புதிய iPhone ஐ வௌியிடவுள்ள Apple நிறுவனம்!!

Apple நிறுவனத்தின் Worldwide Developers மாநாட்டில் அந்நிறுவனம் புதிய iPhone-இனை வெளியிடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. Apple நிறுவனம் இந்த ஆண்டில் மாத்திரம் மூன்று iPhone-களை வெளியிடவுள்ளது. அதில் ஒன்று iPhone X – மேம்படுத்தப்பட்ட Model என கூறப்படுகிறது.

மூன்று iPhone-களும் பெரிய வடிவமைப்புகள் என்ற வாக்கில், குறைந்த விலையில் மற்றொரு iPhone Model ஐ Apple வெளியிடவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

புதிய விலை குறைந்த iPhone SE ஸ்மார்ட்ஃபோனின் மேம்படுத்தப்பட்ட Model என்றும் கூறப்படுகிறது. அது iPhone SE 2 என அழைக்கப்படவிருப்பதாகக் கூறப்படும் நிலையில், புதிய விலை குறைந்த iPhone-இன் தெளிவான தகவல்கள் வெளியாகாமல் உள்ளது.

தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி, Apple விலை குறைந்த iPhone Model ஆனது 2018 ஆம் ஆண்டிற்கான Worldwide Developers Conference-இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாடு ஜூன் மாதம் நடைபெறவுள்ளது.

மூன்று பெண்கள் மீது ஒரே நேரத்தில் அசிட் வீசிய நபர் : அதிர்ச்சிக் காரணம்!!

பாகிஸ்தானை சேர்ந்த 2 சகோதரிகள் அவர்களது தோழியுடன் ஒன்றாக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது மூன்று பேர் மீதும் அசிட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களின் மாமா திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்த போது சகோதரிகளில் ஒருவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அவர்களின் மாமா பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டாங் மாவட்டத்தில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் சகோதரிகள் இருவர் தங்களது தோழியுடன் பேருந்திற்காக காத்திருந்த போது அசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதில் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர்களின் தோல் சம்வ இடத்திலேயே கருக தொடங்கியுள்ளது. வலியால் துடித்த அவர்கள் மூவரையும் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் இரு சகோதரிகளின் மாமா முதன்மை குற்றவாளியாக சந்தேகிக்கப்படுகிறார். மற்றொரு குற்றவாளி மாமாவின் நண்பர் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர்கள் இருவரும் தப்பியோடி விட்டனர்.

இந்த வழக்கு பற்றிய அறிக்கை ஒன்றை பஞ்சாப் முதல் மந்திரி ஷாபாஸ் ஷெரீப் மற்றும் ஐ.ஜி. ஆரிப் கேட்டுள்ளனர். குற்றவாளிகளை கைது செய்யும்படி மூத்த பொலிஸ் அதிகாரிகளுக்கும் அவர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு : பிரான்சில் சம்பவம்!!

பிரான்சில் அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், கடந்த 2010ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபரை திருமணம் செய்தார்.

அதன் பின்னர், சில ஆண்டுகள் கழித்து தனக்கு பிரான்ஸ் குடியுரிமை வேண்டும் என விண்ணப்பித்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 2016ம் ஆண்டு தென்கிழக்கு இஸ்ரே பிராந்தியத்தில் நடந்த, குடியுரிமை கொடுப்பதற்கான விழாவில் கலந்து கொள்ள அப்பெண்ணிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த விழாவில் கலந்து கொண்ட அப்பெண்ணிற்கு வாழ்த்துக்கள் கூறிய பிரான்ஸ் அதிகாரிகள், அவருடன் கைகுலுக்க முன்வந்தனர். ஆனால், தங்கள் மத வழக்கப்படி கைகுலுக்குவதில்லை எனக் கூறி அப்பெண் மறுத்துவிட்டார்.

இதனை ஏற்றுக் கொள்ளாத பிரான்ஸ் அதிகாரிகள், கைகுலுக்க மறுப்பவர் எங்கள் நாட்டு பிரஜை ஆக முடியாது எனக் கூறியதுடன், அவரின் பிரான்ஸ் குடியுரிமையையும் மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து கடந்த 2017ம் ஆண்டு, அப்பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையிலும் சாதகமான தீர்ப்பு வரவில்லை.

இதன் பின்னர் குறித்த பெண் மேல்முறையீடு செய்தபோதும் நீதிமன்றம் அவருக்கு குடியுரிமை பெறும் தகுதி இல்லை என தெரிவித்துள்ளதுடன், சட்டம் தவறாக பயன்படுத்தப்படவில்லை என மாநில கவுன்சில் விளக்கம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாடகை தராததால் கழிவறையை பூட்டிய வீட்டு உரிமையாளர் : அவமானத்தில் பெண் தற்கொலை!!

 

வாடகை செலுத்தாமல் வீட்டு கழிவறையை பயன்படுத்த உரிமையாளர் தடை விதித்ததால் அவமானத்தில் குடும்பப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையை சேர்ந்த ரவி மற்றும் லாவண்யா தம்பதியினர் அப்பகுதியில் உள்ள புது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். வீட்டுக்கு வாடகையாக 1500 ரூபாய் செலுத்திவந்த நிலையில் கூடுதல் வாடகை கேட்டு உரிமையாளர் தொந்தரவு செய்துள்ளார் .

அது மட்டுமல்லாமல் கூடுதல் வாடகை கொடுத்தால் மட்டுமே வீட்டின் கழிப்பறை சாவியை கொடுப்பேன் என கூறிவிட்டு கழிப்பறையை பூட்டி சாவியை எடுத்துச்சென்றுள்ளார். லாவண்யாவின் கணவர் வேலூர் பேருந்து நிலையத்தில் டீ மாஸ்டராக இருப்பதால் குறைந்த அளவு வருமானமே அந்த தம்பதியினருக்கு இருந்துள்ளது.

ஆகவே தற்காலிகமாக ஓலை மூலம் தடுப்பு அமைத்து குளிப்பதற்கும், மலம் கழிக்க திறந்த வெளியையும் லாவண்யா பயன்படுத்தி வந்துள்ளார்.

இருப்பினும் கழிவறை பிரச்சனையை தீர்த்து வைக்கும்படி கணவர் ரவியிடம் பலமுறை லாவண்யா முறையிட்டுள்ளார். ஆனால் குறைந்த வருவாய் காரணமாக ரவியால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இந்நிலையில் கழிப்பறை பிரச்சனை தீராததாலும் திறந்த வெளியில் குளிப்பதாலும் மனமுடைந்து லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் யானைக்குட்டியின் சடலம் மீட்பு!!

 

வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோவில் புளியங்குளம் கிராமத்தை அண்டிய பிரதேசத்திலிருந்து உருக்குலைந்த நிலையில் யானைக்குட்டியின் சடலம் ஒன்று இன்று (20.04) மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோவில் புளியங்குளம் கிராமத்தை அண்டிய பிரதேசத்திலிருந்து ஐந்து மாதங்கள் நிரம்பிய யானை குட்டி ஒன்றை உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்டுள்ளதாக வவுனியா வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரோந்து சென்ற பூவரசங்குளம் பொலிசார் யானைக்குட்டியின் சடலம் தொடர்பாக வன ஜீவராசிகள் திணைக்களகத்திற்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த யானைக்குட்டியானது உணவுடன் சென்று வயிற்றிற்குள் வெடிக்க கூடிய ஒருவகை வெடிபொருளை உண்டதன் காரணமாகவே மரிணித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக வன ஜீவராசிகள் திணக்களகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கோவில் புளியங்குளம் கிராமத்திற்குள் ஐந்து நாட்களுக்கு மேலாக குறித்த யானைக்குட்டி நடமாடியுள்ளது. கடந்த ஏழு நாட்களுக்கு முன் இக்குட்டியானது இறந்துள்ளது.

இவ் யானைக்குட்டியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் வன்னி மாவட்டத்தின் மிருகவைத்தியர் வி.கிரிதரன் தலைமையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

அத்துடன் யானைக்குட்டி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

வருங்கால கணவர் செய்த செயல் : உயிரை விட்ட இளம்பெண்!!

இந்தியாவில் தன்னை திருமணம் செய்யவிருந்த இளைஞர் திடீரென திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் கசியாபாத்தை சேர்ந்தவர் பிரியங்கா வர்மா (25). இவர் அங்குள்ள விடுதியில் தங்கி வேலை செய்து வந்தார். பிரியங்காவுக்கும் இளைஞர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் விரைவில் திருமணம் நடக்கவிருந்தது.

இந்நிலையில் வருங்கால கணவருடன் பிரியங்காவுக்கு சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிரியங்காவை திருமணம் செய்து கொள்ளமுடியாது என அவர் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த பிரியங்கா தனது தோழிக்கு போன் செய்து நடந்தவற்றை கூறி, எல்லாமே முடிந்துவிட்டது என அழுதுள்ளார்.

பின்னர், ஏதோ விபரீதம் நடக்கவுள்ளது என்பதை உணர்ந்த தோழி பிரியங்காவின் விடுதிக்கு வந்து அவர் அறை கதவை திறந்த போது பிரியங்கா தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

இது குறித்து பொலிசுக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் பிரியங்காவின் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருமணமான பெண்ணுடன் பழக்கம் : நடிகை புவனேஸ்வரியின் மகன் கைது!!

திருமணம் ஆன பெண்ணை அடித்து உதைத்ததற்காக நடிகை புவனேஸ்வரியின் மகனை பொலிசார் கைது செய்துள்ளனர். சாலிகிராமத்தை சேர்ந்த உதயா என்ற பெண்மணி தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை, 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்துவிட்டார்.

இந்நிலையில், பேஸ்புக் மூலம் நடிகை புவனேஸ்வரியின் மகன் மிதுன் சீனிவாசன் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரது நட்பு, காதலாக மாறி உள்ளது.
பின் உதயாவை திருமணம் செய்து கொள்வதாக மிதுன் கூறியுள்ளான். ஆனால், மிதுன், குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமை என உதயாவிற்கு தெரியவந்தது. இதையடுத்து, அவனை திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.

மிதுன் சமரசம் பேச, உதயாவை அவரது வீட்டிற்கு அழைத்தார். அங்கு சென்ற உதயாவை, தன்னை திருமணம் செய்ய வேண்டும் என மிரட்டியதுடன், அவரை அடித்து உதைத்துள்ளார். உதயா அளித்த புகாரின் படி மிதுன் சீனிவாசனை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கட்டுப்படுத்தமுடியாத காதலால் பாடசாலை மாணவனை கடத்திய இளம்பெண்!!

தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பள்ளி மாணவன் மீது கட்டுக்கடங்காத காதல் கொண்டதால் அந்த மாணவனையே கடத்திய குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விவசாயியான தசரதன் என்பவரின் 15 வயது மகன் 10 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த மாணவனுக்கும், அவரது உறவினர் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த தசரதன் கண்டித்துள்ளார். இந்நிலையில், மாணவன் திடீரென காணாமல் போயுள்ளான். இதுகுறித்து தந்தை தசரதன் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில், மாணவனை பெங்களூருக்கு இளம்பெண் கடத்தி சென்றுள்ளது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரும் தமருபுரி அழைத்துவரப்பட்டனர். மாணவனை குழந்தைகள் நலக்காப்பகத்தில் ஒப்படைத்தனர். இளம்பெண்ணை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா : தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களில் இவரும் ஒருவர்.

பெங்களூரில் உள்ள இவரது தியான பீடத்தில் சேர விரும்புபவர்களுக்கு 2,000 முதல் 25,000 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது. இன்றைய நாளில் இவரது சொத்து மதிப்பு 1.5 பில்லியன் டொலராகும்.

உலகம் முழுவதும் இவர் கற்றுக்கொடுத்த யோகா மற்றும் தியானங்கள் பிரபலமாக உள்ளது. இவர், தனது சொற்பொழிவுகளை புத்தமாக வெளியிட்டுள்ளார். இதுவரை, 27 மொழிகளில் 300 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

5 வயதுச் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த இளைஞனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை!!

திருவள்ளூர் அருகில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சின்ராத்- சம்சா தம்பதியினர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள், இவர்கள் திருவள்ளூரில் உள்ள போராக்ஸ் பகுதியில் 7 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்த போராக்ஸ் பகுதியில் இன்னபிற வடமாநிலத்தவரும் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் சின்ராத்- சம்சா தம்பதியினரின் 5 வயது மகள் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது அதே பகுதியில் வசித்து வரும் பரவத் சிங் சிறுமியை தூக்கி சென்று, ஆள்நடமாட்டம் இல்லாத வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை கொடுத்துள்ளார். ஆனால் இந்த வக்கிர செயல் குறித்து புரிந்துகொள்ளும் ஆற்றல் அந்த சிறுமியிடம் இல்லை என்றாலும், நடந்ததை அவரது பெற்றோரிடம் அப்படியே தெரிவித்துள்ளார்.

உடனடியாக சிறுமியை மருத்துவமனை கொண்டுசென்று பரிசோதித்த பின்னர் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

மேலும் சிறுமிக்கு மேல் சிக்கிச்சை தேவைப்படுவதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், குறித்த இளைஞரை சரமாரியாக அடித்து பொலிசிடம் ஒப்படைத்தனர்.

40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் : சேர்த்து வைத்த யூடியூப் பாடல்!!

இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் யூ டியூப் வீடியோ மூலம் தன்னுடைய குடும்பத்தில் இணைந்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலைச் சேர்ந்த கோந்ராம் காம்பீர் சிங் என்பவர் 1978-ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வீட்டை விட்டு வெளியேறியவர் திரும்பவே இல்லாத காரணத்தினால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர்.

காவல்நிலையத்தில் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு பைரோ சாபிர் என்பவர் தன்னுடைய யூ டி யூப் சேனலில் காம்பீர் சிங் பாடிய ஹிந்தி பாடலை பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட அவரது குடும்பத்தினர் உடனடியாக இது குறித்து வீடியோவை சுட்டிக் காட்டி மீட்டுத் தரும்படி காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மும்பைக்கு சென்ற பொலிசார் காம்பீர் சிங்கை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். அப்போது காம்பீர் சிங் தன்னுடைய குடும்பத்தினரைக் கண்டவுடன் எண்ணற்ற மகிழ்ச்சியில் அவர்களை கட்டி அணைத்துக் கொண்டார்.

வெளிநாட்டில் இதை செய்ய முடியாமல் போனது : யாழில் சாதனை படைத்த முதியவர்!!

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் செல்லையா திருச்செல்வம் என்பவர் வான் ஒன்றில் கட்டப்பட்ட கயிற்றை தனது தலைமுடியில் கட்டி ஒரு கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள செல்லையா திருச்செல்வம், “இதற்கு முன்னர் இவற்றை செய்ய எனக்கு ஒத்துழைப்புகள் கிடைக்கவில்லை. வெளிநாட்டுக்கு சென்றும் முயற்சி செய்து பார்த்தேன். அங்கு எனக்கு விசா பிரச்சினை இருந்ததால் இதனை செய்ய முடியாமல் போனது.

இலங்கைக்கு வந்து இரண்டு வருடங்களாகின்றன. இந்த காலப்பகுதியில் டிரக்டர் மற்றும் டிப்பர் வாகனங்களை இழுத்திருக்கிறேன். இப்போது ஒரு கிலோ மீற்றர் தூரம் அளவிற்கு இழுக்கின்ற பலம் இருக்கிறது. எனக்கு உடம்பில் சக்தி என்று கிடையாது. மனதில் இழுக்க வேண்டும் என்று எண்ணுவதால் இழுத்தேன்.

கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால அவா. மீண்டும் ஒரு வாகனத்தை கூடிய தூரத்திற்கு இழுத்துச் சென்று சாதனை படைக்க முயற்சி செய்கின்றேன்.” என செல்லையா திருச்செல்வம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் பகுதியில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, வயாவிளான் வசிக்கும் 54 வயதான செல்லையா திருச்செல்வம் என்பவர் வான் ஒன்றில் கட்டப்பட்ட கயிற்றை தனது தலைமுடியில் கட்டி ஒரு கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சென்று சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசிய நாட்டு பெண்களிடம் பல லட்சம் யூரோ கொள்ளை : 15 வயதான சிறுமிக்கு கிடைத்த தண்டனை!!

ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் கொள்ளையிட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கு Créteil சிறுவர்களுக்கான நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், நான்கு ஆசியாவைச் சேர்ந்த பெண்களிடம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பாரிசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த கொள்ளையில், இளம் பெண் ஒருவர் ஈடுபட்டதாகவும், பல இலட்சம் யூரோக்கள் வரை திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். அப்பகுதிகளில் அடிக்கடி இதுபோன்று ஆசிய பெண்களை குறிவைத்து கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், கல்லூரியில் படிக்கும் 15 வயதுடைய இளம் பெண்ணை ஒருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்திருந்தனர். இந்நிலையில், குறித்த பெண்ணுக்கு தற்போது சிறைத்தண்டன விதிக்கப்பட்டுள்ளது..

இதேவேளை, இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் மேலும் சில மாணவர்களை பொலிஸார் கைது செய்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கத்திற்கான வரி அதிகரிப்பால் ஏற்படப்போகும் ஆபத்து!!

இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத தீர்வை வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் நாட்டிற்கு, சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வரும் வழிவகைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “தங்கம் போன்ற பொருட்களுக்கு வரி விதிப்பதில் எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை. மாறாக சட்டவிரோமாக முறையில் அவற்றை நாட்டிற்கு கொண்டு வரும் செயற்பாடுகள் தலைத்தூக்கும்

இறக்குமதியாளர்களுக்கு 15 வீத அதிகமான வரி விதிப்பு மட்டுமல்ல. தேசிய கட்டட வரி மற்றும் தனிப்பயன் கடமைகள் போன்ற வரிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

ஒரு பவுண் தங்கம் 55 ஆயிரம் ரூபாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், வரி அதிகரிப்பினால் மேலதிகமாக எட்டாயிரம் ரூபா வரையில் செலுத்த வேண்டிய நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இதேவேளை, வரி வருமானம் என்பது அரசாங்கத்தின் வருவாயை கூட்டாது. மாறாக சட்டவிரோதமான முறையில் தங்கத்தை கொண்டு வருபவர்களின் போக்கை மாத்திரம் உருவாக்கும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை!!

இலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

கட்டணச் சீட்டு வழங்காத முச்சக்கர வண்டிகள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு மக்களிடம் சபை கோரிக்கை விடுத்துள்ளது. அதற்காக 011 2 69 68 90 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியும்.

முச்சக்கர வண்டிகளில் பல்வேறு கட்டணங்கள் அறிவிடுவதன் மூலம் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதால் இந்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கட்டண பட்டியல் வெளியிட கூடிய வகையில் முச்சக்கர வண்டிகளுக்காக மீற்றர் பொருத்துவதற்கு வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை 6 மாத கால அவகாசம் வழங்கியிருந்தது. அதற்கமைய இன்று முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது

முள்ளிவாய்க்காலில் இராணுத் தளபதியிடம் ஏ கே 47 துப்பாக்கி கேட்ட சிறுவன்!!

 

முள்ளிவாய்க்கால் முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் 5 வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி வேண்டும் என்ற கோரிக்கையை இராணுவத்தினரிடம் முன்வைத்த நிலையில் குறித்த சிறுவனுக்கு விளையாட்டுப் பொருளாக முச்சக்கர வண்டி பொம்மை ஒன்றை 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி நேற்று வழங்கியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா நேற்று பிற்பகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் மேற்கு 681 ஆவது படைப்பிரிவு இராணுவ தளபதியே இவ்வாறு பரிசளித்துள்ளார்.

அண்மையில் குறித்த முன்பள்ளி மாணவாகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்க சென்ற குறித்த இராணுவத் தளபதி சிறுவர்களிடம் விளையாட்டு பொருட்கள் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு 5வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி ஒன்று எனக்கு தேவை என்று பதிலளித்துள்ளார்.

இராணுவத்தினர் எதிர்பாராதவிதமாக குறித்த சிறுவனின் பதில் அமைந்திருந்ததினால் அந்த சிறுவனை அழைத்த இராணுவத்தளபதி மாற்றுப்பொருள் ஏதேனும் ஒன்றை கேட்கும்படி அன்பாக பணித்துள்ளார். இந்த நிலையில் குறித்த சிறுவன் கெலிகொப்டர் ஒன்று தேவை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி விளையாட்டு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி குறித்த சிறுவனை அழைத்து முச்சக்கர வண்டி விளையாட்டுப் பொருளினை சிறப்பு பரிசாக வழங்கியுள்ளார்.

அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான (விளையாட்டு) பொலிஸ் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளதாக சந்திரன் முன்பள்ளி ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.