கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி!!

தேனி மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

சரவணன், சுதா தம்பதி தனது இரு மகள்களுடன் விஷம் அருந்தியுள்ளனர். சரவணன் குடும்ப பிரச்னைக்காகவும், தொழில் முதலீட்டிற்காகவும் கந்துவட்டி கடன் வாங்கியுள்ளார்.

நாளுக்கு நாள் கந்துவட்டி கொடுமை அதிகரித்த நிலையில் சரவணன் குடும்பத்துடன் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர்களை மீட்ட அக்கம்பக்கத்து வீட்டார் 4 பேரையும் தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து போடி சிலமரத்துப்பட்டியைச் சேர்ந்த சுருளி என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தோழிகளுக்கு தகவல் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த மாணவி : அதிர்ச்சி காரணம்!!

தேர்வில் கொப்பியடித்து மாட்டி கொண்ட மாணவி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்தவர் துருவராகமவுலிகா (18). இவர் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகத்தில் முதலாம் ஆண்டு கணணிப் பொறியியல் படித்து வந்தார்.

தற்போது தேர்வுகள் நடந்து வரும் நிலையில், நேற்று காலை மாணவி தேர்வில் கொப்பி அடித்ததாக கூறி தேர்வு அறையில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். சக மாணவர்கள் முன்னிலையில் தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றியதால் மனமுடைந்த அவர் நேராக விடுதிக்கு சென்றார்.

அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனது சகோதரர் ராஜேஷ்ரெட்டிக்கு தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக துருவராகமவுலிகா செல்போனில் மெசேஜ் அனுப்பினார்.

இதை பார்த்த ராஜேஷ் உடனடியாக சகோதரி தங்கியுள்ள விடுதி அறைக்கு வந்தார். அங்கு அறை தாழிடப்பட்டிருந்ததால் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார். பொலிசார் வந்து கதவை உடைத்து பார்த்த போது, அங்கே துருவராகமவுலிகா தூக்கில் சடலமாக தொங்கினார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அந்த மாணவி தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுக்கும் வட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளதாக தெரிகிறது. சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வவுனியாவில் கைக்குழந்தையை தவிக்க விட்டு தலைமறைவான யாழ். பெண்!!

வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் பத்து மாத கைக்குழந்தையை தவிக்க விட்டு பெற்ற தாய் தலைமறைவான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில் வசித்து வந்த பெண்ணே கணவரையும், கைக்குழந்தையையும் தவிக்க விட்டு தலைமறைவாகியுள்ளார். இது குறித்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட குறித்த பெண் கண்டி பிரதேசத்தை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் முடித்துள்ளார். குழந்தை பிறந்ததன் பின் மகளைத் தேடி வவுனியா வந்த குறித்த பெண்ணின் தாயார், தனது மனைவியை தன்னிடமிருந்து பிரித்து அழைத்து சென்று விட்டதாக கணவர் தெரிவித்தார்.

தனது மனைவி கடந்த 11ஆம் திகதி முதல் தன்னையும், குழந்தையையும் தவிக்க விட்டு சென்று விட்டதாகவும், தனது மனைவியை கண்டுபிடிக்க பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பால்மணம் மாறாத குழந்தை தாய்க்காக ஏங்கி அழுவதாகவும், இதன் காரணமாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஊராக சென்று மனைவியை தேடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனவே, குறித்த பெண்ணை யாராவது பார்த்தால் 076 – 3219514 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ். கோண்டாவில் பகுதியில் கிணற்றுக்குள் சடலம் : பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!!

யாழ். கோண்டாவில் பழனியாண்டவர் கோவிலடியை அண்மித்த பகுதியில் உள்ள கிணற்றில் சடலம் ஒன்று காணப்படுவதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும், சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை எதிர்ப்பார்த்திருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சடலத்தில் இளம் சிவப்பு நிறத்தை ஒத்த நிறத்தில் சேர்ட்டும் கறுப்பு நிறத்திலான ஜீன்ஸ்ம் காணப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக சடலம் கிணற்றுக்குள் காணப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வித்தியா கொலை வழக்கில் விடுதலையானவருக்கு மீண்டும் விளக்கமறியல் நீடிப்பு!!

மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு மற்றுமொரு வழக்கின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சந்தேகநபர் சார்பில் சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகியிருந்தார்.

சந்தேகநபரின் குடும்ப நிலையைக் கருத்திற்கொண்டும், வித்தியா படுகொலை வழக்கில் குற்றம் இழைக்காது தண்டனை அனுபவித்தமையாலும் அவரை விடுதலை செய்யுமாறு சட்டத்தரணி கோரிக்கை விடுத்தார்.

சந்தேகநபரால் அச்சுறுத்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் Trial at Bar மன்றில் சாட்சியமளித்திருக்கவில்லை என்பதையும் சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இந்த விடயம் தொடர்பில் Trial at Bar மன்றின் தீர்ப்பறிக்கையை ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ளதாக இதன்போது நீதவான் தெரிவித்தார்.

எனினும், நீதிமன்றத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என ஏற்கனவே சந்தேகநபருக்கு விளக்கமளித்திருந்த போதும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சந்தேகநபர் அச்சுறுத்தல் விடுத்ததாக நீதவான் சுட்டிக்காட்டினார்.

எனவே, சட்டத்தின் பிரகாரம் வழக்கு முன்னெடுக்கப்படுவதாகவும் அடுத்த வழக்குத் தவணையின் போது சந்தேகநபருக்கான கட்டளை பிறப்பிக்கப்படும் எனவும் நீதவான் ஏ.எம்.எம். ரியாழ் அறிவித்தார்.

இதற்கமைய, எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மாணவி வித்தியா படுகொலை வழக்கில் Trial at Bar தீர்ப்பாயத்தினூடாக விடுதலை செய்யப்பட்ட இந்த சந்தேகநபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள B அறிக்கையின் படி கடத்தல், கூட்டு வன்புணர்வு, கொலை ஆகிய வழக்குகளின் சாட்சியாளரை அச்சுறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மோடியின் கழுத்தை அறுத்து, கையை வெட்ட மக்கள் காத்திருப்பு!!

பீகார் மாநிலத்தில் முக்கிய கட்சியாக திகழும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட கடந்த 12 ஆம் திகதி மனுக்கள் பெறப்பட்டது. இதில், தற்போதைய தலைவராக உள்ள முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், தலைவர் பதவிக்கு லல்லு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக உள்கட்சி தேர்தல் அதிகாரி நேற்று அறிவித்தார்.

பத்தாவது முறையாக தன்னை தலைவராக தேர்வு செய்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து பேசிய லல்லு பிரசாத் என்னை ஜெயிலில் தள்ளி விட வேண்டும் என்று அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயாராக காத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

அவரை தொடர்ந்து பேசிய லல்லுவின் மனைவியும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான ரப்ரி தேவி பிரதமர் நரேந்திர மோடியின் கழுத்தை அறுக்கவும் கையை வெட்டவும் பீகார் மக்கள் தயாராக உள்ளதாக கூறினார்.

பிரதமர் மோடியை குற்றம்சாட்டி அவருக்கு எதிராக விரலை நீட்டுபவர்களின் விரல்களையும், கையையும் சேர்த்து வெட்ட வேண்டும் முன்னர் பீகார் மாநில பா.ஜ.க. தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நித்யானந்த ராய் தெரிவித்த கருத்துக்கு பதிலடி தரும் வகையில் பேசிய ரப்ரி தேவி, மோடியை குற்றம்சாட்டி விரலை நீட்டுபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்பதா? என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

அப்படி செய்து பாருங்கள், நாட்டில் யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள். பீகார் மக்கள் எதுவும் கூற மாட்டார்களா? பிரதமர் நரேந்திர மோடியின் கழுத்தை அறுக்கவும் கையை வெட்டவும் பீகாரில் பல மக்கள் தயாராக உள்ளனர். இதற்காக மக்களை அவர்கள் சிறையில் தள்ளலாம். பீகார் மக்கள் ஒன்றாக சேர்ந்து சிறைக்கு செல்வார்கள்.

எங்களுக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்புகள் எடுத்துவரும் நடவடிக்கைகளை கண்டு நான் அஞ்ச மாட்டேன். அமலாக்கத்துறை ஆகட்டும், வருமான வரித்துறை ஆகட்டும், சி.பி.ஐ. ஆகட்டும், மத்திய புலனாய்வு அமைப்புகளின் நடத்தை என்னவென்று எனக்கு தெரியும். இவற்றை வைத்து என்னை வீழ்த்திவிட முடியாது.

எத்தனை நோட்டீஸ்களை வேண்டுமானாலும் அவர்கள் அனுப்பட்டும். இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. நாங்கள் என்ன தவறு செய்தோம்? என்பதை மத்திய அரசும் இங்குள்ள மாநில அரசும் தெரிவிக்க வேண்டும். என்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று விரும்பினால் பாட்னாவுக்கு வந்து என்னிடம் கேள்வி கேட்கட்டும் என்றும் அவர் கூறினார்.

மருமகனை கொலை செய்த குற்றச்சாட்டில் மாமனாருக்கும், மைத்துனருக்கும் கடூழிய சிறை!!

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் மருமகனை கொலை செய்ததாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட மாமனாருக்கு 7 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையும், அவரது மகனுக்கு 2 ஆண்டு கால ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த தீர்ப்பை அளித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியில் சரத்பாபு என்பவரை அவரது மனைவியின் தந்தையும் மற்றும் இரண்டு சகோதரர்களும் இணைந்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் தீர்ப்பானது நேற்றைய தினம் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் வழங்கப்பட்டிருந்தது. வழக்கின் தீர்ப்பு வாசிக்கப்படும் போது நீதிபதி சில விடயங்களை சுட்டிக்காட்டி கொலை குற்றச்சாட்டில் இருந்து கைமோசக் கொலை குற்றத்திற்கு மாற்றியிருந்தார்.

அதாவது சம்பவ தினத்தன்று தனது மகளை மருமகன் அடித்து சித்திரவதை செய்வதாக தொலைபேசி வாயிலாக தகவல் கிடைத்தையடுத்தே தாம் அங்கு சென்று மகளை காப்பாற்ற முற்பட்ட போது மாமானாருக்கும் மருமகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையிலேயே மருமகன் கத்திக்குத்துக்கு இலக்காயுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் சகோதரன் தலைக்கவசத்தால் அடித்ததாகவும் பிரதிவாதிகள் தரப்பால் சாட்சியின் போது குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனை மன்றின் கவனத்திற்கு எடுத்து சாட்சியங்களூடாக பரிசிலித்து இந்த கொலை குற்றச்சாட்டை கைமோசக்கொலை குற்றச்சாட்டுக்கு மாற்றியுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

இதன்படி, கைமோசக் கொலை குற்றச்சாட்டில் குற்றவாளியாக மாமானார் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளமையால் அவருக்கு ஏழாண்டு கடூழிய சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபா அபராதப் பணமும் கட்டத்தவறின் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று சகோதரன் ஒருவருக்கு 2 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும் அது ஜந்து ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் ரூபா அபராதமும் கட்டத்தவறின் மூன்று மாத கடூழிய சிறைத் தண்டனையும் மற்றைய சசோதரனை விடுவித்தும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.

சந்திக்க ஹத்துருசிங்கவை தலைமை பயிற்சியாளராக நியமிக்கத் தயார்!!

இலங்கை கிரிக்கெட்டின் தேசிய தலைமை பயிற்சியாளராக சந்திக்க ஹதுருசிங்கவை நியமிப்பதற்கு தயாராக உள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபையின் தலைவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அவரை விடுவித்தால் இந்த நடவடிக்கையை எடுக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம்!!

இவ் வருடம் ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் நூற்றுக்கு 8.0 வீதம் வரை அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நூற்றுக்கு 5 வீதமாக நாட்டின் பணவீக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, உணவு வகைகள் சார்ந்த பணவீக்கம் நூற்றுக்கு 6.4 வீதமாகவும் உணவு வகைகள் சாராத பொருட்களின் பணவீக்கம் நூற்றுக்கு 2.4 வீதமாகவும் காணப்படுவதாக, சனத் தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேங்காய், மரக்கறி, அரிசி, வாழை, சிவப்பு வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தமையே, உணவு வகைகள் சார்ந்த பணவீக்கத்திற்குக் காரணம் எனவும் அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரை காணவில்லை!!

 
வவுனியாவில் 50 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என அவரது குடும்தத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

கடந்த (20.11.2017) அன்று காலை 11 மணியளவில் வவுனியா கூமாங்குளத்தை சேர்ந்த 50 வயதான பெனடிக் சூசைநாதன் என்பவர் வெளியில் சென்றதாகவும் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் உறவினர்கள் நன்பர்களின் வீடுகளுக்கும் தொடர்புகொண்டு கேட்டபோது அங்கும் அவர் இல்லாத காரணத்தினால் குடும்பத்தினர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்

இவர் தொடர்பில் விபரங்கள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் அவரின் மகனான பிரியதர்ஷனை ‎0765288183 என்னும் இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளுமாறு குடும்பத்தினர் கேட்டுகொண்டனர்.

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட இருவர் படுகாயம்!!

 
வவுனியா புகையிரத நிலைய வீதியில் இன்று (22.11.2017) இரவு 7.45 மணியளவில் மோட்டார் சைக்கில் மோதி குழந்தை உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புகையிரத நிலைய வீதியூடாக குருமன்காடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மதுரா மண்டபத்திற்கு முன்பாக வீதியினருகே நடந்து சென்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளாது.

இவ் விபத்தில் குறித்த பெண்ணும் ஒரு வயதுக் குழந்தையும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா போக்குவரத்து பொலிஸார் மோட்டார் சைக்கிலின் சாரதியான 21வயதுடைய இளைஞனை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா ஓமந்தையில் தனியார் பேரூந்து விபத்து : பலர் படுகாயம்!!

 
வவுனியா ஓமந்தை இராணுவ பாதுகாப்பு சாவடிக்கு அருகே இன்று (22.11.2017) மாலை 5 மணியளவில் தனியார் பேரூந்து விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மரத்தடிகளை ஏற்றி வந்த கப்ரக வாகனமொன்று ஓமந்தை இராணுவச்சாவடிக்கு அருகே வீதியில் தரித்து நின்ற சமயத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேரூந்து கப்ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது .

இவ் விபத்தில் தனியார் பேரூந்தில் பயணித்த பயணிகள் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொலைகார ரோபோக்கள் பற்றி தெரியுமா?

மனிதனின் கட்டளையைக் கொண்டு செயல்படும் ரோபோக்கள் LAWS ஆகும். ராணுவ பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட இவை கொலைகார ரோபோக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

Lethal Autonomous Weapons என்பதன் சுருக்கமே LAWS ஆகும், இந்த ரோபோக்கள் ராணுவத்திற்காக உருவாக்கப்பட்டவை. இதனை இயக்கி, எதிரிகளின் கருவிகளையும், மனிதர்களையும் எளிதில் அழித்து விடமுடியும்.

இவற்றை நீர், நிலம், ஆகாயம் என அனைத்து இடங்களிலும் செலுத்த முடியும் என்பதால், இவை ரோபோ ஆயுதங்கள் மற்றும் கொலைகார ரோபோக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மனிதன் கட்டளை இட்டால், எவ்வளவு பெரிய கூட்டத்திலும் குறிப்பிட்ட மனிதரையோ, இலக்கையோ மிகத் துல்லியமாக அடையாளம் கண்டு அழித்துவிடும் சக்தி வாந்தவை.

ஒரு நகரத்தினைக் கூட இவை அழித்துவிடும் திறன் வாய்ந்த இந்த ரோபோக்கள் மனிதனைப் போல நூறு மடங்கு விரைவாக செயல்படும் என கூறப்படுகிறது.

தற்போது மனிதனின் கட்டளைக்கு ஏற்ப செயல்பட்டாலும் எதிர்காலத்தில் தானாகவே செயல்பட ஆரம்பித்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

மேலும், ஸ்டீபன் ஹாகிங், நோம் சோம்ஸ்கி போன்ற பல அறிஞர்களும் இந்த ரோபோக்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் உலகில் உள்ள ஆயுதங்களைக் குறைத்தல் மற்றும் அழித்தல் அமைப்பின் தூதுவர் அமன்தீப் கில் கூறுகையில், ரோபோக்களால் உலகைக் கைப்பற்றிக் கொள்ள முடியாது. இன்றும் மனிதனே மகத்தானவன். எனவே, அளவுக்கு அதிகமாக பயப்பட தேவையில்லை’ என தெரிவித்துள்ளார்.

உலக முடிவு நெருங்கிவிட்டது : ரஷ்ய ஜனாதிபதியை எச்சரித்த மதகுரு!!

 
உலக முடிவு நெருங்கிவிட்டதாகவும், இந்த பேரழிவில் இருந்து தப்பித்துக்கொள்ள அனைவரும் ஒன்று திரள வேண்டும் எனவும் ரஷ்ய ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் அமைந்துள்ள தேவாலயத்தின் தலைவரான Patriarch Kirill இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

உலக முடிவுக்கான அறிகுறிகள் வெற்றுக் கண்களுக்கே தென்படத் துவங்கியுள்ளதாக கூறும் அவர், ஒருமித்த கருத்தாக்கம் கொண்ட அனைவரும் ஒன்று திரண்டு இந்த அழிவை எதிர்த்து போராட வேண்டும் என்றார்.

தாய்நாட்டின் மீது பற்று கொண்ட அனைவரும் இந்த மாபெரும் போரில் களமிறங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இருப்பினும் எந்த வகையான அச்சுறுத்தல் உலக அழிவை நோக்கி நெருங்குவதாக அவர் குறிப்பிடவில்லை. கடந்த 2013 ஆம் ஆண்டு பேசிய இவர், ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக ஆதரிப்பது என்பது உலக முடிவுக்கான முதல் அறிகுறி என கருத்து தெரிவித்திருந்தார்.

பிச்சையெடுத்து சேர்த்த 2.5 லட்சத்தை கோயிலுக்கு தானமாக வழங்கிய மூதாட்டி!!

மைசூரில் தான் பிச்சையெடுத்து சேர்த்த 2.5 லட்ச ரூபாயை கோயிலில் பிரசாதம் வழங்குவதற்காக தானமாக கொடுத்து ஆச்சரியப்படுத்தியுள்ளார் மூதாட்டி ஒருவர்.

மைசூரு அருகே உள்ள வண்டிகோபல் என்னும் பகுதியில் பிரசித்தி பெற்ற பிரசன்ன ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது. இங்கு பல காலமாக சீதா லட்சுமி எனும் 85 வயது மூதாட்டி பிச்சையெடுத்து வருகிறார். அவ்வாறு அவர் பிச்சை எடுத்து சேர்த்த 2.5 லட்சத்தை, அந்த கோயிலில் அனுமார் ஜெயந்தி அன்று வழங்கப்படும் பிரசாதத்திற்காக செலவிடுங்கள் எனக் கூறி கோயில் நிர்வாகத்தின் வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.

இது குறித்து மூதாட்டி கூறுகையில், பக்தர்கள் தாமாக எனக்கு போடும் காசை தினமும் சேர்த்து வைப்பேன். அது தான் இந்த பணம். இதனை யாராவது திருடி விடுவார்களோ என்று பயம் எனக்கு அதிகரித்தது. அதோடு இவ்வளவு பணத்தை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன். பக்தர்கள் எனக்கு அளித்த பணத்தை, நான் அவர்களுக்கு திருப்பி அளிக்கிறேன். ஏற்கனவே, விநாயகர் சதுர்த்தி அன்று, விழாவுக்காக நான் 30,000 ரூபாயை அளித்திருந்தேன். எனக்கு இறைவன் இருக்கின்றான், அதனால் எனக்கு கவலை இல்லை என தெரிவித்துள்ளார்.

லண்டனில் வேலை செய்த பெண் இந்தியாவில் பிச்சையெடுக்கும் அவலம்!!

இந்தியாவில் ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த பிச்சைக்காரர்களில் இரண்டு பெண்களில் ஒருவர் அமெரிக்காவின் கிரீன் கார்டு ஹோல்டர் என்றும் மற்றொருவர் லண்டனில் வேலைபார்த்து வந்தவர் என்று பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இந்த மாத இறுதியில் நடைபெறவிருக்கும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள வரும் அமெரிக்க குழுவுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா தலைமை வகிக்க உள்ளார்.

மூன்று நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டினால், ஹைதராபாத்தில் இருக்கும் பிச்சைக்காரர்கள் அனைவரும் மறுவாழ்வு மையத்தியற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அதுமட்டுமின்றி ஹைதராபாத்தில் பிச்சை எடுப்பதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இரண்டு மாதங்கள் வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 133 பெண் பிச்சைக்காரர்கள் Cherlapalliல் இருக்கும் Ananda ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களை Cherlapalli சிறை கண்காணிப்பாளர் K Arjun Rao விசாரித்த போது சில நம்பமுடியாத தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து Arjun Rao ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளிக்கையில், இங்கு இருக்கும் பெண்களிடம் விசாரணை மேற்கொண்ட போது இரண்டு பெண்கள் எங்களையே மிஞ்சும் அளவிற்கு ஆங்கிலத்தில் பேசினர், அதுமட்டுமின்றி கேட்ட கேள்விகளுக்கு ஆங்கிலத்திலே பதில் அளித்தனர்.

அதன் பின் அவர்களை விசாரணை மேற்கொண்ட போது அந்த பெண்ணின் பெயர் Farzona(50), முதுகலை பட்டம் பெற்றுள்ளது தெரியவந்தது. லண்டனில் உள்ள தனியார் கம்பெனியில் கணக்கியல் துறையில் வேலை பார்த்து வந்தவர், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார்.

இவரின் மகன் அமெரிக்காவிலும், இவருக்கு என்று ஹைதராபாத்தின் Anandbagh பகுதியில் சொந்த வீடும் உள்ளது, இவரது கணவர் இறந்துவிட்டதால், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான இவர் கோவில் கோவிலாக சென்றுள்ளார். அதன் பின் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக தற்போது பிச்சையெடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தான் இங்கிருக்கும் தர்காவில் பிச்சையெடுத்துக் கொண்டிருந்த போது, என்னை பார்த்துவிட்டு, பார்த்தும் பார்க்காததும் போல் தன் மகன் சென்றதாகவும் கூறியுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் அவரது மகனை தற்போது தொடர்பு கொண்டுள்ளதாகவும், விரைவில் அவர் வந்தவுடன் அனுப்பி வைத்துவிடுவோம் என்று கூறியுள்ளார்.

மற்றொரு பெண்ணின் பெயர், Rabiya Baseera எனவும் ஹைதராபாத்தின் Langar Houz பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அமெரிக்காவின் கிரீன் கார்டு ஹோல்டர் ஆன இவருக்கும் வீடுகள் உள்ளது எனவும், மன உளைச்சல் காரணமாகவே இங்கிருக்கும் தர்காவில் பிச்சையெடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

தற்போது 44 வயதான Baseeraவை அவரது உறவினர்களிடம் அனுப்பி வைத்துவிட்டதாக Arjun Rao கூறியுள்ளார்.