பெற்ற தாயை அடித்து கொன்றது ஏன் : மகன் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் பெற்ற தாயை கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் ஷகுந்தலா தேவி. இவருக்கு அஜித், ஜிதேந்திரா, புஷ்பேந்திரா என்ற மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் சொத்து பிரச்சனையின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஷகுந்தலாவை அஜித் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.

மேலும் தனது இரண்டு சகோதர்களையும் இரும்பு கம்பியால் தாக்கியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து தலைமறைவாக இருந்த அஜித்தை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.

அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் குடும்பத்தின் மூத்த சகோதரன் என்பதால் பணம் சம்மந்தமான எல்லா முடிவுகளையும் நான் தான் எடுப்பேன்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் என் தம்பிக்கு திருமணம் நடந்த நிலையில் தனது சொத்து பங்கை பிரித்து தர அவன் கேட்டான்.

இது எனக்கு பிடிக்காத நிலையில் குடும்பத்தாருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. என் அம்மா சகுந்தலாவும் சொத்தை பிரிக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

இதன் காரணமாக நடந்த வாக்குவாதத்தில் அம்மாவை அடித்து கொலை செய்து, என் சகோதரர்களை தாக்கினேன் என கூறியுள்ளார். சம்பவம் குறித்து பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

யாழில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!!

காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து இந்தியர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இவர்கள் மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட ஐந்து இந்தியர்களில் மூவர் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவில் இருந்து போதை பொருட்கள் கடத்தப்படுவதாக இலங்கை வடக்கு பிராந்திய கடற்படை அதிகாரிகளுக்கு நேற்று மாலை இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, இலங்கை கடற்படை அதிகாரிகள் சர்வதேச கடல் எல்லை முதல் காங்கேசன் துறைமுகம் வரை கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக கடலில் நின்று கொண்டிருந்த படகில் சோதனை நடத்தியுள்ளனர்.

அந்தப் படகில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை இலங்கைக்கு கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

இதை தொடர்ந்து படகில் பயணித்த ஐந்து மீனவர்களும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து காங்கேசன்துறைமுக பொலிஸாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

கல்லடி பாலத்திலிருந்து குதித்த காதல் ஜோடி : திரண்டு வந்த மக்கள்!!

மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் இருந்து காதல் ஜோடியொன்று குதித்ததாக வெளியான தகவலையடுத்து அப்பகுதியில் பெருமளவான மக்கள் திரண்டதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கல்லடி பாலத்தில் இருந்து இன்று பிற்பகல் ஆண் பெண் ஜோடியொன்று குதித்ததாக இனந்தெரியாதவர்களினால் பரப்பப்பட்ட தகவலை அடுத்து பெருமளவானோர் கல்லடி பாலத்தினை நோக்கி படையெடுத்து வந்ததை காணமுடிந்தது.

எனினும் இது தொடர்பான உறுதியாக தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற 16 வயது மாணவியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்றைய தினம் (03.04.2018) மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த மாணவி தனது பாடசாலை சீருடைகளை துவைத்து தனது சப்பாத்துக்களையும் கழுவி பின்பு மதிய உணவு உண்டு விட்டே தற்கொலை செய்துள்ளார் என அயலவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த மாணவியின் பெற்றோர்கள் அரச உத்தியோகத்தர்கள் என்பதினால் இருவரும் பணிக்கு சென்றிருந்த வேளை மாணவி வீட்டில் தனியாகவே இருந்துள்ளார்.

மாலை 4.40 மணியளவில் இருவரும் வீடு திரும்பிய வேலை வீட்டின் அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட தனது மகளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனாலும் குறித்த மாணவி உயிரிழந்த நிலையிலையே காணப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை தடவியல் பொலிஸாருடன் இணைந்து வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை இன்று அதிகாலை வவுனியா கற்குழியை சேர்ந்த 17 வயதுடைய மாணவன் ஒருவனும் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி!!

வவுனியா பிரமனாலங்குளத்தில் நேற்றிரவு (03.04) மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார்.

வவுனியா பிரமனாலங்குளம் வடகாட்டை சேர்ந்த பெரியசாமி முத்துலிங்கம் வயது (59) என்ற விவசாயியே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் வடகாடு பிரதேசத்தில் விவசாயம் செய்து வரும் நிலையில் காட்டு மிருகங்களிடமிருந்து தனது பயிர்களை பாதுகாக்கும் பொருட்டு சட்டவிரோதமாக மின்சார வேலியமைத்து பயிர்களை பாதுகாத்து வந்த நிலையில் நேற்று இரவு காவலுக்கு சென்ற போது தவறுதலாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை பூவரசங்குளம் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியாவில் கலை இரவு நிகழ்வு!!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்தி ஒன்றியத்தின் வவுனியா கிளையினால் கலை இரவு நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினரான ப. வைஷ்ணவன் கருத்து தெரிவிக்கையில்,

பல்வேறு துறைகளில் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் கலை தொடர்பான செயற்பாடுகள் கடந்த பல வருடங்களாக முன்னெடுக்கப்பட்டாலும் கலைச்செயற்பாட்டின் ஊக்குவிப்பை கருத்தில் கொண்டு வவுனியாவில் குறும்பட போட்டி நிகழ்வுகள், பட்டிமன்றம், இசையும் நடனமும் உட்பட பல கலை நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

எனவே எதிர்வரும் 8ஆம் திகதி வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் அனைவரையும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

வவுனியா வெளிக்குளம் பாடசாலை மாணவர்கள் பரீட்சையில் 100 வீத சித்தியெய்தி சாதனை!!

வவுனியா வெளிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப்பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் 100 வீதம் சித்தியெய்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடத்திற்கான சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் கடந்த வாரம் வெளியாகியிருந்தன.

இந்நிலையில், வவுனியா வெளிக்குளம் கனிஸ்ட உயர்தர வித்தியாலயத்தில் கல்வி கற்று பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்கள் 100 வீத சித்தியைப்பெற்றுள்ளனர். இது தொடர்பில் பாடசாலை அதிபர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில்,

அண்மையில் வெளியாகிய கா.பொத சாதாரண தரப்பரீட்சை முடிவுகளுக்கு அமைய கணிதம் உட்பட எட்டுப்பாடங்களில் மாணவர்கள் 100 வீத சித்தியைப்பெற்றுள்ளனர்.

தமிழ் ,கணிதம், சைவசமயம், கிறிஸ்தவ சமயம், வணிகக்கல்வி, சித்திரம், நடனம், சுகாதாரம் போன்ற பாடங்களில் 100 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

வடமாகாணத்தில் கணித பாடத்தில் 100 வீத சித்திபெற்ற இரண்டு பாடசாலைகளில் இப்பாடசாலை ஒரு பாடசாலையாகக் காணப்படுவதுடன், பரீட்சைக்குத்தோற்றிய 78 வீத மாணவர்கள் கபொ.த.உயர்தரத்திற்கு தகுதிபெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

யானையைக் கண்டு பயந்து ஓடியவர் சடலமாக மீட்பு!!

திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலவெவ பகுதியில் வீதியோரத்தில் மீட்கப்பட்ட சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்துமாாறு நேற்று மாலை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.அன்பார் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கோமரங்கடவெல, 05ம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தகே திலீப் ரஞ்சன (38வயது) என்பவருடையது என பொலிஸார் தெரிவித்தார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கோமரங்கடவெல பிரதேச சபை பெக்கோ இயந்திரத்தின் உதவியாளராக கடமையாற்றி வரும் குறித்த நபர், பதவியா, சிறிபுர பகுதியிலிருந்து கடமையை முடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வரும் வேளை யானையைக் கண்டு பயந்து வீழ்ந்ததில் அவ்விடத்தில் உயிரிழந்திருக்கலாம் அல்லது முகத்தில் காயம் காணப்படுவதால் விபத்தினால் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வீழ்ந்து கிடந்த இடத்திற்கு சென்ற நீதவான் சடலத்தை சட்ட பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கல்வியில் சாதனை : காதலில் தோல்வி : மாணவியின் விபரீத முடிவு!!

களுத்துறையில் பல்கலைக்கழத்திற்கு தெரிவான மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அழுத்கம, தர்காநகரத்தின், மாலேவனவில பிரதேசத்தை சேர்ந்த தசுனி தருஷிகா என்ற 20 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறித்த மாணவி கடந்த வருடம் இடம்பெற்ற உயர் தர பரீட்சையில் சித்தியடைந்து களுத்துறை மாவட்டத்தில் 61 வது இடத்தை பிடித்துள்ளார்.

காதல் தொடர்பு முறிந்தமையே இதற்கு காரணமாக இருக்கலாம் என பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.

பிள்ளைகளுக்கு வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு பயிற்சி வழங்காமல் பரீட்சையில் சித்தியடைய மாத்திரம் கற்று கொடுப்பதாக நீதவான் நிஹால் பெற்றோருக்கு மரண விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வருடம் இடம்பெற்ற உயர்தர பரீட்சையில் எனது மகள் களுத்துறை மாவட்டத்தில் 61வது இடத்தை பிடித்தார். அவரது பெறுபேறுகளை பார்த்து நாம் மிகவும் மகிழச்சியடைந்தோம். அவர் பல்கலைக்கழகம் செல்ல எதிர்பார்த்திருந்தார் என உயிரிழந்த மாணவியின் தாயார் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எனது மகளுக்கு பாடசாலை காலத்தில் அல்லது அதற்கு பின்னர் மேலதிக வகுப்பு செல்லும் போது காதல் தொடர்பு இருந்ததாக எங்களுக்கு தெரியாது. எனினும் காதல் தொடர்பில் ஏற்பட்ட பிரிவினால் இன்று மகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஏப்ரல் மாதம் முதலாம் திகதி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மகிழ்ச்சியில் புதிய ஆடைகளை கொள்வனவு செய்து வந்திருந்தார். நான் இரண்டு மகளை மேலதிக வகுப்பிற்கு அழைத்து செல்லும் போது, மூத்த மகள் மாத்திரமே வீட்டில் இருந்தார்.

நான் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது மகள் தூக்கிட்ட நிலையில் காணப்பட்டார். அயலவர்களின் உதவியுடன் வைத்தியசாலைக்கு மகளை கொண்டு சென்ற போதிலும் அவர் உயிரிழந்துவிட்டார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவி தற்கொலை செய்து கொண்டதாக மரண விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2018 – விளம்பி வருஷப் பிறப்பு : செய்ய வேண்டிய கருமங்கள்!!

எதிர்வரும் 14.04.2018 சனிக்கிழமை புதிய விளம்பி வருஷம் காலை 7.00 மணியளவில் அபரபக்க திரயோதசி திதியில், வணிசக் கரணத்தில், மேட லக்கினத்தில், சிங்க நவாம்சத்தில் சனி காலவோரையில், புதன் சூக்கும வோரையில், தாமத குண வேளையில் நட்சத்திர பக்ஷியாகிய மயில் உண்டித் தொழிலும் சூக்கும பக்ஷி துயில் தொழிலும் செய்யும் காலத்தில் பிறக்கின்றது.

விஷு புண்ணிய காலம் – 14.04.2018 சனிக்கிழமை அதிகாலை 03.00 மணி முதல் முற்பகல் 11.00 மணி வரை விஷு புண்ணிய காலமாகும்.

மருத்து நீர் ஸ்நானம் – இப்புண்ணிய காலத்தில் யாவரும் விதிப்படி சங்கற்பித்து ஆலயங்களில் வழங்கப்படும் மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றை இலையும் காலில் ஆலிலையும் வைத்து முறைப்படி ஸ்நானம் செய்தல் வேண்டும்.

அணிய வேண்டிய ஆடைகள் – சிவப்பு நிறமுள்ள பட்டாடையாயினும் சிவப்பு அல்லது கறுப்பு கரையமைந்த புதிய பட்டாடையாயினும் அணிதல் வேண்டும். அத்துடன் பவளம், நீலக்கல் பதித்த ஆபரணங்களை அணியலாம்.

வழிபாடுகள் – முதலில் விக்னேஸ்வரர் அதன்பின் குல தெய்வ வழிபாடு செய்து, தொடர்ந்து சூரியனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்து, குரு, பெற்றோரை வணங்கி ஆசி பெற்று, தானதருமங்கள் இயற்றி உறவினர்களுடன் அளவளாவி அறுசுவை உணவுடன் பிட்டு புசித்து கண்ணாடியில் தரிசனம் செய்து புதிய வருஷ பலன்களை கேட்டு அறிந்து கொள்ளவும்.

தோஷ நட்ஷத்திரங்கள் – பூசம், மகம், பூரம், உத்தரம் 1ம்,2ம் கால்கள், அனுசம், பூரட்டாதி 4ம் கால், உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் தவறாது மருத்து நீர் தேய்த்து ஸ்நானம் செய்து, இயன்ற தானதருமங்கள் செய்து சங்கிரம தோசத்தை நிவர்த்தி செய்துகொள்ளல் வேண்டும்.

கைவிசேஷ நேரங்கள் – 14.04.2018 – மதியம் 12.15 முதல் பிற்பகல் 02.10 மணி வரை – மாலை 06.21 முதல் இரவு 08.13 மணிவரை, 16.04.2018 – மதியம் 12.30 முதல் பிற்பகல் 02.02 மணி வரை – மாலை 06.13 முதல் முன்னிரவு 07.24 மணி வரை..

மூலம் – வாக்கிய பஞ்சாங்கம்

வவுனியாவின் மோசமான நிலையில் வீதிகள் : பாரபட்சம் காட்டும் மத்திய மாகாண அமைச்சுக்கள்!!

ஒரு பிரதேசத்தின் அத்தியாவசிய உட்கட்டுமானங்களில் மிக முக்கியமானது வீதியாகும். கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட மற்றும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றிக் கொள்வதில் தரமான வீதிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

இந்தநிலையில் அண்மைக் காலமாக வவுனியா மாவட்டத்தின் பல வீதிகள் முழுமையாக சேதமடைந்த நிலையில் கவனிப்பாரற்று கிடக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் போக்குவரத்து செய்கின்ற வவுனியாவின் பல முக்கியமான வீதிகள் மக்களால் இனங்காட்டப்பட்டும், உரியவர்களுக்கு முறையிட்டும், போராட்டங்களை நடாத்தியும் எந்த முன்னேற்றமும் இன்றி காணப்படுகின்றது.

வவுனியா மன்னார் பிரதான வீதி, நெளுக்குளம் ஊடாக வீரபுரம் செல்லும் வீதி, பூவரசங்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் வீதி, குழுமாட்டுச் சந்தியூடாக சுந்தரபுரம் செல்லும் வீதி, பிரமனாலங்குளம் பெரிய தம்பனை வீதி, கோவில்குள மூடாக சிதம்பரபுரம் செல்லும் வீதி, ஓமந்தை சேமமடு வீதி, உள்ளிட்ட மக்கள் பாவனை அதிகமுள்ள வீதிகள் அடங்கலாக வவுனியா மாவட்டத்தின் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் பயன்படுத்துகின்ற வீதிகள் அனைத்தும் போக்குவரத்துக்கு ஒவ்வாத வீதிகளாகவே காணப்படுகின்றன.

யுத்த காலங்களை விட தற்போது தான் வீதிகளின் நிலை கேவலமாக உள்ளதாக மக்கள் விசனமடைந்துள்ளனர்.

இவ் வீதிகளில் ஒரு சில வீதிகளை தவிர ஏனைய பெரும்பாலானவை மாகாண அமைச்சுக்குள் வருவதனால் வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சும் மத்திய அரசும் வவுனியா மாவட்டத்தை புறக்கணிக்கின்றனவா எனவும், இத் துறைசார் அமைச்சர்கள் வர இருக்கின்ற தேர்தல்களை கணக்கில் கொண்டு தமக்கு வாக்களிக்க கூடிய மக்கள் இருக்கின்ற தொகுதியின் அபிவிருத்தியில் மட்டும் கவனம் செலுத்துகின்றனரா என்ற ஐயப்பாடும் வவுனியா மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வடக்கின் மிக முக்கிய போக்குவரத்து மையமான வவுனியாவின் வீதிகள் சேதமடைந்து உள்ளமை வவுனியா மக்களுக்கு மட்டுமன்றி வேறு மாவட்டங்களில் இருந்து வரும் மக்களுக்கும் சிரமத்தினை ஏற்படுத்துகின்றது.

குறிப்பாக தினமும் மன்னார் நகரத்தில் இருந்தும் மன்னார் மாவட்டத்தின் எல்லைப்புற கிராமங்களில் இருந்தும் வவுனியாவிற்கு பயணம் செய்யும் ஆயிரக் கணக்கானவர்களும் இதனால் பாதிக்கப் படுகின்றனர்.

எனவே இவற்றை கருத்தில் கொண்டு இந்த வீதிகளை துரிதகதியில் புனரமைக்க அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுத்து போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த உதவ வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகொள் விடுத்துள்ளனர்.

வவுனியாவில் இணைய ஊடகவியலாளர் சங்க பொதுக்கூட்டம்!!

இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் பொதுக்கூட்ட வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. குறித்த கூட்டம் நேற்று வவுனியா வைரவர் புளியங்குளத்தில் அமைந்துள்ள ICC கல்லூரியின் விரிவுரை மண்டபத்தில் இணைய ஊடகவியலாளர் சங்க முன்னால் தலைவர் ஜனகன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த கூட்டத்தில் இணைய ஊடகவியலாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் புதிதாக உள்வாங்கப்பட்ட ஊடகவியலாளர் மற்றும் இணைய ஊடக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டிருந்ததுடன், கடந்தகால செயற்பாடு தொடர்பாக முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் உரையாற்றிய பின் சட்டத்தரணிகள் தலைமையில் புதிய நிர்வாக சபை தெரிவு இடம்பெற்றது நடத்தப்பட்டுள்ளது.

புதிய நிர்வாக சபையில் செயலாளராக அருள், தலைவராக பரராஜசிங்கம் கனேசியஸ், பொருளாளராக பாஸ்கரன் கதீசன், உபதலைவராக பாலநாதன் சதீசன், உப செயலாளராக பிரதீப்புடன் உறுப்பினர்களாக பொன்னுத்துரை அரவிந்தன் மற்றும் சசி என தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் போசகராக சிரேஷ்ட சட்டத்தரணிகளில் ஒருவரான அன்ரன் புனிதநாயகம் மற்றும் ஆலோசகர்களாக சட்டத்தரணிகளான திலீப்காந்தன், கீர்த்தனன் ஆகியோரும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் சேதன மரக்கறிச் செய்கையை ஊக்குவிக்க நடவடிக்கை!!

நஞ்­சற்ற விவ­சா­யச் செய்­கையை ஊக்கப்படுத்துவதற்காக எதிர்­கா­லத்­தில் பல்­வேறு வகையான செயற்­றிட்­டங்­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன என்று வவு­னியா மாவட்­டப் பிரதி மாகாண விவ­சாய பணிப்­பா­ளர் த.யோகேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது..

வவு­னியா மாவட்­டத்­தில் கடந்த ஒரு வரு­ட­மாக நஞ்­சற்ற விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளில் நாம் ஈடு­பட்டு வருகின்றோம். இன்­றைய காலப்­ப­கு­தி­யில் அதி­க­ள­வான நஞ்­சுள்ள பழ­வ­கை­கள் மரக்­க­றி­கள் நுக­ரப்­ப­டு­வ­தால் மக்­க­ளுக்கு பல்­வேறு வித­மான நோய்­கள் ஏற்படுகின்றன.

எனவே நாம் அதன் முக்­கி­யத்­து ­வத்தை உணர்ந்து நஞ்சற்ற உற்­பத்­தி­களை செய்­வ­தற்­காக நடவடிக்கைகளை மேற்­கொண்டு வரு­கின்­றோம்.

மூன்று வித­மாக நாம் இந்த திட்­டத்தை நடைமுறைப்படுத்தி வரு­கின்­றோம். நஞ்­சற்ற மரக்­கறி உற்­பத்தி செய்­வ­தற்கு தேவை­யான உள்­ளீ­டு­களை உற்பத்தி செய்தல், அவற்றை எவ்வாறு உற்­பத்தி செய்வது என்ற ஆலோ­ச­னை­களை விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கு­தல், அதற்­கான சந்தை வாய்ப்­பு­களை பெற்­றுக் கொடுத்­தல் ஆகிய வழி­க­ளில் மேற்­கொண்டு வருகின்றோம்.

இதன் முதற்­கட்­ட­மாக 150 விவ­சா­யி­களைத் தெரி­வு­செய்து அவர்­க­ளி­டம் இருந்து கிடைக்­கின்ற மரக்­கறி பழவகைகளை விற்­பனை நிலை­யம் ஒன்­றில் வகைப்படுத்தி விற்­ப­னை­செய்து வரு­கின்­றோம்.

எனி­னும் சரி­யான விளைச்­சலை பெறு­வ­தற்­கான தரமான சேத­னப் பச­ளை­கள் மற்­றும் மருந்­து­க­ளைப் பெறு­வ­தில் கடும் சவாலை சந்­திக்­கின்­றோம். எனவே எமது அடுத்த வேலைத்­திட்­ட­மாக அதற்­கான குறித்த உள்­ளீ­டு­களை உற்­பத்­தி­செய்து அதனை விவசாயிகளுக்கு மானிய அடிப்­ப­டை­யில் வழங்குவதற்கான பல வேலைத் திட்­டங் களை மேற்கொள்ளவுள்ளோம்.

மேலும் மாகாண குறித்­தொ­துக்கப்பட்ட நிதி­யி­னூ­டாக சேதன மரக்­க­றிச் செய்­கையை ஊக்­கு­விப்­ப­தற்­காக 25 விவ­சா­யி­க­ ளுக்கு தேவை­யான கட்­ட­மைப்­பு­க­ளை­யும் தொழில்­நுட்ப ஆலோ­ச­னை­க­ளை­யும் நிதியாதாரங்களையும் வழங்கி வரு­கி­றோம்.

தற்­பொ­ழுது ஒரு வரு­ட­மாக இந்தச் செயற்­பாட்டை செய்வதுடன் எமது விற்­பனை நிலை­யத்­தில் உள்ள சேதன மரக்­க­றி­கள் அனைத்­தும் மக்­க­ளி­டம் நல்ல வரவேற்பை பெற்­றுள்­ளன. எதிர்­கா­லத்­தில் அநே­க­மான மக்­கள் பய­ன­டை­யும் படி­யாக இதனை பரந்­த­ள­வில் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைளை மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்தார்.

வவுனியா தேக்கவத்தையில் ரயிலில் மோதுண்டு 17வயது பாடசாலை மாணவன் பலி!!

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (04.04.2018) அதிகாலை 3.30 மணியளில் ரயிலில் மோதுண்டு 17 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கற்குழியில் வசித்து வரும் குறித்த பாடசாலை மாணவன் ( சுபலோசன்) நேற்றையதினம் குடும்பத்தாருடன் சிறு கருத்துமுரண்பாட்டில் ஈடுபட்டு வீட்டை வீட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

பின்னர் வவுனியா தேக்கவத்தை பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தபால் புகையிரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

இவர் சில தினங்களான தற்கொலைக்கு முயற்சித்தாக இவரின் நண்பர்கள் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனைக்காக சடலம் தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


பெண்கள் மூக்குத்தி குத்திக்கொள்வதின் ரகசியம் தெரியுமா?

அந்தகாலம் முதல் இதுவரை மூக்குத்தி குத்திக்கொள்வது என்பது வழக்கமான ஒன்றாக கருதப்படுகின்றது.

ஆண்களின் மூச்சுக்காற்றை விட பெண்களின் மூச்சுக்காற்றுக்கு சக்தி அதிகம் இருப்பதனால் இதனால் பண்டைய காலத்திலேயே மூக்கு குத்திக் கொள்ளும் வழக்கம் உருவானது.

மூக்கு குத்துவதினாலும் காது குத்துவதினாலும் உடலிலுள்ள வாயுக்கள் வெளியேறுகின்றன.

தங்க மூக்குத்தி அணிந்தால் அந்த தங்கம் உடலில் உள்ள வெப்பத்தை கிரகித்து தன்னுள்ளே ஈர்த்து வைத்துக் கொள்ளும் சக்தியைப் பெறும்.

மூக்கின் மடல் பகுதியில் ஒரு துவாரம் ஏற்பட்டால் அதன் மூலம் நரம்பு மண்டலத்தில் உள்ள கெட்ட வாயு அகலும்.

பருவ வயதை அடைந்த பெண்களுக்கு கபாலப் பகுதியில் சிலவிதமான வாயுக்கள் இருக்கும். இந்த வாயுக்களை வெளிக் கொண்டு வருவதற்குத்தான் மூக்குக் குத்தப்படுகிறது.

மூக்குக் குத்துவதால் பெண்கள், சளி, ஒற்றைத் தலைவலி, மூக்கு சம்பந்தமான தொந்தரவுகள், பார்வைக் கோளாறுகள், நரம்பு சம்பந்தமான நோய்கள் மற்றும் மனத்தடுமாற்றம் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்

இந்த குணம் உங்களிடம் இருந்தால் பணக்காரராக ஆகவே முடியாதாம்!!

நம் ஒவ்வொருவருக்கும் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பகல், இரவு பாராமல் அயராது உழைப்போம். ஆனால் நம்மிடம் உள்ள ஒருசில தீய குணங்கள், நம் வாழ்வில் முன்னேற்றம் காண இடையூறாக இருக்கும் என்பது தெரியுமா?

குறிப்பிட்ட சில குணங்கள் எவ்வளவு சம்பாதித்தாலும், அதை கையில் நிலைக்க விடாமல் தடுக்கும். இங்கு எந்த மாதிரியான குணங்கள் கொண்டிருப்பவர்களால் பணக்காரராக முடியாது என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அக்குணங்கள் இருந்தால், உடனே அதை கைவிடுங்கள்.

பொறாமை குணம் கொண்டவர்கள்
கர்மாவின் கோட்பாட்டின் படி, பொறாமை குணம் அதிகமாக கொண்டவர்களாலும், பணத்தின் பின் யாரெல்லாம் ஓடுகிறாரோ அவர்களது கையில் பணம் நிலைக்காது. இத்தகையவர்கள் தன் மனம் முன் வந்து பெருந்தன்மையோடு மற்றவர்களுக்கு பண உதவி செய்தால் மட்டுமே, கையில் பணம் நிலைத்து, பணக்காரராக முடியும்.

போதைப் பழக்கம் உள்ளவர்கள்
இந்த வகையினர் தாங்கள் சம்பாதிக்கும் பணம் அனைத்தையும் போதைப் பழக்கத்தாலேயே இழப்பார்கள். இதன் முடிவாக, வாழ்வில் மற்றவர்களுக்கு உதவ கூட முடியாமல் இருப்பர். மேலும் இந்த வகையினர் ஒருவித மாயையில் வாழ்வர். அதோடு இவர்களிடம் பணம் இருந்தாலும், சந்தோஷமாகவே இருக்க மாட்டார்கள்.

ஏமாற்றுகாரர்கள்
யார் தனது வாழ்க்கைத் துணையை ஏமாற்றுகிறாரோ, அவர்கள் தாங்களது சம்பாத்தியத்தை கள்ளக்காதலுடன் செலவழித்து, மரணத்திற்கு பின் நகரத்தில் பெருந்துயரத்தை அடைவர் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கர்வம் அல்லது திமிர் பிடித்தவர்கள்
இந்த மாதிரியான குணம் கொண்டவர்கள், எப்போதும் பணக்காரராகவே முடியாது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் அவர்களின் பெருமை வெற்றியில் குறுக்காக நின்று, கர்வ குணத்தை காட்டும்.

மற்றவர்களுக்காக உழைப்பவர்கள்
வாழ்வில் தனக்கென்று எவ்வித குறிக்கோளும் இல்லாமல், தனிப்பட்ட வளர்ச்சி ஏதுமின்றி மற்றவர்களுக்காக உழைப்பவர்களால் போதிய வருமானத்தை ஈட்ட முடியாது. இப்படிப்பட்டவர்கள் சாதாரண வாழ்க்கையைத் தான் வாழ்வார்கள்.