நிரந்தர தீர்வை வேகமாக வழங்குவது கடினம்! ஜனாதிபதி ..

நல்லிணக்கத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கு சில இனவாத குழுக்கள், குறுகிய கால தீர்வுகள் மூலமான வேகமான பயணத்தை எதிர்பார்த்தாலும், நிரந்தர தீர்வினை பெற்றுக் கொடுப்பதை வேகமாக செய்ய முடியாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72 பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான யோசனைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த இரண்டரை வருட காலப் பகுதியில் நாட்டில் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், ஜனநாயகத்தை உறுதிசெய்யவும் தேவையான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்பன தற்போது எழுச்சி பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், 2015ம் ஆண்டு ஜனாதிபதியாக தான் பதவியேற்கு முன்னர் வரை, உலகில் எந்தவொரு நாட்டிலும் எந்தவொரு தலைவருக்கும் இல்லாத வரம்பற்ற அதிகாரங்கள் இலங்கை ஜனாதிபதிக்கு காணப்பட்டதாகவும் மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கை மக்களை உலகின் மகிழ்ச்சிகரமானவர்களாகவும், ஒரே நாட்டில் வாழ்பவர்களாகவும் ஆக்குவதே தனது இலக்கு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை நேரப்பட்டி இன்று அதிகாலை 04.30 அளவில் அவரது உரை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழில் மாவா போதைப் பொருளுடன் மாணவன் கைது!

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வசம் இருந்து போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

கஞ்சா கலந்த மாவா எனப்படும் போதைப் பொருள் பக்கற்றுக்கள் நான்கு இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதோடு, குறித்த மாணவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மானிப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சந்தேகநபரை யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மின்சார சபை ஊழியர்களுக்கு இறுதி எச்சரிக்கை !

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மின்சார சபை ஊழியர்கள் அனைவரும் நாளை நண்பகல் 12 மணிக்கு முன்னர் சேவைக்கு சமுகமளிக்குமாறு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.

குறித்த இறுதி எச்சரிக்கை உத்தரவை மின்சக்தி அமைச்சு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் வைத்தியசாலையில்!!

 
வவுனியா மரக்காரம்பளை வீதி காத்தான் கோட்டம் சந்திக்கு அருகே இன்று (19.09.2017) இரவு 7.20 மணியளவில் இடம்பெற்ற முச்சகரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மரக்காரம்பளை வீதியூடாக வவுனியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மீது காத்தான் கோட்டம் சந்திக்கு அருகே குழுமாட்டுச்சந்தியிலிருந்து கணேசபுரம் நோக்கி பயணித்த முச்சகரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டியில் சாரதி மதுபோதையில் உள்ளமையினால் முச்சகரவண்டியின் சாரதியினை நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

வவுனியா பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

 
வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையத்தில் இன்று (19.09.2017) காலை 11 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உட பொலிஸ் பரிசோதர்களான சுபசிங்க, டினேஸ் ஆகியோர்களின் தலைமையில் பொலிஸ் கொஸ்தாபர்களான அருண (43210) , கேரத் (40117) , பண்டார (14957) , சமரதுங்க (52389) , சரங்க (60249) , குமார (66701) ஆகியோரின் உதவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேரூந்தில் இரண்டு கிலோ கேரளா கஞ்சாவினை அனுராதபுரத்திற்கு கடந்த முயன்ற 34வயதுடைய நபரை வவுனியா இ.போ.ச பேரூந்து நிலையில் வைத்து இன்று (19.09.2017) காலை 11 மணியளவில் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளைய தினம் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியாவிற்குள் கஞ்சா கடத்த முற்பட்ட நபர் கைது!!

வவுனியா பாரதிபுரம் பகுதியில் நேற்று (18.09) மாலை 4.30 மணியளவில் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த நபரை வவுனியா நெளுக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சாம்பல்தோட்டம் பகுதியிலிருந்து பாரதிபுரம் நோக்கி பயணித்த நபரிடம் கடமையிலிருந்த பொலிசார் சோதனையிட்ட போது உடமையுடன் மறைத்து வைத்திருந்த கேரளா கஞ்சா பொதியினை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபர் 34 வயதுடையவர் எனவும் எங்கிருந்து இவர் கஞ்சாவினை பெற்றுக்கொண்டார் என்ற அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா பொலிஸ் நிலையத்தினுடாக வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கவுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சென்னை விமான நிலைய தரையில் படுத்த டோனி : வைரலாகும் புகைப்படம்!!

 
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் மற்ற வீரர்கள் எல்லோரும் அமர்ந்திருக்க டோனி அப்படியே கீழே படுத்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.

கொல்கத்தாவில் நடைபெற உள்ள 2வது ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்திய அணி நேற்று சென்னை விமான நிலையத்திற்கு சென்றுள்ளது.

அப்போது விமான நிலையத்தின் காத்திருப்பு பகுதியில் எஞ்சிய வீரர்கள் அனைவரும் அமர்ந்திருக்க டோனி அப்படியே கீழே படுத்துவிட்டார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற இந்திய வீரர்கள் இப்படித்தான் ரிலாக்ஸ் செய்கிறார்கள் என்று சொல்கிறது படத்துக்கான தலைப்பு.

குறட்டை விடுவதை தடுக்கும் புதிய கருவி கண்டுபிடிப்பு : நோபல் பரிசு வழங்க முடிவு!!

குறட்டை விடுவதை தடுக்கும் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்த சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் மகத்தான சாதனை படைத்த நபர்களுக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்குவது வழக்கம்.

இதே போல், மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் சாதனைகளை செய்யும் நபர்களுக்கு Ig Nobel என்ற விருது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் குறட்டை விடுவதை தடுக்கும் கருவியை கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஐ.ஜி நோபல் விருது வழங்கப்பட்டது.

விருதை வாங்கிய குழுவில் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த Milo Puhan என்பவரும் இடம்பெற்றுள்ளார். குறட்டை விடுவதை தடுக்க பெரிய அளவிலான புல்லாங்குழல் போன்ற ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கருவியை இசைப்பதன் மூலம் குறட்டையை தடுக்க முடியும் என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்புல்லாங்குழலை அவுஸ்ரேலியாவில் didgeridoo என அழைக்கின்றனர். கடந்த 2005-ம் ஆண்டு முதல் இக்கருவி மூலம் குறட்டையை தடுக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில் 25 பேர் உட்படுத்தப்பட்டனர். இவர்களில் பாதி பேர் இக்கருவியை தொடர்ந்து இசைத்து வந்துள்ளனர்.
எஞ்சியவர்கள் கருவியை பயன்படுத்தவில்லை. ஆய்விற்கு பின்னர், கருவியை வாசித்த நபர்களுக்கு குறட்டை விடுவது தடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மனிதர்களுக்கு குறட்டை வருவதற்கு முக்கிய காரணமாக வாயின் உட்புறமாக உள்ள மேல் தசை அமைந்துள்ளது. இந்த தசை மென்மையாக உள்ளதால் எளிதில் குறட்டை உருவாகிறது.

ஆனால் மேலே கூறிய கருவியை தொடர்ந்து இசைப்பதால் வாயில் உள்ள மேல் தசை இறுக்கமாக வலிமை அடைவதால் குறட்டை உருவாவது தடுக்கப்படுகிறது என்பது இந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுவோம் : மிரட்டல் விடும் அமெரிக்கா!!

வடகொரியாவை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுவோம் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

அதுமட்டுமின்றி வடகொரியாவின் இந்த செயல்களை ஒடுக்கும் வகையில் அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அதையும் மீறி வடகொரியா சமீபத்தில் ஜப்பானை நோக்கி ஏவுகணை சோதனை ஒன்றை மேற்கொண்டது. இதையடுத்து அமெரிக்காவை சம்பலாக்கிவிடுவோம் என்று வடகொரியா எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் வடகொரியாவின் இந்த அச்சுறுத்தல்களை அமெரிக்கா சமாளிக்க முடியும் என்று டிரம்ப் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இன்று மீண்டும் அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியா தனது செயல்களை நிறுத்திக்கொள்ளாவிடில் அந்நாட்டையே அழித்துவிடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளது.

பிஞ்சுக் குழந்தையை வீட்டில் தனியாக அடைத்துக் கொன்ற தாய்!!

ரஷ்யாவில் பெற்ற தாய் 9 மாத குழந்தையை ஒரு வாரம் வீட்டில் தனியாக அடைத்து கொன்றுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது. Rostov பகுதியை சேர்ந்த 17 வயதான Viktoria Kuznetsova என்ற பெண்ணே இவ்வாறு தனது குழந்தையை கொன்றுள்ளார்.

கணவர் ரஷ்யா இராணுவத்தில் சேவை செய்து வரும் நிலையில், தனது குழந்தை Egor உடன் Viktoria Kuznetsova வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நண்பர்களுடன் ஒரு வாரம் பார்ட்டிக்கு சென்ற Viktoria Kuznetsova, குழந்தையை தனியாக வீட்டில் அடைத்து விட்டு சென்றுள்ளார். நண்பர்கள் குழந்தையை குறித்து கேட்ட போது உறவினரிடம் குழந்தையை விட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு வாரமாக Viktoria Kuznetsova வீட்டில் இல்லாததை அறிந்த அண்டை வீட்டுகாரர்கள் பொலிசில் தகவல் அளித்துள்ளனர். சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் வீட்டில் உயிரிழந்த கிடந்த குழந்தையின் உடலை கண்டெடுத்துள்ளனர்.

இதனையடுத்து, குழந்தையின் தாய் Viktoria Kuznetsova வை கைது செய்த பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையில் குழந்தையை கவனித்துக் கொள்ள தான் விரும்பவில்லை என Viktoria Kuznetsova தெரிவித்துள்ளார்.

குழந்தையை கொன்ற Viktoria Kuznetsovaவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பிரான்சில் அமெரிக்க மாணவிகளுக்கு நேர்ந்த பரிதாபம்!!

பிரான்சில் உள்ள ரயில் நிலையத்தில் அமெரிக்க கல்லூரி மாணவிகள் மீது பெண் ஒருவர் அசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சின் மார்ஸிலீஸில் உள்ள இரயில் நிலையத்தில் மர்ம பெண் ஒருவர், நான்கு கல்லூரி மாணவிகள் மீது அசிட் வீசியுள்ளார்.

இதில் நான்கு மாணவிகளும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் இரண்டு பேருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அறிந்து உடனடியாக விரைந்து வந்த பொலிசார், அசிட் வீசிய மர்ம பெண்ணை உடனடியாக கைது செய்துள்ளதாகவும், அப்பெண்ணின் வயது 41 எனவும் அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஒரு தீவிரவாத தாக்குதல் கிடையாது எனவும் பாதிப்புக்குள்ளான நான்கு பெண்களும் பரீசில் தங்கிப் படித்து வருவதாகவும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிச்சைகாரனை காதலித்து திருமணம் செய்த பாலியல் தொழிலாளி!!

பாலியல் தொழிலாளிகளாக இருக்கும் பெண்களுக்கு வாழ்நாள் முழுவதும் சித்ரவதைதான். ஆசைப்பட்டு ஒன்றும் அந்த தொழிலில் யாரும் இருந்துவிடுவதில்லை, என்றாவது ஒருநாள் நாம் இந்த தொழிலில் இருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கையில் தான் பாலியல் தொழிலாளிகள் இருக்கிறார்கள்.

அப்படி, ஒரு நம்பிக்கையில் இருந்த பேகம் என்ற பாலியல் தொழிலாளி பிச்சைக்காரர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். அந்த கதை இதோ,

என்னுடைய வயதோ, என்னுடைய பெற்றோர் யார் என்று எனக்கு தெரியாது. நான் தெருக்களில் எனது வாழ்க்கையை கழித்தேன். பல்வேறு நபர்கள் என்னை பலாத்காரம் செய்ய முயன்றபோது அவர்களிடம் இருந்து தப்பித்துள்ளேன். வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தேன், அந்த தொழிலில் இருந்து வெளியே வந்தால் யாரும் எனக்கு உதவி செய்யமாட்டார்கள் என எனக்கு தெரியும்.

இருந்தபோதிலும் ஒரு நாள் மாலைப்பொழுதில் அங்கிருந்து வெளியேறினேன். அப்போது நன்றாக மழை பெய்துகொண்டிருந்தது, மழைக்காக ஒரு மரத்தடியில் ஒதுங்கினேன். அப்போது அந்த மரத்தின் மற்றொரு பக்கத்தில் பிச்சைக்காரர் ஒருவர் தனது நாற்காலியில் அமர்ந்துகொண்டிருந்துள்ளார்.

அவர் இருப்பதை நான் கவனிக்கவில்லை, மழை சற்று நின்றுவிடுவதுபோன்று இருந்தது, மழை நின்ற பின்னர் நாம் எங்கு செல்வது என்று நினைக்கையில் எனக்கு அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது.

அப்போது, அந்த பிச்சைகாரர் தனது நாற்காலியை சத்தமாக இயக்கினார், அந்த சத்தம் கேட்டு அவரை நான் திரும்பிபார்த்தேன், அவரும் அழுதுகொண்டிருந்த என்னை பார்த்தார். அவரிடம் என்னிடம் பணம் எதுவும் இல்லை என கூறினேன், உடனே அவர் தன்னிடம் இருந்த 50 ரூபாயை எடுத்து எனது கையில் கொடுத்து விட்டு, இடி பயங்கரமாக இருக்கிறது, பாதுகாப்பாக இரு என்று சொல்லிவிட்டு தனது நாற்காலியை அழுத்திக்கொண்டு தூரல் மழையில் மெதுவாக சென்றார்.

முதல் முறையாக ஒரு ஆண் மகன் என்னை பயன்படுத்திக்கொள்ளாமல் எனக்கு பணம் கொடுத்து சென்ற தருணம் அது. அக்கணமே அந்த பிச்சைகாரரின் மேல் எனக்குள் ஒருவித மதிப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர், சில நாட்களுக்கு பின்னர் அந்த பிச்சைகாரர் அதே மரத்தடியில் இருப்பதை பார்த்தேன், அப்போது அவரிடம் சென்றுபேசிய போது அவர் தனது வாழ்க்கை கதையை என்னிடம் கூறினார். நான் ஊனமுற்றவன் என்பதால் எனது மனைவி என்னை விட்டு சென்றுவிட்டாள். வயிற்றுபிழைப்புக்காக பிச்சை எடுத்து பிழைக்கிறேன் என கூறினார்.

அவரின் கதையை கேட்ட எனக்கு வேதனையாக இருந்தது, அவர் மீது இருந்த மரியாதை காதலாக மாறியது. நான் உங்களை காதலிக்கிறேன், உங்களுடைய சற்கர நாற்காலியை வாழ்நாள் முழுவதும் தள்ளுவதற்கு தயாராக இருக்கிறேன் என தெரிவித்தேன், அதை கேட்ட அவர் சிரித்தார்.

எங்கள் இருவருக்கும் திருமணமாகி 4 வருடங்கள் ஆகிவிட்டது, ஒருவேளை சாப்பிட்டிற்கே நாம் கஷ்டப்பட்ட காலம் உண்டு. அப்படி உணவு கிடைத்தால் இருவரும் பகிர்ந்து சாப்பிடுவோம்.பழைய நாட்களை மறந்து இனிமையாக இருவரும் வாழ்ந்து வருகிறார்கள்.

லண்டன் பார்க்கில் கைவிடப்பட்ட குழந்தை : புகைப்படத்தை வெளியிட்ட பொலிசார்!!

லண்டனில் உள்ள பார்க்கில் பிறந்த குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் பொலிசார் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, அக்குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு தாயாருக்கு பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Plaistow பகுதியில் அமைந்துள்ள பார்க் ஒன்றில் கடந்த 17ஆம் திகதி காலை 8 மணி அளவில் உள்ளூர் நேரப்படி பொலிசாருக்கு, இங்கு குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடந்து அப்பகுதிக்கு அம்புலன்சுடன் வந்த பொலிசார், குழந்தையை பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஹரி என்று கூறப்படும் அக்குழந்தை தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டுள்ள பொலிசார், குழந்தையின் தாயாருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

அதில் குழந்தைக்கு பத்திரமாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கபப்ட்டு வருகிறது. குழந்தைக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, நன்றாக இருக்கிறான். அதனால் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், உங்களுக்காக உங்கள் குழந்தை காத்துக் கொண்டிருக்கிறான், தயவு செய்து வாருங்கள் எனவும் குழந்தை தாய் தொடர்பான தகவல் பொதுமக்கள் யாரேனுக்கும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேம்பாலத்தில் நடந்த கார் ரேஸ் : தலை துண்டான பரிதாபம்!!

இந்தியாவில் பாடசாலை மாணவர்களுக்கிடையே நடந்த கார் ரேஸ் போட்டியில், பாடசாலை மாணவனின் தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் ஐடி ஊழியர்களின் மகன்கள் இருவர்கள் அடிக்கடி கார் ரேஸ் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அவர்கள், இரவு நேரத்தில், தங்கள் தந்தையின் கார்களை எடுத்துக்கொண்டு, தொழிலதிபர் ஒருவரின் மகனையும் சேர்த்துக் கொண்டு மேம்பாலங்களில் ரேஸ்களில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து கடந்த ஞாயிறு அன்று மூவரும் வழக்கம் போல் நள்ளிரவு ஒரு மணிக்கு பெங்களூர் ஒசூர் மேம்பாலத்தில் கார் ரேஸ் நடத்தியுள்ளனர்.

அப்போது, போட்டியில் யார் முதலில் வருவது என்ற போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் மூவரும் 140 கி.மீற்றர் வேகத்தில் அதிவேகமாக காரை ஓட்டி சென்றுள்ளனர். கார் பாலத்தில் இறங்கும் போது, மூன்று கார்களும் ஒன்றோடு ஒன்று உரசியதால், கட்டுப்பாட்டை இழந்த ஸ்கோடா கார், பாலத்தின் தடுப்பில் மோதி கவிழந்தது.

இதில் காரை ஓட்டி வந்த மாணவனின் தலை துண்டானதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், மற்றொரு கார், எதிரே வந்த லொறியில் மோதியதில் மினி லொறி கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக , அந்த காரை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் லொறி டிரைவர் உயிர் தப்பியுள்ளார்.

மகளை கொன்று விட்டு தாயும் தற்கொலை : உருக்கமான கடிதம் சிக்கியது!!

மகளுக்கு விஷ ஊசி செலுத்தி அவர் உயிரிழந்த நிலையில், தாயும் விஷ ஊசி செலுத்தி கொண்டு உயிரை விட்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி நகரை சேர்ந்தவர் ராம்பால் சிங், இவர் மனைவி பரம்ஜித் கவுர் (38), இவர்களுக்கு சுக்மந்தீப் கவுர் (12) என்ற மகள் உள்ளார்.

பரம்ஜித் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். கடந்த சனிக்கிழமையன்று கணவரை சில பொருட்கள் வாங்கி வருமாறு மார்க்கெட்டுக்கு பரம்ஜித் அனுப்பியுள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த விஷ ஊசியை எடுத்து மகளுக்கு செலுத்தி விட்டு தன்னுடைய உடலிலும் பரம்ஜித் செலுத்தி கொண்டுள்ளார்.

அப்போது அவர் வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர் தாயும், மகளும் தரையில் விழுந்து கிடப்பதை பார்த்து ராம்பால் சிங்குக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர் வந்து மனைவி, மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

இதுகுறித்து பொலிசார் விசாரிக்கையில், பரம்ஜித் எழுதிய இரண்டு கடிதங்கள் அவர் வீட்டில் சிக்கியது. அதில், எங்கள் மரணத்துக்கு யாரும் காரணமில்லை, வீட்டு சூழ்நிலையால் நான் மிகுந்த மனவருத்தத்தில் உள்ளேன் என எழுதப்பட்டிருந்தது.

வீட்டில் அடிக்கடி நடக்கும் தகராறு காரணமாக பரம்ஜித் மன அழுத்தத்தில் இருந்ததாக அவர் உறவினர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து, அந்த கடிதங்கள் உண்மையிலேயே பரம்ஜித் கையால் எழுதப்பட்டது தானா என பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஒன்பது வயது சிறுமியின் உயிரைக்காவு கொண்ட காய்ச்சல்!!

மட்டக்களப்பு – சந்திவெளி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் காலை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இந்த சிறுமி சந்திவெளி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

எனினும் காய்ச்சல் தொடர்ந்த நிலையில் நேற்றைய தினம் மதியம் 1.30 மணியளவில் மீண்டும் சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் சிறுமி உயிரிழந்துள்ளார். கிதுசா (வயது 9) என்ற சிறுமியே இவ்வாறு காய்ச்சால் உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் தாய் தற்போது சவுதி அரேபியாவில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகின்ற நிலையில் பாட்டியின் பராமரிப்பிலேயே வளர்ந்துள்ளார்.

மேலும், சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.