வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று முன்தினம் 25.10.2017 புதன்கிழமை சூரசம்காரம் எனப்படும் சூரன் போர் இடம்பெற்றது.
மேற்படி சூரசம்கார நிகழ்வில் நூற்றுக்கணக்கான முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர் .

வவுனியா நெளுக்குளம் ஸ்ரீ முருகன் ஆலயத்தின் கந்த சஷ்டி உற்சவத்தின் ஆறாவது நாளான நேற்று முன்தினம் 25.10.2017 புதன்கிழமை சூரசம்காரம் எனப்படும் சூரன் போர் இடம்பெற்றது.
மேற்படி சூரசம்கார நிகழ்வில் நூற்றுக்கணக்கான முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர் .

வடகொரியா சிறு இடைவெளிக்கு பின்னர் மிகவும் சக்தி வாய்ந்த அணு குண்டு சோதனைக்கு தயாராவதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
வடகொரியாவின் குறித்த அறிவிப்பு வெளியான உடன், எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்கா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பசுபிக் பெருங்கடல் பகுதியில் இந்த அணு குண்டு சோதனை மேற்கொள்ள இருப்பதாக வடகொரிய உயரதிகாரி ஒருவர் தலைநகர் Pyongyang ல் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி தங்களது தலைவர் கிம் ஜோங் வுன் திட்டமிட்டபடி மிக விரைவில் இந்த சோதனையானது நடத்தப்படும் என அவர் சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிற்கும் தகவல் அளித்துள்ளார்.
மேலும் டிரம்ப் அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பது அந்த நாட்டு மக்களின் நலனுக்கு நன்மை தரும் எனக் கூறியுள்ள அவர், சமீப காலமாக தங்களின் ஜனாதிபதியை அமெரிக்கா துச்சமாக மதிப்பிட்டு ஏளனமாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது என்றார்.
கடந்த மாதம் இதேபோன்று வடகொரிய வெளிவிவகாரத்துறை திடீரென்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. ஆனால் அதை எவரும் கருத்தில் கொள்ளவில்லை. அதனையடுத்தே மிகவும் சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை வடகொரியா மேற்கொண்டது.
ஆனால் தற்போது வெளியான அறிவிப்பால் வடகொரியாவின் அண்டை நாடுகளான தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் என்ன நடவடிக்கையில் இறங்கும் என்பது இதுவரை வெளியாகவில்லை.
இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி ஜப்பான், தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு தமது பயணத்தை துவங்க உள்ளார்.
வடகொரியா அரசியல் வரலாற்றில் இதுவரை 6 முறை அணுகுண்டு சோதனை மேற்கொண்டது. அதில் 3 முறை கடந்த 21 மாதங்களில் மேற்கொண்டுள்ளது.
குறித்த 6 சோதனைகளும் வடகொரியாவின் ரகசிய தளத்தில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வடகொரியா மேற்கொள்ளவிருக்கும் 7வது அணு குண்டு சோதனையானது பசுபிக் பெருங்கடலின் மீதே வளிமண்டலத்தில் என தகவல் வெளியாகியுள்ளது.
செப்டம்பர் 3 ஆம் திகதி தனது ஆறவது அணு குண்டு சோதனையை வடகொரியா மேற்கொண்டதில், தென் கொரியா பகுதியில் 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என நிபுணர்கள் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண் மற்றும் பெண், ஆகிய இருபாலருக்கும் ஏற்படும் ஒரு பிரச்சனை தான் அதிகப்படியான உடல் பருமன்.ஒருவர் தங்களின் உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை வைத்து இல்லாமல் அதற்கு அதிகமான உடல் எடையுடன் இருந்தால், அதை உடல் பருமன் என்று கூறுவார்கள்.ஆனால் இப்படி அதிக உடல் எடை வைத்திருந்தால், நமக்கு பலவித நோய்களின் தாக்கம் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா?
உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்
நமது அன்றாட உணவு பழக்க வழக்கத்தில் கொழுப்பு மற்றும் அதிக சர்க்கரை நிறைந்த கார்போஹைட்ரேட் போன்ற உணவு வகைகள் மற்றும் குறைந்த உடல் உழைப்பு, தைராய்டு சுரப்பி பிரச்சினை, ஜீன் மற்றும் ஹார்மோன் குறைபாடு போன்ற காரணங்களினால் தான் நமக்கு அதிக உடல் பருமன் ஏற்படுகிறது.
நமது உடம்பில் இருக்கும் பாங்கிரியாஸ் என்ற இன்சுலின் கணையத்தில் இருந்து சுரக்கும் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலையில் உடலில் உள்ள திசுக்கள் இன்சுலினை பயன்படுத்தாமல், ரத்தத்தில் சர்க்கரை மற்றும் இன்சுலினை அதிகரிக்கச் செய்வதால் நமது உடம்பில் கொழுப்புகள் அதிகமாகி ஊளைச் சதையை ஏற்படுத்துகிறது.நமக்கு ஏற்படும் அதிகப்படியான உடல் எடையானது, நம்முடைய வயது, மரபணு, மனஅழுத்தம், உடற்பயிற்சியின்மை போன்றவையும், சில குடும்ப வம்சங்களின் மரபணுக்கள் காரணமாக அதிக உடல் எடை அதிகரிக்கிறது.
உடல் பருமன் பிரச்சனையால் ஏற்படும் நோய்கள்
நமக்கு அதிகப்படியான உடல் எடை அதிகரித்து விட்டால், ரத்த அழுத்தம், இதயம் படபடப்பு, கல்லீரல் பாதிப்பு, பித்த குறைபாடு, நீரிழிவு, மூட்டு வலி, மனச்சிதைவு, சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை உடல் பருமனால் ஏற்படும்.
இதுவே பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்சினை, மார்பக புற்றுநோய், இடுப்பு, கை, கால், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எடையைக் குறைக்கும் கை மருந்துகள்
முருங்கை இலைச் சாற்றை தினமும் இரண்டு வேளைகள் 2 டீஸ்பூன் அளவு குடிக்கலாம். மேலும் துளசி இலைச் சாற்றைச் சூடாக்கி, அதனுடன் சிறிது தேன் கலந்து குடிக்கலாம்.
தினமும் நமது உணவில் அடிக்கடி புடலங்காயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இலந்தை மரத்தின் இலையைத் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடித்து வர வேண்டும்.
சிறிதளவு கொள்ளைச் சுத்தம் செய்து தினமும் அதை ரசம் வைத்து, அதனுடன் கல் உப்பை சேர்த்து கலந்து ஒரு நாளைக்கு 3 வேளைகள் குடித்து வர வேண்டும்.
ஓமத்தை நன்கு வறுத்துப் பொடி செய்து, அதனுடன் தேன் கலந்து தினமும் சாப்பிட எளிதில் உடல் எடை குறையும். மேலும் அவரை இலையை உலர்த்தி இடித்துத் தூளாக்கித் தேனில் குழைத்துத் தினமும் சாப்பிட்டு வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
கல்யாண முருங்கை பொடியைத் தினமும் காலையில் உணவுக்குப் பின் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்கும். மேலும் சிறிதளவு மோர், கேரட் ஆகியவற்றை அரைத்துத் தினமும் குடித்து வரலாம்.
வாழைத் தண்டுசாறு, பூசணிச்சாறு, அருகம்புல் சாறு ஆகிய மூன்றில், ஏதாவது ஒன்றைக் தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடல் எடை விரைவில் குறையும்.
திருவள்ளூர் மாவட்டத்தில் தன் இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் பெருமாள்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சரஸ்வதி, இவருக்கு இலக்கியா, ஸ்ரீஜா என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இன்று காலை 7.30 மணியளவில் வேப்பம்பட்டு ரயில் நிலையம் வந்த சரஸ்வதி இரு குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தற்கொலை செய்து கொண்டார்.
இத்தகவல் ரயில்வே பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டவுன், விரைந்த அதிகாரிகள் உடலை கைப்பற்றினர்.
முதற்கட்ட விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட தகராறால் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற சென்ற தமிழர் ஒருவர் தன்னை இன்னும் சிறிது நேரத்தில் கொல்லப்போவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் இராமநாதபுரம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உச்சிபுளி அருகே குஞ்சாறுவளசை கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் ஹோட்டலில் பணியாற்றுவதற்காக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியா சென்றுள்ளார்.
மலேசியா சென்ற அவரை அவர்கள் அங்கு கொத்தடிமை போல் நடத்தியுள்ளனர். அதாவது தண்ணீர் மற்றும் உணவு எதுவும் கொடுக்காமலும், அதுமட்டுமின்றி தன்னுடைய ஊதியத்தை கேட்டதற்கு அவரை கடுமையாக தாக்கியும் உள்ளனர்.
இதனால் அந்த இளைஞர அவர்களிடமிருந்து தப்பித்து பூங்கா ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அவர் வீடியோ ஒன்றில் செல்வத்தை எதிர்த்து பேசியதால், அவர் கூலிப்படையினர் வைத்து கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அப்படி நான் கொல்லப்பட்டால் அதற்கு செல்வம் தான் முழு பொறுப்பு என வாக்குமூலம் கொடுத்துள்ளார். தற்போது அந்த இளைஞர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காதல் திருமணம் செய்த புதுப்பெண் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள பல்லாவரத்தை சேர்ந்தவர் நயின்பாஷா, இவரின் மகள் ஷாகிரா (20). அவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் கார்த்திக் (27) என்பவருடன் ஷாகிராவுக்கு காதல் இருந்து வந்தது.
இவர்களின் காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்த நிலையில், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த 40 நாட்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
அங்குள்ள வாடகை வீட்டில் புதுமண தம்பதிகள் வாழ்ந்து வந்தார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பிறகு ஷாகிரா வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியதாக கூறப்படுகிறது.
உடனடியாக ஷாகிராவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்ற போது வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவலறிந்த ஷாகிராவின் பெற்றோர், தங்கள் மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அவளை கார்த்திக் தான் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாகவும் புகார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
குண்டு வெடிக்க செய்து கொலை : இருவருக்கு 35 ஆண்டுகளுக்கு பின் மரண தண்டனை!!
குருணாகல் – வெல்லவ கொடயாய தோட்டத்தின் காவலாளியை குண்டு வெடிக்க செய்து கொன்றதுடன், அவரது மனைவியின் கண்ணை குருடாக்கிய இரண்டு பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
குருணாகல் சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர நேற்றைய தினம்(26) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
இந்த குண்டு, வெல்லவ கொடயாய தோட்ட அத்தியட்சகரை கொலை செய்ய எடுத்துச் செல்லப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த குற்றம் சம்பந்தமாக குருணாகல் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று போரில் இரண்டு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காவலாளியின் மனைவியின் கண்ணை குருடாக்கிய குற்றத்திற்கு இரண்டு பேருக்கும் தலா ஏழு நாட்கள் கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் முறைப்பாட்டாளர் தரப்புக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாவை செலுத்த வேண்டும் என்று குற்றவாளிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இதனை தவிர இருவருக்கும் தலா ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதித்த நீதிபதி, அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத காலம் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
வெல்லவ மராகம பிரதேசத்தை சேர்ந்த கனுபால வீரதுங்க மற்றும் மைக்கல் டயஸ் ஆகிய இரண்டு குற்றவாளிகளுக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த மராகம பிரதேசத்தை சுமண சந்திர கமகே என்பவர் குற்றச்சாட்டுக்களில் இருந்து முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மைய தினம் ஒன்றில் கொடயாய தோட்டத்தில் குற்றவாளிகள் இந்த குற்றத்தை செய்துள்ளனர்.
குற்றம் நடந்து 35 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த வழக்கு முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபாயின் மதிப்பு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இதுவரையில் 155.59 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது.
டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 151.79 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 155.54 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, பிரித்தானிய பவுண்ட் ஒன்றில் விற்பனை விலை 207.46 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பப்புவா நியு கினியில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனித மண்டையோடு, இதுவரை அறியப்பட்டதிலேயே சுனாமியால் பலியான மிகப்பழமையான நபரின் மண்டையோடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
1929 ஆம் ஆண்டு ஐடேப் என்ற நகர் அருகே இந்த மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டது. நவீனகால மனிதர்களின் மூதாதையர்களாக கருதப்படும் ஹோமோ எரக்டஸ் இனத்தின் சான்றுகளை இது கொண்டுள்ளது.
எனினும், ஐடேப் நகரம் முன்பு ஒரு கடற்கரை பகுதியாக இருந்ததாகவும், சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன் சுனாமியால் தாக்கப்பட்டதாகவும் தற்போது விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மண்டையோடு சுனாமியால் பலியான நபர் ஒருவரின் மண்டையோடாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மண்டையோடு கிடைத்த பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட வண்டல் மண்ணையும், அந்த பகுதிக்கு அருகே 1998ஆம் ஆண்டு சுனாமியால் சின்னாபின்னமான பகுதியிலிருந்து சேகரிக்கப்பட்ட மண்ணையும் கொண்டு சர்வதேச குழு ஒப்பிட்டு பார்த்ததையடுத்து இத்தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் சுனாமியை எதிர்கொண்டு வந்துள்ளார்கள் என்பது வண்டல் மண்ணிலிருந்து கிடைத்த புவியியல் ஒற்றுமைகள் காட்டியதாக நியு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் கோஃப் தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குமுன் பலியான இந்த மண்டையோடுக்கு சொந்தமான மனிதர் உலகில் சுனாமியால் பலியான பழமையான நபர் என்று முடிவுக்கு வந்துள்ளோம்,” என்றார் பேராசிரியர் கோஃப்.
மணல் படிமங்களின் அளவு மற்றும் கலவை குறித்த இந்த ஆய்வு தொடர்புடையது. அதனோடு, கடலிலிருந்து சேகரிக்கப்பட்ட நுண்ணிய உயிரினங்கள், 1998 ஆம் ஆண்டு 2,000 க்கும் மேற்பட்ட உயிர்களை பலிகொண்ட சுனாமியை தொடர்ந்து சேகரிக்கப்பட்ட நுண்ணிய உயிரினங்களும் ஒன்றாக இருந்தன.
தொல் பொருட்களின் வயதை துல்லியமாக கணக்கிடும் ரேடியோ கார்பன் டேட்டிங் முறையை விஞ்ஞானிகள் குழு செய்துள்ளது.
வவுனியாவில் சிறுமி ஒருவரை நடு இரவில் வீடு புகுந்து கடத்த முயற்சித்த சம்பவம் நடைபெற்று 14 நாட்களாகியும் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வவுனியா கீரிசுட்டான் கிராமத்தில் 10 வயது சிறுமியை நடு இரவில் வீடு புகுந்து தூக்கிச் சென்ற மர்ம நபர்களுடையது என சந்தேகிக்கும் செருப்பு மற்றும் சந்தேகநபர்கள் கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் கயிறு போன்றன பொலிஸாரால் மீட்கப்பட்ட நிலையில் பல நாட்களாகியும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படாமையானது கிராமத்தில் அச்ச நிலைய உருவாக்கியுள்ளது.
வவுனியா – நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கீரிசுட்டான் பகுதியில் 12ஆம் திகதி நடு இரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் நித்திரையில் இருந்த சிறுமியை தூக்கிச் சென்ற வேளையில், குறித்த சிறுமியின் தந்தை விழித்துக்கொண்ட நிலையில் கடத்தல்காரனை துரத்திச் சென்ற போது சிறுமியை கைவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 13ஆம் திகதி காலையில் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு சென்ற நெடுங்கேணி பொலிஸார் தடயப்பொருட்களை கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த சிறுமி கடத்தல் முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்யாத காரணத்தினால் மீண்டும் 20-ஆம் திகதி நெடுங்கேணி பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தாங்கள் அச்ச நிலையில் வாழ்ந்து வருவதாகவும் உடனடியாக இச்சம்பவம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அத்ததுடன் 23ஆம் திகதி வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் இயங்கும் பொதுமக்கள் முறைப்பாட்டுப் பிரிவிற்கு முறைப்பாடு செய்த நிலையிலும் சந்தேகநபர்கள் கைது செய்யப்படவில்லை.
சிறப்புத்திறன் கொண்ட பாதுகாப்பு கெமரா மற்றும் ரிமோட் மூலம் இயங்கும் பூட்டை அமேசான் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தனது முதன்மை வாடிக்கையாளர்கள் வீட்டில் இல்லாதபோது அமேசான் பொருட்களை விநியோகம் (Delivery) செய்யும் வகையில், முதலில் இது அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக அமெரிக்காவின் 38 நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
வீட்டில் ஆள் இல்லாத போதும் வீட்டாரின் அனுமதியோடு, வீட்டுக்கு வரும் பொருட்களை உள்ளே வைக்க ரிமோட் மூலம் கதவைத் திறக்கும் வகையில் இந்த கெமரா மற்றும் பூட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ‘ வொய்ஸ் அசிஸ்டென்ட் அலெக்ஸா’ உதவியுடன் இந்த கெமரா செயற்படும்.
அமேசான் பூட்டு மற்றும் கெமரா இணைந்து ”Amazon Cloud Cam” என்று அழைக்கப்படுகிறது. Order செய்த பொருள் வீட்டிற்கு வந்ததும், வீட்டு உரிமையாளரின் கைபேசிக்கு தகவல் செல்லும்.
அந்த தகவலைக் கொண்டு, கைபேசி மூலம் கதவைத் திறக்கவும், அவர்கள் சென்றதும் மூடவும் முடியும். அத்தோடு, இவை அனைத்தையும் கைபேசி ஊடாக நேரடியாக வாடிக்கையாளர் கண்காணிக்க முடியும்.
இந்த தொழில்நுட்பத்தில் 3 கெமராக்கள் வழங்கப்படுகின்றன. இதில் உயர் தரத்துடன் காட்சிகளைப் பதிவு செய்யும் வசதி உள்ளது. நைட் விஷன் வசதியும், கதவுக்கு இரண்டு பக்கத்திலும் ஆடியோ வசதியும் இருக்கும்.
இந்த பூட்டை வீட்டில் பொருத்தியிருக்கும் பயனாளர், எங்கிருந்து வேண்டுமானாலும் தனது செல்போனில் இருக்கும் Amazon Cloud Cam App மூலமாக தனது வீட்டினை நேரடியாகப் பார்க்கலாம்.
வீட்டிற்கு உறவினர்கள் வந்தாலோ, பொருட்கள் டெலிவரிக்கு வந்தாலோ ரிமோட் உதவியுடன் வீட்டின் கதவைத் திறக்கலாம்.
அதுமட்டுமல்ல, கெமராவுடன் இணைக்கப்பட்டுள்ள மைக்ரோஃபோன் மூலம், வீட்டில் இருக்கும் குழந்தைகள், உறவினர்கள் அல்லது வளர்ப்புப் பிராணிகளிடம் கூட பேச முடியும்.
2015 ஆம் ஆண்டு உலகில் நிகழ்ந்த இறப்புகளில் 9 மில்லியன் பேரின் மரணத்திற்கு சூழல் மாசு காரணமாக அமைந்துள்ளதாக “த லென்செட்” மருத்துவ சஞ்சிகை தெரிவித்துள்ளதாக பி.சி.சி செய்தி வௌியிட்டுள்ளது.
சூழல் மாசு காரணமாக அதிக இறப்பு ஏற்படும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பெறும் நாடுகளில் ஏற்பட்டுள்ள எல்லா இறப்புக்களிலும் 25 சதவீதம் வரையான இறப்புக்கள் மாசுபாடுகளால் நிகழ்ந்திருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. இதில் பங்களாதேஷ், சோமாலியா ஆகிய நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
காற்று மாசடைதல் காரணமாக மூன்றில் இரண்டு பகுதியினர் இறந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மிகப்பெரிய ஆபத்திற்குரிய காரணியாக விளங்கும் காற்று மாசினால் 6.5 மில்லியன் பேருக்கு இயற்கை இறப்பிற்கு முன்னதாகவே மரணம் ஏற்படுவதாக பி.பி.சி. செய்தி வௌியிட்டுள்ளது.
வாயுக்கள் போன்ற வெளிப்புற ஆதாரங்கள், விறகு எரிப்பது அல்லது நிலக்கரி பயன்பாடு போன்ற வீடுகளில் இருந்து வெளிவரும் மாசுபாடுகளும் இதில் உள்ளடங்குகின்றன.
டீசல் வாகனங்கள் நச்சுத்துகள்கள் மற்றும் வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றுவது காற்று மாசுபாட்டில் அதிகப் பங்காற்றும் காரணிகளாக இருக்கலாம்.
இந்த முடிவுகள் இரண்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட ஆய்வில் கிடைத்துள்ளன.
அந்த ஆய்வை நடத்திய ஆசிரியர்கள் தங்களுடைய தரவுகளை விளக்குகின்ற ஊடாடும் வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கையிலும் பல பகுதிகளில் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புகை கக்கும் வாகனங்களை இன்றும் காண முடிகின்றது.
Bethune சிறையில் இருந்து நபர் ஒருவர் நேற்று தப்பித்து சென்று 5 வயதுடைய தன் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து விட்டு மீண்டும் பொலிஸாரிடம் ஆஜராகியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதத்தில் Bethune சிறையில் சிறைவைக்கப்பட்டிருந்த 34 வயதுடைய நபர் உள்ளிட்ட சிறைக் கைதிகள் நேற்று புதன்கிழமை சிறைச்சாலையில் இருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள Nœux-les-Mines நகருக்கு கலாச்சார நிகழ்வு ஒன்றுக்காக அனுப்பப்பட்டிருந்தனர்.
காலை 8.30 மணியில் இருந்து மாலை 6 மணிவரை கைதிகள் குறித்த நிகழ்வுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். அப்போது குறித்த 34 வயதுடைய நபர் மாலை 4 மணி அளவில் நிகழ்வில் இருந்து தப்பிச்சென்றுள்ளார்.
அங்கிருந்து வயல்களினூடே சில மைல் தூரங்கள் நடந்து சென்று தன் 5 வயது மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதன் பின்னர் அவரே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து மீண்டும் சிறைக்குச் சென்றுள்ளார்.
6 மணிநேரங்கள் நடந்து சென்று தன் மகளுடன் 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை செலவழித்து விட்டு பின்னர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்து ஆஜராகியுள்ளார்.
உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை சிங்கப்பூர் நாட்டு கடவுச்சீட்டு பெற்றுள்ளது. இந்த கடவுச்சீட்டு மூலம் விசா இல்லாமல் 159 நாடுகளுக்கு செல்ல முடியும்.
சர்வதேச ஆலோசனை நிறுவனமான ஆர்டன் கேபிடல் என்ற நிறுவனம், உலக நாடுகளின் கடவுச்சீட்டு குறித்த தரவரிசையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
விசா இன்றி பயணம் செய்ய அனுமதிப்பதன் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்த உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகள்குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் சிங்கப்பூர் 159 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளது. இந்த நாட்டின் கடவுச்சீட்டு மூலம் 159 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு அடுத்த இடத்தில் 158 புள்ளிகளுடன் ஜெர்மனி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
அமெரிக்கா 154 புள்ளிகளுடன் 6வது இடத்திற்கு பின்தங்கி உள்ளது. இந்திய பாஸ்போர்ட் 51 புள்ளிகளுடன் 75வது இடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. அந்த நாட்டின் குடிமக்களை விசா இன்றி 22 நாடுகள் மட்டுமே அனுமதிக்கின்றன. அதற்கு முந்தைய இடத்தில் ஈராக் (26), பாகிஸ்தான்(26), சிரியா (29) உள்ளன.
உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் வரிசையில் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் வருமாறு:-
159 – சிங்கப்பூர்
158 – ஜெர்மனி
157 – சுவீடன், தென்கொரியா.
156 – பிரிட்டன், டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், நோர்வே, ஜப்பான்
155 – லக்ஸம்பேர்க், சுவிஸ்சலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம், ஒஸ்திரியா, போர்சுக்கல்,
154 – மலேசியா, அயர்லாந்து, கனடா, அமெரிக்கா,
153 – கிரீஸ், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா
152 – மால்டா, ஐஸ்லாந்து, செக் குடியரசு,
150 – ஹங்கேரி.
149 – சுலோவேனியா, சுலோவாக்கியா, போலந்து, லுதுவேனியா, லாத்வியா.
இதுகுறித்து ஆர்டான் கேபிட்டல் நிறுவனத்தின் சிங்கப்பூர் அலுவலக நிர்வாகி பிலிப்பி மே கூறும்போது, ‘முதல் முறையாக ஆசிய நாடு ஒன்று (சிங்கப்பூர்), சக்திவாய்ந்த கடவுச்சீட்டு வைத்திருக்கும் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
இது அந்நாட்டின் தூதரக உறவுகள் மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கு ஒரு சான்றாகும்.
இந்த பட்டியலில் அமெரிக்க மிகவும் பின்தங்கியுள்ளதற்கு காரணம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் விசா கெடுபிடி காட்டியதே காரணம் என கூறப்படுகிறது.
அமெரிக்காவில் இந்திய சிறுமி ஷெரினின் மரணத்தில் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லை என சிறுமியின் வளர்ப்புத் தாய் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ரிச்சர்ட்சன் நகரில் வெஸ்லி மேத்யூஸ் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்தார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள், அனாதை இல்லத்தில் இருந்து ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ந்து வந்தனர். அந்த குழந்தை கடந்த 7 ஆம் திகதி காணாமல் போனது.
மேத்யூஸ் அளித்த புகாரின் அடிப்டையில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, அந்த சிறுமியை பொலிசார் தேடி வந்தனர்.
பின்னர் மேத்யூசுவின் வீட்டிற்கு அருகில் உள்ள கால்வாயில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய பொலிசார், மேத்யூசை கைது செய்தனர்.
மேத்யூ கூறிய வாக்கு மூலத்தில், ´ஷெரினுக்கு இரவு பால் குடிக்கும் போது திடீரென அடைப்பு ஏற்பட்டது.
அதனால் அவள் இறந்து விட்டாள். ஷெரின் உடலை நான் தான் வெளியே கொண்டு சென்று மறைத்து வைத்தேன்´ என கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், சிறுமியின் மரணத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வளர்ப்புத் தாய் சினி மேத்யூஸ் கூறியுள்ளார்.
சினி மேத்யூஸ் சார்பில் அவரது வழக்கறிஞர்கள் மிசேல் நோல்ட், கிரேக் கிப்ஸ் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘சினி மேத்யூஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்.
பல்வேறு அதிகாரிகள் அவரிடம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
வழக்கறிஞர் யாரும் அப்போது அவருடன் இருக்கவில்லை.
நடந்த சம்பவம், குறித்து பொலிஸ் விசாரணையின் போது மேத்யூஸ் கூறிவிட்டார். எனவே, அவரது மனைவி சினி மேத்யூசிடம் மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஷெரின் மரணத்திலோ அல்லது உடலை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தியதிலோ அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் மகளை இழந்த வருத்தத்தில் இருக்கிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை குறித்து ரிச்சர்ட்சன் காவல்துறை எந்த கருத்தும் வெளியிடவில்லை.

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விரதத்தின் ஆறாம் நாளான இன்று 25-10-2017(புதன்கிழமை) சூரசம்காரம் என்று சொல்லப்படுகின்ற சூரன் போர் இடம்பெற்றது.
வவுனியாவின் பல பகுதிகளிலும் மற்றும் நாடெங்கிலும் இன்றைய தினம் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. இன்று காலை முதல் முருகபெருமானுக்கு அபிசேகங்கள் மற்றும் யாகம் என்பன இடம்பெற்று பிற்பகல் வேளையில் வசந்தமண்டப பூஜையின் பின் முருகபெருமான் போர்க்கோலம் பூண்டு உள்வீதி வலம்வந்து மாலை 4….30 மணியளவில் போர்களத்துக்கு எழுந்தருளினார்.
தொடர்ந்து யானை முகம்கொண்ட தாரகாசூரன் மற்றும் சிங்கமுகம் கொண்ட சிங்கமுகாசூரன் ஆகிய சூரபத்மனது சகோதரர்களுடன் போர்புரிந்து அவர்களை சம்காரம் செய்து சூர பத்மனுடன் போரில் ஈடுபட்டு இறுதில் சூர சம்காரமும் இடம்பெற்றது .
வவுனியா கோவில்குளத்தில் இடம்பெறும் சூரன் போரில் பல்வேறு விதமான சிறப்புகள் காணப்படுவது வழமையானது.அதாவது மற்ற கோவில்களில் காணப்படும் சூரனில் தலையை மட்டுமே திருப்ப கூடியவகையில் அமைக்கப்பட்டுள்ளதை நீங்கள் கண்டிருப்பீர்கள் . ஆனால் இங்கே சூரனின் முழு உடலையும் திருப்பக்கூடிய வகையிலான சூரபத்மனது உருவம் காணப்படுவது சிறப்பாகும். அத்துடன் வாணவேடிக்கைகள் மற்றும் சூரன் போரின் இறுதியில் முருகபெருமான் வேல் கொண்டு சூரனை வீழ்த்துகின்ற முறையும் அதன் பின் சூரன் சேவலாகவும் மயிலாகவும் மாறி முருகபெருமானிடம் சரணாகதி அடையும் நிகழ்வும் தத்துரூபமாக செய்து காட்டப்படுவதும் இங்குள்ள சிறப்பான நிகழ்வுகளாகும் ..
இன்றைய சூரன்போரில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
