அரசி மற்றும் காய்கறிகளில் குறிப்பிடத்தக்க அளவு ஈயம் அடங்கியிருப்பதாக மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் உணவுகளில் விஷத்தன்மை குறித்து ஆய்வு நடத்தும் திட்டத்தின் பிரதான ஆய்வு அதிகாரி விசேட மருத்துவ நிபுணர் டி.பி. ஆனந்த ஜயலால் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் மாவட்டத்தில் சிறுநீரக நோயாளிகள் தொடர்பாகவும் அவர்களின் உணவு மாதிரிகள் மற்றும் குருதி மாதிரிகளில் ஈயத்தின் அளவு பரிசோதனை செய்யப்பட்டது.
55 குருதி மாதிரிகளில் 26 மாதிரிகளில் ஈயம் அடங்கியிருந்தது. குருதியில் ஈயம் அடங்கியிருப்பதால், குழந்தைகளின் அறிவு வளர்ச்சி குறையும். கிரகிக்கும் திறன் குறைதல்,வளர்ச்சி குறைதல் என்பன ஏற்படும்.
வயது வந்தவர்களின் குருதியில் ஈயம் அடங்கியிருந்தால், உயர் இரத்த அழுத்தம், உடல் ரீதியான உபாதைகள் மட்டுமல்ல ஈயத்தின் அளவு அதிகரித்தால், மரணம் ஏற்படக் கூடிய ஆபத்தும் உள்ளது.
இதனால் இரசாயனங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். விவசாயத்திற்கு இயற்கை பசளைகளை பயன்டுத்த பழகிக்கொள்ள வேண்டும். பொருத்தமான விவசாய பயிர்களை தெரிவு செய்ய வேண்டும்.
அதேவளை மூன்று வேளையும் ஒரே உணவை (சோறு) உண்ணும் பழக்கத்தை மாற்றி, காய்கறி உணவுகளுக்கு பதிலாக இறைச்சி உணவுகளை அதிகமாக உணவு எடுக்க வேண்டும் என யோசனை முன்வைப்பதாகவும் ஆனந்த ஜயலால் குறிப்பிட்டுள்ளார்.
க.பொ.த. சாதாரண தரத்தில் சித்தி பெறாதவர்களுக்கும் உயர்தரக் கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு இந்த ஆண்டு தொடக்கம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான முன்னோடிப் பரீட்சார்த்த செயற்பாடு இந்த ஆண்டு அக்டோபர் தொடக்கம் 42 பாடசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதன் கீழ் தொழிற்பயிற்சிகளை பெற்றுக் கொடுத்தல், பிரதேச ரீதியான கைத்தொழில் துறைகளுக்குத் தேவையான அறிவைப் பெற்றுக் கொடுத்தல், உள்நாடு மற்றும் சர்வதேச ரீதியில் கூடுதல் வாய்ப்பைக் கொண்டுள்ள தொழில்துறைகளில் மாணவர்களைப் பயிற்றுவித்தல் மற்றும் மாணவர்களுக்கு மூன்றாம் நிலைக்கல்வியோடு உயர்கல்வியையும் பெற்றுக் கொடுத்தல் ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் எதிர்வரும் ஆண்டுகளில் சகல மாணவர்களும் 13 வருடங்கள் வரை பாடசாலைக் கல்வியை தொடரும் வாய்ப்புக்கிடைப்பதுடன், தொழிற்பயிற்சியொன்றைப் பெற்ற நிலையில் பாடசாலையை விட்டு வெளியேறும் வாய்ப்பும் அதன் மூலம் வருமானத்திற்கான வழியை உருவாக்கிக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் நாட்களில் நாட்டில் கடும் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
மேல் மாகாணம், தென் மாகாணம் மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான மழைவீழ்ச்சி மேலும் அதிகரிக்கலாம் என்று வானிலை அவதான நிலையத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரித்துள்ளது.
அதேநேரம் வடக்கு மற்றும் வடகீழ், வடமேல் பிரதேசங்கள் மற்றும் கடற்பகுதியில் வேகமான காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன்காரணமாக கடற்பிராந்தியத்தில் ஆக்ரோசமான அலைகளுடன் கொந்தளிப்பான நிலையும் ஏற்படலாம் என்பதால் அவதானமாக நடந்து கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதே நேரம் இரத்தினபுரி மாவட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருப்பதாகவும், அப்பிரதேசத்தில் 90 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
பஞ்சாங்கங்களுக்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 20 மற்றும் 21 ஆம் திகதி நவராத்திரி விரதமாக காணப்படுகின்றது.
வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையில் 20 திகதியும், திருக்கணித பஞ்சாங்கம் படி 21 ஆம் திகதியும் நவராத்திரி விரதம் ஆரம்பமாகுகின்றது.
20 ஆம் திகதி ஆலயங்களிலும், வீடுகளிலும் நவராத்திரி விரத பூஜைகள் நடத்துவதற்கு உகந்த நாளாக அமைகின்றது.
அத்துடன் 21 ஆம் திகதி நவராத்திரி விரத கும்பஸ்தாவனம் செய்வதற்கு சிறந்த நாளாகும். இந்துக்களின் வழிபாட்டு ரீதியாக நவராத்திரி விரத ஆரம்பம் 21 திகதியாகும். இந்த பூஜைகள் தொடந்தும் ஒன்பது நாட்கள் இடம்பெறும்.
பயணிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளுக்கு தனியான ஒரு நிறத்தை அறிமுகம் செய்ய வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தீர்மானித்துள்ளது.
அவ்வாறு செய்வதன் ஊடாக வாடகை முச்சக்கர வண்டியை இலகுவாக அடையாளம் காண முடியும் என அந்த சபையின் தலைவர் சிசர கொதாகொட தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த போக்குவரத்து வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் நிறம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தீர்மானம் மேற்கொள்ளப்பட்டவுடன் நிறம் மாற்றப்படும். இதற்கு மேலதிகமாக நிறம் மாற்றப்பட்ட முச்சக்கர வண்டிகளுக்கு இலட்சினை ஒன்றும் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் தற்போது 11 லட்சத்திற்கு அதிகமான முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 9 லட்ச முச்சக்கர வண்டிகள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா கற்குளம் பகுதியில் பெண்ணின் சங்கிலியை அபகரித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
இன்று (18.09) பிற்பகல் 4 மணியளவில் ஆசிரியை ஒருவர் மோட்டார் சைக்கிளில் கற்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற வேளையில் அவரது வீட்டு நுழைவாயிலில் வைத்து கறுப்பு நிற பல்சர் பைக்கில் வந்த இனம் தெரியாத இருவர்கள் இவரது கழுத்திலிருந்த தங்க சங்கிலியை அபகரித்து சென்றுள்ளனர்.
குறித்த நபர்கள் இருவரும் வன்னிகோட்டம் சந்தியிலிருந்து குறித்த ஆசிரியை பின் தொடர்ந்து சென்று மக்கள் நடமாட்டம் இலையென்பதை அவதானித்த பின்னர் சங்கிலியை அபகரித்துள்ளனர்.
இவ் விடயம் குறித்து சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து வவுனியா பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா பாரதிபுரத்தில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதாக கிடைக்கபெற்ற ரகசிய தகவலையடுத்து இன்று (18.09) நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று காலை 10 மணியளவில் வீட்டு காணியை தோண்டும் பணிகள் இடம்பெற்றபோது எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை.
இன்று காலை விஷேட அதிரடிபடையினரின் பாதுகாப்பு அப்பகுதியை சுற்றி பலப்படுத்தப்பட்டிருந்தது. 10 மணியளவில் அவ்விடத்திற்கு சென்ற வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிசார், விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வாளர்கள், கிராமசேவையாளர் முன்னிலையில் சந்தேகத்திற்கிடமான இடத்தை தோண்டும் பணியை மேற்கொண்டனர்.
தோண்டப்பட்ட கிடங்கில் தகர பரல் மட்டுமே காணப்பட்டது. அப் பகுதியில் வேறு சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் கிடைக்காததனால் தோண்டப்பட்ட இடம் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அப்பகுதியில் மலசல கூட பாவனைக்காக தகரத்தை பாவித்திருக்கலாம் என விஷேட அதிரடி படையினர் தெரிவித்தனர்.
வவுனியா கூமாங்குளத்தில் இன்று (18.09) காலை 9.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்
வவுனியா கூமாங்குளத்தில் வசித்துவரும் பாஸ்கரன் விதுசன் (வயது 20) என்ற இளைஞன் கடந்த ஆண்டு க.பொ.த உயர்தர விஞ்ஞான பிரிவில் பரீட்சை எழுதியிருந்தார். இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார்.
இன்று காலை வீட்டில் குறித்த இளைஞனும் தாயாரும் இருந்துள்ளனர். தாயார் கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு கடைக்கு சென்று வீடு திரும்பிய போது வீட்டின் அறையினுள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் அடிக்கடி கல்வி விடயம் சம்பந்தமாக கதைப்பதாகவும் இந்த முறை எவ்வாறு பெறுபேறு வருகிறதோ என பெற்றோரிடம் கவலையுணர்வுடன் கதைப்பதாகவும் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
தற்போது சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் சம்பள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தடைப்பட்டுள்ள மின் விநியோகம் சீர் செய்யப்படாமையினால், மக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
சம்பள பிரச்சினையை அடிப்படையாகக் கொண்டு, மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் கடந்த 13 ஆம் திகதி இந்த பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தது.
2014 ஆம் ஆண்டில் மின் பொறியியலாளர்களை விசேட பிரிவினராக கருத்திற்கொண்டு வழங்கப்பட்ட சம்பள உயர்வை போன்று தமது சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும் அல்லது பொறியியலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வு நீக்கப்பட வேண்டும் என பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மக்களுக்கு எவ்வித அசௌகரியங்களும் ஏற்படவில்லை என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன கூறுகின்றார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆலோசனைகள், அமைச்சின் செயலாளரினால் மின்சார சபையின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பில் இன்று தீர்மானமொன்று எட்டப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பில், இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர் சங்கம் ஆகியன இன்று நள்ளிரவு முதல் இணைவதற்கு தீர்மானித்துள்ளன.
இதேவேளை, ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் இராணுவத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன தெரிவித்தார்.
எவ்வாறாயினும், தமது வேண்டுகோளுக்கான தீர்வு வழங்கப்படாமையினால் தொடர்ந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் குறிப்பிடுகின்றன.
பத்தரமுல்லைப் பிரதேச அரச அலுவலர்களின் அலுவலக நேரங்களில் நெகிழ்ச்சியினைச் செயற்படுத்தும் முன்னோடித்திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுமென அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
இதுதொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம், கொழும்பு நகரத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக முற்செயற்பாட்டுத் திட்டமிடலின் ஆரம்பகட்டமாக பத்தரமுல்லைப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றும் அலுவலர்கள் இன்று திங்கட்கிழமை முதல் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரையான மூன்று மாத காலத்திற்கு இந்த நெகிழ்வான நேரத்தை திணைக்களத் தலைவரின் அனுமதியுடன் பெற்றுக்கொள்ள முடியும்.
இதன் பிரகாரம், காலை 7.30 மணிக்கும் மாலை 5.00 மணிக்குமிடையிலான காலத்தினுள் மோட்டார் வாகன சாரதிகள் 9 மணித்தியால சேவைக் காலத்தினையும், கனிஷ்ட அலுவலர்கள் 8 மணி 45 நிமிட சேவைக் காலத்தினையும், ஏனைய அலுவலர்கள் 7 மணி 45 நிமிட சேவைக்காலத்தினையும் கொண்டதாக நாளொன்றுக்கான வேலை நேரம் இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச்சேவை நேரத்தில் அலுவலகத்திற்கு வரும் நேரமானது காலை 7.30 மணிக்கும் 9.15 மணிக்குமிடைப்பட்டதாகவும், அலுவலகத்தை விட்டு வெளியேறும் நேரமானது பிற்பகல் 3.15 மணிக்கும் மாலை 5 மணிக்குமிடைப்பட்டதாகவும் இருத்தல் வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, பொதுமக்களுக்கு சேவை வழங்குவதற்காக சகல அரச அலுவலர்களும் குறிக்கப்பட்ட அலுவலக நேரங்களுக்கு ஏற்ப காலை 9.15 மணி தொடக்கம் பிற்பகல் 3.15 மணிக்கிடையிலான காலத்தினுள் கட்டாயமாக கடமையில் ஈடுபட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர, நிறுவனத்தின் நடவடிக்கைகளை தடையின்றி முறையாக நடத்திச் செல்வதற்கு முடியுமான வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்வதன் கீழ் அலுவலர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் என்ற இரு தரப்புக்களினதும் முன் அனுமதியுடன் நெகிழ்ச்சியான அலுவலக நேரத்தில் தனது நிறுவனத்தினுள் செயற்படுத்த நிறுவனத் தலைவர்கள் பொறுப்புடன் இருத்தல் வேண்டுமெனவும் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், நெகிழ்ச்சியான அலுவலக நேரத்தினை செயற்படுத்தும் காலப் பகுதியினுள் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் தமக்கு உரிய பொதுவான அலுவலக நேரம் தவிர்ந்த நேரமொன்றினை தமது அலுவலக நேரமாகக் கருதுவதற்கு உடன்பட்ட எந்தவொரு அலுவலருக்கும் அரசாங்க நிர்வாக சுற்றுநிருபத்தின் மூலம்
ஏற்பாடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடமைக்கு சமுகமளிக் கும் போதும், கடமை முடிந்து வெளியேறும் போதும் ஏற்ப
டும் தாமதங்கள் மற்றும் அத்தாமதங்களை ஈடுசெய்வதற்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் எதுவும் பெற்றுக் கொடுத் தல் கூடாதென அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. 100 நாட்களை எட்டவிருக்கும் நிலையில் அடுத்த சீசனுக்கான தெரிவு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
துருவங்கள் பதினாறு படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் தமிழ் பிக் பாஸ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய அவர் “எனக்கு பிக் பாஸ் ஷோவில் கலந்துகொள்ள அழைப்பு வந்தது, ஆனால் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் நிச்சயம் இரண்டாவது சீசனில் கலந்துகொள்வேன்” என கூறியுள்ளார்.
மேலும் இதில் மாப்பிள்ளை சீரியல் புகழ் ஸ்ரீஜா, தெய்வமகள் புகழ் கிருஷ்ணா, பிரபல தொகுப்பாளினி DD, கலக்க போவது யாரு பாலா, நடிகை ரம்பா, சரவணன் மீனாட்சி புகழ் ரியோ மற்றும் ரச்சிதா, காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி, நடிகை சினேகா, கலக்க போவது யாரு கதிர், நடிகை ரியமிக்கா, மைனா நந்தினி, மற்றும் பிரபல வில்லன் ரியாஸ் ஆகியோர் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் உறுதியான தகவல்களை எதிர்பார்க்கலாம்.
சத்தீஷ்கர் மாநிலத்தில் புளுவேல் படம் வரைந்து இருந்த 24 வயது இளம் பெண் மீட்கப்பட்டார்.
சத்தீஷ்கர் மாநிலம் காஷ்பூர் மாவட்டத்தில் 24 வயது பெண் ஒருவர் புளுவேல் விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார். திமிங்கலம் படத்தை கையில் கீறி வரைந்து இருந்தார்.
இதை கண்டுபிடித்த பெற்றோர் பொலிசார் உதவியுடன் அவரை ‘புளுவேல்’ விளையாட்டில் இருந்து மீட்டனர். அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் அளித்து பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர்கள் புளுவேல் விளையாட்டில் ஈடுபடாமல் தடுக்க பொலிசார் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் சோதனை நடத்தினார்கள்.
அப்போது பலோட் மாவட்டத்தில் சில மாணவர்களின் கையில் சிராய்ப்பு காயங்கள் இருந்தது. அது புளுவேல் சின்னமா என பொலிசார் விசாரித்தனர். ஆனால் மாணவர்கள் தாங்கள் புளுவேல் விளையாட்டில் ஈடுபடவில்லை என்று மறுத்தனர்.
தன்டேவடாவில் அரசு பள்ளி மாணவர்கள் 14 பேர் கையிலும் இதுபோல் சிராய்ப்பு காயம் இருந்தது. அவர்களும் நாங்கள் ‘புளூவேல்’ விளையாட்டில் ஈடுபடவில்லையென்று மறுத்தனர்.
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றின் பின்பகுதியில் உள்ள நான்காம் வாய்க்கால் வீதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விடுதியில் இரு இளைஞர்கள் மது அருந்திக் கொண்டிருந்த போது அவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில் அது இரு குழுக்களுக்கிடையேயான மோதலாக மாறி வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இதன் போது படுகாயமடைந்த நால்வரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதில் ஒருவர் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய மூவரும் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பதில் பொறுப்பதிகாரியும், சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரியுமான உப பரிசோதகர் சுமணசிறி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விசாரணையின் போது சந்தேக நபர்கள் நால்வரின் பெயர்கள் பெறப்பட் டுள்ளன. இருந்த போதும் இதுவரை எவ ரும் கைது செய்யப்படவில்லை.
நாடு முழுவதும் மின்சார சபை ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாளை முதல் மின்சார சபை அதிகாரிகளும் அதில் இணைந்து கொள்ளவுள்ளதாக மின்சார சபை பொது ஊழியர் சங்க தலைவர் மாலக விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மின்சார ஊழியர்களும் நேற்று முதல் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக பொய்லர்களுக்கு நீர் வழங்கும் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்னும் 4 நாட்கள் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் மின்சாரம் வழங்கும் நடவடிக்கைகளுக்கு பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படும் ஆபத்து ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பேசித் தீர்த்துக் கொள்ள வாய்ப்புள்ளதாக நாளை முதல் போராட்டத்தை கைவிடுமாறு போராட்டக்காரர்களை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டிய கேட்டுள்ளார்.
மின்சார சபையில் இடம்பெறும் ஊழலை நிறுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைத்து நாடு தழுவிய ரீதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று வயது சிறுவனின் மண்டை ஓட்டிலிருந்த துப்பாக்கி ரவை வைத்தியர்களால் வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது.
கேகாலை கஜுகஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்த 3 வயதுடைய சிறுவனுக்கு சத்திர சிகிச்சையின் மூலம் ரவை நீக்கப்பட்டுள்ளது.
பயிர் செய்கைகளை சேதப்படுத்தும் குரங்குகளை துறத்துவதற்காக பயன்படுத்தப்படும் காற்று துப்பாக்கி பற்றியமையினால் குறித்த சிறுவன் அண்மையில் காயமடைந்தார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று தனது சகோதரரனின் வீட்டிற்கு இந்த சிறுவன் சென்றுள்ளதாகவும், கதவுக்கு அருகில் இருந்த காற்று துப்பாக்கி கீழே விழுந்து வெடித்துள்ளதாகவும் காயமடைந்த சிறுவனின் தாய் தெரிவித்துள்ளார்.
சிறுவனின் சத்தம் கேட்டு சென்ற போது தலை பகுதியில் இருந்து அதிகளவான இரத்தம் வெளியேறியுள்ள நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன் போது பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை மேற்கொண்ட வைத்தியர், சிறுவனின் காது பக்கமாக சென்ற குண்டு மண்டை ஓடுவரை பயணித்துள்ளதாகவும், மேலும் சேதம் ஏற்பட்டால் சிறுவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் குழந்தைகள் தொடர்பான விசேட வைத்தியர் குழுவொன்று மேற்கொண்ட வெற்றிகரமான சத்திர சிகிச்சையின் பின்னர் சிறுவன் இயந்திரத்தின் உதவியுடன் ஆரோக்கியமான நிலைக்கு வந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்களின் பின்னர் நேற்று அந்த இயந்திரம் நீக்கப்பட்டுள்ளதாகவும், சிறுவன் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக வைத்தியர் கபில ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.