அதிரடிப்படையினர் விசேட சுற்றிவளைப்பு : பலர் கைது, பல்வேறு ஆயுதங்களும் மீட்பு!!

கடந்த நான்கு மாதங்களாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது பல்வேறு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 30 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் இம்மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணங்களில் மேற்கொண்ட சுற்றி வளைப்பிலேயே இவ்வாயுதங்கள், போதைப்பொருள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மீட்கப்பட்ட ஆயுதங்கள் : கைக்குண்டு – 05, ரி56 ரக துப்பாக்கி – 02, ரி56 ரக துப்பாக்கி மெகசின் – 02, ரி56 ரக துப்பாக்கி ரவைகள் – 151, சுழல் துப்பாக்கி (Revolver) – 05, கைத்துப்பாக்கி (Pistol) – 01, கைத்துப்பாக்கி மெகசின் – 02, வாள் – 07, கைத்துப்பாக்கி, சுழல்துப்பாக்கி ரவைகள் – 385,  வேறு துப்பாக்கி ரவைகள் – 810, வெடிமருந்து துப்பாக்கி – 03,

இந்த ஆயுதங்களுடன், ஹெரோயின் 56 கிராம் மற்றும் ஹசிஸ் எனப்படும் போதைப்பொருள் 111 கிராம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் தொடரும் மர்மம்!!

 

அண்மைக்காலமாக இலங்கையின் கடற்பரப்பில் மர்மங்கள் நிறைந்த பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் இலங்கையை அண்மித்த ஆழ் கடலில் மிதந்து கொண்டிருந்த நிலையில் புத்தர் சிலை மீட்கப்பட்டுள்ளது. இது காலியை சேர்ந்த மீனவர்கள் சிலரினால் மீட்கப்பட்டுள்ளது.

மிதந்து வந்த புத்தர் சிலை மியன்மார் நாட்டிற்கு சொந்தமானதென சந்தேகிக்கப்படுகின்றது. புத்தர் சிலையுடன் மேலும் சில சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சிலைகள் காலி, கச்சிவத்தை புராதன விகாரையில் வைக்கப்பட்டுள்ளது.

மியன்மாருக்கு சொந்தமான இந்த சிலைகள் செழிமைக்காக பிரார்த்தனை செய்து கடலில் மிதக்க விடப்பட்டுள்ளதாக விகாரையின் விகாராதிபதி தெரிவித்துள்ளார். அது மியன்மார் நாட்டவர்களின் கலாச்சாரமாக கருதப்படுகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் காலியை அண்மித்த கடற்பகுதியில் சிலை ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்து : ஒருவர் பலி, ஐவர் படுகாயம்!!

 

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாங்காட்டில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதியில் கோழி ஏற்றிவந்த டிப்பர் வாகனமும், வான் ஒன்றும் மோதிகொண்டதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், டிப்பரில் பயணம் செய்த மூவரும் வானில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் டிப்பரின் சாரதி உட்பட இருவர் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவரும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் ஓந்தாச்சிமடம் 36 வீட்டுத்திட்டத்தினை சேர்ந்த இராஜரெட்னம் தினேஸ்காந்த் என்ற 27வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

மைத்திரியின் அதிரடி அறிவிப்பு : பரபரப்பாகும் கொழும்பு அரசியல்!!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பதவியை கைவிடத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று அறிவித்துள்ளது. கட்சியின் முன்னேற்றத்திற்காக பதவியை துறக்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

சமகால அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்த 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீரென தமது பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர். இந்நிலையில் குறித்த 16 முன்னாள் அமைச்சர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் ஆகியோரை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என, அதிருப்தி குழுவினர் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போதே கட்சியின் தலைமைப் பதவியில் இருந்த தான் விலகிக் கொள்ளவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார் என குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கையின் சமகால அரசியல் தளம் ஸ்திரமன்ற நிலையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்படுத்தப்பட்ட தேசிய அரசாங்கம் பல்வேறு முரண்பாடுகளுடன் முன்னெடுக்கப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த அதிரடி அறிவிப்பு, கொழும்பு அரசியல் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

மீண்டும் குரல் கொடுக்க களத்தில் இறங்கிய நடிகர் சிம்பு : சேலத்தில் பரிசலில் பயணம்!!

 

பிரபல திரைப்பட நடிகரான சிம்பு இன்று சேலத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்தார். தமிழகத்தில் தற்போது காவேரி விவகாரம் தொடர்பாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இதற்காக திரையுலகினர் போராட்டம் நடத்திய போது, சிம்பு அதில் கலந்து கொள்ளாமல் தனியாக வீட்டில் இருந்து காவேரி விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கர்நாடக மக்கள் தண்ணீர் கொடுப்பார்கள் என்று கூறினார். அதே போன்று அவர்களும் தமிழர்களுக்கும் தண்ணீர் கொடுப்பது தொடர்பான வீடியோவை வெளியிட்டனர். அது சமூகவலைத்தளங்களில் வைரலாகியது மட்டுமின்றி சிம்புவை அனைவரும் பாராட்டினர்.

இந்நிலையில் சிம்பு இன்று காலையிலிருந்தே சேலத்தில் உள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்தார். சேலத்தில் இருக்கும் பல்வேறு ஏரிகளை ஆய்வு செய்யவுள்ள இவர், குறிப்பாக முக்கனேரி ஏரியில் பரிசலில் பயணித்து அந்த நிர்நிலைகளை பார்த்து வருகிறார்.

இதன் பின் சேலம் மக்களின் நீண்ட நாள் பிரச்சனையான குப்பமேடு என்ற கிச்சி பாளையத்திற்கு சிம்பு செல்லவுள்ளதாகவும், இதைத் தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிம்புவின் இந்த திடீர் வருகைக்கு சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ்மாருஸ் தான் காரணம் எனவும், காவேரி விவகாரம் குறித்து சிம்பு பேசியதால் அவர் சேலத்திற்கு சிம்புவை அழைத்ததாக கூறப்படுகிறது.

இலங்கை வந்த பாரிய விமானம் : ஒரே நாளில் இத்தனை கோடி வருமானமா?

 

உலகின் மிகப் பெரிய விமானமான என்டநோவ் 225 என்ற சரக்கு விமானம் நேற்று இலங்கையில் தரையிறங்கியது. விமானத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அறிவிக்கப்பட்டது.

என்டநோவ் 225 என விமானத்தினால் ஒரே நாளில் 13 மில்லியனுக்கும் அதிக இலாபம் இலங்கைக்கு கிடைத்துள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதறக்காக ஊழியர் சபையினர் வசதி ஏற்படுத்தி கொடுத்தமையினால் இந்த பணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

என்டநோவ்-225 என்ற விமானம் உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக கருதப்படுகின்றது. குறித்த விமானம் பாகிஸ்தான் கராச்சி நகரத்தை நோக்கி சென்ற சந்தர்ப்பத்தில் நேற்று திடீரென மத்தல விமானத்தில் தரையிறங்கியமை குறிப்பிடத்தக்கது.

முரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம் : சிவசக்தி ஆனந்தன் அழைப்பு!!

முரண்பாடுகளைக் களைந்து சேவையால் ஒன்றிணைவோம் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்களையும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை ஆதரித்து வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களின் பின்னர், ஏறத்தாழ அனைத்து சபைகளுக்குமான தவிசாளர்களும் மேயர்களும் நகர பிதாக்களும் தெரிவு செய்யப்பட்டுவிட்டனர். இந்த தேர்தல்கள் சட்டம் பல்வேறு புதிய அனுபவங்களை நாட்டு மக்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வழங்கியுள்ளது.

வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரை, எட்டு மாவட்டங்களும் தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, எமது பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எமது தலையாய கடமையாகும்.

நாளாந்த விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ள உள்ளுராட்சி மன்றங்களை சிலர் தமது சுயநலன்களுக்காக தேசிய இனப் பிரச்சினையுடன் தொடர்பு படுத்தியதன் விளைவே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு மூலகாரணமாகும்.

எது எப்படி இருப்பினும், நடந்தவைகளை மறந்து, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கணக்கிலெடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதுடன், எமது பிரதேசத்தின் அனைத்து கிராமங்களும் சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்றதாகவும் ஆரோக்கியமிக்கதாகவும் மாற்றியமைக்க முன்வரவேண்டும்.

தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களின்போது நடைபெற்ற விடயங்களைத் தூக்கிப்பிடிக்காமல், இனி அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு, பணிகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிட்டு கூடியவரையில் வினைதிறன் மிக்க செயற்பாட்டை முன்னெடுப்பதே நாம் எம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் நன்றிக் கடனாகும்.

அபிவிருத்திப் பணிகளில் வட்டார, கட்சி, இன, மத பேதங்களை மறந்து சபைகளில் உள்ள நிதிகளை முறையாகக் கையாண்டு நீடித்திருக்கும் அபிவிருத்திப் பணிகளை அனைத்து பிரதேசங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து உறுப்பினர்களும் உறுதிபூண வேண்டும்.

ஒவ்வொரு உறுப்பினரும் தமக்கு வாக்களித்த மக்களுக்கு தாம் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்குக் கடமைப்பட்டவர்கள்.

அதே நேரம், மிகவும் பின்தங்கிய வட்டாரத்தின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் விதத்தில் அதன் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயற்பட முன்வரவேண்டும்.

கட்சி ரீதியாக நாம் பிரிந்திருந்தாலும் நாம் தமிழ்த் தேசிய இன மக்கள் என்பதை நினைவிற்கொண்டு யுத்தத்தால் அழிவடைந்துள்ள எமது கிராமங்களை பற்றுறுதியுடன் மீளக் கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் உறுதி பூணுவோம்.

இருக்கின்ற நிதிவளங்களைக் கொண்டு உங்கள் பணிகளை மேற்கொள்கின்ற அதேநேரம், மேலும் சில அத்தியாவசிய பணிகளுக்கு நிதிப்பற்றாக்குறை நிலவுகையில், மாகாண சபை உறுப்பினர்கள் மூலமோ, பாராளுமன்ற உறுப்பினர்கள் மூலமோ மேலதிக நிதிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம்.

இந்த விடயத்தில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்வதற்குத் தயாராய் இருக்கின்றது.

உள்ளுராட்சி தேர்தல்களில் பலர் பல்வேறு காணரங்களுக்காக பல கட்சிகளில் இணைந்து போட்டியிட்டிருக்கக்கூடும். அவைகளை மீட்டிப்பார்த்து பகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கோரமான வறுமையிலும், போதிய சுகாதாரமற்ற சூழலிலும் வாழும் எமது மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பதே எமது தலையாய பணியாக இருக்க வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அதற்காகவே நடத்தப்படுகின்றன.

போட்டியிட்ட ஒவ்வொருவரும் அந்த நோக்கத்திற்காகவே போட்டியிட்டீர்கள். எனவே நாம் எமது மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற உறுதிபூணுவோம்.

வெற்றியீட்டிய அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் உங்கள் பணி சிறக்க ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பக்கபலமாய் இருக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடக்கூடாத இடத்தில் கை வைத்தார் : தமிழக  ஆளுநரை தொடரும் அடுத்த சர்ச்சை!!

 

நிர்மலா தேவி விவகாரம் தொடர்பில் ஆளுநர் மீது சந்தேசம் உள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அடுத்த சர்ச்சை கிளம்பியுள்ளது. தமிழகம் முழுவதும் நிர்மலா தேவி விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பாக விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தடவிக்கொடுத்தார்.

இது பூதாகரமாக வெடிக்க நேற்று பகிரங்க மன்னிப்பும் கோரினார். இந்நிலையில் சமீபத்தில் கோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற போதும் அங்கு நடனமாடிய பெண்ணினை தொடக்கூடாத இடத்தில் தொட்டதாக புது சர்ச்சை கிளம்பியுள்ளது.

இதுகுறித்து பனசை அரங்கன் என்பவர் பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள தகவலில், கடந்த 13ம் திகதி திருவையாறு அருகு உள்ள கல்யாணபுரம் புகழ்பெற்ற சீனிவாச பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவையை தொடங்கி வைக்க ஆளுநர் வந்திருந்தார்.

இவரை வரவேற்கும் விதமாக விழா குழுவினர் சார்பில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சால்வை போர்த்தி ஆளுநர் பாராட்டினார்.

அப்போது ஒரு பெண்ணின் கன்னத்தை தட்டிக் கொடுத்து, தொடக்கூடாத இடத்தில் கை வைத்தார். அப்போது இச்செயல் சாதாரணமாக தெரிந்தாலும், இப்போது தான் அதன் அர்த்தம் புரிகிறது.

இவ்வளவு சர்ச்சைகள் மிகுந்த ஆளுநரை உடனடியாக மத்திய அரசு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் மோட்டார் சைக்கில் விபத்து : நால்வர் வைத்தியசாலையில்!!

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் இன்று (19.04.2018) மாலை 6 மணியளவில் மூன்று நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கில் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிரேசன் வீதியூடாக புகையிரத நிலையம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதி இரண்டாம் ஒழுங்கையிலிருந்து கதிரேசன் வீதி நோக்கி மூன்று இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் உட்பட சாரதி மற்றும் மோட்டார் சைக்கிலில் பயணித்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மோட்டார் சைக்கில் சாரதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படுவதுடன் இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினேகாவின் பிரசவ வலியைப் பார்த்து தலைசுற்றிவிட்டது : மனம் திறந்த பிரசன்னா!!

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளான பிரசன்னாவும் சினேகாவும் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்தபோது இவர்கள் இருவருக்குள்ளும் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நட்பு காதலாக மாறியதையடுத்து, இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

சினேகா மிகவும் எளிமையானவர், பெரியவர்களை மதிக்ககூடியவர். இந்த பண்புகளே அவர் மீது எனக்கு காதல் வயப்பட காரணம் என பிரசன்னா கூறியுள்ளார். இந்நிலையில், ஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் பிரசன்னா- சிநேகா ஜோடி கலந்துகொண்டனர். நாங்கள் இருவரும் சந்தித்து 10 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது என தங்களது காதல் வாழ்க்கை பற்றி பகிர்ந்துகொண்டனர்.

எங்கள் மகன் விஹான் வந்தபிறகு, காதல் அதிகரித்துவிட்டது. தங்கள் இருவரையும் சேர்ந்து அமரவிடாமல் விஹான் எப்பொழுதுமே நடுவில் வந்து அமர்ந்துவிடுவான். சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது அனைத்து பெண்கள் மீதான மரியாதை அதிகரித்ததாக பிரசன்னா தெரிவித்துள்ளார்

பிரசவ வலியை பார்த்ததற்கே எனக்கு பயமாக இருந்தது. சினேகாவுக்கு இயற்கையாக பிரசவம் ஆகவில்லை. அதனால் வலியை அதிகரிக்க ஊசி போட்டார்கள். அதுவரை சினேகாவை பிடித்து ஆறுதல் கூறிய நான், மருத்துவர் பெரிய ஊசியை எடுத்ததை பார்த்து எனக்கு தலைசுற்றிவிட்டது.

நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு ஓரமாக போய் உட்கார்ந்து கொண்டேன். தலைவலி வரும்போது எல்லாம் இதை தான் நினைப்பேன். தலைவலியையே தாங்க முடியவில்லை என்றால் அந்த வலி எப்படி இருக்கும். ஒவ்வொரு அம்மாவும் தெய்வம். அம்மாவை தெய்வத்துடன் ஒப்பிடுவது தவறே இல்லை என்று கூறியுள்ளார்.

பற்களில் மஞ்சள் கறையா : வெண்மையாக பளிச்சென்று இருக்க இதை செய்யுங்கள்!!

பற்களை வெள்ளையாக்க எத்தனையோ வழிகளை முயற்சி செய்திருப்போம், இதற்கு டூத்பேஸ்ட் மட்டுமே தீர்வாகாது.நம் முன்னோர்கள் பயன்படுத்திய முறைப்படி, ஆயுர்வேத மற்றும் இயற்கையான பொருட்களை கொண்டு பற்களை வெண்மை நிறத்துக்கு மாற்றலாம்.

ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியை நன்றாக மசித்து பேஸ்ட் போல செய்து, அதை பயன்படுத்தி வாரத்திற்கு 2 முறைகள் பற்களை தேய்த்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும் அல்லது ஸ்டராபெர்ரியை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிடலாம்.

பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை: சிறிதளவு பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து நுரை வரும் வரை கலந்து அதை வாயில் உள்ள உமிழ் நீரை துப்பி விட்டு, ஒரு பஞ்சை அதில் நனைத்து பற்களில் தேய்த்து, பின் 1 நிமிடம் கழித்து டூத் பிரஷ் கொண்டு மென்மையாக தேய்த்து கழுவ வேண்டும்.

ஆனால் இம்முறையை அடிக்கடி பயன்படுத்தவோ, 1 நிமிடத்திற்கு மேல் இந்த கலவையை வாயில் வைத்திருக்வோ கூடாது. ஏனெனில் இது பற்களின் எனாமல் பாதிக்கும். எனவே வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம்.

காய்கறிகள் மற்றும் பழங்கள் : அப்பிள், கரட், கொத்துமல்லி ஆகியவற்றை வாயில் போட்டு மென்று வந்தாலே போதும். அதனால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, பற்களின் மீது உள்ள மஞ்சள் கறைகள் நீங்கிவிடும்.

ஆயில் புல்லிங் : 1 ஸ்பூன் சுத்தமான ஆர்கானிக் எண்ணெய்யை எடுத்து வாயில் ஊற்றி வாய் முழுதும் எண்ணெய்யை சுழற்றி, உறிஞ்சி பற்களில் படும்படி நன்றாக 15-20 நிமிடங்கள் தொடர்ந்து கொப்பளிக்க வேண்டும்.அதன் பின் நீரால் வாயை கழுவி, 2-3 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஸ்ட்ரா : காபி, டீ, சோடா, ஒயின் போன்றவை பருகுவதால், பற்களை சேதமடையும். அதனால் அவற்றை பருகும் போது பற்களில் படாதவாறு ஸ்ட்ரா பயன்படுத்தலாம் அல்லது அவற்றை பருகிய பின் வாயை சுத்தமான நீரில் நன்கு கழுவலாம் அல்லது ப்ரஷ் பயன்படுத்தி சுத்தம் செய்ய வேண்டும்.

ஒலிவ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, அதனைக் கொண்டு தினமும் காலையில் பற்களை துலக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால், பற்கள் வெள்ளையாக ஜொலிப்பதை உணர்வீர்கள்.வேப்பிலையை பால் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து, அதனை பேஸ்ட் உடன் சேர்த்துப் பயன்படுத்தி பற்களை துலக்க வேண்டும். இப்படி செய்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கி, பற்களும் வெள்ளையாகும்.

பால் மற்றும் தயிரை ஒன்றாக கலந்து, அதனைப் பயன்படுத்தி பற்களை துலக்கி, 15 நிமிடம் ஊற வைத்து, பின் சுத்தமான நீரால் வாயை கொப்பளிக்க வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வந்தாலும் நல்ல பலனைப் பெறலாம்.

பிரியாணி இலையை பொடி செய்து, அதில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனைக் பொண்டு பற்களை தேய்த்து 10 நிமிடம் கழித்து வாயை கொப்பளிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், பற்களை வெண்மையாகும்.

மஞ்சளை பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு பற்களை தேய்த்து, 3 நிமிடம் கழித்து கழுவ வேண்டும், இப்படி செய்தாலும் பற்கள் வெள்ளையாகும்.

ராமராஜன் பற்றி நடிகை நளினி சொன்ன உருக்கமான தகவல்!!

 

வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகை நளினி, அதன்பின்னர் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்தார்.சீரியலில் ஆரம்பம் ஆன போது மோசமான மாமியாராக நடித்ததால், பலரும் வசைபாட ஆரம்பித்ததால் சீரியசான ரோல்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

அவர் கூறுகையில், நான் சின்னத்திரையில் அடியெடுத்து வைத்த போதே மோசமான மாமியாராக நடித்தேன். வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்த, அப்படியே இருப்பேன் என்பதால் வீட்டில் உள்ள பிள்ளைகள் அம்மா நீங்கள் இப்படி இருக்காதீங்க, நீங்கள் நெகடீவ் ரோல் பண்ண வேண்டாம் என்று கூறினர்.

அதன்பின் குறைத்துக் கொண்டேன், என்னுடைய பிள்ளைகள் தான் எனக்கு எல்லாம், தனியாக குழந்தைகளை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.தற்போது அவர்கள் பெரியவர்களாக மாறி தனித் தனியாக குடும்பம் நடத்தும் போது பார்ப்பதற்கே அழகாக உள்ளது.

இருந்த போதிலும் அவர்களை நான் முதல் முறை பிரிந்த போது எனக்கு அழுகை வந்துவிட்டது.மிகவும் கஷ்டமாக இருந்தது, இப்போ அவர்கள் என்னை பார்த்து விட்டு கிளம்பும் போது அழுதுகிட்டு செல்கின்றனர், வாழ்க்கை என்றால் அப்படித் தான் என்று கூறியுள்ளார்.

மேலும் முன்னாள் கணவரும் நடிகருமான ராமராஜனைப் பற்றி கூறுகையில், நானும் அவரும் தற்போது வரை நல்ல நண்பர்களாக இருக்கிறோம், சில தினங்களுக்கு முன்னர் என் பேரனுக்கு கிடா வெட்டி மொட்டை போட்டார்கள்.

நான் படப்பிடிப்பின் காரணமாக பிஸியாக இருந்ததால், என்னால் போக முடியவில்லை, அந்த இடத்திற்கு ராமராஜன் சென்று அனைத்தையும் நல்ல படியாக செய்து முடித்தார்.என் பசங்க என் மேலே எவ்வளவு அன்பா இருக்கிறாங்களோ, அப்படித்தான் அவரிடமும் இருக்காங்க என்று கூறி முடித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரபல தென்னிந்திய நடிகர்!!

 

சுற்றுலா விஜயத்தை மேற்கொண்டு பிரபல தென்னிந்திய நடிகர் சுபு (பஞ்சு சுபு) தமிழகத்திலிருந்து இலங்கையின் நுவரெலியாவுக்கு வருகை தந்துள்ளார். தமது குடும்பம் சகிதம் முதன்முறையாக இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள நடிகர் சுபு,

நுவரெலியாவில் வசந்த கால நிகழ்வுகளை பார்வையிட்டதுடன், சீத்தாஎலிய அம்மன் ஆலயம், றம்பொட ஆஞ்சிநேயர் ஆலயம் உட்பட கண்டி மற்றும் பல பிரதேசங்களுக்கு விஜயத்தை மேற்கொண்டு ஆலய வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்.

இவ்வாறு விஜயத்தை மேற்கொண்ட இவர் இன்று மதியம் 2 மணியளவில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை – பத்தனை கிறேக்கிலி தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டு அங்குள்ள தேயிலை தொழிற்சாலையின் தொழில் நடவடிக்கைகளையும் பார்வையிட்டுள்ளார்.

சிறுமியின் வாழ்க்கையை மாற்றிய பிரதி அமைச்சர் : நெகிழ்ச்சியான சம்பவம்!!

கம்பஹா – கனேமுல்ல பகுதியில் சந்தலி சமோத்யா சத்சரணி என்ற பாடசாலை மாணவி கல்வி பயில கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஊடாக பாடசாலை ஒன்றை பெற்றுக்கொடுக்க பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த சிறுமிக்கு, அவர் கல்வி கற்று வந்த பாடசாலை அதிபர் மற்றும் வகுப்பாசிரியர் ஆகியோரால் பெரிய அநீதி இழைக்கப்பட்டு வந்துள்ளதாக ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரஞ்சன் ராமநாயக்க,

“மிகவும் திறமையான மாணவியான இந்த சிறுமி வகுப்பில் எப்போது முதலாம் இடத்தையே பெற்று வந்துள்ளார். மருத்துவராக வர வேண்டும் என்பதே அவரது கனவு. இந்த பிள்ளைக்கு நேர்ந்த அநீதி குறித்து கேட்டபோது எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர், மனிதநேயமிக்க அமைச்சர் அகில விராஜ்காரியவசம்.

இதற்கு முன்னரும் இப்படியான பிள்ளைகள் குறித்து அறிந்து நான் அமைச்சரை தொடர்பு கொண்ட சந்தர்ப்பங்களில் அந்த பிள்ளைகளுக்கு கல்வி கற்க பாடசாலை மட்டுமல்லாது, கொடுப்பனவுகளையும் அவர் வழங்கியுள்ளார். அத்துடன் சில பெற்றோருக்கு வீடுகளை தேடிக்கொடுத்து அதற்கான வாடகையையும் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இன்று காலையும் நான் அமைச்சரை தொடர்பு கொண்டு குறித்த மாணவி தொடர்பில் தெரிவித்து “ நான் வரவா?” எனக் கேட்டேன். அதற்கு, காலம் தாழ்த்தாது உடனடியாக வருமாறு கூறினார். இவ்வாறுதான் தற்போது கல்வியமைச்சில் பணிகள் சிறப்பாக நடக்கின்றன.

அத்துடன் இந்த பிள்ளையின் தந்தைக்கும் பாடசாலையில் தொழில் ஒன்றையும் அமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார். இதனால், கல்வி அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக” குறிப்பிட்டுள்ளார்.

“எமது சமூகத்தில் இப்படியான பல குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சமூக வலைத்தங்களில் தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

அமைச்சர் அவற்றுக்கு எதிராக பேசினார். அவர்களுக்கு பாடம் கற்பிக்கும் வகையில், அந்த குழந்தைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக்கொடுத்துள்ளீர்கள்.

இன்றும் இந்த பிள்ளையின் பெற்றோர் வழங்கிய கடிதத்தை நான் உங்களிடம் கையளிக்கின்றேன். உறுதியளித்ததை போல் நீங்கள் செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றேன். அமைச்சருக்கு மிக்க நன்றி” எனவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கனேமுல்ல பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவியின் தாய் எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் பாடசாலையின் ஆசிரியர், அதிபர் மற்றும் ஏனைய மாணவர்களின் பெற்றோர்கள், குறித்த மாணவிக்கு எதிராக கடுமையான எதிர்ப்பு வெளியிட்டதுடன், அந்த மாணவி பாடசாலையில் கல்வி கற்கும் வாய்ப்பை இழந்திருந்தார். இந்த மாணவிக்கே பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க உதவி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகரசபையினருடன் முஸ்லிம் வர்த்தகர்கள் முறுகல்!!

வவுனியா நகரசபை பொதுசுகாதார உத்தியோகத்தர்களுக்கும் முஸ்லிம் வர்த்தகர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வியாபார நிலையங்களை அகற்றும் செயற்பாட்டில் குறித்த அதிகாரிகள் ஈடுபட்ட போதே இந்த முறுகல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியோரங்களில் சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக நிலையங்களை அகற்றும் நடவடிக்கை வவுனியா நகரசபையினாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதன் ஒரு கட்டமாக இன்று (19.04.2018) வவுனியா குருமண்காட்டு பகுதியிலுள்ள முஸ்லிம் வர்த்தகர் ஒருவருடைய சட்டவிரோத வியாபார நிலையம் ஒன்றினை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட நகரசபை பொதுசுகாதார உத்தியோகத்தர்கள், வரி பரிசோதகர்கள், நகர சபை ஊழியர்களின் செயற்பாட்டினை தடுக்கும் விதமாக அப்பகுதி முஸ்லிம் வர்த்தகர்கள் நடந்ததுடன், அவர்களை அச்சுறுத்தும் செயற்பாட்டையும் மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவ்வர்த்தகர்கள் பிரதேசவாதத்தை ஏற்படுத்தும் வகையில் நகரசபை உத்தியோகத்தர்களுடன் பேசியமையால் அங்கு குழுமியிருந்த மக்களுக்கும் குறித்த முஸ்லிம் வர்த்தகர்களுக்குமிடையிலும் முறுகல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக இதய மாற்று சிகிச்சை செய்த பெண்ணின் நிலை!!

இலங்கையில் முதல் முறையாக இதய மாற்று சிகிச்சை செய்து கொண்ட பெண் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சைகள் மேற்கொண்ட பெண் 10 மாதங்களின் பின்னர் தற்போது வீடு திரும்பியுள்ளார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் புத்தாண்டை கொண்டாடுவதற்காக அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் இணைந்துள்ளனர். அவர் வழமை போன்று செயற்பட்டு வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது இவர் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிகிச்சைகள் மேற்கொண்ட பெண் 10 மாதங்களின் பின்னர் வீடு திரும்பியுள்ளார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றவர் பின்னர் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.