வவுனியாவில் இளஞ்செழியனின் தம்பி எனத் தெரிவித்தவர் மீது தாக்குதல்!!

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (15.11.2017) மாலை 4.30 மணியளவில் இளஞ்செழியனின் தம்பி எனத் தெரிவித்த நபர் மீது முச்சக்கரவண்டி சாரதிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் மதுபோதையில் நபரொருவர் சென்று தான் இளஞ்செழியனின் தம்பி என தெரிவித்து சற்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் குறித்த நபர் இ.போ.ச பேரூந்தில் ஏற முற்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டி சாரதிகள் மத்திய பேரூந்து நிலையத்துக்குள் நுழைந்து குறித்த நபர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் அதனை தடுக்க முற்பட்ட இ.போ.ச ஊழியர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள சம்பவ இடத்திற்கு வவுனியா போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி விரைந்திருந்த போதும் முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் எவ்வித முச்சக்கரவண்டிகளும் தரித்து நிற்காமல் சென்றுள்ளன.

அங்கிருந்த நபர்களினால் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி காணொளிகள் மூலம் தாக்குதல் மேற்கொண்ட நபர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கையினை மேற்கொள்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபரும், இ.போ.ச ஊழியர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் வெடிக்காத நிலையில் கைக்குண்டுகள் மீட்பு!!

 
வவுனியா மகாகச்கச்கொடி பகுதியிலுள்ள நபர் ஒருவருடைய காணியை நேற்று (14.11)  மாலை 5 மணியளவில் துப்பரவு மேற்கொண்டபோது வெற்றுக் காணியிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த இரண்டு கைக்கண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாமடு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலுதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அப்பகுதியில் மேலும் கைக்குண்டுகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதியில் தேடுதல் மேற்கொள்வதற்கு வவுனியா மாவட்ட நீதிமன்றில் அனுமதியினைப் பெற்று மேலும் தேடுதலை மேற்கொண்டு வருவதுடன் கைப்பற்றிய இரண்டு கைக்குண்டுகளையும் செயலிழக்க வைக்க விசேட  அதிரடிப்படையின் அனுமதியைப்பெற்றுள்ளதுடன் அவர்கள் அங்கு சென்று செயலிழக்க வைக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக மாமடுவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா A9 வீதியில் வாகன விபத்து : மாணவன் வைத்தியசாலையில்!!

 
வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிமணைக்கு முன்பாக இன்று (15.11.2017) மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் மாணவனொருவன் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா மத்திய மகா வித்தியலாயத்திலிருந்து பாடசாலை மாணவனை ஏற்றிக்கொண்டு வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலில் மீது வவுனியாவிலிருந்து கண்டி வீதி நோக்கி பயணித்த கார் தெற்கு வலயக்கல்வி அலுவலகத்திற்கு முன்பாக வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவனொருவன் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கோழியைக் கெடுத்து கொலை செய்த சிறுவன்!!

பாகிஸ்தானில் கோழியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பதினான்கு வயதுச் சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.

ஹஃபீஸாபாத் என்ற ஊரில், கடந்த பதினோராம் திகதி பொலிஸில் வித்தியாசமான முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.

மன்சாப் அலி என்பவர், தனக்குச் சொந்தமான கோழியொன்றை தனது அயல்வீட்டுக்காரரின் மகன் ஹுஸைன் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் அதனால் கோழி செத்துப்போனதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்தச் சம்பவத்தைக் கண்ணால் கண்டதாக இரண்டு சாட்சிகளையும் அவர் முன்னிறுத்தியிருந்தார்.

இதையடுத்து ஹுசைன் என்ற பதினான்கு வயதுச் சிறுவனிடம் நடத்திய விசாரணையில், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான். மேலும், பாலியல் உந்துதலிலேயே தான் அவ்வாறு நடந்துகொண்டதாகவும் தெரிவித்தான்.

கோழியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் ஹுசைனின் குற்றம் ஆதாரத்துடன் உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது ஹுசைன் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

10 வயது சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமான கைத்தொலைபேசி?

பலாங்கொடை – ரன்தொலவத்த பகுதியில் பாதிமா சௌம்யா என்ற 10 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.

வீட்டில் யாரும் இல்லாத நிலையிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைத்தொலைபேசி பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த சிறுமியின் தந்தை இவர்களை விட்டுச் சென்ற நிலையில், சம்பவம் நடைபெற்ற தினம் தாயார் வேலைக்கு சென்றுள்ளார்.

வேலையை முடித்துக்கொண்டு சிறுமியின் தாய் வீடு திரும்பிய போது, மகளை காணவில்லை என தேடியுள்ளார்.

இதன்போது வீட்டின் பின்பகுதியில் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கைத்தொலைபேசி பிரச்சினை காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்

வியாழனை விட 13 மடங்கு பெரிய கிரகம் கண்டுபிடிப்பு!!

வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பிரம்மாண்டமான புதிய கிரகத்தை அமெரிக்காவின் நாசா மையம் கண்டுபிடித்துள்ளது.

அமெரிக்காவின் ‘நாசா’ மையம் விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொண்டு பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

விண்வெளியில் பல்வேறு புதிய கிரகங்கள் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் விண்கல் போன்றவற்றை கண்டுபிடித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது பிரம்மாண்டமான புதிய கிரகத்தை கண்டுபிடித்துள்ளது, இது வியாழன் கிரகத்தை விட 13 மடங்கு பெரியது.

அதற்கு ‘ஒ.ஜி.எல்.இ- 2016-பி.எல்.ஜி-1190 எல்.பி.’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கிரகத்தை ‘ஸ்பிட்சர்’ விண்வெளி டெலஸ்கோப் மூலம் ‘நாசா’ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 22,000 ஒளி தூரத்தில் உள்ளது, இதற்கு துணைக்கிரகம் எதுவும் உள்ளதா என கண்டறியப்படவில்லை.

15,000 விஞ்ஞானிகளால் மனித குலத்திற்கு எச்சரிக்கைக் கடிதம்!!

பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும்புகை காரணமாக பூமிக்கு பெரும் ஆபத்து ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பருவநிலை மாற்றம் காரணமாக உலகில் பல்வேறு இயற்கை பேரழிவுகள் ஏற்படுகின்றன. அதற்கு சுற்றுப்புற சூழல் மாசுபாடே காரணம் என கூறப்படுகிறது.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் பயன்பாட்டால் வளிமண்டலத்தின் ஓசோன் படலத்தில் ஓட்டை ஏற்பட்டு அதனால் சூரியனின் வெப்பம் பூமியை தாக்குவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

காற்று மண்டலத்தில் ஏற்கனவே குறைவாக இருந்த மாசின் அளவு தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது.

இதற்கு பூமியில் அதிகரித்து வரும் மக்கட்தொகை பெருக்கமும் அவர்களால் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் ஏற்படும் கரும் புகையும் காரணமாகக் கூறப்படுகிறது.

இதே நிலை தொடர்ந்து நீடித்தால் பூமிக்கு எப்போதும் இல்லாத அளவிற்கு பெரும் ஆபத்து ஏற்படும். இதை 184 நாடுகளைச் சேர்ந்த 15 ஆயிரம் விஞ்ஞானிகள் கடிதம் மூலம் எச்சரிக்கையாக விடுத்துள்ளனர்.

இதனை ‘மனித குலத்திற்கான எச்சரிக்கை’ என்ற தலைப்பில் ‘பயோ சயின்ஸ்’ அறிவியல் நாளிதழில் வெளியிட்டுள்ளனர். இந்த எச்சரிக்கை மனித குலத்திற்கு விடுக்கப்பட்ட 2 ஆவது எச்சரிக்கை என வர்ணிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசு காரணமாக வனப்பகுதிகள் அழியும். சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும். கடல்வாழ் உயிரினங்கள் அழியும். கடல்நீர் மட்டம் உயர்ந்து பேரழிவு ஏற்படும். மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த 1992 ஆம் ஆண்டு அதாவது 25 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக இது போன்ற எச்சரிக்கை விடப்பட்டது. அப்போது 1700 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட கடிதம் வெளியிடப்பட்டிருந்தது.

வட்டிக்குக் கடன் கொடுத்து காசோலை மோசடியில் ஈடுபட்டவருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!!

வட்டிக்குக் கடன் கொடுத்து காசோலை மோசடியில் ஈடுபட்ட ஒருவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் நேற்று இரண்டு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அரச வங்கியொன்றில் பணியாற்றும் அதிகாரியொருவருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படும் 47,85,000 ரூபா காசோலை பணத்தை திரும்பி செலுத்த தேவையில்லை எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இத்தகைய சட்ட முரணான செயற்பாடுகளில் ஈடுபட்டால், நீதிமன்றத்தினூடாக அந்த பணத்தை மீளப்பெற முடியாது எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மீட்டர் வட்டி , பிரமிட் வட்டி என்பன சட்டத்திற்கு முரணான செயற்பாடு என தெரிவித்துள்ள நீதிபதி, கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் இருவரும் குற்றவாளிகளாவர் என அறிவித்துள்ளார்.

இத்தகைய மீட்டர் வட்டி யாழ்ப்பாணத்தில் ஒரு குடும்பத்தையே காவு கொண்டுள்ளதை நினைவுபடுத்திய நீதிபதி, இத்தகைய செயற்பாடுகளால் ஒன்றுமே அறியாத பச்சிளம் குழந்தைகள் இறந்துபோயுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, மணித்தியால வட்டி, நாள் வட்டி, மாத வட்டி, மீட்டர் வட்டி மற்றும் பிரமிட் வட்டி என்பன யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் உள்ளதாகவும் இவற்றை அனைவரும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான நிதி நிறுவனங்களைக் கண்காணித்து, இவை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கூறியுள்ளார்.

ஒரு அரச வங்கி உத்தியோகத்தருக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு பணம் கிடைத்தது என்பது தொடர்பில் வங்கியின் முகாமையாளர் ஆராய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ட்ரம்ப்புக்கு நடுவிரலைக் காட்டிய பெண்ணுக்கு 70 ஆயிரம் டொலர் நிதியுதவி!!

 
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு நடுவிரலை உயர்த்திக் காட்டிய பெண் அவரது பணியில் இருந்து நீக்கப்பட்டார். எனினும், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், குழு நிதியிடல் மூலம் இணையதளம் ஒன்று சுமார் எழுபதாயிரம் டொலர்களைத் திரட்டிக் கொடுத்திருக்கிறது.

ட்ரம்ப் தனது காரில் சென்றுகொண்டிருந்தபோது சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஜூலி ப்ரிஸ்க்மன் என்ற அந்த 50 வயதுப் பெண் ட்ரம்ப்பை அவமரியாதை செய்யும் விதமாக தனது நடுவிரலை உயர்த்திக் காட்டினார். இதை பத்திரிகையாளர் ஒருவர் படம் பிடித்துவிட அது வைரலானது.

இதையடுத்து, ஜூலி பணியாற்றிவந்த நிறுவனம் அவரை பணியில் இருந்து விலக்கியது. இதுபற்றித் தெரியவந்த இணையதள நிறுவனம் ஒன்று, ஜூலிக்கு ஆதரவளிக்கும் வகையில் நிதி திரட்டும் பணியை ஆரம்பித்தது.

இதில் கலந்துகொண்ட சுமார் மூவாயிரம் பேர், ஐந்து டொலர்கள் முதல் 250 டொலர்கள் வரை நிதியுதவி செய்தனர். கடந்த ஆறாம் திகதி முதல் இதுவரை எழுபதாயிரம் டொலர் சேர்ந்திருக்கிறது.

“இந்தத் தொகை முழுவதும் நேரடியாக ஜூலிக்கு வழங்கப்பட்டுவிட்டது. இந்தத் தருணத்தில் நான் ஜூலிக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அவரது தைரிய குணம் மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு” என்று புகழ்ந்திருக்கிறார் அந்த இணையதள உரிமையாளர்.

கொள்ளை அடித்த உணவகத்தில் விருந்து அளித்த திருடன்!! (வீடியா)

டெக்சாஸ் மாகாணத்தில் ஹூஸ்டன் நகரில் உள்ள டோனட் உணவு கடையில் நடைபெற்ற திருட்டு அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடைக்குள் மூன்று திருடர்கள் மூகமுடி மாட்டிக்கொண்டு நுழைகின்றனர். இருவர் உள்ளே சென்று லாக்கரில் உள்ள பணத்தை எடுக்கின்றனர். மற்றோரு நபர் அங்குள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ள ஸ்மார்ட் போன்களை வாங்கினார். அவர்களை உட்கார சொல்லி விட்டு உள்ளே சென்று டோனட்டை எடுத்து வந்து கொடுத்து விட்டு வெளியே செல்கிறார்.

திருடர்கள் வந்து செல்வது சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதனை கண்ட பொலிஸார் ஆச்சரியத்தில் உள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்துவிடுவதாக கூறினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

பாகுபலி பாணியில் யானையின் மீது ஏற முயன்ற தொழிலாளி!!(வீடியோ)

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா நகரில் உள்ள தோட்டத்தில் வெட்டப்பட்ட மரங்களை தூக்கி வருவதற்காக வளர்ப்பு யானை ஒன்று கொண்டு வரப்பட்டது. அந்த யானை, அங்குள்ள மரத்தில் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.

அப்போது தொடுபுழாவை சேர்ந்த தொழிலாளி சாஜி (வயது 40) என்பவர் அங்கு வந்தார். யானை மரத்தில் கட்டப்பட்டிருந்ததை கண்ட அவர், ‘பாகுபலி’ படத்தில் நடிகர் பிரபாஸ் யானையின் தந்தங்களை பிடித்து ஏறுவது போன்று அவரும் ஏற நினைத்தார்.

இதற்காக யானைக்கு வாழைப்பழத்தை கொடுத்தார். அதை யானையும் வாங்கியது. பின்னர் நைசாக யானையின் அருகில் சென்ற சாஜி, தந்தங்களை பிடித்து ஏற முயன்றார்.

அந்தவேளையில், யானை மிரண்டு அவரை தூக்கி வீசியது. இதில் அவர் நிலைகுலைந்து போனார். மேலும் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே யானையின் மீது சாஜி ஏற முயன்றதையும், அப்போது யானை தூக்கி வீசுவதையும் அங்கிருந்தவர்கள் வீடியோ பதிவு செய்து ‘வட்ஸ் அப்’, முகநூல் பக்கத்தில் பதிவிட்டனர். இது வைரலாக பரவி வருகிறது.

நண்பர்களுடன் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி பலி!!

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எபர்டீன் நீர்வீழ்ச்சிக்கு நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். நேற்று பிற்பகலில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் 11 இளைஞர்கள் நீராடச் சென்றனர். நீராடிக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த இளைஞன் சுழியொன்றில் சிக்கியுள்ளார்.

குறித்த இளைஞனை ஏனைய நண்பர்கள் மீட்க முயற்சித்த போதும் முயற்சி பயனளிக்காத நிலையில் மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து, மாலை நேரம் கினிகத்தேனை பொலிஸ் பாதுகாப்பு பிரிவினரும், ராணுவத்தினரும், பிரதேச மக்களும் இணைந்து குறித்த இளைஞனின் சடலத்தை ஆற்றிலிருந்து மீட்டுள்ளனர்.

கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் உயர்தரம் கல்வி கற்கும் 18 வயதான விரோஜன பண்டார என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மரண விசாரணைகளின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் நாவலப்பிட்டி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!!

 
வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2018 ம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்து கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கற்றை நெறிக்கான முடிவுத்திகதி எதிர்வரும் 24 ஆம் திகதி என்பதனால் ஆண்டு 9ல் இருந்து பாடசாலை விலகிய மாணவர் முதல் உயர்தர பரீட்சைக்குத் தோற்றியுள்ளோர் மற்றும் தொழில் புரியும் அரச மற்றும் தனியார் நிறுவன உத்தியோகத்தர் வரைக்கும் தத்தம் தேவைகளுக்கேற்ப கற்கை நெறிகளுடன் இணைந்து கொள்ள முடியும் என கல்லூரியின் அதிபர் எ.நற்குனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கற்கை நெறியின் போது மாணவர்களுக்கு இலவசக்கற்கை நெறி, மாணவர் ஊக்குவிப்புக் கொடுப்பனவு, போக்குவரத்துப் பயணச்சீட்டு, தொழில்வழிகாட்டல் சேவை கற்கைநெறியின் பின்னர் மாணவர்களுக்கு: 06 மாத கால தொழிற்பயிற்சி, உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, கடன் பெற்றுக் கொள்ளும் வசதி என்பனவும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலதிக தொடர்புகளுக்கு

அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.

வவுனியாவில் 13 வயதான பெறாமகளை பலாத்காரம் செய்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

வவுனியா – மறவன்குளத்தில் பெறாமகளை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிறிய தந்தையாருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த தீர்ப்பு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரனால் நேற்று வழங்கப்பட்டுள்ளது.

இதில் மறவன்குளத்தைச் சேர்ந்த 55 வயதான வைரமுத்து சிவலிங்கம் என்பவருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2003ஆம் ஆண்டளவில் மறவன்குளம் பகுதியை சேர்ந்த வைரமுத்து சிவலிங்கம் என்பவர் தனது பெறாமகளை (மனைவியின் முதலாவது கணவரின் மகள்) தனிமையில் இருந்த போது இரு தடவை பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பான ஆரம்ப கட்ட விசாரணைகள் வவுனியா நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்றது.

கடந்த 2016.10.24 அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வழக்கு விளக்கம் முடிவுறுத்தப்பட்டு நேற்றய தினம் தீர்ப்புக்கு திகதியிடப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன்,
“எதிரியை குற்றவாளியாக கண்டு எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் முதலாவது குற்றச்சாட்டுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 இலட்சம் நஸ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 2 வருட கடூழிய சிறை அனுபவிக்க வேண்டும் எனவும், தண்டப்பணமாக 10,000 ரூபாவினை செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறை அனுபவிக்க நேரிடும் எனவும் அறிவித்துள்ளார்.

இதேவேளை இரண்டாவது குற்றச்சாட்டுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டணையும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2 இலட்சம் ரூபா நஸ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்ததவறின் 2 வருட கடூழிய சிறையை அனுபவிக்க வேண்டும் எனவும் தண்டப்பணமாக 10,000 ரூபாவை செலுத்துமாறும் இதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் இத்தண்டனைகள் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்” எனவும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

8 வருடங்களின் பின்னர் வெளிநாட்டிலிருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை குடும்பம்!!

நியூசிலாந்தின் குயின்ஸ்டவுனில் வசிக்கும் இலங்கை குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நவம்பர் மாதம் 21ஆம் திகதி விஜேரத்ன என்பவரும் அவரது மனைவி மற்றும் 3 ஆண் பிள்ளைகள் இவ்வாறு நாடு கடத்தப்படவுள்ளனர்.

11, 10 மற்றும் 8 வயதுடைய விஜேரத்ன என்பவரின் பிள்ளைகள் குயின்ஸ்டவுன் முதன்மை பாடசாலையில் கல்வி கற்பதோடு, அவர்கள் சிறந்த மாணவர்களாக கருதப்படுகின்றனர்.

அண்மையில் Otago-Southland பகுதியில் இடம்பெற்ற போட்டி ஒன்றில் இரண்டு பிள்ளைகளும் சாதனை படைத்துள்ளனர்.
அவர்கள் அவுஸ்திரேலிய கல்விப் பரீட்சைகளில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். நீச்சல் மற்றும் கிரிக்கெட் வீரர்களாக உள்ளனர், குயின்ஸ்டவுன் கழகத்தில் விளையாடி வருகின்றனர்.

2010ஆம் ஆண்டு இந்த சிறுவர்களின் தாயார் தினேஷா அமரசிங்க நியூசிலாந்தில் மருத்துவ மாணவியாக பதிவு செய்துள்ளார். அவருக்கு 10 ஆண்டு தொழில் அனுபவம் உள்ளதோடு, நியூசிலாந்தின் திறமையான புலம்பெயர்ந்தோர் பிரிவின் கீழ் 2011ஆம் ஆண்டு முதல் ஒக்லாந்தில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகின்றார்.

2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இந்த குடும்பம் குயின்ஸ்டவுனுக்கு மாற்றப்பட்டது, அங்கு பிரபலமான Lone Star உணவகத்தில் தினேஷா சமையல் கலைஞராக பணியாற்றி வந்துள்ளார். அவரது விசாவில் கணவருக்கு திறந்த பணி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அவர் New World சுப்பர் மார்க்கெட்டில் பணி புரிந்ததோடு, டெக்ஸி சாரதியாகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

2014ஆம் ஆண்டு தினேஷா தவறி விழுந்தமையினால் அவரது இடுப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது காலில் வலி இருந்த போதிலும், சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த போதிலும் அவர் தொடர்ந்து பணி செய்து வந்துள்ளார். எனினும் 2015 ஆம் ஆண்டு ACC என வருத்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மே மாதம் அவரது தனது மூளையை பரிசோதித்து பார்த்த போது அவர் ஸ்களீரோசிஸ் (sclerosis) எனப்படும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோம்பர் மாதம் தினேஷாவினால் பணி புரிய முடியவில்லை என்பதால், அவரது திறமையான தொழிலாளிக்கான தற்காலிக விசா நிராகரிக்கப்பட்டது. இதனால் அவரது கணவரால் இனி வேலை செய்ய முடியாது என கூறப்பட்டதுடன், அவர்களது குடும்பம் நவம்பர் 21 நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சட்ட சிக்கல்கள் காரணமாக அவர்கள் 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்த நிரந்தர விசா தாமதமாகியதாக கூறப்படுகின்றது. எனினும் அவர்களை தொடர்ந்து நியூசிலாந்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை அவரது வழக்கறிஞர் மேற்கொண்டு வருவதாக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

பிரித்தானியாவில் இருந்து தனது தாயை தேடி இலங்கை வந்தடைந்த மகள்!!

 
இலங்கையில் பிறந்த பிரித்தானியாவின் பிரபல பெண் ஷெரி எசேஸன் தன்னை பெற்ற தாயை தேடி இலங்கையை வந்தடைந்துள்ளார்.

இவர் நேற்று தனது கணவருடன் பிரித்தானியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

பிரித்தானியாவின் தொழில்நுட்ப துறையில் பலமான 35 பெண்களில் இணைந்துள்ள இலங்கை பெண், தனது தாயாரை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார் .

அண்மையில் மேற்கொண்ட DNA பரிசோதனையின் அடிப்படையில் 99.99% வீதம் தாய்க்கும், மகளுக்கும் பொருத்தம் உள்ளதாக பரிசோதனையை மேற்கொண்ட பிரித்தானிய நிறுவனம் தெரிவித்துள்ளது.

DNA பரிசோதனை வெற்றியளித்த நிலையில் தனது தாயை கண்டுப்பிடித்து, உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், தனது தாயை சந்திப்பதற்காக நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த1991ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி இலங்கையில் பிறந்த ஷெரி எசேஸனுக்கு, வீர முதியன்சலாகே நிரோஷிகா என பெயரிடப்பட்டது. அவர் குழந்தையாக இருக்கும் போது அயர்லாந்து தம்பதி ஒன்றுக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.