புளொட் அமைப்பின் அரசியல் பிரிவான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் நங்கூரம் விளையாட்டுக் கழகத்தினால், வவுனியா தரணிக்குளம் தரணதீபம் விளையாட்டுக் கழகத்தின் கரப்பந்தாட்ட அணி தற்போது நடைபெறும் DSI தேசிய மட்ட போட்டிக்காக மாவட்ட மட்ட போட்டியில் வெற்றியீட்டி தெரிவு செய்யப்பட்டுள்ளது. அவ் அணிக்கான வர்ண சீருடையை வடிவமைத்து வழங்கியுள்ளார்கள்.
சீருடை அறிமுக விழா பாடசாலை மைதானத்தில் நேற்று (10.08.2017) மாலை 04 மணிக்கு கழகத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக புளொட் அமைப்பின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமான க.சந்திரகுலசிங்கம்(மோகன்) கலந்து கொண்டிருந்தார்.
சிறப்பு அதிதிகளாக வவுனியா பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன தலைவர் சு.காண்டீபன், புளொட் இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் வ.பிரதீபன், நங்கூரம் விளையாட்டுக் கழகத்தின் அமைப்பாளர் சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சென்னை மாநகராட்சியில் புழல், காவாங்கரை, பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள இலங்கைப் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 4ஆம் திகதி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட இவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 28 வயதாகிய சுசாந்தினி என்ற இலங்கைப்பெண்ணே உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் புழல் சிறைக்காவலராக இருந்த இசைச்செல்வன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முரண்பாடு கடந்த சில ஆண்டுகளாக மனைவியான சுசாந்தினியையும், 3 குழந்தைகளையும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.
இதனால், மனமுடைந்து போன குறித்த இலங்கைப் பெண்ணான சுசாந்தினி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.
இது குறித்து புழல் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
யாழ். வடமராட்சி அல்வாய் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்த வாள்வெட்டுச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அல்வாய் வடக்கு முத்துமாரியம்மன் கோவிலடியைச் சேர்ந்த வயது நபரே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தெற்காசிய விளையாட்டுப்போட்டியின் கராத்தே சுற்றுப்போட்டியில் இலங்கை வீரர் சௌந்தரராஜா பாலுராஜ்
தொடர்ச்சியாக மூன்றுமுறை (HATRICK) முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தை பெற்றுச்சாதனை படைத்துள்ளார்.
இவர் கிழக்கிலங்கையின் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்புக் கிராமத்தைச் சேர்ந்தவர்.
2014ஆம் 2016ஆம் ஆண்டுகளில் இந்தியா – புதுடில்லியில் இடம்பெற்ற கராத்தே சுற்றுப்போட்டியின் சிரேஸ்ட பிரிவு கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தைப் பெற்றுச் சாதனை படைத்தார்.
இறுதியாக இந்த மாதம் 05ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய கராத்தே சுற்றுப்போட்டியில் முதலிடம்பெற்று மூன்றாவது தடவையாகவும் (HATRICK) தங்கப்பதக்கம் பெற்ற ஒரேயொரு இலங்கைவீரர் என்ற பதிவொன்றையும் (RECORD) ஏற்படுத்தியுள்ளார்.
இவரது பயிற்றுவிப்பாளர் சென்சே பொறியியலாளர் எஸ்.முருகேந்திரன். இவர் வடக்கு, கிழக்கிலிருந்து ஆசிய கராத்தே போட்டிகளுக்கு மத்தியஸ்தராகத் தெரிவான முதல் வீரராவார். இவர் சர்வதேச 5ஆவது டான் கறுப்புப்பட்டி வீரராவார்.
வெளிநாடொன்றில் சிக்கியுள்ள இலங்கையர் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ள இலங்கை தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது.
55 வயதான ஷாந்த ராஜபக்ச என்ற கப்பல் மாலுமியே இவ்வாறு சிக்கியுள்ளதாக அரபு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ராஜபக்ஷ குடும்பத்தை பார்க்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
அவர் பணியாற்றும் கப்பல் கடந்த ஒரு வருடமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கியுள்ளது. அவருக்கு சம்பளமும் இதுவரை செலுத்தப்படவில்லை.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் தனது தந்தை இறந்த போதிலும், அவர் இலங்கைக்கு செல்லவில்லை. தற்போது அவரது மனைவி மாரடைப்பினால் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எம்.வி ஷார்ஜா மூன் என்ற கப்பலில் ராஜபக்ஷ பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குறித்த கப்பல், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடலில் சிக்கியுள்ளது. இந்நிலையில் அங்கிருந்து நாடு திருப்ப வேண்டும் என ராஜபக்ஷ சண்டையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இந்திய நண்பர்கள் ஆறு பேர், அவருடன் அந்த கப்பலில் ஒரு வருடத்தை செலவழித்துள்ள நிலையில் கடந்த மாதம் அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் 55 வயதான ராஜபக்ச இன்னமும் நாடு திரும்ப முடியாமல் காத்திருக்கின்றார்.
2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் முதல் இந்த கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக அரபு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
மாலுமிகளுக்கு எந்த சம்பளமும் வழங்கப்படாத நிலையில் உணவு, நீர் மற்றும் எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவில் நபர் ஒருவரின் உடலில் மின்சாரம் தாக்கியும் அவருக்கு ஒன்று ஆகாமல் இருப்பதும், அதையே பசிக்கு உணவாக அவர் எடுத்து கொள்வதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் Muzzafarnagar பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (42) இவரை மின்சார விளக்கு மனிதன் என தான் பகுதி மக்கள் அழைக்கிறார்கள். காரணம், நரேஷ்குமாரின் உடலில் மின்சாரம் பாய்ந்தால் அவருக்கு ஆபத்து எதுவும் ஏற்படுவதில்லை.
இதோடு, பசி எடுத்தால் பல்புகளை எரிய விட்டு அதன் வயர்களை தனது வாயில் பயமில்லாமல் வைத்து கொள்கிறார்.
இப்படி நரேஷ்குமார் 30 நிமிடங்கள் செய்தால் அவரின் பசி அடங்கி விடுகிறதாம்.
ஒரு முறை ஏதேச்சியாக மின்சார வயரை தொட்டுள்ளார், ஆனால் மின்சாரம் அவர் மீது பாயவில்லை. இதிலிருந்து தான் தனக்கு அபூர்வ சக்தி உள்ளது என நரேஷ் நம்பத் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து நரேஷ்குமார் கூறுகையில், தொலைக்காட்சி பெட்டி, வோஷிங் மிஷின், குளிர்சாதனப் பெட்டி என என எல்லா வகையான மின்சார பொருட்களையும் நான் வெறும் கையால் தொடுவேன்.
என் மீது மின்சாரம் பாயாது, வீட்டில் உணவில்லாத போது மின்சார வயர்களை வாயில் வைத்து கொண்டால் பசி அடங்கி விடும் என தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவின் கார்ன்வால் பகுதியில் மனித கழிவுகள் நிரம்பியுள்ள Polzeath கடற்கரையில் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நீச்சல் அடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கார்ன்வால் பகுதியில் உள்ள குறித்த கடற்கரை பகுதியானது மனித கழிவுகள் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் அப்பகுதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த கடற்கரையில் பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கேமரூன் நீச்சலிடித்துள்ளது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
ஆனால் குறித்த கடற்கரை பகுதியானது டேவிட் கேமரூன் குடும்பத்தாருக்கு மிகவும் பிடித்தமான பகுதியாக இருக்கலாம் என அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே முன்னாள் பிரதமர் கேமரூன் தமது இரு குழந்தைகளுடன் அப்பகுதியை விட்டு சென்ற பின்னர், தண்ணீர் மாசுப்பட்டுள்ளது என்ற எச்சரிக்கை பதாகையை காவலர்கள் சிலர் அப்பகுதியில் நாட்டியுள்ளனர்.
கேமரூன் மட்டுமல்ல அந்த கடற்கரையில் ஏராளமானோர் குளித்து வந்துள்ளதாகவும், எச்சரிக்கை பதாகையை பார்ப்பவர்கள் அங்கு குளிப்பதை தவிர்க்கலாம் எனவும் நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒருமணி நேரத்துக்கும் மேலாக தமது குழந்தைகளுடன் டேவிட் கேமரூன் அந்த மாசுபட்ட தண்ணீரில் நீச்சலடித்துள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் அதிகாரத்துக்கு உட்பட்ட குவாம் தீவை தாக்கப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்திருந்தது. இதன்படி விரிவான வரைபடங்களுடனும், விளக்கங்களுடனும் வடகொரியாவின் அரசு தொலைக்காட்சியில் தாக்குதல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடகொரியா ஏவுகணைப் பிரிவு தளபதி கிம் ராக்கி யோம் தெரிவித்தபோது, அமெரிக்காவின் ஆட்சிக்கு உட்பட்ட குவாம் தீவைத் துல்லியமாக தாக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, ஆகஸ்ட் மாதத்திற்குள் திட்டம் நிறைவேற்றப்படும்.
தாக்குதலின் போது ஒரே நேரத்தில் நான்கு ஏவுகணைகள் செலுத்தப்படும், அந்த ஏவுகணைகள் ஜப்பானின் ஷிமானே, ஹிரோஷிமா, கோயிச்சி பகுதிகளின் வான் எல்லைகள் வழியே குவாம் தீவைத் தாக்கும்.
கிம் ஜோங் உன்னின் கட்டளைப்படி அடுத்தகட்ட நடவடிக்கையை பாதுகாப்பு படைகள் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.
தெற்கு சூடான் நாட்டைச் சேர்ந்தவர் நயாகிம் காட்வெச் (24).
இவர் முதலில் எத்தியோப்பியாவிலும் பின்னர் கென்யாவிலும் அகதிகள் முகாமில் வாழ்ந்து வந்தவர்.
அதன் பின் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த இவர், அமெரிக்கா செல்வதற்கு இடைப்பட்ட காலங்களில் தனது இரண்டு தங்கைகளை இழந்துள்ளார்.
கல்வி பயில அமெரிக்கா சென்ற போது, அங்கு அவர் நிறப்பாகுபாடுகளுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், கேலி, கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளார்.
ஆனால், தற்போது கறுப்பு தேகங்கொண்ட இம்மங்கை மொடலிங் துறையில் உள்ள அனைவருக்கும் சவாலான போட்டியாளராகியுள்ளார்.
நயாகிம்மை மளிகைக் கடையில் பார்த்த நபர் ஒருவர் நீங்கள் ஏன் மொடலிங் துறையைத் தெரிவு செய்யக்கூடாது என்று கேட்டுள்ளார். அதன் பின்னரே அவர் இது தொடர்பாக சிந்திக்க ஆரம்பித்துள்ளார்.
என்னுடைய புகைப்படங்களைப் பார்த்து யார் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. நான் என்னை விரும்புகிறேன். என் கறுப்பு நிறத்தோலை விரும்புகிறேன். பெரும்பான்மையான மக்களிடமிருந்து விலகி நான் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறேன். என்று தன் கருத்தைப் பதிவு செய்து பலரின் புருவங்களை வியப்பில் உயர்த்தச் செய்துள்ளார் நயாகிம்.
இவரின் புகைப்படங்களுக்கும் நேர்மையான பதிவிற்கும் இவரின் ரசிகர்கள் ”Queen of the Dark” என்கின்ற பட்டப்பெயரை வைத்திருக்கின்றார்கள்.
இவர் தனது பட்டப்படிப்பை முடித்து விட்டு, மொடலிங் துறையைத் தெரிவு செய்த போதிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியராக வேண்டும் என்பதுதான் இவரின் ஆசை.
தற்போது நயாகிம்மை இன்ஸ்டாகிராமில் மட்டும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலித்தீன் பாவனையை கட்டுப்படுத்தும் விதமாக கொண்டு வரப்பட்டு ள்ள சட்டவிதிகள் கட்டாயமாக அமுல் படுத்தப்படும் என சுற்றாடல் பிரதி அமை ச்சர் அனுராதா ஜயரட்ன தெரிவித்தார்.
கண்டி ஈ.எல்.சேனாநாயக்கா சிறுவர் நூலகத்தில் இடம் பெற்ற நிகழ்வொன் றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக் கும் போதே அவர் இதனை குறிப்பிட் டார்.
சுற்றாடல் மற்றும் சூழலியல் பாதிப்புகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களை அறிவூட்டும் நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உட்பட இன்னும் பலர் கலந்துகொணடனர். பிரதி அமைச்சர் அனுராதா ஜயரட்ன தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
சுற்றாடலை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் சகல முடிவுகளும் எச்சந்தர்ப்பத்திலேனும் பின்வாங்கும் நிலைக்கு உள்ளாகாது.
சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பாக அரசுக்கு பல்வேறு தடைகள் உருவான போதும், பொலித்தீன் மற்றும் எஸ்பெஸ்ட்டோஸ் பாவனை தொடர்பாக எவ்வித தளர்வும் வழங்கப்படமாட்டாது.
கடந்த காலங்களில் சுற்றாடல் தொடர்பாக நாம் பல்வேறு முடிவுகளை எடுத் தோம். இருப்பினும் அவை அனைத்தின் பின்னாலும் பாரிய வர்த்தக முதலீட்டாளர்கள் இருந்தனர். அவர்கள் பாரிய முதலீடுகளை மேற்கொண்டிருந்தனர். இதனால் நாம் எடுத்த முடிவுகளை மீள் பரிசீலிக்க வேண்டி ஏற்பட்டது.
பொலித்தீன் பாவனை தொடர்பான தடைச்சட்டம் 2006 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் சட்டமாக்கப்பட்டது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாமல்போனது. கட்டுகாஸ்தோட் டையில் கொஹாகொடை என்ற இடத் தில் குப்பைகளால் பாரிய குன்றுகள் உருவாகும் வரை எம்மால் பொலித்தீனைத் தடை செய்ய முடியாது போனது. எஸ்பெஸ்டோஸ் பாவனையிலும் இதே விதமான நிலையே உருவானது.
இப்படியான துறைகளில் முதலீடு செய்தவர்கள் பாதிக்கப்படாத வகையில் அவர்களுக்கு ஏதும் சலுகை வழங்கி மேற்படி கைத்தொழிலை தடைசெய்ய அரசு திட் டமிட்டுள்ளது. அவர்களுக்கு மாற்று வழி களை காண்பிக்க உள்ளோம்.
தற்போது நாட்டில் சுற்றாடல் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும் கடந்த காலத்திலும் இதே நிலைமை காணப்பட்டது.
தற்போது ஜனாதிபதியிடம் சுற்றாடல் தொடர்பான விடயம் கையளிக்கப்பட்டுள்ளதால் அவரால் மட்டும் அதனை மேற்கொள்ள முடியாது என்ற வகையில் பலதரப்பட்டவர்களையும் தெளிவுபடுத்திவருகின்றோம். அதில் ஒரு அங்கமாகவே எமது எதிர்கால தலைவர்கள் என்ற வகையில் பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். 2018 ஆகும் போது எஸ்பெஸ்டோஸ் தடையும் இதே வருடம் செப்டெம்பரில் பொலித்தீன் தடையும் அமுல்படுத்தப்படும். இவை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சகல சட்ட விதிகளும் முறையாக பின்பற்றப்படும் என்றார்.
திருகோணமலை உப்புவெளிப் பகுதியில் 13 வயதுடைய சிறுமியொருவரை, தன்னுடன் விடுதியில் தங்க வைத்திருந்த சிறுவனொருவனை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பாலையூற்று பகுதியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞனையே எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேகநபர், சிறுமியை நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், சிறுமியின் பெற்றோர்களுக்குத் தெரியாமல், சிறுமியை தனது விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சிறுமியின் பெற்றோர், பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய, சந்தேகநபரின் நண்பர்கள் மூலம் குறித்த விடுதியை பொலிஸார் கண்டுபிடித்து, இளைஞனைக் கைது செய்துள்ளனர்.
தற்போது சிறுமி, திருகோணமலை பொது வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓவியா அனைவரும் அறிந்த ஒரு முகம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரின் மனதையும் தொட்டவர். ஒட்டுமொத்த ஆதரவுகளும் இவருக்கு வந்துவிட்டது.
இவரின் இயல்பான குணமாகவே பலரும் பார்க்கிறார்கள். இதில் கலந்துகொண்ட சகபோட்டியாளரான ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் மலர்ந்தது. காதலை தெரிவித்தும் ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால் இருவரும் ஆரம்பத்திலிருந்தே நல்ல நண்பர்கள். பிக்பாஸை விட்டு வெளியே வந்தாலும் இன்னும் ஆரவை நான் காதலிக்கிறேன் என ஓவியா கூறிவருகிறாராம்.
இவ்வளவு நடந்தும் ஆரவ்வின் பெற்றோருக்கு தெரியாமல் இருக்குமா என்ன. அவரின் அம்மா ஓவியாவின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஆரவ் சொல்லிவிட்டால் போதும் ஓவியா தான் என் வீட்டு மருமகள் என கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.
வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று (10.08.2017) இரவு 8.50 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
குருமன்காட்டுச் சந்தியிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த துவிச்சக்கரவண்டியின் மீது அதே பாதையில் பயணித்த மோட்டார் சைக்கில் துவிச்சக்கரவண்டியில் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டியினை செலுத்திச் சென்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் வாணியம்பாடியில் சாமியார் மடம் அருகே சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாணியம்பாடி மேல்நிம்மியம் பட்டையை சேர்ந்தவர் முருகன், இவரது மகன் துளசி சித்தப்பா வீட்டில் வளர்ந்து வந்துள்ளார்.
அப்பகுதியில் ரவி என்ற சாமியார் மடம் வைத்திருக்கிறார், மடம் அருகே தண்ணீர் தொட்டி அமைத்து ஆமை ஒன்றை வளர்த்து வருகிறாராம். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை செய்து வருவது சாமியாரின் வழக்கமாகும்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துளசி காணாமல் போயுள்ளான். சிறுவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை, தண்ணீர் தொட்டியும் மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
அருகே ஆமையும், நாணயங்களும் கிடந்துள்ளனர், இதனால் சந்தேகம் எழுந்த நிலையில் தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்த போது சிறுவன் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சந்திரகிரகணம் அன்று சிறுவனை நரபலி கொடுத்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர், சாமியாரையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக அதிக நிறையுடைய குழந்தையொன்று பிறந்துள்ளது. சாதனைமிகு குழந்தை நேற்று முன்தினம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் பிறந்திருந்தது.
ஆண் குழந்தையான அந்த குழந்தை 5.94 கிலோ கிராம் (11 இராத்தல்) நிறையை கொண்டுள்ளது. கின்னஸ் உலக சாதனை புத்தகத்திற்கமைய, இதுவரையில் உலகில் பிறந்த அதிக நிறையுடனான குழந்தைகள் தரவரிசையில் இந்த குழந்தை 11வது இடத்தை பிடித்துள்ளது.
அதற்கு முன்னர் 22 இறாத்தல் எடையை கொண்ட இரு குழந்தைகள் அமெரிக்கா மற்றும் இத்தாலியில் பிறந்துள்ளது. 19 இறாத்தல் குழந்தை ஒன்றும் 17 இறாத்தல் குழந்தைகள் இரண்டும், 16 இறாத்தல் குழந்தைகள் மூன்றும், 15 இறாத்தல் குழந்தைகள் இரண்டும் பிறந்துள்ளன.
தற்போது ஹொரவல, ஹபுருகல பிரதேசத்தை சேர்ந்த நதீஷா நில்மினி என்ற பெண்ணுக்கு இந்த அதிஷ்ட குழந்தை பிறந்துள்ளது. 28 வயதான அவருக்கு இது முதல் குழந்தையாகும்.
பலபிட்டிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் கப்பில விதானாச்சிகே மற்றும் வைத்தியர் தமித நலின் தலைமையினலான குழுவினர் இணைந்து சிசேரியன் சத்திர சிகிச்சை ஊடாக இந்த சிசுவை பிரசவித்துள்ளனர்.
குழந்தையின் நிறை அதிகம் என்பதை 6 – 7 மாதத்திலேயே அறிந்து கொண்டதாகவும், அதற்கமைய ஆலோசனை வழங்கப்பட்டு, சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுளளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சத்திரசிசிக்சை தங்கள் மருத்துவ வாழ்க்கையில் மறக்க முடியாது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவிலிருந்து இவ்வருடம் 7ஆவது தடவையாக நல்லைக்கந்தன் திருத்தலத்திற்கான வேல் தாங்கிய நடை பாத யாத்திரை எதிர்வரும் திங்கட்கிழமை 14.08.2017 காலை 8.00 மணியளவில் வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரக்காளி அம்பாள் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனுடைய தேர்த்திருவிழா 20ஆம் திகதி நடைபெறவுள்ளதையிட்டு வவுனியா வேப்பங்குளம் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலிருந்து வேல் தாங்கிய நடை பாத யாத்திரை 14ஆம் திகதி காலை ஆரம்பமாகி 20ஆம் திகதி நல்லூர் கந்தன் ஆலயத்தினை அடையவுள்ளது.
பிரதான ஏ9 வீதிவழியாக செல்லும் வீதியிலுள்ள இந்து ஆலயங்களில் தரித்து நின்று அங்கு இடமபெறும் பூஜை வழிபாடுகளிலும் கலந்து 6 நாட்கள் தொடர்ந்து பாதை யாத்திரையாக சென்றுகொண்டு 114 ஆவது ஆலயமாக நல்லலூர் கந்தன் ஆலயத்தினை 20ஆம் திகதி அடையவுள்ளது.
இதில் கலந்து கொள்ளவுள்ள பக்தர்கள் 13ஆம் திகதி வவுனியா வேப்பங்குளம் ஆலயத்திற்கு வந்து குறித்த பாதை யாத்திரையில் பங்கு கொள்வதுடன் வேல் தாங்கிய நடை பாத யாத்திரை அடியார்களுக்கு பிரதான ஏ9 வீதியிலிருக்கும் சகல இந்து அறங்காவலர்சபையினரையும் ஆலய குருமார்கள், ஆகியோர் வேல் தாங்கிய நடை பாதை யாத்திரை அடியார்களுக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்குமாறு வவுனியா வேப்பங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய நிர்வாகி அறச்செல்வி கு.ஜெயராணி தெரிவித்தார்.