வவுனியாவில் புதிய பஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துள்ள போதிலும், அது பயன்பாடின்றிப் பாழடைந்து காணப்படுகின்றது.
இதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக அரசியல்வாதிகள் பலமுறை வாக்குறுதியளித்த போதும், அவ்வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமை கவலைக்குரியதே.
195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வவுனியா புதிய பஸ் நிலையம் கடந்த ஜனவரி மாதம் திறந்து வைக்கப்பட்டது.
திறந்து வைப்பதற்காக பெரிய விழாக்களை நடத்தினாலும் இன்று அந்த பஸ் நிலையம் பாவனையின்றி பாழடைந்து காணப்படுகிறது.
கால அட்டவணையை அடிப்படையாக வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும், தனியார் பஸ் ஊழியர்களுக்கும் இடையில் நிலவும் முரண்பாடுகள் காரணமாக புதிய பஸ் நிலையம் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளதுை
இதனால் பஸ்கள் வீதியோரங்களில் நிறுத்தப்படுவதை இன்றும அவதானிக்க முடிகிறது.
195 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய பஸ் நிலையம் மூடப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
பிரித்தானியாவில் முதலாவது முஸ்லிம் ஓரினச்சேர்க்கை திருமணம் இடம்பெற்றுள்ளது.
ஜாஹெத் சௌதிரி என்ற 24 வயதுடையவர், சீன் ரோகன் என்ற 19 வயதுடையவரை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
ஜாஹெத் சௌதிரி தான் ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிந்தமையால் அதை பாலியல் சார்பினை மாற்றிக்கொள்ள யாத்திரைகள் மேற்கொண்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன் சீன் ரோகனை முதல் தடவையாக சந்தித்த ஜாஹெத் சௌதிரி சந்தித்துள்ளார்.அவர்கள் இருவரும் விரைவில் காதலர்களாகிய தற்போது திருமணத்தில் இணைந்துள்ளனர்.
சிம்பாப்வே அணிக்கெதிராக சொந்த மண்ணில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியை அடுத்து அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தலைமைப் பதவியிலிருந்து மத்தியூஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சொந்த மண்ணில் சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரினை தோல்வியடைந்த பின்னரே குறித்த முடிவினை மத்தியூஸ் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தவர் அல்கா கௌஷல். தற்போது இவருக்கு செய்த தவறுக்காக 2 வருட சிறை தண்டனை கிடைத்திருக்கிறது.
அதாவது, இவரும், இவருடைய அம்மாவும் தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வைப்பதாக கூறி ஒரு விவசாயியிடம் 50 லட்சம் வாங்கியுள்ளனர். ஆனால் கடைசி வரை எந்த ஒரு வாய்ப்பும் இல்லை.
இதனால் அவர் தன்னுடைய பணத்தை திருப்பி கேட்ட, அல்கா காசோலை கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த காசோலை இயங்கவில்லை. இதனால் அந்த விவசாயி நீதிமன்றம் செல்ல தற்போது நடிகைக்கு 2 வருடம் சிறைத் தண்டனை கிடைத்திருக்கிறது.
கடந்த தினம் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியின் போது தற்காலிக சேவை அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பணியாளர்களுக்கு இடம்பெற்ற அசௌகரியம் தொடர்பில் இலங்கை கிரிக்கட்ட நிறுவன தலைவர் உள்ளிட்ட நிறைவேற்றுக் குழுவினர் தமது மன வருத்தத்தை வௌியிட்டுள்ளனர்.
இதற்கு காரணமாக கிரிக்கட் நிறுவன அதிகாரிகளிடம் விளக்கம் பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சரியான முறையில் செயற்படுவதற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனம் கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தால் ஊழியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்களை ஈடுசெய்வதற்கு இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் நிறைவேற்றுக் குழு தற்போது தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்பே அணிகளுக்கிடையில் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஆடைகள் கழற்றப்பட்டதன் பின்னரே அவர்களுக்கான சம்பளத்தொகை வழங்கப்பட்டதால் அந்த ஊழியர்கள் அசௌகரிய நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.
நாளொன்றுக்கு 1000 ரூபாய் என்றடிப்படையில் ஏறக்குறைய 100 ஊழியர்கள் நியமிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு நிர்வாகத்தால் வழங்கப்பட்ட காற்சட்டைகளில் இலங்கை கிரிக்கெட் அணியின் இலட்சினை பொறிக்கப்பட்டிருந்ததாகவும் அதனால் அக்காற்சட்டையை மீளப்பெற்றுக்கொண்டதன் பின்னரே சம்பளப்பணத்தை வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அந்த ஊழியர்கள் அரை நிர்வான நிலையில் திரும்பும் நிலை ஏற்பட்டிருந்தது.
யாழ்.காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வேனில் வந்த கும்பலொன்று பாடசாலை சென்றுகொண்டிருந்த மாணவியொருவரை கடத்தி சென்று கூட்டுபாலியல் வண்புனர்வு செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர்.
இருந்தபோதிலும் குறித்த மாணவி கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிப்பதற்கு முயற்சித்ததையடுத்து கடத்தல்காரர்கள் கொடிகாமம் பகுதியில் அம் மாணவியை வேனில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு தள்ளிவிடப்பட்டிருந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை 7.30 மணியளவில் யாழ். காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பகுதியான மல்லாகத்தில் 18 வயதுடைய உயர்தரம் கற்கின்ற மாணவியொருவர் பாடசாலைக்கு சென்றுகொண்டு இருந்துள்ளார்.
இதன்போது வெள்ளைநிற வேனில் கும்பலொன்று குறித்த மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளது.
இவ்வாறு பின்தொடர்ந்து சென்ற 6 பேர் அடங்கிய கும்பலானது குறித்த மாணவி வீதியினை கடப்பதற்காக மஞ்சள் கோட்டினை அண்மித்த போது வேனில் சென்ற கும்பலானது மாணவியை இழுத்து வேனுக்குள் போட்டுக்கொண்டு கடத்தி சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட மாணவியை வேனுக்குள் வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் அம் மாணவியை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளனர். அத்துடன் மாணவிக்கு அருந்துவதற்கு ஏதோ ஒரு பானத்தையும் கொடுத்துள்ளனர்.
இருந்த போதிலும் குறித்த மாணவி அவ் கடத்தல்காரர்களுடன் கடுமையாக போரிட்டதுடன் அவர்கள் அருந்த கொடுத்த பானத்தையும் தட்டிவிட்டு அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு கடுமையாக முயற்சித்துள்ளார். இதனையடுத்து குறித்த கும்பலானது அம் மாணவியை கொடிக்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணி பகுதியில் வேனில் இருந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். வேனில் இருந்து தள்ளிவிடப்பட்ட மாணவி கீழே வீழ்ந்ததால் அவரது காலில் காயமொன்று ஏற்பட்டதுடன் அவ்விடத்தில் மயக்கமடைந்துள்ளார். இதனையடுத்து அங்கிருந்த சிலர் அம் மாணவியை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர்.
சாவக்கச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு காயத்திற்கு மருந்துகள் கட்டப்பட்டிருப்பதாகவும் அவரை மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்துவதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பவுள்ளதாக சாவகச்சேரி வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரை தொடர்புகொண்டு வினவியபோது குறித்த கடத்தல் சம்பவமானது காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட தெல்லிபளை பொலிஸ் நிலைய பகுதியில் இடம்பெற்றுள்ளமையால் இது தொடர்பான விசாரனைகள் காங்கேசன்துறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இடம்பெற்றுவருவதாக அவர் தெரிவித்தா
தவணைப்பரீட்சைக்கு செல்லாமல் தோட்டம் ஒன்றிற்குள் புகுந்து தர்பூசணியை உட்கொண்டதும் இல்லாமல் குறித்த தோட்டத்தின் உரிமையாளரை தங்களுடன் தர்பூசணி சாப்பிடுவதற்கு அழைத்த சம்பவமொன்று வட மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.
பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் குழு ஒன்று தவணைப்பரீட்சைக்கு செல்லாமல் பாடசாலைக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள தர்பூசணி தோட்டத்தினுள் புகுந்து தர்பூசணி சாப்பிடும் அவ் வழியால் சென்ற நபரை தங்களோடு சேர்ந்து தர்பூசணி சாப்பிட வருமாறு அழைத்துள்ளனர்.
குறித்த நபர் ஆவேசமடைந்து கண்ணிமைக்கு நேரத்தில் ஒரே பாய்ச்சலில் கம்பி வேலிக்குள் புகுந்து மாணவர்களை நோக்கி “யாரை கேட்டு நீங்கள் என் தோட்டத்தினுள் புகுந்தீர்கள்” என்று கேட்டுள்ளார்.
தோட்ட உரிமையாளரை சற்றும் எதிர்பார்க்காத மாணவர்கள் அத்தோட்ட உரிமையாளரின் கால்களில் விழுந்து இனி இவ்வாறான தவறை செய்யமாட்டோம் என மன்னிப்புக்கோரி தப்பித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (11.07.2017) மதியம் 3.30 மணியளவில் வவுனியா புதிய பேரூந்து நிலையம் தொடர்பாகவும் வடக்கு மாகாண போக்குவரத்து தொடர்பாகவும் ஒருங்கினைந்த நேர அட்டவணை தொடர்பாகவும் தனியார் மற்றும் இ.போ.ச அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது.
வட மாகாண மோட்டார் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் இ.போ.ச உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண இ.போ.சபையின் உத்தியோகத்தர்கள், தனியார் பேரூந்து அதிகாரிகள், வடக்கு மகாண தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், அமைச்சின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
வவுனியா வேப்பங்குளம் அன்பக பொறுப்பாளர் மீது அவதூறு பரப்புவதாக தெரிவித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டு ஆர்ப்பாட்டகாரர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஞர் ஒன்றினை கையளித்தனர். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார..
வேப்பங்குளம் அன்பகத்தில் கடந்த 29ம் திகதி மரணித்த சிறுமி தொடர்பாக பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் எனது அலுவல உத்தியோகத்தர்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்களும் இணைந்து தனி விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அந்த விசாரணையில் பிள்ளை கல்வி கற்ற பாடசாலை அதிபர், பிள்ளைகள், பிள்ளையின் உறவினர்கள் மற்றும் அன்பக பிள்ளைகளின் வாக்குமூலம் அனைத்தும் பெறப்பட்டுள்ளது. அனைத்து விடயங்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலமைக்காரியலயம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைமைக் காரியாலயத்தின் முடிவுகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் வேப்பங்குளம் அன்பக பிள்ளைகள் தொடர்பாக முடிவு எடுப்பதாகவும் மேலதிக தகவல்களை தற்போது வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.
ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தபோதும் ஊடகவியலாளர்கள் செய்திகளை வெளியிட அதிகாரம் பெற்றவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரிவித்ததுடன் ஆர்ப்பாட்டக்காரர்களின் தரப்பு நியாயங்களையும் ஊடகங்கள் வெளிப்படுத்த முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இன்று (11.07.2017) தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் மன்னார் வீதியில் அமைந்துள்ள சிறுவர் காப்பகமான அன்பகத்தின் நிர்வாகிக்கு எதிராக ஊடகங்கள் அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்து ஊடகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று நடைபெற்றிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகத்துறையினருக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் செய்தி சேகரித்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த வேளை அங்கிருந்த பெண்களால் தடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் இடம்பெற்றது.
வவனியாவில் சிறுவர் காப்பகமான அன்பகம் மீது ஊடகங்கள் அவதூறு பரப்புவதாக தெரிவித்து இன்று (11.07.2017) ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள சிறுவர் காப்பகமான அன்பகத்தில் கடந்த 29.06.2017 அன்று 11 வயதுச் சிறுமி ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் 2015 ஆம் ஆண்டு குறிப்பிட்ட அன்பகத்திலிருந்த இன்னொரு சிறுமியின் மரணம் தொடர்பான முறைப்பாடு பதிவுசெய்யப்பட்ட நிலையில் அன்பகத்தின் நிர்வாகியான சாமி அம்மா என்று அழைக்கப்படும் கு.ஜெயராணி தொடர்பாக ஊடகங்களில் பிழையான செய்திகள் வெளிவருவதாக தெரிவித்தே ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றிருந்தது.
வவுனியா மன்னார் வீதியில் அமைந்திருக்கும் அன்பகத்திலிருந்து மன்னார் வீதிவழியாக ஊர்வலமாக வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்து அரசாங்க அதிபரிடம் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களிடமிருந்து மகஜரை பெற்றுக்கொண்டு கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமார..
அன்பகத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள். அத்துடன் மாவட்ட செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினர் தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விசாரணையின் பின் அன்பகம் சிறுவர் இல்லம் குறித்து முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகத்துறையே நீதித்துறைக்கு அப்பால் அடிப்படை தெரியாது முடிவுகளை எடுப்பதற்கு உனக்கு யார் அதிகாரம் தந்தது, உண்மையான விசாரணைமூலம் உண்மைத்தன்மையை உணர்த்துங்கள், உங்கள் பேனா மை கொண்டு உண்மையை சமூகத்திற்கு உணர்த்திடுங்கள் ஆகிய பதாதைகளை தாங்கி நின்றனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தின் போது 25க்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் உற்சவத்தில் இன்று 10.07.2017 திங்கட்கிழமை காலை பாற்குட பவனி இடம்பெற்றது .
அத்தோடு வழமைபோன்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமமக்களும் தங்களது கிராமங்களின் பயன் கருதி பூசை வழிபாடுகளில் பங்குபற்றுவது வழமையானஒன்றாகும் .அந்தவகையில் இன்று கிடாசூரி கிராமமக்களின் உபயத்தில் இன்றைய நிகழ்வு இடம்பெற்றது .
வசந்தமண்டப பூஜையின் பின் அம்பாள உள்வீதி வலம் வந்து தொடர்ந்து இடபவாகனத்தில் வெளிவீதியில் எழுந்தருளிய நிகழ்வு இடம்பெற்றதோடு பகல் நிகழ்வுகள் நிறைவு பெற்றது.
தொடர்ந்து மாலையில் பொங்கல் உற்சவமும் வசந்த மண்டப பூஜையின் பின் கண்ணகை அம்பாள் முத்துசப்பரத்தில் வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .
வவுனியாவில் நேற்று (10.07.2017) மாலை 3.30 மணியளவில் பூந்தோட்டம் கல்வியற்கல்லூரி மண்டபத்தில் பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் கல்வியற்கல்லூரி மாணவர்களின் நூல்கள் நுண்ணறிவு, சமகால சர்வதேசம், ஆகிய இரு நூல்களும் அறிமுகம் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஏஸ்.ஸ்ரீனிவாசன், சிறப்பு விருந்தினர்களாக உப பீடாதிபதி க.சுவர்ணராஜா, சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பார்த்தீபன், விரிவுரையாளர் க.குலரதன் ஆகியோரும் கலந்து கொண்டதுடன், வரவேற்புரையை சு.டிலக்சன் தலைவர் தமிழ் மன்றம், ஏற்புரையை நூலாசிரியர்களான எ.எல்.எம்.அஸீம், செ.வாசுகி, நன்றி உரை செல்வி த. தர்சினி செயலாளர் தமிழ் மன்றம். ஆகியோர் கலந்துகொண்டதுடன் கல்வியற்கல்லூரி மாணவர்கள், நூலாசிரியர்களின் பெற்றோர்கள், உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
2009 க்குப்பின் அண்மைக்கால நாட்டுநிலை காரணமாக இந்தியாவில் இருந்து நாடு திரும்பிக் கொண்டிருக்கும் இலங்கையர்களுக்கான பல்வேறு உதவிகள் அரசாங்கத்தினாலும் அரச சார்பற்ற நிறுவனங்களாலும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் வாழ்வாதாரப் பயிற்சிநெறி ஒன்று நேற்று (10.07.2017) திங்கட்கிழமை வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் சோவா நிறுவனத்தால் நடாத்தப்பட்டது.
சுமார் 65 பயனாளிகள் இந்த வருடம் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்களால் தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதார உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் முதல் கட்டமாக 30 பேருக்கான பயிற்சி நெறியே நேற்று நடைபெற்றது. கடந்த வருடம் 130 பயனாளிகள் இந்தத்திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் திட்ட அலுவலகர் அ.அமரகாஸன் சமூக வலுவூட்டல் அலுவலகர் செல்வி மேகலா அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. இமல்டா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மாகாண மட்ட தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி மாணவிகளான பிரிவு -2 ல் இருந்து பகீரதன் லாசன்ஜா, பிரிவு 5ல் இருந்து சிவலோகநாதன் சதுசியா ஆகிய இருவரும் பங்கு பற்றி முதலாமிடத்தை பெற்றிருந்தார்கள்.
அத்துடன் நேற்று (09.07) தேசிய ரீதியாக கொழும்பு டி.எஸ்சேனநாயக்க கல்லூரியில் நடாத்தப்பட்ட தமிழ்தின போட்டியில் கலந்து கொண்டிருந்தார்கள்.
இம் மாணவர்களின் சாதனை குமுழமுனை ம.வி க்கும், முல்லை வலயத்திற்கும் பெருமை தேடிக்கொடுத்திருக்கின்றது. இவர்கள் கல்வியில் மென்மேலும் சிறக்க பாடசாலை சமூகம் வாழ்த்தி நிற்கின்றது.
அமெரிக்காவை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒரே வாரத்தில் 2 லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கியதன் மூலம் அவருக்கு ஜக்பாட் அடித்து கோடீஸ்வரி ஆகியுள்ளார்.
Rosa Domingue என்ற பெண் காரில் பயணித்துக்கொண்டிருந்தபோது லொட்டரி டிக்கெட் வாங்கி தமது அதிர்ஷ்டத்தை சோதித்து பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில், அரிசோனாவில் உள்ள ஒரு லொட்டரி கடையில் 5 டொலர் மதிப்புள்ள லொட்டரி டிக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார்.
அதன் பின்னர், 2 நாட்கள் கழித்து மீண்டும் கலிபோர்னியாவின் Gas Station என்ற பகுதியில் உள்ள ஒரு லொட்டரி கடையில் 2 வது லொட்டரி டிக்கெட் ஒன்றினை வாங்கியுள்ளார்.
முதல் தடவை அவர் வாங்கி லொட்டரி டிக்கெட்டின் மதிப்பு 555,000 டொலர் ஆகும். 2 வது முறை அவர் வாங்கிய லொட்டரி டிக்கெட்டின் மதிப்பு 100,000 டொலர் ஆகும்.
இவரின் அதிர்ஷ்டம், இந்த இரண்டு டிக்கெட்டுகளிலும் இவருக்கு ஜக்பாட் அடித்து மொத்த தொகையும் கையில் கிடைத்துள்ளது.
இவருக்கு மொத்தம் 655,555 டொலர் கிடைத்துள்ளது. இதனால் தான் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும், இந்த மகிழ்ச்சியால் எனது கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக கூறியுள்ளார்.
இந்த பணத்தால் எனக்கு பிடித்த கார் ஒன்றினை வாங்க முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.