ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ரோபோ ஒன்று, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரியவுள்ளது.
ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ரோபாடிக் ஆய்வகத்தில், வரவேற்பாளர் வேலைக்காக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. இதனை, ஆய்வக இயக்குனர் ஹிரோஷி இசிகுரோ உருவாக்கினார்.
அதன் பின்னர் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களுடன் உரையாடும் திறன், மனப்பாடம் செய்யும் திறன் கொண்டாதாக இந்த ரோபோ மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த ரோபோவை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பயன்படுத்த விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த ரோபோ பார்ப்பதற்கு, 23 வயது பெண் தோற்றத்தில் உள்ளது. இது, மனிதர்களைப் போல கண் இமைக்கும் திறன் கொண்டது. மேலும் இதன் முகம், கழுத்து, தோள்பட்டை மற்றும் இடுப்பு ஆகியவற்றை, விருப்பத்திற்கு ஏற்ப அசைக்கும் தன்மை கொண்டது. எனினும், இதன் கைகளை மட்டும் அசைக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிஸ்லாந்தில் சாக்குப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளம்பெண் கொலை தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் Zezikon TG பகுதியில் போர்வையால் மூடப்பட்டு சாக்குப் பையில் அடைக்கப்பட்ட பெண்ணின் சடலம் கடந்த 25 ஆம் திகதி மீட்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், கடந்த நவம்பர் 12-ஆம் திகதி காணாமல் போன இஸ்பெல்லா என்ற 20வயது பெண்ணின் உடல் என தெரியவந்தது.
இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் 36 வயது நெதர்லாந்து நாட்டவரை பொலிசார் கடந்த வியாழன் இரவு கைது செய்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வெள்ளியன்றும் விசாரணை நீடித்த நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர். இருப்பினும் இளம்பெண் இசபெல்லா எவ்வாறு கொல்லப்பட்டார் என்பது தொடர்பான எந்த தகவலையும் பொலிசார் இதுவரை வெளியிடவில்லை.
உலகிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்னும் சிறப்பைப் பெற்றுள்ளது துபாய் விமானம் நிலையம். இந்த விமான நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளை சேர்த்து எடுக்கப்பட்ட கணிப்பிலும், துபாய் விமான நிலையமே முக்கிய இடம் வகிக்கிறது.
கடந்த ஆண்டு துபாய் விமான நிலையத்தை, 88.2 மில்லியன் மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு 2.4 சதவிதம் அதிகரித்து 90 மில்லியன் மக்கள், இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த கருத்துக் கணிப்பில், சீனாவைச் சேர்ந்த 2.2 மில்லியன் மக்களும், ரஷ்யாவைச் சேர்ந்த 1.3 பில்லியன் மக்களும் துபாய்க்கு சென்றுள்ளனர் என தெரிய வந்துள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட ஈராக்கின் மொசூல் நகரில் அழுகியநிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.
பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த மொசூல் நகரை மீட்க அளிக்கப்பட்ட விலைதான் குறித்த இளம்பெண்ணின் சடலம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மொசூல் நகரில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளாலும், எதிர் தாக்குதல் நடத்திய அமெரிக்க கூட்டுப்படைகளாலும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.
கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்கள் அப்புறப்படுத்தப்படாமல் இடிபாடுகளில் சிக்குண்டு காணப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் கூட்டுப்படைகளின் உதவியை நாடி நீண்ட ஆறு மாதங்களாக காத்துக் கிடப்பதாக கூருகின்றனர்.
அழுகிய நிலையில் மீட்க்கப்பட்ட இளம்பெண்ணின் உடலானது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அதே பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 500 உடல்களில் குறித்த இளம்பெண்ணின் உடலும் ஒன்று. அமெரிக்க கூட்டுப்படைகளின் வான் தாக்குதலில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மொசூல் நகரை மொத்தமாக சோதனையிட்டால் மேலும் பல உடல்கள் சிக்கலாம் என மக்கள் விம்மும் குரலில் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என கூறிக்கொண்டு கூட்டுப்படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மொசூல் நகரில் கூட்டுப்படைகள் மேற்கொண்ட அதிரடி தாக்குதல்களால் ஒரே மாதத்தில் சுமார் 2,521 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 1673 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இந்த புள்ளிவிபரங்களை கண்டுகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல அமெரிக்க கூட்டுப்படைகளின் நடவடிக்கைகளை மெச்சியுள்ளது.
சென்னையில் இரண்டாவது திருமணம் செய்ய கோரி பெற்றோர் வற்புறுத்தியதால் மனமுடைந்த மகள் தனது குழந்தையை கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேத்துப்பட்டை சேர்ந்தவர் கீதா (29), இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீதர் (35) என்ற நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ரோகித் (2) என்ற மகன் உள்ளான், இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஸ்ரீதர் கடந்தாண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் கீதாவுக்கு அவரின் பெற்றோர் இரண்டாவது திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு கீதா சம்மதிக்காத நிலையில் தனது குழந்தையுடன் வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெற்றோர் தொடர்ந்து கீதாவிடம் வலியுறுத்தி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது ரோகித்துக்கு நஞ்சு மருத்து கொடுத்து கொலை செய்துள்ளார். பின்னர் டரியில் தனது மரணத்துக்கு யாரும் காரணமில்லை என எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதை பார்த்த கீதாவின் உறவினர்கள் அவரையும் குழந்தையையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், ரோகித் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து ஆபத்தான நிலையில் கீதா சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
டெல்லியில் காதலியின் தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்ட இளைஞர் கொல்லப்படுவதற்கு 7 நிமிடங்களுக்கு முன்னர் நண்பர்களிடம் போனில் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
அங்கிட் (23) என்ற இளைஞரும், நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில் இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் நிஷாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 1-ஆம் திகதி நிஷா தனது தாய் மற்றும் சகோதரரை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். அங்கிட் தான் தனது மகளை கடத்தி சென்றுள்ளார் என கருதிய அவரின் தந்தை அங்கிட்டை கொம்பால் அடித்துள்ளார்.
இதையடுத்து தனது நண்பர்களுக்கு போன் செய்த அங்கிட் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதாகவும், நிஷா எங்கிருக்கிறார் என பார்க்கும்படியும் கூறியுள்ளார். இது நடந்து 7 நிமிடங்கள் கழித்து அங்கிட்டை நிஷாவின் தந்தை கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார்.
அங்கிட் கடைசியாக போனில் பேசிய காட்சி சிசிடிவி கமெராவில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக நிஷாவின் தந்தை, தாய் மற்றும் மாமாவை பொலிசார் ஏற்கனவே கைது செய்துள்ள நிலையில், அங்கிட்டின் மரணத்துக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
#WATCH CCTV footage of Ankit, who was stabbed to death in Delhi’s Khyala on February 1; Three accused, including a juvenile, have been sent to judicial custody in connection with the incident pic.twitter.com/9E3IsvzH50
கணவரால் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி மும்பை பெண் ஒருவர் டுவிட்டரில் கதறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் அசோக் பண்டிட், பெண் ஒருவர் கண்ணீர் விட்டு கதறும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில், ஆட்டோ மொபைல் தொழில் செய்பவர் என்னுடைய கணவர் குர்ப்ரீத் சிங். அவர், என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சித்ரவதைக்கு உட்படுத்தி வருகிறார். என்னுடைய குழந்தைகளின் நலனுக்காகவே அவருடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் சூதாட்டம், பெண்களுடன் தகாத உறவு உள்ளிட்ட பழக்கங்களால் அவர் என்னை தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார்.
அண்மையில் நான் தூங்கிக் கொண்டிருந்த கட்டிலில், மின்சாரத்தைப் பாய்ச்சி என்னை கொலை செய்ய முயன்றார். இது தொடர்பாக, நான் பொலிசில் புகார் அளித்தேன். ஆனால், இது குறித்து வழக்கு பதியாத காவல் ஆணையர், என் கணவருடன் சேர்ந்துகொண்டு அவருக்கு சாதகமாகவே செயல்படுகிறார்.
ஒவ்வொரு முறையும் எனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பொலிசாரிடம் கோரி வருகிறேன். ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த உதவியும் எனக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று எனது முதுகில் போத்தலால் உடைத்து காயம் ஏற்படுத்தியுள்ளார். மேலும், என்னுடைய பெயரில் இருக்கும் ஒரே வீட்டையும், என் கணவர் அவரது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவரால், என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது. கடைசி முயற்சியாக சமூக ஊடகங்கள் மூலம் உதவி கேட்கிறேன். எனக்கு நீதி கிடைத்தாக வேண்டும். பொலிசார் அவ்வாறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், எனது உயிரை விடுவதைத் தவிர வேறு வழியில்லை’ என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தாலி கட்டுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு மணமகன் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள குப்பளம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரின் மகன் வெங்கடேஷ் (26) என்பவருக்கும், அதே ஊரை சேர்ந்த 25 வயதான பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று காலை ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது.
முகூர்த்தம் காலை 9.30 மணிக்கு குறிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 7.30 மணிக்கு மணப்பெண் திருமண மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மாப்பிள்ளை அழைப்புக்கு பெண் வீட்டார் வர இருந்த நிலையில், காலை 8.30 மணிக்கு மணமகன் வெங்கடேஷ் ஒரு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார்.
நீண்டநேரமாகியும் அவர் வெளியில் வராததால் கதவை உடைத்து சென்று உறவினர்கள் பார்த்த போது அங்கு வெங்கடேஷ் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடேஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
திருமண மண்டபத்தில் கனவுகளுடன் காத்திருந்த மணப்பெண் இதை கேட்டு அதிர்ச்சியில் கதறினார். வெங்கடேஷ் தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் 07ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது விடயமான அறிவுறுத்தல்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சக அரசியல் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் அறிவிக்கப்பட்டள்ளதாகவும் தேர்தல்கள் அணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த அறிவுறுத்தலின்படி தேர்தல் பிரச்சார சிறு கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆதரவு திரட்டும் வீட்டுத் தரிசனம், அச்சு, இலத்திரனியல் ஒலிபெருக்கி உள்ளிட்ட ஊடகங்கள் மூலமான பிரச்சாரம் என்பன முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் ஏக காலத்தில் சுமார் 13400 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறப் போகின்றன.
இத்தேர்தலில் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்காக மொத்தமாக 8356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
வட மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான வைபவம் எதிர்வரும் 15ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.
2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் சுமார் பத்தாண்டு காலம் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய 182 பேருக்கும் அதற்கு சமமான காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 142 ஆசிரியர்களுக்கும் இவ்வாறு நியமனம் வழங்கப்படவுள்ளது.
வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் வேண்டுகோளை அடுத்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மூலம் முன்வைக்கப்பட்ட குறித்த நியமனம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த பிரபல பகுதி நேர வகுப்பு ஆசிரியரான 30 வயதான நிசல் கொட்டின்கடுவ என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பகுதி நேர ஆசிரியர் திறந்த பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரிவருகிறது.
இரண்டு நண்பர்களுடன் இந்தோனேசியாவுக்கு சென்றிருந்துடன் அதன் பின்னர் பாலி தீவுக்கு விஜயம் செய்துள்ளனர். அங்கு கடலில் குளித்து கொண்டிருந்த போது அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இளைஞனின் உடல் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவம் கோப்பாய் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், ஊஞ்சல் கயிறு சிறுமியின் கழுத்தில் இறுகியதால் சுவாசத்தடை ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சிவநேசன் அக்சயனி என்ற குறித்த சிறுமி நித்திரை செய்து கொண்டிருந்த போது பெற்றோர் சந்தைக்கு சென்றுள்ளனர். சந்தைக்கு சென்று அவர்கள் வீட்டிக்கு வந்த போது சிறுமி கட்டிலில் காணப்படாத நிலையில் அவரை பெற்றோர் தேடியுள்ளனர்.
இதன்போது கழுத்து பகுதி ஊஞ்சல் கயிற்றில் இறுகிய நிலையில் அக்சயனி காணப்பட்டதை அவதானித்த பெற்றோர் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும் சிறுமி வைத்தியசாலைக் கொண்டு வரும் முன்பே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், யாழ். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று (05.02.2017) இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டிருந்தார்.
வவுனியா வைரவபுளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற குறித்த பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், சிறிடெலோ கட்சியின் செயலளார் ப.உதயராசா, உட்பட வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.
பிறந்தவுடன் தூக்கி வீசப்பட்ட நிலையில் தத்தெடுக்கப்பட்ட குழந்தையின் தற்போதைய நிலை தொடர்பில் கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
தற்போது கனடாவில் வசித்து வரும் Kacee Rhodes என்பவர் தொடர்பிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. Kacee Rhodes விரைவில் தனது 30 வது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். ஒரு குழந்தையாக இலங்கை தெருவில் தூக்கி எறியப்பட்ட பின்னர் யுத்தத்தில் இருந்து தப்பி தனது வாழ்க்கையில் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஒரு தைரியமான மற்றும் துனிச்சலான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அவர் முதல் முறையாக தனது பிறந்த நாட்டிற்கு திரும்பவுள்ளார். தான் வளர்ந்த பீட்டர் வீரசேகர அனாதை இல்லத்திற்கு அவர் மீண்டும் செல்லவுள்ளார்.
Rhodes இப்போது கனடாவின் Calgary பகுதியில் பதிவு செய்யப்பட்ட ஒரு தாதியாக பணியாற்றுகிறார். அவர் 4 மாத குழந்தையாக இருந்த போது Mark மற்றும் Gail Rhodes தம்பதியினால் தத்தெடுப்பட்டார்.
இலங்கையின் உள்நாட்டு போர் இடம்பெற்ற 1988ஆம் ஆண்டில் Mark மற்றும் Gail Rhodes இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது Rhodesயை தத்தெடுத்தனர்.
Rhodes தற்போது இலங்கைக்கு செல்லவுள்ளார். அதற்கமைய அடுத்த மாதம் அவர் தனது தந்தை மற்றும் காதலனுடன் இலங்கைக்கு செல்லவுள்ளார்.
என்னை பெற்ற பெற்றோர் தொடர்பில் எவ்விதமான சான்றுகளும் இல்லை என Rhodes தெரிவித்துள்ளார். கைவிடப்பட்ட விடயம் பற்றி நான் நினைத்துப் பார்க்க விரும்பவில்லை. பணம் இல்லாத காரணத்தினால் பெற்ற பிள்ளைகளை பிச்சை எடுப்பதற்காக விட்டுவிடுவார்கள் என தந்தை விளக்கியுள்ளார்.
சுற்றுலா பயணிகளின் அனுதாபத்தைப் பெறவும் பணம் சம்பாதிக்கவும் இந்த குழந்தைகளின் கைகளையும் கால்களையும் அடிக்கடி உடைக்க வேண்டும். என்னை பெற்ற பெற்றோர் எளிதாக என்னுடன் இருந்திருக்கலாம், ஆனால், நான் ஒரு அனாதையாக வைக்கப்பட்டேன். எனினும் அடிப்படையில் நான் ஒரு அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.
என்னை தத்தெடுத்து வளர்த்த பெற்றோர் என்னை மகிழ்ச்சியாக வளர்த்தனர். அன்பாக பார்த்து கொண்டனர். அதனால் நான் அதிக அதிஷ்டசாலியாக கருதுகின்றேன்.
நான் வளர்ந்த இல்லத்திற்கு உதவ விரும்புகின்றேன். அதற்காக பணம் சேகரிக்கும் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். எனது 30வது பிறந்த நாளை நான் வளர்ந்த இல்லத்தில் கொண்டாடுவதற்கு கனடாவில் இருந்து இலங்கை செல்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டின் தனுஷ்கோடி பாக்ஜல சந்தி கடற்பகுதியில் இலங்கை பைபர் படகு ஒன்று இன்று காலை ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளில்லாத நிலையில் கரை ஒதுங்கிய குறித்த படகு தொடர்பில் அப்பகுதி பாதுகாப்புத் தரப்பினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே பாக்ஜல சந்தி கடல் பகுதியில் ஆளில்லாத நிலையில் குறித்த படகு கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் இராமேஸ்வரம் சுங்கதுறை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனடிப்படையில், சுங்கத்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது, கைப்பற்றப்பட்ட பைபர் படகு இலங்கையை சேர்ந்தது எனவும், அதில் சட்ட விரோதமான முறையில் இலங்கையர்கள் யாரேனும் தமிழகத்திற்குள் நுழைந்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த படகு தொடர்பில் தனுஸ்கோடி பொலிஸாரால் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதே போல கீயு பிரிவு மெரைன் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து இது தொடர்பில் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் கைப்பற்றப்படட படகினை, ட்ரெக்டர் மூலம் இராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைக்காலங்களில் தமிழக கடலோரை பகுதிகளில் இருந்த சட்டவிரோதமான முறையில தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் என்பன கடத்தப்பட்டும் வரும் நிலையில் இவ்வாறான ஆளில்லா படகு ஒன்று கரையொதுங்கியுள்ளமை அப்பகுதியில் இருக்கும் பாதுகாப்புத் தரப்பினரிடையே கலக்கத்தைத் தோற்றுவித்துள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.