நான் தான் ஜெயலலிதா மகள் : இன்று முடிவு?

மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசுகள் என அவரது அண்ணன் மகள் ஜெ தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரி உரிமை கொண்டாடி வருகின்றனர். இதேபோல் கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதாவும் (வயது 38) ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரியுள்ளார்.

ஜெயலலிதா தன் சொந்த தாய் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய அம்ருதா, இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலிதாவின் மகள் என உரிமை கோரி அம்ருதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க வேண்டும் என்றும், அவர் என் தாய்தான் என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

‘1980-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி ஜெயலலிதாவின் மகளாக நான் பிறந்தேன். என் வளர்ப்பு தாய் சைலஜா 2015 இல் இறந்துவிட்டார். வளர்ப்பு தந்தை சாரதி இந்த ஆண்டு மார்ச் 20 ஆம் திகதி இறந்துவிட்டார். ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்பதால் இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை. எனவே, ஜெயலலிதாதான் என் தாய் என்பதை நிரூபிக்க, மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அவரது உடலை தோண்டி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெயலலிதாவுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும்’ எனவும் அம்ருதா கூறியுள்ளார்.

அம்ருதாவின் கோரிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்த உள்ளது. நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு இந்த மனுவை ஆய்வு செய்கிறது. அப்போது, அம்ருதாவின் மனு விசாரணைக்கு ஏற்கப்படுமா அல்லது நிராகரிக்கப்படுமா? என்பது தெரியவரும்.

நடிகர் விஜயின் தந்தை மீது வழக்கு!!

மெர்சல் சர்ச்சை வெடித்தபோது விஜய்யின் மதம், அரசியல் நோக்கம் என பல விஷயங்கள் விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போது திருப்பதி உண்டியல் பற்றி தவறாக பேசியதாக விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்து மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் வி.ஜி.நாராயணன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டிருப்பதாவது..

கடந்த 22ம் திகதி நடந்த ஒரு படவிழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் உலக இந்துக்களின் புனித கோவிலான திருப்பதி கோவில் உண்டியலை லஞ்சம் பெறும் உண்டியல் என்று கிண்டல் செய்துள்ளார். இது இந்துக்களையும், இந்துக்களின் மத நம்பிக்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். கோவில் உண்டியலில் பணம் போட்டால் பாஸாகிவிடுவாயா? என்றும் கேட்டிருக்கிறார். கிறிஸ்தவரான எஸ்.ஏ.சந்திரசேகர் இந்து மத நம்பிக்கையில் தலையிட உரிமை இல்லை. அதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

லில்லியின் உலக சாதனையை முறியடித்த அஸ்வின்!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதேவேளை, இந்தப் போட்டியில் மொத்தமாக எட்டு விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ள இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் பங்கு பற்றி 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற புதிய உலக சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.

அதாவது 54 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள அஸ்வின், 300 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் அவுஸ்திரேலிய வீரர் டென்னிஸ் லில்லியின் (56 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை புரிந்திருந்தார்) சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

மருமகனை அடித்தே கொன்ற மாமியார்!!

மீரிகம பகுதியில் பெண் ஒருவர் தனது மகளின் கணவரை அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி மற்றும் அவரது தாயாரை அடித்து துன்புறுத்துவதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற அன்றும் அவர் அவ்வாறே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனையடுத்து, மாமியாரின் தாக்குதலுக்கு இலக்கான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர் போத்தலை – இகலகம பகுதியைச் சேர்ந்த 32 வயதான ஒருவராகும். மேலும், இவருக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஒரு இன்னிங்ஸ், 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

அதிகபட்சமாக தினேஷ் சண்டிமல் 57 ஓட்டங்களை இலங்கை சார்பில் பெற்றுக் கொடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்த, இஷாந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை சாய்த்தனர்.

இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணி சார்பில், முரளி விஜய் 128 ஓட்டங்களையும், புஜாரா 143 ஓட்டங்களையும், அணித் தலைவர் விராட் கோலி 267 பந்துகளில் 17 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 213 ஓட்டங்களையும் குவித்தனர்.

அத்துடன் ரோஹித் ஷர்மாவும் தன் பங்குக்கு சதமடித்து 102 ஓட்டங்களுடன் களத்தில் நின்றார். இதனால், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 610 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.

இதற்கமைய, இந்தியா 405 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்க இலங்கை தனது இரண்டாவது இன்னிங்சில் நேற்று பிற்பகல் விளையாட ஆரம்பித்தது.

இந்தநிலையில் போட்டியின் நான்காம் நாளான இன்று 166 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியைத் தழுவியுள்ளது.

அந்த அணி சார்பில் நிதானமாக ஆடிய, தினேஸ் சந்திமால் மாத்திரம் 66 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

ஏனைய வீரர்கள் அனைவரும் அரைச்சதம் கூட பெறாது சொற்ப ஓட்டங்களுக்கு வௌியேறி இரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தனர்.

மேலும் இந்திய அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களையும், இசாந் சர்மா, ரவீந்திர ஜடெஜா, உமேஷ் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதற்கமைய, முன்னதாக இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்த நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.

முல்லைத்தீவில் முள்ளந்தண்டு பாதிப்படைந்த இளைஞன் நல்லுள்ளம் கொண்டோரிடம் உதவி கோருகின்றார்!!

 
முல்லைத்தீவில் முள்ளந்தண்டு பாதிப்படைந்த நிலையில் வாழ்ந்து வரும் மகேந்திரன் மனேகராஜ் (வயது 24) வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவி கோருகின்றார்.

இறுதி யுத்தத்தின் போது முல்லைத்தீவில் தந்தையினையிழந்து தனது முள்ளந்தண்டு பாதிப்படைந்து இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார்.

இவரை தனிமையில் விட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலை தாயாருக்கு ஏற்பட்டுள்ளதால் சுயதொழில் செய்வதற்குறிய உதவியினை பொதுமக்களிடம் கோரியுள்ளார்.

இவருக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் :
பெயர் : மகேந்திரன் மனேகரராஜ்
இலங்கை வங்கி , முல்லைத்தீவு கிளை ,
கணக்கிலக்கம் : 80188749 ,
அடையாள அட்டையிலக்கம் :- 199315410010
தொலைபேசி இலக்கம் 0774020126 , 0770224326

வவுனியா பல்கலைக்கழகத்தில் பிரபாகரனின் பிறந்தநாள் கேக் வெட்டிக் கொண்டாட்டம்!!

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 63வது பிறந்த தினம் யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் இன்று (26.11.2017) கொண்டாடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் விடுதியில் கேக் வெட்டி, மாணவர்களுக்கும் கேக் கொடுத்து பிரபாகரனின் பிறந்த தினத்தை கொண்டாடியுள்ளார்கள்.

இதே வேளை யாழ். பல்கலைக்கழகத்திலும் பிரபாகரனின் 63ஆவது பிறந்த தினம் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலத்தில் பரிசளிப்பு விழா!!

 
வவுனியா தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தின் பரிசளிப்பு விழா நேற்று (25.11.2017) காலை 9.30 மணிக்கு பாடசாலையின் அதிபர் எம்.எ.மோகன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

பான்ட் வாத்தியங்களுடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், குழு இசை, சிங்களப்பாடல், பின்னல் கோலாட்டம் , ஆங்கிலப்பாட்டு , பரிசளிப்பு வைபவம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய, மீன்பிடி அமைச்சர் க.சிவநேசன், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண சபை உறுப்பினர்கள் இ.இந்திரராஜா, ஜீ.ரி.லிங்கநாதன் , கௌரவ விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் எம்.இராதாகிருஷ்ணன், வவுனியா கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.பி.நடராஜ் , முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் , வவுனியா தெற்கு ஆரம்பக்கல்விப் பணிப்பாளர் ஆ.தேவசேனா, பிரதிநிதிகளாக அயல் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொது அறிவு வினாடி வினாப்போட்டி!!

 
வவுனியா மாவட்ட சமூகசேவைத்திணைக்களம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரச மற்றும் அரசசார்பற்ற மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே நெல்லி ஸ்ராரின் அனுசரனையுடன் பொது அறிவு வினாடி வினாப்போட்டியை நேற்று 25.11.2017 (சனிக்கிழமை) மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடத்தினர்.

வவுனியா மாவட்ட செயலகம், ஓகான் நிறுவனம், சேவ் அக்ற் நிறுவனம், இணையும் கரங்கள் நிறுவனம், செட்டிகுள பிரதேசசெயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம், மாவட்ட பொது வைத்தியசாலை, விவசாய அபிவிருத்தி திணைக்களம், நைட்டா நிறுவனம், தேசிய தொழில் பயிற்சி அதிகார சபை, விவசாயக்கல்லூரி, தமிழ் விருட்சம், செவிப்புலனற்றோர் சங்கம் போன்றன போட்டிகளில் கலந்து கொண்டன.

கால் இறுதிப்போட்டிக்கு வவுனியா பொது வைத்தியசாலை, வவுனியா வடக்கு பிரதேசசெயலகம், செட்டிகுள பிரதேச செயலகம், வவுனியா மாவட்டச் செயலகம், விவசாயக்கல்லூரி, விவசாய அபிவிருத்தி திணைக்களம், நைட்டா நிறுவனம், சேவ் அக்ற் நிறுவனம் ஆகியன தெரிவாகின.

கால் இறுதிப்போட்டிகள் 28.11.2017 காலை 9 மணிக்கு மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிகளை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் நடாத்தினார். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் செல்வி தி.கலைவாணி, எஸ்கே.வசந்தன, செல்வி டிலானி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினர்.

வித்தியாவின் பிறந்ததினமும், நினைவுதினமும் புங்குடுதீவில் நினைவு கூறல்!!

புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் 21 ஆவது பிறந்த தினமான நேற்று மாணவியின் மரணத்திற்கான நினைவஞ்சலியும், விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றுள்ளது. மாணவி வித்தியா கல்வி கற்ற பாடசாலையான புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது

இந்த நிகழ்வினை முன்னால் நடிகையான சுகினிதா வீரசிங்க மற்றும் அவரது கணவர் களனி பல்கலைகழக விரிவுரையாளர் நந்தலால் மலான்கொட ஆகியோரால் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதியுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்டிருந்தது.

நாட்டில் இனி எங்கும் வித்தியாவுக்கு இடம்பெற்றது போன்றதான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது என்ற விழிப்புணர்வாகவும், அம் மாணவியின் மரணத்திற்கான அஞ்சலி நிகழ்வாகம் வித்தியாவின் 21 ஆவது பிறந்த தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது வித்தியாவின் உருவப்படத்திற்கு விருந்தினர்களும் பாடசாலை மாணவிகள் ஆசிரியர்கள் வித்தியாவின் நண்பர்கள் மற்றும் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளை தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோரும் மலர்துவி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

அதனை தொடர்ந்து வித்தியா நினைவாக குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த நடிகை மற்றும் விரிவுரையாளர் ஆகியோரது நிதி பங்களிப்புடனும் மற்றும் வதனி சங்கர் ஆகியோரது நிதி பங்களிப்புடனும் 284 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், சீருடைகளும் வழங்கப்பட்டன.

பின்தங்கிய பிரதேசங்களைச் சேர்ந்த ஒன்பது மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.

நடிகை ஜோதிகா மீது வழக்கு!!

நடிகை ஜோதிகா திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே படம் மூலம் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதனை தொடர்ந்து அவருக்கு மகளிர் மட்டும் ஒரு புத்துணர்ச்சியை கொடுத்தது.

இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியிருப்பது அப்படியே பீப் இல்லாமல் வெளி்யானது. இதனால் பலருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இது பெண்மையை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ளது என கோவை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 294 பி சட்டப்பிரிவின் படியும், தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் படியும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மெர்சல் இத்தனை கோடி நஷ்டமா?

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு இருந்தும் அதையெல்லாம் முறியடித்து வசூல் சாதனை படைத்தது.
இதை தொடர்ந்து மெர்சல் 250 கோடி கிளப்பில் இணைந்ததாகவும் கூறப்பட்டது, படத்தை எடுத்த அனைத்து திரையரங்குகளும் படம் நல்ல லாபத்தை தந்ததாக கூறினார்கள்.

ஆனால் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மெர்சல் படம் 30 முதல் 40 கோடி நஷ்டம் என்று சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கூறியுள்ளார். மேலும் இயக்குனர் ப்ரவீன் காந்தியும் மெர்சல் நஷ்டம் என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அழகாக இருப்பதால் படவாய்ப்பை இழந்தேன் : தீபிகா படுகோனே!!

தீபிகா படுகோனே திரை உலகில் காலடி எடுத்து வைத்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தி பட உலகின் முன்னணி நடிகையான இவர் நடித்த பத்மாவதி படம் பிரச்சினையில் சிக்கி இருக்கிறது.

அவருடைய தலைக்கும் விலை வைக்கப்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு வீட்டில் முடங்கி இருக்கிறார். இந்த நிலையில் திரை உலகம் பற்றி கூறிய தீபிகா படுகோனே…

“நான் நடிக்க வந்த போது இந்தி பட உலகில் படுக்கைக்கு சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அதிஷ்டவசமாக பட வாய்ப்புக்காக நான் அனுசரித்து போகவில்லை. ஆனால் எல்லோருக்கும் என்னைப்போல் நடப்பது இல்லை. நான் இங்கு பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்.

நான் அழகாக இருப்பதாலும் சில பட வாய்ப்புகளை இழந்திருக்கிறேன். நான் இப்போது 2 படங்களில் பணிபுரிந்த ஒரு இயக்குனர் முன்பு, “நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். இந்த கதைக்கு ஒத்துவர மாட்டீர்கள்” என்றார்.
கதாபாத்திரத்துக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்வேன் என்பது அவருக்கு தெரியாதா? நடிக்க சொல்லி இருந்தால் கதாபாத்திரத்துக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்வேன்.

ஆனால் அப்படி சொல்லவில்லை. நான் பட்ட கஷ்டம் என் குடும்பத்துக்கு தெரியும். மற்றவர்களுக்கு தெரியும். என் கடின உழைப்பால் இந்த இடத்துக்கு வந்து இருக்கிறேன். ஒரே இரவில் அனைத்தும் நடந்துவிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஆசிரியை திட்டியதால் 4 மாணவிகள் தற்கொலை!!

அரக்கோணம் அருகே ஆசிரியர் திட்டியதால் பாடசாலை மாணவிகள் 4 பேர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி. பகலவன் உத்தரவிட்டுள்ளார்.

பனப்பாக்கத்தில் அரச பாடசாலை மாணவிகள் 4 மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர்.

பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரேவதி 16, சங்கரி 16, தீபா 16, மனீஷா 16. இவர்கள் அனைவரும் பனப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பாடசாலையில் பிளஸ் 1 படித்து வந்தனர்.

பாடசாலையில் சரியாக படிக்காததால் பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியை கூறியதால் அவர்கள் இந்த சோக முடிவை எடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

4 பேரும் சரியாக படிக்காததால், நான்கு மாணவிகளையும் அழைத்து பாடசாலை தலைமை ஆசிரியை கண்டித்துள்ளார். மறுநாள் பெற்றோருடன் வருமாறு கூறி அனுப்பியுள்ளார்.

இதை பெற்றோரிடம் கூறாத மாணவிகள் 4 பேரும், நேற்று காலை வழக்கம்போல் பாடசாலைக்குச் சென்றுள்ளனர். புத்தகப் பைகளை வகுப்பில் வைத்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் 4 பேரும் கிளம்பி வெளியே சென்றனர்.

நேற்று பிற்பகல் 3 மணி அளவில் மாணவிகள் மாயமான தகவல் பரவியது. இதையடுத்து, பாடசாலைக்கு அவசரமாக விடுப்பு அளிக்கப்பட்டது. மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தகவல் அறிந்து பாடசாலையை முற்றுகையிட்டனர். சிலர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பனப்பாக்கம் அருகேயுள்ள மேலப்புலம் புதூர் நங்கமங்கம் கிராமத்தில் உள்ள கிணற்றின் அருகில் மாணவிகளின் சைக்கிள்கள் இருந்ததை சிலர் பார்த்துள்ளனர். அருகில் காலணிகள் மட்டும் இருந்தன. நான்கு மாணவிகளும் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற தகவல் அருகில் உள்ள கிராமங்களுக்கு பரவியது.

அரக்கோணம், ராணிப்பேட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். வெளிச்சம் இல்லாததால் ராட்சத மின்விளக்குகள் உதவியுடன் தேடுதலை துரிதப்படுத்தினர். இரவு 8 மணிக்குள் 4 மாணவிகளின் சடலங்களும் மீட்கப்பட்டன. மாணவிகளின் மரணத்திற்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பெற்றோர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே மாணவிகள் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்த 4 தனிப்படைகள் அமைத்து மாவட்ட எஸ்.பி. பகலவன் உத்தரவிட்டுள்ளார். ஆசிரியை, தலைமை ஆசிரியையிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

டென்மார்க் நகரசபை உறுப்பினராக தெரிவாகியுள்ள ஈழத்தமிழர்!!

டென்மார்க்கில் உள்ள பெருநகராட்சிகளில் ஒன்றான Sonderborg நகரசபைக்கான தேர்தலில் ஈழத்தமிழர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 21ஆம் நடைபெற்ற தேர்தலில் சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கணேஸ்வரன் சண்முகரத்தினம் என்பவரே இதில் வெற்றி பெற்று 2ஆவது முறையாகவும் நகரசபை உறுப்பினராகியுள்ளார்.

கிளிநொச்சி, வட்டக்கச்சியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 31 உறுப்பினர்களைக் கொண்ட Sonderborg நகரசபையில் 6ஆவது அதிகூடிய வாக்கை பெற்றவராக திகழ்கிறார்.

கணேஸ்வரன் சண்முகரத்தினம் தனது ஆரம்பக் கல்வியை கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையில் தொடங்கி, யாழ். ஸ்கந்தவரோதயா, வசாவிளான் மத்திய கல்லூரி, கொக்குவில் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கற்று கிளிநொச்சி மத்திய கல்லூரியில் உயர்தரத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அத்துடன், கடந்த 1990ஆம் ஆண்டு டென்மாக் சென்ற அவர் அங்கு இயந்திர தொழில்நுட்பவியலாளராக பணியாற்றுவதுடன், சுயதொழில் முனைவோராக வர்த்தக நிறுவனங்களையும் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டென்மார்க் மக்கள் பன்மைத்துவ பூர்வீக குடிமக்களை வரவேற்கின்ற்போதிலும் ஈழத்தமிழர்களின்பால் அதீத கரிசனையும் விருப்பும் உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அதற்க்கு தமிழரின் பண்பாடு கல்வி குடும்பவாழ்க்கை போன்றவை அவர்களைக்கவர்ந்துள்ளதே காரணமாகும்.

இலங்கையில் அரசியல் காரணங்களினால் சிதைக்கப்பட்டு உலகின் பலபாகங்களில் ஏதிலிகளாக குடியேறிய தமிழர்கள் தமது முயற்சியில் அரசியல் பொருளாதாரம் கல்வி கலை போன்றவற்றில் தடம்பதிப்பது தமிழினத்துக்கு பெருமையே.

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் : இருண்ட யுகத்திற்குள் மனைவி!!

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் மனைவி தனது கவலையை அந்நாட்டு ஊடகம் ஒன்றிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் Wembley பகுதியில் மொஹமட் ரஹீட் என்ற இலங்கையர், கடந்த செப்டெம்பர் மாதம் இருவரால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

அந்நாட்டு சட்டங்களை மிகவும் மதிக்கும் குடிமகனான மொஹமட் ரஹீட் தனது 51வது பிறந்த நாளுக்கு 9 நாட்கள் இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டார்.

Windsor town centre பகுதியில் இரண்டு நபர்களின் தாக்குதல்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த செம்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் Goswell Hill பகுதி காயமடைந்த நிலையில் காணப்பட்ட இலங்கையர், Oxford பகுதியிலுள்ள John Radcliffe வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவரது தலையில் பாரிய காயங்கள் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கையர் உயிரிழந்த பின்னர் செப்டெம்பர் 12ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த இருவரும் மூன்று மாத விளக்கமறியலின் பின்னர் அடுத்த மாதம் 12ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் மொஹமட் ரஹீட்டின் மனைவி பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

பெருமைக்குரிய இலங்கையரான எனது கணவர் உயிரிழந்த நாள் முதல் இன்று வரை ஒரு ஆழமான இருண்ட வலி தனக்குள் ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

என் கணவர் ரஹீட் குழந்தை பருவ நண்பர், அவர் தனது 51 வது பிறந்தநாளுக்கு 9 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

அவர் ஒன்பது ஆண்டுகளாக Wembleyயில் வசித்து வந்த ஒரு பெருமைக்குரிய இலங்கையராகும். அத்துடன் கடின உழைப்புடன் சட்டத்தை மதிக்கும் குடிமகனாகும்.

அவரது முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். அவர் குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அந்நியர்கள் உட்பட அவர் சந்திக்கும் அனைவருக்கும் அவர் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இரண்டு மாதங்கள் மெழுகுவர்த்திகள் எரியும் இடத்தில் ரஹீட்டுக்கு ஒரு நினைவிடம் உள்ளது. நான் என் நண்பர்களின் உதவியுடன் வாரத்திற்கு இரண்டு முறை Windsor பகுதிக்கு செல்கின்றேன். இங்குதான் ரஹீட் தனது கடைசி நிமிடங்களை கழித்தார்.

எனினும் 3 அற்புதமான பிள்ளைகளை அவர் என்னிடம் விட்டுச் சென்றுள்ளார். இஷானை இழந்த தாக்கம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

எங்கள் வாழ்க்கை எப்போதோ மாறிவிட்டது, நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒவ்வொரு நொடிக்கும் இஷாமை இழக்கின்றேன். அது என்னை உள்ளே எரிக்கிறது . என்னுள் ஒரு ஆழமான இருண்ட வலியை ஏற்படுத்தியுள்ளது என மொஹமட் ரஹீட்டின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.