யாழ்.மாவட்டத்திற்கான இன்னொரு மேல் நீதிமன்றம் வேண்டும் : நீதிபதி இளஞ்செழியன்!!

யாழ்.மாவட்­டத்­திற்கு இன்­னு­மொரு மேல் நீதி­மன்றம் பருத்­தித்­து­றையில் அமைக்கப் பட வேண்டும். பருத்­தித்­துறை­யானது யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து 22 மைல்கள் தூரத் தில் இருக்­கின்­றது. புதிய மேல் நீதி­மன்றம் அமைப்­பதன் மூலம் கிளி­நொச்சி தொடக்கம் வலி­காமம்வரை நீதி நியா­யா­திக்க வலயம் அமை­யலாம் என நினைக்­கின்றேன்.

இந்த விடயம் குறித்து நீதி அமைச்­சுடன் கலந்­து­ரை­யா­டுவேன் என யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்செழியன் தெரி­வித்தார்.

நீதி­ய­மைச்சின் 2 கோடியே 25 இலட்சம் ரூபா நிதி ஒதுக்­கீட்டின் கீழ் பருத்­தித்­துறை நீதி­மன்ற வளா­கத்தில் புதி­தாக நிர்­மா­ணிக்கப்­பட்ட மாடிக்­கட்­டடத் திறப்பு விழா கடந்த வெள்­ளிக்­கி­ழமை பருத்­தித்­துறை மாவட்ட நீதி­பதி பெ.சிவ­குமார் தலை­மையில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு கட்­ட­டத்தை திறந்துவைத்து உரை­யாற்று கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையின் முனை­யாகச் செயற்­படும் பூமி பருத்­தித்­து­றை­யாகும். இங்கு படித்­த­வர்கள் அதிகம் வாழு­கின்­றனர். வட­ம­ராட்­சியில் சரஸ்­வ­தியும் தீவ­கத்தில் செல்வ இலக்­சுமியும் சிறந்து விளங்கும் பூமி என்று சட்­ட­மேதை அமரர் ஜி.ஜி.பொன்­னம்­பலம் அன்று கூறி­யி­ருந்தார்.

இப்­பு­திய கட்­டடம் கட்­டி­மு­டிக்­கப்­பட்ட போது இதனைத் திறந்­து­வைக்க ஜனா­தி­பதி, அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­பக்ச மற்றும் நீதி­ய­மைச்சர் தலதா அத்­துக்­கோ­ரள ஆகியோர் வரு­கை­தர இருப்­ப ­தாக அவ்­வப்­போது தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் பல்­வேறு பிரச்­சி­னைகள் கார­ண­மாக அவர்­களால் வர­மு­டி­ய­வில்லை. எனினும் இக்­கட்­ட­டத்தை திறந்து வைக்க வேண்டும் என்ற நோக்­கோடு நீதி­ய­மைச்சின் அனு­ம­தி­யுடன் திறந்­து­வைக்­கப்­ப­டு­கி­றது.

பருத்­தித்­துறை நீதி­மன்­றத்­துக்­கு­ரிய முன்னர் நீதி­பதி இல்லம் அமைந்­தி­ருந்த காணியை படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து மீட்­டுத்­த­ரு­மாறு கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டது. இது­கு­றித்து நான் யாழ்.கட்­டளைத் தள­பதி தர்­சன ஹெட்­டி­யா­ரச்­சி­யுடன் கலந்­து­ரை­யாடி அக்­கா­ணியை விடு­விக்க என்­னா­லான முயற்­சி­களை மேற்­கொள்வேன். இக்­காணி விடு­விக்­கப்­பட்டால் அங்கு புதி­தாக இரண்­டா­வது வல­ய­மாக உரு­வாக்­கப்­படும் மேல் நீதி­மன்­றத்தை அமைக்க முயற்­சிக்­கலாம் எனவும் நினைக்­கின்றேன். இது தொடர்பில் நீதி அமைச்­சுடன் கலந்­து­ரை­யா­டுவோம். எதிர்­கா­ல­த்தில் நீதித்­து­றைக்கு செய்ய வேண்­டி­யதை செய்வோம்.

அதி­கா­ரத்தில் இருக்­கும்­போது அதைப் பாவிக்க வேண்டும். அதி­கா­ரத்தை பாவிக்க தெரி­யா­த­வர்கள் பத­வியில் இருப்­பதால் அப்­ப­தவி அவ­சி­ய­மில்லை. நான் சமூக நீதிக்­காகப் பாடு­ப­டு­கிறேன். எனக்கு சரி என்று பட்­டதை செய்வேன். நீதி­ப­திகள், சட்­டத்­த­ர­ணிகள் ஒற்­று­மை­யாக இருக்க வேண்டும். அதா­வது பிரச்­சி­னைகள் இருந்தால் உட­ன­டி­யாகப் பேச்­சு­வார்தை மேற்­கொண்டு சுமு­க­மாகப் பிரச்­சி­னை­களை முடிக்க வேண்டும். எனது கட­மை­களை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­திற்கும் யாழ்.மாவட்­டத்­துக்கும் மேற்­கொள்வேன் என்றார்.

இங்கு உரை­யாற்­றிய யாழ்.சட்­டத்­த­ர­ணி கள் சங்கத் தலைவி ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி செல்வி சாந்தா அபி­மன்­ன­சிங்கம் பேசு­கையில், பருத்­தித்­து­றையை பொறுத்­த­வரை விசா­ல­மான இடத்தில் கடற்­கரை சூழலில் இரு நீதி­மன்­றங்கள் அமைந்­துள்­ளன. இந்­நீ­தி­மன்­றங்­களின் நீதி­ப­தி­க­ளுக்­கான வாசஸ்­தலம் கடற்­க­ரை­யுடன் அமைந்­தி­ருந்­தது. குறிப்­பிட்ட வாசஸ்­தல காணி படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்து மீட்­டு­ டெ­டுக்க கோரிக்கை முன்­வைத்தோம். அது சரிவர­ வில்லை. இப்­போது இன்­ னமும் காலம் போக­வில்லை. எனவே இக்­கா­ணியை மீளப்­பெற்று நீதி­மன்றக் கட்­டடம் அமைய வேண்டும். இலங்­கை­யி­லுள்ள நீதி­மன்­றங்­களில் நீர்­கொ­ழும்பு நீதி­மன்றக் கட்­டடம் சிறப்­பாக அமைந்­துள்­ளது. அதே­போன்று மிகச் சிறந்த இட­மான இவ்­வி­டத்­திலும் நீதி­மன்றம் அமைய வேண்டும் என்றார்.

பருத்­தித்­துறை சட்­டத்­த­ர­ணிகள் சங்­கத்­த­லைவர் கே.முத்­து­குமார் பேசு­கையில், புதிய கட்­ட­டத்­திற்­கான பணிகள் 2011 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்டு 2016 ஆம் ஆண்டு நிறை­வுற்­றது. பருத்­தித்­துறை நீதி­மன்றக் கட்­ட­ட­மா­னது இரண்டாம் உலகப் போர் காலத்தில் அதா­வது 1936 ஆம் ஆண்டு கட்ட ஆரம்­பித்து 1940 ஆம் ஆண்­டி­லேயே நிறை­வுற்றது. இக்­கட்­டடம் பூர்த்­தி­ய­டை­வ­தற்கு முன்னர் இங்கு கட­மை­யாற்­றிய நீதி­பதி திரு­மதி ஸ்ரீநிதி நந்­த­சே­கரன், எமது சட்­டத்­த­ர­ணிகள் சங்க முன்னாள் செய­லாளர் பொ. குமா­ர­சாமி ஆகி­யோரின் முயற்­சியே கார­ண­மாகும். இக் கட்டடத்தில் தபாலகம், இலங்கை வங்கி ஆகியவற்றின் கிளைகள் நிறுவப்பட இருந்தன. ஆனால் இந்த வசதிகள் இப்போது இல்லை. இது குறித்து நீதி அமைச்சிடம் முறைப்பாடு செய்தோம். எனினும் இரண்டாம் நிலையாகவே எம்மை நீதியமைச்சு பார்க்கிறது.

பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னைய காலங்களில் பணியாற்றிய பல நீதிபதிகள் உயர் நீதிமன்றம் வரை நீதிபதிகளாக பதவி யுயர்வு பெற்றுச் சென்றுள்ளனர். குறிப்பாக சில்வா வைத்தியலிங்கம், ஸ்ரீஸ்கந்தராசா போன்ற நீதிபதிகளை குறிப்பிடலாம் என்றார்.

ஏறாவூர் இரட்டைப் படுகொலை விசாரணை : சி.ஐ.டி.யிடம் கையளிக்க உத்தரவு!!

ஏறாவூர் நகரில் இடம்பெற்ற தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலை சம்பவம் தொடர்பான விசாரணையை சி.ஐ.டி.யிடம் கையளிக்க ஒழுங்கு செய்யுமாறு, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு, ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை, ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் மேலதிக நீதிவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஜெனீராபானுவின் (வயது 32) கணவரான ஐ.எம். மாஹிர் தனது தரப்பு சட்டத்தரணியுடன் நீதிபதியின் முன் ஆஜராகி, மேற்படி படுகொலை வழக்கு விசாரணையை பொலிஸாரிடமிருந்து புலனாய்வுத்துறைக்கு பாரப்படுத்துமாறு வேண்டுகோளை முன்வைத்திருந்தார்.

கடந்த 15 மாதங்களுக்கு மேலாக இடம்பெற்று வரும் இந்த வழக்கு விசாரணை பாதிக்கப்பட்ட தமது தரப்புக்கு திருப்தியில்லாதிருப்பதாக, அவர் தனது வேண்டுகோளை சட்டத்தரணிகள் ஊடாக நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு (சி.ஐ.டி) கையளிப்பதற்கான ஒழுங்குகளைச் செய்யுமாறு, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன், வழக்கை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

படுகொலைச் சந்தேக நபர்களில் இருவர், மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால், நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை, பிணையில் விடுதலையான ஏனைய நால்வரும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகியிருந்தனர்.

ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி, முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56), அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த 2016 ஆம் வருடம் செப்டெம்பர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஒருவருடம் நீடிக்கப்பட்டு வந்த விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில், அவர்களில் இருவர் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திலும் மற்றைய இருவரும் ஒக்டோபர் மாதத்திலும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்காளதேஷ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!!

பங்காளதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக செயல்பட்டவர் முஷ்பிகுர் ரஹிம். இவரது தலைமையில் பங்காளதேஷ் கிரிக்கெட் வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தது. இவரது தலைமையில் பங்காளதேஷ் அணி இங்கிலாந்து, இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளை முதன்முறையாக வென்றிருந்தது.

சமீபத்தில் பங்காளதேஷ் அணி தென்னாபிரிக்கா சென்றிருந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்தது. மேலும் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் சிறப்பான வகையில் துடுப்பெடுத்தாடவில்லை.

இதனால் முஷ்பிகுர் ரஹிம் துடுப்பெடுத்தாட்டத்தில் கவனம் செலுத்தும் வகையில் அவரை தலைவர் பதவியில் இருந்து பங்காளதேஷ் கிரிக்கெட் சபை அதிரடியாக தூக்கியது.

அவருக்குப் பதிலாக சகலதுறை ஆட்டக்காரர் சஹிப் அல் ஹசனை தலைவராக நியமித்துள்ளது. சஹிப் அல் ஹசன் T20 அணி தலைவராகவும் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சின்னத்திரை நடிகைகளின் சம்பளம் இவ்வளவா?

சினிமா நடிகைகளுக்கு இணையாக தற்போது பல நடிகைகள் சீரியல்களில் கலக்கி வருகின்றனர். அவர்களது கதாபாத்திரங்களை தாண்டி பிரபலங்கள் உடைகளுக்கு பல ரசிகைகள் என்றே சொல்லலாம்.

சீரியல்களில் கலக்கி ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய இடம் பிடித்திருக்கும் நடிகைகளின் சம்பள விவரத்தை பார்ப்போம். அதுவும் ஒவ்வொரு எபிஸோடுக்கும் எவ்வளவு வாங்குகிறார்கள் என்ற தகவல் இதோ..

ராதிகா (வாணி ராணி) – 1 லட்சம்
ரம்யா கிருஷ்ணன் (வம்சம்)- 50,000
ரச்சிதா (சரவணன் மீனாட்சி) – 25,000
நளினி- 15,000
ஆல்யா மானசா (ராஜா ராணி)- 15,000
ஸ்ருதிக்கா (நாதஸ்வரம், குலதெய்வம்)- 15,000
பிரவீணா (பிரியமானவள்)- 10,000
வாணி போஜன் (தெய்வமகள்)- 10,000
வித்யா (வள்ளி)- 10,000

அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்தும் போது அவதானம்!!

ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் அழகு சாதன பொருட்களில் இருந்து நுகர்வோரை பாதுகாக்க தேவையான சட்ட விதிகளை விரைவாக தயாரிக்குமாறும், சந்தையில் ஆய்வுகளை நடத்துமாறும் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீனால் நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, உடனடி பெறுபேறுகளை பெற்று தருவதாக கூறப்படும் ஆககூடுதலான கேள்விகளைக் கொண்ட அழகு சாதனப் பொருட்கள் பலவற்றில் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிப்பவர்களின் தகவல் குறிப்பிடப்படுவதில்லை. காலாவாதியாகும் திகதியும் அவற்றில் இல்லை. தயாரித்த நாடு தொடர்பான குறிப்பும் இடம்பெறுவதில்லை எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், அவற்றில் அடங்கியுள்ள இரசாயனம் குறித்தும் வௌிப்படுத்தப்படாத 6 வகையான வைட்னிங் கிரிம் எனப்படும் அழகு சாதன பொருட்களின் மாதிரிகள், புறக்கோட்டை வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இருந்து பெறப்பட்டன.

இதனைத்தொடர்ந்து, இவை கைத்தொழில் தொழிநுட்ப நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து அவற்றில் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் மனித உடலுக்கு மிகவும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய உலோகத்தன்மை குறித்த அறிக்கை ஒன்று பெற்று கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

2017 டிசம்பர் மாதம் 7ம் திகதி சம்பந்தப்பட்ட அறிக்கை மாளிகாகந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, பாவணையாளர்களை தவறான வழியில் இட்டு சென்று மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிரிம் வகைகளை விற்பனை செய்த வர்த்தகர்கள் அனைவருக்கும் தலா 5000 ரூபா தண்டப் பணம் விதிக்கப்பட்டது.

ஆககூடுதலான கேள்விகளை கொண்டவற்றின் தயாரிப்பாளர்கள் அல்லது விநியோகிப்பவர்களின் தகவல் குறிப்பிடப்படுவதில்லை. அவ்வாறான கிரிம் வகைகளை சந்தையில் இருந்து அகற்றுமாறும், கிரிம் வகைகளின் வர்த்தக குறியீட்டை ஊடகங்கள் மூலமாக பொது மக்களுக்கு தெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும், நுகர்வோர் அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக, அதன் அதிகாரி ஒருவர் வெளிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுஇவ்வாறு இருக்க, பரிசோதனையின் போது இவற்றில் ஈயம், ஹாசனிக் உள்ளிட்டவை அளவுக்கதிகமாக காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இறக்குமதியாளர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் போன்றோரின் விபரம் எதுவும் குறிக்கப்படாத, வர்த்தக குறியீடுடன் சமர்ப்பிக்கப்படும் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும், அழகு சாதன பொருட்களை கொள்வனவு செய்தல் மற்றும் பயன்படுத்துவதை தவிர்த்து கொள்ளுமாறு நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை கேட்டுகொண்டுள்ளது.

இவ்வாறான பொருட்களை கொள்வனவு செய்ய அவற்றில் அடங்கியுள்ளவற்றை கவனத்தில் கொள்ளுமாறும் அதிகார சபை கேட்டு கொண்டுள்ளது என, அரசாங்க தகவல் திணைக்கள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கையில் நாளை முதல் மீண்டும் மழை!!

நாட்டின் அநேக பகுதிகளிலும் நாளை முதல் 18ஆம் திகதி வரையில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இந்த நிலையில் பல பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் உயர் அதிகாரி கசுன் பெஸ்குவல் குறிப்பிட்டுள்ளார்.

பெற்றோர் திட்டியமையால் பாடசாலை மாணவி தற்கொலை? யாழில் நடந்த சோக சம்பவம்!!

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதும், கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த 18 வயதான ம.தர்சிகா என்ற மாணவியே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
சண்டிலிப்பாயிலுள்ள பாடசாலை ஒன்றில் இவர் கற்கிறார். பதின்ம வயதுடைய இவரது இறப்புக்கான காரணம் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையிலான தனிப்பட்ட விவகாரமாக இருக்கிறது.
நுளம்புச் சீலை கட்டிவிட்டு உறங்குமாறு பெற்றோர் மாணவிக்கு கூறியபோதும், மாணவி அவ்வாறு செய்யவில்லை என்றும் அதனால் பெற்றோர் மாணவிக்கு அடித்தனர் என்றும் அதனாலேயே மாணவி அவ்வாறு முடிவெடுத்துள்ளார் என மரண விசாரணையின் பின்னர் இறப்புக்கான காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது வீட்டு அறையில் குறித்த மாணவி தூக்கில் தொங்கியபோது வீட்டுக்காரர் அவரை மீட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை மேற்கொண்டபோது அவர் அதற்கு முன்னரே உயிரிழந்து விட்டமை தெரியவந்தது.
பொலிஸார் மற்றும் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் இறப்பு விசாரணை மேற்கொண்டனர். சடலம் நேற்றுப் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வடக்கிலும், கிழக்கிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இதுவே காரணம்!சிவசக்தி ஆனந்தன்!

இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது என்ற காரணத்திற்காக தான் நாங்கள் வடக்கிலும், கிழக்கிலும் உதயசூரியன் சின்னத்தில் பிரிந்து போட்டியிடவுள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எதிர்வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலானது குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான ஒரு காலகட்டத்தில் இந்த தேர்தல் நடைபெறுகின்றது.

காரணம் இந்த தேர்தல் முடிவடைந்த பிற்பாடு ஐ.நா மனிதவுரிமை பேரவையின் கூட்டம் நடைபெற இருப்பதன் காரணத்தால் அரசாங்கத்திற்கு முக்கியமான ஒரு தேவை இருக்கிறது.

தமிழ் மக்களினுடைய பிரச்சினைக்கான தீர்வைக் காணுவதற்காக அரசியல் வழிநடத்தல் குழுவால் 73 தடவை கூட்டப்பட்ட கூட்டத்தினுடைய இடைக்கால அறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

ஆகவே அந்த இடைக்கால அறிக்கைக்கான ஆணையைப் பெற்றுக் கொள்வதற்காகத் தான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கிறது.

இடைக்கால அறிக்கையில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது தெட்டத்தெளிவான விடயம்.

என்னைப் பொருத்தவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இந்த இடைக்கால அறிக்கை தொடர்பான எந்தவித விவாதங்களும் மேற்கொள்ளப்படாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை ஏமாற்றி அவர்கள் காலாதிகாலமாக அடிமைகளாக இருப்பதற்காக இந்த இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது என்ற காரணத்திற்காக தான் நாங்கள் வடக்கிலும், கிழக்கிலும் உதயசூரியன் சின்னத்தில் பிரிந்து போட்டியிட்டவுள்ளோம்.

இதற்கு அப்பால் தமிழ் மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்கள் இருக்கிறது. கடந்த இரண்டரை வருடகாலம் அரசாங்கம் அன்றாட பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வை காணவில்லை.

அரசியல் பிரச்சினைகளுக்கும் தீர்வைக்காணவில்லை. இடைக்கால அறிக்கையில் கூட எதுவுமே இல்லாத நிலையில் தான் இந்த தேர்தலை தமிழரசுக் கட்சி சந்திக்க இருக்கிறது.

எதிர்கட்சித் தலைவர் மூன்று வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருக்கிறார். அதில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவில் பாதுகாப்பு செலவீனம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செலவீனம் அதிகரிக்கப்பட்டதைக் கூட கவனத்தில் எடுக்காது இந்த வரவு செலவு திட்டத்திறகு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

அந்த ஆதரவு வழங்கியதற்கு பரிசாக 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபாய் வீதம் 30 கோடி ரூபாய் நிதி அபிவிருத்தி என்ற பெயரில் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.

உண்மையிலேயே பாதுகாப்பு தரப்பால் ஏற்படுத்தப்பட்ட உயிரழிவுகள், சொத்தழிவுகள், இன்னும் உட்கட்மைப்பு அழிவுகள், அபிவிருத்திகள் என பல வேலைத்திட்டங்களுக்கான எந்தவிதமான நிதி ஒதுக்குகள் கூட இல்லாத நிலையில் அரசாங்கத்தினுடைய மூன்று வரவு செலவுத்திட்டத்திற்கு நிபந்தனை இல்லாத ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது.

ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கு இரண்டரை வருட கால ஆட்சிக் காலத்தில் உருப்படியான எதனையும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் தான் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களிடம் இந்த ஆணையைப் பெற இருக்கிறது.

தமிழ் மக்கள் தமது வாக்குகள் மூலம் இந்த இடைக்கால அறிக்கைக்குள் எதுவுமில்லை. இரண்டரை வருடத்தில் எந்தவொரு தீர்வையும் பெற்றுத்தரவில்லை.

குறிப்பாக சர்வதேச சமூகத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுகின்ற வேலையை இந்த அரசாங்கம் செய்வதை தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகள் மூலம் மீண்டும் உள்ளூராட்சி தேர்தல் மூலம் வெளிப்படுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.

இதனை தமிழ் மக்கள் சரியாக செய்வார்கள். வடக்கு, கிழக்கு பகுதியில் எமது கட்சியுடன் இணைந்து போட்டியிட பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அப்படிபட்ட ஒரு புதிய அரசியல் காலாச்சாரத்தை கொள்கை ரீதியாக கட்டியெழுப்ப வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இருக்கிறது.

அதனை இந்த உள்ளூராட்சி சபை ஊடாக கட்டியெழுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் எனத்தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : இரட்டிப்பு போனஸ்!!

இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு கூடுதலான வருடாந்த கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனையை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அரசாங்க ஊழியர்களின் வருகை, செயல்திறன்களை அடிப்படையாக கொண்டு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இந்த நடைமுறையின் கீழ் அரசாங்கத்துறை சார்ந்த அனைத்து நிறுவன ஊழியர்களும் நன்மை அடைவார்கள் என அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில், அரசாங்க ஊழியர்களுக்காக வருடாந்த கொடுப்பனவு வழங்குவதற்கு பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.

எனினும் இம்முறை உரிய வகையில் அந்த கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

-தமிழ்வின்-

கோழி பிரியாணி சாப்பிட சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

அக்கரைப்பற்றிலுள்ள உணவகமொன்றில் நேற்றைய தினம் கோழி பிரியாணி சாப்பிடுவதற்காக சென்றவர்களுக்கு உணவில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட கோழி பிரியாணியுடன் பொரித்து நீண்டநாள் வைத்திருந்த கோழி இறைச்சியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த உணவகத்தில் தொடர்ந்து உயிராபத்தை தோற்றுவிக்கும் நடவடிக்கை இடம்பெறுவதாகவும், உணவின் தரம் மோசமானதாக இருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இந்த உணவகம் தமிழ் மக்கள் வாழும் ஆலையடிவேம்பு சுகதார வைத்தியதிகாரி (MOH) எல்லைக்கு உட்பட்டது. இதை மேற்பார்வை செய்ய பகுதிக்கு பொறுப்புள்ள கடமையலுவலர் ஏமாற்று மோசடியாளர்களை பரிசோதித்து நீதிமன்றில் நிறுத்தியது இல்லை.

இவர் போன்ற பொதுச்சுகதார பரிசோதகர் கவனயீனமாக இருப்பதால், குறித்த உணவகத்தில் சாப்பிட செல்பவர்களுக்கு உயிருக்கு அச்சுறுத்தலான உணவுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. எனவே இது தொடர்பில் உடனடி கவனத்தை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சியில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய மாணவனின் தலையலங்காரம்!!

 
கிளிநொச்சி – பூநகரி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனின் தலையலங்காரம் பாடசாலையிலும் கல்விச் சமூகத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தற்போது தரம் ஒன்றில் கல்வி கற்று வரும் குறித்த மாணவன் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற போது மாணவனின் தலையலங்காரத்தைக் கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

அடுத்த வருடம் தரம் இரண்டுக்கு செல்லும் இந்த மாணவனின் தலையலங்காரம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

யாழில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அளவெட்டி பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் சிலர் பயணிப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று இரவு 7 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, மோட்டார் சைக்கிள்களில் பயணித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் பயணித்த மேலும் மூவர் தப்பியோடியுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து கத்தி மற்றும் பொல்லுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சந்தர்ப்பத்தில் மேலும் மூவர் தலைமறைவாகியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் அளவெட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்பதுடன், 27 மற்றும் 22 வயதானவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

7 வயதுச் சிறுவனுக்கு வந்த இராணுவப்பணிக் கடிதம்!!

ரஷ்யாவின் கிழக்குப்பகுதியில் வாழ்ந்துவரும் ஏழு வயது சிறுவனுக்கு, இராணுவத்தில் சேர்வதற்காக வந்த கடிதம் ஆச்சிரியத்தை அளித்துள்ளது.

சாஷா கமன்யூக் என்ற சிறுவனுக்கு, ஊசுரீஸ்க்கில் உள்ள இராணுவத்திற்கு ஆளெடுக்கும் அலுவலகத்திலிருந்து வந்த கடிதத்தில், ஒராண்டு இராணுவ பயிற்சியில் இணைவதற்காக, உள்ளூரிலுள்ள இராணுவ அலுவலகத்தை அணுகும்படி குறிப்பிடப்பட்டிருந்ததாக, ஊசுர்மீடியா என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

இதேபோல, இன்னொரு ஏழு வயது சிறுவனுக்கு கடிதம் வந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறினாலும், ரஷ்ய இராணுவம் அதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

`2001ஆம் ஆண்டு பிறந்தவர்களின் பட்டியலை அனுப்புவதற்கு பதிலாக, 2010ஆம் ஆண்டு பிறந்தவர்களின் பட்டியலை குழந்தைகள் மருத்துவமனை தவறுதலாக அனுப்பிவிட்டது` என்று இராணுவதிற்காக ஆட்களை சேர்க்கும் அலுவலகம், ஆ.ஐ.ஏ நொவோஸ்டி என்ற செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளது.

மேலும், கடிதம் பெற்ற சிறுவன், இராணுவப்பணிக்காக சேர வேண்டாம் என்றும், அவர் இராணுவ அலுவலகத்திற்கு வராதமைக்காக தண்டிக்கப்படமாட்டார் என்றும் உறுதி செய்துள்ள அவர்கள், இந்த கடிதம் குறிப்பிட்ட இளைஞர்களை தயார் செய்வதற்கான வரைவு தயாரிக்க அழைக்கப்பட்ட கடிதம் மட்டுமே, பணியில் உடனடியாக சேர்வதற்கான கடிதமில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவனின் குடும்பத்தினர் அந்த கடிதத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளனர். அது மீமியாக வலம்வரத் தொடங்கியுள்ளது.

`ஊசுரீஸ்க் என்றால், இராணுவத்தில் சேர்வதற்கான கடிதம் ஏழு வயதிலேயே வந்தடையும்` என்ற மீமி மிகப்பிரபலமாக வலம் வருகிறது.

ரென் டி.வியிடம் பேசிய, சாஷாவின் தாத்தா, `அவர்கள் உத்தரவிட்டுள்ளபடி நாங்கள், இராணுவ அலுவலகத்திற்கு செல்வோம். கட்டாய இராணுவப் பயிற்சியிலிருந்து தப்பித்தவர்களாக இருக்க நாங்கள் விரும்பவில்லை` என்று கூறியுள்ளார்.

யார் மனதையும் புண்படுத்துவதற்காக, இந்த கடிதத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை என்றும், `அது ஒரு நகைச்சுவையான செயல்` என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவன் சாஷா, இராணுவத்திற்கு மீண்டும் ஏமாற்றம் அளிக்கப்போவது குறித்து வருத்தமாக உள்ளார். காரணம், `எனக்கு ஒரே கனவுதான். பொலிஸில் இணைய வேண்டும், இராணுவத்திலல்ல` என்று மாஷ் டெலெக்கிராம் என்ற ஊடகத்திடம் அவர் கூறியுள்ளார்.

ஆனால், இது குறித்து கருத்தை பதிவிட்டுள்ள ஒரு இணைய பதிவாளர், `இராணுவ சேவையை முடிக்காமல், சாஷா பொலிஸில் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்` என்பதை அவருக்கு நினைவு கூர்ந்துள்ளார்.

மாமியார், மனைவியை வெட்டி விட்டு குடும்பஸ்தர் தற்கொலை!!

நவகமுவ – ராஸ்ஸபார பகுதியில் நபரொருவர் தனது மாமியார் மற்றும் மனைவியை வெட்டிவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த இரு யுவதிகளும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எதுஎவ்வாறு இருப்பினும், இதற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வவுனியாவில் வங்கியில் பணம் திருட முயற்சி : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!!

 
வவுனியா இரண்டாம் குறுக்குத் தெருவிலுள்ள தனியார் வங்கி ஒன்றில் நேற்று இரவு தன்னியக்க இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையிட முயற்சித்துள்ளதாகத் தெரிவித்து இன்று காலை வவுனியா பொலிஸ் நிலையத்தில் வங்கியின் முகாமையாளர் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

நேற்று இரவு குறித்த தனியார் வங்கியிலுள்ள தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தினை உடைத்து பணம் திருட முயற்சித்துள்ளதாகவும் எனினும் பணம் திருடவில்லை என்றும் முறைப்பாடு ஒன்றினை இன்று காலை வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறையிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் குறித்த வங்கியின் சி.சி.ரி கமராவின் உதவியுடன் திருடர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் வாள்களுடன் வந்த இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல்!!

வவுனியா, பசார் வீதியில் மோட்டர் சைக்கிளில் வாள்களுடன் வந்த இருவர் கடமையில் இருந்த போக்குவரத்து பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தர்மலிங்கம் வீதி வழியாக வேகமாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று பசார் வீதி வழியாக வவுனியா நகரை நோக்கிச் சென்றுள்ளது.

இதன்போது பசார் வீதியில் இருந்து மில் வீதிக்கு செல்லும் சந்தியில் போக்குவரத்து கடமையில் இருந்த இரு போக்குவரத்து பொலிஸார் குறித்த மோட்டர் சைக்கிளை மறித்துள்ளனர்.

இதன்போது மோட்டர் சைக்கிளில் வந்த இருவரில் ஒருவர் போக்குவரத்து பொலிஸாரை காலால் எட்டி உதைந்துள்ளார். இதனையடுத்து போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் நிலை தடுமாறி கீழே வீழ்ந்துள்ளார்.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரி கீழே வீழ்ந்ததும் மோட்டர் சைக்கிளை வேகமாக செலுத்திய போது, குறித்த மோட்டர் சைக்கிளில் பின்பக்கத்தில் இருந்தவர் தவறி கீழே விழுந்துள்ளார்.

மோட்டர் சைக்கிளில் கொண்டு செல்லப்பட்ட இரண்டு வாள்களும் இதன்போது கீழே விழுந்துள்ளன. கீழே விழுந்த இளைஞன் தப்பியோடிய நிலையில், போக்குவரத்து பொலிஸார் இரு வாள்களையும் மீட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த வீதியில் உள்ள பாதுகாப்பு கமராவை பரிசோதித்தால் குறித்த மோட்டர் சைக்கிளை கண்டு பிடிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.