தமிழகத்தில் 14 வயது சிறுவன் ஆசிரியர் கண்டித்ததால், அவமானம் தாங்காமல் தனக்கு தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் திருப்பத்தூர் அருகே இருக்கும் ஜோன்றம்பள்ளியை சேர்ந்த முருகனுக்கு 14 வயதில் மகன் ஒருவன் உள்ளார். இவன் நேற்று பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, பள்ளியில் சக மாணவனிடம், இந்தச் சிறுவன் பணப் பையை திருடியதாக, பள்ளியின் ஆசிரியர் இவரை கண்டித்துள்ளார்.
இதனால் பெரிதும் அவமானம் அடைந்த சிறுவன் பள்ளி செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதற்காக மண்ணெண்ணெய் எடுத்துச் சென்று மாந்தோப்பில் தனக்கு தானே உடலில் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொண்டான்.
இதில் சிறுவனுக்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த காரணத்தால் காதலியை உயிரோடு தீவைத்து எரித்துகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம், வெளிநாட்டில் வேலை செய்கிறார், இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு இந்துஜா, நிவேதா என்ற மகள்களும் மனோஜ் என்ற மகனும் உள்ளனர்.
நேற்றிரவு ரேணுகா வீட்டிலிருந்து காப்பாற்றுங்கள் என்ற அலறல் கேட்டுள்ளது, அதைக் கேட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வீட்டுக்குள் சென்றுள்ளனர்.
அப்போது, ரேணுகா, இந்துஜா, நிவேதா ஆகியோர் தீயில் கருகியபடி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். உடனடியாக, அவர்களை மக்கள் காப்பாற்ற முயன்றனர். இந்தச் சம்பவம் குறித்து பொலிசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு வந்த பொலிசார், ரேணுகா, நிவேதாவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலேயே இந்துஜா உயிரிழந்தார். சம்பவம் குறித்து ஆதம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். பொலிசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் இந்துஜா பணியாற்றியுள்ளார். அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞனுக்கும் இடையே பழக்கம் இருந்தது. இந்தத் தகவல், இந்துஜாவின் குடும்பத்தினருக்குத் தெரியவந்ததும் கண்டித்துள்ளனர்.
அதன்பிறகு ஆகாஷூடன் பேசுவதை இந்துஜா தவிர்த்துள்ளார். இதில் விரக்தியடைந்த ஆகாஷ், இந்துஜாவை பின்தொடர்ந்துள்ளார். நேற்றிரவு இந்துஜா வீட்டுக்குச் சென்ற ஆகாஷ், . ‘இந்துஜாவைத் தனக்குத் திருமணம் செய்துதரும்படி ரேணுகாவிடம் கேட்டுள்ளார்.
ஆனால், அதற்கு ரேணுகா சம்மதிக்கவில்லை. இதனால், அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஆகாஷ், இந்துஜா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. தீயில் கருகிய இந்துஜா உயிருக்குப் போராடியுள்ளார். அவரைக் காப்பாற்ற வந்த ரேணுகா, நிவேதா மீதும் தீப்பிடித்தது.
இதனால் மூன்று பேரும் தீயில் கருகினர். உடனடியாக அங்கிருந்து ஆகாஷ் தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டஆகாஷ் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், எனக்குப் பள்ளி பருவத்திலிருந்தே இந்துஜாவைத் தெரியும். அவர், படித்து ஐ.டி. கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். ஆனால், நான் வேலையில்லாமல் ஊரைச் சுற்றி வந்தேன்.
சின்ன வயதிலிருந்தே இந்துஜாவை விரும்பினேன். அவரும் என்னை விரும்பினார். ஆனால், ஸ்டேட்டஸ் பார்த்து என்னை ஒதுக்க ஆரம்பித்தனர் இந்துஜா குடும்பத்தினர். சில மாதங்களாக என்னிடம் பேசுவதையும் இந்துஜா தவிர்த்துவிட்டார்.
அவளை என்னால் மறக்க முடியாமல் தவிக்கிறேன் நேற்றுகூட அவரிடம் என் காதலை ஏற்றுக்கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சினேன். ஆனால், இந்துஜா மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் என்னைக் கேவலமாகப் பேசினர்.
எனக்குக் கிடைக்காத இந்துஜா இனி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கருதி அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீயை வைத்தேன்’ என்று கூறியுள்ளார்.
ஆகாஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மேலும்மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ரேணுகா மற்றும் நிவேதாவுக்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்களிடமும் வாக்குமூலம் பெற வேண்டும் என பொலிசார்தெரிவித்துள்ளனர்.
பாடசாலையில் கணக்கு ஆசிரியையாக பணிப்புரிந்த பெண் ரயில் நிலையம் வாசலில் பிச்சையெடுத்த நிலையில் அவரை பெண் ஒருவர் மீட்டுள்ளார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு வித்யா என்ற அரசு ஊழியர் தனது தோழியை அழைத்து வர சென்றுள்ளார்.
அப்போது ரயில் நிலையத்தின் வாசலில் பெண் ஒருவர் அழுக்கு துணி அணிந்திருந்து பிச்சையெடுத்து கொண்டிருந்ததையும், மரத்தில் இருந்த பழங்களை பறித்து கொண்டிருந்ததையும் வித்யா பார்த்துள்ளார். அவரிடன் சென்று பேச முடிவெடுத்த வித்யா குடும்ப விபரங்கள் குறித்து கேட்டுள்ளார்.
பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண், கணவர் மற்றும் மகனால் கைவிடப்பட்டவர் என வித்யாவுக்கு தெரியவந்தது. பின்னர் ஹொட்டலிலிருந்து இட்லி மற்றும் வடைகளை அப்பெண்ணுக்கு வித்யா வாங்கி கொடுத்துள்ளார்.
அவர் பேசிய விதத்தை பார்த்து நன்கு படித்தவர் என்பதை உணர்ந்த வித்யா மேலும் விசாரித்துள்ளார். அப்போது தான், வடக்கு கேரளாவில் உள்ள மலப்புறம் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பொது பள்ளியில் குறித்த பெண் கணக்கு ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரியவந்தது.
பிச்சையெடுத்தவரின் பெயர் வல்சா என்பதை அறிந்த வித்யா அவரை புகைப்படம் எடுத்து அவர் நிலையை விளக்கி பேஸ்புக்கில் பதிவிட்டார்.
இதை பார்த்த வல்சா பணியாற்றிய பள்ளியின் மாணவர்கள் பலர் அவரை கவனித்து கொள்ள முன்வந்தனர்.
ஆனால், அவர்களுடன் போக மறுத்த வல்சா தனது கணவர் மற்றும் மகனுடன் மட்டுமே செல்வேன் என கூறிவிட்டார்.
தற்போது வல்சாவின் சகோதரி மற்றும் உறவினர்களும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட துணை ஆட்சியர் மூலம் வல்சா அங்கிருந்து மீட்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரின் கணவர் மற்றும் மகனை தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் குடும்பத்தினருடன் வல்சா இணைவார் என தான் நம்புவதாக வித்யா கூறியுள்ளார்.
சர்வதேச கணித திறனாய்வுப் போட்டியில் பங்குபற்றிய தமிழ் மாணவன் துரைராசசிங்கம் இமயவன் வெண்கலப் பதக்கமும், சான்றிதழும் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
தாய்லாந்தில் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற எட்டாவது சர்வதேச கணித திறனாய்வுப் போட்டியில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் தரம் 09 இல் கல்வி பயிலும் இமயவன் பங்குபற்றியிருந்தார். இந்த நிலையிலேயே அவர் குறித்த போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றுள்ளார்.
இதேவேளை இவர் கடந்த 2015ஆம் ஆண்டு தாய்லாந்தில் இடம்பெற்ற கணித ஒலிம்பியாட் போட்டியிலும் வெண்கலப் பதக்கம் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பாம்பு இனம் ஒன்றை சிவனொளிபாத மலை பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிவனொளிபாத மலையின் மேற்கு மலையடிவாரத்தில் இந்த பாம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பாம்பு தொடர்பாக கண்டுபிடிப்பை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ள ஆராய்ச்சி சஞ்சிகையான சூடாஸ்கா சர்வதேச சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
கண்கொத்தி பாம்பு இன வர்க்கத்தை சேர்ந்த இந்த பாம்பு இலங்கைக்கே உரித்தான இனமாகும். இந்த கண்டுபிடிப்புடன் இலங்கைக்கே உரிய 51 பாம்பு இனங்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 104 வகை பாம்பு இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சமனல கந்தை அமைந்துள்ள பகுதிகளில் வாழும் உயிரினங்கள் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் இந்த பாம்பு இனங்கள் கடந்த 2013ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அலெக்ஸ்சாண்டர் சைரன் உட்பட ஆராய்ச்சியாளர்களால் இந்த பாம்புகளை கண்டுபிடித்துள்ளதுடன் மேலதிக ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி ஏ9 வீதியின் உமையாள்புரம், இயக்கச்சி போன்ற பகுதிகளில் போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்வதினால் மாணவர்கள் நீண்டநேரம் வீதியில் காத்திருந்து பாடசாலைகளுக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாடசாலைகளுக்குச் செல்லாமல் வீட்டிற்குச்செல்வதும் தொடர்ந்த வண்ணம் உள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவைகள் இன்மை, பேருந்துகள் பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லாது விடுவதனால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக A9 வீதியிலும், ஏ35 வீதியிலும் பயணிக்கின்ற பேருந்துகள் ஒன்றுக்கொன்று போட்டிபோட்டி ஓடுகின்றன. இதனால், பாடசாலை மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச்செல்வதில்லை என்றும், இதனால் பிற வாகனங்களை வழிமறித்து அவற்றிலேயே பாடசாலை மாணவர்கள் பயணிக்கின்ற நிலைமை காணப்படுவதாகவும் பெற்றோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, கடந்த திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் ஏ9 வீதியின் உயைமாள்புரம், இயக்கச்சி, கரந்தாய் ஆகிய பகுதிகளிலிருந்து பரந்தன் இந்து மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்குச்செல்ல வேண்டிய 25இற்கும் மேற்பட்ட மாணவர்களை பேருந்துகள் ஏற்றிச்செல்லாத நிலையில் ஏற்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் நீண்ட நேரம் வீதியில் காத்திருந்து 8.00 மணிக்குப்பின்னரும் பாடசாலைக்குச் சென்றதும் வீடுகளுக்குச்சென்றதையும் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இருந்து கனடா சென்று அங்கு பிரபலமடைந்த பெண்ணொருவர் தொடர்பில் அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவினை தயாரிக்கும் உணவகம் ஒன்றை நடத்திச் செல்லும் பெண் ஒருவர் பற்றிய தகவலே வெளியாகி உள்ளது.
இலங்கையில் இருந்து கனடா சென்றவர்கள் பெரும்பாலும் ரொறண்டோவை மையமாக வைத்தே குடியமர்த்தனர். இதன்காரணமாக ரொண்டோ குட்டி யாழ்ப்பாணமாக மாற்றம் பெற்றது. இதனால் இலங்கை உணவுப் பொருட்கள் ஸ்கார்பாரோ பகுதியில் மிக முக்கியமாகியுள்ளது.
ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் 1980 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளில் ஸ்கார்பாரோவிற்கு புலம்பெயர்ந்து சென்றனர். இத்தகைய பெரும் மக்கள் தொகை ஸ்கார்பாரோவில் குடியேறியமைனால் இலங்கை உணவகங்கள் மற்றும் கடைகளில் அங்கு வளர்ச்சியை அதிகரித்ததென, இலங்கைப் பெண்ணான மேரி மார்டின் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து கனடாவிற்கு சென்ற பின்னர் இந்த கடைகளை அமைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கவில்லை. அதன் பின்னர் நாம் விரைவாக இலங்கை உணவுகள் சிற்றுண்டிகள் மற்றும் பல்வேறு மரக்கறிகளிலான உணவுகளை பெற்று கொடுக்க ஆரம்பித்தோம். சோறு மற்றும் கறி இலங்கையில் ஒரு பிரதான உணவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் பேக்கரி ஒன்றை ஆரம்பித்தவர் இரண்டு தசாப்தங்களாக சிறப்பாக நடத்தி சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அண்மையில் அதன் பெயரை மாற்றிய மேரி மார்டின், வேறு இடத்திற்கு தனது பேக்கரியை கொண்டு சென்றுள்ளார்.
அவரது ரோல்ஸ், சமோசாவை விரும்பி பெற்றுக் கொண்டவர்கள் தொடர்ந்தும் அதனை தேடி வருவதற்கு ஆரம்பித்துள்ளனர்.
சோற்று பொதிகளை தயாரித்தவர் அதனை வாழை இலையில் வைத்து வழங்க ஆரம்பித்தார். இதற்கு அந்த பகுதிகளில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
அதனை பெற்று கொள்ள வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தமையினால் சிறப்பான வருமானம் ஒன்றை அவர் பெற்று வருவதாக மேரி மார்டின் தெரிவித்துள்ளார்.
மராட்டிய வெற்றிப் படத்தின் இந்தி ரீமேக் மூலம் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுமாகிறார்.
நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி சினிமாவில் நடிக்கப்போவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.
இப்போது ஜான்வி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார், இதற்கு ஸ்ரீதேவி அனுமதி வழங்கியுள்ளார் மராட்டிய மொழியில் திரைக்கு வந்து வெற்றி பெற்ற படம் ‘சாய் ராட்’. இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.
இதில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார், ஸ்ரீதேவி மகள் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஏற்கனவே இந்தி திரை உலகில் எதிர்பார்ப்பு இருந்தது, தற்போது அவர் நடிக்க வருவதற்கு இந்தி பட ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தனது மகள் ஜான்வி சினிமாவில் நடிப்பது குறித்து ஸ்ரீதேவி கூறியதாவது:-
நான் சினிமா துறையில் நீண்ட காலமாக இருந்து வருகிறேன். எனது மகளும் இந்த துறையை தேர்ந்து எடுத்து இருக்கிறாள். அவள் என்னைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருக்கிறாள்.
மனதளவில் நான் அவளை நன்றாக தயார்படுத்தி இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். எனவே திறமையாக செயல்படுவாள்.
சினிமாவில் நடிப்பது பற்றி அவளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. எனவே கடினமாக உழைப்பாள். எந்த சவாலையும் சந்திப்பாள். இதை நான் உறுதியாக சொல்கிறேன்.
மும்பை நகரில், அரசுக்கு சொந்தமான வங்கியின் கீழே, நான்கு மாதங்களாக, 25 அடி நீளமுள்ள சுரங்கம் தோண்டி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால், கொள்ளை அடிக்கப்பட்டவற்றின் மதிப்பு இன்னும் கண்டறியப்படவில்லை.
வங்கிக்கு பக்கத்தில் உள்ள கடையை வாடகைக்கு எடுத்து இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
யாருக்கும் சந்தேகம் வராத வகையில், அங்கு மளிகைக்கடை ஒன்று நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்குறிய திருடர்களை, சனிக்கிழமை இரவு முதல் காணவில்லை.
இத்தனை மாதங்களாக, சந்தேகம் ஏற்படாத வகையில், இவர்கள் எப்படி இந்த சுரங்கத்தை தோண்டினார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.
வங்கியில் களவாடப்பட்ட பாதுகாப்பு வைப்பு பெட்டிகளை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களிடம் இந்திய ஊடகங்கள் பேசியுள்ளன.
மும்பை மிரர் பத்திரிக்கையிடம் பேசிய டக்து கவானி,”என்னுடைய வாழ்நாள் சேமிப்பு அனைத்தும் இந்த பாதுகாப்பு பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. பல தலைமுறைகளாக நாங்கள் வைத்திருந்த நகைகள் எல்லாம் தற்போது காணாமல் போயுள்ளன” என்று தெரிவித்தார்.
திங்கட்கிழமை காலை, திருட்டு நடந்துள்ளதை கண்டறிந்த வங்கி பணியாளர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
வங்கியில் உள்ள 225 பாதுகாப்பு பெட்டகங்களில், 30 பெட்டிகளில் திருட்டு நடந்துள்ளதாக காவல்துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.
இந்த திருட்டு தொடர்பாக சந்தேகத்திற்குரியவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பரபரப்பான சித்திர நடிகை தனது சம்பளத்தை ஒரேயடியாக 10 மடங்கு உயர்த்தி விட்டார். 5 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த அவர் இப்போது, 50 லட்சம் சம்பளம் கேட்கின்றாராம்.
முன்பெல்லாம் திரைப்பட விருந்து நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாத அவர் இப்போது, பார்ட்டி, பப் என்று அடிக்கடி சென்று விடுகிறாராம்.
நேற்று காலை 119 என்ற பொலிஸ் அவசர சேவை இலக்கத்திற்கு கிடைத்த தொலைபேசி அழைப்பு காரணமாக மாத்தறை நீதிமன்றத்தின் செயற்பாடுகள் ஒன்றரை மணித்தியாலம் ஸ்தம்பிதமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்தை நோக்கி அடையாளம் தெரியாத ஒருவர் துப்பாக்கியொன்றை கொண்டு வந்துள்ளதாக குறித்த அவசர அழைப்பில் தெரிவிக்கப்பட்டது.
குறித்த அவசர நிலைமையை கருத்தில் கொண்டு நீதிமன்றத்திற்கு அனைவரையும் கடும் பரிசோதனைக்கு உட்படுத்திய நிலையில் எந்தவொரு துப்பாக்கியோ, வெடிபொருட்களோ மீட்கப்படவில்லை.
எனினும், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு வந்த ஒருவரிடம் இருந்து பாக்குவெட்டியொன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு பின்னர் நீதிமன்றத்தின் வழமையான செயற்பாடுகள் இடம்பெற்றன.
கிராம சக்தி மக்கள் மரம் நாட்டும் செயற்திட்டம் நேற்று காலை 10 மணியளவில் கள்ளிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிதம்பரம் கிராமத்தில் அப்பகுதி கிராம சங்கத் தலைவர் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலக திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன், உதவி திட்டப்பணிப்பாளர், பிரதேச மாவட்ட செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கள்ளிக்குளம் கிராம சேவையாளர் கி.கஜந்தன், கள்ளிக்குளம் கிராமசேவையாளர் பிரிவிலுளள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இவ் வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட திட்டப்பணிப்பாளரினால் மாமரக்கன்றும் நாட்டி வைக்கப்பட்டது. இதையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளும் மரக்கன்றுகளை நாட்டிவைத்ததையடுத்து நிகழ்வில் கலந்துகொண்ட கிராமமக்களுக்கு பயன் தரும் நல்லின மாமரக்கன்றுகள் 200பேருக்கு வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா நகரசபை பொதுப் பூங்காவில் நுளம்புப் பெருக்கம் அதிகரித்துள்ளதையடுத்து சிறுவர்களை அழைத்துச் செல்ல பெற்றோர்கள் தயங்குவதுடன், செல்கின்றவர்களும் மாலை 5 மணியளவில் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர்.
வவுனியா நகரசபையின் பொதுப் பூங்காவினை அண்மித்த பகுதியில் நுளம்பு பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. குறித்த பூங்காவினை கேள்விக் கோரல் மூலம் பெற்றுக் கொண்டவர்கள் நுளம்பு பெருக்கெடுப்பதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை எனவும் இதன் காரணமாகவே அந்தப் பகுதியில் நுளம்பு பெருக்கெடுக்கின்றது எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் மாலை 6 மணியளவில் பூங்காவினைப் பூட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. மாலை நேரங்களில் சிறுவர்கள், பெற்றோர்கள் அங்கு செல்வதுண்டு. தற்போது செல்வதற்கு அச்சப்படுகின்றனர். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுளம்பைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர், நகரசபைப் பரிசோதகர்கள் அக்கறையற்ற நிலையில் இருப்பதாகவும் பெற்றோர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நுளம்பு பெருக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக மாலை நேரங்களிலும் காலை வேளைகளிலும் நுளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றது. டெங்குத் தாக்கம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா கள்ளிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிதம்பரம் கிராமத்தில் நேற்று காலை 10 மணியளவில் கிராம சக்தி மரநாட்டும் மக்களின் செயற்திட்டம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வவுனியா மாவட்ட திட்டப்பணிப்பாளர் கிருபாசுதனிடம் அப்பகுதி மக்கள் தமது கிராமத்திலுள்ள பொதுநோக்கு மண்டபம் பாழடைந்துள்ளதாகவும் இப்பகுதியில் நாங்கள் குடியேறியபோதும் இவ்மண்டபத்தினை புனரமைப்பு செய்வதற்கு எவ்வித உதவிகளும் கிடைக்கவில்லை இவ் மண்டபத்தினை புனரமைப்பதற்கு நிதி உதவிகள் பெற்றுத்தருமாறும் தமது கிராமத்திலுள்ள நிகழ்வகளை நடாத்தவதற்கு தமது கிராமத்தில் போதியளவு இடவசதியற்ற நிலையிலுள்ளதாகவும் தமது கிராமத்திலுள்ள பொதுநோக்கு மண்டபத்தினை புனரமைத்துத்தருமாறு கோரியிருந்தனர்.
இதையடுத்து வவுனியா மாவட்ட திட்டப்பணிப்பாளர் தனது உரையில் கள்ளிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிதம்பரம் கிராமத்திலுள்ள பொது நோக்கு மண்டபத்தினை புனரமைப்புச் செய்வதற்கு 15 இலட்சம் ரூபாவினை பெற்றுத்தருவதாகவும் இவ்வருடத்திற்குள் குறித்த பொது நோக்கு மண்டபத்தினை புனரமைப்புச் செய்யுமாறும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் அனுமதி கிடைத்ததும் முற்பணத்தினை பெற்றுத்தருவதாகவும் குறித்த மண்டபத்தின் பணிகளை உடன் ஆரம்பிக்குமாறும் தனது உரையில் தெரிவித்தபோது அப்பகுதி மக்கள் பெரும் ஆரவாரத்துடன் நன்றி தெரிவித்ததுடன் இப்புனரமைப்புப்பணிகளை தமது பகுதிகளிலுள்ள பொதுமக்களின் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கு இணங்கியுள்ளனர்.
இதையடுத்து குறித்த பொதுநோக்கு மண்டபத்தினைப் பார்வையிட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா, மாவட்ட திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன் உடனடியாக இந்த வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளுமாறு பணித்துள்ளதுடன் பிரதேச செயலாளரும் தன்னாலான உதவிகளையும் ஒத்துழைப்புக்களையும் பெற்றுத்தருவதாகவும் அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.
வவுனியா பஜார் வீதியிலுள்ள நகையகத்தில் இன்று (15.11.2017) இரவு 7.30 மணியளவில் நகைகளை திருடிய திருடனை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா பஜார் வீதியில் அமைந்துள்ள நகையகமொன்றிக்கு இன்று இரவு 7.30 மணியளவில் மோதிரம் வாங்குவதற்கு நபரோருவர் வந்துள்ளார். குறித்த நபருக்கு பல வடிவங்களில் வடிவமைக்கப்பட்ட மோதிரங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மோதிரங்களை கையிலேடுத்து பார்வையிட்ட நபர் திடீரென மோதிரங்களை அபகரித்துக்கொண்டு தப்பிச் சென்று வீதியில் மோட்டார் சைக்கிலில் சென்ற ஒருவரிடம் திருடன் ஒருவன் நகைகளை திருடிவிட்டான், அவனைப் பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்து அவரின் மோட்டார் சைக்கிலில் ஏறிச் சென்றுள்ளார்.
குருமன்காட்டு பொலிஸ் காவலரணுக்கு அண்மித்த இடம் வந்தபோது இவ்விடத்தில் நிறுத்துங்கள் எனது நகையக ஊரிமையாளர் வருவார் எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து குருமன்காடு சந்தியில் மோட்டார் சைக்கில் உரிமையாளர் குறித்த நபரை இறக்கி விட்டுவிட்டு குறித்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டு திரும்பி பார்த்த சமயத்தில் குறித்த நபர் உடைகளை மாற்றியுள்ளார்.
உடனே மோட்டார் சைக்கில் சென்று அந்த நபரை கட்டிப்பிடித்து கூச்சலிட்ட சமயத்தில் பொதுமக்கள் மற்றும் பொலிஸார் விரைந்து குறித்த நபரை சோதனையிட்டுள்ளனர்.
இதன் போது அவரிடமிருந்து நான்கு மோதிரங்கள் மீட்கப்பட்டுள்ளன. உடனடியாக வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் உயிலங்குளத்தினைச் சேர்ந்த 24வயதுடைய சிவநேசன் என பொலிஸார் தெரிவித்தனர்.
திருடப்பட்ட நகைகளின் பெறுமதி ஒரு லட்சத்து இருபதாயிரம் (5மோதிரங்கள் – 3 பவுண்) என நகையக உரிமையாளர் தெரிவித்தார்.