இயற்கையின் அதிசயம் : சீனாவில் கல் முட்டையிடும் குன்று!!

 
சீனாவில் உள்ள குன்று ஒன்றை ‘முட்டையிடும் மலை’ என மக்கள் அழைக்கின்றார்கள்.

சீனாவின் கைஸொவ் மாகாணத்தில் உள்ள சான் டா யா குன்றில் 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகள் வெளிவருவதாகக் கூறப்படுகிறது.

9 அடி உயரமும் 65 அடி நீளமும் கொண்ட சமதளமற்ற குன்றில் டசன் கணக்கில் கோள வடிவ முட்டைகள் வெவ்வேறு அளவுகளில் உருவாகியிருக்கின்றன.

குன்றுக்கு அருகில் இருக்கும் குலு கிராமத்தைச் சேர்ந்த மக்கள், இந்த மலை நன்றாக சாப்பிட்டு, 30 ஆண்டுகளுக்கு ஒருமுறை கல் முட்டைகளை இடுவதாகச் சொல்கிறார்கள்.

இந்த விசித்திரமான முட்டை இடும் மலையை ஆய்வு செய்வதற்குப் புவியியலாளர்கள் மிகவும் சிரமப்படவேண்டியிருக்கிறது.

நகரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து, ஒதுக்குப்புறமான குன்றை அடைய வேண்டும். குன்று கடினமான பாறைகளால் ஆனது. முட்டைகள் சுண்ணாம்புப் பாறைகளால் ஆனவை. எல்லா முட்டைகளும் ஒரே விதமான பாறையால் உருவாகவில்லை. இதுவரை இந்தக் குன்றிலிருந்து ஏன் முட்டை வடிவப் பாறைகள் உருவாகின்றன என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

இன்னும் சில கோடி ஆண்டுகளுக்குப் பிறகு கல் முட்டைகள் எப்படி உருவாகின்றன என்று தெரியவரலாம் என்கிறார்கள்.

பல தலைமுறைகளாக இந்தக் குன்று முட்டைகளை இடுவது குறித்து குலு கிராம மக்கள் அறிந்து வைத்திருக்கின்றனர்.

அவர்கள் அடிக்கடி குன்றுக்கு வந்து, முட்டைகளைத் தொட்டு வணங்குகிறார்கள். ‘கடவுள் முட்டைகள்’ என்றும் ’அதிர்ஷ்டம் தரும் முட்டைகள்’ என்றும் மக்கள் நம்புகின்றார்கள்.

கிராமத்தில் வசிக்கும் 125 குடும்பங்களும் குறைந்தது ஒரு கல் முட்டையையாவது வைத்திருக்கின்றன. மற்ற கிராமங்களில் இருந்தும் முட்டைகளை எடுத்துச் செல்கிறார்கள். சமீபத்தில் இந்தக் குன்று பிரபல சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது.

விறகு வெட்டச் சென்ற பெண் பரிதாபமாக பலி!!

டயகம வெஸ்ட் இரண்டாம் பிரிவு தோட்டத்தில் விறகு வெட்டச் சென்ற பெண் ஒருவர் மரம் முறிந்து விழுந்ததில் பரிதாபமாக ஸ்தலத்திலே​யே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று (20.09) மாலை 06.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு மரணித்தவர் நான்கு பிள்ளைகளின் தாயான 56 வயதுடைய மயில்வாகனம் இந்திராணி என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் டயகம பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புறக்கோட்டையில் பாரிய தீ விபத்து : 16 கடைகளில் தீப் பரவல்!!

கொழும்பு புறக்கோட்டையின் இரண்டாவது குறுக்கு தெருவிலுள்ள விற்பனை நிலைய கட்டடத்தொகுதி ஒன்றில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீப்பரவல் காரணமாக 16 விற்பனை நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீப் பரவலுக்கான காரணத்தை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீப் பரவலுக்கான காரணத்தை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

யாழ். பொலிஸாரைக் கண்டதும் சிறுமியைக் கைவிட்டுக் காதலன் தப்பியோட்டம்!!

யாழ் பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் பொலிஸாரைக் கண்டதும் காதலியைக் கைவிட்டு காதலன் தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் காலை முதல் தமது பிள்ளையைக் காணவில்லை என பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவு முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டிருந்தது.

குறித்த 14 வயதுடைய சிறுமி 19 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காதலிப்பதாகவும் குறித்த இருவரும் கற்கோவளம் பகுதியில் தங்கியிருப்பதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து நேற்று காலை குறித்த பகுதிக்குப் பொலிஸார் சென்றுள்ளனர். வீடொன்றில் தங்கியிருந்த இளைஞன் பொலிஸாரைக் கண்டதும் சிறுமியைக் கைவிட்டுத் தப்பியோடியுள்ளார். சிறுமியைப் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்ற பொலிஸார் இளைஞனைத் தேடி வந்துள்ளனர்.

இன் நிலையில் இளைஞன் இன்று முன்தினம் பிற்பகல் பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டைக் குழந்தைகள் விஷம் வைத்து கொலை : தந்தை செய்த கொடூரம்!!

 
தமிழகத்தில் இரட்டை குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரை அடுத்த சூலூர் காடம்பாடியை சேர்ந்தவர் வீரபத்திரன்(வயது 26), இவரது மனைவி பாண்டியராணி. இவர்களுக்கு இரண்டரை வயதில் ராமன், லட்சுமணன் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

வீரபத்திரனுடன் தகராறு ஏற்படவே பாண்டியராணி, இரு குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 17ம் திகதி பாண்டியராணி தன்னுடன் அழைத்து வருவதற்காக சென்றுள்ளார்.

அவர் வர மறுக்கவே, குழந்தைகளை மட்டும் அழைத்து வந்து விட்டார், இதற்கிடையே பாண்டியராணி கணவர் குறித்து பொலிசில் புகார் அளிக்கவே விசாரிப்பதற்காக பொலிசார் சென்றுள்ளனர்.

அங்கே வீரபத்திரன் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, அருகில் குழந்தைகளும் சடலமாய் கிடந்துள்ளனர்.

சோதனை செய்தததில் குழந்தைகளுக்கு இட்லியில் விஷம் வைத்து கொடுத்ததுடன் வீரபத்திரன் தற்கொலை செய்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக விரைந்து வந்த சூலூர் பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மனைவியை பிரிந்ததால் ஏற்பட்ட மனவருத்தமே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

சாமியார் ராம் ரஹீம் சிங் ஆசிரமத்தில் 600 எலும்புக் கூடுகள் : அதிர்ச்சியில் மக்கள்!!

சாமியார் ராம் ரஹீம் சிங்கின் தேரா சச்சா சவுதா மடத்தில் 600 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனை தேரா சச்சா சவுதா அமைப்பின் சீனியர் துணை தலைவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

சாமியார் ராம் ரஹிம் சிங், பாலியல் வழக்கில் 20 வருட தண்டனை பெற்று சிறையில் உள்ளார். அவரது தேரா சச்சா சவுதா ஆசிரம் சிர்சா என்னுமிடத்தில் 600 எக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.

அங்கு அண்மையில் போலீசாரும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்நிலையில், சிர்சாவில் உள்ள தேரா சச்சா சவுதா ஆசிரம வளாகத்தில் 600 எலும்புக்கூடுகள் கண்டெடுக்கபப்ட்டுள்ளன. அதற்கு தேரா சச்சா அமைப்பின் மூத்த துணை தலைவர் பிஆர் நைன் பதில் அளித்துள்ளார்.

புதைத்தது யார்?

அதில் சீடர்கள் இறந்துபோகும் போது அவரது உடல்களை தேரா சச்சா சவுதா வளாகத்தில் புதைத்தால் முக்தி கிடைக்கும் என்பதால் அங்கு அவர்களது பெற்றோர்களே புதைத்தார்கள் என கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த காவல்துறை உயர் அதிகாரி குல்தீப் பெனிவால் கூறும்போது புதைக்கப்பட்டவர்களின் விவரங்கள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ளனர் என கூறினார்.

உடல்கள் புதைப்பு

தேரா சச்சாவில் தேடுதல் வேட்டையை நடத்துவதற்கு ஒருநாள் முன்பு பஞ்சாப்- ஹரியானா நீதிமன்றம், ஏகேஎஸ் பவார் என்பவரை அங்கு கமிஷனர் அந்தஸ்தில் மேற்பார்வையிட நியமித்தது. தேரா சச்சா அமைப்பின் பொறுப்பாளர் சச் கஹூன், ஆசிரம வளாகத்தில் உடல்களை புதைத்ததை ஒத்துக்கொண்டார்.

மரம் நட்ட சாமியார்

இதுகுறித்து மறுப்பு வெளியிட்ட தேரா சச்சா ஆசிரம செய்தித்தாள், சாமியார் ராம் ரஹீம் சுற்றுசூழல் கெட்டுப் போகக் கூடாது என்பதற்காக நீர்நிலைகளில் உடல்களை விடாமல், இங்கு புதைக்க அறிவுறுத்தினார் என விளக்கம் அளித்தது. மேலும் உடல்கள் புதைக்கப்பட்ட பின்பு அதன் மேல் மரங்கள் நடப்பட்டன எனவும் அந்த செய்தித்தாளில் கூறப்பட்டு இருந்தது.

கொலைக்கு சாட்சி

ஆனால் ராம் ரஹீமின் முன்னாள் ஓட்டுநர் கட்டா ராம் ரஹீம் செய்த இரு கொலைக்கு தான் சாட்சி என்றும் மேலும் ஒரு சிறுவனைக் சுட்டுக் கொன்று அதை எரித்ததை தான் பார்த்ததாகவும் கூறியுள்ளார். ராம் ரஹீம் ஆசிரமத்துக்குள் 600 எலும்புக்கூடுகள் இருந்தன என்பது அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விடயமாக உள்ளது.

மெக்சிகோ நிலநடுக்கம் : உயிரிழப்பு 226 ஆக உயர்வு!!

 
மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 226 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று (19.09) நள்ளிரவு இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் பல இடிந்து வீழ்ந்தன.

மத்திய மெக்சிகோவில் உள்ள மெக்சிகோ நகர், மொர்லோஸ், ப்யூப்லா மாநிலங்களிலேயே கட்டிடங்கள் பல இடிந்து வீழ்ந்ததாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

நிலநடுக்கத்தில் சிக்கி 226 பேர் பலியாகியுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை, மெக்சிகோ நகரில் (மெக்சிகோ சிட்டி) உள்ள ஆரம்பப் பாடசாலையொன்று இடிந்து தரைமட்டமானதில் 21 சிறுவர்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

யாழில் தந்தை கொலை, மகன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் – நல்லூர் வீதி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதோடு, மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டுப் பேர் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், சம்பவத்தில் யாழ்ப்பாணம் – நாவலர் வீதிப் பகுதியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகனுமே தாக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, 38 வயதான செல்வநாயகம் ரத்னபாலசிங்கம் என்பவர் பலியாகியுள்ளதோடு, அவரது மகனான ரத்னபாலசிங்கம் ரஜீவன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட காரணங்களே தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஏனையோரைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆண்களின் கழிவறையில் செல்பி எடுத்த பிக்பாஸ் காஜல்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமில்லாத பலரும் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் படங்களிலிலும், சின்னத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வந்த காஜல் பசுபதி பிக்பாஸில் கலந்து கொண்டார்.

இதன்மூலம் தமிழ் மக்கள் பலருக்கும் பரிட்சயமானார். பிக்பாஸில் எலிமினேஷன் ஆன இவர் இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் பிரபல திரையரங்கத்தின் ஆண்கள் கழிவறைக்குள் செல்பி எடுத்துள்ளார். நான் ஏன் இங்கிருக்கேன் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.

யாழில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவிக்கு ஏற்பட்ட அவமானம்!!

யாழ்ப்பாணம் – மண்டைத் தீவு பகுதியில் விளையாட்டு பயிற்சி ஒன்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவிக்கு, நபர் ஒருவர் முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை யாழ்.பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

மண்டைத் தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதாகிய பாடசாலை மாணவி ஒருவருக்கே இந்த அவமானம் ஏற்பட்டுள்ளது.

விளையாட்டரங்கு ஒன்றில் உள்ள அறை ஒன்றில் வைத்து இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறித்த மாணவி தனது பெற்றோரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

தொடர்ந்து, மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து பொலிஸில் முறையிட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமணம் செய்த அன்றே தற்கொலை செய்த காதல் ஜோடி : காரணம் இதுவா?

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் திருமணம் முடிந்த தினமே காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் பட்டுல்லா சந்தீப், இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகின்றார். மேலும் அதே கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் போகிரெட்டி மவுனிகா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கவே, நேற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இருவரது சடலங்களும் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டது. சடலங்களை கைப்பற்றிய பொலிசார் விசாரணை நடத்தியதில், இருவரும் விஜயவாடாவில் நேற்று திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.

ஆனால் அன்றிரவே தாங்கள் தற்கொலை செய்யப் போவதாகவும் நண்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். இதன்படி தற்கொலை செய்து கொண்டமை தெரியவந்துள்ளது. பெற்றோர்களுக்கு பயந்தே தற்கொலை செய்திருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர்.

சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன தெரியுமா?

14 வயதான சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமை மற்றும் பெற்றோரின் சட்டரீதியான பொறுப்பில் இருந்து கடத்திச் சென்றமை ஆகிய குற்றங்களை எதிர்நோக்கிய ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 15 ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கு நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது நீதிபதி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குற்றவாளிகளுக்கு 15 ஆயிரம் ரூபா அபராதம் விதித்த நீதிபதி, அபராத தொகையை செலுத்த தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு சங்கராஜா மாவத்தை சேர்நத 45 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கே இந்த சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபத்தினை புனரமைக்கும் இரானுவத்தினர்!

26 ஆண்டுகளாக வவுனியா மாவட்டத்தில் படையினர் வசமிருந்த வவுனியா குடியிருப்பு கலாச்சார மண்டபம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இரானுவத்தினரால் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

பல மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையிலும் புனரமைக்கப்படாமல் பாதுகாப்பற்ற பகுதியாகவும், இளைஞர்கள் சட்டவிரோத செயற்பாடுகளும் இடமாகவும் காணப்பட்டது. தற்போது இரானுவத்தினர் குறித்த கலாச்சார மண்டபத்தினை புனரமைத்து வருகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக இரானுவ பொறுப்பாளர் கருத்து தெரிவிக்கையில்

கடந்த 26வருடங்களாக இந்த கலாச்சார மண்டபம் இரானுவத்தினரின்  கட்டுப்பாட்டுக்குள் இருந்தது நாங்கள் இந்த கலாச்சார மண்டபத்தினை கடந்த சில மாதங்களுக்கு முன்னர்  வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக வவுனியா பிரதேச செயலாளரிடம் கையளித்தோம் . எவ்வித புரனமைப்புமின்றி காணப்பட்டமையினால் வவுனியா இரானுவத்தினரால் மீள்புரனமைப்பு செய்து மீண்டும் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா அவர்களிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் மக்களின் கலாச்சார பண்பாட்டை பேண இரானுவத்தினரால் மீள்புரனமைப்பு செய்து இவ் கலாச்சார மண்டபத்தினை மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க இரானுவத்தினர் முன்வந்த இவ் செயற்பாடு வரவேற்கத்தக்கது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு : சாரதி தப்பியோட்டம்!

வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி பகுதியில் இன்று (20.09.2017) அதிகாலை சட்டவிரோதமாக மரக்கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தினை வவுனியா விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா தாண்டிக்குளம் கொக்குவெளி பகுதியில் பல லட்சம் பெறுமதியான முதிரைக்குற்றிகளை வாகனமோன்றி கடத்தி செல்ல முற்பட்ட சமயத்தில் குறித்த வாகனத்தினை விசேட அதிரடிப்படையினர் திறத்தி பிடிக்க முற்பட்டுள்ளனர். இதன் போது குறித்த வாகனத்தின் சாரதி புகையிரத பாதையில் வாகனத்தினை செலுத்திச் சென்ற சமயத்தில் வாகனம் புகையிரத பாதையின் அருகே குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

சம்பவ இடத்திலிருந்து வாகனத்தின் சாரதி தப்பிச்சென்றதுடன் வாகனத்தினையும் முதிரைக்குற்றிகளையும் மீட்கும் பணியில் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

வவுனியா கோவிற்குளத்தில் பட்டப்பகலில் பெண்ணிடம் சங்கிலி அபகரிப்பு!

வவுனியா கோவில்குளம் தபால்பெட்டிச் சந்திக்கு அருகே இன்று (20.09.2017) மதியம் 12.30மணியளவில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில்    வந்த இரு நபர்கள் அபகரித்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கோவில்குளம் தபால்பெட்டிச் சந்தியில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு உமாமகேஸ்வரன் வீதியினூடாக நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் கீழே தள்ளி விட்டு அவரின் கழுத்தில் இருந்த ஒரு பவுன் தங்கச் சங்கிலியை அபகிரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் முகத்தை காணாதவாறு மூடிய தலைக்கவசத்தை அணிந்திருந்ததாகவும், சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்மணி பொலீசாருக்கு தெரிவித்தார்.

திருட்டில் ஈடுபட்ட நபர் முழுமையாக முடியவாறு தலைக்கவசத்தினை அணிந்திருந்ததாகவும் சிவப்பு நிற ஆடைகள் அணிந்திருந்ததாகவும் குறித்த பெண் பொலிஸாரிடம் வாக்குமூலத்தினை பதிவு செய்துள்ளார்.

அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் சிசீடிவி கேமரா தரவுகளை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை 24 மணித்தியால வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது.

இதற்கமைய நாளை காலை 08.00 மணி முதல், நாடளாவிய ரீதியில், இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும், இவர்களுடன் வேறு சில சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.