இலங்கையின் காட்டுக்குள் வியக்க வைக்கும் 7 அதிசயங்கள் கண்டுபிடிப்பு!!

இலங்கையின் காட்டுப் பகுதி ஒன்றுக்குள் இதுவரை யாரும் கண்டறியாத 7 நீர் வீழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படல்குடும்புர பிரதேச செயலக பிரிவில் மாணிக்க கங்கைக்கு அருகில் மர்மமான முறையில் அமைந்திருந்த நீர்வீழ்ச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

70 அடி அளவு பாரிய நீர் வீழ்ச்சி ஒன்றும் அதற்கு அருகில் 10 முதல் 20 அடியிலான சிறிய 7 நீர்வீழ்ச்சிகளையும் சுற்றுலா குழுவொன்று கண்டுபிடித்துள்ளது.இந்த நீர்வீழ்ச்சிகள் பாரிய காட்டுப் பிரதேசம் ஒன்றில் அமைந்துள்ள நிலையில் அதற்கு பெரிய கற்பாறை ஒன்றை கடந்து செல்ல வேண்டும்.

நீர்வீழ்ச்சி கட்டமைப்பு குறித்து யாருடைய அவதானமும் செலுத்தப்படவில்லை. இந்நிலையில், பரையியன் எல்ல பிரதேசத்தை சேர்ந்த 65 வயதான அப்புஹாமி என்ற நபரினால் இதற்கு செல்ல கூடிய வகையில் சிறிய வீதி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காடு ஒன்றிற்கு நடுவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிகளுக்கு அருகில் செல்வது மிகவும் கடியமாகும். வீதியை அறிந்து கொள்ளாமல் அதனை நெருக்க முடியாதென அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

இந்த நீர் வீழ்ச்சியை அவர் துன்ஹித என்ற பெயரில் அடையாளப்படுத்துகின்ற போதிலும் அதற்கு இன்னமும் உரிய பெயர் ஒன்று வைக்கப்படவில்லை.

இந்த நீர்வீழ்ச்சியுடன் மேலும் 20 அடி உயரமான விசேட நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. அங்கு தினமும் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நீர் வீழ்ச்சிக்கு நடுவில் வானவில் ஒன்று தோன்றுவதே அதன் விசேட அம்சமாகும். இந்த வானவில் பல நிறங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய நீர்வீழ்ச்சியை பார்ப்பதற்காக இதுவரையில் எந்தவொரு உள்நாட்டு சுற்றுலா பயணியும் சென்றதில்லை எனவும், வெளிநாட்டவர்கள் சிலர் மாத்திரம் அதனை பார்க்க சென்றுள்ளதாகவும் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழப்பு!!

கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட சிசு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த தை மாதம் 11ஆம் திகதி மீட்கப்பட்ட குறித்த குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையால் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிசுவின் பெற்றோர் அடையாளம் காணப்படாமையால் சிசுவின் சடலத்தினை உரியவர்களிடம் ஒப்படைக்க முடியாத நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இதேவேளை உயிரிழந்த சிசுவின் சடலத்தினை பொறுப்பேற்க பெற்றோர், உறவினர்கள் யாராவது முன்வரும் பட்சத்தில் அவர்களிடம் சடலத்தினை கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் பொலித்தீன் பாவணை தொடர்பாக வியாபார நிலையங்களில் திடீர் சோதனை!!

வவுனியா வர்த்தக நிலையங்களில் இன்று(24.04) காலை உணவகங்கள் மற்றும் வியாபார வர்த்தக நிலையங்களில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள் விற்பனை செய்யப்படும் பொலிதீங்கள் தொடர்பாகவும் அதன் தன்மைகள் தொடர்பாகவும் பரிசோதனை மேற்கொண்டனர்.

இலங்கையில் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கு மாற்றீடாக இலகுவில் உக்கக்கூடியதும் சுகாதாரத்திற்கு தீங்கற்ற பொலீத்தீன் பாவனையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் உணவகங்கள், வர்த்தக நிலையங்களில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பொலித்தீனின் தன்மைகள் தொடர்பாக திடீர் பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா கந்தசாமி ஆலய வீதிகளிலுள்ள உணவகங்கள் மற்றும் வியாபார விற்பனை நிலையங்களில் இச் சோதனை நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அலுவலகர்கள், பொலிசார் இந்நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர். உணவகங்கள், வியாபார நிலையங்களுக்கு விற்பனை செய்யப்படும் பொலித்தீன் அதன் அளவு தன்மை உணவகங்களில் மேற்கொள்ளவேண்டிய பொலித்தீன் சுகாதாரத்திற்கு தீங்கற்றவிதத்தில் அமையப்பெறுதல் போன்ற அறிவுறுத்தல்கள் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினரால் வழங்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

வவுனியா வளாக புத்தர் சிலை விவகாரம் முடிவுக்கு வந்தது!!

 

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முயற்சிக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், அந்நடவடிக்கையை கைவிடுமாறு நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

குறித்த வளாகத்தில் கற்கும் சிங்கள மாணவர்கள் நேற்று புத்தர் சிலை வைக்க முற்பட்டதால் ஏற்பட்ட முரண்பாட்டைத் தொடர்ந்து, வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டது. இதனையடுத்து இன்று காலை பல்கலைக்கழக வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரனுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போன்று நான்கு மதங்களின் வணக்கஸ்தலங்களையும் அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திலேயே அமைக்க வேண்டும் என்றும், தற்போது கொண்டுவரப்பட்ட ஆலய வடிவிலான சிலையை வைக்க முடியாதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதுவரை புத்தர் சிலையை பொலிஸார் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் மாணவர்களை முரண்பட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் தமிழ் மாணவர்கள் மாத்திரமே அங்கிருந்து வெளியேறியுள்ளதோடு, ஏனைய மாணவர்கள் வளாக நிர்வாக கட்டடத்தின் முன்பாக தொடர்ந்தும் கூடியிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தங்கம் வென்ற தமிழனை ஆச்சரியப்படுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்!!

2018 ஆம் ஆண்டிற்கான கொமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைப் பிரிவான பளுத்தூக்கும் போட்டியில் பங்கேற்ற சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றார். தமிழகத்தை சேர்ந்த இவர் உலக அளவில் நடைப்பெற்ற போட்டியில் தங்கம் வென்றதை பலரும் பாரட்டி இருந்தனர்.

இதில், நடிகர் சிவகார்த்திகேயன் கொமென்வெல்த் வீரருக்கு அன்பு பரிசு கொடுத்து அசத்தியுள்ளார். இச்சந்திப்பிற்கான புகைப்படத்தை சதீஷ் குமார் சிவலிங்கம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

என்ன ஒரு அற்புதமான மனிதரை சந்தித்தேன். கொமென்வெல்த் தங்கப்பத்தத்துடன் அவரை சந்தித்தது உண்மையில் அன்பு நிறைந்ததாக இருந்தது.

அவரது பேச்சும் வரவேற்பும் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. நான் மதிக்கும் கொண்டாடும் நடிகர் அவர். அவரது கடின உழைப்புதான் அவரை வாழ்க்கையில் மேலே கொண்டு சென்றுள்ளது. மிகவும் நன்றி சகோதரா.. உங்களின் அன்பான பரிசுக்கு என்று குறிப்பிட்டுள்ளார்.

கன்னத்தில் அறைந்த விவகாரம் : சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்!!

2015 ஆம் ஆண்டில் கமல்ஹாசனின் ரசிகர்கள் தன்னை கன்னத்தில் அறைந்த விவகாரம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து கமல்ஹாசனை தனது படங்களில் சிவா கிண்டலடித்து வந்ததால், கடந்த 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் மதுரையில் நடிகர் சிவகார்த்திகேயனை கமல்ஹாசனின் ரசிகர்கள் விமான நிலையத்தில் வைத்து தாக்கினர்.

அதற்கான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. அந்தச் சம்பவம் சம்பந்தமாக நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “அப்போது ரசிகர்கள் நடந்திய தாக்குதலுக்காக கமல் சார் என்னிடம் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்பு கேட்டார்”என்று அவர் கூறியுள்ளார்,

திருமணம் செய்துவைக்காததால் தாயை அடித்துக் கொன்ற மகன்!!

தமிழ்நாட்டில் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரத்தில் பெற்ற தாயை கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை சேர்ந்தவர் மாரியம்மாள் (45). இவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில் மகன் ராமஜெயம் (23)-துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு மதுபோதையில் ராமஜெயம் வீட்டுக்கு வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டுக்கு வந்ததும் ராமஜெயம், தனது தாய் மாரியம்மாளிடம், தனக்கு ஏன் இன்னும் திருமணம் செய்து வைக்கவில்லை என கூறி வாக்குவாதம் செய்துள்ளார்.

அப்போது மாரியம்மாள் ஏதோ சொல்லி சமாளிக்க, அதை ஏற்காத ராமஜெயம் ஆத்திரத்தில் பெற்ற தாயை கடப்பாரையால் தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் ராமஜெயத்தை தேடி வருகிறார்கள்.

பெற்ற பிள்ளைகளை கொன்றது ஏன் : இளம்தாயின் கண்ணீர் வாக்குமூலம்!!

தமிழகத்தில் பெற்ற பிள்ளைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூரின் காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் பெரிய தெருவை சேர்ந்தவர் வினோத்(வயது 30), இவரது மனைவி சசிகலா(வயது 26). வினோத் உறவுக்கார பெண் தான் சசிகலா, இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான நிலையில் வினோத் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இவர்களுக்கு வரோகா(வயது 3), விஜயஸ்ரீ (3 மாதம்) என இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

முதல் குழந்தை வினோத்தின் அம்மாவிடம் வளர்ந்து வந்துள்ளது.விஜயஸ்ரீ பிறந்து மூன்று மாதங்களே ஆனதால் குழந்தையுடன் அவரது தாய் வீட்டில் இருந்துள்ளார்.

குழந்தையும் அறுவை சிகிச்சை செய்து பிறந்த நிலையில், அடிக்கடி சசிகலாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.இதனால் மனவேதனையில் இருந்த சசிகலா, சிகிச்சைக்காக மாமியார் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று சசிகலா தூக்குமாட்டி தற்கொலை செய்ய முயன்றார்.இதை பார்த்த அவரது அத்தை அலறித்துடிக்க, உடனடியாக ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினார்.

அருகில் குழந்தைகள் இருவரும் இறந்து கிடந்ததை பார்த்ததும் உடனடியாக பொலிசுக்கு தகவல் அளித்தனர்.விரைந்து வந்த அதிகாரிகள் குழந்தைகளின் சடலத்தை கைப்பற்றியதுடன் சசிகலாவையும் சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அவர் பொலிசிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில், நானும், வினோத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.இரண்டாவது குழந்தை பிறந்ததும் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது

.செரிமான பிரச்சனையாலும், தொடர்ந்து சாப்பிட முடியாமலும் அவதிப்பட்டு வந்தேன்.இதனால் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தேன்.

நான் இறந்த பிறகு குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இப்படி செய்தேன் என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.

மாமியாரை சங்கிலியால் கட்டிவைத்து அடித்து கொடுமைப்படுத்திய மருமகள்!!

ஆந்திராவில் வயதான மாமியாரை அவரின் மகனும், மருமகளும் சேர்ந்து சங்கிலியால் கட்டி வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குணடாலா பகுதியை சேர்ந்தவர் அஞ்சய்யா. இவர் மனைவி மேரி நிர்மலா ராணி. இந்நிலையில் அஞ்சய்யாவின் அம்மா பிரகாசம்மா (70)-வை அஞ்சய்யாவும், நிர்மலாவும் வீட்டு மொட்டை மாடியில் சங்கிலியால் கட்டிவைத்து அடித்து உதைத்துள்ளனர்.

இதோடு சரியான உணவும், தண்ணீரும் கொடுக்காமல் பட்டினி போட்டு வந்துள்ளனர். இப்படி 40 நாட்களாக பிரகாசம்மா கொடுமையை அனுபவித்த நிலையில் அக்கம்பக்கத்தினர் இதை பார்த்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிரகாசம்மாவை மீட்ட நிலையில் அஞ்சய்யாவையும், நிர்மலாவையும் கைது செய்தனர்.

மீட்கப்பட்ட பிரகாசம்மா கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நலமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையில், பிரகாசம்மாவின் நிலத்தை அஞ்சய்யா விற்றதோடு, அவரின் ஓய்வூதிய பணத்தையும் மனைவியுடன் சேர்ந்து அனுபவித்து வந்தது தெரியவந்துள்ளது.

11 வயது பாடசாலை மாணவி தூக்கிட்ட நிலையில் மீட்பு!!

தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தகொலை பகுதியை சேர்ந்த 11 வயதுடைய சிறுமியே நேற்று (23.04) முற்பகல் 11 மணியளவில் தனது வீட்டில் தற்காளிகமாக அமைக்கப்பட்ட அறையில் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளார்.

நோர்வுட் பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி பயிலும் குறித்த சிறுமியை அயலவர்களின் உதவியுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பித்துளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

உலகின் மிகப்பெரிய விமானம் : 06 இயந்திரம், 28 சக்கர அதிசயம்!!

உலகின் மிகப் பெரிய விமானம், சில மாதங்களில் தனது சேவையை தொடங்கவுள்ளது. ‘ஸ்ட்ரேட்டோலான்ச்’ என்ற பெயர் கொண்ட, இந்த ‘மெகா’ விமானத்தை உருவாக்கியவர் பால் ஆலென். இவர் முன்னணி கணனி நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தை பில்கேட்ஸுடன் இணைந்து நிறுவியவர்.

இந்த விமானம் அனைத்து விதங்களிலும், மற்ற விமானங்களில் இருந்து வித்தியாசமானது. இறக்கைகள், கால்பந்து மைதானத்தை விட பெரியது. நீளம் 385 அடி.
இது சாதாரண விமானத்தை போல இருப்பதில்லை. இரண்டு விமானி அறைகள் இருக்கும். 28 சக்கரங்கள், ஆறு இன்ஜின்கள் கொண்டது.

ஒவ்வொரு இன்ஜினும் 4 ஆயிரம் கிலோ எடைமிக்கது. ஒவ்வொரு இன்ஜினும், ஆறு ‘போயிங் 747’ விமானத்தின் இன்ஜின் திறனுக்கு சமம். இது பெரிய விமானம் என்பதால், இதற்கு இரண்டு விமான உடற்பகுதி தேவை. இரண்டிலும் ஒவ்வொரு விமானி அறை இருக்கும்.

வலது பக்கத்தில் உள்ள பகுதியில் தான் விமானி, இணை விமானி, இன்ஜினியர் ஆகியோர் இருப்பார்கள். இவர்கள் தான் விமானத்தை இயக்குவர். இடது புறம் உள்ள விமானி, கண்காணிக்க மட்டுமே செய்வார்.

இதன் எடை 2 லட்சத்து 26 ஆயிரம் கிலோ. இந்த விமானம், 6 லட்சம் கிலோ எடைமிக்க சரக்குகளை. ஏற்றிச் செல்லும் திறன் பெற்றது. இந்த விமானம் விண்வெளிக்கு, செயற்கைக்கோள்களைக் கொண்டு செல்லும் போக்குவரத்து ரொக்கெட்டாக பயன்படுத்தப்படவுள்ளது.

மேலும் விண்வெளியில் அமைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையங்களுக்கு சரக்குகள் எடுத்துச்செல்லவும் பயன்படும். இதன் மூலம் விண்வெளி வீரர்கள், பூமியின் உயரமான சுற்று வட்டபாதைக்கு செல்ல முடியும்.

அமெரிக்காவின் கொலரடோவில் நடந்த, 34வது விண்வெளி கருத்தரங்கில், ‘ஸ்ட்ரேட் டோலான்ச்’ விமானத்தின் முதல் பயணம், சில மாதங்களில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே விமானத்தின் இரண்டு கட்ட சோதனை பயணம் நிறைவடைந்துள்ளது.

இதில் மணிக்கு 48 கி.மீ., மற்றும் 74 கி.மீ., வேகத்தில் இயக்கி சோதிக்கப்பட்டது. இன்னும் மூன்று கட்ட சோதனை நடத்தப்படவுள்ளது. 2011ல் இதற்கான செலவு ரூ. 2000 கோடி என மதிப்பிடப்பட்டது. தற்போதைய செலவு பற்றிய விபரம் இல்லை.

ஓடும் பேருந்தில் திடீரென உயிரிழந்த பெண் : கொழும்பில் நடந்த துயரச் சம்பவம்!!

கொழும்பில் இருந்து ராகம நோக்கி பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ஆசனத்திலேயே அமைதியாக உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். வேயங்கொடை – அம்பேவத்தை பிரதேசத்தை சேர்ந்த சுதர்மா என்ற பெண்ணை இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் இருந்து ராகம நோக்கி பயணித்த பேருந்து, இரவு 7.30 மணியளவில் ராகம பிரதேசத்தை நெருங்கியுள்ளது. எனினும் இந்த பெண் பேருந்தில் இருந்து இறங்காமல் ஆசனத்திலேயே அமர்ந்திருந்துள்ளார்.

இதனை அவதானித்த நடத்துனர் அவர் உறங்கிவிட்டதாக எண்ணி அவரை எழுப்ப முயற்சித்துள்ளார். எனினும் அவர் எழுந்திருக்காத காரணத்தினால் உடனடியாக 119 என்ற அவசர இலக்கத்திற்கு அழைத்து அம்பியுலன்ஸ் வண்டி ஒன்றை வரவழைத்துள்ளார். குறித்த பயணியை பரிசோதித்த வைத்தியர் அவர் உயிரிழந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது கைப்பையை சோதனையிட்ட போது ரயில் அனுமதி பத்திரம் மற்றும் தேசிய அடையாள அட்டை உட்பட ஆவணங்கள் காணப்பட்டுள்ளது. அதற்கமைய அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தேசிய சாதனை படைத்துள்ள யாழ். யுவதி!!

 

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று ஆரம்பமான தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளில், மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் தமிழ் பெண்ணொருவர் தேசிய சாதனை படைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தெல்லிப்பளை மகாஜன கல்லூரியில் கல்வி பயிலும் மாணவி அனிதா ஜெகதீஸ்வரன் என்பவரே இலங்கையில் இந்த தேசிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதேவேளை கடந்த வருடம் நடைபெற்ற கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 3.48 மீற்றர் தூரத்திற்கு ஆற்றலை வெளிப்படுத்தி தேசிய சாதனை படைத்திருந்த அவர் இம்முறை அதனை 3.55 மீற்றராக உயர்த்திக் கொண்டு சாதனையை புதுப்பித்துள்ளார்.

கனடாவில் பாதசாரிகள் மீது வெள்ளை வான் மோத செய்து தாக்குதல் : பலர் பலி!!

 

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் பாதசாரிகள் மீது வெள்ளை வான் மோதிய விபத்தில் 9 பேர் வரையில் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி சுமார் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் இன்று வெள்ளைவான் ஒன்று பாதசாரிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த வாகனத்தை செலுத்திய சாரதி ஓட்டியவர் அந்த இடத்தில் இருந்து தப்பியோடிதாக கூறப்பட்ட பொதும் அவர் பின்னர் கைது செய்யப்பட்டதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தை அடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த மருத்துவ குழுவினர் படுகாயமடைந்த பொதுமக்களுக்கு முதலுதவி அளித்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி : மற்றொருவர் கவலைக்கிடம்!!

 

அதிவேகத்துடன் வந்த மோட்டார் சைக்கிள் மின்கம்பத்துடன் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளதோடு பிறிதொரு இளைஞர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்.தென்மராட்சி ஏ 35 வீதியில் நாவற்குழி மகா வித்தியாலயத்துக்கு அருகாமையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,

மன்னார் வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக மின் கம்பத்துடன் மோதியுள்ளது.

சம்பவத்தில் கட்டப்பிராயைச் சேர்ந்த 23 வயதுடைய விஜயரத்தினம் பிரசாத் என்ற இளைஞர் பலியாகியுள்ளதோடு, 27 வயதுடைய குணராசன் திருக்குமரன் என்ற இளைஞர் கவலைக்கிடமான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

13 வருடங்களுக்கு முன் வெளிநாடு சென்ற இலங்கைப் பெண் : காப்பாற்றுமாறு தாயார் கோரிக்கை!!

 

13 வருடங்களுக்கு முன்னர் சவூதிக்கு வீட்டு வேலைக்கு சென்ற தனது மகளை மீட்டுத்தருமாறு ஹட்டன் – குடாகம பகுதியை சேர்ந்த தாயொருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சுப்பையா விக்னேஸ்வரி என்ற பெண் தனது 23ஆவது வயதில் கடந்த 2005.08.09 அன்று கொழும்பு தனியார் வெளிநாட்டு முகவர் நிலையத்தினூடாக சவூதி நாட்டிற்கு சென்றார். இவ்வாறு சென்ற தனது மகள் தொடர்பில் இது வரையில் எவ்வித தகவல்களும் இல்லை என தாயார் சிவலிங்கம் விஜயலட்சுமி கண்ணீருடன் தெரிவித்தார்.

தனது மகள் வெளிநாடு பயணமாகி ஆறு மாதங்களின் பின் தொலைபேசியில் உரையாடியுள்ளார். அதன் பின் 8 வருடங்களின் பின்னரே அண்மையில் தொலைபேசியில் உரையாடினார்.

அப்போது, தான் பிரச்சினையில் உள்ளதாகவும் தான் தொழில் புரியும் இடத்தில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளதால் வருட இறுதிக்குள் இலங்கைக்கு வருவதாகவும் தெரிவித்ததாக தாயார் தெரிவித்தார்.

வெளிநாடு சென்ற தனது சகோதரிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உணர்ந்த நிலையில் கொழும்பில் அமைந்திருந்த குறித்த தனியார் வேலை வாய்ப்பு நிலையத்திற்கு சென்ற போது அங்கு அந்த வேலைவாய்ப்பு நிலையம் மூடப்பட்டிருந்ததாக வெளிநாட்டில் பாதிக்கப்பட்டுள்ள பெண்ணின் சகோதரர் சுப்பையா சுதாகர் தெரிவித்தார்.

அதன் பின்னர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பல தடவைகள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

குடும்ப வறுமை காரணமாக வெளிநாடு சென்ற தனது மகளை பாதுகாப்பாக மீட்டுத்தருமாறு தாயாரான விஜயலட்சு மற்றும் சகோதரன் சுப்பையா சுதாகரன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.