வவுனியாவில் பாரவூர்தி தடம் புரண்டு விபத்து!!

 
அம்பாறையில் இருந்து கிளிநொச்சி நோக்கி செங்கற்களுடன் சென்ற ஹன்ரர் ரக பாரவூர்தி ஒன்று வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

அம்பாறையில் இருந்து செங்கற்களை ஏற்றிக் கொண்டு ஏ9 வீதி ஊடாக கிளிநொச்சி நோக்கிச் சென்ற ஹன்ரர் ரக பாரவூர்தி வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது குறித்த வாகனத்தின் வில்லுத்தகடு உடைந்தமை காரணமாக கட்டுப்பாட்டையிழந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

எனினும் வாகன சாரதிக்கோ அதில் பயணித்த உதவியாளருக்கோ எந்தவித காயமும் இன்றி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஓவியாவிற்கு திடீர் திருமண ஏற்பாடுகள்!!

பிக்பாஸ் வீட்டிலிருந்து கடந்த சனிக்கிழமை சுயவிருப்பத்தின் பேரில் ஓவியா வெளியேறி விட்டார். தற்போது வீட்டில் இருக்கும் ஓவியாவை சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.

ஆரவுடான காதல் தோல்வி விரக்தியில் இருக்கும் ஓவியாவிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் ஓவியாவிற்கு ஆறுதலாக இருக்க ஒரு ஆண் துணை தேவை, இதனை உணர்ந்தே அவரது உறவினர்கள் திருமண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர், அவருக்காக மாப்பிள்ளையை தேடும் படலத்தை ஆரம்பித்து விட்டனர்.

இந்த விடயத்தை அறிந்த பல தொழிலதிபர்கள், பணக்கார வீட்டு இளைஞர்கள் ஓவியாவை திருமணம் செய்து கொள்ள அவரது வீட்டை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

மேலும், முன்பை விட சினிமா வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த திருமணத்தை நடத்தி முடித்து விட உறவினர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அனேகமாக மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் ஓவியா செல்லாமல் இருந்தால், இந்த நிகழ்ச்சி முடிவதற்குள் திருமணம் நடந்து விடும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்பு கூட ஓவியாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்து இருந்தார்.

இதற்கு பதில் தெரிவித்துள்ள ஓவியா மன்னிக்கவும் எனக்கு இதுல எந்த விருப்பமும் இல்லை. இருந்தாலும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ரோபோக்களுக்கிடையில் கலந்துரையாடல் : ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்!!

பேஸ்புக் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தின் Facebook AI Research (FAIR) ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் இரண்டு செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட ரோபோக்களான பாப் மற்றும் அலைஸ் தங்களுக்குள் பேசிக் கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவை பேசும் மொழி ஆங்கிலத்தைப்போல தெரிந்தாலும் அவை அர்த்தம் புரியாத வகையிலேயே உள்ளது, இந்த மொழி AI ரோபோக்களுக்கு மட்டுமே புரியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பாப் ரோபோ I can can I I everything else என கூறியதற்கு அலைஸ் ரோபோ Balls have zero to me to me to me to me to me to me to me to me to என பதிலளித்துள்ளது.

இரண்டு வாக்கியத்திலும் ‘I’ மற்றும் ‘to me’ என்ற வார்த்தைகள் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன, இதன் அர்த்தம் நமக்கு புரியவில்லை. எனவே AI நிபுணர்களை வைத்து இதற்கு பொருள் என்ன என்பதை கண்டறிந்திருக்கிறார்கள்.

ரோபோக்கள் “நான் மூன்று பொருள்களை எடுத்துக் கொள்கிறேன். மீதி அனைத்தையும் நீ எடுத்துக் கொள்” என்று செல்வது போன்ற உரையாடலையே நிகழ்த்தியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிகழ்விற்குப் பின் பாப் மற்றும் அலைஸ் ரோபோக்களின் செயல்களை பேஸ்புக் நிறுவனம் நிறுத்தி வைத்தனர்.

இதுகுறித்து ஜார்ஜியா டெக் விஞ்ஞானி துருவ் பாத்ரா கூறுகையில், ரோபோக்கள் தெளிவான ஆங்கில மொழியில் தான் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை, ஆனால் ஆங்கில மொழி பயன்படுத்தினால் மட்டுமே ரீவார்ட் பொயின்ட்கள் வழங்கப்படும் என்ற கட்டளையை ரோபோக்களுக்கு கொடுத்தால் இப்படி ஏற்படுவதை நிச்சயம் தடுக்க முடியும் என்று தெரிவித்தார்.

உருகாத ஐஸ்கிரீமை உருவாக்கியுள்ளனர் ஜப்பான் விஞ்ஞானிகள்!!

உருகாத ஐஸ்கிரீமை ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். பொதுவாக ஐஸ்கிரீமை குளிர்பதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து சாப்பிட ஆரம்பிக்கும்போதே உருகி வழிய ஆரம்பித்துவிடும். இதனால், ஐஸ்கிரீமை வேகமாக சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.

இந்த சிக்கலில் இருந்து விடுபடும் விதமாக, ஜப்பானில் கனா ஜவா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருகாத ஐஸ்கிரீமைக் கண்டுபிடித்துள்ளனர்.
அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப 3 மணி நேரம் ஆனாலும் இந்த ஐஸ்கிரீம் உருகாது.

இந்த தகவலை ‘தி டைம்ஸ்’ பத்திரிகை வௌியிட்டுள்ளது.
ஐஸ்கிரீம் மீது முடி உலர்த்தும் கருவி மூலம் வெப்பமான காற்றை விஞ்ஞானிகள் 5 நிமிடங்கள் வீசச் செய்தும் ஐஸ்கிரீம் உருகவில்லை.

பாலிபினால் என்ற திரவத்தை விஞ்ஞானிகள் ஐஸ்கிரீமில் ஊசி மூலம் செலுத்துகின்றனர்.

அந்த திரவம்தான் ஐஸ்கிரீமை உருகாமல் தடுக்கிறது என்று கனா ஜவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஐஸ்கிரீம் சாக்லெட், வெனிலா, ஸ்ட்ராபெர்ரி ஆகிய நறும ணங்களில் வருகிறது.

மடுமாதா திருவிழாவிற்கு சென்றிருந்த இரண்டு பிள்ளைகளின் தாய் மின்னல் தாக்கி உயிரிழப்பு!!

மன்னார் – மடுமாதா திருத்தலத்தின் ஆவணி மாத திருவிழாவிற்கு சென்றிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம், தொடுவாய் பகுதியைச் சேர்ந்த பெண்ணே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மடுமாதா திருத்தல வளாகத்தில் யாத்திரிகர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தின் இரும்புக்கம்பியைப் பிடித்திருந்த சந்தர்ப்பத்தில், மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மன்னார் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

உயரமான ஆண்களை விரும்பும் பெண்கள் : காரணம் என்ன?

ஆண்களின் நிறம் கருப்பாக இருந்தால் பரவாயில்லை ஆனால், உயரும் குறைவாக இருக்கக் கூடாது என்று பெண்கள் நினைப்பார்கள். அப்படி நினைப்பதற்கு பல காரணங்கள் உள்ளது.

பெண்கள் உயரமான ஆண்களை விரும்புவது ஏன்?

உயரமான ஆண்களிடம் பெண்கள் இயல்பாகவே ஒருவித பாதுகாப்பை உணர்கிறார்கள். உயரமான ஆண் தன்னருகே இருந்தால், யாரும் தங்களை சீண்ட மாட்டார்கள் என்ற எண்ணம் பெண்களிடம் உள்ளது.

படுக்கை அறையில் உறங்கும் போது, அவர்களது மார்பு, கால் பகுதிகளுக்குள் ஒரு குட்டி பறவை போல சுருங்கி படுத்து உறங்குவதை பெண்கள் விரும்புவார்கள்.

திடீரென மழை வந்துவிட்டால், உயரமான ஆண்கள் குடை பிடிக்கும் போது, தலையின் மீது படாமல், ஜாலியாக நடந்து செல்லலாம்.

பெரிய அளவில் நடக்கும் ஏதேனும் விழாக்களுக்கு செல்லும் போது, நம்மை கூட்டத்தில் உயரமான ஆண்களால் ஈஸியாக கண்டுபிடிக்க முடியும்.

நடந்து செல்லும் போது கைகளை பிடித்து செல்வது போன்ற சின்ன சின்ன அழகான விடயங்களுக்காகவே உயரமான ஆண்களை பெண்கள் விரும்புகின்றனர்.

உயரமான ஆண்களை கட்டிப்பிடிக்கும் போது அவர்களது இதய துடிப்பை கேட்க முடியும். அவர்களது இதயமும், பெண்களது காதும் ஒரே உயர நிலையில் இருப்பதை பெண்கள் விரும்புகின்றனர்.

உயரமான ஆண்கள் வீட்டில் பல உதவிகளுக்கு சரியான தேர்வாக இருப்பார்கள். மேலடுக்கில் வைத்த பொருட்களை எடுக்க, வைக்க, சில அடிப்படை வீட்டு மேலாண்மை வேலைகள் செய்ய உதவியாக இருக்கும்.

உயரமான ஆண்களை காணும் போது ஒரு ஈர்ப்பு இருக்கும். கருப்பு, வெள்ளை என்று எந்த வேறுபாடுமின்றி அவர்கள் கொஞ்சம் கூடுதல் ஈர்ப்புடன் தோற்றமளிப்பார்கள்.

கட்டார் செல்ல இனி 80 நாட்டவர்களுக்கு விசா தேவையில்லை!!

80 நாடுகளை சேர்ந்த மக்கள் விசா இல்லாமல் காட்டாறுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அந்நாட்டு உள்துறை உத்தரவின்படி இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என கட்டார் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, இந்தியா, தென் ஆபி ரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று உள்ளது.

கட்டார் நாட்டுக்கு வரவிரும்பும் இந்த 80 நாடுகளை சேர்ந்த மக்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கவோ, பணம் கட்டவோ தேவையில்லை. கட்டாருக்கு விஜயம் செய்ய இந்த சலுகையைபெற வரையறை கிடையாது, பல முறை பயணம் மேற்கொள்ளவும் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மற்றும் திரும்பச் செல்லும் டிக்கெட்டை உறுதிசெய்து இந்த பயண சலுகையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகை தரும் பயணிகளின் நாட்டை பொறுத்து பலமுறை பயணம் தொடர்பான காலவரையறையானது 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையில் மாறுபடுகிறது என குறி்ப்பிடப்பட்டுள்ளது.

நடுவீதியில் கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சிறுமி!!

இந்தியாவில் பாடசாலைச் ஒருவர் நடு வீதியில் வைத்து தொண்டை அறுத்து கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம், பலியாவில் உள்ள கிராமத்திலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ராகினி துபே 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், சில தினங்களாக ராகினி பள்ளி சென்று வரும் போது அக்கிராமத் தலைவரின் மகன் கேலி செய்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று ராகினி தனது சகோதரியுடன் பள்ளி சென்றுக்கொண்டிருந்த போது பைக்கில் பின்தொடர்ந்த கிராமத் தலைவரின் மகன் கேலி செய்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த ராகினி அவனை எதிர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த தலைவரின் மகன், ராகினியை நடு வீதியில் இழுத்து போட்டு கத்தியால் சரிமாரியாக வெட்டி தொண்டையை அறுத்து கொன்றுவிட்டு சம்பவயிடத்திலிருந்து தப்பித்துள்ளார்.

இந்நிலையில் கொல்லப்பட்ட ராகினியின் தாய், குற்றவாளியின் பிணம் வரும் வரை தனது மகளின் இறுதி சடங்கை நடத்தமாட்டோம் எனக் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் குற்றவாளியை தீவிரமாக தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

மகனால் வீதிக்கு வந்த கோடீஸ்வரரின் பரிதாப நிலை!!

மிகப் பெரும் கோடீஸ்வராக இருந்த ரேமண்டஸ் நிறுவனர் மகனால் துரத்தப்பட்டதால், பண வசதியின்றி வறுமையில் தவித்து வருகிறார்.

இந்தியாவின் மிகப் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக விளங்கியவர் ரேமண்ட்ஸ் நிறுவனர் விஜய் சிங்கானியா, இவர் முதுமை மற்றும் ஓய்வை கருத்தில் கொண்டு தனது வணிகப் பொறுப்புகளை மகன் கவுதமிடம் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் விஜய் சிங்கானியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், மலபார் ஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தன்னை அனுமதிக்க மறுப்பதாகவும், அதுமட்டுமின்றி மகன் கவுதம் தன்னை தாக்குவதால், குடியிருப்பை தர உத்தரவிடுமாறும் கோரியுள்ளார்.

மேலும் சுமார் ஆயிரம் கோடி மதிப்புள்ள பங்குக்ளை தனது மகனுக்கே கொடுத்துவிட்டதாகவும், இதனால் தற்போது பணமின்றி இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி இது தொடர்பாக ரேமண்டஸ் நிறுவனம் இது தொடர்பாக உத்தரவிட வேண்டும் என்றும் கூறி வழக்கை 22-ஆம் திகதி ஒத்திவைத்துள்ளார்.

வெளிநாட்டில் காதலியின் காதை கடித்த இலங்கையர் நாடு கடத்தப்படும் அபாயம்!!

 

வெளிநாடொன்றில் இலங்கையரின் 6 மாத சிறைத்தண்டனை நீக்குவதற்கான மேன்முறையீடு டுபாய் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் காதலியின் காதை கடித்துவிட்டு அவரது பணப்பையை திருடி சென்ற இலங்கையரின் மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த சமையல்கார் ஒருவரின் கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 34 வயதான இலங்கையர் ஒருவர் தெரு ஒன்றில் இலங்கை பெண்ணின் பின்னால் சென்று அவரது காதின் ஒரு துண்டை கடித்து விட்டு, அவரது பணப்பையை திருடியதோடு அங்கிருந்து தப்பியோடியுளளார். எனினும் சில வாரங்களுக்கு பின்னர், அந்த நபர் மீண்டும் அந்த பெண்ணின் பையை பறித்து பணத்தை எடுத்து விட்டு அடுத்த நாள் திருப்பி கொடுத்துள்ளார்.

எப்படியிருப்பினும் காதை கடித்த சம்பவம் தொடர்பில் அந்த பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

ஜுன் மாதம் டுபாய் நீதிமன்றத்தில் இடம்பெற்ற முதல் வழக்கு விசாரணையின் போது, நிரந்தர இயலாமை காரணமாகவே தான் அந்த பெண்ணுக்கு அவ்வாறு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டவர் தெரிவித்துள்ளார்.

மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முன்னால் முதன்மை தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் மேல்முறையீடு செய்தார்.

எனினும் டுபாய் நீதிமன்ற நீதிபதி Eisa Al Sharif மேன்முறையீட்டினை நிராகரித்து விட்டு 6 மாத சிறைத்தண்டனை உறுதி செய்துள்ளார்.

குற்றவாளியின் சிறைத்தண்டனை நிறைவடைந்த பின்னர் டுபாயில் இருந்து அவரை இலங்கைக்கு நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

வட மாகாணம் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் அடைமழை!!

நாட்டின் பல பகுதிகளின் இன்று மாலை அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் இன்றைய தினம் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளின் வானம் மேக கூட்டத்தினால் நிறைந்து காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் மாலை 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, காலி, கேகாலை, மாத்தறை, பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியாக மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் மழை பெய்யும் பிரதேசங்களிலும் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பிரதேசங்களின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் மழை பெய்யும் தன்மை காணப்படுகின்றது.

ஏனைய கடல் பிரதேசங்களில் இரவு நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடியு மழை பெய்ய கூடும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ஒரு விநாடியில் சோகமயமான திருமண வீடு : மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

 
மணப்பெண்ணின் கார் விபத்தில் சிக்கியதால், குறித்த இடத்திலேயே மணப்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் The Bashkortostan பகுதியில் இடம்பெற்ற கோர விபத்திலேயே 23 வயதான Guzel Zakirova என்ற மணப்பெண் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

திருமணத்திற்கு முன் தனது தோழியுடன் அழகு நிலையத்திற்கு சென்ற Guzel Zakirova, பின்னர் காரில் திருமண விழாவிற்கு திரும்பிக் கொண்டிருந்த போது The Bashkortostan பகுதியில் வைத்து விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார் தெரிவிக்கையில், காரில் வேகமாக வந்த நபர் ஒருவர், காரை முந்த முயன்ற போது Guzel Zakirova காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்து நடந்த இடத்திலேயே மணப்பெண்ணான Guzel Zakirova உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை இவருடன் இணைந்து பயணித்த தோழி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

அதேசமயம், மற்றொரு காரில் பயணித்த நபரும், அவருடன் காரில் இருந்த பெண்ணும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். திருமணத்திற்கு தயாராக இருந்த 26 வயதான மணமகன் Shafikovக்கு இந்த செய்தி பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

விபத்து குறித்து தகவலறிந்த திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால், திருமணத்தால் விழா கோலம் கொண்டிருந்த வீடு ஒரே நிமிடத்தில் சோகமயமாய் மாறியுள்ளது.

இந்த விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் : சவால் விடுக்கும் கிளிநொச்சி இளைஞன்!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரான லசித் மலிங்கவை விட வேகமாக பந்து வீச முடியும் என கிளிநொச்சி – புலோப்பளை பகுதியில் வசித்துவரும் செபஸ்ரியாம்பிள்ளை விஜயராஜ் என்ற இளம் கிரிக்கெட் வீரர் தெரிவித்துள்ளார்.

தான் சிறு வயது முதல் லசித் மலிங்கவின் பந்து வீச்சினை பார்த்து தான் பந்து வீசி பழகி வந்ததாகவும், தற்போது அவரின் வேகத்திற்கு தன்னால் பந்து வீச முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தான் பாடசாலை காலங்களிலேயே மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசித்த கிரிக்கெட் வீரர் என்றாலும் வறுமையின் நிமிர்த்தம் திறமையை உலகறிய செய்ய முடியாமல் இருந்ததாக தெரிவித்துள்ளார்.

விஜயராஜின் திறமையினை அறிந்து கொண்ட வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன், அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், அவருக்கு தேவையான வசதிகளையும் பயிற்சிகளையும் வழங்க முன்வந்துள்ளார்.

இந்நிலையில், விஜயராஜ் விரும்பும் பட்சத்தில் அவரை பொலிஸ் கிரிக்கெட் அணியில் உள்வாங்குவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தயாராக இருப்பதாகவும் வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா தெரிவித்துள்ளார்.

இரண்டு விமானங்களின் இறக்கைகள் மோதி விபத்து!!

 
இந்தியாவின் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்களின் இறக்கைகள் சிக்கி விபத்துக்குள்ளானது.

விமான நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏர் இந்தியா விமான இறக்கையின் மீது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கை மோதி சிக்கியுள்ளது.

விபத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள், பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்போது, விபத்து தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சைகை மொழியில் பேசி மனிதர்களின் மனதை கவர்ந்த குரங்கு மரணம்!!

வட அமெரிக்காவின் வயது முதிர்ந்த ஒராங்குட்டான் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று. ஜோர்ஜியாவில் உள்ள எர்க்ஸ் நேஷ்னல் பிரைமேட் ரிசர்ச் சென்டரில் (Yerkes National Primate Research Center) பிறந்து சான்டென்.

சான்டெக் குறித்து 2014-ஆம் ஆண்டு ஓர் ஆவணப்படம் எடுக்கப்பட்டது. அமெரிக்க சைகை மொழியைக் கற்றுக்கொண்ட மிகச் சில மனிதக் குரங்குகளில் சான்டெக்கும் ஒன்று.

35 வயதை கடந்துள்ள இந்த குரங்கு அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா நகரில் மரணமடைந்துள்ளது

தன் கடைசி நாட்களை இதய நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அட்லாண்டாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் கழித்தது.

பிறருடன் மிகவும் பிணைந்திருக்கும் தன்மை கொண்ட சான்டெக் இல்லாமல் போனது தங்களுக்கு ஒரு இழப்பு என்று மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தன்னை நன்கு அறிந்தவர்களிடம் பேசுவதில் சிறப்பான வழிகளைக் கையாண்ட சான்டெக் ஒரு தனித்துவம் மிக்க ஆளுமை என்று கூறியுள்ளனர்.

சுவிஸில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை!!

சுவிஸ் நாட்டில் St-Gall மாநிலத்தில் வசித்த 22 வயதுடைய சுவிஸ் பிரஜையான தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவமானது St-Gall மாநிலத்தில் வாழும் தமிழ் மக்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிகிழமை (04.08.2017) அன்று, St-Gall மாநிலத்தில் மக்கள் நடமாட்டம் உள்ள நகர் பகுதியில் (St gallen City, Market platz ) ஒரு உணவகத்தின் மத்தியில் அமைந்துள்ள தோட்டப் பகுதியிலேயே இந்த கத்திக்குத்துச் சம்பவம் நடந்ததாக தெரியவருகிறது.

கழுத்தில் ஆழமாக கத்தியால் குத்தப்பட்டுள்ளதால், குறித்த இளைஞன் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சிகிச்சை பலனளிக்காததால் குறித்த தமிழ் இளைஞன் நேற்று 08.08.2017 செவ்வாய்க்கிழமை மரணமடைந்துள்ளார்.

கத்தியால் குத்தியவர் 42வயதுடைய சுவிஸ் பிரஜை எனவும், அவர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாகவும் செங்களான் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்கொலை சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பது இதுவரை தெரியவில்லை.