கடலில் மூழ்கி இறந்த டைட்டானிக் கப்பல் பயணியின் கடிதத்தை 8 கோடி ரூபாய்க்கு ஏலம் விட திட்டமிட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் மிக பிரமாண்டமான பயணிகள் சொகுசு கப்பலான டைட்டானிக் சவுத்தாம்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் துறைமுகத்திற்கு புறப்பட்டு சென்றது.
வழியில் அட்லாண்டிக் கடலில் பனிப்பாறையின் மீது மோதி கப்பல் கடலில் மூழ்கியது.
இந்த கோர விபத்து கடந்த 1912 ஆம் ஆண்டு நடந்தது,அதில் சுமார் 1500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், அப்போது இறந்தவர்களில் அமெரிக்காவின் ஹோல்வர்சன் என்பவரும் ஒருவர்.
இவர் தனது தாய்க்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார், அக்கடிதத்தை அந்த விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் எடுத்து வைத்திருந்தார், அக்கடிதம் பலரிடம் கைமாறிய நிலையில் இங்கிலாந்தின் வில்ட்சயர் நகரில் ஏலத்திற்கு வந்துள்ளது.
இக்கடிதத்தை 80,000 பவுண்டுக்கு அதாவது சுமார் 8 கோடிக்கு ஏலம் விட ஏல நிறுவனத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இக்கடிதத்தில் கப்பலில் பயணம் செய்த பல்வேறு பயணிகள் குறித்த ஹோல்வர்சன் எழுதியுள்ளார்.
அமெரிக்கா கலிபோர்னியா மாநிலத்திலுள்ள சான் ஜோஸ் நகரைச் சேர்ந்த ஆம்பர் மரியந்தாளின் பூனை பாடசாலை சென்று படித்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பூபா என்ற பூனையைத் தத்தெடுத்துள்ளார். அவரது மகன்கள் மேத்யூ, மார்க் ஆகியோர் அந்த பகுதியிலுள்ள லேலேண்ட் உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.
குறித்த இருவரும் கால்நடையாகப் பாடசாலை செல்வது வழக்கம். இந்நிலையில் பூபாவும் வீட்டில் இருக்காமல் தினமும் இவர்களுடன் பாடசாலைக்குச் செல்வதைப் பழக்கப்படுத்திக்கொண்டது. அத்துடன் வகுப்பறையில் அமர்ந்து பாடத்தையும் கவனிக்கிறதாம்.
ஆரம்பத்தில் உரிமையாளரின் மகன்களுடன் பாடசாலைக்குச் சென்ற பூபா, தற்போது பள்ளி திறக்கும் முன்பு முதல் ஆளாக அங்கு சென்று வாசலில் காத்துக்கொண்டிருக்கிறதாம். இது தொடர்கதையாகி விட்டதால் பள்ளி நிர்வாகத்தினரும் பூபாவை விரட்டுவது இல்லையாம்.
மேத்யூ மற்றும் மார்க்குடன் நட்பு பாராட்டும் பூபா மற்ற மாணவர்களிடமும் விளையாடி மகிழ்கிறது. இதனால் பள்ளி வளாகத்தில் பூபாவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறதாம்.சமீபத்தில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அடையாள அட்டைக்காக புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது பள்ளி வளாகத்தில் சுற்றிக்கொண்டிருந்த பூபாவுக்கே முதலில் அடையாள அட்டையை வழங்கி உள்ளனர்.
கடந்த வருடத்திற்கான சிறந்த மாணவன் விருதும் பூபாவிற்குத் தான் வழங்கப்பட்டதாம்.
ஆம்பர் வளர்க்கும் பூபா பாடசாலைக்கு செல்வது மற்றும் மாணவர்களுடன் பழகுவது என்பன அப் பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பூபாவிற்கு ‘Bubba the Cat”’ எனும் பெயரில் பேஸ்புக் கணக்கொன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தியா டில்லியில் தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகப்பட்ட கணவர் தனது நண்பரை கொன்று கத்தியால் துண்டுகளாக்கி உடற் பாகங்களை குளிர் சாதனப் பெட்டியில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உணவகம் ஒன்றில் 31 வயதுடைய பாதல் மண்டல் பணியாற்றி வந்தான். தன்னுடன் பணியாற்றி வந்த நண்பன் விபின் ஜோஷிக்கும், தன் மனைவிக்கும் கள்ளத் தொடர்பு இருப்பதாக பாதல் சந்தேகம் கொண்டுள்ளார்.
இவ்வாறிருக்க 9 ஆம் திகதி முதல் நண்பன் விபின் ஜோஷியை காணவில்லை என பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதேசமயம் உணவகத்தில் விடுப்பு எடுத்துக் கொள்வதாக கூறி சென்ற பாதல் மீது பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
பாதலின் உறவினர் ஒருவர் அளித்த தகவல்படி ஒடிசா மாநிலம் ரூர்கியில் தலைமறைவாக இருந்த பாதலை பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணையில் தன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததால் விபினை இறைச்சி வெட்டும் கத்தியால் கொன்றதாகவும், பின்னர் உடலை துண்டுகளாக வெட்டி தன் வீட்டு குளிர் சாதனப் பெட்டியில் மறைத்து வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த தாய் கனவில் வந்து கூறியதற்கமைய புதையல் தேடிச் சென்ற ஐவரை பொலன்னறுவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் ஓய்வுப்பெற்ற அதிபர் மற்றும் பொது சுகாதார ஊழியர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர்.
உயிரிழந்த தாய் கனவில் நித்தமும் வந்து குறிப்பிட்ட இடத்தில் விலைமதிப்பில்லா புதையல் இருப்பதாக கூறியதற்கமையவே புதையலை பெறும் நோக்கில் குறித்த ஐவரும் நேற்று முன் தினம் பகல் வேளையில் பொலன்னறுவை பெரகும் உயன பகுதியல் உள்ள முதியவர் ஒருவர் தனித்து வசிக்கும் வீடொன்றிற்கு சென்று புதையல் தோன்ட ஆரம்பித்துள்ளனர்.
குறித்த ஐவரையும் கைது செய்யும் பொழுது குறித்த நிலத்தை 25 அடிக்கும் மேலாக நிலத்தை தோன்டியுள்ளனர். மேலும் குறித்த இடத்தில் அலவாங்கு, மண்வெட்டி, நீர் பம்பி பூஜை பொருட்கள் மற்றம் எலுமிச்சை பழம் குத்தப்பட்ட திரிசூலம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஒரே ஒரு நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ஓவியா. அவருடைய உண்மையான குணம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
தற்போது இவர் மிக பிரபலம் ஆகி பல படங்களில் நடித்து வருகிறார், அதோடு பல விளம்பரத்திலும் நடிக்கிறார். இவருக்காக நிறைய பாடல்கள் வந்துள்ளது, ஜெய் நடித்துள்ள பலூன் படத்தில் கூட ஓவியா சொன்ன நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ற வார்த்தை பாடலாக அமைந்தது.
இந்த நிலையில் இலங்கையில் உள்ள ஓவியா ரசிகர்கள், வந்துட்டேனு சொல்லு ஓவியா ஆர்மி என்று ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர். தற்போது அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி இசக்கிமுத்து (வயது28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2).
இசக்கிமுத்து நேற்று காலை தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்து கொண்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க வந்தார்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்களிடம் மனுக்கள் வாங்கும் கூட்ட அரங்கின் முன்பு குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். மனுக்கள் கொடுக்க வந்த ஏராளமானோரும் அங்கு நின்றனர்.
அந்த நேரத்தில் இசக்கிமுத்து பிளாஸ்டிக் கேனில் தான் தயாராக வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடலிலும் ஊற்றினார்.
அப்போது மண்எண்ணை வாடை அடித்ததால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இசக்கி முத்துவை தடுக்க ஓடி வந்தனர்.
ஆனால் அதற்குள் இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்து கொண்டு அனைவரது உடலிலும் தீவைத்தார். இதில் அவர்கள் 4 பேர் மீதும் தீப்பற்றி எரிந்தது.
அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். அவர்கள் மீது தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்களின் அருகில் யாரும் செல்ல முடியவில்லை. அங்கு நின்ற போலீசார் மண்ணை அள்ளி எரிந்து தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் சுருண்டு கீழே விழுந்தனர். உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்த அவர்கள் 4 பேரையும் போலீசார் மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.
தீக்காயம் அடைந்த 4 பேரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இசக்கிமுத்து தனது குடும்பத்துடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளித்தற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இலங்கைக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டிள்ளது.
நேற்று ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் சார்ஜாவில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.
எனினும், பாகிஸ்தான் வீரர்களின் பந்து வீச்சை 26.2 ஓவர்களுக்கு மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை வீரர்கள் 103 ஓட்டங்களை மட்டுமே பெற்ற நிலையில் சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர்.
இதனையடுத்து, 104 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்கு நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான், 20.2 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 105 ஓட்டங்களைக் குவித்து வெற்றியீ்ட்டியுள்ளது.
இதற்கமைய, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என கைப்பற்றி, 32 வருடங்களின் பின்னர், இலங்கை அணியை வயிற்வோஸ் செய்துள்ளது பாகிஸ்தான் அணி.
வவுனியா ஒமந்தை இறம்பைக்குளம் பகுதியில் இன்று (23.10.2017) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
A9 வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் ஒமந்தை இறம்பைக்குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்துடன் மோதுண்டு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒமந்தை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று மதியம் விசேட போசை வழிபாடு இடம்பெற்று மீண்டும் மாலையில் வசந்த மண்டப பூஜையின் பின்னர் முருகபெருமான் வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .
இரண்டு வருடங்களிற்கு முன்னர் ஹொக்கி விளையாட்டு ஒன்றிற்கான பயணத்தை மேற்கொண்ட போது ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இரண்டு வருடங்களிற்கு முன்னர் நிறுத்தப்பட்ட சிறுவன் அடம் அஹ்மட் தனது பெயரை தெளிவு படுத்தும் பொருட்டு நூற்றுகணக்கானவர்களுடன் பாராளுமன்றம் நோக்கி புறப்பட்டுள்ளான்.
கனடாவின் சர்ச்சைக்குரிய பயண தடை பட்டியலில் தவறான முறையில் சேர்க்கப்பட்டவர்களின் பெயர்களை அகற்றும் பொருட்டு அழைக்கப்பட்டவர்கள் மட்டும் அடங்கிய துணை கமிட்டி ஒன்றை வெள்ளிக்கிழமை பூட்டிய அறை ஒன்றில் சந்தித்துள்ளான்.
அடுத்த மாதம் அஹ்மட் மற்றும் அவனது பெற்றோர் ஒட்டாவா சென்று கீழ் சபையில் மனு ஒன்றை கையளிக்க உள்ளனர்.
அத்துடன் இவர்களிற்கு ஆதரவு அளிக்கும் சகல கூட்டாட்சி கட்சியை சேர்ந்த 150 பாராளுமன்ற அங்கத்தவர்களின் கடிதங்களையும் சமர்ப்பிக்க உள்ளனர்.
அடத்துடன் ஆரம்பித்த இந்த முயற்சி மிக பெரிய அளவை எட்டியுள்ளதென கூறப்படுகின்றது.
கனடா முழுவதும் நூற்றுக்கணக்கான பிள்ளைகள் மற்றும் ஆயிரக்கணக்கான வயதானவர்கள் பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
யாழ். சாவகச்சேரியில் குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்றைய தினம்(22.10) இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோபாலசிங்கம் ரவிச்சந்திரன்(வயது 52) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ். சாவகச்சேரி மகாத்மாகாந்தி வீதியில் வசித்து வந்த குறித்த குடும்பஸ்தர் சாவகச்சேரிச் சந்தையில் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இன்று முற்பகல் குறித்த குடும்பஸ்தர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சாவகச்சேரிப் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிரான்சில் படகு கவிழ்ந்த விபத்தில் பலியானதைத் தொடர்ந்து, அவரது புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனைச் சேர்ந்தவர் Jess Wilkes(27), இவருக்கு 7 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் இவர் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் முதலாளியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்கு கடந்த சனிக்கிழமை பிரான்ஸ் சென்றுள்ளார்.
அப்போது பிரான்சின் Avignon பகுதியில் உள்ள Rhone நதியில் படகில் சென்ற போது, எதிர்பாரவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் Jess Wilkes உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவருடன் பயணித்த நான்கு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் உயிரிழந்த Jess Wilkes-ன் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.