புதிய வருடத்தில் சிக்கலில் சிக்கப்போகும் நான்கு ராசிக்காரர்கள்!!

தற்போது மக்களிடையே கடவுள் பக்தியும், ஜோதிட நம்பிக்கையும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் தான் தற்போது பலர் எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் ஜோதிடர்களை சந்தித்து, தங்களது ஜாதகங்களைக் கொடுத்து நல்ல காலமா என்பதைப் பார்க்கிறார்கள்.

மேலும், ஜோதிடர்கள் தங்களுக்கு சாதகமாக என்ன கூறினாலும் அதை செய்யவும் தயாராக உள்ளனர். இது சிலருக்கு பொருந்தும், சிலருக்கு பொருந்தாமலும் இருக்கும். எந்த விடயங்களையும் முழு நம்பிக்கையுடன் செய்தால் வெற்றி நிச்சயம்.

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி பிறக்கும் புதிய வருடத்தில் (14.04.2018) இந்த நான்கு ராசிக்காரர்களுக்கும் பெருநஷ்டம் ஏற்பட போகின்றதாம். கொஞ்சம் அவதானமாக இருக்கவும்.

மேஷம்
விருச்சிகம்
மகரம்
கும்பம்

மேஷம்
இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மிகப்பெரிய இலட்சியவாதிகளாக இருப்பார்கள். தங்கள் தொழில் வாழ்க்கையிலும் அவர்கள் மூழ்கியிருப்பார்கள். பிறக்கும் புதிய வருடத்தில் பெருநஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் அவதாகமாக செயற்படுமாறு வாக்கிய பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருச்சிகம்
இவர்கள் மிகவும் உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பார்கள். இருப்பினும் அதனை வெளியே வெளிப்படுத்த மாட்டார்கள். ஆன்மீகத்திலும் நாட்டம் உடையவராக இருப்பார்கள். இந்த ராசிக்காரர்களும் உஷாராக இருக்க வேண்டும். பிறக்கும் புதிய வருடத்தில் பெருநஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

மகரம்
இந்த ராசிக்காரர்களும் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்து முடிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள். ஒரு சில தவறுவளினால் புதிய வருட ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு. நீங்களும் உஷாராக இருக்க வேண்டும்.

கும்பம்
தண்ணீர் குடத்தை அடையாளமாக கொண்ட கும்ப ராசிக்கார்கள் துணிச்சலானவர்கள். ஆனால் இந்த புது வருட ஆரம்பத்தில் நஷ்டம் ஏற்பட கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு. எல்லா விடயங்களிலும் கவனம் தேவை.

டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகள் வீசி சாதனை படைத்த வீரர்!!

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள இவர் தற்போது, டெஸ்ட் போட்டியில் அதிக பந்துகளை வீசிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கார்ட்னி வால்ஷ் 30,019 பந்துகள் வீசி சாதனைப் படைத்திருந்தார். வால்ஷ் கிரிக்கெட்டில் 519 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

ஆண்டர்சன் நியூசிலாந்திற்கு எதிரான 2 ஆவது டெஸ்டில் 50 ஓவர்கள் வீசினார். இதன்மூலம் 30,074 பந்துகள் வீசி வால்ஷ் சாதனையை முறியடித்துள்ளார். ஆண்டர்சன் 136 டெஸ்டில் 531 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக முத்தையா முரளீதரன் அதிக பந்துகள் வீசி முதல் இடத்தில் உள்ளார். இவர் 44039 பந்துகள் வீசி 800 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார்.

3 மாத கைக்குழந்தையை அடித்துக்கொன்ற தாய்!!

மூன்று மாத கைக்குழந்தை அழுது கொண்டு இருந்தபோது குடிபோதையில் தாய் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அசாம் மாநிலம் நாகோம் மாவட்டம் பொற்கொலா என்ற இடத்தை சேர்ந்தவர் ருப்ஜோதி. இவரது கணவர் கூலித்தொழிலாளி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 வயது மகள் இருக்கிறார். 3 மாதத்திற்கு முன்பு மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

ருப்ஜோதிக்கு குடிப்பழக்கம் உண்டு. கடந்த 31 ஆம் திகதி போதையில் இருந்த போது அவரது 3 மாத குழந்தை அழுது கொண்டே இருந்தது. குழந்தையை சமாதானப்படுத்த முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. தொடர்ந்து அழுதது.

இதனால் எரிச்சல் அடைந்த ருப்ஜோதி குழந்தையை சரமாரியாக அடித்தார். இதில் குழந்தை இறந்துவிட்டது. இதை மறைப்பதற்காக அந்த குழந்தையின் பிணத்தை அருகில் உள்ள குட்டையில் வீசிவிட்டார்.

பின்னர் வீட்டில் இருந்த குழந்தையை காணவில்லை என நாடகமாடினார். இதுபற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் குட்டையில் வீசப்பட்ட குழந்தையின் பிணம் தானாக மிதந்தது. பொலிஸார் பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். குழந்தையின் உடலில் காயங்கள் இருந்தன.

எனவே தாயார் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரிடம் விசாரித்த போது நான் தான் கொலை செய்தேன் என்று ஒத்துக்கொண்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பிரித்தானிய கடவுச்சீட்டு ஒப்பந்தம் : தயாரிப்பாளர்கள் முறையீடு!!

பிரெக்சிற்றுக்கு பின்னர் பிரித்தானியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு பிரான்ஸ் நிறுவனத்தை பயன்படுத்தும் தீர்மானத்துக்கு எதிராக பிரித்தானிய கடவுச்சீட்டு தயாரிப்பாளர்கள் முறையீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

புதிய கடவுச்சீட்டை தயாரிக்க பிரான்கோ-டச்சு நிறுவனமான ஜெமால்டோவுக்கு 490 மில்லியன் பவுண்ட்ஸூக்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு எதிராக பிரித்தானிய கடவுச்சீட்டு தயாரிப்பாளரான டி லா ரியூ நிறுவனம் முறையீடு செய்ய தயாராகி உள்ளது.

ஜெமால்டோ தரம் மற்றும் பாதுகாப்பு குறித்த சிறந்த வாய்ப்பை கொண்டிருப்பதாக கருதப்படுகின்ற நிலையில் ஜெமால்டோவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது. எனினும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

ஆனாலும் ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.

பிரித்தானியாவில் 1998ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட கடவுச்சீட்டுப் பயன்பாடே இருந்துவரும் நிலையில், பிரெக்சிற்றுக்குப் பின்னர், எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் புதிய கடவுச்சீட்டுகளை அறிமுகப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடவுச்சீட்டுகள் நீலம் மற்றும் தங்க நிறங்களை உடையதாக வடிவமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மனைவியின் தொலைபேசியை சோதனையிடும் ஆண்களுக்கு சிறை : சவுதி இளவரசர் அதிரடி!!

மனைவிக்கு தெரியாமல் அவரது கைத்தொலைபேசியை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்திருக்கிறது.

மிகவும் அதிக அளவில் இதற்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.

சவுதியின் முடி இளவரசராக முகமது பின் சல்மான் பதவியேற்றதில் இருந்து அங்கு நிறைய மாற்றங்கள் கொண்டு வருகிறார். முக்கியமாக பெண்களுக்கு நிறைய சுதந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கு அங்கு பாராட்டும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. பெண்களுக்கு இராணுவத்தில் சேர அனுமதியளித்து சவுதி முடி இளவரசர் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.

2018 மார்சில் இருந்து சவுதியில் தியேட்டர்கள் திறக்கப்படும் என்றார். 2018ல் இருந்து பெண்கள் கார் ஓட்ட சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

விரைவில் சவுதியில் பெண்கள் பர்தா அணிய கட்டாயம் இல்லை என்று சட்டம் கொண்டு வரப்படலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

தற்போது மனைவிக்கு தெரியாமல் அவர்கள் தொலைபேசியை எடுத்து சோதனை செய்யும் ஆண்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் சவுதி அரேபிய அரசு அறிவித்திருக்கிறது.

அதன்படி மனைவிக்கு தெரியாமல் அவர்களின் தொலைபேசியை எடுத்து பார்ப்பது, கேலரியை பார்ப்பது, சமூக வலைத்தள கணக்குகளை சோதனை செய்வது, யாருடன் பேசுகிறார் என்று சண்டை போடுவது எல்லாம் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இந்த குற்றத்திற்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படலாம். அதே சமயம் 85 லட்சம் முதல் 90 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படலாம்.

சவுதியில் சமீப காலங்களில் கைத்தொலைபேசி ரீதியாக நிறைய குற்றங்கள் நடைபெற்று வருகிறது. இதை இதன் மூலம் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

பெண்களின் சுதந்திர தேவை தான் இந்த சட்டத்திற்கு பின் முக்கிய காரணம் என்று முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

பெண்கள் அவர்கள் விருப்பப்படி இணையத்தை பார்க்க வேண்டும், அவர்களை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.

ஆண்களின் வேவு பார்க்கும் குணத்தை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

– One India-

யாழ். பருத்தித்துறை கொலை சம்பவம் : ஒருவர் கைது?

யாழ். வடமராட்சி கிழக்கு, அம்பன் கிராமத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அம்பன் – குடத்தனை பகுதியில் தனிமையில் வசித்து வந்த மகள் சடலமாகவும், தாயார் படுகாயங்களுடனும் மீட்கப்பட்டிருந்தனர்.

குறித்த வீட்டில் தாயும் மகளுமே வசித்து வந்த நிலையில் கொள்ளைக் கும்பல் ஒன்றே இந்த கொடூரச் செயலை செய்திருக்கும் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என செய்தி வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்டவர் உயிரிழந்தவர்களின் வீட்டில் உள்ள பனை மரத்தில் சீவல் தொழில் செய்பவர் என்றும் இவர் காலையில் தொழிலுக்குச் சென்ற சமயம் இச்சம்பவத்தை அயலாருக்கு அறிவித்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

எனினும் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸாரின் மோப்பநாயின் உதவியுடனேயே கைது செய்யப்பட்டார் என்று தெரிவிக்கப்படுகிறது.

நல்லதம்பி – ரேவதி (57 வயது) என்ற திருமணம் செய்யாத பெண் உயிரிழந்துடன், அவரது தாயார் நல்லதம்பி – இராசம்மா (வயது 75) பலத்த காயங்களுடன் பருத்தித்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர்களுக்கு விரோதிகள் என்று யாரும் இல்லாத நிலையில், மரணமடைந்தவரின் உடலில் வெளிக்காயங்கள் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

போலி கடன் அட்டைகளை தயாரித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது!!

போலி கடன் அட்டைகளை தயாரித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

போலி கடன் அட்டைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 400 அட்டைகளுடன் முன்னாள் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இன்று தெமட்டகொட பிரதேசத்தில் நடத்திய விசேட தேடுதல் வேட்டையின் போது குறித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரிடமிருந்து கடல் அட்டைகள் மற்றும் வெளிநாட்டு சிகரட் பக்கட்டுகள் உள்ளிட்டனவும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சந்தேக நபரின் வீட்டிலிருந்து சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பிரதம பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய குறித்த சந்தேக நபர் கடந்த 2007ஆம் ஆண்டு பணி இடைநிறுத்தத்திற்கு உள்ளாகியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரலாற்றிலேயே மட்டக்களப்பு பெண்ணுக்கு கிடைத்த வாய்ப்பு!!

லண்டனில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு – கோரளைப்பற்று பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த தாட்சாயிணி நிமலேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வரலாற்றிலேயே பொதுநலவய மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல் மட்டக்களப்பு பெண் என்ற பெறுமையை தாட்சாயிணி நிமலேந்திரன் பெற்றுள்ளார்.

வோர் சைலட் கொலன்ட் நிறுவனத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பு எஸ்கோ நிறுவனம் கடந்த நான்கு வருட காலமாக நடைமுறைப்படுத்தி வந்த சிறுவர் பங்களிப்பு மற்றும் சிறுவர் உரிமைகளுக்காக பரிந்துரை செய்தல் திட்டங்களில் இருந்து இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அப்பகுதியின் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் மற்றும் உதவி பிரதேச செயலாளர் உட்பட பலர் தாட்சாயிணியை சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், பயணம் குறித்து ஆலோசனையும் வழங்கியுள்ளனர்.

உறங்கிக்கொண்டிருந்த மகனை எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய்!!

அமெரிக்காவில் உறங்கிக்கொண்டிருந்த மகனை எழுப்வுதற்காக துப்பாக்கியை பயன்படுத்திய தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அரிசோனா மாகாணத்தில் ஷரோன் டாபின்ஸ் என்பவர் ஈஸ்டர் பண்டிகை அன்று தேவாலயம் செல்வதற்காக தனது 17 வயது மகனை எழுப்ப மின்சார துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளார்.

இக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட இவர், நான் துப்பாக்கியை இயக்கவில்லை என மறுத்தாலும், மகனின் காலில் தழும்புகள் இருந்ததை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சில நிபந்தனைகளுடன், ஷரோனை பொலிஸ் காவலிலிருந்து விடுவித்துள்ளார்.

கையை இழந்தாலும் தளராத நம்பிக்கையால் சாதித்த பெண்!!

அமெரிக்காவில் தனது இடது கையை இழந்த பெண்ணொருவர், அலைச் சறுக்கு விளையாட்டில் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார்.

அமெரிக்காவைச் சேர்ந்த அலைச் சறுக்கு வீராங்கனை Bethany Hamilton(28). இவர், தன்னம்பிக்கையால் சாதித்த பெண்மணியாக திகழ்ந்து வருகிறார்.

இவருக்கு 14 வயது இருக்கும் போது அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மிகப்பெரிய சுறா ஒன்று, இவரை தாக்கியதில் தனது இடது கையை இழந்தார்.

சுமார் 60 சதவித ரத்தம் இவரது உடலில் இருந்து வெளியேறியதால், Bethany உயிர் பிழைப்பதே கடினம் என்று மருத்துவர்கள் கருதினர்.

ஆனால், சற்றும் மனம் தளராத நம்பிக்கையை கொண்டிருந்த Bethany உயிர் பிழைத்தார். ஆனால், தனது பெற்றோர், தம்பிகள் போல அலைச் சறுக்கு வீராங்கனையாக வேண்டும் என்ற கனவை செயல்படுத்த முடியுமா என்ற எண்ணத்தில் இருந்துள்ளார் Bethany.

அவரைப் போலவே அனைவரும் நினைத்தனர். இந்நிலையில், ஒருநாள் கடற்கரையைப் பார்த்துக் கொண்டிருந்த Bethany, திடீரென தனது அலைச் சறுக்கு அட்டையை எடுத்துக்கொண்டு கடலுக்குள் இறங்கினார்.

இதனைக் கண்ட Bethany-யின் குடும்பத்தினரும், நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால், தனது கையை இழந்தாலும் நம்பிக்கையை இழக்காத Bethany, சில மணிநேர முயற்சிக்கு பிறகு ஒற்றைக் கையினால் விளையாடும் உத்தியைக் கற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, தினமும் கடுமையான பயிற்சி செய்த Bethany-க்கு மீண்டும் போட்டிகளில் கலந்து கொள்ளும் தைரியம் வந்தது.

அதன் பின்னர், உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்ட அவர் 5வது இடத்தைப் பிடித்தார். அதற்கு அடுத்த ஆண்டே தனது விடமுயற்சியால் முதலிடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

தனது கையை இழந்த 4 ஆண்டுகளில் தொழில்முறை அலைச் சறுக்கு வீராங்கனையாகி, உலகத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் Bethany. அதன் பின்னர், கடந்த 2013ஆம் ஆண்டு ஆடம் டிர்க்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 2015ஆம் ஆண்டு, இந்த தம்பதியருக்கு முதல் குழந்தை பிறந்த நிலையில், தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து Bethany Hamilton கூறுகையில்,

‘இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். எங்கள் வீட்டில் 4வது உறுப்பினர் வந்திருக்கிறார். மனைவியாகவும், தாயாகவும் இந்த நாட்களை மிகவும் மகிழ்ச்சியாக கழித்துக் கொண்டிருக்கிறேன். எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

‘Soul Surfer’ எனும் பெயரில் Bethany வாழ்க்கை திரைப்படமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிப் பெண்ணைக் கொன்று குழந்தை திருட்டு : அதிர்ச்சி சம்பவம்!!

மெக்சிகோவில் கர்ப்பிணியான இளம் பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கழுத்தை நெரித்து கொலை செய்து பெண் ஒருவர் குழந்தையை பறித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கொலை சம்பவம் தொடர்பாக அந்த பெண்மணி மற்றும் அவரது கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மெக்சிகோ நாட்டில் 20 வயதேயான Jessica Gabriela என்ற இளம் பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு சமூக வலைதளம் வாயிலாக சிந்தியா ஃபாத்திமா என்ற பெண்மணி ஒருவரின் நட்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் பொலிசாருக்கு சிந்தியாவின் குடியிருப்பில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிட்டியுள்ளது.

இதனையடுத்து நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. சம்பவத்தன்று ஜெஸ்ஸிகாவை தமது குடியிருப்புக்கு நிர்பந்தித்து அழைத்த சிந்தியா, பிறக்கவிருக்கும் குழந்தைக்கான உடைகள் தருவதாக கூறியுள்ளார்.

தோழமையாக பழகியதால் ஜெஸ்ஸிக்காவும் சிந்தியாவை நம்பி அவரது குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

ஜெஸ்ஸிக்காவை தமது குடியிருப்புக்கு வரவழைத்த சிந்தியா அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் அவரது வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார்.

பின்னர் ஜெஸ்ஸிக்காவின் உடலை மறைவு செய்ய முயன்றும் முடியாது போகவே, அவர்களது குடியிருப்பில் ஒரு அறையிலேயே மறைவு செய்துள்ளனர்.

சிந்தியாவின் கணவர் நாட்டின் வேறு ஒரு பகுதியில் வேலை நிமித்தம் தங்கியிருந்து வருகிறார்.

இதனிடையே கர்ப்பமாக இருந்த சிந்தியாவுக்கு பிறந்த குழந்தை இறந்து போயுள்ளது. கணவரிடம் இதை மறைத்த சிந்தியா தமது தோழி ஜெஸ்ஸிக்காவின் குழந்தையை பறிக்க திட்டமிட்டு அவரை கொலையும் செய்துள்ளார்.

ஜெஸ்ஸிக்காவின் நட்பு கிட்டும் முன்னர் பலமுறை சமூக வலைதளத்தில் சிந்தியா கர்ப்பிணி பெண்களின் நட்பு கோரியுள்ளதும் பொலிஸ் விசாரணையில் தற்போது வெளிவந்துள்ளது.

குழந்தையை வெள்ளையாக மாற்றுவதற்கு தாய் செய்த கொடூர செயல்!!

மத்தியபிரதேசத்தில் தாய் ஒருவர் தனது குழந்தையை வெள்ளையாக்குவதற்காக கருங்கல்லில் உடலை தேய்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியையாக பணியாற்றி வரும் சுதா திவாரி என்பவர், தனக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்னர், குழந்தைகள் காப்பகத்தில் இருந்து பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்துள்ளார்.

அந்த குழந்தை கருப்பாக இருந்ததால், தத்தெடுத்தது முதல் அதிருப்தியில் இருந்த சுதா, அக்கம் பக்கத்தினர் அளித்த ஆலோசனையின் பேரில், குழந்தை வெள்ளையாக வேண்டும் என்பதற்காக, அதன் உடலை கருங்கல்லில் தேய்த்துள்ளார்.

இதனால் அந்த குழந்தை படுகாயம் அடைந்துள்ளது.அந்த குழந்தையை கொடுமைப்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சுதாவின் சகோதரியின் மகள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு சென்ற குழந்தை நல அமைப்பினரும், பொலிசாரும் குழந்தையை மீட்டு, ஆசிரியை சுதாவையும் கைது செய்துள்ளனர்.

குழந்தையை சட்டவிதிகளுக்கு புறம்பாக அவர் தத்தெடுத்திருப்பதால், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த குழந்தை, குழந்தைகள் நல அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

16 வயதுச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!!

தமிழ்நாட்டில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் அருகில் உள்ள பரதூர் கிராமத்தை சேர்ந்த மணிமாறனின் மகள் வைத்தீஸ்வரி (16).

இவர் அங்குள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த ஞாயிறு வழக்கம் போல வேலைக்கு சென்றுள்ளார்.

பின்னர் வைத்தீஸ்வரி வீடு திரும்பவில்லை, இது குறித்து அவரின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்தனர்.

இதனிடையில் இன்று காலை வைத்தீஸ்வரி ஊருக்கு வெளியில் இருந்த வயலில் சடலமாக கிடந்தார்.

வைத்தீஸ்வரி சடலத்தை கைப்பற்றிய பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், அவர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது கும்பல் ஒன்று அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் மூன்று பேர் வைத்தீஸ்வரியை பலாத்காரம் செய்ததாக அவர் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த பொலிசார் இது தொடர்பாக நான்கு பேரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

எங்கள் நாடு என்ன குப்பைத் தொட்டியா : கொந்தளித்த நடிகர்!!

தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கொமெடி நடிகர் சதீஷ் அந்த ஆலையை மூட வலியுறுத்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில், ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆனால், இந்த ஆலையால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருவதாக கூறி பொதுமக்களும், மாணவர்களும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொமெடி நடிகர் சதீஷ் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘லண்டனில் இருக்கும் ஒரு தொழிலதிபர் அவுஸ்திரேலியாவில் இருந்து தாதுப்பொருளை, தூத்துக்குடிக்கு எடுத்து வந்து அதை சுத்த தாமிரமாக மாற்றி, அரசுக்கு காசும், எங்களுக்கு கேன்சரும் கொடுத்துட்டு போவது தான் ஸ்டெர்லைட்.

இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இருக்கும் பிரச்சனை அல்ல, இந்தியாவுக்கே அவமானம். எங்கள் நாடு என்ன குப்பை தொட்டியா..?’ என தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் : சேவைகள் முடக்கம், பயணிகள் தவிப்பு!!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் அனைத்து ஊழியர்களும் தொடர் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று ஆரம்பிக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு காரணமாக, விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் முடங்க ஆரம்பித்துள்ளதாக விமான நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

10000 ரூபாய் சம்பள அதிகரிப்பு கோரியே ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்துள்ளமையினால் பணி பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பயணிகள் பெரிதும் சிரமப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

வவுனியா தாண்டிக்குளத்தில் மின்கம்பத்துடன் மோதி டிப்பர் விபத்து : மின்சாரம் தடை!!

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று (03.04.2018) மாலை 3.30 மணியளவில் டிப்பர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. எனினும் எவ்வித உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காடு – தாண்டிக்குளம் பிரதான வீதியில் காணப்படும் வாகன திருத்தும் இடத்திலிருந்து பின்பக்கமாக வீதிக்கு ஏற முற்பட்ட டிப்பர் வாகனம் வீதியின் அருகே காணப்பட்ட மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன் போது மின்கம்பம் துண்டாகவுடைந்து வீழ்ந்தமையினால் அப் பகுதிக்கான மின்சாரம் தடைப்பட்டுள்ளதுடன் தற்போது மின்சாரத்தினை சீராக்கும் பணியில் மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.