான நிலையை எட்டியிருந்தது.
எனினும் இன்று பிற்பகல் வேளையின்போது பல்கலைக்கழக உத்தியோகத்தர்களை அவர்களது அலுவலகத்திலிருந்து வெளியேற விடாமல் மாணவர்கள் பிரதான வாசலை மறித்து போராட்டம் மேற்கொண்டனர்.
மாணவர்கள் கல்வி மற்றும் மத சுதந்திரத்தைக் கொடு, எங்களுக்கு மாணவர் விடுதி வேண்டும், பல்கலைக்கழக வளாகத்தை உடனே திறக்குமாறு கோரிய வாசகங்களைத் தாங்கியவாறு மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
இதையடுத்து மாணவர்களின் சார்பாக மூவரை பல்கலைக்கழக முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியதையடுத்து மாலை 5 மணியளவில் மாணவர்கள் தமது மறியல் நடவடிக்கைகளைக்கைவிட்டு தமது விடுதிகளுக்குச் சென்றனர்.
பேச்சுவார்த்தையின்போது இன்று இரவு மாணவர்கள் விடுதியில் தங்குவதற்கும் நாளை அங்கிருந்து வெளியேற வேண்டும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் பொலிசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யட்டியந்தோட்டையில் பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரின் அவல நிலை குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த செய்தியில், குறித்த பகுதியில் நீண்ட நாட்களாக கவனிப்பாரற்று இருக்கின்ற இந்த தம்பதி தங்குமிட வசதியின்றியும், முழுமையாக ஒரு வேளை உணவை கூட உண்ண முடியாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்.
70 வயதான ரண் பண்டா, அவரின் மனைவியான 62 வயது குசுமாவதி ஆகியோரே இவ்வாறு பிள்ளைகளினால் கைவிடப்பட்டுள்ளனர். இவர்கள் யட்டியந்தோட்டை – வெரன்னாவ பகுதியைச் சேர்ந்தவர்கள். தற்பொழுது யட்டியந்தோட்டை – ருவன்வெல சந்திக்கு அருகிலுள்ள பாழடைந்த கட்டடமொன்றில் வசித்து வருகின்றனர்.
வாகன விபத்தொன்றில் சிக்கிய ரண் பண்டா உளநலம் பாதிக்கப்பட்ட நிலையில் பிள்ளைகளால் வீட்டிலிருந்து துரத்தப்பட்டதாக குசுமாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் குசுமாவதி கருத்து தெரிவிக்கையில், என்னுடைய உயிர் இருக்கும் வரையில் நான் கணவருடன் இருக்கவே விரும்புகிறேன்.
அவரை நான் விருப்பத்துடன் பராமரிப்பேன். எனக்கு பிள்ளைகள் தேவையில்லை. எங்களை வெளியில் அனுப்பி ஆறு மாதங்களாகிய போதும் பிள்ளைகள் எங்களை தேடவில்லை. ஒவ்வொருவரிடமும் உணவிற்காக கையேந்துகிறோம்.
இந்த ஆறு மாதத்தில் ஒருவேளை கூட சரியாக சாப்பிடவில்லை. பலரும் எங்களுக்கு உணவு தந்தார்கள். சிலவேளைகளில் குடிப்பதற்கு நீர் கூட இருப்பதில்லை. அப்பொழுது கரவனெல்ல ஆற்றிலுள்ள நீரை குடிப்போம் என தெரிவித்துள்ளனர்.
இந்த காணொளியானது பலரையும் கலங்க வைத்துள்ளது. அத்துடன் குறித்த பெற்றோரின் பிள்ளைகள் தொடர்பிலும் சிலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் பேண்தகு பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தில் போதைப் பொருள் பாவனையில் இருந்து சமூகத்தை பாதுகாப்போம் என்னும் தொனிப் பொருளில் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தினால் இன்று விழிப்புணர்வூ பேரணியூம் விழிப்புணர்வு கூட்டமும் இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் என்.எம்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.அஜ்மீர், ஆசிரிய ஆலோசகர் எம்.சபூர், வாழைச்சேனை ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் மௌலவி. எம்.முஸம்மில் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பாடசாலையில் இருந்து ஆரம்பமான போதை ஒழிப்பு பேரணி வாழைச்சேனை சந்தை வழியாக சென்று பிரதேசசபை வீதியினூடாக பாடசாலையை சென்றடைந்ததும் அங்கு விழிப்புணர்வு கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான், “கடந்த காலத்தில் மது, கஞ்சா, அவின், ஹேரோயின் பாவனையில் இருந்து எமது சமூகம் விடுபட்டு வருகின்ற வேளையில் மிகக் கொடூரமான செயற்பாடாக போதை மாத்திரைகள் பாவிக்கப்படுகின்றது.
கடந்த காலத்தில் மது, கஞ்சா, அவின், ஹேரோயின் பாவிப்பவர்களை எளிதில் அறிந்து கொள்ள முடியும். ஆனால் தற்போது போதை மாத்திரை பாவிப்பவர்களை அறிந்து கொள்ள முடியாது. ஆனால் படிப்படியான சில வருடங்களில் மாத்திரம் கண்டு கொள்ள முடியும்.
எனவே பெற்றோர்கள் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி அவர்கள் வீட்டை விட்டு செல்லும் வரை எங்கெல்லாம் செல்கின்றார்கள், யாருடன் பழக்கம் வைத்துள்ளனர் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலைய போதை ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.சிவதர்சன் கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலைய பிரிவுகளில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவிற்குட்ட பகுதியில் அதிக போதைப் பாவனையாளர் உள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பன்னிரண்டு பொலிஸ் நிலையங்கள் உள்ளது. அதில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் போதை பாவனை தொடர்பான விசாரணைகள் அதிகம் காணப்படுகின்றது.
வாழைச்சேனை பொலிஸாரால் போதை மாத்திரைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதில், பாடசாலை மாணவர்களே அதிகம் பாவிக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களின் பிள்ளைகளே அதிகம் போதை மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் விளையாடும் இடங்களுக்கு சென்று அவர்களை சோதனை செய்யும் போது சட்டைப்பையில் போதை மாத்திரைகள் காணப்படுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் பாடசாலைகளுக்கு சென்று விழிப்புணர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். மேலும், ஆழ்கடலுக்குச் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் போகும் போது கஞ்சா கொண்டு சென்று அங்கு பாவனையில் ஈடுபடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக” ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான் தெரிவித்துள்ளார்.
வல்லை நாகதம்பிரான் ஆலயத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நாகபாம்புக்கு பால் ஊற்றி காப்பாற்றப்பட்டுள்ளது.
ஆலய வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் நாகப்பாம்பு காயமடைந்துள்ளது. இதனையடுத்து பாம்புக்கு பால் உற்றி வழிபாடு செய்ததன் மூலம் அதன் மயக்கத்தை அங்கிருந்தவர்கள் போக்கியுள்ளனர்.
வீதியை கடக்க முயன்ற நாகபாம்பு மோட்டார் சைக்கிளுக்குள் சிக்கி காயமடைந்தது. அதைக் கண்டவர்கள் பாம்மை நாகதம்பிரான் ஆலயத்தில் வைத்து பாலூற்றி மயக்கத்தைப் போக்கினர். பின்னர் அந்தப் பாம்பை வழிபட்டனர். பாம்பு மயக்கம் நீங்கி அங்கிருந்து அகன்று சென்றுள்ளது.