கடவுள் தந்த பரிசு : உள்ளம் நெகிழும் தம்பதியர்!!

உத்தரப் பிரதேசம், அலிகாரின் கிராமம் ஒன்றில் வினோத தோற்றத்துடன் பிறந்திருக்கும் குழந்தையை அதன் பெற்றோர்கள் ஏற்றுக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தம்பதியருக்கு ஏற்கனவே இரண்டு வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். அவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தையொன்று பிறந்தது, வித்தியாசமான தோற்றத்துடன்!

காதுகள் இல்லாத அந்தக் குழந்தையின் கண்கள் இரண்டும் பெரிதாக வீங்கியிருக்கின்றன. நாசித் துவாரங்களுக்குப் பதிலாக ஒரேயொரு ஓட்டை மட்டுமே இருக்கிறது.

பார்ப்பதற்கு விகாரமான தோற்றம் கொண்ட இந்தக் குழந்தையைக் கண்டு முதலில் அதிர்ச்சியுற்ற பெற்றோர், ‘கடவுள் தந்த பரிசு’ என்று கூறி குழந்தையை வளர்க்கச் சம்மதித்து ஏற்றுக்கொண்டனர்.

என்றபோதும், கிராமவாசிகள் அந்தக் குழந்தையை வேற்றுக்கிரகவாசி என்று பெயரிட்டு அழைப்பதுடன், அவ்வப்போது வந்து அந்தக் குழந்தையைப் பார்த்துச் செல்கிறார்கள்.

எவ்வாறெனினும், இரண்டு கிலோ எடையுடன் பிறந்த அந்தக் குழந்தை பூரண ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் அது குறித்து கவலையடைந்த அந்தக் குழந்தையின் தந்தை, அதையே அந்தக் குழந்தையின் சிகிச்சைக்குத் தேவையான பொருள் திரட்டும் வாய்ப்பாக மாற்றிக்கொண்டார்.

தற்போது, அந்தக் குழந்தையைக் காண வரும் மக்களிடம் குழந்தையின் சிகிச்சைக்குப் பண உதவி தருமாறு கோரி வருகிறார்.

புகை மேல் நோக்கிச் செல்வது ஏன் என்று தெரியுமா?

நெருப்பில் இருந்து வெளிப்படும் புகை எப்படி மேல் நோக்கிச் செல்கிறது என்று நீங்கள் என்றாவது யோசித்து உள்ளீர்களா?  காரணம் இதோ..

புகை மேல்நோக்கி செல்வது ஏன்?

பூமி முழுவதும் பரவி காணப்படும் காற்றின் அடர்த்தி, புகையின் அடர்த்தியை விட அதிகமாக இருக்கும். இதனால் புகையை விட, காற்றின் மீது புவி ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும்.

அப்போது காற்று கீழ் நோக்கி இறங்கும். அடர்த்தி குறைந்த புகை மட்டும் மேல் நோக்கிச் செல்லும். இந்நிகழ்வு கூட புவி ஈர்ப்பு விசையால் நடைபெறுகிறது.

இந்த புகையை போலவே மென்மையான நீராவியும் மேல் நோக்கிச் சென்று மேகமாக மாறி மழையாகப் பொழிகிறது.

புவி ஈர்ப்பு விசை மட்டும் இல்லாவிட்டால் புகையோ அல்லது நீராவியோ மேல் நோக்கிச் செல்ல முடியாது.

நாசா நிறுவனத்திடமிருந்து 100,000 டொலர்களை வெல்ல இதோ ஓர் அரிய வாய்ப்பு!!

மெரிக்காவை மையமாகக் கொண்டு செயற்படும் விண்வெளி ஆய்வு மையமான நாசா வெகுமதி ஒன்றினை அறிவித்துள்ளது. சுமார் 100,000 டொலர்கள் பெறுமதியான இந்த வெகுமதியினை வெல்வதற்கு புதிய தொழில்நுட்பம் ஒன்றினை கண்டுபிடிக்க வேண்டும்.

அதாவது தூசுப் படலங்களை கண்டறியக்கூடிய சென்சாரை வடிவமைக்க வேண்டும் என்பதே நிபந்தனையாகும்.

குறித்த சென்சாரானது குறைந்த எடை மற்றும் குறைந்த விலை கொண்டதாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

வெற்றிகரமாக உருவாக்கப்படும் சென்சாரானது விண்வெளி வீரர்கள் சுவாசிக்கும் காற்றில் தூசுப் படலங்கள் கலந்திருப்பது தொடர்பில் எச்சரிக்கை விடுப்பதற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

இதில் பங்குபற்றுவதற்கு எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதிக்கு முன்னர் பதிவினை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் 2018 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்னர் சென்சாரினை ஒப்படைக்க வேண்டும்.

இணையத்தள முகவரி : www.earthspaceairprize.org

காரை நிறுத்துங்கள் : அடம் பிடித்த வார்னரின் குழந்தைகள் : சென்னையில் நடந்த சுவாரஸ்யம்!!

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் ஒருநாள் போட்டி சென்னையிலும், இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவிலும் நடைபெற்றது. இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னரின் இன்ஸ்டிராகிராம் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

அதில் வார்னர் சென்னைக்கு வந்த எனது குழந்தைகள் சென்னையை அழகாக ரசித்தனர், அதுமட்டுமின்றி காரை நிறுத்தி லெமன் ஜுஸ் வேண்டும் என்று கூறி அடம்பிடித்து வாங்கிக் குடித்தனர் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.

சித்ரவதை செய்த மனைவியை கொன்று புதைத்த கணவன் : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!!

கனடாவில் சித்ரவதை செய்து வந்த மனைவியை கொலை செய்து வீட்டிற்குள் புதைத்த கணவனுக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கல்கேரி நகரில் Allan Shyback மற்றும் Lisa Mitchell என்ற தம்பதி இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளனர்.

தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும், கணவனை மனைவி தொடர்ந்து சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தியதாகவும் புகார் கூறப்படுகிறது.

இந்நிலையில் 2012ம் ஆண்டு இருவருக்கு வாக்குவாதம் அதிகரித்து அடிதடியில் முடிந்துள்ளது. அப்போது, மனைவி சமையலறைக்கு சென்று கத்தியை எடுத்து வந்து கணவனை குத்த முயன்றுள்ளார்.

உயிரை காப்பாற்றிக்கொள்ளும் நிலையில் இருந்த கணவன் மனைவியை தடுத்து நிறுத்தி அவரது கழுத்தை நெறித்துள்ளார்.

இச்சம்பவத்தில் மூச்சு திணறிய மனைவி மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்து விட்டதை எண்ணி கணவன் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

வேறு வழி இல்லாத காரணத்தினால் மனைவியின் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் மூட்டை கட்டியுள்ளார். பின்னர், வீட்டின் நிலவறைக்குள் குழியை தோண்டி புதைத்து சிமெண்ட் போட்டு பூசியுள்ளார்.

அம்மாவை காணாமல் தவித்த குழந்தைகளிடம் பல காரணங்களை கூறி தந்தை மறைத்து வந்துள்ளார்.

தாயார் காணாமல் போனது தொடர்பாக 2013ம் ஆண்டு பொலிசார் ரகசிய விசாரணையை தொடங்கியபோது தந்தை பிடிப்பட்டு அனைத்து உண்மைகளையும் கூறியுள்ளார்.

தற்காப்பிற்காக கொலை செய்தாலும் கூட அதனை மறைத்து குழந்தைகள் உள்ள வீட்டிலேயே புதைத்து வைத்தது ஒரு திட்டமிட்ட குற்றமாகும்.

எனவே, குற்றவாளியான தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

எனினும், குற்றவாளி ஏற்கனவே 4 ஆண்டுகள் தண்டனையை அனுபவித்து விட்டதால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் விடுதலை செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீதியில் கிடந்த துண்டிக்கப்பட்ட மனித உடல் உறுப்பு : பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை!!

பிரித்தானியா சாலையில் துண்டிக்கப்பட்ட மனித கை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Cleveland பகுதியில் உள்ள முக்கிய சாலையிலே துண்டிக்கப்பட்ட கை இருந்துள்ளது.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், முக்கிய சாலையை மூடியுள்ளனர். பின்னர், கையை ஆய்வு செய்ததில் போலியாக மிக யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள துண்டிக்கப்பட்ட கை என கண்டறிந்துள்ளனர்.

பின்னர் சாலையை திறந்துள்ளனர். இதனையடுத்து, போலி துண்டிக்கப்பட்ட கை புகைப்படத்துடன் சம்பவத்தை விளக்கி, Cleveland பொலிசார் தங்களின் அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்த பதிவை கண்ட பலர் தங்களின் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

கமலின் அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் : நடிகை கஸ்தூரி!!

அரசியல் நிலவரங்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவ்வப்போது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றியும் கருத்து தெரிவித்து வந்த அவரை, ஒருமுறை ரஜினியே நேரில் அழைத்து பேசினார்.

அரசியல் விவாதங்களில் பிரபலமாக இருக்கும் நடிகை கஸ்தூரி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மற்றும் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

இரண்டு நபர்களும் ஊழலுக்கு எதிரானவர்கள், இடதுசாரி எண்ணம் கொண்டவர்கள். பிரமாதமான இந்த கூட்டணியுடன் பெரிய அறிவுப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என டுவிட் செய்துள்ளார்.

உயிருக்கு போராடிய தாதிக்கு சொந்த மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க மறுத்த பரிதாபம்!!

தமிழகத்தில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு, மருத்துவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கோவில்பட்டியைச் சேர்ந்தவர் தாட்சாயிணி. இவர் முத்தானந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் இரண்டு வருடமாக தாதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் தாட்சாயிணி நேற்று இரவு வீட்டில் வாயில் நுரை தள்ளி நிலையில் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் அவரது அம்மா தாட்சாயிணி பணிபுரிந்து வந்த மருத்துமனைக்கே கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் அவர்களோ இங்கு பார்க்க முடியாது. அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறி மருத்துவமனைக்குள்ளேயே விடாமலும் உடன் வேலைபார்க்கும் பெண் என்றுகூட பார்க்காமல் மனசாட்சி இல்லாமல் ஊழியர்கள் பேசி அனுப்பியுள்ளனர்.

இதையடுத்து கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கும் மருத்துவர் இல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாட்சாயிணி சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தற்கொலை தான் என்று கூறி வந்த நிலையில், தாட்சாயிணி பணிபுரிந்து வந்த மருத்துவமனையில் மருத்துவர் காந்திராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் இதற்கு முன் 4 தாதிகள் இப்படி தற்கொலை செய்து கொண்டனர் எனவும் உயிருக்குப் போராடி கொண்டிருக்கும் நேரத்தில் இங்க பார்க்க முடியாது என்று சொல்லி துரத்தி அனுப்புவதற்கு காரணம் என்ன?

கோவில்பட்டி மருத்துவமனையில விஷம் குடித்தவரை காப்பாற்ற முடியவில்லை என்றால், அப்போ ஒரு மருத்துவர் கூட பணியில் இல்லையா? இல்லை காந்திராஜனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மருத்துவர் இல்லை என்று சொல்லி அனுப்பி விட்டார்களா? என்று உறவினர்கள் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதால், முழு விசாரணைக்கு பின்னரே முழு உண்மை தெரியவரும்.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி வைத்தியசாலையில்!!

மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் மாடு ஒன்று மோதியதில் முச்சக்கர வண்டியில் பணித்த யுவதி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் நேற்று (21.09) காலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் தாழங்குடா தேவாலயத்திற்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பழுகாமத்தில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குச் சென்று மீண்டும் பழுகாமத்திற்கு சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது மாடு மோதியதால் அனர்த்தம் சம்பவித்துள்ளது.

இதனால் முச்சக்கர வண்டி பாதையில் இருந்து தள்ளப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளதுடன், அதில் பயணித்த யுவதி ஒருவர் காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

இதேவேளை, முச்சக்கர வண்டி சாரதிக்கு சிறிய காயங்கள் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுமிக்குச் சூடு வைத்த தாய்க்கு பிணை!!

தங்க மோதிரத்தைத் தொலைத்தார் என்ற ஆத்திரத்தில் தனது 7 வயது மகளுக்கு அவயவங்களில் கரண்டியால் சூடு வைத்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட தாயை பிணையில் செல்ல ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி நேற்று முன்தினம் (20.09) பிணையில் செல்ல அனுமதியளித்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபரை தலா ஒரு இலட்ச ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கியுள்ளதுடன், வழக்கு விசாரணையை அடுத்த வருடம் (2018) பெப்ரவரி மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

பயிற்சி வகுப்பு ஒன்றுக்கு சென்றிருந்த குறித்த சிறுமி வீடு திரும்பும்போது அவள் அணிந்திருந்த மோதிரம் இல்லாதிருப்பதை அவதானித்த தாய் சிறுமி மீது சூடுவைத்துள்ளார்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் பள்ளியடி வீதியை அண்டியுள்ள வீட்டில் கடந்த சனிக்கழமை இந்த சம்பவம் இடம்பெற்றது.

சிறுமியின் அவலக் குரல் கேட்ட அயலவர்கள் இந்த விபரீதத்தை பொலிஸாருக்கு அறிவித்ததன் பேரில் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் தாயைக் கைது செய்திருந்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

100 ரூபாய்க்கு பழைய பத்திரிகை வாங்கியவருக்கு கிடைத்த அதிஷ்டம்!!

ஹொரணை பிரதேசத்தில் பழைய பத்திரிகைகளை கொள்வனவு செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர் ஒருவருக்கு எதிர்பாராத வகையில் அதிஷ்டம் கிடைத்துள்ளது.

100 ரூபாய் கொடுத்து வாங்கிய பழைய பத்திரிகைக்குள் 5,000 ரூபாய் தாள்கள் 60 கிடைத்துள்ளன. அதாவது 100 ரூபா கொடுத்து வாங்கிய பழைய பத்திரிகைக்குள் 300,000 ரூபாய் பணம் இருந்துள்ளது.

ஹொரணை – போருவதண்ட பிரதேசத்தைச் சேர்ந்த ஆர்.கருணாரத்ன என்பவருக்கே இந்த அதிஷ்டம் கிடைத்துள்ளது. எனினும் குறித்த நபர் தனக்கு கிடைத்த பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

அண்மையில் ஹொரணை நகர் பகுதியில் பழைய பத்திரிகைகளை சேகரிக்கும் போது அப்பகுதியில் வந்த பெண்ணொருவர் 10 கிலோ கிராம் பழைய பத்திரிகைகளை 100 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

பொலித்தீன் பைகளில் பொதி செய்யப்பட்ட பத்திரிகைகளை தரம் பிரித்த போது, அதற்குள் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய 5000 தாள்கள் 60 காணப்பட்டுள்ளன.

குறித்த பணத்தின் உரிமையாளர் பணத்தை காணாமல் தேடியதுடன், தனது மனைவியிடம் விசாரித்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் வினவிய போது, அவர் நடந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

பின்னர் கருணாரத்னவிடம் சென்று விற்பனை செய்யப்பட்ட பழைய பத்திரிகைகளில் வீட்டின் காணி உறுதிப் பத்திரமும் பணமும் இருந்ததாக குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தாம் கொள்வனவு செய்த பழைய பத்திரிகைக்குள் காணி உறுதிப் பத்திரம் காணப்படவில்லை என்றும் 3 இலட்சம் ரூபா பணம் மாத்திரமே இருந்ததாகக் கூறியதுடன், பணத்தை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பணத்தில் இருந்து 40 ஆயிரம் ரூபாயை கருணாரத்னவிற்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமண ஆடையில் கின்னஸ் சாதனை படைத்த கண்டி மணப்பெண்!!

 
கண்டியில் நேற்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணப்பெண் உலக சாதனை படைத்துள்ளார். மணமகள் 3,200 மீற்றர் நீளமான ஒசரி புடவையை அணிந்து சாதனையை பதிவு செய்துள்ளார்.

நேற்று முற்பகல் இந்த தம்பதியினர் கன்னொருவ சந்திக்கு வந்த பின்னர், கின்னஸ் சாதனையை கண்காணிக்கும் குழு முன்னிலையில் , ஒசரி புடவையின் நீளம் அளவிடப்பட்டுள்ளது.

குறித்த புடவை கண்டி கெடம்பே சந்தியில் இருந்து ஈரியகம சந்தி வரை நீளமுடையது என கணக்கிடப்பட்டுள்ளது.

பாரவூர்தியொன்றில் கொண்டு வரப்பட்ட ஒசரி புடவை, வீதியில் சுமார் 250 மாணவர்களால் தாங்கி பிடிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் போது மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டார்.

இதற்கு முன்னர் இந்திய பெண்ணொருவர் நீளமான புடவையை அணிந்து சாதனை படைத்தார். அதன் நீளம் 2,800 மீற்றராகும்.

அமெரிக்காவில் இருந்து  இலங்கை வந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த அவலம்!!

அமெரிக்காவில் இருந்து திருமணம் செய்வதற்காக இலங்கை வந்தவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்காவில் கலாநிதி பட்டம் பெற்ற 35 வயதான ஆண் ஒருவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் வடபகுதியை சேர்ந்த ஆண் மற்றும் பெண் வீட்டார், தரகர் மூலம் திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

மணப்பெண்ணின் அனுமதியுடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதுடன், கொழும்பில் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
எனினும் திருமணத்திற்கு முதல்நாள் மணப்பெண் தலைமறைவாகி உள்ளார். இதனால் மணமகன் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.

மணப்பெண் காணாமல் போன சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்காமல், இரு வீட்டாரும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்தநாள் காலை மணமகன் திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது அவரின் வீட்டுக்குச் சென்ற பெண்ணின் தந்தை நடந்த சம்பவத்தை கண்ணீருடன் தெரிவித்தார்.
மணப்பெண் தனது காதலனுடன் தலைமறைவாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் பெண் வீட்டாருடன் தர்க்கப்பட்டனர்.

இரு வீட்டாருக்கும் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், எதிர்பார்ப்புடன் சென்ற மணமகன் திருமணம் நடைபெறாமையினால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

ஏமாற்றம் தாங்க முடியாத மாப்பிள்ளை உடனடியாக அமெரிக்கா நோக்கி செல்ல தயாரானதாக தெரிய வருகிறது.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி!!

அம்பாறை, ஒலுவில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நபரொருவர், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளாரென, அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை (21.09) கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்தில் ஒலுவில் 4ஆம் பிரிவைச் சேர்ந்த சம்சுதீன் பஸீல் (வயது 44) என்பவரே உயிரிழந்தவராவார்.

சடலம், அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

 
சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (21.09.2017) காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சைட்டம் மருத்துவக் கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இத்தாலியில் கடுமையாக மோதிக் கொண்ட இலங்கை இளைஞர்கள்!!

இத்தாலியில் இலங்கை இளைஞர்கள் இருவர் கடுமையாக மோதிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று முன்தினம் இத்தாலி வெரோனா நகரத்தின் பிரதான ரயில் நிலையத்திற்கு அருகில் இலங்கையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

இருவருக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எதற்காக மோதல் ஏற்பட்டது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை. எனினும் இந்த மோதல் சம்பவம் இத்தாலிய மக்களை கடும் அதிருப்பதியில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.