கூகுள் Play Store இல் இருந்து சரஹா செயலி நீக்கம் : காரணம் இதுதான்!!

சரஹா செயலிக்கு எதிராக குவிந்த புகார்களின் அடிப்படையில், Google Play Store ல் இருந்து இந்த செயலி நீக்கப்பட்டு இருக்கிறது.

சவுதி அரேபியாவில் உருவாக்கப்பட்ட Sarahah எனும் செயலிக்கு உலகம் முழுவதும் பயனாளிகள் இருந்தார்கள்.

இந்த செயலி மூலமாக ரகசியமாக குறுஞ்செய்திகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. மருத்துவம் சம்பந்தப்பட்ட ரகசிய கேள்விகளுக்கு, சில மருத்துவர்கள் இந்த செயலி மூலம் பதிலளித்து வந்துள்ளனர்.

இது போன்ற பல பயன்களை இந்த செயலி மூலம் பெற முடிந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பள்ளி மாணவி ஒருவருக்கு, இந்த செயலியின் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

குறித்த நபர் யார் என்று தெரியாத அம்மாணவி, தற்கொலை முயற்சி வரை சென்றிருந்தார். அதே வாரம் அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு மாணவரும், மோசமான முறையில் உடல் ரீதியாக ஏளனம் செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்று பல சீண்டல்களான குறுஞ்செய்திகள், இந்த செயலி மூலம் அனுப்பப்பட்டு வந்ததால், இந்த செயலி குறித்து புகார்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து, இதனைத் தடுக்க புதிய Update செய்யப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், அவை யாவும் வதந்தி என்று பின்னர் தெரிய வந்தது. இந்நிலையில், Google Play Store-யில் இருந்து Sarahah செயலி மொத்தமாக நீக்கப்பட்டு உள்ளது. இதை ஒத்து உருவாக்கப்பட்டிருந்த போலியான செயலிகளும் நீக்கப்பட்டுள்ளன

iPhone X இற்கு நிகரான வடிவமைப்பில் Huawei P20!!

Huawei நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Huawei P20 இனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் கைப்பேசி தொடர்பான சில புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன.

இக் கைப்பேசியானது 5.6 அங்குல அளவுடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

தவிர Kirin 659 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது.

மூன்று வகையான பதிப்புக்களாக வெளிவரவுள்ள இக் கைப்பேசி தொடர்பான ஏனைய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எதிர்வரும் 27ம் திகதி இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பின்போது Huawei நிறுவனம் ஏனைய தகவல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழகத்தில் இலங்கை அகதி மாணவனுக்கு சரமாரி வெட்டு : விரல்கள் துண்டான பரிதாபம்!!

 
தமிழகத்தில் இலங்கை அகதி மாணவனை கத்தியால் வைத்து வெட்டிய இரண்டு மாணவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த அர்ஜுன் என்ற மாணவன் மதுரை மாவட்டம் மேலூர் அருகே திருவாதவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தன்னுடைய உறவினரான ஜெயலெட்சுமி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் அதே பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் சுண்ணாம்பூரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவருடன் அர்ஜுனுக்கு முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

இதை மனதில் வைத்திருந்த கார்த்திக் ராஜா, அரசுப் பொது தேர்வுக்காக அர்ஜூன் பள்ளி வளாகத்தில் அமர்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய நன்பர் சரவணன் என்பவரை அழைத்து வந்து அர்ஜுனிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.

இந்த வாக்குவாதம் முற்றியதால், கார்த்திக் ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆர்ஜூனின் தலை மற்றும் கைகளை சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதனால் அர்ஜுனின் இடது கையில் இருந்த இரண்டு விரல்கள் துண்டானது. அதுமட்டுமின்றி இரத்த வெள்ளத்தில் துடித்ததால் அவரை சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் கார்த்திக் ராஜா மற்றும் சரவணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் மீதும், வன்கொடுமை உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று பெண்களை சுட்டுக்கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரர்!!

கலிபோர்னியாவில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் மூன்று பெண்களை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மன அழுத்தத்திற்காக முன்னாள் ராணுவ வீரர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் மையம் ஒன்று கலிஃபோர்னியாவிலுள்ள Yontville என்னுமிடத்திலுள்ளது.

நேற்றைய தினம் இந்த மையத்தில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுக்கொண்டிருந்தபோது துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்த Albert Wong (36) என்னும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் சிலரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டார்.

தகவலறிந்து வந்த பொலிசாருக்கும் அவருக்கும் இடையே சிறிது நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. சுமார் 30 முறை துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதாக தெரியவந்துள்ளது.

பின்னர் கட்டிடத்தின் உள்ளே நுழைந்த பொலிசார் துப்பாக்கியால் சுட்ட நபர் இருந்த அறைக்குள் நுழைந்தபோது அந்த அறைக்குள் துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகிக்கப்படும் நபரும் மூன்று பெண்களும் இறந்து கிடந்தனர். Albert Wong அந்தப் பெண்களை சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

இறந்தவர்கள் Executive Directorஆன Christine Loeber (48), Dr Jen Golick (42) மற்றும் Dr Jennifer Gonzales (29) என்னும் psychologist என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Albert Wong ம் மன அழுத்தத்திற்காக முன்னாள் ராணுவ வீரர்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் இந்த மையத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டவர் என்றும் கடந்த வாரம் அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் பிடித்து வைத்திருந்த பிணைக்கைதிகளில் சிலரை விட்டு விட்டு மீதமிருந்த மூவரை மட்டும் சுட்டுக் கொன்றிருக்கிறார், கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை.

இந்த மையம் ஈராக், ஆப்கானிஸ்தான், கொரியா, வியட்நாம், போர்கள் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது காயமடைந்த அல்லது கை கால்கள் இழந்த மற்றும் வயது முதிர்ந்த 1000 ரணுவ வீரர்களை கவனித்துக் கொள்ளும் மையமாகும்.

நாள் குறித்து ஒன்றாக உயிரை விட்ட தம்பதி : நெஞ்சை நெகிழச்செய்யும் ஓர் சம்பவம்!!

அமெரிக்காவில் 66 ஆண்டுகள் சிறந்த காதலுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த மூத்த தம்பதி சட்டத்துக்கு உட்பட்டு ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

போர்ட்லாண்ட் நகரை சேர்ந்தவர் சார்லி (87), இவர் மனைவி பிரான்ஸி (88). இவர்களுக்கு 66 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன நிலையில் காதலுக்கு வயதில்லை என்பதை கூறும் வகையில் மிகவும் அன்பாக வாழ்ந்து வந்தனர்.
வயது முதிர்வு காரணமாக பிரான்ஸிக்கு இதய நோயும், சார்லிக்கு புற்றுநோயும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிருக்கு உயிராக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் ஒன்றாக இணைய விரும்பினார்கள்.

அந்நாட்டில் உள்ள கண்ணிய சட்டத்தின் கீழ் சரியான காரணத்துடன் இறக்க விரும்புகிறவர்கள், மருத்துவர்களால் கருணை கொலை செய்யப்படுவார்கள்.

அதற்கு சார்லியும், பிரான்ஸியும் நாள் குறித்து ஒன்றாக இறக்க வேண்டும் என விண்ணப்பித்திருந்தார்கள். அதன்படி கடந்தாண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி படுக்கையில் படுத்திருந்த தம்பதி இறப்பதற்காக மருந்து செலுத்தப்பட்டது.

முதலில் பிரான்ஸி இறந்தநிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் சார்லி உயிரிழந்தார். இது குறித்து தம்பதியின் மகள் ஷெர் சாப்ரான் கூறுகையில், இருவரும் இறந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த அன்பு வியக்கத்தக்கது. சட்டத்தில் இது போல இறக்க வழி இருந்ததால் தான் அவர்கள் அப்படி செய்தார்கள் என கூறியுள்ளார்.

பட்டப்பகலில் கல்லூரி வாசலில் படுகொலை செய்யப்பட்ட மாணவி : தொடரும் பயங்கரம்!!

சென்னையில் கல்லூரி வாசலில் மாணவி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள மீனாட்சி கல்லூரியில் மதுரவாயலை சேர்ந்த அஸ்வினி எனும் மாணவி B.com படித்து வந்துள்ளார்.

இன்று வகுப்பு முடிந்து வீடு திரும்பிய அவரை, கல்லூரியின் வாசலிலேயே அழகேசன் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அஸ்வினியை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கத்தியால் குத்திய அழகேசனை பொதுமக்கள் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

காரணம் என்ன?

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி, அழகேசனும் அதே பகுதியை சேர்ந்தவர் தான்.

துரத்தி துரத்தி காதல் தொல்லை கொடுத்த அழகேசனை, அஸ்வினிக்கு பிடிக்கவில்லை, பலமுறை துன்புறுத்தியதால் மதுரவாயல் பொலிசிடம் புகார் அளித்தார்.

இதன்பேரில் அழகேசனை பொலிசார் கைது செய்தனர், இதற்கிடையே ஜாபர்கான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிறையிலிருந்து வெளியே வந்த அழகேசன், அஸ்வினி மீதிருந்த ஆத்திரத்தில் படுகொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை பறிமுதல் செய்துள்ள பொலிசார் அழகேசனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி வாசலில் உள்ள ரகசிய கண்காணிப்பு கமராவையும் பொலிசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அஸ்வினியின் தோழிகளிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சுவாதி முதல் அஸ்வினி வரை : தமிழகத்தை பதறவைக்கும் கொலைகள்!!

நுங்கம்பாக்கம் சுவாதி தொடங்கி விழுப்புரம் நவீனா, கே.கே நகர் அஸ்வினி வரை ஒரு தலைக்காதல் கொலைகள் தொடர்கதையாகி வருகின்றன.

காதலிக்க மறுத்த காரணத்தால் ஒரு தலைக்காதலர்கள் பெண்களை கொடூரமாக கொலை செய்யும் நிலை அதிகரித்து வருகிறது.

சுவாதி

கடந்த 2016 யூன் 24-ஆம் திகதி சூளைமேட்டைச் சேர்ந்த சுவாதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையாளி என்று கைது செய்யப்பட்ட ராம்குமார், புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

நவீனா

பள்ளி மாணவி நவீனாவை, விழுப்புரத்தை சேர்ந்த செந்தில் என்ற இளைஞர் ஒருதலையாக காதலித்து வந்த நிலையில் காதலை நவீனா ஏற்க மறுத்துவிட்டதால் தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டு, நவீனாவை கட்டிப்பிடித்து செந்தில் எரித்து கொன்று விட்டான்.

சோனாலி

கரூர் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த சோனாலியை, அதே கல்லூரியில் படித்த முன்னாள் மாணவன் உதயகுமார் வகுப்பறையில் நுழைந்து கட்டையால் அடித்து கொலை செய்தார். இதற்கு காரணமும் ஒருதலை காதல் தான்.

தன்யா

கோவையை சேர்ந்த தான்யாவை ஒருதலையாக காதலித்த இளைஞர் ஜாகீர் கத்தியால் சராமாரியாக குத்தி கொலை செய்தார்.

இந்துஜா

கடந்த ஆண்டு ஒருதலைக்காதலுக்கு வேளச்சேரியை சேர்ந்த இந்துஜா பலியாகியுள்ளார். காதலிக்க மறுத்தார் என்பதற்காக பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்லப்பட்டார்.

சித்ரா தேவி

திருமங்கலத்தை 14 வயது மாணவி சித்ராதேவி ஒருதலைகாதலால் பெட்ரோலை ஊற்றி கொலை செய்யப்பட்டார்

அஸ்வினி

சென்னை கே கே நகரில் நேற்று கல்லூரியில் படித்து வந்த அஸ்வினியை விரட்டி விரட்டி கத்தியால் கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளான் அழகேசன் என்ற கொடூரன்.

பெண்களை துரத்தித் துரத்தி சீண்டினால் தான் காதல் பிறக்கும் என்று தவறாக போதிக்கும் திரைப்படங்கள், நம்மை காதலிக்காத பெண் வேறு யாரையும் காதலிக்கக் கூடாது என்பதையும் விரிவாக விளக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் ஆகியவையும் இது போன்ற கொலைகளுக்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

4 ஆண்டுகளாக காதலித்து கலப்புத் திருமணம் : மனைவியை நினைத்து கலங்கும் கணவர்!!

தமிழகத்தில் போக்குவரத்து காவலர் தாக்கியதில் உயிரிழந்த கர்ப்பிணிப்பெண் உஷா, நான்கு ஆண்டுகளாக காதலித்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாவை திருமணம் செய்தவர் என தெரிய வந்துள்ளது.

திருச்சியில், போக்குவரத்து காவலர் தாக்கியதில் உயிரிழந்த உஷாவின்(34) திருமண வாழ்க்கை குறித்து தெரிய வந்துள்ளது.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகேயுள்ள, சூலமங்களத்தைச் சேர்ந்த துரைக்கண்ணு- லட்சுமி தம்பதியின் மகன் தர்மராஜா என்கிற ராஜா(37).

தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இவருக்கு, திருமணமான இரண்டு சகோதரிகள் உள்ளனர். இந்நிலையில், இவரும் உஷாவும் நான்கு ஆண்டுகளாக காதலித்துள்ளனர்.

அதன் பிறகு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் திருமணம் செய்துள்ளனர். ராஜாவின் வீடு குடிசையாக இருந்ததாலும், போதிய வசதி இல்லாததாலும் திருச்சி துவாக்குடியில் உள்ள தனது தாய் வீட்டிலேயே உஷா தங்கியிருந்துள்ளார்.

அவ்வப்போது கணவரின் வீட்டுக்கு வந்து ஓரிரு நாட்கள் தங்கியிருப்பார். திருச்சியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி ஒன்றில் உஷா வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், உஷாவின் தோழியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உஷா தனது கணவருடன், திருச்சிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது நடந்த துயரச் சம்பவத்தில்தான் அவர் உயிரிழந்துள்ளார்.

ராஜாவின் ஊரான சூலமங்களத்தைச் சேர்ந்த உமாபதி என்பவர் ராஜா – உஷா தம்பதி குறித்து கூறுகையில்,

‘ராஜாவின் குடும்பம் ஏழ்மையான குடும்பம். இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள். எனினும், காதலித்து கலப்புத் திருமணம் செய்து கொண்டனர்.

உஷா தன் கணவரோடு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது பலியாகி உள்ளார். உஷாவின் இழப்பால் ராஜாவின் குடும்பம் நிலைகுலைந்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.

பிரபல இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை : கடிதம் சிக்கியது!!

பிரபல இந்தி தொலைக்காட்சி நடிகை மெளமிதா சஹா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் மெளமிதா. கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தனியாக வசித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மெளமிதா பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக இதை பார்த்து பொலிசாருக்கு தகவல் தந்த நிலையில் பொலிசார் கதவை உடைத்து சடலத்தை மீட்டனர். சடலம் அருகில் இருந்த கடிதத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளார்கள்.

மன அழுத்தத்தால் மெளமிதா பாதிக்கப்பட்டிருப்பதை அவர் சமுகவலைதள பக்கம் மூலம் பொலிசார் கண்டுப்பிடித்துள்ளனர்.

அவரது கைப்பேசி அழைப்புக்களை வைத்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
.

மீண்டும் பெண் குழந்தை : மனைவியின் முகத்தில் அசிட் வீசிய கணவன்!!

 
இந்தியாவில் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுக்காத ஆத்திரத்தில் அவர் மீது அசிட் வீசிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத்தை சேர்ந்தவர் சிராஜ் (32), இவர் மனைவி ஃபரா (25), தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில், ஃபரா மீண்டும் கர்ப்பமானார். இரண்டாவது பிரசவத்திலும் அவருக்கு பெண் குழந்தையே பிறந்துள்ளது.

இதையடுத்து ஆண் குழந்தையை எதிர்ப்பார்த்து ஏமாந்து போன சிராஜுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஃபரா மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஃபராவிடம் சிராஜ் சண்டை போட்டு வந்த நிலையில் கடந்த எட்டாம் திகதி உலக பெண்கள் தினத்தன்று மனைவி என்றும் பாராமல் ஃபரா மீது சிராஜ் அசிட் வீசியுள்ளார்.

இதையடுத்து முகம், கை மற்றும் வயிற்றில் படுகாயமடைந்த ஃபரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

பொலிசாரிடம் ஃபரா அளித்த வாக்குமூலத்தில், சிராஜ் மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார்.

இதை வைத்து சிராஜ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பெண் குழந்தையை மீண்டும் பெற்றெடுத்தால் ஆத்திரத்தில் அசிட் வீசியதாகவும் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் தலைமறைவாக உள்ள சிராஜை தேடி வருகிறார்கள்.

வவுனியாவில் பெற்ற குழந்தையை விற்றுவிட்டு காணவில்லை என நாடகமாடிய தாயார் கைது!!

வவுனியா வைத்தியசாலையில் (09.03) நேற்றையதினம் குழந்தை திருட்டுப்போனதாக தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் குழந்தை அனுராதபுரத்தில் இன்று (10.03) பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11 மணியளவில் 5ஆம் இலக்க விடுதில் கடந்த 7ஆம் திகதி இரவு பிறந்த ஆண் குழந்தை ஒன்றினை வைத்தியசாலை விடுதியில் தனக்குப் பக்கத்தில் நின்றிருந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவரிடம் கொடுத்துவிட்டு குழந்தையின் தாயார் குளியலறைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது குழந்தையை வாங்கிய நபரையும் தனது குழந்தையையும் காணவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் தாயார் ஒருவரால் முறைப்பாடு மேற்கொண்டிருந்தார்.

குறித்த குழந்தையின் தாயார் பொகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என்பதுடன் திருடப்பட்ட குழந்தை அவரின் 4ஆவது ஆண் குழந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் குழந்தையை பெற்ற தாயாரே தனது குழந்தையை விற்றுவிட்டு திருட்டு போய்விட்டதாக நாடகமாடியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளதுடன் குறித்த குழந்தையின் தாயாரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

அனுராதபுரத்தில் மீட்கப்பட்ட குழந்தையுடன் குழந்தையை வாங்கியவர் என சந்தேகிக்கபடும் பெண் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளதுடன் இருவரையும் வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் : உண்மையை வெளியிட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம்!!

ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் என்ற பேச்சுக்கே இடமில்ல்லை என இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ரீதேவி கடந்த 24ஆம் திகதி துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார்.

முதலில் அவர் மாரடைப்பால் இறந்தார் என கூறப்பட்ட நிலையில் பின்னர் தண்ணீர் மூழ்கி இறந்தார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் அவர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் இதற்கு இந்தியாவின் வெளியுறவு துறை அமைச்சகம் சார்ப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் கூறுகையில், எனக்கு தெரிந்தவரை ஐக்கிய அரபு அமீரகம் ஸ்ரீதேவி மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் எங்களிடம் கொடுத்துவிட்டது.

அவர் மரணத்தில் மர்மம் இருந்திருந்தால் அது தொடர்பான விடயம் இந்நேரம் வெளியில் வந்திருக்கும். அதனால் அவர் மரணத்தில் மர்மம் மற்றும் சந்தேகம் கிடையாது என கூறியுள்ளார்.

கொழும்பில் பலத்த பாதுகாப்புடன் தொழுகையில் ஈடுபட்ட பங்களாதேஷ் அணி வீரர்கள்!!

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணி வீரர்கள் நேற்று கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை காரணமாக, நேற்றைய தினம் முக்கிய பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களின் தொழுகைகளுக்கு பலத்த பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பங்களாதேஷ் அணி வீரர்கள் கொழும்பில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த பள்ளிவாசலுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

ஒரே நாளில் கூகிளில் இலங்கையர் படைத்த சாதனை!!

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் தீவிரமடைந்த வன்முறை சம்பவங்களை அடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன.

கடந்த புதன்கிழமை முதல் தற்போது வரையில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக். வட்ஸ்அப், வைபர் உள்ளிட்டவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனினும் இந்த நடவடிக்கை உலகளாவிய ரீதியாக சாதனையாக பதிவாகி உள்ளது.

இணையப் பயன்பாடு காரணமாக இரு சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. அதில் முதலாவது சாதனை, ஒரே நாளில் வெளிநாட்டு இணைய முகவரி (IP) பயன்படுத்தி சமூக வலைத்தளங்களுக்கு சென்றமை மற்றும் கூகிள் ஊடாக VPN (Virtual Private Network) என்ற செயலியை அதிக முறை பதிவிறக்கம் செய்த நாடாக இலங்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களில் கூகுளின் பிரபலமானவைகள் ஊடாக (Google Trends) மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த நாட்களில் Porn என பயன்படுத்தப்பட்ட வார்தை அளவு VPN என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

VPN மற்றும் Google என்ற வார்த்தை சமமான அளவு கூகுளின் பிரபலமானவைகள் ஊடாக (Google Trends) பயணித்துள்ளது.

அத்துடன் இணையத்தளத்தை பயன்படுத்துபவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் VPN (Virtual Private Network) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் அண்மைய காலமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த இணையத்தளங்களும் இயங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்கள் 72 மணித்தியாளங்கள் முடக்கப்பட்ட போதிலும், ஜனாதிபதி ஊடக பிரிவினால் ஜனாதிபதியின் செய்தி ஒன்று அவரது பேஸ்புக் பக்கத்தில் இணைக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தும் விடயமாகியுள்ளது.

சமூக வலைத்தள முடக்கப்பட்டமையினால் கண்டி மாவட்டத்தின் வன்முறை குறைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் கூறிய விடயம் நகைச்சுவையானது என சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இவ்வாறு சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டமையினால் எந்த ஒரு பயனும் இல்லை என நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளமையினால் இவ்வாறு முடக்கப்படுவதில் எவ்வித பயனும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

-தமிழ்வின்-

கண்டியில் பரபரப்பை ஏற்படுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்!!

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் வீதியில் உறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த அலுத்கமகே என்பவரே நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு நடவடிக்கை ஈடுபட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உடனடியாக இடமாற்றம் வழங்குமாறு கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் அவர் ஈடுப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டிய – கண்டி பிரதான வீதியில் வெள்ளை கோட்டில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக இரண்டு மணித்தியாலங்கள் அந்த வீதியில் வாகன போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக மாற்று வீதி வழங்குவதற்கு நாவலப்பிட்டிய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி, குறித்த நாடாளுமன்ற உறுப்பினருடன் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ள நிலையில், பொலிஸ் பொறுப்பதிகாரிகளை நீக்கும் வரை தனது எதிர்பை கைவிடுவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அமைச்சர் புதிய அறிவிப்பு!!

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தயாராவதாக சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தாம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசிய போது அவர் குறித்த வலைத்தளங்கள் ஜெர்மன் மற்றும் பிரித்தானியாவில் எவ்வாறு இயக்கப்படுகின்றன என்பதை ஆராயுமாறு தம்மை பணித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் அடிப்படையிலேயே புதிய சட்டங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அமைச்சர் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.