மகன், மகளுடன் சேர்ந்து சடலமாக மிதந்த தந்தை : நடந்தது என்ன?

குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவர் அணையில் குதித்து மகன், மகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜீவா (40) இவரின் மனைவி ஹேமாவதி (32). தம்பதிக்கு கெஜலட்சுமி (12) என்ற மகளும் ராஜேஷ் (7) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக ஜீவாவுக்கும் ஹேமாவதிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் கணவருடன் சண்டை போட்டு கொண்டு சில தினங்களுக்கு முன்னர் ஹேமாவதி தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

நேற்று முன் தினம் காலை ஜீவா தன் வீட்டின் அருகே உள்ள பெற்றோரிடம் மகன், மகளை பள்ளியில் விட்டுவருவதாக கூறி பைக்கில் அழைத்துச் சென்றார். மாலை ஆகியும் மூவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜீவாவின் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்தபோது இரண்டு சிறார்களும் பள்ளிக்கு வராதது தெரியவந்தது.

இது குறித்து பொலிசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஜீவாவையும் அவர் குழந்தைகளையும் பொலிசார் தேடினார்கள்.

இந்நிலையில் நேற்று மோர்தானா அணையில் ஜீவா, ஜெகலட்சுமி, ராஜேஷ் ஆகியோர் சடலமாக மிதந்தனர். விசாரணையில், குடும்பத் தகராறு காரணமாக ஜீவா தனது மகன், மகளுடன் அணையில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்த நிலையில் இது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு இலங்கை மக்களுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பு!!

இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மக்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பொன்றை இலங்கை அரசாங்கம் விடுத்துள்ளது.

அந்த வகையில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், பொருட்களின் விலை குறைப்பானது எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடைமுறையில் காணப்படும் என கூறப்பட்டுள்ளது.

பாஸ்மதி ஒரு கிலோகிராம் – 120 ரூபா
வெள்ளை நாட்டரிசி ஒரு கிலோ கிராம் – 60 ரூபா
உடைக்கப்பட்ட அரிசி ஒரு கிலோகிராம் – 59 ரூபா
பருப்பு ஒரு கிலோகிராம் – 109 ரூபா
பயறு ஒரு கிலோகிராம் – 195 ரூபா
பெரிய வெங்காயம் ஒரு கிலோகிராம் – 110 ரூபா
காய்ந்த மிளகாய் ஒரு கிலோ கிராம் – 220 ரூபா

இந்த பொருட்களை குறைப்பட்ட விலையின் அடிப்படையில் மொத்த கூட்டுறவு விற்பனை நிலையத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயில் மோதுண்டு ஒருவர் பலி!!

கல்கிஸ்சை பிரதேசத்தில் ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருதானையில் இருந்து களுத்துறை நோக்கில் சென்ற ரயிலில் மோதுண்டு இந்த நபர் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் கூறியுள்ளனர்.

அநுராதபுரத்தை சேர்ந்த 25 வயதான இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கல்கிஸ்சை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பில் கோர விபத்தில் சிக்கிய இளம் பெண் மரணம்!!

திடீர் விபத்தில் படுகாயமடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

27 வயதான குறித்த பெண் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற விபத்தில் தலையில் காயமடைந்த நிலையில் குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

கடுவெல, கொத்தலாவல பிரதேசத்தை சேர்ந்த 27 வயதான லஹிர என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நுகேகொட ஸ்டென்லி திலக்கரத்ன மாவத்தையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவரினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் 10 மாதங்களுக்கு அதிகமான காலப்பகுதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

திருமணமாகி ஆறு மாதங்களில் உயிரிழந்த இளம் பெண் : யாழில் நடந்த சோகம்!!

யாழ்ப்பாணத்தில் இளம் குடும்ப பெண்ணொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார். கரவெட்டி இமயாணன் பகுதியை சேர்ந்த 22 வயதான மனோரஞ்சன் சிந்துஜா என்ற பெண்னே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமணம் நடந்து ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி இரவு சாப்பாடு செய்வதற்காக மண்ணெண்ணை அடுப்பை பற்றவைத்துள்ளார். இதன்போது குறித்த பெண் மீது தீப் பற்றியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை!!

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் படித்த அணுசக்தி இயற்பியலாளரான டயஸ் பலார்ட், கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபா அறிவியல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார்.

மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 68 வயதான டயஸ் பலார்ட், கடந்த பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பின்னர் தொடர்ந்து வீட்டிலிருந்து சிகிச்சை பெற்றுவந்த இவர், விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

கியூபாவை ஐந்து தசாப்த காலமாக ஆட்சி செய்துவந்த பிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ஆம் ஆண்டு தனது 90ஆவது வயதில் காலமானார். அவர் மறைந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், அவரது மகன் இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளமை கியூப அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

தயாரிப்பாளர் சங்க நோட்டீஸ் : சிம்பு, வடிவேலு, திரிஷா விளக்கம்!!

நடிகர்கள் சிம்பு, வடிவேலு, நடிகை திரிஷா ஆகியோர் மீது பட அதிபர்கள் சங்கத்தில் 3 தயாரிப்பாளர்கள் புகார்கள் அளித்து இருந்தனர். இது, பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் சிம்புவால் தனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கூறியிருந்தார்.

வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்ததாகவும், அதில் திடீரென்று நடிக்க மறுத்து வடிவேலு விலகி விட்டதாகவும், இதனால் தனக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த படத்தின் தயாரிப்பாளர் ஷங்கர் குற்றம் சாட்டி இருந்தார்.

நடிகை திரிஷாவை ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் சாமி-2 படத்துக்கு ஒப்பந்தம் செய்து இருந்தனர். ஆனால் அந்த படத்தில் நடிக்க முடியாது என்று அவர் விலகி விட்டார். இதனால் திரிஷா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிம்பு மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் தாமதம் செய்வதாக சமீபத்தில் குற்றம் சாட்டப்பட்டு பிரச்சனை கிளப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால் புகாருக்கு இன்னும் சிம்பு பதில் அளிக்கவில்லை என்று கூறினார்.

இந்த நிலையில் சிம்பு, வடிவேலு, திரிஷா ஆகிய மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து நடிகர் சங்கத்துக்கு பதில் அனுப்பி உள்ளனர்.

திரிஷா அனுப்பி உள்ள விளக்க கடிதத்தில் “சாமி-2 படத்தில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் அந்த படத்தில் இருந்து விலகிக் கொள்கிறேன். இதற்காக போட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து திருப்பி அனுப்புகிறேன்” என்று கூறியுள்ளார். இதன்மூலம் திரிஷாவை சமரசம் செய்து எப்படியாவது படத்தில் நடிக்க வைத்து விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த படக்குழுவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

சிம்பு அளித்துள்ள பதிலில் “அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்கு நான் முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். படம் வெளியாகும்போது என் மீது குற்றம் சொல்லாமல் இப்போது கூறுவது உள்நோக்கம் கொண்டது” என்று கூறியுள்ளார்.

வடிவேலுவும் இம்சை அரசன் இரண்டாம் பாகம் படத்தில் தொடர்ந்து நடிக்க சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறார். இவர்கள் அளித்த விளக்கங்களை நடிகர் சங்கம் பெற்று தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு அனுப்பி இருக்கிறது.
இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதா? வேண்டாமா? என்பது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கம் விரைவில் முடிவு எடுத்து அறிவிக்கும்.

பாரிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு!!

வெலிகம பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பாரிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.

டிபர் ரக வாகனம் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், காயமடைந்தவர்கள் வெலிகம, வலான வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெலிகம, கொஹுனுகம பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பாக டிபர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெலிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் OIC க்கு லஞ்சம் கொடுக்க முற்பட்டு சிக்கிக் கொண்ட நபர்!!

பேருவளை பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாடு திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த வேனை விடுவிப்பதற்கு 25,000 ரூபா பணத்தை, பொலிஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரிக்கு சந்தேகநபர் இலஞ்சமாக கொடுக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேருவளை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் என்பதுடன், அவர் இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார்.

வவுனியாவிற்கு வருகைதரும் ஜனாதிபதி : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

வவுனியா யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் எதிர்வரும் 05.02.2018 அன்று இடம்பெறவிருக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வருகை தரவுள்ள நிலையில் வவுனியா நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வவுனியா நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களினதும் , மைதானத்தினை சூழவுள்ள பகுதிகளிலும் உள்ளர்களினதும் பெயர், முகவரி, தொலைபேசியிலக்கம், அடையாள அட்டையிலக்கம் என்பவற்றை பொலிசார் சேகரித்து வருகின்றனர்.

ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினரின் ஆலோசனையிலேயே இப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியாவில் நீர் வழங்கல் சபையினர் சம்பள அதிகரிப்புக் கோரி ஆர்ப்பாட்டம்!!

 
சம்பளப் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் வவுனியாவில் இன்று(02.02.2018) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

நாடளாவிய ரீதியில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் சம்பள உயர்வு, நியமனத்தில் அரசியல் தலையீடு, தனியார் மயப்படுத்த முயற்சி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.

அதற்கு ஆதரவாக வவுனியா நீர்வழங்கல் வடிகாலமைப்பு உத்தியோகத்தர்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் அவர்களது அலுவலகத்திற்கு முன்னால் ஒரு மணிநேரம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர். இதன்போது அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

மக்களுக்கு அவசியமான தேவையினை நாம் நேரம் பாராது வழங்கி வருகின்றோம். எமக்கு 2015 ஆம் ஆண்டு வழங்கப்பட வேண்டிய சம்பள அதிகரிப்பு இன்று வரை இந்த அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு 10 வீத நியமனம் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அது நிறுத்தப்பட்டு தற்போது அரசியல் ரீதியாக நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையை தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனைநாம் வன்மையாக கண்டித்து எமக்கு நீதியை வழங்குமாறு இன்று இந்த போராட்டத்தை மேற்கொள்கின்றோம். எமக்கு தீர்வு கிடைக்காதுவிடின் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்தனர்.

மூன்று மாதக் குழந்தையை கொன்ற கொடூர தாய் : அதிர்ச்சிக் காரணம்!!

 
பீஹாரில் பெண்ணொருவர் தன் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் தனது மூன்று மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள Bakunthpur மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஜல், இவருக்கு மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் ஒருநாள் காஜலின் மாமனார் கைலாஷ் பட்டேல், வெளியே சென்று விட்டு ஒரு மணிநேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அதன் பின்னர், கிணற்றுக்கு அருகில் இருந்த ‘motor pump’-ஐ ‘Switch off’ செய்ய காஜலை அழைத்துள்ளார். ஆனால் அதற்கு காஜல் பதில் ஏதும் கூறாமல் இருந்ததால், அவரே கிணற்றுக்கு சென்று ‘Switch off’ செய்துள்ளார்.

அப்போது, தனது கால் இடறியதால் கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதைப் பார்த்துள்ளார் கைலாஷ். உடனே அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று காஜலைப் பார்த்துள்ளார்.

அப்போது காஜல் மயக்கமடைந்த நிலையில் வீட்டினுள் கிடந்துள்ளார், அவரின் வாயில் துணி ஒன்று திணிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கைலாஷ் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அதன் பின்னர், குழந்தையின் உடல் மீட்கப்பட்டு, காஜல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு விரைந்த பொலிசார் காஜலிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் காஜல் கூறுகையில், ’என் வீட்டின் பின்பக்கம் முகமூடி அணிந்த மர்ம நபர் நுழைந்தான். சத்தம் கேட்டபோது, முதலில் அது என் கணவர் என்று நான் நினைத்தேன். அந்த மர்ம நபர் என் கை, கால்களை கட்டியதோடு, என் வாயில் துணியை வைத்து அடைத்து விட்டான். அதனால் என்னால் சத்தம் போட முடியவில்லை. அதன் பின்னர், எனது குழந்தையை கொண்டு சென்று கிணற்றில் வீசி விட்டு ஓடிவிட்டான்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பொலிசார் குழந்தை குறித்து தீவிரமாக காஜலிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் பதில் கூற திணறியுள்ளார். மேலும், அவர் பொய் சொன்னதை பொலிசார் கண்டுபிடித்துவிட்டனர். அதன் பின்னர், தன் குழந்தையை கொன்றது தாம் தான் என்று, காஜல் உண்மையை ஒப்புக் கொண்டார். தன்னால் குழந்தையை சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்றும், தனது மகிழ்ச்சியான வாழ்விற்கு குழந்தை தடையாக இருந்ததால் அதனை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் காஜலின் உறவினர்களும் அதனை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, பொலிசார் காஜலை கைது செய்தனர்.

ஓலைக்குடிசைக்குள் கற்கும் உயர்தர மாணவியின் இலட்சியம் நிறைவேறுமா?

 
இறுதி யுத்தத்தின் பின்னர் புதுக்குடியிருப்பு, வேணாவில் பகுதியில் மீள்குடியேறிய சிறுமி ஒருவர் அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் தற்பொழுது உயர்தரக் கல்வியினை தொடர்ந்துள்ளதாக கவலை தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்று வரும் குறித்த சிறுமி வேணாவில் கிராமத்தில் தற்காலிக ஓலைக்குடிசை ஒன்றில் கடந்த 6 வருடங்களாக வாழ்ந்து வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சிறுமியின் குடும்பத்தை சார்ந்தவர்கள் 2012ம் ஆண்டு குறித்த கிராமத்தில் மீள்குடியேறியுள்ள போதும் இதுவரை அவர்களுக்கு நிரந்தர வீடு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் குறித்த சிறுமி ஒரு சிறந்த வைத்தியராகி பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற இலட்சியத்துடன் கல்வியை தொடர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று பூமிக்கு அருகில் வரும் விண்கல்!!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் 4 ஆம் திகதி பூமிக்கு அருகில் விண்கல் பயணிக்க உள்ளது. 2002 என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல்லே பூமிக்கு அருகில் பயணிக்கும் என அமெரிக்காவின் நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த விண்கல்லால் பூமிக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. விண்கல்லை நாசா நிறுவனம் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக கூறியுள்ளது. பூமிக்கு அருகில் 18 மில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் இந்த விண்கல் பயணிக்கும் எனவும் நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வவுனியா கோவில்குளம் சிவன்கோவில் குபேர வாசல் கோபுரதிற்கான  அடிக்கல் நாட்டல்!(படங்கள் வீடியோ)

வவுனியா கோவில்குளம்  அருள்மிகு  ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின்  குபேர வாசல் (வடக்கு வாசல் ) கோபுரதிற்கான  அடிக்கல்  நாட்டும் வைபவம்  தைப்பூச  தினமான  நேற்று (31.01.2018)புதன்கிழமை  நண்பகல் வேளையில்  இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில்  ஏராளமான  பக்தர்கள்  கலந்து கொண்டு அடிக்கல்  நாட்டியமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் தீர்த்தோற்சவம்!(படங்கள்)

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவிலின்  வருடாந்த  மகோற்சவத்தில் தீர்தோற்சவம்  நேற்று 31.01.2018  புதன்கிழமை  காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது .

தொடர்ந்து  மதியம் 1.00 மணியளவில்  கொடியிறக்க  வைபவமும்  சண்டேஸ்வர  அபிசேகமும்  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது .