அரசாங்க ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் பன்மடங்காக அதிகரிக்கும் என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

இதன்படி விசேட வைத்திய நிபுணர்களின் அடிப்படை சம்பளம் 1 இலட்சது 20 ஆயிரம் ரூபாவாகவும் சாதாரண சாரதி ஒருவரின் அடிப்படை சம்பளம் 28 ஆயிரம் ரூபாவாகவும் அதிகரிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க 2020 இல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மேலதிகமாக 30 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஈட்ட வேண்டியுள்ளது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், அபிவிருத்தி அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் அறிவுத்தும் நிகழ்வு அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரச அதிகாரிகளை எந்த காரணம் கொண்டும் அரசியல்வாதிகள் பகைத்து கொள்ள கூடாது. ஏனெனில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுபவர்கள் அவர்களேயாவர். அரச அதிகாரிகள் உன்னதமான சேவையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதன்போது மனிதன் என்ற வகையில் தவறுகள் ஏற்படலாம். அதற்காக எக்காரணம் கொண்டும் அவர்களை தவறுதலாக நினைத்து விட கூடாது.

எனினும் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அரசியல்வாதிகளை இணைத்து கொள்ளாது செயற்படுவது அரச அதிகாரிகளின் தவறாகும். எக்காரணம் கொண்டும் அரச அதிகாரிகள் சுயாதீனமாக தீர்மானங்கள் மேற்கொள்ளக்கூடாது. அரசியல்வாதிகளுடன் இணைந்து செயற்பட வேண்டும்.

அத்துடன் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை இதுவரை எந்தவொரு அரசாங்கமும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்தோம். இதன்படி 10 ஆயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது. அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வின் பிரகாரம் அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2020 ஆம் ஆண்டு ஆகும் போது பன்மடங்காக அதிகரிக்கும்.

இதன்படி விசேட வைத்திய நிபுணர்களின் சம்பளம் 1 இலட்சது 20 ஆயிரமாக அதிகரிக்கும். அதேபோன்று தற்போது 12 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் பெறும் சாரதிகள் 2020 இல் 28 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொள்வர். இதற்கிணங்க 2020 ஆம் ஆண்டளவில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதற்கு மேலதிகமாக 30 பில்லியன் அரசாங்கம் ஈட்ட வேண்டியுள்ளது.

இருந்த போதிலும் இவ்வளவு தொகை சம்பளத்தை அதிகரித்தும் ஒரு சில அரச அதிகாரிகள் கட்சி போக்கின் அடிப்படையில் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில்லை. முன்னைய ஆட்சியின் கொள்கைகளை கொண்டு செல்வதிலேயே குறியாக உள்ளனர். இது தவறாகும்.

கட்சி பேதங்களின் அடிப்படையில் அரச அதிகாரிகள் செயற்பட கூடாது. அதற்கு மாறாக அரச அதிகாரிகள் என்ற வகையில் இவ்வளவு தொகை சம்பளத்தை அதிகரித்து தந்த அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

இலங்கையில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கை!!

நாட்டில் சீரற்ற காலநிலை நீடித்து வரும் நிலையில் நாளை முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்த வகையில் நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சப்ரகமுவா, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

குடும்பத்தகராறு காரணமாக இளைஞர் தற்கொலை!!

மதவாச்சி – பிஹிவியகொலாவ பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (14.09) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தகராறு காரணமாக 23 வயதுடைய இளம் குடும்பஸ்தர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மதவாச்சி, பிஹிவியகொலாவ பகுதியில் வசித்து வரும் சிசிர குமார (வயது 23) , என்பவருக்கும் அவரது மனைவிக்குமிடையில் சிறு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் அதிகரித்ததன் காரணமாக வீட்டை வீட்டு வெளியேறிய சிசிரகுமார என்ற இளைஞன் வீட்டின் அருகேயுள்ள பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிறையில் திருநங்கையை நிர்வாணமாக்கி பார்த்து சிரித்த தமிழக காவல்துறையினர்!

நீட் தேர்வுக்கு எதிராகவும் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருநங்கை கிரேஸ் பானு என்பவரும் இதற்காக போராடியுள்ளார். இதனால் அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து அவர் பேசும்பொழுது, நீட் தேர்விற்கு எதிராக கடந்த 7-ம் தேதி WTO அலுவலகத்தில் பூட்டுபோடும் போராட்டம் நடத்தினோம். இதன் காரணமாக கைது செய்த போலீசார் மாஜிஸ்திரேட் முன்பு நிறுத்தினார்கள்.
அவர் எங்களை 15 நாள்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், புழல் சிறைக்கு எங்களை அழைத்துச் சென்ற போலீஸார், ‘பெண் கைதிகள் அறையில் வைத்து சோதனை நடத்த வேண்டும் என்றும், அதற்கு நீங்கள் நிர்வாணமாக நிற்க வேண்டும்’ என்றும் கூறினர்.

நான் எதற்கு உங்கள் முன்பு நிர்வாணமாக நிற்க வேண்டும்’ என்று மறுப்பு தெரிவித்து பலமணி நேரம் போராடினேன். என்னுடைய பேச்சைக் காதில் வாங்காதவர்களாக அவர்கள் பிடிவாதமாக என் ஆடையைக் களையச் செய்தனர் .அதைவிடக் கொடுமை, அறுவை சிகிச்சை செய்துகொண்ட இடத்தைப் பார்த்துக் கிண்டல் செய்து சிரித்தனர். அதைப் பார்த்துத் துடிதுடித்துப் போனேன்.

எங்களை பெண்கள் அல்லது ஆண்கள் சிறையில் வைக்க வேண்டும். ஆனால் தொற்றுநோயுள்ள கைதிகளை அடைத்துவைக்கும் இடமான தொற்றுத் தடைப்பிரிவில் அடைத்துவைத்தனர் என கூறினார்.

யாழில் 14 வயது சிறுமியிடம் தவறான முறையில் அணுகிய உத்தியோகத்தர் !!

மண்டைதீவு 3 ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் 14 வயதுச் சிறுமியை தவறான முறையில் அணுகியதை தனது தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்தது தொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுவர் பாலியல் உரிமை மீறல்கள் மற்றும் சிறுமி சகிதம் வேலணை துறையூரில் வசிக்கும் குறித்த சமுர்த்தி உத்தியோகஸ்தருக்கு எதிராக பெற்றோர் ஊர்காவற்துறைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் மண்டைதீவு 3 ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் அந்த பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியை தனது அலுவலகத்திற்குள் அழைத்து தவறான முறையில் அணுகியுள்ளார்.

அத்துடன், அவற்றினை தனது தொலைபேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இவற்றினை அவதானித்த சிலர், சமுர்த்தி உத்தியோகஸ்தரின் தொலைபேசியை பறித்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் ஊர்காவற்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசைக் கவிழ்க்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வேன்!

வருங்காலத்தில் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க செய்யக் கூடிய அனைத்தையும் முன்னெடுக்கவுள்ளதாக, முன்னாள் பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

தன்னை பதவி நீக்கம் செய்தமை தொடர்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

கட்சிகள் இரண்டிலும் சிறந்தவர்கள் இருப்பதாக குறிப்பிட்ட அவர், குழப்பம் இருப்பது, அரசாங்கம் தொடர்பிலேயே தவிர ஜனாதிபதியுடன் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசாங்கம் சிற் சில விடயங்கள் தொடர்பில் தவறான செயற்பாடுகளை பின்பற்றுவதாகவும், அதனை விமர்சிப்பதில் ஒருபோதும் தவறில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை பிளவுபட்டுக் காணப்படும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைத்து அரசாங்கத்தை ஸ்தாபிப்பதே எதிர்கால எதிர்பார்ப்பு எனவும் அருந்திக்க பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகவிலாளரின் வீட்டில் 40 பவுன் தங்க நகை திருட்டு!

யாழ். வடமராட்சி உடுப்பிட்டி தெற்கு பதினாறாம் கட்டைப் பகுதியில் ஊடகவியலாளரொருவரின் வீட்டின் யன்னலை உடைத்து உள் நுழைந்த திருடர்கள் 40 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டின் உரிமையாளர்களான ஊடகவியலாளர் மற்றும் அவரது மனைவியும் வேலைக்கு சென்ற பின்னர் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வேலை முடிந்து வீட்டிற்குச் சென்ற வீட்டின் உரிமையாளரான பெண்மணி வீட்டின் யன்னல் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தியுள்ளார். அதனையடுத்து அயலவர்கள் அப்பகுதியில் ஒன்று திரண்டுள்ளனர்.

அதன் பின்னர் வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டு அறையினுள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்க நகைகள் களவாடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இத் திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜப்பானை மூழ்கடிப்போம்; அமெரிக்காவை சாம்பலாக்குவோம்’: வடகொரியா மீண்டும் போர்க்கொடி!

தமது அணுவாயுத பலத்தைப் பிரயோகித்து ஜப்பானை அடியோடு மூழ்கடிக்கப் போவதாகவும், அமெரிக்காவைச் சாம்பலாக்கப் போவதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளது.

வடகொரியா அண்மையில் நடத்திய அணுவாயுதப் பரிசோதனையையடுத்து, அதன் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை பிரேரணை கொண்டுவந்தது.

திங்களன்று கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணையில், வடகொரியாவின் ஆடை ஏற்றுமதியையும், வடகொரியாவுக்கான எரிபொருள் வினியோகத்தையும் தடை செய்வதாக குறிப்பிட்டிருந்தது.

அந்தப் பிரேரணைக்கு ஜப்பானும் அமெரிக்காவும் ஆதரவளித்தன. இதையடுத்தே, அவ்விரு நாடுகளையும் வடகொரியா எச்சரித்துள்ளது.

அமெரிக்காவிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொள்ளும் நாடுகளால் அமைக்கப்பட்டுள்ள அமைப்பு என்றும், சாத்தானின் கருவி என்றும் பாதுகாப்புச் சபையை விமர்சித்திருக்கும் வடகொரியா, அதனுடனான உறவுகளை முறித்துக்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.

தனது ஆறாவாது அணுவாயுதப் பரிசோதனையை கடந்த மூன்றாம் திகதி வடகொரியா நடத்தியிருந்தது. இதுவரை நடத்திய பரிசோதனைகளில் இது மிகுந்த சக்தி வாய்ந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

காபூல் கிரிக்கெட் மைதானத்தை குறிவைத்து தற்கொலைப்படை தாக்குதல்: 3 பேர் பலி

Afghan security police stand guard near the site of a deadly suicide attack outside a cricket stadium, in Kabul, Afghanistan, Wednesday, Sept. 13, 2017. (AP Photo/Rahmat Gul)

காபூல் கிரிக்கெட் மைதானம் அருகே மேற்கொள்ளப்பட்ட தற்கொலைபடை தாக்குதலில் பொலிஸார் உள்பட 3 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அமைந்துள்ள கிரிக்கெட் மைதானத்தில் நேற்று உள்ளூர் அணிகள் பங்கேற்ற கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது.

 

இந்நிலையில், மைதான வாயிலில் அமைக்கப்பட்டிருந்த சோதனை சாவடியைக் கடந்து தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் திடீரென நுழைய முயன்றவேளையில், பாதுகாப்பு பணியிலிருந்து பொலிஸார் குறித்த தீவிரவாதியினை மடக்கி பிடிக்க முயற்சித்த போது,தீவிரவாதி இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறித்த தாக்குதலில் பாதுகாப்புக்கு பணியில் ஈடுப்பட்டிருந்த பொலிஸார் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியாகியதோடு, மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.படுகாயமடைந்த 5 பேரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரிகள் கூறுகையில், தற்கொலைபடை தாக்குதல் நடந்தபோது மைதானத்தில் போட்டி நடைபெற்று கொண்டிருந்தது. கிரிக்கெட் வீரர்களும், கிரிக்கெட் சபை அதிகாரிகளும் பாதுகாப்பாக உள்ளாதாக தெரிவித்தனர்.

மேலும், தற்போது காபூல் கிரிக்கெட் மைதானத்தினை சுற்றி பலத்த பாதுகாப்பு

யாழ்.பல்கலை மாணவர்கள் கொலை சம்பவம் : 5 பொலிஸ் அதிகாரிகளுக்கும் பிணை.!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 5 பொலிஸ் அதிகாரிகளுக்கும் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போது, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த படுகொலை சம்பவம் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி யாழ். கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாணவர்கள் மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது மோட்டார் வாகனம் பாதையை விட்டு விலகியமை காரணமாகவே மாணவர்கள் உயிரிழந்தார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதன் பின்னர், மரணமடைந்த மாணவர்களின் பிரேத பரிசோதனைகளில் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்ததையடுத்து,

இந்த சம்பவம் நடைபெற்ற சந்தர்ப்பத்தில் கடமையில் இருந்த குறித்த 5 பொலிஸ் அதிகாரிகளினதும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கடந்த 11 மாதங்களாக தொடர்ச்சியாக அநுராதபுரம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழக அரசறிவியல்துறை மாணவனான கஜன் (வயது 23) மற்றும் ஊடகக்கற்கை மாணவனான சுலக்சன் (வயது 24) ஆகிய இரு மாணவர்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சியில் கசிப்பு காய்ச்சிய பெண் கைது!

கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக  கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி நியூட்டன் அவுட்ஸ்பேன் தெரிவித்துள்ளார்.

மதுவரி திணைக்களத்திற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று பிற்பகல் குறித்த பகுதியில் சுற்றுவளைப்பு தேடுதலை மேற்கொண்ட போது சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்திசெய்த குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணை நாளை  கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட உதவி மதுவரி பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்

வவுனியா உக்கிளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இரததோற்சவம்!

வவுனியா உக்கிளாங்குளம் அருவருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய இரததோற்சவம் இன்று (14.09.2017) வியாழகிழமை இடம்பெற்றது.

தேர் திருவிழாவில்  பெருமளவான பக்தர்கள்  கலந்து கொண்டதுடன்  காவடிகள் எடுத்து தங்களுடைய நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர்.

 

வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

 
சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

சைட்டம் மருத்துவக்கல்லூரியை மூடக்கோரி அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படும் மாவட்ட மட்டத்திலான எதிர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வவுனியா மாவட்ட அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்பு காரணமாக வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வந்த மக்கள் பல்வேறு சிரமத்திற்கு முகம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் வாகனப் பேரணி!!

 
சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து சைட்டத்திற்கு எதிரான மக்கள் அரண் அமைப்பின் ஏற்பாட்டில் யாழில் நேற்று ஆரம்பிக்கப்பட்ட வாகனப் பேரணி இன்று வவுனியாவை வந்தடைந்து. தொடர்ந்து வவுனியாவில் இருந்து அனுராதபுரத்தை நோக்கி வாகனப் பேரணி ஆரம்பமாகியது.

வவுனியா ஏ9 விதியில் உள்ள புதிய பேரூந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆரம்பித்த குறித்த வாகனப் பேரணி மன்னார் வீதி வழியாக குருமன்காடு சந்தியை அடைந்து வைரவபுளியங்குள் ஊடாகச் சென்று வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியை அடைந்து அங்கிருந்து ஏ9 வீதி வழியாக அனுராதபுரம் நோக்கிச் செல்கின்றது.

தனியார் மருத்துவக் கல்லூரியான சைட்டத்தை நிறுத்து, இலவசக் கல்வியை சிதைக்காதே போன்ற வாசங்களுடன் மோட்டர் சைக்கிள்கள், கார்கள், முச்சக்கர வண்டிகள் என இவ் எதிர்ப்பு ஊர்வலத்தில் பங்குபற்றின.

இப் பேரணியில் வைத்தியர் சங்கம், மருத்துவ பீட மாணவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

வித்தியா படுகொலை விவகாரம் : குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபணம்!

கூட்­டுப்­பா­லியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட புங்­கு­டு­தீவு பாட­சாலை மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தி­யாவின் வழக்கில், சதித்­திட்டம் தீட்­டி­யமை, கடத்திச் சென்­றமை, பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யமை, கொலை செய்­தமை ஆகிய நான்கு பிர­தான குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ள­டங்­கிய 41 குற்­றச்­சாட்­டுக்­க­ளி லும், ஒன்­பது எதி­ரி­களில் முதலாம் மற்றும் ஏழாம் எதி­ரிகள் தவிர்ந்த ஏனைய ஏழு எதி­ரி­க­ளுக்கு எதி­ரா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் நிரூ­பிக்­கப்­பட்­டுள்ளன என்று சட்­டமா அதிபர் திணைக்கள  பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குமார்­ரட்ணம் ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் தெரி­வித்தார்.

அத்­துடன் இவ் வழக்கின் முதலாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் மற்றும் ஏழாம் எதி­ரி­யான பழ­னி­ரூ­ப­சிங்கம் குக­நாதன் ஆகிய இரு­வ­ருக்கும் எதி­ராக எந்­த­வி­த­மான சாட்­சி­யங்­களும் இல்­லை­யெ­னவும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் எடுத்­துக்­கூ­றினார்.

மாணவி வித்­தி­யாவின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்.மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள ட்ர யல் அட்பார் நீதி­மன்றில்  திரு­கோ­ண­மலை மேல் நீதி­மன்ற நீதி­பதி அன்­ன­லிங்கம் பிரேம்­சங்கர் மற்றும் யாழ்.மேல் நீதி­மன்ற நீதி­பதி மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகி­யோரை உள்­ள­டக்கி வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மையில் இடம்­பெற்று வரு­கின்­றது.

இவ் வழக்கு விசா­ர­ணையில் வழக்கு தொடுநர் தரப்பு மற்றும் எதி­ரிகள் தரப்பு சாட்சிப் பதி­வுகள் நிறை­வ­டைந்த நிலையில் நேற்று செவ்­வாய்­க்கி­ழமை 16 ஆவது நாளாக குறித்த வழக்கு இரு தரப்பு தொகுப்­பு­ரை­க­ளுக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது. இதன்­போது வழக்கு தொடுநர் தரப்பு சார்­பாக இவ் வழக்­கினை நெறிப்­ப­டுத்தும் சட்­டமா அதிபர் திணைக்­கள பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் குமார்­ரட்ணம் இவ் வழக்கின் தொகுப்­பு­ரையை மேற்­கொண்­டி­ருந்தார்.

அவர் தனது தொகுப்­பு­ரையில் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

இந்த வழக்­கா­னது புங்­கு­டு­தீவு பிர­தே­சத்தில் இடம்­பெற்ற மிகக் கொடூ­ர­மான ஓர் சம்­பவம் தொடர்­பா­ன­தாகும். இவ் வழக்கில் சந்­தே­க­ந­பர்­க­ளாக கைது செய்­யப்­பட்ட ஒன்­பது பேருக்கும் எதி­ராக சட்­டமா அதி­பரால் 41 குற்­றச்­சாட்­டுக்கள் அடங்­கிய குற்றப் பகிர்வு பத்­தி­ர­மா­னது தயார் செய்­யப்­பட்டு பிர­தம நீதி­ய­ர­சரால் நிய­மிக்­கப்­பட்ட அனு­பவம் வாய்ந்த மூன்று நீதி­ப­திகள் முன்­னி­லையில் விசா­ரணை செய்­யப்­பட்டு வரு­கின்­றது. இவ் வழக்கின் ஆரம்­பத்தில் குறித்த சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்கள் அவர்­க­ளுக்கு வாசித்து காண்­பிக்­கப்­பட்டு அதற்கு அவர்கள் நிர­ப­ரா­திகள் என மன்­று­ரைத்­ததை தொடர்ந்து இவ் வழக்கு சாட்சி பதிவு நட­வ­டிக்­கை­யா­னது ஆரம்­பித்­தி­ருந்­தது.

இவ்­வாறு ஆரம்­பிக்­கப்­பட்ட இச் சாட்சிப் பதிவில் வித்­தி­யாவின் தாயார் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தனது மகள் சம்­பவ தின­மான 2015.05.13 ஆம் திகதி காலை பாட­சா­லையில் சுத்தம் செய்ய வேண்­டி­யி­ருந்­ததால் அன்று காலை 7 மணிக்கும் 7.15 மணிக்­கு­மி­டையில் பாட­சாலை புறப்­பட்டு சென்­ற­தா­கவும் அன்று வித்­தியா தனி­யா­கவே பாட­சா­லைக்கு சென்­றி­ருந்தார் என்றும் தெரி­வித்­தி­ருந்தார். அத்­துடன் வித்­தியா 12 ஆம் திகதி பாட­சாலை செல்­ல­வில்லை எனவும் தனியார் வகுப்பு ஒன்று பார்ப்­பது தொடர்­பாக சென்­று­விட்டு வந்தார் எனவும் அவ்­வாறு தனியார் வகுப்பு பார்த்­து­விட்டு வரும் போதே தன்னை யாரோ பார்ப்­ப­தாக அவர் கூறி­ய­தா­கவும் வித்­தி­யாவின் தாயார் தனது சாட்­சி­யத்தில் கூறி­யி­ருந்தார்.

இவற்­றை­விட மேலும் வித்­தி­யாவின் தாயார் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது வித்­தியா சம்­பவ தினத்­தன்று அணிந்­தி­ருந்த பாட­சாலை சீருடை, புத்­த­கப்பை, துவிச்­சக்­க­ர­வண்டி என அனைத்­தையும் அடை­யாளம் காட்­டி­யி­ருந்தார்.

இதன் பின்னர் குறித்த மாணவி சட­ல­மாக மீட்­கப்­பட்ட போது அங்கு அழுத வித்­தி­யாவின் தாயார் தன்­னிடம், ‘வித்­தியா நேற்று சொன்னாள் தன்னை யாரோ வடி­வாக பார்த்­துக்­கொண்டு இருக்­கின்­றார்கள், பார்க்க வெளி­நாட்­டு­கா­ரர்கள் போல இருக்கு’ என்று கூறியே அழுதார் என ஞானேஸ்­வரன் இலங்­கேஸ்­வரன் இந் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது கூறி­யி­ருந்தார்.

இதே­போன்று வித்­தி­யாவின் கண்­ணா­டி 6 ஆவது எதி­ரியின் வாக்­கு­மூ­லத்தின் அடிப்­ப­டையில் அவ­ரது வீட்டில் இருந்து மீட்­கப்­பட்­ட­தா­கவும் அதனை வித்­தி­யா­வி­னு­ட­யது தான் என வித்­தி­யாவின் தாயார் உறு­திப்­ப­டுத்­தி­யதா­கவும் விசா­ரணை அதி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அத்­துடன் அது வித்­தி­யா­வுக்கு தான் சிபா­ரிசு செய்த கண்­ணாடி தான் என்­பதை கண் வைத்­திய நிபுணர் மல­ர­வனும் அக் கண்­ணா­டியை வித்­தி­யா­வுக்கு விற்­பனை செய்த கண்­ணாடி கடை உரி­மை­யா­ளரும் அதன் பவரை பரி­சோ­தித்­த­வர்­களும் இந் நீதி­மன்றில் தமது சாட்­சி­யங்­களை வழங்­கி­யி­ருந்­தனர்.

மேலும் இவ் வழக்கில் பதி­னொ­ரா­வது சந்­தே­க­ந­ப­ராக கைதுசெய்­யப்­பட்டு பின்னர் சட்­டமா அதி­ப­ரது சிபா­ரிசின் அடிப்­ப­டை யில் பொது மன்­னிப்பு வழங்­கப்­பட்டு அரச தரப்பு சாட்­சி­யாக மாற்­றப்­பட்ட உத­ய­ சூ­ரியன் சுரேஸ்­கரன் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது, மாப்­பிள்ளை என்­பவர் வீட்டில் 5 ஆம், 6ஆம், 2ஆம், 3ஆம் எதி­ரிகள் கள்ளு குடிக்கும் போது 6ஆம் எதிரி தாம் வித்­தி­யாவை காத­லிப்­ப­தா­கவும் அவளை தூக்கி தர வேண்டும் என 2ஆம் எதி­ரி­யிடம் கேட்­ட­தா­கவும் அதற்கு 2ஆம் எதிரி தனக்கு அதற்­காக 23 ஆயிரம் ரூபா பணம் கேட்­ட­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இதன்­படி தானும் 5 ஆம், 6 ஆம் எதி­ரிகள் வித்­தி­யாவின் நட­மாட்டம் தொடர்­பாக அவ­தா­னித்­ததா­கவும் 11 ஆம் திகதி வித்­தியா வேறொரு பிள்­ளை­யுடன் பாட­சா­லைக்கு சென்­ற­தா­கவும் 12 ஆம் திகதி வித்­தியா பாட­சா­லைக்கு செல்­ல­வில்லை என்­பதும் தம்மால் அவ­தா­னிக்­கப்­பட்­ட­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

பின்னர் 13ஆம் திகதி வித்­தியா தனி­யாக வரும் போது வித்­தி­யாவை 6ஆம் எதி­ரியே வழி­ம­றித்­த­தா­கவும் தன்னை காத­லிக்­கி­றாயா? இல்­லையா? என கேட்டு அவ­ரது கன்­னத்தில் அறைந்­த­தா­கவும் இதன்­போது அவ­ரது கண்­ணாடி கீழே வீழ்ந்­த­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார். அதன் பின்னர் வித்­தி­யாவை பல­வந்­த­மாக பற்­றைக்­காட்­டுக்குள் இழுத்து சென்று பாழ­டைந்த வீட்­டிற்குள் படுக்க வைத்து மாறி மாறி பாலியல் வல்­லு­றவு புரிந்­த­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்தார்.

இவ­ரது சாட்­சி­யத்தை போன்றே இவ் வழக்கின் மற்­று­மொரு சாட்­சி­யான கள்ளு விற்­பனை செய்யும் மாப்­பிள்ளை என்­ப­வரும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அவற்­றை­விட இவ் வழக்கில் முன்­வைக்­கப்­பட்ட மற்­று­மொரு சாட்­சி­ய­மான மணி­வண்ணன் தனுராம், தானும் தனது நண்­ப­னான இலங்­கேஸ்­வரன் தனுஜன் என்­ப­வனும் பாட­சாலை செல்லும் போது சம்­பவம் நடந்த அன்று வித்­தியா கட்­டப்­பட்­டி­ருந்த இட­மான பகு­தியில் தனது நண்­பனின் செருப்பு கழன்று வீழ்ந்த போது தான் அதனை இறங்கி எடுத்­த­தா­கவும் அப்­போது அங்கே ரவி மாமா மஞ்சள் நிற ரீசேட்­டுடன் நின்­ற­ தாக சாட்­சி­ய­ம­ளித்தார். அத்­துடன் அங்கு ம்ம்ம்ம் என்ற சத்தம் ஒன்று வந்­த­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

மற்­று­மொரு சாட்­சி­ய­மான பால­சிங்கம் பால­சந்­திரன் என்­ப­வ­ரது சாட்­சியம் பதிவு செய்­யப்­பட்­டது. இது ஒரு முக்­கி­ய­மான சாட்­சி­யமாகும். அதா­வது இச் சாட்­சி­யா­னது யாரு­டைய தூண்­டு­தலும் இன்றி சுயா­தீ­ன­மாக வழங்­கப்­பட்ட சாட்­சி­யாகும். இவ் சாட்சி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது வித்­தி­யாவின் சம்­பவம் நடந்த இடத்தில் அச் சம்­பவ தினத்­தன்று 2ஆம், 3ஆம் எதி­ரி­களை தாம் கண்­ட­தாக சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இதே­போன்று இலங்­கேஸ்­வரன் என்ற சாட்சி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது சின்­னா­லடி பகு­தியில் 2015.05.12 ஆம் திகதி வித்­தியா பஸ் வண்­டியில் இருந்து இறங்கி வீடு நோக்கி துவிச்­சக்­க­ர­வண்­டியை எடுத்­துக்­கொண்டு செல்­லும்­போது வெள்ளை நிற வானில் நின்று 4ஆம், 5ஆம், 8ஆம், 9ஆம் எதி­ரிகள் அவளை பார்த்­துக்­கொண்டு நின்­ற­தாக சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

சாந்­த­ரூ­பினி என்ற சாட்சி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது 5ஆவது எதிரி சம்­பவ தினத்­தன்று சாரத்தை மடித்து கட்­டிக்­கொண்டு ஐயனார் கோவில் பக்கம் சென்­ற­தாக சாட்­சி­ய­ம­ளித்தார். ஆனால் 5ஆவது எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தான் மீன்­பி­டிக்க கட­லுக்கு சென்­ற­தாக கூறினார்.

வேலணை பிர­தேச­ ச­பையில் குறித்த 6ஆவது எதிரி சம்­பவ தினத்­தன்று காலை 9.15 மணிக்கு சென்று 8.15 மணிக்கு சென்­ற­தாக வர­வுப்­புத்­த­கத்தில் கையெ­ழுத்­திட்­டி­ருந்­த­மையும் அதற்­கான சான்­று­களும் மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இவற்­றை­விட இவ் வழக்கில் மற்­று­மொரு முக்­கிய சாட்­சி­யாக பிரேத பரி­சோ­தனை செய்த சட்ட வைத்­திய அதி­காரி உருத்­தி­ர­ப­சு­பதி மயூ­ரதன் சாட்­சியம் காணப்­ப­டு­கின்­றது. இவ­ரது சாட்­சி­யத்தில் வித்­தி­யாவின் சட­லத்தில் தலைப்பகு­தியில் காணப்­படும் காயங்கள் அது ஏற்­பட்­ட­தற்­கான கார­ணங்கள் தொடர்­பா­னவை உத­ய­சூ­ரியன் சுரேஸ்­கரன் மற்றும் மாப்­பிள்ளை என்­பவர் கூறிய சாட்­சி­யங்­க­ளுடன் ஒத்­துப்­போ­வ­தா­க­வுள்­ளது. அதா­வது வித்­தி­யாவை பாழ­டைந்த வீட்டில் கீழே படுக்க வைத்து அவர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்தில் அவ­ரது தலை பல­முறை நிலத்­தோடு உராய்­வு­பட்­டதால் மரணம் ஏற்­பட்­டி­ருக்­கலாம் என சட்­ட­வைத்­திய அதி­கா­ரியின் வைத்­திய அறிக்­கை­யு­ட­னான சாட்­சியம் குறிப்­பி­டு­கின்­றது.

இவ்­வாறு வழக்கு தொடுநர் தரப்பால் முன்­வைக்­கப்­பட்ட எந்­த­வொரு சாட்­சி­யத்­திலும் முரண்­பா­டு­களோ அல்­லது விடு­கை­களோ காணப்­ப­ட­வில்லை. அத்­துடன் அவ்­வாறு முரண்­பா­டுகள் விடு­கைகள் காணப்­ப­டு­வது தொடர்­பாக எதிரி தரப்பு சட்­டத்­த­ர­ணி­களால் சுட்­டிக்­காட்­டப்­ப­ட­வு­மில்லை.

மேலும் இவ் வழக்கில் எதி­ரி­களில் முதலாம் எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தான் தனது சகோ­த­ர­னான 3ஆம் எதி­ரி­யுடன் சம்­பவ தினத்­தன்று ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றுக்கு செல்­வ­தற்­காக துவிச்­சக்­க­ர­வண்­டியில் பேருந்து நிலை­யத்­துக்கு சென்­ற­தாக சாட்­சி­ய­ம­ளிக்­க­வில்லை. ஆனால் 3ஆம் எதிரி மேற்­கூ­றி­ய­வாறு சாட்­சி­ய­மொன்றை முதல் தட­வை­யாக மன்றில் தெரி­வித்தார். எனினும் இவ் வழக்கில் முதலாம் எதி­ரிக்கு எதி­ராக எந்­த­வொரு சாட்­சி­யமும் காணப்­ப­ட­வில்லை.

6ஆவது எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது இவ் வழக்கில் முதல் தட­வை­யாக கூறினார் தம்­மிடம் பொலிஸார் குடி­போ­தையில் வாக்­கு­மூலம் பெற்­ற­தாக. ஆனால் அது தொடர்­பாக குறுக்கு விசா­ர­ணையின் போது எந்­த­வி­த­மான கேள்­வி­களும் பொலிஸார் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது அவர்கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­களால் கேட்­கப்­ப­ட­                 வில்லை.

8 ஆவது எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தன்னை பொலிஸார் சித்­தி­ர­வதை செய்து பின்னர் முகத்தை கழுவி பவுடர் போட்டு வீடியோ எடுத்­த­தாக கூறினார். ஆனால் இது தொடர்­பாக பொலிஸார் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது அது தொடர்­பாக குறுக்கு விசா­ர­ணையில் எந்­த­வி­த­மான கேள்­வி­க­ளையும் அவர்கள் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் கேட்­க­வில்லை. அத்­துடன் இவர் தனது சாட்­சி­யத்தில் தனக்கு கம்­பி­யூட்டர் தொடர்­பாக அனைத்தும் தெரியும் எனவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

இதனை தொடர்ந்து இவ் வழக்கின் 9 ஆவது எதிரி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது தான் ஒரு­முறை இலங்கை வந்தால் தனக்கு 20 இலட்சம் செல­வாகும் என சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார். அப்­ப­டி­யாயின் இவர் வவு­னியா சிறையில் வைத்து இப்லார் ஊடாக நிஷாந்த சில்­வா­வுக்கு 2 கோடி இலஞ்சம் கொடுக்க முற்­பட்­டதை ஏற்­றுக்கொள் ளக் கூடி­ய­தாக இருக் கும். அத்­துடன் இவர் சார்பில் சாட்­சிக்­காக அழைக்­கப்­பட்ட இவ­ரது மனைவி சாட்­சி­ய­ம­ளிக்கும் போது 2015.05.08ஆம் திக­தியில் இருந்து 2015.05.13ஆம் திகதி வரை வெள்­ள­வத்தை ஏஞ்சல் லொட்ஜில் தனது கண­வ­ரான 9ஆம் எதி­ரி­யுடன் இருந்­த­தா­கவும் வெளியே எங்கும் சென்­ற­தில்லை எனவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

ஆனால் குறித்த 9ஆம் எதி­ரி­யான சுவிஸ்­குமார் சாட்­சி­ய­ம­ளிக்கும் போது குறித்த காலப்­ப­கு­தியில் தான் வெளியில் சென்று வந்­த­தாக சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார். அவ்­வாறு பார்க்கும் போது குறித்த இரண்டு சாட்­சி­யங்­க­ளு­க்கு­மி­டை­யே முரண்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றதை அவ­தா­னிக்­கலாம்.

இவ்­வாறு அரச தரப்பு மற்றும் எதிரி தரப்பு சாட்சிப் பதி­வு­க­ளுடன் குறித்த வழக்­கா­னது நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தது. இவ் வழக்கில் குறித்த ஒன்­பது எதி­ரி­களில் முதலாம் எதி­ரி­யான பூபா­ல­சிங்கம் இந்­தி­ர­குமார் மற்றும் 7ஆம் எதி­ரி­யான பழ­னி­ரூ­ப­சிங்கம் குக­நாதன் ஆகிய இரு­வ­ருக்கும் எதி­ராக எந்­த­வி­த­மான சாட்­சி­யங்­களும் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை.

ஆனால் இவ் ஒன்பது பேரில் மேற்கூறிய இருவரும் தவிர்ந்த ஏனைய எதிரிகளான 2ஆம் எதிரி பூபாலசிங்கம் ஜெயக்குமார், 3ஆம் எதிரி பூபாலசிங்கம் தவக்குமார், 4ஆம் எதிரி மகாலிங்கம் சசிதரன், 5ஆம் எதிரி தில்லைநாதன் சந்திரகாசன், 6ஆம் எதிரி சிவதேவன் துஷாந்தன், 8ஆம் எதிரி ஜெயதரன் கோகிலன், 9ஆம் எதிரி மகாலிங்கம் சசிக்குமார் ஆகிய ஏழு பேருக்கு எதிராகவும் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்ட 41 குற்றச்சாட்டுக்களும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளன என்றார்.

தொடர்ந்து குறித்த வழக்கினை விரை வாக நடத்தி முடிக்க ஒத்துழைப்பு வழங் கிய ட்ரயல் அட்பார் நீதிபகளுக்கும், குற்றச் சம்பவம் தொடர்பான விரைவான விசாரணை மேற்கொண்ட குற்றப்புலனா ய்வு பிரிவினர், பொலிஸாருக்கும் வழ க்கு நடவடிக்கையின் போது உதவி வழங் கிய நீதிமன்ற பணியாளர்களுக்கும், சிறை க்காவலர்களுக்கும், எதிரிகள் தரப்பு சட்ட த்தரணிகளுக்கும் இவ் வழக்கு தொடர் பாக  குற்றச் சம்பவம் இடம்பெற்றதில் இருந்து இன்றுவரை இவ் வழக்கு தொட ர்பான செய்திகளை வெளியிட்டு வரும் ஊடகவியலாளர்களுக்கும் சட்டமா அதிபர் சார்பில் தனது நன்றிகளை தெரிவித்து இவ் வழக்கு தொடர்பான தனது இறுதி தொகுப்புரையை நிறைவு செய்திருந்தார்.

இதேவேளை, குறித்த வழக்கு தொடுநர் தரப்பு தொகுப்புரையானது நேற்றுக் காலை 9.40 மணியளவில் ஆரம்பித்து மாலை 4.25 மணிவரை நீண்ட நேரம் இடம்பெற் றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

விமான நிலையத்தில் தங்கம் கடத்திய இரு பெண்கள் கைது !

டுபாயில் இருந்து 7.8 கிலோ கிராம் தங்க நகைகளை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இரு பெண்களை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கும் சுங்க அதிகாரிகள் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க நகைகளின் பெறுமதி சுமார் 40 மில்லியன் ரூபாவெனத் தெரிவித்தனர்.

குறித்த இரு பெண்களும் தங்க நகைகளை இடுப்புப்பட்டிகளுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து வைத்துக்கொண்டுவரும் போது சோதனையிட்ட சுங்க அதிகாரிகள் தங்க நகைகளுடன் குறித்த இருவரையும் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இரு பெண்களிடமும் விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.