வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் ஐந்தாம் நாள் !(படங்கள்)

வவுனியா  ஸ்ரீ கந்தசுவாமி  கோவிலின் வருடாந்த  கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .

ஐந்தாம்    நாளான  நேற்று 24.10.2017   செவ்வாய்கிழமை   காலை முதல் ஆறுமுக  சுவாமிக்கு அபிசேகங்கள்  இடம்பெற்று  விசேட பூஜை  வழிபாடுகள் இடம்பெற்றன. தொடர்ந்து  தேர் திருப்பணிக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டது.

பிற்பகல் வேலையில் சூரன்போருக்கான  முன் ஆயத்தமான   சூரன் தளகாடும் நிகழ்வும்  கொட்டும் மழைக்கும்  மத்தியில் இடம்பெற்றது .

மாலையில்  வசந்த மண்டப  பூஜையின்  பின்  முருகபெருமான்  உள்வீதி வெளி வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

 

வவுனியாவில் இரு பேரூந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து : இருவர் படுகாயம்!!

 
வவுனியாவில் தாண்டிக்குளம் பகுதியில் இன்று (25.10.2017) காலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

வவுனியா தாண்டிக்குளம் இராணுவத்தினரின் உணவகத்திற்கு முன்பாக இன்று காலை 6.30 மணியளவில் மூன்று முறிப்பு பகுதியிலுள்ள ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாளர்களை எற்றி வந்த இரு பேருந்துகளும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் பேரூந்தில் பயணம் மேற்கொண்ட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் இருவர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆடைத் தொழிற்சாலைக்கு பணியாட்களை ஏற்றி வந்த இரு பேருந்தும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முற்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தினர்.

மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா உக்குளாங்குளம் பகுதியில் மாதா சிலை விசமிகளால் உடைப்பு!!

 
வவுனியா உக்குளாங்குளம் சிவன் ஆலயத்திற்கு செல்லும் பாதையில் அமைந்துள்ள மாதா சிலை நேற்று (23.10.2017) இரவு இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களாக ஆலயங்கள் , தேவாலயங்களின் சிலைகள் இனந்தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடும் மழை : வெள்ளத்தால் வர்த்தகர்கள் அவலம்!!

 
வவுனியா பேருந்து நிலையக் கடைத் தொகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தமையால் வர்த்தகர்கள் தமது பொருட்களை பாதுகாக்க முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் இன்று (24.10) பிற்பகல் பெய்த கடும் மழை காரணமாக பேருந்து நிலைய கடைத்தொகுதிக்குள் மழை நீர் உட்புகுந்துள்ளது.

வவுனியா பிரதான பேருந்து நிலையத்தில் காணப்படும் நகரசபைக்குச் சொந்தமான மாடிக்கட்டடத் தொகுதி ஒன்றில் காணப்படும் சேதம் காரணமாக அவற்றின் ஊடாக வரும் மழை நீரானது வர்த்தக நிலையங்களுக்குள் நேரடியாக செல்கின்றது.

இதன்காரணமாக வியாபாரம் செய்ய முடியாத நிலையில் வர்த்தகர்கள் உள்ளதுடன் தமது பொருட்களை பாதுகாக்க வேறு இடத்தை தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு 7 கடைகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளதோடு, குறித்த கட்டடத்திற்கு மாதாந்தம் 3,200 ரூபா வீதம் வவுனியா நகரசபையால் வாடகை அறவிடப்படுவதுடன் அப்பணம் உரிய காலப்பகுதிக்குள் செலுத்தாது காலம் தாழ்த்திச் செலுத்தினால் தண்டப்பணமும் அறவிடப்படுகின்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த கடைகளை மழைக் காலங்களில் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாக வர்த்தகர்கள் கவலை வெளியிட்டுள்னர்.

வவுனியா கோவில்குளம் சிவன் கோவிலின் கந்த சஷ்டி விரத நான்காம் நாள் !(படங்கள் )

வவுனியா  கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர்  திருக்கோவிலின்  வருடாந்த  கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .

நான்காம் நாளான  நேற்று  (23.10.2017)காலை முதல் அபிசேகங்கள் இடம்பெற்று மதியம்   விசேட பூசை   வழிபாடு இடம்பெற்று  மீண்டும்    மாலையில் வசந்த  மண்டப பூஜையின் பின்னர்   முருகபெருமான்  வீதி  வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .

 

????
????
????
????
????
????
????
????
????
????

வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கந்தசஷ்டி உற்சவம் நான்காம் நாள் !(படங்கள்)

வவுனியா  ஸ்ரீ கந்தசுவாமி  கோவிலின் வருடாந்த  கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .

நான்காம்   நாளான  நேற்று 23.10.2017  திங்கட்கிழமை  காலை முதல் ஆறுமுக  சுவாமிக்கு அபிசேகங்கள்  இடம்பெற்று  விசேட பூஜை  வழிபாடுகள் இடம்பெற்றன.

மாலையில்  வசந்த மண்டப  பூஜையின்  பின்  முருகபெருமான்  உள்வீதி வெளி வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.

 

வடகொரிய ராணுவத்தினரின் உண்மை முகம் அம்பலம் : வெளியான புகைப்படங்கள்!!

 
உலக நாடுகளை தமது அணு ஆயுத பலத்தால் அச்சுறுத்திவரும் வடகொரியா உண்மையில் தமது ராணுவத்தை கட்டுக்கோப்பில் வைத்துள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

வல்லரசு நாடுகளை தமது அணு ஆயுத பலத்தால் வடகொரிய தலைவர் கிம் ஜோங் வுன் அச்சுறுத்தி வருகிறார். இதனால் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் ஒப்புதலுடன் ஐக்கிய நாடுகள் மன்றம் வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

இந்த நிலையில் உலகின் சிறந்த ராணுவம் என வெளிக்காட்டிக்கொள்ளும் வடகொரிய ராணுவத்தினர் தொடர்பில் அதிர்ச்சிக்குள்ளாக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதில், ரோந்துப்பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினர் சாலை ஓரத்தில் தூங்கி ஓய்வெடுப்பதாகவும், பெண் ராணுவ வீரர் ஒருவர் குதிகால் செருப்புடன் பணியில் இருப்பதாகவும், மற்றொரு புகைப்படத்தில் 6 பேர் அமர்ந்து செல்லக் கூடிய வாகனத்தில் 14 பேர் பயணம் செய்வதாகவும் உள்ளது.

மேலும் தென் கொரிய எல்லையில் பணியில் இருக்கும் ராணுவத்தினர் எதிரி நாடு என்ற உணர்வே இன்றி இருப்பதாகவும் குறித்த புகைப்படங்களை எடுத்த கலைஞர் தெரிவித்துள்ளார்.

வடகொரியாவில் புகைப்படம் எடுக்க கடும் கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் மட்டுமே புகைப்படங்களை வெளியே கொண்டு செல்ல முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த புகைப்படங்களை ஆய்வுக்கு உட்படுத்திய ராணுவ நிபுணர்கள், வடகொரியாவின் ராணுவத்தினரின் நிலை கவலைக்கிடம் என ஒப்புக்கொண்டாலும், குறைத்து மதிப்பிடுவது தவறு எனவும், கிம் ஜோங் வுன் இதுபோன்ற ஒரு சில ராணுவ வீரர்களை நம்பி கண்டிப்பாக வல்லரசு நாடுகளை அச்சுறுத்தல் விடுக்கமாட்டார் எனவும் தெரிவித்துள்ளனர்.

தனியாக நடந்து சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை: பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!

இந்தியாவில் தனியாக நடந்து சென்ற பெண் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

கேரளாவின் கோழிக்கோட்டில் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அப்போது அவருக்கு முன்னால் சென்ற நபர் திடீரென்று அப்பெண்ணை மறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், துணிச்சலாக அந்த நபரை அடித்து உதைத்துள்ளார். இதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இது தொடர்பான தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குப்பையில் கிடப்பதை சாப்பிட்டேன் : சவுதிக்கு வேலைக்கு சென்ற பெண்ணின் சோகம்!!

சவுதிக்கு வேலைக்கு சென்ற கேரள பெண் ஒருவர் ஆறு மாத போராட்ட வாழ்க்கைக்கு பின்னர் தனது சொந்த ஊருக்கு பத்திரமாக திரும்பியுள்ளார்.

கேரளாவில் உள்ள பாலோடி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுஷா (38), இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.

மஞ்சுஷாவின் கணவர் கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இந்நிலையில் அங்குள்ள ஒரு கடையில் மாதம் ரூ.5000 சம்பளத்தில் மஞ்சுஷா வேலை செய்துவந்தார். அந்த பணம் குடும்ப செலவுக்கே போதாத நிலையில், தனது மகள்களின் வருங்கால வாழ்க்கையை கணக்கில் கொண்டு வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்து பணம் சம்பாதிக்க மஞ்சுஷா முடிவெடுத்தார்.

இந்நிலையில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த மணிலால் என்பவர் தான் சவுதியில் கார் ஓட்டுனராக வேலை செய்யும் வீட்டில் வீட்டு வேலைக்கு வருமாறு மஞ்சுஷாவை அழைத்துள்ளார்.

இதையடுத்து பலரிடம் கடன் வாங்கி மஞ்சுஷா சவுதி சென்றுள்ளார். அங்கு தான் அனுபவித்த பல்வேறு கொடுமைகளை பற்றி அங்கிருந்து தப்பி சொந்த ஊருக்கு தற்போது வந்துள்ள மஞ்சுஷாவே கூறுகிறார்.

சவுதிக்கு செல்ல ஆரம்பத்தில் பல தடைகள் வந்தது, எப்படியோ தனியார் ஏஜன்சி ஒன்றின் மூலம் சவுதி விமான நிலையத்துக்கு கடந்த மார்ச் 20ஆம் திகதி வந்தேன். அங்கு மணிலால் ஏற்கனவே நின்றிருந்த நிலையில் அந்நாட்டை சேர்ந்த ஒருவரின் காரில் இருவரும் ஏறினோம்.

கார் சென்று கொண்டிருந்த போது நடுவழியில் மணிலால் இறங்கிவிட்டார். அப்போது தான் அவர் வேலை செய்யும் இடத்தில் தனக்கு வேலை வாங்கி தருவதாக பொய் வாக்குறுதியை அளித்தார் என்பதை உணர்ந்தேன்.

என்னுடன் இருந்த இன்னொரு நபர் ஒரு பெரிய வீட்டுக்கு என்னை அழைத்து சென்றார். அங்கு 16 குழந்தைகள் உட்பட மொத்தம் 32 பேர் இருந்தார்கள்.

குழந்தைகளை பார்த்து கொள்வது, துணிகளை துவைப்பது, வீட்டு வேலைகள் அனைத்தையும் செய்வது என ஒருநாளுக்கு 20 மணி நேரம் வேலை செய்ய வைத்தார்கள்.

என் மகள்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு கஷ்டப்பட்டு உழைத்தேன். எனக்கு மாதம் 24,200 ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில், வேலைக்கு சேர்ந்த பின்னர் 20,800 ரூபாய் தான் கொடுப்பேன் என்றார்கள்.

சரி என சம்மதித்தேன். ஆனால் முதல் மாத சம்பளத்தை கொடுக்காமல் இரண்டாம் மாதத்தில் ரூ.17000 சம்பளத்தை மட்டுமே என் தந்தை வங்கி கணக்கில் செலுத்தினார்கள்.

அடுத்த இரண்டு மாதத்துக்கு சம்பளம் தராத நிலையில் வீட்டு உரிமையாளரிடம் சம்பளம் தரும்படி கெஞ்சினேன், அவர் குறைவாகவே கொடுத்தார். இப்படி தான் ஆறு மாதம் வேலை செய்தேன். வேலை செய்து கொண்டிருக்கும் போது திடீரென என்னை அடிப்பார்கள்.

பல சமயம் சாப்பிட உணவு தராமல் பட்டினி போடுவார்கள். அப்படிப்பட்ட நேரங்களில் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட்ட எச்சில் தட்டில் இருக்கும் மிச்ச உணவுகளையும், குப்பை தொட்டியில் இருக்கும் உணவுகளை சாப்பிடுவேன்.

எப்படியாவது சொந்த ஊருக்கு உயிரோடு சென்றுவிட வேண்டும் என்பதற்காகவே இப்படி செய்தேன். இரண்டு முறை அங்கிருந்து தப்பிக்க முயன்று மாட்டி கொண்டேன். அவர்கள் என்னை கொடுமையாக அடித்தார்கள்.

எப்படியோ மூன்றாம் முறை தப்பித்து அங்கிருந்த இந்தியர்களுக்காக வேலை செய்யும் என்.ஜி.ஓ-விடம் அடைக்கலம் பெற்றேன். பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுத்து எப்படியே கடந்த 12 ஆம் திகதி சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தேன் என கூறியுள்ளார்.

சவுதிக்கு செல்வதற்காக பலரிடம் அதிகளவில் கடன் வாங்கியுள்ள மஞ்சுஷா அதை எப்படியாவது திருப்பி தர வேண்டும் என முயன்று வருகிறார்.

சவுதிக்குச் சென்றதில் அதிக கடன் ஏற்பட்டதோடு, உடலும், மனமும் காயமடைந்துள்ளது தான் மிச்சம் என மஞ்சுஷா வேதனையுடன் கூறுகிறார்.

பல வருட தேடலின் பின்னர் இலங்கையில் கிடைத்த தாய் : மகிழ்ச்சியில் பிரித்தானிய யுவதி!!

இலங்கையில் பல வருடங்களின் தேடுதலின் பின்னர் தனது தாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய யுவதி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை தன்னை பெற்ற தாயை கம்பஹா பிரதேசத்தில் கண்டுபிடித்ததாக பிரித்தானியாவில் பிரபலமான நிரோஷிகா எசேசன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரபல ஊடகம் ஒன்றின் உதவியின் மூலம் தாய் கண்டுபிடிக்கப்பட்டதாக ஹிருஷிகா தெரிவித்துள்ளார்.

தான் இரட்டை பிள்ளைகளின் ஒருவர் எனவும், மற்றைய சகோதரியை தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தாய் மற்றும் சகோதரியை சந்திப்பதற்கு அடுத்த மாதத்தின் நடுப்பகுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக நிரோஷிகா தெரிவித்துள்ளார். இலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே நிரோஷிகா இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானியாவில் பிரபலமான பெண்களில் நிரோஷிகா எசேசனும் ஒருவராக உள்ளார். பிரித்தானிய தொழில்நுட்ப துறையில் பலமான 35 பெண்களில் ஒருவராக நிரோஷிகா காணப்படுகிறார். பிரித்தானியாவில் இணையம் ஊடாக வாக்களிக்கும் முறையை தயாரித்தமை உட்பட விசேட பல விடயங்களில் நிரோஷிகாவின் பங்களிப்பும் உண்டு.

உலக பொருளாதார மாநாட்டில் உரையாற்றியுள்ளார். தற்போது உலக இளைஞர் மாநாட்டில் நிரோஷிகா இணைந்துள்ளார்.

தனது தொழில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள நிரோஷிகா, தாயை தேடி வந்த நிலையில், தற்போது கண்டுபித்துள்ளார்.

நிரோஷிகா சிறுவயதில் வெளிநாட்டு தம்பதியினருக்கு தத்துக் கொடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பசி தாங்காது சத்தியெடுத்த பாடசாலை மாணவிக்கு நேர்ந்த கொடுமை : விசாரணைகள் தீவிரம்!!

பசி தாங்காமல் சத்தியெடுத்த மாணவி கர்ப்பிணியாக இருப்பதாக குற்றம் சாட்டி பாடசாலையிலிருந்து விலக்கிய சம்பவம் குறித்த பல்வேறு தரப்புகளில் விசாரணைகள் தீவிரமடைந்துள்ளன.

தம்புள்ளை நகரின் அருகே அமைந்துள்ள மடாட்டுகம சிறுநகரத்தின் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியொருவர் காலை உணவு இன்றி பாடசாலைக்கு வந்திருந்தார்.

எனினும் பசி தாங்காமல் சற்று நேரத்தில் அவர் சத்தியெடுக்க, குறித்த மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து பாடசாலை அதிபர் உடனடியாக மாணவியின் கல்வியை இடைநிறுத்தியிருந்தார்.

இந்தச் சம்பவம் கடந்த வாரம் இடம்பெற்றிருந்தது. சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மாணவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

கல்வி அமைச்சின் அதிகாரிகள் இந்த சம்பவம் நடந்த இரண்டொரு நாட்களிலேயே விசாரணைகளை ஆரம்பித்திருந்ததுடன், பொலிஸாரும் இது தொடர்பான விசாரணைகளில் களமிறங்கியிருந்தனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான பத்திரிகைச் செய்திகளின் அடிப்படையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

பல்வேறு தரப்பிலிருந்தும் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் காரணமாக தவறிழைத்த அதிபர் தற்போது பதறிப் போன நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தாரிடம் சமரசம் பேசிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறந்த மெய்ப்பாதுகாவலரின் வீட்டை தேடிச் சென்ற நீதிபதி இளஞ்செழியன்!!

நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் 90ஆவது நாள் நேற்று கிரியைகள் இடம்பெற்றுள்ளன.

குறித்த கிரியைகளுக்கான பௌத்தமத அனுஷ்டானங்கள் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இதில் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனும் கலந்து கொண்டிருந்தார்.

நீதிபதி இளஞ்செழியனின் 17 வருட மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டு வந்த பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திரவின் குடும்பத்திற்கு தொடர்ந்தும் நீதிபதி இளஞ்செழியன் உதவிகளை செய்து வருகின்றார்.

இந்த நிலையில் 90ஆம் நாள் கிரியையிலும் தவறாது கலந்து கொண்டுள்ளமையானது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து நல்லூர் பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த 57 வயதான பொலிஸ் சார்ஜன்ட் ஹேமச்சந்திர அதிதீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

வவுனியா வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை 6 சந்தேகநபர்கள் கைது!!

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் மற்றும் அச்சுறுத்தல் விளைவித்தமை தொடர்பில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஆறு பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பண்டாரிகுளம் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள் இலக்கத்தகடுகளை துணியால் மறைத்துவிட்டு வீதியில் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர்.

இதன்போது வியாபார நிலையம் ஒன்றையும் சேதப்படுத்தியிருந்த நிலையில், சம்பவத்தில் இருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இதுவரை சந்தேகத்தின் அடிப்படையில் ஆறுபேரை கைது செய்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தனுஷ் மீது மீண்டும் முறைப்பாடு!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூரை அடுத்த எம்.மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் எங்களுடைய மகன் தான் என்றும், வயதாகிவிட்ட எங்களுக்கு அவர் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும் என்றும் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால் இந்த வழக்கில் உண்மை இல்லை, எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை மேல் நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு பதில் மனு தாக்கல் செய்த கதிரேசன், நடிகர் தனுஷ் எனது மகன்தான் என்று நிரூபிக்க போதிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று கூறியிருந்தார்.

மேலும் எனது மகன் கலைச்செல்வன் தான் தற்போது தனுஷ் என்று பெயரை மாற்றி சினிமாவில் நடித்து வருகிறார் என்றும் அவனது பள்ளிச் சான்றிதழ், குடும்ப அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மேல்நீதிமன்றத்தில் கதிரேசன் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை இரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் தரப்பு சார்பில் மதுரை மேல்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்க்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து தனுஷ் அவரது அடையாளங்களை தாக்கல் செய்திருந்தார், இந்த வழக்கின் தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் புகார் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தனுஷ் தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தற்போது கதிரேசன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி!!

 
வவுனியா பொது நூலகத்தில் நேற்று (23.10) மாலை 3.30 மணியளவில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டிகள் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பொது நூலகத்தின் பிரதம நூலகர் திருமதி பாமினி உருச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற சிறுவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டியில் 4வயதிலிருந்து 8வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர்.

தேசிய வாசிப்பு மாதம் 2017 ஆம் ஆண்டிற்கான வவுனியா பொது நூலக வாசகர்களிடையே வசிப்பு பழக்கத்தினை ஊக்குவிக்கும் முகமாக சிறுவர்களுக்கான நிறந்தீட்டல் இடம்பெற்றுள்ளது.

இதில் 15ற்கும் மேற்பட்ட சிறுவர்கள் கலந்துகொண்டு வர்ணம் தீட்டும் போட்டியில் கலந்துகொண்டனர்.

நெதர்லாந்தில் உலகின் முதல் 3D பாலம் திறப்பு!!

 
நெதர்லாந்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் ஒன்று உருவாக்கப்பட்டு, ஸ்மார்ட் என்ற இடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

3D பிரிண்டிங் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நிறைய பொருட்கள் உருவாக்கப்படுகின்றன. எந்திரக்கைகள், மருத்துவப் பயன்பாடுகளுக்கான உபகரணங்கள் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது நெதர்லாந்தில் 3D பிரிண்டிங் தொழில்நுட்பம் மூலம் பாலம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் நீளம் மொத்தம் 8 மீட்டர் ஆகும். இது 800 அடுக்குகளால் ஆன பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் 40 லொறிகளை ஒரே நேரத்தில் தாங்கும் அளவு வலிமை வாய்ந்தது.

கொன்கிரீட் பாலத்தைப் போலவே இதன் வாழ்நாள் அதிகம். இந்த பாலத்தை உருவாக்க 3 மாதங்கள் பிடித்துள்ளது. சாதாரண பாலத்தை உருவாக்கும் செலவில் பாதிதான் இதற்கு செலவானதாகக் கூறப்பட்டுள்ளது.