சிம் கார்ட் இல்லாத பொழுதும் அண்ட்ரொய்ட் பயனர்களின் இருப்பிடத் தகவல்களை சேகரிக்கும் கூகுள்!!

அண்ட்ரொய்ட் இயங்குதளத்தினை பயன்படுத்துபவர்களின் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், அதன்மூலம் பயனாளர்களின் இருப்பிடத் தகவல்களை கூகுள் சேகரிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுதும் அலைபேசி பயன்படுத்துபவர்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இயங்குதளம் (ஒப்பரேட்டிங் சிஸ்டம்) அண்ட்ரொய்ட் ஆகும். இது பிரபல தேடுபொறி நிறுவனமான கூகிளின் தயாரிப்பாகும்.

இந்நிலையில், அண்ட்ரொய்ட் இயங்குதளத்தினைப் பயன்படுத்துபவர்களின் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், அதன் மூலம் பயனாளர்களின் இருப்பிடத் தகவல்களை கூகுள் சேகரிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிரபல தொழில்நுட்ப இதழான குவார்ட்ஸில் தகவல் வௌியாகியுள்ளது.

நீங்கள் உங்கள் அலைபேசிகளில் இருப்பிட சேவையினை (லொகேஷன் சர்வீஸ்) அணைத்து வைத்திருந்த பொழுதும், அல்லது உங்கள் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், உங்களது இருப்பிடத் தகவல்களை அண்ட்ரொய்ட் இயங்குதளமானது சேகரித்து, இணையத்தில் இணைக்கப்பட்ட உடனேயே கூகுளுக்கு அனுப்புகிறது.
இவ்வாறு தாம் தகவல் சேகரிப்பதை கூகுள் நிறுவனமும் ஒப்புக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர், ”இவ்வாண்டு ஆரம்பத்தில் இருந்து குறுஞ்செய்திகளை அனுப்பும் வேகம் மற்றும் செயற்திறனை அதிகரிக்கும் பொருட்டு, அலைபேசிகளின் செல் அடையாள எண்களை கூடுதல் சிக்னலாகப் பயன்படுத்துகிறோம்,” என்று தெரிவித்திருந்தார்.

இதன்படி, அண்ட்ரொய்ட் செயலியானது நமது அலைபேசிகளில் இருப்பிட சேவையினை (லொகேஷன் சர்வீஸ்) அணைத்து வைத்திருந்த பொழுதும், அல்லது அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், நமக்கு அருகில் உள்ள செல்போன் கோபுரங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து கூகுளுக்கு அனுப்புகிறது.

இதன் காரணமாக நமது இருப்பிடம் உள்ளிட்ட பல தகவல்களை கூகிளால் பெற முடியும்.

அலைபேசியினை பேக்டரி ரீசெட் முறைக்கு மாற்றி வைத்தாலும் இதிலிருந்து விடுபட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏழு வருடங்கள் போராடி தான் திருமணமாகாதவர் என நிரூபித்த நடிகை!!

பாகிஸ்தானில் புகழ்பெற்ற நடிகை மீரா (40) பொலிவுட் படங்கள் சிலவற்றிலும் நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு பைசலாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆதிக் உர் ரஹ்மான் என்பவர் தனக்கும் மீராவிற்கும் 2007 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றதாக அறிவித்தார்.

தன்னை கணவர் என்று மீரா வெளிப்படையாகக் கூறாதது தனக்கு வருத்தமளிப்பதாகவும் ரசிகர்களிடம் மீரா தாம் திருமணம் ஆகாதவர் என்று கூறி வருவதாகம் ஆதிக் உர் ரஹ்மான் குற்றம் சாட்டினார்.

மீரா தனது மனைவி என்பதை நிரூபிக்க அவருக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டுமென்றும், தன்னை விவாகரத்து செய்யாமல் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்றும் மீரா வாழும் வீடு தனக்கு வேண்டும் என்றும் வெளிநாடுகள் செல்ல மீராவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை லாகூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ரஹ்மானின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்த மீரா, தனக்கு திருமணம் ஆகவில்லை என்றும் அவரின் திருமண சான்றிதழை எதிர்த்தும் 2010 ஆம் ஆண்டு எதிர்மனு தாக்கல் செய்திருந்தார்.

திருமணம் குறித்து இது மாதிரியான பல வழக்குகளை சந்தித்துள்ளது பாகிஸ்தானிய குடும்பநல நீதிமன்றங்கள். ஆனால், இதில் பிரபலம் சம்பந்தப்பட்டது இதுவே முதல் முறை ஆகும்.

இந்நிலையில், கடந்த வாரம் மீரா யாரையும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது என ரஹ்மான் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது லாகூர் சிவில் நீதிமன்றம்.

இதுகுறித்து தீர்ப்பளித்த நீதிபதி, திருமண சான்றிதழ் உண்மையா, போலியா என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை , ஆனால் குடும்பநல நீதிமன்ற சட்டம் 1964 இன் படி மீரா வேறொரு திருமணம் செய்து கொள்வதைத் தடுக்க முடியாது என கூறியுள்ளார்.

ஆனால், அந்த திருமண சான்றிதழ் உண்மை தான் என தெரிய வந்தால் அதற்கான சட்ட விளைவுகளுக்கு மீரா பொறுப்பேற்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

எனினும், இதனை வெற்றியாகக் கருதிய மீரா, “இறுதியாக தனக்கு நீதி கிடைத்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

கொலைகாரக் காளான்கள் : இயற்கையின் விந்தை!!

அமெரிக்காவின் கிழக்கு ஓரிகன் மலைப் பகுதிகளில் உலகிலேயே மிகப் பழமையான ஆச்சரியமளிக்கக்கூடிய ஓர் உயிரினம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அது Armillaria Ostoyae என்ற தேன் காளான்.

2,200 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தக் காளான்கள் பரந்து விரிந்திருக்கின்றன. இவை அனைத்தும் கண்களுக்குத் தெரியாத ஒரே ஒரு வித்திலிருந்துதான் உருவாகியிருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தக் காளான் உருவாகி குறைந்தது 2,400 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 8,000 ஆண்டுகள் ஆகியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

இந்த தேன் காளான்கள் மெதுவாகப் படர்ந்து, தான் செல்லும் வழியில் உள்ள உயிரினங்களைக் கொன்றுவிடுகின்றன. ஒவ்வோர் இலையுதிர் காலத்தின்போதும் மஞ்சள் வண்ணக் காளான்களாகக் கூட்டம் கூட்டமாகத் தங்கள் இருப்பை வெளிக்காட்டிக்கொள்கின்றன.

ஒரு சில வாரங்களில் தங்களுடைய உருவத்தை மாற்றி, வெள்ளை நிறமாக மாறி சுண்ணாம்புபோல் சாதாரணமாகக் காட்சியளிக்கின்றன.

இந்தத் தேன் காளான்கள் மரங்களுக்கு மிகப் பெரிய ஆபத்தை விளைவித்து விடுகின்றன. மரத்தின் வேர்களில் இருந்து சத்தை மெதுவாக உறிஞ்சி தங்களை வளர்த்துக்கொள்கின்றன. இதனால் மரங்கள் மெதுவாக சத்துக்களை இழக்க ஆரம்பிக்கின்றன. 20, 30 ஆண்டுகளில் தேன் காளான்களை எதிர்த்து நிற்க முடியாமல் இறக்கும் நிலைக்கு சென்றுவிடுகின்றன.

“காளான்களால் ஒரு மரத்தைக் கொலை செய்ய முடியும் என்பதை மக்களால் நம்ப முடிவதில்லை. மரத்துக்குத் தேவையான சத்துக்களும் தண்ணீரும் தொடர்ச்சியாகக் கிடைக்காவிட்டால் அவை காலப்போக்கில் மடிந்துதான் போகவேண்டும். தேன் காளான்கள் இப்படித்தான் அனைத்தையும் அபகரித்துக்கொண்டு, மரங்களை வீழ்த்திவிடுகின்றன” என அமெரிக்காவைச் சேர்ந்த நோயியல் மற்றும் வனத்துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் க்ரெக் ஃபிலிப் குறிப்பிட்டுள்ளார்.

1988 ஆம் ஆண்டு வனத்துறையைச் சேர்ந்த க்ரெக் விப்பில் என்பவர் முதன்முறையாக இந்தக் காளான்களைக் கண்டுபிடித்தார். பல காளான்கள் சேர்ந்த தொகுப்பாக இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால் மரபணு பரிசோதனையில் ஒரே ஒரு வித்திலிருந்து உருவானது என்பது தெரியவந்துள்ளது.

இந்தக் காளான்களை எல்லாம் ஒன்று சேர்த்தால் குறைந்தது 7,500 தொன்களிலிருந்து அதிகபட்சம் 35,000 தொன்கள் வரை எடை இருக்கும் என்கிறார்கள்.

இதே தேன் காளான்கள் அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியிலும் ஜெர்மனியிலும் கூட உள்ளன. ஆனால் ஓரிகனில் வாழ்வதுபோல் அவை மிகப்பெரிய உயிரினமாக இல்லை. மிகப் பழமையான உயிரினமாகவும் இல்லை.

காதலர்களைக் காண வந்த இரட்டை சிறுமிகள் அநாதரவான நிலையில் ஒரு வாரத்தின் பின் மீட்பு!!

15 வயதுக்குட்பட்ட காணாமல்போன இரட்டைச் சிறுமிகள் கொழும்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவ் இரட்டைச் சிறுமிகள் வெரலுகசின்ற நாவலப்பிட்டியில் இருந்து நவம்பர் 11 ஆம் திகதி காணமல் போய் இருந்தனர்.  இவர்கள் காணாமல் போனதையிட்டு இவ் இரட்டைச் சிறுமிகளின் பெற்றோர் நாவலப்பிட்டி நவம்பர் 14 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளனர்.

இவ் இரட்டைச் சிறுமிகள் நாவலப்பிட்டியில் இருந்து கொழும்பிற்கு தமது காதலர்களை காணும் பொருட்டு வந்துள்ளனர். பின்னர் இவ் இரட்டைச் சிறுமிகள் தமது காதலர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர்.

சிகிரியாவில் லொஜ் ஒன்றில் தங்கியிருந்த வேளை இவ் இரு இரட்டைச் சிறுமிகளும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளனர். பின்னர் இவ் இரட்டை சிறுமிகளும் தமது காதலர்களால் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தில் அனாதரவாக கைவிடப்பட்டுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதாக புகையிரத நிலைய பாதுகாப்பு அதிகாரிகளினால் கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடம் இவ் இரட்டைச் சிறுமிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் நாவலப்பிடி பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட இவ் இரட்டைச் சிறுமிகள் தொடர்பாக பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share

சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்ந்த வயோதிபருக்கு கடூழிய சிறை!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டளவில் 9 வயதான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் வயோதிபர் ஒருவருக்கு ஒரு வருடம் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டளவில் குறித்த சிறுமியை 65 வயதான வயோதிபர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு எதிராக யாழ். மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் போது குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக வயோதிபர் தெரிவித்தமையை அடுத்து அவருக்கு ஒராண்டு கடூழிய சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

அதனை செலுத்த தவறும் பட்சத்தில் 1 மாத கால கடூழிய சிறையும், 50 ஆயிரம் ரூபா நட்ட ஈடும் செலுத்த வேண்டும்.

குறித்த நட்டஈட்டை செலுத்த தவறின் ஆறு மாத கால கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

வவுனியா கனகராயன்குளத்தில் மாவீரர் தின நிகழ்வு!!

ஈரோஸ் அமைப்பின் மாவீரர் தின நிகழ்வு எதிர்வரும் நவம்வர் 27ம் திகதி அன்று கனகராயன்குளத்தில் குறிசுட்டகுளத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுப்பூங்காவில் நினைவுகூரும் அஞ்சலி நிகழ்வு நடைபெறவுள்ளது

தமிழிழ விடுதலை போரட்டத்திற்காக விடுதலை புலிகளோடு இறுதிவரை களமாடி இன்னுயிர்களை அர்ப்பணித்த ஈரோஸ் மாவீரர்களின் நினைவிடத்தில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதுடன் விடுதலைபோராட்ட சக மாவீரருக்கும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுகூரப்படும்.

இன் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றோம்

ஊடகப்பிரிவு
ஈரோஸ் தலைமையகம்
0776323884

வவுனியாவில் கேரள கஞ்சாவினை கடத்திய மூவர் கைது!!

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் 8 மணித்தியாலத்தினுள் 6.2 கிலோ கேரள கஞ்சாவுடன் மூவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இ.போ.ச பேரூந்தில் காத்தான்குடி, மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய முகமட் அலியார் முகமட் அஸ்வர் என்பவரின் பயணப்பொதியினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (23.11.2017) மாலை 5.30 மணியளவில் சோதனையிட்ட சமயத்தில் 4 கிலோ 25 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கி இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்தில் பயணித்த அலவத்தேகம , பலுகஸ்வவ பகுதியைச்சேர்ந்த 32வயதுடைய ரூவான் பாலித என்பவரின் பயணப்பொதியினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் நேற்று (23.11.2017) இரவு 7.30 மணியளவில் சோதனையிட்ட சமயத்தில் 1 கிலோ 950 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி இ.போ.ச பேரூந்தில் பயணித்த மள்ளியபுரம் , புத்தளம் பகுதியை சேர்ந்த 32 வயமுடைய முகமது இபிராயின் முகமது முரசி என்பவரின் பயணப்பொதியினை வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (24.11.2017) அதிகாலை 1 மணியளவில் சோதனையிட்ட சமயத்தில் 4 கிலோ கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியதுடன் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரிடமும் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆயர்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அமெரிக்க பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கு ஒரு கோடி ரூபா கொடுத்த தமிழர்!!

அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு தன்னுடைய பங்காக, கோலாலம்பூரைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் தான்ஶ்ரீ சோமசுந்தரம் ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்.

உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஹார்வர்ட் பல்கலைக்கழகமும் ஒன்று. இதில், உயர்தனிச் செம்மொழியாக சீனம், தமிழ், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சம்ஸ்கிருதம் மற்றும் பெர்சியம் மொழிகள் உள்ளன.

தமிழ் மொழியைத் தவிர மற்ற மொழிகளுக்கு இருக்கை இருக்கிறது. ஆனால், தமிழ் மொழிக்கு இருக்கை இல்லை.
எனவே, தமிழ் மொழிக்குப் பல்கலைக்கழகத்தில் இருக்கை பெற வேண்டும் என்பதற்காக உலகில் பல்வேறு இடங்களில் இருக்கும் தமிழ் ஆர்வலர்கள் பலரும் நன்கொடை அளித்து வருகிறார்கள்.

தமிழ் இருக்கைக்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். அதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹானும் 20 லட்சம் வழங்கினார்.

இவர்களைத் தொடர்ந்து பலரும் நன்கொடை அளித்து வரும் வேளையில், கோலாலம்பூரில் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க விஸ்மா துன் சம்பந்தன் மாளிகையில் நேற்றுமுன்தினம் (22.11.2017) நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியா கோலாலம்பூரில் வசிக்கும் தான்ஶ்ரீ சோமசுந்தரம் 1,60.000 டொலர் (இந்திய மதிப்பு ஒரு கோடி) காசோலையை ஹார்வர்ட் பல்கலைக்கழக தமிழ் இருக்கை பொறுப்பாளர்களில் ஒருவரான ஆறுமுகத்திடம் வழங்கினார்.

பத்து அடி நீளமான மலைப்பாம்பு மீட்பு!!

 
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெளிகம்பொல கிராமத்தில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர்.

விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் நீர் பாய்ச்சுவதற்கு இன்று காலை 10 மணியளவில் சென்ற போதே மரத்தடியில் மலைப்பாம்பை கண்டுள்ளார். இதனையடுத்து பிரதேசவாசிகள் பாம்பை மடக்கி பிடித்துள்ளனர்.

அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் காணமல் போன நிலையிலே இந்த மலைப்பாம்பு பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பிடிக்கப்பட்ட மலைப்பாம்பை நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கவுள்ளதாக பிரதேசவாசிகள் கூறியுள்ளனர்.

இலங்கையரின் வலையில் சிக்கிய அரியவகை மீன் : இத்தனை கோடி பெறுமதியா?

நீர்கொழும்பு மங்குளி கடற்பகுதியில் மீனவர் ஒருவரினால் பிடிக்கப்பட்ட அரியவகை மீனுக்கு பல கோடி ரூபா பேரம் பேசப்பட்டுள்ளது.

மிகவும் அரிய மீன் வகைகளில் ஒன்றான ப்ளு பின் டூனா எனப்படும் மீன் ஒன்று நேற்று முன்தினம் இலங்கை மீனவர்களுக்கு கிடைத்திருந்தது.

டூனா மீனை கரைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை கடலில் காண முடியாத இந்த மீன் அண்மையில் அதிஷ்டவசமாக சிக்கியுள்ளது.

நியூசிலாந்து போன்ற கடல் பிரதேசங்களிலேயே இந்த மீனை அவதானிக்க முடியும் என குறிப்பிடப்படுகின்றது. இந்த மீனை கரைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் தொலைபேசி ஊடாக இடம்பெற்ற கொடுக்கல் வாங்களில் இரண்டு கோடி ரூபாய் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட ஹரிஸ்­ணவி மறக்கப்பட்டார்?

பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுக் கொலை செய்யப்­பட்ட எனது மகள் ஹரிஸ்­ண­விக்கு நீதி கிடைக்­க­வேண்­டும், அவ­ளு­டைய துய­ரச் சம்­ப­வம் மக்­கள் மனங்­க­ளில் இருந்து அகன்று வருகிறது என அவ­ரது தாயார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்ந்து தெரிவித்த அவர், கண­வ­னைப் பிரிந்து வாழ்ந்த எனக்கு உத­வி­யாக எனது மகளே இருந்தார். இன்று அவர் இல்லை என்­பதை நினைத்­துப் பார்க்க முடியாதுள்ளது.

பாட­சா­லைக்­குப் போக­வில்லை என்று வீட்­டில் இருந்தவரை சட­ல­மா­கவே கண்­டேன். அவரைச் சிதைத்­த­வர்­கள் வெளி­யில் நட­மா­டு­கின்­ற­னர். அவருக்கு நீதி­ கி­டைக்­க­வில்லை.

ஹரிஸ்­ண­விக்­கா­கப் போரா­டி­வர்­க­ளு­டைய மனங்­க­ளில் இருந்து அவள் மெல்ல, மெல்ல வில­கு­கின்­றாள். குற்­ற­வா­ளி­கள் தப்­பித்துவிடக்­கூ­டாது. இது­போன்ற சம்­ப­வம் நடை­ பெ­றக் கூடாது என்­றால் ஹரிஸ்­ண­விக்கு நீதி கி்டைக்க வேண்­டும் என்று தெரிவித்தார்.

வவு­னியா உக்­கி­ளாங்­கு­ளம் பகு­தி­யைச் சேர்ந்த மாணவி ஹரிஸ்­ணவி கடந்த 2016ம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 16ம் திகதி அவரது வீட்­டில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டி­ருந்­தார். அன்­றை­ய­தி­னம் பாட­சாலை செல்ல மறுத்து தனி­யாக இருந்த போதே அந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­றி­ருந்­தது.

சிறப்பு விசா­ர­ணையை மேற்­கொண்ட அதி­காரி ஹரிஸ்ணவியின் உட­லில் நகக் கீறல் இருப்­ப­தா­க­வும், அவர் பாலி­யல் வன்­பு­ணர்­வுக்கு உட்­டுத்­தப்­ப­பட்­டுள்­ள­தா­க­வும் தெரிவித்­தார்.

சட­லம் உடற்­கூற்­றுப் பரி­சோ­த­னைக்கு உட்படுத்தப்­பட்­டது. சம்­ப­வத்­தின் பின்­னர் வவு­னியா உள்­ளிட்ட வடக்கு மாகா­ணம் எங்­கும் நீதி­கோ­ரிப் போராட்­டங்­கள் இடம்­பெற்­றன. குற்­ற­வாளி கைது செய்­யப்­ப­ட­வேண்­டும்,தண்­டிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று பலத்த கோசங்­கள் எழுப்­பப்­பட்­டன.

ஆர்ப்­பாட்­டங்­க­ளின் பின்­னர் ஹரிஸ்­ணவி வீட்­டுக்கு, அயல் வீட்­டி­லுள்ள நபர் ஒரு­வர் பொலி­சா­ரால் கைது செய்­யப்­பட்­டார். நீதி­மன்ற விசா­ர­ணை­க­ளில் அவர் 6 மாதங்­களாக விளக்கமறிய­லில் வைக்­கப்­பட்­டி­ருந்­தார்.

பின்­னர் அவர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார். ‘‘ஹரிஸ்­ண­வி­யின் வீட்­டா­ருக்கு எவ்­வித தொந்­த­ர­வும் கொடுக்­கக்­கூ­டாது’’ என்ற கடு­மை­யான உத்­த­ர­வு­டன் அவர் பி்ணையில் வெளி­வந்­தார். தொடர்ந்­தும் வழக்­கு­கள் இடம்­பெ­று­கின்­றன.

எதிர்­வ­ரும் ஜன­வரி மாதம் 29ஆம் திகதி அடுத்த தவணை வழக்கு இடம்­பெ­ற­வுள்­ளமை குறிப்­பிடத்தக்கது.

ஒரு மாத காலம் வீட்டுக்குள் தடுத்து வைத்து வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி!!

15 வயதான சிறுமியை சுமார் ஒரு மாதம் தனது வீட்டுக்குள் தடுத்து வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருணாகல் – கல்கமுவ பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான நபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் திருமணமாகதவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 23ஆம் திகதி பகுதி நேர வகுப்புக்குச் சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை எனவும், தமது பிள்ளை குறித்து தகவல் எதுவும் தெரியாத பெற்றோர் மறுதினம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

மஹாவ பொலிஸாரின் ஆலோசனைக்கு அமைய பெற்றோர் வாரியபொல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்த நிலையில் பெற்றோருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த சிறுமி தான் நலமுடன் இருப்பதாகவும் தன்னை தேட வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

எனினும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சிறுமி கல்கமுவ பிரதேசத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து 21 நாட்களின் பின்னர் வாரியபொல பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கடந்த மாதம் 23ஆம் திகதி இருவரும் கண்டிக்கு சென்றதாகவும் இதன் பின்னர் வீட்டுக்கு செல்ல விரும்பாத காரணத்தினால் சந்தேகநபரின் வீட்டுக்கு சென்றதாகவும் சிறுமி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வாரியபொல பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளார்.

சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுமியின் தந்தையை விட மூத்தவர் என தெரியவந்துள்ளது.

வவுனியாவில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த நபரை கைது செய்யக் கோரி போராட்டம்!!

 
வவுனியா கணேசபுரம் பகுதியில் கடந்த (14.11.2017) அன்று 16 வயதுச் சிறுமி வவுனியா நகரத்திற்கு சென்று வீடு திரும்பிய சமயத்தில் மரக்காரம்பளை கணேசபுரம் பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியில் வந்த ஐந்து இளைஞர்கள் குறித்த சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கிவிட்டு தம்பிச் சென்றனர்.

இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் குறித்த சிறுமியின் உறவினர்களினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

அன்று மாலை அவமானத்தை தாங்கிக்கொள்ளாத குறித்த சிறுமி அலரி விதையினை அரைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். உடனடியாக சிறுமியை மீட்டெடுத்த உறவினர்கள் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் அதே பிரதேசத்தை சேர்ந்த நால்வரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கணேசபுரம் கிராமத்தில் இன்று ஒரு பிள்ளைக்கு நடந்த சம்பவம் எமது கிராமத்தின் அனைத்து பிள்ளைகளுக்கும் பாதுகாப்பின்மையேன எனக் கருதி இந்த துஸ்பிரயோகத்திற்கான தகுந்த நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும், சந்தேக நபர்களில் ஒருவர் தப்பித்து சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்யுமாறும் , கணேசபுரம் கிராமத்தில் சிரமதானம் ஒன்றினை மேற்கொண்டு கிராமத்தை சுத்தப்படுத்தி தருமாறும் கோரி கணேசபுரம் மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினரால் இன்று (23.11.2017) காலை 9 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.

கணேசபுரம் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக ஆரம்பமான இப் போராட்டமானது மரக்காரம்பளை வீதியூடாக நெளுக்குளம் பொலிஸ் நிலையம் நோக்கி சென்று கொண்டிருக்கையில் வவுனியா பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குமாரசிங்க போராட்டத்தினை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார் .

எனினும் போராட்டக்காரர்கள் அதிகாரியின் கருத்தை பொருட்படுத்தாமல் நெளுக்குளம் பொலிஸ் நிலையம் வரை சென்று நெளுக்குளம் பொலிஸ் நிலையம் பொறுப்பதிகாரியினை சந்தித்து எஸ்.அத்தனாயக்கவை சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தாங்கிய மகஜரினை கையளித்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,

துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் நால்வரை கைது செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் ஒரு சந்தேகநபர் தப்பித்து சென்றுள்ள நிலையில் புலனாய்வாளர்கள், குற்றத்தடுப்பு பொலிஸாரின் உதவியுடன் குறித்த நபரை கைது செய்வதற்குறிய நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

கிராமத்தில் சிரமதானம் செய்யுமாறு வேண்டுகொள் விடுத்துள்ளீர்கள் அதற்குறிய நடவடிக்கையினை மேற்கொள்வோம் எனவும் உங்கள் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் ஏதும் இடம்பெற்றால் உடனடியாக எமக்கு அறியத்தருமாறும் தெரிவித்தார். அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

கணேசபுரம் கிராமத்தில் பல அமைப்புக்கள், கிராம சேவையாளர் என பலர் இருக்கின்ற போதும் கிராமத்தில் சிரமதானம் செய்வதற்கு பொலிஸாரை நாடுவது கவலைக்குறிய விடயமென சமூக ஆர்வளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

உயிரை பணயம் வைத்து 50 பயணிகளை காப்பாற்றிய பேருந்து ஓட்டுனர் : சிலிர்க்க வைக்கும் சம்பவம்!!

 
பிரான்சில் பேருந்து ஓட்டுனர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து பெரும் விபத்தில் இருந்து 50 பயணிகளை காப்பாற்றிய சம்பவம் பரவலாக பேசப்படுகிறது.

மாரிஸ் ரைட்ஸன்(63) என்ற பிரித்தானிய பேருந்து ஓட்டுனர் 50 பயணிகளுடன் பிரெஞ்சு அல்ப்ஸ் மலைப்பாதை வழியாக சென்றுகொண்டிருந்தார். இந்த நிலையில் குறித்த பேருந்தில் பிரேக்குகள் செயல்படாததை அறிந்த அவர் சமயோசிதமாக மலையில் மோதியுள்ளார்.

கடந்த 2013 ஏபரல் மாதம் நடந்த இந்த விபத்தில் சம்பவயிடத்திலேயே ஓட்டுனர் ரைட்ஸன் உயிரிழந்தார். ஆனால் குறித்த பேருந்தில் இருந்த 50 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதில் மோதிய வேகத்தில் பேருந்து தீ பிடித்து எரிந்துள்ளதால் பயணிகள் 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டனர். எஞ்சியவர்கள் பேருந்து கண்ணாடிகளை உடைத்து தப்பினர்.

இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு தொடரப்பட்டதில் ஓட்டுனர் ரைட்ஸனின் சமயோசித முடிவே பெரும் விபத்தில் இருந்தும் உயிர்ச்சேதத்தில் இருந்தும் காத்துள்ளதாக பெர்விக் கொரோனெர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Nathan Woodland என்ற சக ஓட்டுனரின் மொழியும் ரைட்ஸனின் சமயோசித மூடிவை நீதிமன்றத்தில் உறுதி செய்யும்படியாகவே அமைந்திருந்தது.

இந்த விபத்தில் ரைட்ஸனுடன் அந்த பேருந்தும் எரிந்து சாம்பலானது. இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன் : இரண்டாண்டு போராடி வென்ற பெண்ணின் துணிச்சல்!!

இளைஞர் காதலித்து ஏமாற்றியதாக ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்திய மலேசிய பெண் தற்போது காதலனையே கரம்பிடித்துள்ளார்.

மலேசியாவை சேர்ந்த விக்னேஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது அங்குள்ள கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் பணிபுரிந்த புதுச்சேரியை சேர்ந்த அமர்நாத் என்பவருடன் விக்னேஸ்வரிக்கு காதல் ஏற்பட்டது.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி விக்னேஸ்வரியிடம் அமர்நாத் எல்லை மீறியுள்ளார். சில மாதங்களில் விக்னேஸ்வரி கர்ப்பமாகிவிட சொந்த ஊருக்குச் செல்வதாகக் கூறிய அமர்நாத், அதன் பின் அவரை தொடர்பு கொள்ளவில்லை.

பின்னர் காதலனை தேடி புதுச்சேரிக்கு வந்த விக்னேஸ்வரிக்கு அங்கு பெண் குழந்தை பிறந்தது. ஒருவழியாக அமர்நாத்தை அவர் சந்தித்த நிலையில், விக்னேஸ்வரியை மலேசியா செல்லும்படியும் அங்கு வந்த திருமணம் செய்துகொள்வதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அவரை பின்னர் விக்னேஸ்வரியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து தான் ஏமாற்றபட்டதை உணர்ந்த விக்னேஸ்வரி புதுச்சேரி வில்லியனூர்க்கு வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனாலும் நடவடிக்கை எடுக்காததால் புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்னால் உட்கார்ந்து போராட்டம் நடத்தினார்.

போராட்டத்தையடுத்து வில்லியனூர் பொலிசார் அமர்நாத், விக்னேஸ்வரியை உடனடியாக திருமணம் செய்ய வலியுறுத்தினர். இதையடுத்து நேற்று அங்குள்ள அம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

காதலித்து ஏமாற்றினால் மூலையில் முடங்கிவிடும் பெண்களுக்கு மத்தியில், இரண்டாண்டு போராட்டத்திற்கு பிறகு காதலனையே விக்னேஸ்வரி கரம் பிடித்துள்ளார்.

20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை விற்றேன் : நடிகர் பார்த்திபனின் கந்துவட்டி அனுபவம்!!

நடிகர் பார்த்திபன் தயாரிப்பாளர் அசோக்குமார் இறப்பு குறித்தும், தான் அனுபவித்த கந்துவட்டி கொடுமை குறித்தும் குரல்வழி தகவலை அனுப்பியுள்ளார்.

நடிகர் சசிக்குமாரின் அத்தை மகனான தயாரிப்பாளர் அசோக்குமார், நேற்று கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அசோக்குமாரின் தற்கொலை சம்பந்தமாக நடிகர் பார்த்திபன் குரல் வழி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறுகையில், ’அசோக் குமாரின் மரணம் நம்மை சினிமா கனவுக்குள்ளே பெரிய கல்லை இறக்கி வைத்துவிட்டு போயிருக்கிறது. அவர் போல உணர்ச்சியுடன், விரைவாக முடிவெடுக்க கூடிய மென்மையான

மனிதர்கள் இனி இங்கே வாழவே முடியாது என்பதற்கு அவரின் மரணம் ஒரு எடுத்துக்காட்டு. இந்த நிலை தொடர்ந்தால் கந்துவட்டி மட்டுமே இங்கே நீடிக்கும். இந்த முறை மிகவும் கொடுமையானதுடன், தண்டனைக்குரியதாகும்.

நாம் கஷ்டப்படும் வேளைகளில் நண்பர்களை விட கந்துவட்டிகாரர்களே நமக்கு உதவுகின்றனர். அவசரத்திற்கு நாமும் அவர்களிடம் கடன் வாங்கி விடுகிறோம். ஆனால், இதனை தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் யோசிக்க வேண்டும்.

உதாரணத்துக்கு, நான் வாங்கிய வெறும் 20 லட்ச ரூபாய் கடனுக்காக வளசரவாக்கத்தில் இருந்த 75 லட்சம் மதிப்புள்ள எனது பங்களாவை விற்றேன்.

அதன் மதிப்பு இப்போது 7 கோடி ரூபாய் இருக்கும். ஒரு படம் நடித்து, அதன் மூலமாக வாங்கிவிடலாம் என நினைத்தேன். ஆனால், 13 ஆண்டுகளாக முடியவில்லை. என் வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு அதுதான்.

இப்போது நான் கூட ஒரு சிரமத்தில் இருக்கிறேன் என்றால், சினிமா சம்பந்தப்பட்டவர்களிடம் அதனைக் கூறுவதற்கு சிரமமாக உள்ளது.

சங்கங்களாலும் இப்படியான பிரச்சனைகளை தீர்க்க முடியாத நிலையே உள்ளது. அதனால், கந்துவட்டி பிரச்சனையில் இருந்து நாம் தப்பிக்க ஒரே வழி, நமக்கு நாமே ஏற்படுத்தி கொள்கிற கூட்டுறவு அமைப்பு தான்.

அந்த அமைப்பிலிருந்து ஒருவருடைய சிரமத்துக்கு, இன்னொருவர் எப்படி உதவலாம் என்று யோசிக்க வேண்டும். இனியாவது இந்த மாதிரி ஒரு பலி ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.