பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர் : இருண்ட யுகத்திற்குள் மனைவி!!

பிரித்தானியாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரின் மனைவி தனது கவலையை அந்நாட்டு ஊடகம் ஒன்றிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவின் Wembley பகுதியில் மொஹமட் ரஹீட் என்ற இலங்கையர், கடந்த செப்டெம்பர் மாதம் இருவரால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.

அந்நாட்டு சட்டங்களை மிகவும் மதிக்கும் குடிமகனான மொஹமட் ரஹீட் தனது 51வது பிறந்த நாளுக்கு 9 நாட்கள் இருந்த நிலையில் கொலை செய்யப்பட்டார்.

Windsor town centre பகுதியில் இரண்டு நபர்களின் தாக்குதல்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த செம்டெம்பர் மாதம் 10ஆம் திகதி அதிகாலை 2 மணியளவில் Goswell Hill பகுதி காயமடைந்த நிலையில் காணப்பட்ட இலங்கையர், Oxford பகுதியிலுள்ள John Radcliffe வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவரது தலையில் பாரிய காயங்கள் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கையர் உயிரிழந்த பின்னர் செப்டெம்பர் 12ஆம் திகதி சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த இருவரும் மூன்று மாத விளக்கமறியலின் பின்னர் அடுத்த மாதம் 12ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இந்நிலையில் மொஹமட் ரஹீட்டின் மனைவி பிரித்தானிய ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டார்.

பெருமைக்குரிய இலங்கையரான எனது கணவர் உயிரிழந்த நாள் முதல் இன்று வரை ஒரு ஆழமான இருண்ட வலி தனக்குள் ஏற்பட்டுள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

என் கணவர் ரஹீட் குழந்தை பருவ நண்பர், அவர் தனது 51 வது பிறந்தநாளுக்கு 9 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார்.

அவர் ஒன்பது ஆண்டுகளாக Wembleyயில் வசித்து வந்த ஒரு பெருமைக்குரிய இலங்கையராகும். அத்துடன் கடின உழைப்புடன் சட்டத்தை மதிக்கும் குடிமகனாகும்.

அவரது முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை இருக்கும். அவர் குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அந்நியர்கள் உட்பட அவர் சந்திக்கும் அனைவருக்கும் அவர் ஒரு சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இரண்டு மாதங்கள் மெழுகுவர்த்திகள் எரியும் இடத்தில் ரஹீட்டுக்கு ஒரு நினைவிடம் உள்ளது. நான் என் நண்பர்களின் உதவியுடன் வாரத்திற்கு இரண்டு முறை Windsor பகுதிக்கு செல்கின்றேன். இங்குதான் ரஹீட் தனது கடைசி நிமிடங்களை கழித்தார்.

எனினும் 3 அற்புதமான பிள்ளைகளை அவர் என்னிடம் விட்டுச் சென்றுள்ளார். இஷானை இழந்த தாக்கம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.

எங்கள் வாழ்க்கை எப்போதோ மாறிவிட்டது, நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒவ்வொரு நொடிக்கும் இஷாமை இழக்கின்றேன். அது என்னை உள்ளே எரிக்கிறது . என்னுள் ஒரு ஆழமான இருண்ட வலியை ஏற்படுத்தியுள்ளது என மொஹமட் ரஹீட்டின் மனைவி மேலும் தெரிவித்துள்ளார்.

மாணவியின் உயிரைப் பறித்த காதல்!!

இரத்தினபுரி, மெதகம பகுதியைச் சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் காதல் விவகாரம் ஒன்றின் காரணமாக நேற்று முன்தினம் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பதினெட்டு வயதான குறித்த மாணவி இரத்தினபுரியில் பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவருகின்றார். சம்பவ தினத்தன்று அவரது தாயார் வெளியே சென்றிருந்த வேளை, புடவை ஒன்றின் மூலம் குறித்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வெளியில் சென்றிருந்த மாணவியின் தாயார் வீடு திரும்பியபோது, தூக்கில் தொங்கிய நிலையில் தனது மகளைக் கண்டதும் கூச்சலிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அயலவர்களின் துணையுடன் மாணவியை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றநிலையில் மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

காதல் விவகாரம் ஒன்றினாலேயே குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரை மாய்த்துக் கொள்வோர் பட்டியலில் இலங்கை முதலிடம்!!

தவறாக முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்வோர் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் ஒரு லட்சத்திற்கு 36.40 வீதத்தில் தற்சாவு செய்வதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கமைய ஆண்களே அதிகமானோா் தவறான முடிவை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பின் புதிய அறிக்கையின் பிரகாரம், அதிகமாக தற்கொலை செய்துகொள்வோரின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது.

பெண்ணின் வயிற்றிலிருந்து 191 புற்றுநோய்க் கட்டிகள் நீக்கம் : மருத்துவ வரலாற்றில் சாதனை!!

 

ஓமான் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரின் கர்ப்பப்பையிலிருந்து 191 புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி கேரளா மாநிலத்திலுள்ள “ஸ்டார் கெயார்” வைத்தியசாலை வைத்தியர்கள் உலக வரலாற்றில் சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
குறித்த பெண்ணிற்கு 4 மணித்தியாலங்கள் வரையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த புற்றுநோய்க் கட்டிகள் அகற்றப்பட்டுள்ளன.
அண்மையில் எகிப்து பெண் ஒருவரின் வயிற்றிலிருந்த 186 புற்றுநோய்க் கட்டிகள் நீக்கப்பட்டிருந்தன. இது வரையில் அந்த சத்திர சிகிச்சையே உலக சாதனையாக இருந்தது.
இது தொடர்பில் வைத்தியர்கள் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறு வயிற்றிலிருந்த புற்று நோய்க் கட்டிகளை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றியதால், தற்போது அவர கர்ப்பம் தரிக்கலாம்.
இந்த பெண் சத்திரசிகிச்சையின் பின் இரண்டு நாட்களில் வீட்டுக்குச் செல்லக்கூடிய நிலையும் காணப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்தியாவில் இதுவரை ஒரு சத்திர சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட அதிகளவான கட்டிகளின் எண்ணிக்கை 84 எனவும், ஓமான் பெண்ணிற்கு செய்த இந்த சத்திர சிகிச்சை அதனை முறியடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

டைனோசர்களை அழித்த ஆபத்தான விண்கல் : மீண்டும் பூமியை நெருங்குவதாக எச்சரிக்கை!!

பூமியை அண்மித்த பகுதியில் பாரிய விண்கல் ஒன்று பயணிக்கவுள்ளதாக வானியல் ஆய்வு நிலையங்கள் எச்சரித்துள்ளன.

சுமார் ஐந்து கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட விண்கல் ஒன்று எதிர்வரும் டிசம்பர் 17ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்காவின் நாசா நிறுவனம் உட்பட உலக புகழ்பெற்ற வானியல் ஆய்வு நிலையங்கள் தெரிவித்துள்ளன.

கிரேக்க இலக்கியத்திற்கமைய பூமியை அழித்த கடவுளின் பெயரிடப்பட்டுள்ள இந்த பாரிய விண்கல் “பெஹேதன் 3200” என அழைக்கப்படுகின்றது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி “பெஹேதன் 3200” என அழைக்கப்படுகின்ற விண்கல் 6.4 மில்லியன் மைல் தூரத்தில் சூரியனுக்கு அருகில் பயணிக்கவுள்ளது.

விண்வெளி தொலைவுகளின் அடிப்படையில், குறித்த விண்கல் பூமிக்கு அருகில் பயணிக்கும் என் விண்வெளி விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

டைனோசர் யுகத்தில் பூமியில் மோதுண்டு, குறிப்பிடத்தக்க உயிர்களை அழித்ததும் இவ்வாறான ஒரு விண்கல் என்பது குறிப்பிடத்தக்க முக்கிய விடயமாகும்.

இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் 2020 இல் விண்ணுக்கு!!

சேர் ஆதர்சீ க்ளாக் மத்திய நிலையம் ஏற்பாடு செய்யும் இலங்கையின் முதலாவது செயற்கைக் கோள் 2020 ஆம் ஆண்டு விண்ணுக்கு ஏவப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நனோ தொழில்நுட்பத்துடனான இந்த செயற்கைக் கோள் தயாரிப்புப் பணிக்கான தொழில்நுட்பம் மற்றும் பொருட்கள் என்பவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக ரஷ்யாவுடன் இலங்கை உடன்படிக்கையொன்றை செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

புகையிரதத்தில் மற்றும் புகையிரதப் பாதைகளில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 24 பேர் பலி!!

கடந்த 10 மாதங்களில் புகையிரதத்தில் இருந்தும் புகையிரதப் பாதைகளில் வைத்தும் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது நடந்த விபத்துக்களில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் புகையிரத கடவைகளில் வாகனங்கள் மோதிய 84 சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், 76 புகையிரத பயணிகள் புகையிரதத்தில் இருந்து விழுந்துள்ளனர்.

வருடா வருடம் புகையிரத பாதைகளில் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன், புகையிரத பாதை மற்றும் புகையிரத கடவைகள் ஊடாக பயணிக்கும் போது 436 விபத்துக்கள் நடந்துள்ளன.

முழுயாக கடந்த 10 மாதங்களில் நடந்த புகையிரத விபத்துக்கள் காரணாக 180 பேர் உயிரிழந்துள்ளனர். இவற்றை தவிர வாகனங்கள் புகையிரத கடவைகளில் உள்ள கேட்டுகளில் மோதி சேதமடைந்தமை சம்பந்தமான 506 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புகையிரத திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.

பட்டப் பகலில் யாழ் கோப்பாய் வீதியில் பெண்ணிற்கு நடந்த பயங்கரம்!!

 
யாழ்ப்பாணம் கோப்பாய் இராசபாதை வீதியில் பெண்ணொருவரின் சங்கிலியை திருடர்கள் அறுத்த நிலையில் குறித்த பெண் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை கோப்பாய் இராசபாதை வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் வீதியால் மோட்டர் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த திருடர்கள் அப்பெண்ணை தள்ளிவிழுத்திய நிலையில் சங்கிலியை அறுத்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் போது கிழே விழுந்த குறித்த பெண் படுகாயம் அடைந்த நிலையில் வீதியால் சென்றவர்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலை பரிசளிப்பு விழாவும் தாரகை சஞ்சிகை வெளியீடும்!!

 
வவுனியா சைவப்பிரகாச ஆரம்ப்ப பாடசாலையின் பரிசளிப்பு விழாவும் தாரகை சஞ்சிகை வெளியீடும் இன்று (24.11.2017) காலை 9.30 மணிக்கு வவுனியா நகரசபை மண்டபத்தில் பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலைமையில் இடம்பெற்றது.

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வரவேற்பு நடனம், நாடகம், நூல் வெளியீடு, நூல் ஆய்வுரை , பரிசளிப்பு வைபவம் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன், வவுனியா நகரசபை செயலாளர் இ.தயாபரன், ஆரம்பக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் எம்.தேவசேனா, விருந்தினர்களாக சமயத்தலைவர்கள், அயல் பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட விளையாட்டுப்போட்டி!!

 
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டி இன்று (24.11) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா நகர பிரதேச செயலகம், வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு, வெண்கலச்செட்டிகுளம் பிரதேசசெயலகங்கள் சார்ந்தோர் மற்றும் சீட் நிறுவனம், வரோட் நிறுவனம், ஓகான் நிறுவனம் இணையும் கரங்கள், உயிரிழை ஆகிய நிறுவனங்களின் சார்பில் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் .

வேகநடை, 100 மீற்றர் ஓட்டம், தண்ணீர் நிரப்புதல், பலூன் ஊதி உடைத்தல், சக்கர நாற்காலி ஓட்டம், சங்கீதக்கதிரை எனப்பல போட்டிகள் வவுனியா யங்ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றன.

சமூகசேவை உத்தியோகத்தர்களான திருமதி பி.விமலேந்திரன், என்.பாலகுமாரன், செல்வி வி.சோபனா அபிவிருத்தி உத்தியோகத்தர்களான செல்வி தி.கலைவாணி, திருமதி ப.கோமளா, திருமதி.செ.கலா, திருமதி.எஸ் ஜீவசாந்தி , எஸ்,கே.வசந்தருபன், திருமதி ஜெ.செல்வமலர் ஆகியோரும் சீட் நிறுவனத்தின் சந்துரூ, மற்றும் டிலானி, ஓகான் நிறுவன கலைவாணி, வரோட் நிறுவன விக்ரர் ஆகியோரும் நிகழ்வில் கலந்து கொண்டனர் .

நண்பகல் வரை நடைபெற்ற நிகழ்வில் மதியபோசனத்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

வவுனியாவில் சூழலை பாதுகாக்கும் நோக்கில் மரம்நடுகை நிகழ்வு!!

 
தேசிய மரநடுகை வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட சுற்றாடல் மற்றும் வனபாதுகாப்புக் குழுவின் ஏற்பாட்டில் தாண்டிக்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான பகுதிகளில் 1100 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இன்று மேற்கொள்ளப்பட்டது.

மீள் மரநடுகை தேசிய வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அதே சமயம் வவுனியா மாவட்டத்திலும் மீள மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரன, முன்னாள் அரசாங்க அதிபர் ரோஹண புஸ்பகுமார, வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், அரச திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள், பொலிசார், விமானப்படையினர் எனப் பலரும் இவ் மரநடுகை வேலைத்திட்டத்தில் பங்குபற்றியிருந்தனர்.

வவுனியாவில் பொது இடத்தில் மது அருந்திய நால்வர் கைது!!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் பொது இடத்தில் மதுவருந்திய நால்வரை நேற்று (23.11.2017) மாலை நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேரியகுளம் குளத்திற்கு செல்லும் பாதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மதுபானம் அருந்துவதாக வவுனியா நெளுக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நெளுக்குளம் பொலிஸ் பொருப்பதிகாரி எஸ்.அத்தனாயக்க தலமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு சென்று வீதியில் மதுவருந்திய 21,22,25,41 வயதுடைய நால்வரை கைது செய்துள்ளனர்.

இன்றையதினம் (24.11.2017) நால்வரையும் வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவில் குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழப்பு!!

 
வவுனியா மாமடு குளத்தில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இன்று (24.11.2017) மதியம் 2.30மணியளவில் உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக இவர்களுடன் குளிக்கச் சென்ற சிறுவன் பொலிஸாருக்கு தெரிவிக்கும்போது,

இன்று பிற்பகல் 2 மணியளவில் மாமடு குளத்திற்கு குளிப்பதற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் 4 பேர் சென்றிருந்தோம். குளத்தில் கரை ஓரப்பகுதியிலிருந்து தண்ணீரைத் தட்டித் தட்டி ஒருவர் மீது ஒருவர் விளையாடிக்கொண்டிருந்தோம்.

இதில் திருமணமாகி இரண்டு மாதமான 26 வயதுடைய ஜெயப்பிரதாப் மற்றும், அவருடைய ஒன்றுவிட்ட சகோதரியான 16 வயதுடைய பானுரேகா என்ற 2018ஆம் ஆண்டு சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவி ஆகிய இருவரும் குளத்தின் ஆழத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.

இதன்போது மற்றைய இருவரும் வெளியே சென்று அயலவர்களின் உதவியை நாடியதுடன் குளத்தில் மூழ்கிய இருவரையும் தேடி மீட்டு அருகிலுள்ள மாமடுவ பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது உயிரிழந்த இருவரின் சடலங்களும் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக சோமரத்தின விதான பத்திரன பதவியேற்றார்!!

 
வவுனியா மாவட்டத்தின் 36வது அரசாங்க அதிபராக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளராக இருந்த சோமரத்தின விதான பத்திரன இன்று (24.11.2017) காலை 8.30 மணியளவில் மாவட்ட செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தமிழ், சிங்கள மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதையடுத்து சுபநேரத்தில் மங்கள விளக்கேற்றி பதவியேற்றுக்கொண்டு முதல் கடிதங்களுக்கு கையெழுத்திட்டார்.

சிறப்பான வரவேற்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், முன்னாள் அரசாங்க அதிபர் எம்.வி.ரோஹண புஸ்பகுமார, திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மரநடுகை வேலைத்திட்டத்தில் புதிய அரசாங்க அதிபர், முன்னாள் அரசாங்க அதிபர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தாண்டிக்குளம் தொடக்கம் ஓமந்தை வரையான பகுதிகளில் மரநடுகை இடம்பெற்றது.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்!!

 
உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ380 – இல் வாழ்வில் ஒருமுறையாவது பயணித்துவிடுங்கள்.

ஏனெனில், பிரமாண்டமான சொகுசு மாளிகை போன்று காட்சியளிக்கும் இந்த விமானத்தில் 4 இன்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒரு இன்ஜின் பழுதடைந்தால் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிவிடலாம். மிக மிக நவீன கட்டுப்பாட்டு நுட்பங்களையும், பாதுகாப்பையும் இந்த விமானம் பயணிகளுக்கு வழங்குகிறது.

விமானத்தில் பயணிகள் ஏறுவது, இறங்குவது தெரியாத அளவுக்கு மிகச்சிறப்பாக படிக்கட்டுகள் மற்றும் எஸ்ட்லேட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி விமானத்தில் இருக்கும்போதும், நடக்கும்போது நமது வீட்டுக்குள் நாம் இருப்பது போன்ற உணர்வினை தருகிறது.

இதுவரை உருவாக்கப்பட்ட பயணிகள் விமானங்களில் அதிர்வுகளும், சப்தமும் குறைவான விமான மொடலாகவும் ஏர்பஸ் ஏ380 வர்ணிக்கப்படுகிறது.

மிகச் சிறப்பான காற்று சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை இந்த விமானம் பெற்றிருக்கிறது. சிறிய விமானங்கள் டர்புலென்ஸ் (Turbulence) எனப்படும் காற்று வெற்றிடங்களை கடக்கும்போது அதிக அதிர்வுகள், குலுங்கல்களை சந்திக்கும்.

ஆனால், இந்த விமானம் டர்புலென்ஸ் (Turbulence) காரணமாக அதிக பாதிப்பை சந்திக்காது. இந்த விமானத்தின் suite அறை நட்சத்திர ஓட்டல் அறைகளுக்கு இணையான வசதிகளை உள்ளடக்கியுள்ளது.

மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளை வைத்தே இந்த விமானம இயக்கப்படுகிறது.

ஃபேஸ்புக் மூலம் தடம் மாறும் பெண்களும் எதிர்பாராத விபரீதங்களும்!!

புறா விடு தூது, கடிதங்கள், போன் கால் போன்ற காலங்களில் இருந்ததை விட, ஃபேஸ்புக் காலத்தில் நிகழும் டிஜிட்டல் காதலில் தான் பெண்கள் அதிகம் ஏமாறுகிறார்கள்.

தன்னை வெளிப்படையாக லட்சக்கணக்கானவர்கள் முன் சுய விளம்பரம் செய்துக் கொள்ளும் இடமாக சமூக தளங்கள் மாறி நிற்கின்றன.

பிரபலமாக வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இடுப்பு கொஞ்சம் அதிகம் சிரித்தாலே பெயர் கெட்டுவிடும் என்ற காலம் ஒன்று இருந்தது.
ஆனால், இன்று செக்ஸி போஸ்களில் எடுத்த படங்களை கூட எளிதாக ஃபேஸ்புக்கில் வெளியிட்டு லைக்ஸ் அள்ள தான் பார்க்கிறார்கள்…

#1 ஒருவர் தனது பதிவுகளுக்கு, படங்களுக்கு அதிகமாக / தொடர்ந்து லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் கொடுத்து வந்தால் எளிதாக அந்த நபருடன் பழக ஆரம்பித்துவிடுகிறார்கள். அல்லது அந்த நபரை தனது நட்பு வட்டாரத்தில் யார், எவர் என அறியாமல் சேர்த்துக் கொள்கின்றனர்.

#2 நேரில் அல்லது அருகே அதிக தோழமை அல்லது உறவில் பெரிய பிடிப்பு இல்லாத பெண்கள், ஃபேஸ்புக் மூலம் பழகும் நட்பு வட்டாரத்தை பெரிதாக்கி கொள்ள விரும்புகின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான நட்புகள் சேர்த்துக் கொள்ள முகம் தெரியாத நபர்களை இணைத்துக் தனது விபரங்களை பகிர துவங்கி விடுகிறார்கள்!

#3 லைக்ஸ் மோகம்: இப்போது அதிக இளைஞர்கள் மத்தியில் காணப்படும் மோகம் இது. லைக்ஸ் மற்றவர்களுக்கு கிடைப்பது போல கிடைக்காமல் போனாலோ, வரும் லைக்ஸ் எண்ணிக்கை குறைந்தாலும் உடனே வருந்த துவங்கி விடுவது. இதனால், எப்படியாவது அதிக லைக்ஸ் பெற வேண்டும் என இவர்கள் பல முயற்சிகளில் இறங்குகிறார்கள்.

#4 அன்று கடிதம், செல்போன், நேரில் சென்று தான் காதலை சொல்ல வேண்டும். அப்படியே கூறினாலும், ஊர் சேர்ந்து அடிக்குமோ, அந்த பெண்ணே செருப்பை கழற்றும் சூழல் எழுமோ என்ற அச்சங்கள் இருந்தன. ஆனால், இப்போது இந்த அச்சம் இல்லாததால் சமூக தளங்கள் மூலம் காதலை பகிர்வது அதிகரித்து விட்டன.

#5 சின்ன, சின்ன பிரச்சனைகள் எழுந்தாலும் கூட, உடனே காதல் முறிந்து, அடுத்த நபருடன் இணையவும் சமூக தளம் ஒரு காரணியாக இருக்கிறது. இப்போதெல்லாம் காதல் தோல்வியை புகைப்படத்துடன் ஃபீலிங் எலோன் என பதிவு செய்வது அதிகரித்து விட்டது. இதை கண்டதும், தோள் கொடுத்து ஆசை வார்த்தை பேசி, காதலில் அப்பெண்ணை வீழ்த்த துடிக்கும் அன்(ம்)புகள் இங்கே ஏராளம்.

#6 மேலும், இளவட்ட வயதான 17 – 24-க்குட்பட்ட வயதினர் அதிகமாக ஃபேஸ்புக் மாயைகளில் ஏமார்ந்துவிடுகின்றனர். புதிய நபர்களுடன் பழகுவதில் இருக்கும் ஈர்ப்பு, வெளி செல்ல வேண்டும் என்ற துடிப்பு போன்றவை இவர்களை ஏமாற செய்கிறது. ஃபேஸ்புக் மூலம் இணைந்த பல காதலர்களும் இருக்கிறார்கள், ஃபேஸ்புக் மூலம் பிரிந்த காதலர்களும் இருக்கிறார்கள். இவை அனைத்தும் ஒரு நபர் எப்படி ஃபேஸ்புக் என்ற கருவியை பயன்படுத்துகிறார் என்பதில் தான் இருக்கிறது.

#7 ஒரு பெண் செல்ஃபீ போஸ்ட் செய்துவிட்டார் அதற்கு குவியும் லைக்ஸ்-க்கு ஈடு நிகர் வேறு என்ன என்பது ஆய்வு தான் செய்ய வேண்டும். அழகு என்பதை தாண்டி, முக பாவனைகளை பல்வேறு விதமாக காண்பித்து பதிவு செய்து, தங்கள் படங்களை எண்ணிலடங்காத வண்ணம் பகிரும் போது, அது சில சமயங்களில் தவறான வழிகளில் பலர் பயன்படுத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

விபரீதம் #1 அதிகமான பெண்களின் படங்கள், கண்ட க்ரூப்களில் லைக்ஸ்-காக பலர் பகிர்கிறார்கள்.

விபரீதம் #2 வேறு பெண்களின் படம் பயன்படுத்தி போலி கணக்குகள் ஆரம்பித்து, அதன் மூலம் வேறு ஆண்களுடன் தகாத முறையில் பழகுதல்.

விபரீதம் #3 மார்பிங் செய்து, நிர்வாண உடலுடன் இணைத்து அசிங்கப்படுத்துவது.

விபரீதம் #4 ஆபாச தளங்கள் அல்லது டேட்டிங் தளங்கள், மொபைல் அப்க்ளில் வேறு பெண்களின் படங்கள் பயன்படுத்தி ஏமாற்றுவது.