இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு தீர்வை வரி அறவிடப்படும் நிலையில் இலங்கையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் நேற்று அக்ஷய திருதியை கொண்டாடப்பட்டது. அதையடுத்து இன்று தங்கத்தின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
24 கரட் தங்கத்தின் வலை 7,000 ரூபாவாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6,000 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. செட்டியார் தெருவில் இன்றைய தினம், 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 62,000 ரூபாய். நேற்றைய தினம் 55,000 ரூபாவாக காணப்பட்ட 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 7,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இன்று 62,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 57,000 ரூபாய். நேற்றைய தினம் 51,000 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 6,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இன்று 57,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றது.
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரி அறவிடப்படும் என நிதியமைச்சு நேற்று அறிவித்திருந்தது. இதன் காரணமாகவே இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
ஹொரணை – பெல்லபிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள இறப்பர் தொழிற்சாலையொன்றில் பாரிய வெடிப்புச்சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இன்று பிற்பகல் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதில் உயிரிழந்த நான்கு பேர் பிரதேசவாசிகள் எனவும் மற்றைய நபர் தொழிற்சாலையில் வேலை செய்யும் நபர் என்றும் குறிப்பிடப்படுகின்றது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஏனையோர் ஹொரணை வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் தெரியவருவதாவது,
இன்று மதியம் குறித்த தொழிற்சாலையின் அமோனியா களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த தாங்கியொன்றில் விழுந்த நபரை காப்பாற்ற குழுவொன்று சென்றுள்ளது.
இதன்போது ஏற்பட்ட தீ விபத்தால் 15 பேரும் மயக்கமுற்று தாங்கியில் விழுந்துள்ளனர். அவர்களை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதில் ஐவர் உயிரிழந்ததுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா வெளிவட்ட வீதி அருள்மிகு ஸ்ரீ சிந்தாமணி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் எதிர்வரும் 20.04.2018 வெள்ளிகிழமை அதாவது நாளை காலை 10.00 மணியளவில் வேதாகம சுரபி ஸ்ரீ குமாரஸ்ரீகாந்த குருக்கள் தலைமையில் கொடிஏற்றதுடன் ஆரம்பமாகவுள்ளது.
மேற்படி மகோற்சவத்தில்
27.04.2018 வெள்ளிகிழமையன்று மாலை 7.00 மணியளவில் சப்பர திருவிழா
28.04.2018சனிக்கிழமையன்று காலை 8.30 மணியளவில் தேர்திருவிழா
29.04.2018 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9.00 மணியளவில் தீர்த்த திருவிழாவும் இடம்பெறுகிறது .
சிரியாவில் சமீபத்தில் நடந்த தாக்குதல்களை யாரும் எளிதில் மறக்க முடியாது. அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகள் இதை மேற்கொண்டன, இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்ததால் அமெரிக்கா – ரஷ்யா இடையில் மோதல் போக்கும் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே வடகொரியா – அமெரிக்கா மோதல் போக்கானது சில காலமாகவே இருந்து வருகின்றன. இந்த விடயங்கள் காரணமாக மூன்றாம் உலக போர் ஏற்படக்கூடிய காலம் வந்துவிட்டதாகவே நம்பப்படுகிறது. சரி, மூன்றாம் உலக போர் தொடங்கி, அணுகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டால் மக்கள் எப்படி தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்?
கெட்டுபோகாத உணவுகள், தண்ணீர், எங்கிருந்தாலும் செய்திகளை அறிந்து கொள்ள ரேடியோ, டார்ச் லைட்டுகள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை எப்போதும் நாம் வைத்து கொள்ள வேண்டும்.
நமது குடும்பத்துடன் அவசரகால திட்டம் குறித்து ஆலோசிக்க வேண்டியது அவசியம். ஏனெனில் தாக்குதல் நடந்தால் நம் குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் பிரிய நேரலாம், அது போன்ற சமயத்தில் எப்படி ஒருவரையொருவர் தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்து கொள்ள வேண்டும்.
நீங்கள் வசிக்கும் பகுதியின் அருகில் முக்கிய கட்டிடங்கள் உள்ளனவா என தெரிந்து வைத்து கொள்ள வேண்டும், ஏனெனில் அது போன்ற கட்டிடங்களில் தான் தாக்குதல்கள் முதலில் நடத்தப்படும்.
அணுகுண்டு வெடிப்பு சமயத்தில் என்ன செய்ய வேண்டும்?
டிவி, ரேடியோ, இணையம் போன்றவற்றில் இது குறித்து செய்திகள் உடனுக்குடன் வரும் நிலையில் அதை தொடர்ந்து கவனித்து அதன்படி செயல்பட வேண்டும்.
தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டால் எங்காவது பதுங்கி கொள்வது நலன் பெயர்க்கும்.
இது போன்ற சமயத்தில் பயப்படாமல் தைரியமாக செயல்பட வேண்டியது நல்லது. அதிகாரிகள் மற்றும் அரசால் அணுகுண்டு வெடிப்பு குறித்த எச்சரிக்கை நீக்கப்படும் வரை வெளியிடங்களில் நடமாடாமல் இருப்பது நல்லது.
வெளியிடங்களில் சிக்கி கொண்டால் என்ன செய்வது?
அணுகுண்டு வெடிப்பு சமயத்தில் பொது இடங்களில் நாம் இருக்கும் பட்சத்தில் எங்காவது நெருப்பை கண்டால் அந்த பக்கம் செல்லக்கூடாது. எங்காவது வெடிகுண்டு சத்தம் கேட்டால், அந்த பக்கம் போகக்கூடாது, இதோடு தரைப்பகுதியில் தலை வைத்து சாய்ந்து கொள்வது நலம்.
முடிந்தவரை நமது இருப்பிடத்தை சீக்கிரம் அடைவது நலம் பெயர்க்கும்.
கதிரியக்க பொருட்கள் நம்மை தாக்குவது போல உணர்ந்தால் நமது வெளிப்புற ஆடையை உடனடியாக கழட்டிவிட வேண்டும், ஏனெனில் ஆடை இருந்தால் கதிரியக்க விடயங்கள் உடனடியாக நமது உடலில் பரவி விடும்.
நெருப்பில் சிக்கி கொள்ளும் பட்சத்தில் உடனடியாக தண்ணீர் இருக்கும் இடத்தை தேடி சென்று அதில் நம் உடலில் நெருப்பு பட்டுள்ள இடத்தை நனைக்க வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக எந்த நேரத்திலும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் இழக்கக்கூடாது.
எகிப்தில் திருமண மேடையில் வைத்தே மணமகன் விவாகரத்து கேட்ட சம்பவம் மணமகள் குடும்பத்தாரை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. எகிப்து நாட்டில் புறநகர் பகுதி ஒன்றில் பெற்றோர் சம்மதத்துடன் அந்த திருமணம் கோலாகலமாக நடந்துள்ளது.
திருமணம் முடிந்த நிலையில் மணமக்கள் இருவரும் தேநிலவை கொண்டாடும் வகையில் தங்கள் வாகனத்தில் புறப்பட தயாராக இருந்துள்ளனர். அப்போது மணமகளின் தாயார் காரின் அருகாமையில் வந்து, தமது மகளுடன் ஒரு நிமிடம் பேச வேண்டும் எனவும், அவளுக்கு கடைசியாக பிரியாவிடை கூற வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மணமகன், இதுவரை அனைத்து நாளும் அவள் உங்களுடனே தானே இருந்தாள், தற்போது அவளிடம் பிரியாவிடை கூற வேண்டிய அவசியம் இல்லை என சத்தமிட்டு கத்தியுள்ளார். இந்த களேபரத்தை கண்டு மணமகளின் மாமனார் ஒருவர் மணமகனை அணுகி சமாதானம் செய்துள்ளார்.
ஆனால் அந்த முயற்சியும் வீணானது. இதனிடையே கோபத்தில் அலறிய மணகன் வாகனத்தில் இருந்து வெளியே குதித்து, தமக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும்,ம் விவாகரத்து உடனே வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
மணமகனின் இந்த பேச்சை கேட்ட மணமகள் குடும்பத்தினர் அடிதடியில் இறங்கியுள்ளனர். திருமண மண்டபத்தின் வெளியே குழுமியிருந்த இரு குடும்பத்தாரும் அந்த சண்டையில் ஈடுபட்டனர்.
இதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கும் கொண்டு சேர்ப்பித்துள்ளனர். இந்த களேபரத்தின் இடையே மணமகள் தமது தாயாருடன் தனது குடியிருப்புக்கு கிளம்பி சென்றுள்ளார்.
ஆனால் மணமகன் அவருடன் செல்ல மறுத்துள்ளார். தமக்கு விவாகரத்து வேண்டும் என்றே அவர் அடம்பிடித்துள்ளதாக அரேபிய நாளேடு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு மட்டும் எகிப்தில் விவாகரத்து எண்ணிக்கையானது நகர் புறங்களில் 60.7 விழுக்காடும், கிராமங்களில் 39.3 விழுக்காடும் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இங்கு விவாகரத்துக்கு முக்கிய காரணியாக கூறப்படுவது, பொருளாதார சிக்கல்கள், மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு, பொறுப்பின்மை, போதை மருந்து மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் மோதல் போக்கு என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கர்ப்பிணி காதலியை கொலை செய்து சடலத்தை சூட்கேசில் அடைத்து வைத்த காதலன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். குயிண்டின் நீல் (27) என்ற இளைஞரும் ஷனோன் மணி (21) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில், ஷனோன் மணி கர்ப்பமாகியுள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஷனோன் மணி அங்குள்ள ஒரு சேமிப்பு கிடக்கில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சூட்கேசின் உள்ளே அவரின் சடலம் வைக்கப்பட்டிருந்தது. சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய பொலிசார் சந்தேகத்தின் அடிப்படையில் மணியின் காதலன் நீலை பிடித்து விசாரித்தார்கள்.
ஆரம்பத்தில் மணியை சம்பவம் நடந்த அன்று தான் பார்க்கவில்லை என கூறிய நீல், பின்னர் பொலிசாரின் கிடுக்குபிடி விசாரணையின் அவரை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.
நீல் அளித்துள்ள வாக்குமூலத்தில், மணியின் வீட்டுக்கு நான் சென்ற போது எங்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது என்னிடமிருந்த துப்பாக்கியை பிடுங்கி என்னை மணி சுட பார்த்தார், ஆனால் சுதாரித்து கொண்ட நான் மணியிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கி அவரை இரண்டு முறை சுட்டேன்.
இதையடுத்து கீழே விழுந்த மணி மீண்டும் அங்கிருந்த கத்தியை எடுத்து என்னை குத்த வந்தார், ஆனால் நான் கத்தியை அவரிமிருந்து பிடுங்கி அவரை வெட்டியதில் இறந்துவிட்டார்.
பின்னர் மணியின் சடலத்தை சூட்கேசில் வைத்து காரில் எடுத்து போய் சேமிப்பு கிடங்கில் போட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதை தொடர்ந்து நீலை பொலிசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தியாவில் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை 22 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் துவாரகா பகுதியில் வசிப்பவர் அமான்(20). தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இவர், ஒருநாள் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது, தனது தாயுடன் ஒருவர் வாக்குவாதம் செய்வதைக் கண்டுள்ளார்.
அவர்கள் பேசிக் கொண்டதன் மூலம், அந்நபர் தனது தாயுடன் தகாத உறவு வைத்திருந்ததை அமான் அறிந்து கொண்டார். அதன் பின்னர், அங்கிருந்து சென்றுவிட்ட ராஜூ(40) என்ற அந்த நபர் சில நாட்கள் அமானின் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.
எனினும், மீண்டும் அமான் வீட்டிற்கு சென்ற ராஜூவை, அமான் கடுமையாக எச்சரித்துள்ளார். ராஜூவும் இனி தான் வரமாட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில், ராஜூ தனது நடவடிக்கையை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த அமான், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
ராஜூ குறித்து தனது அலுவலக நண்பர்களிடம் அமான் கூறியவுடன், அவர்களும் கொலை திட்டத்திற்கு உதவி புரிவதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தனது நண்பர்களுடன் ராஜூவை சந்தித்த அமான், அவரை கடுமையாக தாக்கியுள்ளார். அதன் பிறகு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 22 முறை ராஜூவை குத்தி கொலை செய்துள்ளார்.
பின்னர், அங்கிருந்து மூன்று பேரும் தப்பியோடி விட்டனர், கத்திக் குத்தால் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜூவைக் கண்ட பொதுமக்கள் சிலர், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்துள்ளார்.
இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அமானுக்கு உதவி செய்தவர்கள் ஆசிஷ்(21), சஹில்(19) என்பது தெரிய வந்தது.
அதன் பின்னர், அமானின் வீட்டை மறைமுகமாக கண்காணித்த பொலிசார், அமான் வீட்டிற்கு வரும் நேரம் பார்த்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து, அமானின் நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார். பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பராபட்சம் இன்றி ஆண்களின் காமப்பெருமூச்சுகளால் சுட்டெரிக்கப்படுகின்றனர். நிர்பயா என்ற மாணவி முதல் சமீபத்தில் 8 வயது சிறுமி ஆஷிபா வரை இதற்கு உதாரணம்.
2012ம் ஆண்டில் 24 ஆயிரத்து 923 பெண்கள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 707 ஆக 2013ம் ஆண்டில் அதிகரித்துள்ளது.
இந்தியாவிலேயே டெல்லியில் தான் பெண்கள் அதிகமாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலாத்காரத்திற்கு எதிரான கடுமையான சட்டங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் துச்சமாக நினைக்கும் ஆண்கள் இந்த சமுதாயத்தில் ஏராளம். வளர்க்கப்பட்ட விதமும், அவர்களது மனோபாவமும்தான் ஆண்கள் இதுபோன்ற சீண்டல்களில் ஈடுபடுவதற்கு அதிக காரணம்.
ஆணாதிக்கம் நிறைந்த இந்தியாவில், பல பெண்கள் தங்கள் கணவர் பெயரைக்கூட நேரடியாகச் சொல்வதில்லை என்பதிலிருந்து, இந்தியச் சமூகத்தில் ஆண்கள் தங்களை எந்த அளவுக்கு ஆதிக்க நிலையில் வைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
இதனை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொள்ளும் ஆண்கள் ஒரு பக்கம் என்றால் போதை வஸ்துகளால் தங்களது நிலையை மறக்கும் ஆண்கள், தங்கள் கண்ணெதிரில் இருப்பது சிறு குழந்தைதானா என்பது கூட அறியாமல், அரக்க வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
அதிகமாக பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு, பெண்கள் உடுத்தும் ஆடைகள் தான் காரணம் சில சமூகஆர்வலர்கள் காரணம் தெரிவித்தாலும், அதனை பார்க்கும் விதத்திலும் அந்த ஆணின் பங்களிப்பு இருக்கிறது.
ஆடை காரணமா?
பெண்களுக்காக பிரத்யேகமான முறையில் பல்வேறு ஆடைகள் இருந்தாலும், எந்த ஆடை அவர்களுக்கு கவர்ச்சியாக இருக்கும் என்று யாரிடம் கேட்டாலும் “சேலை” என்ற தான் பதில் அளிப்பார்கள். ஏனெனில், சேலை தான் பெண்களின் உடல் பாகங்களை தனித்தனியாக பிரித்து காட்டுகிறது. இதனால் பெண்களை சேலையில் பார்த்தவுடன் ஆண்களுக்கு மிகவும் பிடித்துவிடுகிறது.
பெண்களின் ஆடை ஆண்களை தூண்டுவதால் தான் ஆண்கள், அவர்களை பலாத்காரம் செய்கின்றனர் என்ற கருத்து பரவலாக கூறப்படுகிறது. ஆனால், ஆடை மட்டுமே ஒரு பெண்ணை பிடிப்பதற்கு காரணம் இல்லை. அப்படி பார்த்தால் பள்ளி சிறுமிகள் கூட பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர்.
மாறாக, பெண் பால் என்றால் ஆண்களுக்கு ஈர்ப்பு இருப்பது இயற்கையின் படைப்பு. அந்த ஈர்ப்பு ஆணுக்குள் கட்டுக்கடங்காமல் உணர்ச்சி பொங்கி எழும்நேரத்தில், ஒரு பெண்ணை பார்த்தால் அவனுக்கு பலாத்காரம் செய்ய தோன்றுகிறது.
ஒரு ஆண் எவ்வித காம உணர்வுகளும் இன்றி எந்த பெண்ணை பார்த்தாலும், அங்கு பலாத்காரம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
ஒரு ஆண் மிகவும் கவர்ச்சியான உடை அணிந்த பெண்ணை எந்த விதமான உணர்ச்சியும் இல்லாமல் தன் தாய், தங்கை, தோழி போல பார்க்கலாம். மற்றொருவன் முழுவதும் மூடிய உடையில் உள்ள பெண்ணைத் தவறான எண்ணத்திலும் பார்க்கலாம்.
இங்கு, பார்க்கும் பார்வையே வேறுபடுகிறதோ தவிர, ஆடைகள் எப்படி இருக்கிறது என்பது முன்வைக்கப்படவில்லை.
என்னதான், பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளால் ஆண்களை கவர்ந்திழுத்தாலும், இந்த ஆடை விடயம் என்பது இரண்டாம் விடயமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாறாக, ஆண் வர்க்கத்தால் பெண்கள் ஈர்க்கப்படுவதும், பெண் வர்க்கத்தால் ஆண்கள் ஈர்க்கப்படுவதும் பிறப்பில் உருவான ஒன்றே தவிர, உடலை மறைக்க பயன்படுத்தும் ஆடைகள் கிடையாது.
உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி விண்மீன்கள் அமைப்பினரால் விழிப்புணர்வு வாகனப்பேரணியொன்று இடம்பெறவுள்ளதாக வவுனியாவில் இன்று (19.04.2018) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அமைப்பின் தலைவர் நகுலேஸ்வரன் புவிகரன் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உணவு வீண்விரயமாவதை தடுக்கும் நோக்குடன் வீண்மீன்கள் அமைப்பை உருவாக்கி இல்ல, பொது நிகழ்வுகளில் மேலதிகமாகவுள்ள உணவுகளை பெற்று மக்களுக்கு வழங்கி வருகின்றோம். விண்மீன்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் பல கோடி பெறுமதியான உணவுகள் மக்களுக்கு வழங்கியுள்ளோம்.
இதற்குரிய புகைப்படங்கள் ஊடகங்கள் ஊடாகவும் சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் நீங்கள் அறிந்தவையே. இந்த நிலையில் முழுமையாக உணவு வீண்விரயமாவதினை தடுக்கும் நோக்குடனும் மக்களுக்கு உணவின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் நோக்குடனும் “விண்மீன்களின் விழிப்புணர்வு நகர்வலத்துடன் கையெழுத்திடும் நிகழ்வு” 21,22,23 ஆகிய தினங்களில் வடக்கின் வாயிலான வவுனியாவிலிருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணிக்கவுள்ளது.
வாகனப் பேரணி செல்லும் சமயத்தில் மக்கள் ஆகிய உங்களின் பங்களிப்பானது மிக அவசியமானது. எனவே நீங்களும் இந்த நிகழ்வில் பங்களிப்பு செய்வதுடன் கையெழுத்து வேட்டையிலும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டு குழு சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
“உணவு வீண்விரயத்தினை தடுக்க வேண்டும்” என்ற தொனிப்பொருளில் உருவாக்கப்பட்ட விளம்பர பதாதைகளை தாங்கிய எமது விளம்பர வாகன பேரணியின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (21.04.2018) காலை 8.00 மணிக்கு வவுனியா பழைய பேரூந்து நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இப் பேரணியானது ஏ9 வீதியூடாக ஓமந்தை , புளியங்குளம், கனகராயன்குளம், மாங்குளம் , முருகண்டி, இரணைமடு ஊடாக அன்றைய தினம் மாலை கிளிநொச்சி நகரத்தினை சென்றடையவுள்ளது.
அடுத்த தினம் ஞாயிற்றுக்கிழமை (22.04.2018) அன்று காலை 8 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பமாகி தொடர்ந்து ஏ9 வீதியுடாக பரந்தன், இயக்கச்சி, பளை, கொடிகாமம், சாவக்கச்சேரி, கைதடி ஊடாக யாழ்ப்பாண மாவட்ட செயலத்தினை சென்றடையவுள்ளது.
இதன் மறுதினம் (23.04.2018) திங்கட்கிழமை அன்று காலை 8 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அன்றைய நாள் நிகழ்வுகள் ஆரம்பாகி யாழ் மத்திய பேரூந்து நிலையம், நாச்சிமார் கோவிலடி, நல்லூரடி, திருநெல்வெலி, மருதானர்மடம், கோப்பாய், புத்தூர், நெல்லியடி, மந்திகை ஊடாக பருத்தித்துறை நகரை சென்றடைந்து பேரணி நிகழ்வுகள் நிறைவடையவுள்ளது.
இதனுடாக சேகரிக்கப்பட்ட கையெழுத்துக்களின் பிரதிகள் வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் கையளிக்கவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சொந்த மகளையே தந்தை கழுத்தறுத்து கொலை முயற்சி செய்துள்ள சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வில்லிப்பத்திரி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார்.
12-ஆம் வகுப்பு படித்து வரும் ராஜேஸ்வரி சிவகாசியைச் சேர்ந்த விஜயகுமார் (24) என்பவரை காதலித்து வந்துள்ளார். மகளின் நடவடிக்கையை கவனித்த தந்தை அவர் காதலிப்பதை கண்டுபிடித்துள்ளார். அதன் பின் அவரையும்அந்த இளைஞரையும் முனியாண்டி எச்சரித்துள்ளார்.
இதனால் இருவரும் பேசி பழகுவதை நிறுத்தியுள்ளனர். இந்நிலையில் ராஜேஸ்வரி சமீபத்தில் தேர்வுகள் எழுதி முடித்ததால், மீண்டும் அவருடன் பேச ஆரம்பித்துள்ளார். அப்போது அந்த இளைஞனிடம் மாணவி எந்த கல்லூரியில் சேருவது என்பது குறித்து பேசியுள்ளார். தனது மகள் மீண்டும் அந்த இளைஞருடன் பேசுவதை அறிந்த தந்தை, ஆத்திரமடைந்துள்ளார்.
உடனே தனது மகளை கண்டித்த முனியாண்டி, நீ சொன்னால் திருந்த மாட்டாயா, நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறியா, நீ இனி இருக்கக்கவே கூடாது என திட்டியுள்ளார்.
ஆனால் மாணவி இவரின் பேச்சை காது கொடுத்த கேட்காத காரணத்தினால் கோபத்தின் உச்சிக்கு சென்ற அவர் கத்தியை எடுத்து தனது மகளின் கழுத்தை அறுத்துள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து முனியாண்டியை தடுத்துள்ளனர். இருப்பினும் மாணவி கடுமையாக பாதிக்கப்பட்டதால், அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில், பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவில் வைர வியாபாரியின் 12 வயது மகன் ஜெயின் துறவறம் மேற்கொள்ளவுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் திபேஷ் ஷா. வைர வியாபாரியான இவரின் மகன் பவ்யா ஷா (12). பிறந்ததிலிருந்தே சொகுசாக வளர்ந்துள்ளார். பவ்யா தனது பெற்றோர் சம்மதத்துடன் இன்று ஜெயின் துறவியாக தீக்ஷை எடுக்கவுள்ளார்.
இது குறித்து பவ்யா கூறுகையில், கடவுள் காட்டிய சத்திய பாதையை நோக்கி செல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். என் பெற்றோர் இதை எனக்கு சொல்லி கொடுத்ததால் அவர்கள் சம்மதத்துடனே அவர்களை பிரிகிறேன், வருங்காலத்தில் என் பெற்றோரும் துறவறம் மேற்கொள்வார்கள் என கூறியுள்ளார்.
பவ்யாவின் தந்தை திபேஷ் கூறுகையில், எங்கள் மகன் தீக்ஷை எடுப்பது எங்கள் குடும்பத்துக்கு மகிழ்ச்சியாகும். அவனை பிரிவதால் எங்களுக்கு வருத்தமில்லை, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் இதே 12 வயதில் என் மகளும் ஜெயின் துறவியாக சென்றுவிட்டார் என கூறியுள்ளார்
தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்காக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து, தண்டனை பெற்றுத்தருமாறு இலங்கை அகதி ஒருவர் இராமநாதபுரம் மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
இலங்கையிலுள்ள வயதான தன் தந்தையுடன் இறுதிக்காலத்தை கழிக்க இலங்கை செல்ல வேண்டும் என்பதற்காகவே இவர் தன் மீதான வழக்கை விரைவில் முடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். சிலாபம் பகுதியை சேர்ந்த 46 வயதுடைய கஜேந்திரநாத் (டேவிட்) என்ற நபரே மனு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இலங்கையில் நடந்த விபத்தில் காயமடைந்த கஜேந்திரநாத்திற்கு இரத்தம் ஏற்றியபோது அதன்மூலம் எச்.ஐ.வி கிருமி தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் எச்.ஐ.விக்கு முறையான சிகிச்சையளிக்க மருத்துவ வசதி கிடைக்காத காரணத்தினால் கடந்த 2015ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக படகில் தமிழகம் சென்றுள்ளார். இவ்வாறு சென்றவரை மண்டபம் பொலிஸார் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்து பின்னர் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார்.
வெளியில் வந்த கஜேந்திரநாத் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி வைத்தியசாலையில் எச்.ஐ.வி. பாதிப்பிற்கு வெளிநோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
தங்க இடம் இல்லாததால் வைத்தியசாலை வளாகத்தில் தங்கியுள்ள கஜேந்திரநாத் தனக்கு இலங்கை அகதிகள் முகாமில் இடமளிக்குமாறு நெல்லை கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்றும் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இலங்கையில் வயது முதுமையால் அவதிப்படும் தந்தை சண்முகநாதனுடன் இறுதிக்காலத்தை கழிக்க விரும்பியுள்ளார். ஆனால் கள்ளத்தனமாக இந்தியா வந்த குற்றத்திற்கு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில், சிகிச்சைக்காக சட்டவிரோதமாக படகில் வந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் தன் மீதான குற்றத்திற்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை வழங்க வேண்டும்.
அவ்வாறு வழங்கினால் வழக்கை விரைவாக முடித்து இலங்கை சென்று தந்தையின் இறுதிக்காலத்தில் துணையாக இருக்க முடியும் என்ற காரணத்தினாலேயே மனு கொடுத்துள்ளார்.
இந்த கோரிக்கைக்காக இராமநாதபுரத்திற்கும், சிகிச்சைக்காக நெல்லைக்கும் தினமும் அலையாய் அலைந்து திரிந்து வருவதாகவும், தங்க இடமின்றி தவிப்பதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
மேலும், உடனடியாக தன் மீதான குற்றத்திற்கு விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும், அதுவரை தனக்கு தங்கியிருப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கஜேந்திரநாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கிலிருந்து தெற்கிற்கான நல்லுறவுப்பயணம் இன்று (19.04.2018) வன்னி பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில் வவுனியாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை நல்லுறவு, நம்பிக்கையடனான நல்லிணக்கம் என்பவற்றை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜெயசுந்தரவின் திட்டத்திற்கு அமைவாக வவுனியா மாற்றும் மன்னார் பொலிஸ் பிராந்தியங்களில் இருக்கக்கூடிய 22 பொலிஸ் பிரிவுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 44 உறுப்பினர்களுடன் தெற்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களுக்கு இச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச்சுற்றுலாவில் பங்கு பற்றுபவர்கள் பிரதேச மக்களால் வரவேற்கப்பட்டு உபசரித்து நினைவுப்பரிசில்களும் வழங்கி வைக்கப்படுவதுடன் கதிர்காமம், கிரி விகாரை, கதிரமலை, செல்ல கதிர்காமம், உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை தரிசிப்பதற்கும், காலி பிரதேசத்தில் புதுவருட நிகழ்வும், தம்புள்ள பிரதேசத்தில் கலாசார நிகழ்வும் மகியங்கனை மற்றும் தம்பனை பிரதேசத்தில் ஆதிவாசிகளுடனான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் ஏற்பட்ட வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்களில் பயணித்த இளைஞனே இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளார். அந்தப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட தனியார் பேரூந்தின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டமையால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பேரூந்தின் பின்பக்க சில்லுக்குள் சிக்கிய நிலையில் பலத்த காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்துடன் தொடர்புடைய தனியார் பேரூந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தாயார் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
யாழ். அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 57 வயதடைய சோதிலிங்கம் சாந்தகுமாரி என்பவரே இதில் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் நேற்று முன்தினம் தனக்குத்தானே தீ மூட்டிக்கொண்ட நிலையில் எரி காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இவர் நீண்டகாலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், அடிக்கடி தான் சாகப் போவதாக குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார். குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டிக் கொண்டார். இதையடுத்து குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை உயிரிழந்தார் என திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் தெரிவித்துள்ளார். பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போர் சூழலில் சிக்கியுள்ள சிரியாவில் தங்கள் படைகளை குவிக்க சவுதி அரேபியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிரியாவில் எழுந்துள்ள போர் அபாயத்தை கட்டுக்குள் கொண்டு வரவே இந்த முயற்சி எனவும் சவுதி அரேபிய தரப்பு தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போதைய சூழலில் சவுதியின் இந்த நீக்கமானது சிரியாவில் போர் ஆபாயத்தை மேலும் தீவிரப்படுத்தவே செய்யும் என சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர். சவுதி அரேபியாவின் இந்த நகர்வுக்கு பின்னால் அமெரிக்கா இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச நாளேடு ஒன்று சமீபத்தில் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் மற்றும் கட்டார் நாடுகளை சேர்ந்த தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிரியாவுக்காக பில்லியன் கணக்கில் டொலர்களின் பங்களிப்பு வேண்டும் எனவும், அதேபோன்று அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ உதவியும் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் கோரிக்கையை பரிசீலனையில் எடுத்துக் கொண்டுள்ளதாகவும், 2011 ஆம் ஆண்டு சிரியா போர் துவங்கிய காலகட்டத்தில் இருந்தே அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் Adel al-Jubeir தெரிவித்துள்ளார்.
சிரியாவுக்கு ராணுவத்தை அனுப்புவது என்பது இது முதன்முறை அல்ல எனவும், சர்வதேச கூட்டுப்படை ஒன்றை அமெரிக்கா அமைக்கும் எனில் அதில் சவுதி அரேபியாவும் பங்கு பெறும் என ஒபாமா காலத்திலேயே ஒப்பந்தம் அமைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று அமெரிக்க கூட்டுப்படைகள் சிரியா மீது திடீர் வான்வழி தாக்குதல் மேற்கொண்டதன் பின்னரே சவுதி குறித்த முடிவுக்கு வந்துள்ளது.
சிரியா மீதான தாக்குதலின் நோக்கம் வெற்றி பெற்றதாக அமெரிக்க ஜனாதிபதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், சிரியாவில் உள்ள முக்கிய ரசாயன ஆலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மட்டுமின்றி குறித்த தாக்குதலுக்கு முன்னர் ரஷ்யாவுடன் அமெரிக்க அதிகாரிகள் கலந்து பேசியதாகவும், ரஷ்ய ராணுவ தளவாடங்கள் மீதோ, ராணுவத்தினர் மீதோ எவ்வித அபாயமும் ஏற்படாதவாறு குறித்த தாக்குதல் இருக்க வேண்டும் என கவனமுடன் திட்டமிடப்பட்டதாகவும்,
அதனாலையே ரஷ்ய ஜனாதிபதி புடின் இதுவரை பகிரங்கமாக எவ்வித குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.