பாடகியாக அறிமுகமாகிறார் விஜயின் மகள்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜயின் மகள் திவ்யா சாஷா தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜயின் 62 ஆவது படத்தின் படப்பிடிப்புகள் இடம்பெற்று வருகின்றன.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார்.

விஜயின் மகள் திவ்யா சாஷா ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதில் சிறு வயது மகளாக மீனாவின் மகள் நைனிகாவும், சற்று வயது கூடியதும் அதே கதாப்பாத்திரத்திற்கு திவ்யா சாஷாவும் நடித்திருந்தனர்.
இவர் தந்தை விஜய், பாட்டி ஷோபா சந்திரசேகரன் போல பாடும் திறமை கொண்டவர். தற்போதே பல பாடல்களை அருமையாகப் பாடி பாராட்டுகளைப் பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திவ்யா சாஷா விரைவில் திரைப்படத்தில் பாடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
விஜய், மகளை தனது படத்தில் பாடகியாக அறிமுகப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

வளர்க்கப்பட்ட காதுகளை பொருத்தி சீனா விஞ்ஞானிகள் சாதனை!!

சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மைரோடியா நோயால் பாதிக்கப்பட்ட 5 குழந்தைகளுக்கு ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் பொருத்தி சாதனைப்படைத்துள்ளனர்.

சீனா விஞ்ஞானிகள் மனிதர்களின் வளர்ச்சியடையாத காதுகளில் உள்ள செல்கள் மூலம் புதிய காதுகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மைரோடியா என்ற நோய் தாக்கியதால் பிறக்கும் போதே ஒரு காது வளர்ச்சியடையாமல் உள்ளனர்.

அவர்களுக்கு மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் செயற்கை காதுகள் பொருத்தப்பட்டது. ஆனால் பல பக்க விளைவுகள் ஏற்பட்டன.

இதைத்தொடர்ந்து ஆய்வுக் கூடங்களில் புதிய காதுகள் வளர்க்கப்பட்டு பொருத்தும் இந்த புதிய முயற்சி எடுக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

குழந்தைகளுக்கு இயற்கையான முறையில் உருவாக்கப்பட்டு புதிய காதுகள் பொருத்தப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

பச்சிளம் குழந்தையின் முகத்தில் எலியை 100 முறை கடிக்க வைத்த கொடூர பெற்றோர் கைது!!

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை 100 முறை எலியை விட்டு கடிக்க விட்ட கொடூர பெற்றோருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் குடியிருக்கும் இளம் பெற்றோர் பிறந்து 15 நாட்களேயான பிஞ்சு குழந்தையின் முகத்தை எலியை விட்டு கடிக்க விட்டுள்ளனர்.

பெற்றோரின் இந்த கொடூர செயலில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தையானது பல்வேறுகட்ட அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தம்பதியினர் குடியிருக்கும் வீட்டில் எலித்தொல்லை அதிகம் என கூறப்படுகிறது. இருப்பினும் குழந்தையை அவர்கள் எலியிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றே தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சமூக ஆர்வலர் ஒருவர் அந்த குடியிருப்பில் சென்று பார்வையிட்டுள்ளார்

அங்கு அவர்கள் கண்ட காட்சிகள் மிகவும் கொடூரமாக இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் மேலாடைகள் மட்டுமின்றி அறையில் ரத்தக்கறையும் எலிகளின் கால்த்தடமும் பதிந்து காணப்பட்டதாகவும் அதிர்ச்சி விலகாமல் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந் நிலையில் தம்பதிகளை கைது செய்த பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவர்கள் மீதான குற்றம் நிரூபணமான நிலையில் இருவருக்கும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதுமட்டுமின்றி 304 நாட்களுக்கு பின்னரே இருவருக்கும் பிணை வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தற்போது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் குழந்தையானது இன்னொரு பெற்றோரால் தத்தெடுக்கப்பட்டுள்ளது.

ரயில் மோதி இரண்டு பெண்கள் பலி!!

நீர்கொழும்பில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில், முச்சக்கரவண்டியொன்று மோதியதில் இரண்டு பெண்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நேற்று (3) இரவு 7.35 மணியளவில் சீதுவ, ஈரியகஹலிந்த புகையிரதக் கடவையில் இடம்பெற்றுள்ளது.

புகையிரதம் மோதியபோது, முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் பயணித்திருந்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த நிலையில் நால்வரும் நீர்கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் கடும் காயங்களுக்கு உள்ளான இரண்டு பெண்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆ,ண்கள் இருவரும் பாரதூரமான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பெண் வேட்பாளர் மீது பாலியல் தொந்தரவு!!

உள்ளூராட்சித் தேர்தலில் வெலிக்கந்த பிரதேசத்தில் போட்டியிடும் பெண் வேட்பாளரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஒருவரை கைது செய்வதற்காக வெலிக்கந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 ஆம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றதாக குறித்த வேட்பாளர் முறைப்பாடு செய்ததையடுத்து வெலிகந்த பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு, சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்ய வெலிக்கந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் இலங்கையில் 70வது சுதந்திரதின நிகழ்வுகள்!!

 
வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இலங்கையின் 70வது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதாரனபத்திரன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், பிரதம விருந்தினராக வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளருமான கே.காதர் மஸ்தான் வடமாகாண சபை உறுப்பினர் வி.ஜெயதிலக மற்றும் வன்னி பிராந்தியப்பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி, கடற்படை, விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படைகளின் பிரதானிகள், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா பொலிஸ் நிலையர் பொறுப்பதிகாரி, வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், வவுனியா, செட்டிகுளம், வவுனியா தெற்கு பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செலயக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டதுடன் பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பும் இடம்பெற்றது.

வவுனியா A9 வீதியில் வாகனம் தடம்புரண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!!

 
புளியங்குளம் புதூர் பகுதியில் இன்று (04.02.2018) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

யாழ்ப்பாணத்திலிருந்து மரக்கறிகளை ஏற்றிக்கொண்டு தம்புள்ளை நோக்கி பயணித்த வாகனம் புளியங்குளம் புதூர் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் வாகனத்தின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் மாபெரும் பரப்புரைக்கூட்டம்!!

 
வவுனியாவில் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் மாபெரும் பரப்புரைக்கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்று (03.02) மாலை 4.30 மணியளவில் கவிஞர் அருந்தவராசா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இப்பரப்புரைக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராசா, சனநாயக தமிழரசுக் கட்சியின் செயலாளர் எஸ்.சிவகரன், மற்றும் உள்ளுராட்சி சபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.‌

புதிய மைல்கல்லை எட்டிய இலங்கை அணி ஜோடி!!

வங்கதேச அணியுடனான டெஸ்டில் இலங்கை துடுப்பாட்ட ஜோடி இணைப்பாட்டம் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இலங்கை- வங்கதேசம் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இலங்கை இதுவரை 3 விக்கெட்கள் இழப்புக்கு 504 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் 196 ஓட்டங்களும், தனஞ்செய சில்வா 173 ஒட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.
இரண்டாவது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 308 ஓட்டங்களை இணைப்பாட்டமாக எடுத்துள்ளனர்.

இதன் மூலம் இரண்டாவது விக்கெட்டுக்கு அதிக இணைப்பாட்ட ஓட்டங்கள் எடுத்த மூன்றாவது இலங்கை ஜோடி என்ற பெருமையை மெண்டிஸ்- சில்வா ஜோடி பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் முதலிடத்தில் ஜெயசூர்ய – மஹானாம ஜோடி 576 ஓட்டங்களுடனும், இரண்டாம் இடத்தில் சங்கக்கார – மார்வன் அத்தபத்து ஜோடி 438 ஓட்டங்களுடனும் உள்ளனர்.

கைத்தொலைபேசியால் நொடிப்பொழுதில் பறிபோன கண்பார்வை!!

சீனாவில் சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த செல்போன் வெடித்ததில் சிறுவனின் கண்பார்வை பறிபோயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Guangxi மாகாணத்தில் கடந்த 31 ஆம் திகதி சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த செல்ஃபோன் வெடித்ததில் 12-வயது சிறுவன் படுகாயம் அடைந்துள்ளான்.

செல்ஃபோன் வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த சிறுவனின் குடும்பத்தார், காயம்பட்ட சிறுவனை சிறிது நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட Meng Jisu என்னும் சிறுவனின் வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது, சிறுவனின் ஆள்காட்டி விரல் துண்டிக்கப்பட்டு, வலது கண் பார்வையும் இழந்துவிட்டான்.
ஆனால் சிறுவனின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என சிறுவனின் பெற்றோர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வெடித்து சிதறிய Hua Tang என்னும் சீன நிறுவன செல்ஃபோனை இரண்டு வருடங்களுக்கு முன்னர் தான் வாங்கியதாக சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

சார்ஜ் ஏறும்பொழுது செல்ஃபோன் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி பல ஆராய்ச்சியாளர்கள் அறிவுறித்தியும் மக்கள் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக பல சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

6 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்து எரித்துக் கொலை செய்த 14 வயதுச் சிறுவன்!!

 
தமிழகத்தில் 6 வயது சிறுமியை 14 வயது சிறுவன் எரித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் தூத்துக்குடியில் எரிந்த நிலையில் சிவகாமி என்னும் 6 வயது பள்ளி சிறுமியின் பிரேதம் கிடைத்துள்ளது.

சிறுமி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய தீவிர விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில் சிறுமி சிவகாமி பள்ளி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அதே பள்ளியை சேர்ந்த 14 வயது சிறுவன் பின்தொடர்ந்து சென்றுள்ளான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் அத்துமீறி நடந்ததால் சிறுமி கத்தியுள்ளார், உடனடியாக பயந்து வெளியே ஓடிவிட்டான். சிறிது நேரம் கழித்து, மீண்டும் வந்த சிறுவன் சிறுமியின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளான். ஒன்றும் தெரியாதது போல் தனது வீட்டுக்கு சென்று, மண்ணெண்ணெய் எடுத்து வந்து சிறுமியை எரித்துள்ளான்.

வீட்டைப் பூட்டிவிட்டு, சிவகாமி படிக்கும் பள்ளிக்கு சென்று ஆசிரியரிடம் வீடு தீப்பிடித்து எரிவதாக தெரிவித்துள்ளான். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயை அணைத்ததில் சிறுமி சடலமாக கிடப்பது தெரியவந்தது.

பொலிசார் விசாரணை நடத்தி தீ விபத்தில் சிறுமி இறந்துவிட்டதாக முதலில் வழக்குபதிவு செய்தனர்.

இதன்பின்னர் 6 வயது சிறுவன் நடந்த விபரங்களை கூற, 14 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியதில் உண்மை தெரியவந்தது. இந்த விவகாரம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இறுதிச் செலவுக்கு பணம் வைத்துவிட்டு உயிரைவிட்ட முதியவர் : நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

 
தமிழ்நாட்டில் இறுதி செலவுக்கு பணத்தை வைத்து விட்டு ஆதரவற்ற முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வயல்வெளியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி சோதனை செய்தார்கள். அப்போது முதியவர் உடல் அருகில் கடிதம் ஒன்று இருந்தது. அதில், நான் ஒரு அனாதை, எனது சொந்த ஊர் பட்டுக்கோட்டை. எனது இடுப்பில் 300 ரூபாய் உள்ளது அதை வைத்து என் சடலத்தை புதைத்து விடுங்கள் என முதியவர் எழுதியிருந்தார்.

இதையடுத்து முதியவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு பொலிசார் எடுத்து சென்றனர். இச்சம்பவம் அந்த பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது.

மன்னித்து விடுங்கள் அம்மா : தற்கொலைக்கு முன் சிறுமியின் உருக்கமான கடிதம்!!

ஹைதராபாத் பள்ளி மாணவியால் பள்ளிக்கட்டணம் செலுத்த முடியாமல் போன நிலையில் அவமானம் தாங்காமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மல்கஞ்கிரி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தவர் சாய் தீப்தி (14). தீப்தியின் பெற்றோர் 2000 ரூபாய் கல்வி கட்டணத்தை செலுத்தாததால் அவரை தெரிவு எழுத பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. மேலும் வகுப்பிலிருந்து ஆசிரியர்களால் சக தோழிகள் முன் தீப்தி வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதையடுத்து பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த தீப்தி தனது தங்கையிடம் பள்ளியில் தனக்கு நேர்ந்த அவமானத்தை சொல்லி அழுதுள்ளார். இதையடுத்து நேற்று தனது வீட்டில் தீப்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் மாணவியின் சடலம் அருகில் கடிதம் ஒன்றை அவர்கள் கைப்பற்றினார்கள்.

அதில் என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, பள்ளியில் கட்டணம் செலுத்தாததால் என்னை தெரிவு எழுத அனுமதிக்கவில்லை என எழுதப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூக்கில் தொங்கிய இளம்பெண் : தற்கொலைக்கு முன்னர் உருக்கமான கடிதம்!!

இந்தியாவில் காதல் கணவரின் குடும்பத் தொல்லையால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பஞ்சாப்பின் மொஹாலியை சேர்ந்த பெண் அவந்திகா(வயது 18), பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி ஹர்தீப் என்பவரை காதலித்து மணமுடித்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் அவந்திகா, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மாமியார் மதிய உணவு இடைவேளைக்காக வீட்டுக்கு வந்த போது அவந்திகாவின் அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

நீண்டநேரம் ஆகியும் கதவை திறக்காததால், கதவை உடைத்து பார்த்த போது மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அவந்திகாவின் சடலத்தை மீட்ட பொலிசார் வீட்டை சோதனையிட்டதில், தற்கொலைக்கு முன் அவந்திகா எழுதிய கடிதம் கிடைத்துள்ளது.

அதில் காதல் வாழ்க்கை பற்றி கூறியுள்ள அவந்திகா, ஹர்தீப் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகவும் அதற்கு கணவரின் பெற்றோரும் உடந்தை கூறியுள்ளார். ஒருமுறை கருத்து வேறுபாட்டில் மாமனார் கழுத்தை நெறித்து துன்புறுத்தியதாகவும், கணவரிடம் முறையிட்டும் பலன் இல்லை எனவும் கூறியுள்ளார்.

இக்கடிதத்தை ஆதாரமாக கொண்டு பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், தலைமறைவான அவந்திகாவின் மாமனார் மற்றும் கணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

எல்லோரும் நடித்தார்கள் : பாலியல் தாக்குதலுக்கு ஆளான நடிகை உருக்கம்!!

பிரபல திரைப்பட நடிகை சனுஷா ரயிலில் பயணிக்கும் போது அவரை பலாத்காரம் செய்ய நபர் ஒருவர் முயற்சி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் எத்தன், ரேணுகுண்டா, அலெக்ஸ்பாண்டியன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் சனுஷா. இவர் ஏராளமான மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு சனுஷா கன்னூரிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது தமிழ்நாட்டை சேர்ந்த அண்டோ போஸ் (40) என்ற நபர் தூங்கி கொண்டிருந்த சனுஷாவின் உதட்டில் கை வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

யாரோ தன் மீது கை வைப்பதை பார்த்து தூக்கத்திலிருந்து எழுந்த சனுஷா விளக்கை போட்டுள்ளார். அப்போது எதிரில் போஸ் நின்றிருந்த நிலையில் அவர் கையை பிடித்து சனுஷா தடுத்துள்ளார்.

ரயிலில் பல பயணிகள் இருந்தபோதும் யாரும் சனுஷாவுக்கு உதவ முன்வரவில்லை. அங்கிருந்த உன்னி மற்றும் ரஞ்சித் ஆகிய இருவர் மட்டுமே உதவி செய்துள்ளனர்.

இதுகுறித்து உடனடியாக ரயில்வே பொலிசில் சனுஷா புகார் அளித்த நிலையில் அண்டோ போஸை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

இச் சம்பவம் தொடர்பில் சனுஷா கூறுகையில், என்னை காப்பாற்ற கூறியும் இரண்டு பேரை தவிர யாரும் உதவ முன்வரவில்லை, எல்லாரும் தூங்குவது போன்று நடித்தார்கள்.
மக்களின் போராட்டம் எல்லாம் பேஸ்புக்கில் தொடங்கி அங்கேயே முடிந்துவிடும் போல உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.

பெற்ற தாயை துடிக்க துடிக்க கொன்ற மகன் : பதறவைக்கும் வீடியோ!!

இந்தியாவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை மகனே அடித்து கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஷாஜஹான்புர் சேர்ந்த 82 வயது மதிக்கத்தக்க மூதாட்டி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த ஜனவரி 18ம் திகதி மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது மகனான ஜோகேந்திரா சவுத்ரியே அடித்து துன்புறுத்தியதே காரணம் என தெரியவந்தது.

இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

அதில் வயதான தாய் படுக்கையிலேயே அசிங்கம் செய்துவிட்டதாக கூறி மகன் தாக்குகிறான். தாயின் கழுத்தை நெறித்தும், மூக்கை பொத்தியும் கொலை முயற்சியில் ஈடுபடுகிறார். சிறிது நேரத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழக்கிறார், இக்காட்சிகளை அவரது உறவினர் ஒருவர் செல்போனில் பதிவு செய்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து மூதாட்டியின் மகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.