அரபு நாட்டு இளைஞருடன் தொடர்பு : பிரித்தானியாவில் இளம்பெண் கொடூரக் கொலை!!

பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி இளம்பெண் ஒருவர் சித்தரவதை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரபு நாட்டை சேர்ந்த இளைஞருடன் தொடர்பு வைத்துக் கொண்டதாக கூறி 19 வயதே ஆன இந்திய வம்சாவளி இஸ்லாமிய பெண் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Celine Dookhran என்ற அந்த இளம்பெண்ணை அவரது குடியிருப்பில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர்.

மட்டுமின்றி இவரது தோழி ஒருவரையும் குறித்த தாக்குதலில் கழுத்தை துண்டிக்க முயறிசி நடந்துள்ளது. ஆனால் அவர் குறித்த தாக்குதலில் இருந்து படுகாயத்துடன் தப்பியுள்ளார்.

குறித்த இளம்பெண்கள் இருவரையும் கயிற்றால் பிணைத்து, வாயை மூடி ஒரு போர்வையில் புதைத்து தெருவில் வீசிவிட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பியதாக கூறப்படுகிறது.

Dookhran குடியிருக்கும் வீட்டில் இருந்து 5 மைல் தொலைவில் அவரை கடத்திச் சென்று பாழடைந்த பங்களா ஒன்றில் வைத்து பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் 33 வயதான Mujahid Arshid என்பவர் நேற்று விம்பிள்டன் நீதிமன்றம் முன்னர் ஆஜராகி தமது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். மற்றொரு குற்றவாளியான 28 வயதான Vincent Tappu கடத்தல் மற்றும் பாலியல் குற்றத்திற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.

Dookhran கொல்லப்பட்டது தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையானது வெள்ளிக்கிழமை கொடுக்கப்பட்டு உள்ளது, அவருடைய கழுத்தை அறுத்து கொல்லப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொல்லப்பட்ட Dookhran மேக்-அப் துறை தொடர்பாக படித்து வருகிறார், ஏற்கனவே ஒரு திரில்லர் படத்தில் மேக்-அப் பணியாளராக பணியாற்றியும் உள்ளார். “கொல்லப்பட்ட பெண் லண்டனில் வசிக்கும் அரபிக் இஸ்லாமியரான ஒருவருடன் தொடர்பு கொண்டு இருந்து உள்ளார், இந்திய இஸ்லாமியர் என்பதால் அவர்கள் அதனை ஏற்கவில்லை,” என வழக்கறிஞர் கூறிஉள்ளார். இதுதொடர்பாக குற்றவாளிகளை காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

நீதிபதி இளஞ்செழியனுக்கு விஷேட அதிரடிப் படையினர் அதியுச்ச பாதுகாப்பு!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவிற்கு அமைய விஷேட அதிரடிப் படையினரின் அதியுச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் நீதிபதி மா. இளஞ்செழியனுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போது, நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

இதன் பின்னர், யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை தொடர்பு கொண்டு, நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இதனையடுத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவுக்கு அமைய நீதிபதிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, யாழ். பிராந்தியத்திற்கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியனுக்கு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலான 8 பேர் அடங்கிய பொலிஸார் பாதுகாப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு விசேட அதிரடிப் படையினரின் தளபதி, வட பிராந்தியத்திற்கான விஷேட அதிரடிப் படையின் தளபதிக்கு தொடர்பு கொண்டு, நீதிபதி இளஞ்செழியனுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்தே, வட பிராந்தியத்திற்கான விசேட அதிரடிப் படையின் தளபதி நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு தொடர்பில் நீதிபதியுடன் கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து, நீதிபதிக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு இடைநிறுத்தப்பட்டு, 8 விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அதிரடிப் படையினரின் வாகனத் தொடரணியும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நீதிபதி இளஞ்செழியனின் வீட்டிற்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், அவரது தனிப்பட்ட பாதுகாப்பிற்கும் பொலிஸார் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், யாழ். நல்லூர் பகுதியில் நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் போது உயிரிழந்த நீதிபதியின் மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியை இன்று நடைபெறவுள்ளது.

சிலாபம் தலவத்தையில் நடைபெறவுள்ள இறுதிக் கிரியையில் நீதிபதி இளஞ்செழியன் கலந்து கொள்வதற்காக விஷேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு வழங்கப்படவுள்ள அதேவேளை, அதிரடிப் படையினரின் வாகனத் தொடரணியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் காலினை உயிருள்ளவரின் காலுடன் பொருத்தி சாதனை படைத்த தமிழ் மருத்துவர்!!

 
உயிரிழந்த ஒருவரின் காலுக்கு கீழான உடற்பாகத்தை உயிர் உள்ளவரது காலுடன் பொருத்தி இலங்கையில் தமிழ் மருத்துவர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் யோ.அருட்செல்வன் வெற்றிகரமாக இந்த சிகிச்சையினை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன் முறையாக இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுந்தர் பிச்சைக்கு மேலுமொரு பதவி உயர்வு!!

தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சைக்கு கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஒருவராகப் பொறுப்பேற்றுள்ளார்

தமிழகத்தைச் சேர்ந்தவரான சுந்தர் பிச்சை கடந்த 2004ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

அதன் பின் இவர் 2015ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகச் செயற்பட்டு வருகிறார்.

இவரின் முயற்சியால் கூகுள் நிறுவனம் வலுவான வளர்ச்சி, கூட்டமைப்புகள் மற்றும் மிகப்பெரிய தயாரிப்பு கண்டுபிடிப்புகள் போன்றவற்றைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனம் அவருக்கு இயக்குநர் குழுமத்தில் ஒருவராக பதவி உயர்வு அளித்துள்ளது.

மேலும் அவர் கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓவாக தொடர்ந்து செயற்படுவார் என்றும் கடந்த 19ம் திகதியிலிருந்து இந்த நியமனம் செல்லுபடியாகும் என்றும் அறிவித்துள்ளது.

இது குறித்து ஆல்பாபெட் நிறுவனத்தின் சி.இ.ஓ லாரி பேஜ் கூறுகையில், தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை சிறப்பாகச் செயல்பட்டு வருவதாகவும் அவருடன் பணி புரிவதில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இயக்குநர் குழுமத்தில் அவருடன் இணைந்து பணி புரிய ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தந்தையுடன் வயலுக்கு சென்ற 4 வயது சிறுவனுக்கு நடந்த விபரீதம்!!

சூரியவெவ – விஹாரகல பகுதியில் 4 வயது சிறுவன் நீர் தேங்கிய குழியொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், தனது தந்தையுடன் வயலுக்கு சென்ற கொண்டிருந்த போதே இவ்வாறு விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுவன் சூரியவெவ, விஹாரகல சேர்ந்த கசுன் தனஞ்சய என்ற 4 வயதான சிறுவன் என தெரியவந்துள்ளது.

அத்துடன், தனது தந்தையுடன் வயலுக்கு சென்றுள்ள நிலையில், அங்கு எறும்பு கடிப்பதாக சிறுவன் கூறியுள்ளான். பின்னர் சிறுவனை வீட்டுக்கு செல்லுமாறு கூறிவிட்டு தந்தை புற்களை வெட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் 10 மணியளவில் தந்தை வீடு திரும்பிய நிலையில், மகன் வீட்டில் இல்லாத காரணத்தால் குழப்பமடைந்துள்ளார்.

அதனை தொடர்ந்து அயலவர்களுடன் இணைந்து தனது மகனை தேடும் போது நீர் தேங்கியிருந்த குழியொன்றில் விழுந்து கிடப்பதை பார்த்த தந்தை சிறுவனை சூரியவெவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளதுடன், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் தொடர்பான அவசர மரண பரிசோதனை, சூரியவெவ அவசர மரண பரிசோதகரால் இடம்பெற்ற பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் அம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யுத்தத்தின் கோரத்தை வெளிப்படுத்தும் விநோத கிராமம்!!

 
உலகில் உள்ள பல கிராமங்கள் இயற்கை எழில் கொண்டதாகவும், யுத்த கால வடுக்களையும் கொண்டதாக காணப்படுவதோடு, மன்னர்கள் வாழ்ந்த காலத்தினை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

அந்த வகையில் வரலாற்றுப் பாரம்பரியம் மற்றும் இயற்கை எழில்களைக் கொண்ட பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்ட கவர்ச்சிகரமானதும், தனித்துவமானதுமான கிராமமாக ஹெக்குண்டா காணப்படுகின்றது.

கர்நாடாகா பெங்களூரில் சிறப்பு வாய்ந்ததொரு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கிராமமாக அமைகின்றது.
பெங்களூர் மற்றும் அதனைச் சுற்றிலும் சோழர்களால் கட்டப்பட்ட பல கோவில்களைக் கொண்ட கிராமங்கள் பல உள்ளன.

அத்துடன், கர்நாடாகா பெங்களூரில் சிறப்பு வாய்ந்ததொரு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் கிராமமாக ஹெக்குண்டா கிராமம் காணப்படுகின்றது.

இந்த நிலையில், கி.பி 1115ல் கருங்கற்களினால் கட்டப்பட்ட படிவங்கள் இதற்கு சான்று பகர்கின்றன. கொங்கிறீட் கட்டிடங்களின் முடிவில்லாத வரிசைகள், பழங்கால கல்வெட்டுக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள் என்பன இயற்கையோடு இணைந்ததாகக் காணப்படுகின்றது.

இந்தக் கிராமத்தில் ஏழு கவர்ச்சியான நினைவுச் சின்னங்கள் உள்ளன. ஆஞ்சநேயர் கோயில் மற்றும் இராமர் கோயில் என்பன இந்தக் கிராமத்தில் காணப்படுகின்றன.

துப்பாக்கிகளைக் கையாளும் வீரர்கள் போன்ற நினைவுச் சின்னங்கள் கிராமத்தின் நடுவில் உள்ளது.

மலைகள், பாறைகள், குகைகள், பறவைகள் என்பன வரலாற்றுப் பொக்கிஷங்களாக புத்துயிரூட்டும் இயற்கையுடன் கூடியதாக அமையப்பெற்றுள்ளது.

இன்று புராதன வரலாற்றை எடுத்துக்காட்டும் கிராமங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்கும் ஹெக்குண்டா கிராமத்தில் மகத்தான பாறைக குன்று ஒன்று மிகவும் சுவாரசியமான அம்சமாகும்.

கிராமத்தின் பின்புறம் உள்ள கோபுரத்தின் முகப்புக்கள் தனித்துவமான சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இவை பார்ப்போரை ரசிக்கச் செய்வதோடு மெய்மறக்கச் செய்கிறது. சைவ சமயச் சார்புள்ள இறைவடிவங்களின் எழில் மிகு வேலைப்பாடுகள், மனிதனின் சிந்தையை கவர்கின்றது.

கோபுர சிலைகள் அங்கு வடிக்கப்பட்டுள்ள யுத்த காலத்தை எடுத்துக்காட்டும் கல்வெட்டுக்கள் சிறிய தூண்களில் காட்டப்பட்டுள்ளமை இந்தக் கிராமத்திற்கு உரிய எழிலை மேலும் மெருகூட்டுகின்றது.

வேதனை தரும் தாயாரின் இறுதி தொலைபேசி அழைப்பு!!

இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹரி ஆகியோர் தங்களது தாயார் டயானாவுடனான கடைசி உரையாடல் என்பது ‘விரக்தியடைந்த அவசர தொலைபேசி அழைப்பு’ என்று தங்களுடைய வருத்தத்தை தற்போது மனம் திறந்து பேசியுள்ளனர்.

இளவரசி டயானாவின் உயிர் பிரிந்த போது, இளவரசர் ஹரிக்கு 12 வயது. ”எனக்கு நினைவில் இருப்பது என்னவென்றால் என் வாழ்க்கை முழுவதும் நான் வருந்தும் ஒரே விஷயம் அந்தத் தொலைபேசி அழைப்பு எவ்வளவு குறுகியதாக இருந்தது மட்டுமே” என்கிறார் ஹரி.

உலகை அச்சுறுத்தும் நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் திட்டம் என்றுமே டயானாவை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.

டயானா இறந்து 20 ஆண்டுகளைக் குறிக்கும் ஐடிவி ஆவணப்படத்திற்காக ஹரி மற்றும் வில்லியம் ஆகியோர் மனம் திறந்து பேசியுள்ளனர்.

டயானாவின் கேளிக்கை நிறைந்த வளர்ப்பு குறித்து இருவரும் பேசியுள்ளனர். டயானா அவர்களை குறும்புப் பிள்ளைகளாக இருக்க ஊக்கப்படுத்தியதாகவும், இனிப்புகளை திருடி வந்து கொடுத்ததாகவும் பழைய நினைவுகளை அசை போடுகின்றனர் இளவரசர்கள்.

இந்த நிகழ்ச்சியில், டயானாவுடன் இளவரசர்களின் எடுத்துக் கொண்ட, இதுவரை வெளிவராத புகைப்படங்கள் இடம்பெறுவது சிறப்பு அம்சமாகும்.

இளவரசர் ஹரி மற்றும் இளவரசர் வில்லியம் ஆகிய இருவரும் டயானாவின் தனிப்பட்ட புகைப்படங்களை பார்த்தபடியே தாயுடனான தங்களது அழகிய நினைவுகள் குறித்து உரையாடினர்.

தாய் டயானா மரணத்தால் நிலைகுலைந்த இளவரசர் ஹரி “அரச குடும்பத்திற்கு வெளியே இருக்க விரும்பினேன்” என்று முன்னொரு தடவை கூறியிருந்தார்.

இளவரசர் ஹரி இந்த நிகழ்ச்சியில் முதலில் கலந்து கொள்வதென்பதால் சற்று அச்சுறுத்தலுடன் காணப்பட்டார். இளவரசர் வில்லியம், ஆனால் இதுவொரு குணப்படுத்தும் செயல்முறையாக இருந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

”எங்களுடைய வேலையின் மூலம் அவருடைய மரபை வாழ வைக்க நினைத்தோம். அதற்கு இதுதான் பொருத்தமான வழியாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்றார் அவர்.

தாய் டயானாவுடனான கடைசி உரையாடல் தனது மூளையில் பெரும் பாரமாக இருப்பதாக கேம்பிரிட்ஜின் கோமகன் ஹரி கூறுகிறார்.

ராணியின் பிறந்த இடமான ஸ்​கொட்லாந்தில் உள்ள பால்மோரல்லில் உள்ள உறவினர்கள் வீட்டில் இளவரசர்கள் இருந்த போது இளவரசி டயானாவின் மரணம் நிகழ்ந்தது.

”ஹரியும், நானும் அம்மாவிற்கு பிரியாவிடை சொல்லும் அவசரத்தில் இருந்தோம்.

என்ன நடக்கப் போகிறது என்பது இப்போது எனக்குத் தெரிந்திருந்தால் நான் அந்த சம்பவத்தை பற்றியும், பிறவற்றையும் அவ்வளவு எளிதாக எடுத்து கொண்டிருக்க மாட்டேன்,” என்றார் வில்லியம்.அந்த தருணத்தில் தனது தாய் என்ன கூறினார் என்பது நினைவில் இருப்பதாக கூறிய இளவரசர் வில்லியம் உரையாடல் குறித்த தகவல்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

இளவரசி டயானாவின் நகைச்சுவை உணர்வை நினைவு கூர்ந்த இளவரசர் ஹரி, ”அவர் மொத்தமாகவே ஒரு குழந்தையை போல இருந்தார்.” என்கிறார்.

தனது தாய் மிகவும் முறை சாராதவராகவும், சிரிப்பு மற்றும் சந்தோஷத்தை மிகவும் விரும்பியதாகவும் இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.

“அவர் ஒரு ஜோக்கர் போன்றவர்” என்று மேலும் தெரிவித்தார் வில்லியம்.

மிகவும் சந்தோஷமான ஒரு தருணம் குறித்து ஞாபகப்படுத்திய வில்லியம், கென்சிங்டன் அரண்மனையில் உள்ள தங்களது வீட்டில் ​மொடல் துறையில் மிகவும் பிரபலமாக இருந்த சிண்டி கிராஃபோர்ட், கிரிஸ்டி டர்லிங்டன் மற்றும் நவோமி காம்பெல் ஆகியோரை தாய் டயானா வீட்டிற்கு அழைத்திருந்ததை கண்டுபிடிக்க பாடசாலையிலிருந்து வந்ததை நினைவு கூர்ந்தார்.

”எனக்கு 12 அல்லது 13 வயதிருந்த போது ​மொடல்களின் போஸ்டர்களை என்னுடைய அறை சுவரில் ஒட்டியிருந்தேன்,” என்று நேற்று வெளியான ‘டயானா, எங்கள் தாய், அவரது வாழ்க்கை மற்றும் மரபு’ என்ற ஆவணப்படத்தில் வில்லியம் தெரிவித்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று!!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெறவுள்ளன.

அவரது சொந்த ஊரான சிலாபம், குமாரகட்டுவில் இன்றைய தினம் இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.

பொலிஸ் சார்ஜன்ட் பதவியிலிருந்து தற்போது உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சரத் ஹேமசந்திரவின் பூதவுடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இவர் கடந்த 15 வருடங்களாக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலராக செயற்பட்டு வந்துள்ளார்.

நீதிபதி இளஞ்செழியனின் நீண்ட கால பாதுகாப்பு உத்தியோகத்தரான சரத் ஹேமசந்திர, யாழ். நல்லூர் வீதியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவியாவிற்கு பதிலாக பார்வதி நாயர்!!

ஓவியா இளைஞர்களின் மத்தியில் ஓங்கி ஒலிக்கும் ஒரே குரல். இவரா இப்படி என ஆச்சர்யபடவைத்துள்ளது. அப்போதுள்ள ஓவியாவைவிட இப்போதிருக்கும் ஒவியாவை தான் பலருக்கும் பிடித்திருக்கிறது.

ஓவியாவிற்கு ஆதரவு பெருகிவருகிறது, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதியுடன் சீதக்காதி படத்திற்காக இறங்கியுள்ளார் இயக்குனர் பாலாஜி தரணிதரன், இப்படத்தில் ஓவியா தான் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தாராம்.

ஆனால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக இருப்பதால் அவருக்கு பதிலாக பார்வதி நாயரை ஒப்பந்தம் செய்தார்களாம், மேலும் இதில் ரம்யா நம்பீசன், காயத்திரி ஆகியோர் நடிக்கிறார்களாம்.

ஸ்கொட்லாந்தில் உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை!!

உலகின் முதலாவது மிதக்கும் காற்றாலை ஸ்கொட்லாந்தில் நிறுவப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஸ்கொட்லாந்து கடலில் மிதக்கும் படகொன்றில் இந்த காற்றாலை உருவாக்கப்பட்டுள்ளதுடன், அதன் அடியில் கடலுக்குள் மிக உயரமான விசையாழிகள் (turbines) பொருத்தப்பட்டுள்ளன.

அவை கடல் நீரை சுழற்றும் போது, காற்றாலையின் காற்றாடி சுற்றும். அதன் சக்தியில் மின்சாரம் உருவாகிறது. இதற்கு ‘ஹைவின்ட்’ (Hywind) என பெயரிட்டுள்ளனர்.

இந்த மின் திட்டத்தை நோர்வேயைச் சேர்ந்த ஸ்டேடோயில் (Statoil) நிறுவனம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதன் பரிசோதனை ஓட்டம் சமீபத்தில் நடத்தப்பட்டது. அதன் மூலம் 20 ,000 வீடுகளுக்கு மின் விநியோகம் வழங்க முடியும்.

இந்த தகவலை ஹைவின்ட் திட்ட இயக்குனர் லீப் டெல்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் செலவு குறையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹைவின்ட் விசையாழிகள் 175 மீட்டர் உயரமானவை. இதன் மூலம் அதிக மின்சாரம் தயாரிக்க முடியும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் வைத்தியசாலையில்!!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தரான இளைஞன் ஒருவன் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபடபட்டுள்ளார்.

இன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா, ஆச்சிபுரம் பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவருக்கும் அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முரண்பாடுகள் ஏற்பட்டு இருந்தது. இதன்போது குறித்த குடும்பஸ்தர் காலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பியுள்ளார்.

அது தொடர்பில் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ் முறைப்பாட்டை மீளப் பெற்று சமாதானமாக செல்வது குறித்து குறித்த குடும்பஸ்தர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் இவரிடம் கோரிய போதும் இவர் அதனை மறுத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த குடும்பஸ்தர் வவுனியா, சமனங்குளம் பகுதியில் நின்றிருந்த போது அவ் இளைஞர்களுடன் ஏற்பட்ட வாய்தர்க்கம் காரணமாக மீண்டும் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் படுகாயமடைந்த குறித்த குடும்பஸ்தர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் வவுனியா, ஆச்சிபுரத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சத்தியசீலன் (வயது 27) என்பவரே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

 

வௌ்ளைச் சுறாவிடம் தோற்ற நீச்சல் மன்னன் மைக்கல் பெல்ப்ஸ்!!

நீச்சல் உலகின் மன்னனாகத் திகழும் மைக்கல் பெல்ப்ஸிற்கும் கணினியால் உருவாக்கப்பட்ட சுறாமீனுக்கும் இடையில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் சுறா மீன் வெற்றி பெற்றது.

கடலில் நடந்த 100 மீட்டர் நீச்சலில், பந்தய இலக்கை முதலில் எட்டுவதில் கணினியால் உருவாக்கப்பட்ட சுறாவுக்கும் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸிற்கும் கடும் போட்டி நிலவியது. வெள்ளைச் சுறா , 36.10 வினாடிகளில் இலக்கை எட்டியது.

ஒலிம்பிக்கில் 28 பதக்கங்களை வென்றுள்ள பெல்ப்ஸ், 38.10 வினாடிகளில் பந்தய தூரத்தை ‌எட்டினார். மனிதர்களின் சராசரி நீச்சல் வேகம் மணிக்கு 8 முதல் 10 கிலோ மீட்டராக உள்ளது.

ஆனால், வெள்ளை சு‌றா மீன்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வரை நீந்தும் ஆற்றல் பெற்றுள்ளன.

கணினியால் உருவாக்கப்பட்ட குறித்த சுறாவுடன் மீண்டும் போட்டியில் பங்கேற்று, அதனை வீழ்த்த தயாராக இருப்பதாக பெல்ப்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

வெளிநாடொன்றில் பெண்ணின் உயிரை காப்பாற்றிய இலங்கையருக்கு கிடைத்த கௌரவம்!!

 
தென் கொரியாவில் தொழிலுக்கு சென்ற சந்தர்ப்பத்தில் தனது உயிரை பணயம் வைத்து வயோதிப பெண் ஒருவரை காப்பாற்றிய இலங்கையர் நாடு திரும்பியுள்ளார்.

ஹசலக மினிபே நிமலசிறி பண்டார என்பவரே இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

2017ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி பகல் 1.10 மணியளவில் தென் கொரிய நாட்டவர் உட்பட மேலும் பல வெளிநாட்டவர்கள் பார்த்து கொண்டிருக்கும் போது தீப்பற்றிய வீட்டின் பின் பக்க கதவினால் சென்று வயோதிப பெண் ஒருவரை இந்த இலங்கையர் காப்பாற்றியிருந்தார்.

இந்த சம்பவத்தினால் நிமலசிறி பாரிய தீக் காயங்களுக்குள்ளாகியிருந்தார்.

இந்த நிலையில் அவரது வீர செயற்பாட்டை கௌரவிக்கும் வகையில் தென் கொரிய அரசாங்கத்தினால் அவருக்கு விசேட விருது ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

அதிரடியாக கொலன்னாவையை கைப்பற்றிய இராணுவம்!!

ஒபேசேகர புர பிரதேசத்தின் நுழைவாயில் ஒன்றின் ஊடாக இராணுவத்தினர் உட்பட பாதுகாப்பு பிரிவு தற்போது கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதிக்குள் நுழைந்துள்ளனர்.

தற்போது எண்ணெய் களஞ்சியத்தை முழுமையான பகுதியின் அதிகாரத்தை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து கொலன்னாவை எண்ணெய் களஞ்சிய தொகுதியிலுள்ள ஊழியர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் குறித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானிக்கு ஜனாதிபதியின் கையொப்பம் கிடைத்திருந்ததாக அரசாங்க அச்சகம் தெரிவித்திருந்தது.

பெற்றோலிய சேவையினை வழங்குவதற்கு தடை ஏற்படுத்துவதை தடுக்கும் நோக்கில் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய இந்த சேவையினை வழங்குவதற்கு இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் ஆயத்தமாகினர்.

இதேவேளை அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் உட்பட பல விடயங்களை அடைப்படையாக கொண்டு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆரம்பித்த பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

நேற்றிரவு நாட்டின் பல பிரதேசங்களின் எரிபொருள் நிறப்பு நிலையத்தில் நீண்ட வரிசை ஒன்று காணப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் எரிபொருள் வழங்குவதற்கு ஆயத்தமாக இருப்பதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அறையில் இருந்து எரிபொருள் கொண்டுவரும் நிலை காணப்படுவதாக கூறப்படுகின்றது.

தொடர்ந்து இந்த பணிப் பகிஷ்கரிப்பு ஏற்பட்டால் பஸ் பயணங்கள் நிறுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தூர இடங்களுக்கான பஸ் பயண சேவைகள் உரிய நேரத்தில் பயணங்களை மேற்கொள்ள முடியாதென குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றைய தினம் பஸ் வண்டிகளுக்கு எரிபொருள் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் பல சேவைகள் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

நாய்களுடனும் பேசலாம் : புதிய கருவி கண்டுபிடிப்பு!!

இன்னும் 10 ஆண்டுகளில் ‘மொழிபெயர்ப்பு கருவி உதவியுடன் நாயுடன் பேச முடியும் என அமெரிக்க பேராசிரியர் ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் தங்களது எஜமானரை பார்த்து குரைக்கும். அதன் மூலம் தனது தேவையை அது வெளிப்படுத்துகிறது. ஆனால் பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

அக்குறையை போக்க கம்ப்யூட்டர் மொழிபெயர்ப்பு கருவி உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வடக்கு அரிசோனா பல்கலைக்கழக பேராசிரியர் கான்ஸ்லோபான்ட்சிகோப் இதை தயாரித்து இருக்கிறார்.

மிசிசிப்பி பள்ளத்தாக்கு பகுதியில் வாழும் நாய்களிடம் அக்கருவியை பொருத்தி பரிசோதனை முறையில் ஆய்வு செய்தார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.

அதன் மூலம் இன்னும் 10 ஆண்டுகளில் நாய்களுடன் பேச முடியும் என அவர் தனது ஆய்வு கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதே முறையில் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளுடன் பேச முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொள்ளும் அடுத்த பிரபல ஜோடி!!

எல்லோருக்கு பிடித்தமான லவ் ஹீரோ ஜெய். இவரும் நஸ்ரியாவும் சேர்ந்து நடித்த திருமணம் என்னும் நிக்காஹ் படம் கடந்த 2014 ல் வெளியானது.இப்படத்தில் நடித்தவர் தீக்‌ஷிதா மாணிக்கம்.

இவர் அகம், நகர்வலம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மாடலழகியான இவர் இசையமைப்பாளர் தரணை காதலித்து வந்தார்.தரண் போடா போடி, சமர், தகராறு, நாய்கள் ஜாக்கிரதை, ஆஹா கல்யாணம் போன்ற 25 படங்களுக்கு இசையமைத்துள்ளாராம்.

இருவரது வீட்டிலும் சம்மதம் கொடுத்துவிட்டதால் இவர்கள் செப்டம்பர் 15ம் திகதி திருப்பதியில் திருமணம் செய்துகொள்கிறார்களாம்.