வவுனியா புகையிர நிலையவீதியில் அமைந்துள்ள மக்கள் வங்கிக்கு முன்னால் அமைந்துள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அருகாமையில் இரண்டு நாட்களுக்கு மேலாக அநாதரவாகவிடப்பட்ட NP AAJ- 9101 என்று இலக்கமிடப்பட்ட பச்சை நிற முச்சக்கர வண்டியை இன்று (21.09) காலை 8.15 மணியளவில் கையகப்படுத்தி அதனுடைய உரிமையாளரை இனங்காண்பதற்கான விசாரனையை ஆரம்பித்துள்ளனர்.
NP AAJ- 9101 என்று இலக்கமிடப்பட்ட பச்சை நிற முச்சக்கர வண்டி பின்பக்கம் தேசியக் கொடியுட, மறத் தமிழன் (ஜெஸ்டின்) என்னும் வாசகங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
இவ் முச்சக்கரவண்டி கடந்த இரு தினங்களாக முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் அநாதரவாக இருந்ததை கண்டு சந்தேசகம் கொண்டதினாலேயே தாம் பொலிசாருக்கு அறிவித்தகாக அப் பகுதி முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் தெரிவித்தார்கள்.
பொலிசார் முச்சக்கரவண்டி பரிசோதித்து விட்டு மேலதிக விசாரனைக்காக பொலிஸ் நிலையத்திற்கு முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்றுள்ளனர்.
நவராத்திரி கொண்டாட்டம் கலை கட்டத்துவங்கியுள்ளது. இறைவனின் அருள் பெற பலரும் வித விதமாக கொலு வைத்து வழிபாடு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். சோழர் மன்னர்கள் காலத்தில் நவராத்திரி அரச விழாவாக கொண்டாடப்பட்டிருக்கிறது. கொலு வைத்து கொண்டாடப்படும் இந்த ஒன்பது நாட்களிலும் நவராத்திரி குறித்த புராணக்கதைகள் கேட்பார்கள். இங்கே நவராத்திரி அன்று சொல்லப்படும் கதைகள் சிலவற்றை தெரிந்து கொள்ளலாம்.
ஒரு முறை தேவர்களுக்கு நிறைய துன்பங்களை கொடுத்து வந்த மகிஷாசுரன் என்ற அரக்கனை கொல்வதற்காக சக்தி வாய்ந்த சக்தியை உருவாக்க வேண்டும் என்று தேவர்கள் வேண்டினர். இதனால் சிவன், விஷ்னு மற்றும் பிரம்மா ஆகியோர் சக்தி வாய்ந்த தேவியை உருவாக்க முடிவு செய்தனர்.
ஆக்ரோஷ தேவி :
மூவரின் அருளில் பத்து கைகள் மற்றும் ஆக்ரோசமான முகத்துடன் பெண் தெய்வம் தோன்றியது. அந்த தெய்வம் தான் துர்க்கை. பார்வதி தேவியின் ஒரு வடிவம் என்றும் சொல்லப்படுகிறது. பிற தெய்வங்கள் தங்களின் ஆயுதங்கள் ஒவ்வொன்றாக துர்க்கைக்கு வழங்கினர். இறுதியாக துர்க்கை மகிஷாசுரனை அழித்து வெற்றிக் கொண்டாள்.
கொலு :
நவராத்திரியின் சிறப்பே ஒன்பது நாட்களும் வைக்கப்படும் கொலு தான். இந்த கொலுவிற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது. மகிஷாசுரன் என்ற அரக்கனை அழிப்பதற்காக, துர்க்கையிடம் தங்களின் ஆயுதங்களை சக்திகளை எல்லாம் கொடுத்துவிட்டு பொம்மைப் போல நின்றதை குறிப்பிடும் வகையில் கொலு அமைக்கப்படுகிறது. இதே போல இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் சக்தியின் வடிவம் தான் என்பதை வலியுறுத்தம் விதமாகவும் கொலு வைக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது.
ராமர் இருந்த விரதம் :
சீதையை ராவணன் தூக்கிச் சென்ற போது ராமரை சந்தித்து, இந்த அவதாரத்தின் நோக்கம் ராவணனை வதம் செய்வதே இந்த அவதாரத்தின் நோக்கம், அதனை அடைய பகவதி தேவியின் அருள் வேண்டி நவாரத்திரி விரதம் அனுஷ்டித்தால் நல்ல பலன் உண்டு என்று சொல்கிறார். நாரதரின் வழிகாட்டுதலின் படி மிகவும் சிரத்தையுடன் விரதத்தை அனுஷ்டித்தார் ராமர். அஷ்டமி அன்று இரவில் அம்பிகை சிம்ம வாஹினியாக காட்சிதந்து அருளினார். அதோடு, ஸ்ரீ ராமரின், முந்தைய அவதாரங்களான, மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம அவதாரங்களை நினைவுபடுத்தி, ‘ தேவர்களின் அம்சங்களை உடைய வானரர்கள் உனக்குத் துணை செய்வார்கள். ஆதிசேஷனின் அம்சமான, உன் இளவல் லக்ஷ்மணன் இந்திரஜித்தை வதம் செய்வான். இராவணன் உன்னால் கொல்லப்படுவான் என்றுரைத்தார்.
நவரத்திரி விரதம் இருந்து பலன் பெற்றவர்கள் :
இந்த விரதத்தை திரிபுரர்களைச் சம்ஹாரம் செய்யும் பொருட்டு சிவனும், விருத்திராசுரனைக் கொல்வதற்காக, இந்திரனும், மதுராவை சம்ஹாரம் செய்வதற்காக, நாராயணனும், அனுஷ்டித்தனர். சப்த ரிஷிகளும், இந்த விரதத்தை அனுஷ்டித்துப் பலன் அடைந்திருக்கின்றனர்.
நவாராத்திரி கோலம் :
நவராத்திரி நாட்களில் சுண்ணாம்பு மாவினால் கோலம் போடக்கூடாது. கண்டிப்பாக அரிசி மாவைத்தான் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதால் குடும்ப ஒற்றுமையையும் செல்வமும் பெருகும். சுண்ணாம்பு பயன்படுத்தினால் எதிர்மறையான விளைவுகளே உண்டாகும். நவராத்திரி கோலத்தை செம்மண் கலந்தும் போடலாம்.
பிற நவராத்திரிகள் :
புரட்டாசியில் வருகின்ற நவராத்திரியைத் தவிர பங்குனி மாதம் அமாவாசைக்குப்பிறகு பிரதமையில் துவங்கும் லலிதா நவராத்திரி,மாசி மாதம் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, ஆடியில் வரும் மகாவராகொ நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
வழிபாட்டு முறை :
நவராத்திரி நாட்களில் இரவு 7 மணி முதல் 9.30 மணி வரை தேவி வழிபாடு செய்ய உகந்த நேரமாகும்.நவராத்திரி வழிபாட்டை தினமும் தொடங்கும் போது ஸ்யவன மகரிஷியையும் சுகன்யா தேவியையும் தியானிக்க வேண்டும். நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும் இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி 9 நாட்களும் தினமும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரிக்க வேண்டும். நவராத்திரி நாளில் வரும் சப்தமி திதியன்று வழிபட்டால் ஸ்ரீஹயக்ரிவப் பெருமாளின் அருளைப் பெறலாம். அன்று ஸ்ரீலலிதா சகரஸ்ர நாமத்தையும் நவாக்சரி மந்திரத்தையும் கூறுவது கூடுதல் பலன்களைத் தரும். விஜய தசமி தினத்தன்று ஸ்ரீஆயுர் தேவியை போற்றி வழிபட வேண்டும். இதுதான் நவராத்திரி பூஜையின் நிறைவான பூஜையாகும்.
விஜய தசமி :
நவராத்திரியின் ஒன்பதாம் நாள் விஜயதசமி எனப்படுகிறது. இந்த நாள் வெற்றித் திருநாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. மகிஷாசுரன், சண்ட முண்டர்கள், சும்ப நிசும்பர்கள் ஆகிய அரக்கர்களை பராசக்தி அழித்த நாள். ராவணனை ராமர் வென்ற நாள். பாண்டவர்கள் தர்மத்தின் வெற்றிக்காக தங்களின் ஆயுதங்களையும் துர்க்கையையும் வழிபட்ட நாள். விஜயதசமி என்பதற்கு மற்றொரு பொருளும் உண்டு. நவராத்திரியின் ஒன்பது நாளும் விரதமிருந்து வழிபட்டவர்கள் இல்லம் தேடி, பத்தாம் நாளான தசமி அன்று அன்னை விஜயம் செய்யும் நாளே ‘விஜயதசமி’ என்றும் கூறப்படுகிறது.
ஒன்பது நாட்கள் ஒன்பது தேவிகள் :
இந்த 9 நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி தேவியரை ஒன்பது அவதாரங்களாக அலங்கரித்து, போற்றி பூஜித்து வழிபடுதல் வேண்டும். முதல் மூன்று நாட்கள் மகேஸ்வரி, கௌமாரீ, வராஹி என துர்கா தேவியாகவும், அடுத்த மூன்று நாட்களில் மஹாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி என லட்சுமி தேவியாகவும், கடைசி மூன்று தினங்களில் சரஸ்வதி, நரசிம்மீ, சாமுண்டி என சரஸ்வதி தேவியாகவும் சித்தரித்து வணங்குகிறோம்.
வவுனியா கற்குழியில் நேற்று (20.09.2017) காலை 9.30 மணியளவில் ஆசியாவிற்கான பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பிரதம இயக்குனர் வைத்திய கலாநிதி நிர்மலா , கஜாரியா பிரம்ம குமாரிகள் இராஜயோக தியான மண்டபத்தினை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைத்ததுடன் நினைவுப் பெயர்ப்பலகையினையும் திரைநீக்கம் செய்து வைத்தனர்.
வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட விவசாயப்பணிப்பாளர், மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர், இலங்கைக்கான பிரம்ம குமாரிகள் இராஜயோக நிலையத்தின் பொறுப்பாளர் திரு. கணேஷ், யாழ்ப்பாண நிலையத்தின் சகோதரி றஞ்சி, வவுனியாவிற்கான நிலையத்தின் சகோதரி திருமணி, வவுனியா நிலைய சகோதரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மன ஆற்றுப்படுத்தும் தியானங்கள் இந்த மண்டபத்தில் தினசரி காலை மாலை என இரு நேரமும் இலவசமாக இடம்பெறுவதுடன் இன மத சமய கலாச்சார வேறுபாடின்றி தியான நடவடிக்கைகளில் அனைத்து மக்களும் ஈடுபடலாம் என்று நிலையத்தின் பொறுப்பாளர் தெரிவித்தார்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பூவரசங்குளத்திலிருந்து மணியர்குளம், நித்தியநகர் மற்றும் கந்தசாமி நகரூடாக செட்டிக்குளம் செல்லும் பிரதான வீதியே நீண்ட நாட்களாக திருத்தப்படாமையால் குறிப்பிட்ட கிராமத்து மக்கள் போக்குவரத்து செய்வதில் இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள்.
யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் 1998 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் வீதி சீரின்மையால் தமது விவசாய உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பல கிலோமீற்றர் தூரம் நடந்து செல்லவேண்டியிருப்பதால் மழைக்காலங்களில் பெரும் இன்னல்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கும் கிராம மக்கள் கிராமத்தில் வைத்தியசாலை வசதி இன்மையால் நோயாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதிலும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர்.
பிரதேசசபை மற்றும் அதிகாரிகளிடம் முறையிட்டும் பாதைகள் சீர் செய்து தரப்படவில்லை பாதைகள் சீரின்மையால் அதை காரணம் காட்டி பேரூந்துகள் எமது கிராமத்திற்கு வருவதில்லை என்பதுடன் அரசியல்வாதிகள் பாதையை திருத்தி தருவதாக வாக்குறுதிகள் மாத்திரம் வழங்கி வருவதாகவும் நித்திய நகர் கிராமத்தின் அபிவிருத்தி சங்கத் தலைவர் எஸ்.பரமசிவம் குற்றஞ்சாட்டினார்.
வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்த வீதியை விரைவில் புனரமைத்து தருமாறு நித்தியநகர் கிராமத்து மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
பிரித்தானியாவைச் சேர்ந்தவர் எம்மா கெல்டி(43). தலைமை ஆசிரியையான இவர் உலகை சுற்றிப் பார்க்கும் ஆசையில் படகின் மூலம் கடல்வழியாக பயணம் செய்து வந்தார்.
இந்நிலையில், அவர் கடந்த 10-ஆம் திகதி தனது டுவிட்டர் பக்கத்தில் அமேசான் பகுதியில் எனது படகை பறித்துக் கொள்வார்கள். என்னைக் கொன்றுவிடுவார்கள்.. நல்லது என பதிவிட்டிருந்தார்.
அவரின் பதிவேற்றத்தை கண்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஏனெனில் பிரேசில் நாட்டில் தற்போது கடல் பகுதியில் படகில் பயணம் செய்யும் வழியில் கடற்கொள்ளையர் கூட்டம், பயங்கரமான ஆயுதங்களுடன் நடமாடி வருவதால் தனது அச்சத்தை இவ்வாறு அவர் வெளிப்படுத்தியதாக கூறப்பட்டது.
யூகித்தது போலவே, பிரேசில் நாட்டில் உள்ள தீவுப் பகுதியான லாரோ சோட்ரே பகுதியில் அவரது படகை வழிமறித்த வாட்டர் ரேட்ஸ் எனும் கடற்கொள்ளையர்கள், எம்மா கெல்டியை சுட்டுக் கொன்றுள்ளனர்.
அவரது செல்போன், டப்லட், கணனி மற்றும் அதிநவீன கமரா ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பாக 17 வயது கொள்ளையனை பிரேசில் பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்முடைய இல்லங்களில் இருக்கும் மாணவர்கள் அல்லது மாணவியர்கள் தங்களது பாடசாலைக்கு செல்லும் போது தங்களுடன் பிளாஸ்ரிக் போத்தல்களில் குடிநீரை எடுத்துச் செல்வது வழக்கம்.
ஒரு சில குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் அந்த போத்தல்களை மாற்றுவது கிடையாது. 6 மாதம் அல்லது ஒரு வருடம் கூட அதனை எடுத்துச் செல்கிறார்கள்.
ஆனால் இது போன்று தொடர்ச்சியாக பிளாஸ்ரிக் போத்தல்களை தண்ணீருக்காக பயன்படுத்தும் போது, அவற்றால் காய்ச்சல் ஏற்படுகிறது என்று தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது.
அத்துடன் இவ்வகையான பிளாஸ்ரிக் போத்தல்களில் தண்ணீரை தொடர்ச்சியாக எடுத்துச் செல்லும் அதில் பாக்டீரியாக்கள் தங்கிவிடுகின்றன என்றும். இவை தான் உடலுக்கு ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.
அத்துடன் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு புதிய பிளாஸ்ரிக் போத்தல்களை பயன்படுத்தலாம் என்றும். தொடர்ச்சியாக 3 மாதத்திற்கு மேல் ஒரு போத்தல்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
ரஷ்யாவைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு ஏற்பட்ட வினோத நோயின் காரணமாக, அவரது இதயம் உடலுக்கு வெளியே துருத்திக்கொண்டு துடிப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த விர்சாவியா போருன் என்ற சிறுமிக்கு பிறந்ததில் இருந்து இதயத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மருத்துவர்கள் சிறுமி இறந்துவிடுவதாக தெரிவித்தனர். ஆனால் அதைத்தாண்டி சிறுமி 8 வயது கடந்தும் தற்போது நலமுடன் உள்ளார். மட்டுமின்றி மிகவும் சந்தோஷமாகவும் பாடசாலையில் திறமையான மாணவியாகவும் சிறுமி திகழ்ந்துள்ளாள்.
ஆனால் நோயின் தாக்கத்தினால் அவள் இதயமானது உடலுக்கு வெளியே வந்து துடிக்கிறது. இதனால் அவள் மிக மிருதுவான உடை மட்டுமே அணிய வேண்டிய சிக்கலில் சிகியுள்ளார்.
எஞ்சிய சிறுமிகள் போல் நடக்கலாம். ஆனால் மற்ற மாணவர்களை போல் ஓட முடியாது. அவளது பெற்றோர் பல மருத்துவர்களை அணுகியும் சிறுமிக்கு ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதால் சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் Florida மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிறப்பு சிகிச்சை பெற்றுக்கொள்வதாகவும் இதனால் தனது மகளுக்கு விரைவில் குணமடையும் என போருனின் தாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
போருன் தனது இதயம் வெளியே துடிப்பது போன்ற வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
இந்த அதிசய நோய் புதியதாக பிறக்கும் 1 மில்லியன் குழந்தைகளில் 5 பேருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத்தில் பணத்திற்காக வயதான அரேபியர்களுக்கு சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் கும்பலை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஐதராபத் பொலிசார் நடத்திய அதிரடி சோதனையில் 5 ஓமான் நாட்டவர்கள், 3 கட்டார் நாட்டவர்கள் மற்றும் மும்பை மதகுரு பாரித் அகமது கான் உள்பட மூன்று மத குருகளையும் கைது செய்துள்ளனர்.
திருமணத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறித்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர். மேலும் 12 சிறுமிகள் இந்த கொடூரத்தில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்
கைது செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் பலாத்காரம் உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள சோலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிக்காரி (வயது 76). இவர் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இவருடைய மனைவி பொன்னியம்மாள் (66). இவர்களுக்கு கிருஷ்ணமூர்த்தி ராஜசேகர் ஆகிய 2 மகன்களும் வசந்தா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
சிக்காரி சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்தார். இதனால் அவர் கோவையில் உள்ள தனது மகள் வசந்தா வீட்டில் தங்கியிருந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிக்காரிக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மகள் வீட்டிலேயே இறந்துவிட்டார். கணவர் அருகில் இருந்து கவனித்துவந்த பொன்னியம்மாள் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
பின்னர் சோலூர் கிராமத்துக்கு அவரது சடலம் கொண்டுவரப்பட்டது. சிக்காரியின் உடலுக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்துகொண்டு இருந்தது.
அப்போது சிக்காரியின் உடலை பார்த்து கதறி அழுது கொண்டிருந்த பொன்னியம்மாள் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன உறவினர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தும் மயக்கம் தெளியவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் ஊட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு பொன்னியம்மாளை கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கணவன்–மனைவி இருவரும் ஒரே நேரத்தில் இறந்ததால் குடும்பத்தினரும் உறவினர்களும் சோகத்தில் மூழ்கினர். பின்னர் இருவரது உடல்களும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டன.
இருவரும் ஒன்றாக வாழ்ந்து சாவிலும் இணை பிரியாமல் இறந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
வடகொரியாவில் இருந்து தப்பிய முன்னாள் ராணுவ அதிகாரியின் மகள் அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் வுன் குறித்து வெளியிட்டுள்ள தகவல்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவில் உயர் பதிவியில் இருந்த ராணுவ விரர் Wui Yeon Lim. 51 வயதான இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இவரின் மகள் Hee Yeon Lim (26) வடகொரியாவில் இருந்து தப்பி தற்போது தென் கொரியாவில் தஞ்சமடைந்துள்ளார். அங்குள்ள ரகசியமான இடத்தில் தமது குடும்பத்துடன் தங்கியிருக்கும் இவர், வடகொரிய தலைவர் கிம் ஜோங் குறித்து வெளிப்படுத்தியிருக்கும் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் உறவில் அதிக நாட்டம் கொண்ட கிம் ஜோங் வுன் பாடசாலை மாணவர்களை தமது பிரத்யேக குடியிருப்புகளில் பணிக்கு அமர்த்துவதாகவும், அவர்களுடன் உறவு வைத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இதற்கெனவே சில அதிகாரிகள் நாட்டில் உள்ள பாடசாலைகளில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபடுவதாகவும் Hee Yeon Lim தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் இருந்த நாட்களில் பல துயர சம்பவங்களை தாம் நேரிடையாக பார்த்ததாக கூறும் அவர், 11 இசைக்கலைஞர்களை பொதுவெளியில் கட்டி வைத்து விமானங்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கியால் படுகொலை செய்தது தமது வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் என தெரிவித்துள்ளார்.
பெரும் விருந்து பிரியரான கிம் ஜோங் வுன் அடிக்கடி தமது நெருங்கிய ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபடுவதாகவும், ஆனால் நாட்டில் ஏழ்மை தலைவிரித்தாடுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கிம் ஜோங் வுன் ஆட்சி அதிகாரத்தில் வந்த பின்னர் இதுவரை 25 மில்லியன் மக்களை கைது செய்து சிறையில் தள்ளியுள்ளதாக கூறும் அவர், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து எவ்வித தகவலும் வெளியுலகிற்கு தெரியாத வகையில் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தமது தந்தையின் மறைவுக்கு பின்னர் வடகொரியாவில் இருந்து வெளியேற வேண்டும் என முடிவு செய்ததும், பல அதிகாரிகளுக்கும் லஞ்சம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது எனக் கூறும் அவர், லாவோஸ் பகுதியில் இருந்து தென் கொரியா தலைநகர் வந்து சேர்வதற்கு மட்டும் 5000 பவுண்டுக்கும் மேலாக செலவானது என தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கல்மடுநகர் பகுதியில் அதிகளவான சிறுவர்கள் பாடசாலைக்கு செல்லாது பல்வேறு ஆபத்தான வேலைகளுக்கு செல்லும் நிலை காணப்படுவதாக இப்பகுதி பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
கிளிநொச்சி கல்மடுநகர் நாவல்நகர், றங்கன் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் கூடுதலான சிறுவர்கள் பாடசாலைக்குச் செல்லாத நிலமை காணப்படுவதுடன், இவ்வாறு பாடசாலை செல்லாத சிறுவர்கள் மணல் அகழ்வுகள் மற்றும் பல்வேறு சட்டவிரோத வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இப்பகுதி பொதுமக்களும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த பகுதியில் வாழும் குடும்பங்களில் அதிகளவான குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களாக காணப்படுவதனால் இவர்களது குடும்ப வருமானத்தை கருத்திற்கொண்டு பல சிறுவர்கள் இவ்வாறான வேலைகளில் ஈடுபடுவதாகவும் சில பெற்றோர்கள், உறவினர்களின் அக்கறையீனங்களால் பலர் இவ்வாறு பாடசாலைக்கல்வியை விட்டு வேலைகளுக்கு செல்வதாகவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இவ்வாறான சிறுவர்களின் எதிர்காலம் குறித்துகவலைப்படும் அவர்கள், இவர்களை கற்றல் செற்பாடுகளில் அல்லது தொழில் சார் கற்கை நெறிகளில் இணைத்து இவர்களின் எதிர்காலத்தை வளமுள்ளதாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடமாகாணத்தின் கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
மின்சார பராமரிப்பு மற்றும் புனரமைப்பு பணிகளுக்காக மின்சாரம் தடை செய்யப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை கிளிநொச்சியின் கரிக்கட்டுக் குளத்திலும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னார் மாவட்டத்தின் மடுக்கரைப் பிரதேசத்திலும், காலை 8 மணி முதல் மாலை 5.30 மணி வரை வவுனியாவின் தவசிக்குளம், யங்கன்குளம் ஆகிய இடங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்கும் சண்டக்கோழி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பமாகியது.
லிங்குசாமி இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் சண்டக்கோழி.
விஷால் – மீரா ஜாஸ்மின் – ராஜ்கிரண் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாக இருக்கிறது. அதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பமானது.
விஷாலின் 25 வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார் நடிகர் ராஜ்கிரன், சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
வரலட்சுமி சரத்குமார் இப்படத்தில் வில்லியாக நடிப்பதாக கூறப்படுகிறது.
விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து வரும் இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 6 கோடி ரூபா செலவில் மதுரை போன்ற பிரமாண்ட செட் அமைப்பட்டுள்ளது.
அதில் கடைகள், கோவில் திருவிழா கொண்டாடும் வளாகம், பிரமாண்ட கட்டிடங்கள் போன்றவை உருவாக்கப்பட்டுன.