படகு விபத்தில் மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!!

கினிகத்தேன – யடிபேரிய பிரதேசத்தில், களனி கங்கையில் படகு ஒன்று விபத்திற்கு உள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 23 வயதுடைய, கடுவெல்லேகம – மினுவாங்கொட பகுதியை சேர்ந்த கனிஷ்க டில்ஷான் எனும் மொரட்டுவ பல்கலைகழக பொறியியல் பீட மாணவன் என தெரியவந்துள்ளது.

பல்கலைகழகத்திலிருந்து தனது நண்பர்களுடன் கித்துல்கலவிற்கு சுற்றுலா சென்றிருந்த போது, படகில் சவாரி செய்த இவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்த இளைஞரின் சடலம் கிதுல்கல வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் ஜனநாயக விரோத முன்னுதாரணத்தினை கற்பித்துள்ள வவுனியா நகரசபை தலைவர்!!

இளைஞர்களுக்கு ஜனநாயக விரோத முன்னுதாரணத்தினை வவுனியா நகரசபையின் தலைவர் கற்பித்துள்ளதாக நகரசபை உறுப்பினர் சு.காண்டீபன் தெரிவித்துள்ளார். வவுனியா நகரசபையின் செயற்பாடுகளில் பங்களிப்பு தொடர்பாக கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட்டார முறைத் தேர்தலில் மக்களால் மோசமான முறையில் நிராகரிக்கப்பட்டு தோல்வியடைந்த ஒருவர் நகரசபை தலைவராக வர முடியும் என ஜனநாயக விரோத வழிமுறையை இளைஞர்களுக்கு தற்போதைய நகரசபை தலைவர் வழங்கியுள்ளார்.

தனது வட்டாரத்தில் தன்னுடன் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரை விட சுமார் 500 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியுற்ற ஒருவர் தனது மனச்சாட்சிக்கு விரோதமாக தமிழ் சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத கட்சிகள் சிலவற்றுடன் இணைந்து சதித்திட்டங்களினை அரங்கேற்றி தலைவராகியுள்ளார்.

வவுனியா நகரசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்ற முடியாமல் போய்விட்டதாக கருத முடியாது. நாம் தேசிய கட்சிகளுடன் இணைந்து தமிழ் மக்கள் விரும்பாத பாதையில் செல்ல உடன்பாடில்லாமையினாலேயே அந்த கூட்டை விரும்பவில்லை. வவுனியாவை பொறுத்தவரை தேசியக் கட்சிகள் இரண்டினுடைய செயற்பாட்டுத் தலைவர்களாக இஸ்லாமியர்களே உள்ளனர்.

ஒரு தமிழ் தலைமை அங்கு இல்லாத நிலையில் அவர்களுடன் இணைந்து ஆட்சி அமைத்து அவர்களின் தாளத்திற்கு ஆடும் நிலையில் நாங்கள் இல்லை.

நாம் எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை தேசிய உணர்வுடன் கொண்டு செல்லவே விரும்புகின்றோம். இந்த நிலையில் எம்மால் நகரசபையில் கொண்டு வரப்படும் அபிவிருத்தி முன்மொழிவுகளை தற்போதைய தலைவராலோ ஆட்சியில் உள்ள கூட்டுக்கட்சிகளாலோ செயற்படுத்த முடியாது போகும்.

ஏனெனில் ஆட்சியை நீடித்து வைப்பதற்காக அவர்கள் ஒருவருக்கொருவர் அஞ்சி முடிவெடுத்து செயற்படுத்துவதற்குள் காலம் கழிந்துவிடும்.

எனவே வவுனியா நகரம் சிறப்பான அபிவிருத்தியை தற்போதைய ஆட்சிக்காலத்தில் காணமுடியாத துர்ப்பாக்கிய நிலையில் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் 35 வயதிற்கு குறைவானவர்கள் முச்சக்கரவண்டி ஓட்டத்தடை!!

இலங்கையில் பயணிகளின் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கரவண்டி சாரதிகள் தொடர்பில் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. முச்சக்கர வண்டி ஓட்டும் சாரதிகளின் வயது 35 இற்கு மேல் இருக்கு வேண்டும் என கட்டாயக்கப்படவுள்ளது.

விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.

சாரதியின் வயது 35ஆக காணப்பட வேண்டும் என்ற நடைமுறையை இந்த வருட இறுதிக்கு முன்னர் கட்டாயப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்துடன் கலந்துரையாடல் மேற்கொண்டு அவசியமான நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

நல்லொழுக்கமுடைய சாரதிகளை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முரளிதரன் பழையவற்றை மறந்து விட்டார்!!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு பழையன மறந்து விட்டதாக இலங்கை கிரிக்கட்டின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

முதரளிதரன் பழையவற்றை மறந்து விட்டார். அவருக்கு தவறான நபர்களினால் தவறான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த தீய ஆலோசனை வழிகாட்டல்களின் அடிப்படையில் முரளி செயற்பட்டு வருகின்றார்.

முரளிதரனை பல தடவைகள் காப்பற்றியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கருத்தினை ஸ்ரீலங்கா கிரிக்கட்டின் துணைத் தலைவர் மொஹான் டி சில்வாவும் ஆமோதித்துள்ளார்.

அண்மையில், இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட முத்தையா முரளிதரன், இலங்கை கிரிக்கட் துறை பின்னடைவை எதிர்நோக்கியமைக்கு அரசியல்வாதிகளே பொறுப்பு என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே திலங்க சுமத்திபால இவ்வாறு கூறியுள்ளார்.

இரண்டு வயது சிறுமியின் உயிரை பறிந்த பரசிட்டமோல் மாத்திரை!!

பரசிட்டமோல் மாத்திரை தொண்டையில் சிக்கி, இரண்டு வயதான சிறுமியொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குருணாகல், வெல்லாவ ஹெங்கவ பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

புத்தாண்டின் பின்னர் சிறுமிக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலுக்கு தனியார் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் கால்வாசி பகுதியை சிறுமிக்கு வழங்குமாறு மருத்துவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த ஆலோசனைக்கு அமைய பெற்றோர் பரசிட்டமோல் மாத்திரையை உடைத்து சிறுமிக்கு வழங்கிய போது அது தொண்டையில் சிக்கி, சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியா மாவட்ட மக்களுக்கு நீதிமன்றம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 7 ஆம் திகதியன்று நடைபெறவிருந்தவழக்குகள் அனைத்தும் முதலாம் திகதி இடம்பெறும் என வவுனியா நீதிவான் நீதிமன்றபதிவாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது,

மே மாதம் முதலாம் திகதி விடுமுறைநாள் இல்லை எனவும் மே 7 ஆம் திகதியே விடுமுறைநாளாக கொள்ளப்படும் என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் மே மாதம் 7 ஆம் திகதிக்குதிகதியிடப்பட்ட வழக்குகள் அனைத்தும் மே முதலாம் திகதி நடத்தப்படும் என வவுனியாநீதிவான நீதிமன்றத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவின் அதிரடி அறிவிப்பு!!

வடகொரியாவில் இனி அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகள் நடைபெறாது என்று அந்தநாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். மேலும் அங்கு செயல்பட்டு வரும் அணு ஆயுத சோதனை மையங்களை மூட உத்தவிட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – தென்கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ள நிலையில், கிம் ஜாங் உன்னின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் தடையை தகர்த்து, அடுத்தடுத்து ஏவுகணை சோதனை, அணுகுண்டு பரிசோதனை என உலக நாடுகளை அதிர வைத்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தற்போது சில மாதங்களாக மனம் மாறி வெள்ளைக்கொடி காட்டி வருகிறார்.

தென்கொரியா தலைநகர் சியோலில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு தனது நாட்டு அணியை அனுப்பியது, தென்கொரியா அரசு பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சு நடத்தியமை ஆகியவற்றின் மூலம் அனைவரின் புருவங்களை உயர வைத்தார்.

பேச்சுக்கு வந்த தென்கொரிய பிரதிநிதிகளிடம் இப்போதைக்கு ஏவுகணை சோதனைகள் இருக்காது எனவும், அமெரிக்கா உடன் பேச தயாராக இருப்பதாகவும் கிம் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

கிம் ஜாங் உன் உடனான பேச்சுக்கு டொனால்ட் டிரம்ப்பும் சம்மதம் கொடுத்துள்ள நிலையில் எதிர்வரும் மே மாதத்தில் அமெரிக்கா – வடகொரியா இடையேயான பேச்சு நடக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகநூலை அதிகம் பயன்படுத்துவோருக்கு ஏற்படும் பாதிப்புக்கள் எவை தெரியுமா?

முகநூலை (ஃபேஸ்புக்) அதிக அளவில் பயன்படுத்துவோருக்கு உடல் மற்றும் மனநலப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு விபரங்கள் அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி’ ஆய்வு இதழில் வெளியாகியுள்ளன.

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் சராசரியாக 48 வயதுடையவர்களின் முகநூல் பயன்பாடு குறித்த ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுமார் 52,000 பேர் அந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முதலில் அவர்களது உடல் மற்றும் மனநலன் குறித்து பரிசோதிக்கப்பட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. அடுத்தகட்டமாக, பங்கேற்பாளர்களின் அனுமதியுடன் அவர்களது முகநூல் நடவடிக்கைகளும் அலசி ஆராயப்பட்டன.

அந்த ஆய்வில், பிறரது பதிவுகளுக்கு அதிக அளவில் “விருப்பம்’ (Like) தெரிவித்தவர்களும், தங்களது எண்ணங்களை (Status) அடிக்கடி பதிவு செய்பவர்களும் உடல் மற்றும் மன நலன் குறைந்தவர்களாகக் காணப்பட்டனர்.

அதேநேரம், மிகக் குறைந்த அளவு விருப்பங்களையும் (Like), எண்ணங்களையும் (Status) பதிவு செய்தவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருந்தனர்.

உடல்/மனநலன் பாதிக்கப்பட்டவர்கள் முகநூலை அதிக அளவில் நாடுவதாகவும், அது அவர்களது உடல்நலனையும், மனநலனையும் மேலும் மோசமடையச் செய்வதாகவும் ஆய்வில் தெரியவந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

உடல் பருமன் அதிகம் கொண்டவர்கள் முகநூலை அதிக அளவில் பயன்படுத்துவதாகக் கூறும் ஆய்வாளர்கள், எனினும், அவர்களது உடல் பருமனுக்கு முகநூல் பயன்பாடு காரணமல்ல என்றும் தெளிவுபடுத்தினர்.

ஏற்கனவே, முகநூல் பயன்பாடு குறித்து நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் பல சுவையான முடிவுகள் வெளியாகியுள்ளன.

முகநூலில் அதிக எண்ணிக்கையில் நண்பர்களின் அழைப்புகளை ஏற்பவர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றுள்ளதாகவும், அதிக எண்ணிக்கையில் புதிய நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பவர்கள் குறைந்த ஆயுளைக் கொண்டுள்ளதாகவும் ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

40 வயதுக்குள் நீங்கள் கட்டாயம் அனுபவித்து விட வேண்டிய விடயங்கள் எவை தெரியுமா?

சொந்தக் காலில் நில் : அப்பா, அம்மா, அண்ணன் என மற்றவர்களிடம் உதவி நாடி இருக்காமல், உங்கள் சொந்த காலில் நிற்கும் அளவிற்கு நீங்கள் நல்ல நிலையை அடைந்திருக்க வேண்டும். நால்வருக்கு உதவ வேண்டும் என்பதில்லை, யாருடைய உதவியும் இன்றி வாழ்வது என்பதே ஓர் பெரிய கெளரவம் தான்.

உலகம் சுற்றும் வாலிபன் : குறைந்தபட்சம் சிங்கபூர், மலேசியாவாவது சென்று வந்துவிட வேண்டும். புது இடம், புதிய கலாச்சாரம் உங்களை நீங்களே மெருகேற்றிக் கொள்ள, புத்துணர்ச்சி அடைய பெருமளவு உதவும்.

பேரார்வம் : பேரார்வம் என்பது உங்கள் வேலையை குறிப்பது. ஆரம்பத்தில், வேலை வேண்டும் என்பதற்காக ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம். ஆனால், 30 வயதுக்குள்ளாவது உங்களுக்கு பிடித்த துறை / தொழில் / வேலையில் சேர்ந்துவிட வேண்டும்.

தோல்வி : தோல்வியில் கற்காத பாடத்தை நீங்கள், வேறு எங்கும் கற்க முடியாது. தோல்வி உங்களை ஒழுங்குப்படுத்தும் ஆசான். ஓர் தோல்வியையாவது நீங்கள் சந்தித்துவிட வேண்டும். இல்லையேல், 30 வயதை கடந்த வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை கையாள முடியாமல் தவிக்கும் நிலை ஏற்படலாம்.

முதலீடு : சம்பாதித்த பணத்தை, வருமானம் ஈட்டும் வகையில் எதிலாவது முதலீடு செய்து வைத்துவிட வேண்டும். அதை செலவு செய்யாமல், வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும்.

தீய பழக்கம் : ஏதேனும் ஒரு கெட்டப் பழக்கத்தையாவது 30 வயதுக்குள் நிப்பாட்டி விட வேண்டும். புகை, மது, கெட்ட வார்த்தை பேசுதல், பெண்மையை கொச்சையாக எண்ணுதல் என எதையாவது ஒன்றையாவது.

எந்த கெட்டப் பழக்கமும் இல்லையா?. நீங்களே உங்களுக்கு ஒரு சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில், தூய நல்லவர்களை இந்த உலகம் கேலி கிண்டல் தான் செய்யும்.

உண்மையான நட்பு : எவ்வளவு பெரிய துன்பம் வந்தாலும், எவ்வளவு பெரிய வெற்றி வந்தாலும், உங்கள் அருகில் நின்று தோள் கொடுக்க ஓர் தோழமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாத உண்மையான தோழமை அமைத்துக் கொள்ள வேண்டும்.

பிடிக்காவிடில் பிரிவு : ஓர் நபருடன் பழகுவது பிடிக்கவில்லையா, உங்கள் சுற்றதிர்காகவும், அலுவலக நண்பர்களுக்காகவும் விட்டுக் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்களா?. வேண்டவே வேண்டாம். முற்றிலுமாக பிரிந்துவிடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது நினைக்கும் நபர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு இனி நீங்கள் பயணம் செய்வது தான் நல்லது.

சேமிப்பு : பெரும்பாலும் 30 வயதை கடக்கும் போது, சிலர் திருமணம் ஆகியும், சிலர் குழந்தை குட்டி என இருப்பார்கள். எனவே, அடுத்த தலைமுறைக்கான சேமிப்பை அளவிற்கு குறையாமல் எடுத்து வைக்க வேண்டும். இது உங்களுடைய கடமை.

கைதேர்ந்தவர் : நீங்கள் செய்யும் பணியில் நீங்கள் கைதேர்ந்தவர் என்ற நற்பெயருடன் விளங்க வேண்டும். அட, அவரு கிட்ட இந்த வேலைய கொடுங்க, சரியா செய்வார் என நால்வர் கூற வேண்டும்.

ஆராய்ந்து செயல்படுதல் : கனிமங்களை ஆராய தெரிந்தவர்கள் தான் ஆராய்ச்சியாளர்கள் என்றில்லை. மனிதர்களை ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

நேரம் பொன் போன்றது : நேரத்தை அளந்து செலவு செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேல் நேரத்தை வீண் விரயம் செய்வது, உங்கள் வாழ்க்கையில் பெரும் இழப்பாக அமையும்.

நீங்களாக இருங்கள் : மற்றவர்களுக்காக உங்களை மாற்றி அமைத்துக் கொண்டு வாழ தேவையில்லை. நீங்கள் நீங்களாக வாழ வேண்டிய தருணம் இது.

படிப்பில் உயரம் : உங்கள் துறை சார்ந்த படிப்பில், முழுமை அடைந்திருக்க வேண்டும். பி.எச்.டி முடித்தால் முழுமை என்றில்லை. இன்றைய அப்டேட் என்ன என்று அறிந்து வைத்திருந்தாலே போதுமானது.

கர்ப்பிணி தாயை சுட்ட 3 வயது மகள்!!

இன்டியானா மாகாணத்தில் 3 வயது சிறுமி தவறுதலாக கர்ப்பமாக இருந்த தனது தாயை துப்பாக்கியால் சுட்டுள்ளார். Shanique Thomas என்பவர் 7 வாரம் கர்ப்பிணியாக இருக்கிறார். இவர் தனது கணவர் மற்றும் 3 வயது மகள், 1 வயது மகனுடன் ஆடை வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார்.

கடைக்கு சென்றவுடன், சற்று சோர்வாக இருந்ததால், காருக்குள் குழந்தைகளோடு அமர்ந்து கொண்டார். இவர் முன்சீட்டில் அர்ந்திருந்தார். குழந்தைகள் இருவரும் பின் சீட்டில் அமர்ந்திருந்துள்ளனர்.

தந்தை கடைக்குள் செல்வதற்கு முன்னர், தனது ஆட்டோமேட்டிக் துப்பாக்கியை லோட் செய்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், துப்பாக்கியை எடுத்து மகள் விளையாடியபோது, குண்டானது தாயின் தோள்பட்டையில் பாய்ந்து ரத்தம் பீறிட்டுள்ளது. மயங்கி விழுந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கழுத்து நரம்பு பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தந்தையின் கவனக்குறைவால் இந்த விபத்து நடந்துள்ளது என பொலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவனின் மர்ம உறுப்பை அறுத்த பெண் : நீதிமன்ற தீர்ப்புக்கு பின் முத்தம் கொடுத்த புகைப்படம்!!

 

ரஷ்யாவில் கணவனின் மர்ம உறுப்பை அறுத்த பெண்ணிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ரஷ்யாவின் Tatarstan பகுதியின் Vasilyevo கிராமத்தைச் சேர்ந்தவர் Lira Plaksina(47). கடந்த அக்டோபர் மாதம் இவரின் வீட்டிற்கு சென்ற மது அருந்திய நிலையில் சென்ற முன்னாள் கணவர் பிரச்சனை செய்துள்ளார். அதன் பின் அவரிடம் உறவு வைக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த Lira Plaksina உடனடியாக சமயலறையில் பயன்படுத்தப்படும் கத்திய எடுத்து அவரின் மர்ம உறுப்பை அறுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் வலி தாங்க முடியாமல் அங்கிருந்த ஷோபாவில் அழுத நிலையில் இருந்துள்ளார். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவரின் வலது இடுப்பு பகுதியில் அதிக அளவில் காயம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர். இதையடுத்து இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது வழக்கை விசாரித்து நீதிபதிகள் Lira Plaksina-க்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்ததனர்.

நீதிமன்றத்திற்கு Lira Plaksina அழகான கருப்பு நிற உடையில் வந்திருந்தார். தீர்ப்புக்கு பின் பொலிசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, அவர் எந்த ஒரு கவலையுமின்றி அங்கிருந்தவர்களை நோக்கி முத்தமிட்டு சென்றுள்ளார்.

அதன் பின் எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, நான் நன்றாக இருக்கிறேன் மகிழ்ச்சியோடு சிறைக்கு செல்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவரது உறவினர்கள் இவரின் முன்னாள் கணவர் இவரை ஏமாற்றி மற்றொரு பெண்ணுடன் வாழ்ந்து வந்ததாக கூறியுள்ளனர்.

மாணவியுடன் தலைமறைவான ஆசிரியர் : தப்பிக்க செய்த வேலை!!

தமிழ்நாட்டில் தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய ஆசிரியர், ப்ளஸ்-2 மாணவியைக் கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் ராஜேஷ்வர்ஷன் என்பவர் ஆங்கில ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணமான நிலையில் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.

பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது, வட்ஸ்அப்பில் ஆபாசப் புகைப்படங்களை அனுப்புவது போன்ற சில்மிஷங்களில் ராஜேஷ்வர்ஷன் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், ப்ளஸ்-2 மாணவி ஒருவரை காதல் வலையில் வீழ்த்திய ராஜேஷ்வர்ஷன் இரு தினங்களுக்கு முன், அந்த மாணவியுடன் தலைமறைவானார்.

முன்னதாக, யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தன் தம்பி உதவியுடன் பள்ளி வளாகத்தைச் சுற்றி தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.

பள்ளியில் வேலைபார்த்து வந்த ஆசிரியர் இறந்துபோனால், வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்துவார்கள். இங்கே, ராஜேஷ்வர்ஷன் வீட்டுக்கு ஆசிரியர்கள் யாரும் போகவில்லை.

மாணவியைக் காணாத பெற்றோர் பொலிசில் புகார் செய்துள்ள நிலையில் மாணவியுடன் தலைமறைவான ஆசிரியரைப் பொலிசார் தேடி வருகிறார்கள்

என் மகளையாவது விட்டுவிடுங்கள் என கெஞ்சிய தாய் : நெஞ்சை உருக்கும் கொடூர சம்பவம்!!

 

இந்தியாவில் தாய் மற்றும் மகளை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் உடல் முழுவதும் காயங்களுடன் கடந்த 15ம் திகதி சடலமாக சிறுமி ஒருவர் மீட்கப்பட்டார்.

இதைப் பார்த்தவுடன் அப்பகுதி மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த பொலிசார் சிறுமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

அந்த சிறுமியின் உடலில் 86 காயங்கள் இருப்பது பிரேதபரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. ஏற்கனவே காஷ்மீர் சிறுமி கொலை வழக்கு தேசிய அளவிலான பிரச்சனையை ஏற்படுத்தியதால் இந்த வழக்கில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த சிறுமியின் தாய் கணவரை இழந்தவர். மத்திய பிரதேசத்தில் குக்கிராமத்தில் வசித்துவந்த அவரை ஒரு நபர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்ய ஆட்கள் தேவை எனக் கூறி 35000 ரூபாய் கொடுத்து குழந்தையுடன் அவர்களை சூரத் அழைத்து வந்துள்ளார்.

அங்கு சென்றதும் ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு கூட்டி வந்த அந்த கொடூர நபர், சிறுமியின் தாயை ஒரு வீட்டில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

அவர் கூச்சலிட்டு கதறி அழுது மறுப்பு தெரிவிக்கையில், சிறுமியை கொன்றுவிடுவேன் என மிரட்டியுள்ளார், பின்னர் தன் நன்பர்களுடன் சேர்ந்து சிறுமியையும் சீரழித்துள்ளார்கள்.

ஏழ்மையில் இருந்த எங்களுக்கு வேலை அளிப்பதாக கூறி அழைத்துவந்த பின்னர் துரோகம் செய்யாதீர்கள், உங்கள் பணத்தை கூட கொடுத்துவிடுகிறோம், எங்களை விட்டுருங்க என அந்த பெண், சிறுமியுடன் கெஞ்சி கதறியுள்ளார்.

ஆனால் சிறிதும் இரக்கம் இல்லாத அவர்கள் 4 நாட்கள் அந்த சிறுமியை அடைத்து வைத்து வன்கொடுமை செய்த பின்னர் காட்டுமிராண்டி தனமாக அந்த சிறுமியை கட்டையால் 86 முறை அடித்தே கொன்றுள்ளனர்.

அதன் பின்னர் சிறுமியின் உடலை மைதானத்தில் அவர்கள் வீசி சென்றுள்ளனர், சில தினங்களுக்கு முன்னர் அதே பகுதியில் அடையாளம் ஒரு பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டது.

தற்போது அந்த சடலம் சிறுமியின் தாயினுடையதா என்று டிஎன்ஏ பயன்படுத்தி சோதனை செய்ய முயன்றுள்ளனர். இந்த கொடும் செயலை செய்தவனையும் அவனது இரண்டு நண்பர்களையும் பொலிஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை

ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை இந்தியாவில் பாலியல் கொடுமைக்கு ஆளாகி சீரழிக்கப்படுவதாக சி.ஆர்.ஒய் எனும் குழந்தைகளின் உரிமைக்கான தான்னார்வ அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.

வட இந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மராட்டியம், டெல்லி மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 2006–ம் ஆண்டு 18,967 என இருந்த இந்த குற்ற செயல்கள், 2016ம் ஆண்டில் 1,06,958 ஆக அதிகரித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் அடிப்படையில் பார்த்தால் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் 500 சதவீதம் அதிகரித்து இருப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியாற்றிய வங்கியில் 02 கோடி ரூபா மோசடி செய்த பெண் கணக்காளர்!!

பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஒன்றில் கணக்காளராக பணியாற்றிய பெண் ஒருவர் கேகாலை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பிரதேசத்தில் உள்ள வங்கி ஒன்றில் கணக்காளராக பணியாற்றிய குறித்த பெண் அதே வங்கியில் சுமார் 20 மில்லியன் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

வங்கியால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் படி சந்தேகநபரான பெண் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் டுபாயில் இருந்து இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் கடந்த 18ம் திகதி கைது செய்யப்பட்ட போதிலும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

எவ்வாறாயினும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு சந்தேகநபர் கேகாலை பிரதேசத்தில் தங்கியிருப்பது தெரிய வந்ததையடுத்து நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த பெண் அந்த வங்கியில் 2,29,41,349 ரூபா நிதி மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை எவ்வாறு மீண்டும் நம்புவது?

உள்ளூராட்சி தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை நம்பி எவ்வாறு ஒரு புதிய கூட்டுக்கு போக முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்புள்ளார்.

நேற்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், எங்களோடு உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு சுரேஷை கேட்ட போது அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், இறுதியாக உதய சூரியனில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்.

அதற்கு மோசமான கொள்கையுடைய கட்சியோடு இணைய போவதில்லை என்று கூறினேன். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் புதிதாக கட்சி மற்றும் சின்னம் தேட முடியாது, ஆகையால் ஈ.பி.ஆர்.எல்.எவ் சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறினேன். அதற்கு மறுப்பு தெரிவித்து இறுதிவரை எங்களோடு பேசிக்கொண்டே இருந்தார்.

இந்த பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கு போது சுரேஷ் உதய சூரியனில் போட்டியிட போவார் என்று தெரியாது. பத்திரிகையில் பார்த்து தான் அறிந்து கொண்டேன். எமக்கு நம்பிக்கை கொடுத்து நடுத்தெருவில் விட்டவர் அவர்.

தூய்மையான அரசியல், நடந்து கொள்ளும் விதம் என்பன ஒரு கூட்டுக்கு மிக முக்கியம். ஒன்று சேர்ந்த பின்னர் போட்டித்தன்மை இருக்க முடியாது. ஆனால் இவ்வாறு நடந்து கொண்ட சுரேஷை எவ்வாறு நாங்கள் இனி நம்புவது?

சுரேஷ் தேசியவாதம் கதைத்துக் கொண்டு ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மகிந்தவின் கட்சி ஆகியவற்றுடன் வவுனியாவில் கைகோர்த்து எங்களுக்கு எதிராக செயற்பட்டார். இதற்கும் தேசியவாதத்துக்கும் என்ன தொடர்பிருக்கின்றது? என்றார் கஜேந்திரகுமார்.

-அத தெரண-

ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்!!

சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப் ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் சேரன், அடுத்ததாக ராஜாவுக்கு செக் வைக்கவுள்ளார். பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதைத்தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிவிட்ட சேரன், திருட்டு VCD-க்களை ஒழிக்கும் விதமாக, C2H என்ற புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.

அதாவது, C2H என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் திரைப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சியை மேற்கொண்டார். அதன்படி, அவர் இயக்கிய ஜே.கே. என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை C2H சேனல் மூலம் வெளியிட்டார். ஆனால், போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்திற்கு ‘ராஜாவுக்கு செக்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார்.

தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.