உடனே வெளியேறு : வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நோட்டீஸ் அனுப்பிய தாய்!!

 
அமெரிக்காவில் தாய் ஒருவர் தன்னுடைய வயிற்றில் இருக்கும் குழந்தையை உடனடியாக வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பிய வினோத சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் Utah மாகாணத்தை சேர்ந்தவர் Kaylee Bays, அங்குள்ள நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். ஏற்கனவே இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியான Kaylee Bays, கடந்த 16ம் திகதி பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பிறந்துவிடும் என எண்ணிய நிலையில், வலி நின்று போனது.

மறுபடியும் பிரசவ வலி வரவே இல்லை, இதனால் உடனடியாக வெளியேறுமாறு குழந்தைக்கு நோட்டீஸ் அனுப்ப எண்ணினார்.

இதன்படி நீதிபதி Lynn Davis-யும், Kaylee Bays-வின் கருவறையில் இருப்பவர் என குறிப்பிட்டு நோட்டீஸை அனுப்பியுள்ளார்.
இதை Kaylee Bays தன்னுடைய குழந்தைக்கு படித்து காண்பித்துள்ளார்.

மூன்று நாட்களுக்குள் வெளியேற வேண்டும் என நோட்டீஸ் அனுப்பிய நிலையில் 12 மணிநேரத்தில் பிறந்துவிட்டால், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகவில்லை என புன்னகைக்கிறார்.

இந்த நோட்டீஸை பத்திரமாக வைத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய வசதியை அறிமுகம் செய்யும் வட்ஸ்அப்!!

வைபர் செயலிக்கு போட்டியாக காணப்படும் வட்ஸ்அப் செயலியில் நாளுக்கு நாள் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றின் வரிசையில் சேமிப்பு கொள்ளளவு பயன்பாட்டினை முகாமைத்துவம் செய்யக்கூடிய வசதி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ் வசதியின் ஊடாக ஒவ்வொரு நபர்களுடனான தொடர்பாடலின்போதும் சேமிக்கப்பட்ட மற்றும் பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளின் அளவு, கோப்புக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் கொள்ளளவு என்பவற்றினை கண்காணிக்க முடியும்.

முன்னர் இவ்வாறான பரிமாற்றங்களை அழிக்கக்கூடிய வசதி மட்டுமே தரப்பட்டிருந்தது. ஆனால் புதிய வசதியின் மூலம் தேவையான கோப்புக்களை வைத்துக்கொண்டு ஏனையவற்றினை அழிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக iOS சாதனங்களில் தரப்படவுள்ள இவ் வசதி விரைவில் Android சாதனங்களிலும் கிடைக்கப்பெறும்.

ஒரே இரவில் இளம்பெண் ஆணாக மாறிய அதிசயம்!!

 
இந்தோனேசியாவில் திருமணத்துக்கு முன்னர் பெண்ணாக இருந்த ஒருவர் திருமணத்துக்கு பின்னர் வந்த கனவையடுத்து ஒரே நாளில் ஆணாக மாறியிருக்கிறார்.

இந்தோனேசியாவின் ஜேம்பர் மாகாணத்தை சேர்ந்தவர் பாடோலி (21) இவருக்கும் ஆயூ பூஜி (23) என்ற பெண்ணுக்கும் கடந்த யூலை மாதம் 19-ஆம் திகதி திருமணம் நடந்தது.

புதுமண தம்பதியின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென கடந்த மாதம் தான் ஆணாக மாறி விட்டதை உணர்வதாக கணவரிடன் ஆயூ கூறியுள்ளார். இதை கேட்ட பாடோலி அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஆணாக தான் மாறிய அதிர்ச்சி காரணத்தையும் ஆயூ கூறியுள்ளார். அவர் கூறுகையில், திருமணத்துக்கு பின்னர் ஒரு இரவில் என் கனவில் மாய உயிரினம் தோன்றியது. அதோடு ஒரு முட்டையும் கீழே விழுந்தது.

தூக்கத்திலிருந்து காலை எழுந்தவுடன் என் பாலினம் ஆணாக மாறிவிட்டதாக கூறியுள்ளார். சிலர், ஆயூ பிறப்பிலிருந்தே ஆண் தான் எனவும் தற்போது ஆணாக மாறியதாக பொய் கூறுகிறார் என குற்றம்சாட்டியுள்ளனர்.

இதை ஆயூ திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஆயூவுக்கு பாலினத்தை மாற்றும் அறுவை சிகிச்சை செய்ய பாடோலி முடிவெடுத்த நிலையில், சிகிச்சைக்கு பணமில்லாததால் திட்டத்தை அவர்கள் ஒத்தி வைத்துள்ளனர்.

பாடோலி கூறுகையில், ஆயூ பெண்ணாக மாறவில்லையெனில் அவரை விவாகரத்து செய்துவிடுவேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து பொலிசாரிடம் எல்லாவற்றையும் தம்பதிகள் கூறியுள்ள நிலையில், உண்மையை அறிய பொலிசார் அவர்களை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

தமிழனின் உயிரை காக்க ஒன்றுதிரண்ட கேரள மக்கள்!!

தமிழ்நாட்டில் பிறந்து பிழைப்புக்காக கேரளாவில் குடியேற தமிழனின் உயிரை காக்க அக்கிராம மக்கள் நிதி திரட்டியுள்ளனர்.

மதுரை சேர்ந்த ஜெயன்- மாரியம்மாள் தம்பதி பிழைப்புக்காக கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சிங்காவனம் என்ற கிராமத்தில் குடியேறினர்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர், ஜெயன் சலவைத் தொழில் செய்து வருகிறார். தன்னுடைய உழைப்பாலும், நேர்மையாலும் சிங்காவனம் மக்களை கவர்ந்த ஜெயன் அனைவரின் அன்பையும் பெற்றார்.

இந்நிலையில் சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த ஜெயனால், தொழிலை முன்னெடுத்து செய்ய முடியவில்லை. கடந்த ஆறு மாதங்களாகவே வீட்டுக்குள் முடங்கி கிடந்துள்ளது, வாரத்துக்கு இருமுறை டயாலிசிஸ் பண்ண வேண்டிய சூழலும் இருந்தது.

எனவே ஜெயனுக்கு உதவி செய்ய எண்ணிய கிராம மக்கள், நிதி திரட்ட முடிவு செய்தனர். ஜெயனின் உயிர் காக்கும் கமிட்டி என்ற பெயரில் இயக்கத்தை தொடங்கி, 5 பேர் உறுப்பினர்களாக இருந்தனர்.

கோவில்களில் ஜெயனுக்கு உதவி செய்யக்கோரி அறிவிப்பு வெளியானது, கடந்த 15ம் திகதி விடுமுறை தினத்திலும் கையில் வாளியை ஏந்திக் கொண்டு கோட்டயம் மாநகராட்சிக்கு உள்ள வீடுகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை நிதி திரட்டினர்.

5 மணிநேரத்தில்11 லட்சம் நிதி சேர்ந்தது, இப்பணம் ஜெயன் பெயரில் வங்கிக் கணக்கில் போடப்பட்டது.

அடுத்த மாதம் அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படவுள்ளது.

இளைஞனை வெட்டிக் கொன்றது ஏன் : இளம்பெண் கண்ணீர் வாக்குமூலம்!!

தன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் கணவருடன் சேர்ந்து இளைஞனை கொலை செய்ததாக இளம்பெண் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

மதுரை அரசரடியை சேர்ந்த கரிகாலன், இவரது நண்பர் சேதுராமன், இருவரும் கோவையில் குளத்தூரில் அருகே வசித்து வருகின்றனர்.

கரிகாலன் தனது மனைவியான சுகந்தியை கடந்த 21ம் திகதி கோவைக்கு அழைத்து வந்துள்ளார், 22ம் திகதி கரிகாலன் வெளியில் சென்றுவிட குடிபோதையில் இருந்த சேதுராமன் சுகந்தியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அவரிடம் எப்படியோ தப்பித்த சுகந்தி, நடந்த சம்பவம் குறித்து கரிகாலனிடம் கதறி அழுதுள்ளார்.

இதில் கரிகாலனுக்கும், சேதுராமனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது, கோபத்தில் கரிகாலன் அரிவாளால் சேதுராமனை வெட்டினார். அங்கிருந்து தனது மனைவியுடன் தப்பித்து சென்றார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சூலூர் பொலிசார் விசாரணை நடத்தினர்.

சுகந்தியிடம் விசாரித்ததில் உண்மையை ஒப்புக் கொண்டார், பொலிசிடம் அளித்த வாக்குமூலத்தில், நான் என் பெற்றோருடன் ஈரோட்டில் வசித்து வருகிறேன். கடந்த 11 மாதங்களுக்கு முன்பு நானும், கரிகாலனும் காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.

குளத்தூரில் தனியாக இருந்த போது, சேதுராமன் தவறாக நடக்க முயன்றார், இதை என் கணவரிடம் கூறியதும் தகராறு ஏறு்பட்டது.

குடிபோதையில் இருந்த சேதுராமனின் கைகளில் நான் பிடித்துக் கொண்டேன், என் கணவர் சரமாரியாக வெட்டினார். சடலத்தை போர்வையில் சுற்றி வீசிவிடலாம் என நினைத்தோம், அதற்குள் வீட்டு உரிமையாளர் வந்ததால் தப்பி ஓடினோம்.

பொலிசார் எங்களை பிடித்துவிட்டனர் என கூறியுள்ளார், இதனை தொடர்ந்து சுகந்தியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் சிறையில் அடைத்தனர். தலைமறைவான கரிகாலனை பொலிசார் தேடி வருகின்றனர்.

இலங்கை கடலில் மிதந்து வந்த உயிரினம்! திகைப்பில் ஆழ்ந்த வெளிநாட்டவர்கள்!!

 
இலங்கை கடற்பரப்பில் மிதந்து வந்த ஆமையொன்று பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த ஹிக்கடுவ கடற்பரப்பின் கரைக்கு நேற்று காலை ஆமை வந்துள்ளது.

இதனை கண்ட வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வமாக ஆமையை பார்வையிட்டுள்ளனர்.

பாரியளவிலான ஆமைக்கு உணவு கொடுத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்துள்ளனர்.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய வாகனம்!!

 
இலங்கையிலுள்ள நடைமுறையில்ல முச்சக்கர வண்டிக்கு மாற்றீடாக வேறு வாகனம் ஒன்றை அறிமுகம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்மூலம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் முச்சக்கர வண்டிகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான புதிய நடைறைமுறையை இலங்கை முன்னெடுத்தால், இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இலங்கை போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா உரையாற்றிய கருத்தினை அடிப்படையாக கொண்டு இந்திய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன.

முச்சக்கர வண்டிகளுக்கு பதிலாக மாற்று நடவடிக்கையாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள பஜாஜ் Qute என்ற வாகனம் இலங்கைக்கு பொருத்தமானதாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த வாகனம் மோட்டர் வாகனமாக காணப்படாதெனவும், முச்சக்கர வண்டிகளுக்கு மாற்றாக இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன் என்ஜின் திறன் 216.6 CC ஆக உள்ளதெனவும், Qute வாகனத்தின் நீளம் 2752 மில்லிமீற்றராகவும், அகலம் 1312 மில்லி மீற்றராகவும் காணப்படும் என குறிப்பிடப்படுகின்றது.

இதன் உயரம் 1652 மில்லி மீற்றர் எனவும், 4 பேர் வசதியாக பயணிக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது.

தண்டவாளமே இல்லாமல் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் சீனாவில் அறிமுகம்!!

 
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் தண்டவாளமே இல்லாமல் இயங்கும் ஸ்மார்ட் ரயிலின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் மற்றும் மோனோ ரயில் போன்ற எவ்வித பிடிமானமும் இல்லாமல், தண்டவாளம் கூட இல்லாமல் இயங்கும் இந்த ஸ்மார்ட் ரயில் ஜுஜூ பகுதியில் முதற்கட்டமாக சோதனை செய்து பார்க்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய ரயில் உற்பத்தி நிறுவனமான சி.ஆர்.ஆர்.சி. கார்ப்பரேஷன் லிமிட்டட் நிறுவனம் இந்த ஸ்மார்ட் ரயிலை தயாரித்துள்ளது.

ரயில் செல்ல வேண்டிய வழித்தடம் சாலையில் வெண்ணிற கோடுகளாகக் காணப்படுகிறது. சாலையில் இந்த வெள்ளை கோடுகள் 3.75 மீட்டர் அகலம் கொண்டு சீரான இடைவெளியில் உள்ளது.

சென்சார் மூலம் தாமாகவே இயங்கக்கூடிய இந்த ஸ்மார்ட் ரயில் சாலையில் உள்ள கோடுகள் வழியாக செல்கிறது.

இதில் ஒரே நேரத்தில் 300 பேர் பயணிக்க முடியும். அதிகபட்சமாக 70 கி.மீ வேகம் கொண்ட இந்த ஸ்மார்ட் ரயில், 32 மீட்டர் நீளத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏனைய ரயில்கள், சுரங்கப்பாதை மற்றும் ரயில்வே ட்ரக் அமைக்கும் செலவை விட இந்த ரயிலுக்கு மிகக்குறைவான செலவே ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் உலகின் முதல் ஸ்மார்ட் ரயில் என்பது குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்ப் மீது ரஷ்யக் கொடிகளை வீசி அரச துரோகி என கூச்சலிட்டவர் கைது!!(வீடியோ)

அமெரிக்க பாராளுமன்றமான காங்கிரஸ் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு திரும்புகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பாராத சம்பவமொன்றுக்கு முகங்கொடுத்தார்.

கூட்டம் நிறைவடைந்த பின்னர், செனட் சபையின் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் இருவருடன் சென்றுகொண்டிருந்தார்.
இதன்போது, ஊடகவியலாளர்களுக்கான பிரிவிலிருந்த ஒருவர் ரஷ்ய நாட்டு கொடிகள் பலவற்றை அவர் மீது வீசி எறிந்தார்.

அத்துடன், ட்ரம்பை அரச துரோகி என கூறி கூச்சலிட்டார்.
இதனை கருத்திற்கொள்ளாது ட்ரம்ப் அங்கிருந்து வெளியேறினார். எவ்வாறாயினும், அந்நபரை அங்கிருந்து வெளியேற்ற பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

ரஷ்யாவுடன் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்றதாகவும், வரி தொடர்பில் அரச துரோகியொருவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அந்நபர் இதன்போது கூறினார்.

விசாரணைகளில் அவரது பெயர் ரயன் க்லேடன் என தெரியவந்துள்ளது. ஊடகவியலாளர் என தம்மை அடையாளப்படுத்தி அவர் உள்ளே நுழைந்துள்ளார்.

அவர் ”அமெரிக்கன் டேன் அக்ஷன்” எனப்படும் அமைப்பின் பிரதிநிதி என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோதமாக செயற்பட்ட குற்றச்சாட்டில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இலங்கை இளம் பெண் கடத்தல் விவகாரம் : சர்ச்சையில் நடிகை புவனேஸ்வரி!!

இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் கடத்தல் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய இந்திய நடிகை புவனேஸ்வரியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவரை இம்மாதம் 30ஆம் திகதி நேரில் முன்னிலையாகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த மாதம் 23ஆம் திகதி காணாமல் போயிருந்தார்.

பேஸ்புக் மூலம் ஏற்பட்ட நட்பால் மிதுன் என்பவருடன் குறித்த இளம் பெண் காணாமல் போனதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தில் காணாமல் போன இலங்கை பெண்ணின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “காணாமால் போன மகளை நடிகை புவனேஸ்வரி வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார், மகளுக்கு போதைப் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டார், அவரை மீட்டுத் தர வேண்டும்” என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றனர். அத்துடன் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத நடிகை புவனேஸ்வரிக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் நடிகை புவனேஸ்வரி வரும் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் கண்டிப்பாக முன்னிலையாக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாயைத் தேடி இலங்கை வந்துள்ள ரெபேக்காவிற்கு உதவுங்கள்!!

1979 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் திகதி கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் பிறந்த குழந்தையொன்று, சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அநாதரவாக விடப்பட்டது.

அப்போது, இலங்கைக்கு வந்திருந்த பிரித்தானிய தம்பதியினர் அந்தக் குழந்தையைக் கடத்திச்சென்றனர்.

ரெபேக்கா நளாயினி எனும் அவர் தமது உண்மையான தாயைக் கண்டுபிடிக்கும் ஏக்கத்துடன் மீண்டும் இலங்கை திரும்பியுள்ளார்.

ரெபேக்கா 2003 ஆம் ஆண்டிலிருந்து தனது தாயைத் தேடி வருகின்றார்.

இது தொடர்பில் 6 தடவைகள் மரபணு பரிசோதனைகளை அவர் முன்னெடுத்திருந்த போதும், அந்த முயற்சி பலனளிக்கவில்லை.

தனது தாயைத் தேடும் ரெபேக்காவிற்கு நீங்களும் உதவலாம்.
இவரின் குடும்பம் தொடர்பிலான தகவல்களை நீங்கள் அறிந்திருந்தால் 0114 896 896 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக அறியத்தாருங்கள்.

நான் எதையும் மறைக்க விரும்பவில்லை : பெண்ணின் அதிரடி நடவடிக்கை!!

மார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்த பெண், தேவாலயத்தில் வைத்து தனது மேற்சட்டையைக் கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மெரியானா மில்வார்ட் (33) என்ற பெண் ரியோ டி ஜெனிரோவைச் சேர்ந்தவர். பிரேசில் இராணுவத்தில் தாதியாகப் பணியாற்றிய இவர் தனது 24 வயதில் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.

நோய் தீவிரமாக இருந்த நிலையிலேயே அது கண்டுபிடிக்கப்பட்டதால் அவரது இரண்டு மார்பகங்களுமே அகற்றப்பட்டன.

இதையடுத்து, பொது இடங்களுக்கு வருகை தர வேண்டாம் என்றும் அதனால் அவர் மனம் பாதிக்கப்படும் என்றும் அவருக்குச் சொல்லப்பட்டது.

இந்தக் கருத்தை மாற்ற நினைத்த அவர், அண்மையில் நடைபெற்ற மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

அதன்போது, அங்கிருந்த தேவாலயத்துக்குச் சென்ற அவர், திடீரென்று அவரது மேலாடையைக் கழற்றி தனது தழும்புகளை அங்கு கூடியிருந்தவர்களுக்குக் காட்டினார்.

“நான் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவள். இதை நான் மறைக்க விரும்பவில்லை. சொல்லப்போனால், முன்னரைவிட இப்போது நான் மிகத் துணிச்சலானவளாக மாறிவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

மீண்டும் மெர்சல் படத்திற்கு வந்த சோதனை!!

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிவுக்கு வெளியான மெர்சல் படம் அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சையை சந்தித்தாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதையாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ தேனாண்டான் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. தமிழகத்தில் வெளியாகிய சில நாட்களில் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும், வசனங்களும் படத்தில் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது.

எனவே குறிப்பிட்ட அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. பின்னர் அதற்கும் ஒரு முடிவு எட்டப்பட்டது. இவ்வாறாக இந்த படத்திற்கு வந்த சோதனைகளுக்கு ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கும் நிலையில், ‘மெர்சல்’ படத்தின் தெலுங்கு பதிப்பான அதிரிந்தி படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்தது.

அதன்படி வருகிற அக்டோபர் 26ம் திகதி படம் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது, அதிரிந்தி படத்திற்கான தணிக்கைக் குழு சான்றிதழ் இன்னமும் பெறப்படவில்லையாம். எனவே சொன்ன நாளில் படம் வெளியாகுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி தமிழில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்டி., பணமதிப்பிழப்பு, டிஜிட்டல் இந்தியா சம்பந்தப்பட்ட காட்சிகள் தெலுங்கில் பதிப்பில் இடம்பெறுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

மனைவி புகார் : தாடி பாலாஜிக்கு சிக்கல்!!

சினிமா மற்றும் டி.வி. தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்கின்றனர்.

இந்த நிலையில் தாடி பாலாஜி குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் ஏற்கனவே அவருக்கு திருமணமாகிவிட்டதை என்னிடம் இருந்து மறைத்து விட்டார் எனவும் 2 மாதங்களுக்கு முன்பு போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் அவரது மனைவி நித்யா புகார் அளித்து இருந்தார்.

அதன்மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அண்ணாநகரில் உள்ள போலீஸ் துணை கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் தாடி பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அவரிடம் போலீஸ் துணை கமி‌ஷனர் டாக்டர் சுதாகர் விசாரணை நடத்தினார். இது சுமார் 2 மணிநேரத்துக்கும் மேலாக நடந்தது. அப்போது தாடி பாலாஜியுடன் அவரது வக்கீல் இருந்தார்.

யாழில் கிணற்றில் இருந்து வெடிகுண்டுகள் மீட்பு!!

யாழ்ப்பாணத்தில் கிணறு ஒன்றில் இருந்து வெடிகுண்டு தொகை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் நேற்று (25) தெரிவித்துள்ளனர்.

குறித்த வெடிபொருட்கள் கொடிகாமம் கச்சாய் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்தே மீட்கப்பட்டுள்ளன.

13 வெடிக்குண்டுகள், 60 கைக்குண்டுகள், 06 மோட்டார் குண்டுகள் இவற்றில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் சிறப்பு அதிரடிபடையினரால் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டு அரியாலைப்பகுதியில் நேற்று பாதுகாப்பாக வெடிக்கவைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் சிறப்பாக இடம்பெற்ற சூரன்போர்!!(படத்தொகுப்பு)

 
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அருளைப் பெறுவதற்காக இந்து மக்கள் அனுஸ்டிக்கும் விரதங்களில் மிக முக்கிய விரதமாக கந்தசஷ்டி திகழ்கின்றது.

இந்த கந்தசஷ்டி விரதத்தின் இறுதி நாளான இன்று(25.10) வவுனியாவில் அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சூரன்போர் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

வவுனியாவில் கந்தசாமி கோவில், தாண்டிக்குளம் முருகன் கோவில், கோவில்குளம் சிவன்கோவில், சிதம்பரபுரம் பழனி முருகன் கோவில், நெளுக்குளம் முருகன் கோவில், நெடுங்கேணி முருகன் கோவில் என்பவற்றில் சூரன் போர் சிறப்பாக இடம்பெற்றது.

பல வடிங்கள் எடுத்து வந்த சூரபத்மனை பக்த அடியார்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் முருகப்பெருமான் சங்காரம் செய்தார்.

வவுனியா கந்தசாமி கோவிலில் இடம்பெற்ற சூரன் போரில் முழுமையான படத்தொகுப்பு இணைக்கப்பட்டுள்ளது.