வவுனியாவிற்கு விஜயம் செய்த தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சர் ரவூக் ஹக்கீம் பல பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத் தொகுதிகளை திறந்து வைத்தார்.
இன்று (12.07.2017)காலை முதல் வவுனியாவின் சின்னசிப்பிக் குளம் , வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயம், கோவில்குளம், தேசிய கல்வியற் கல்லூரி ஆகிய பகுதிகளில் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைச்சினால் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்த் தொகுதியை அமைச்சர் ரவூக் ஹக்கீம் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
சிறுநீரக நோய் சம்மந்தமான பிரச்சனைகளை தீர்க்கும் பொருட்டு அனைவருக்கும் சுத்தமான நீர் என்னும் நோக்கத்தின் கீழ் அமைச்சினால் பல்வேறு பகுதிகளிலும் நீர் விநியோகத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் ரம்சின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அமைச்சருடன் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், முஸ்லிம் காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் யூலை 10ம் திகதி தொடக்கம் 14ம் திகதிவரை இலங்கையில் விஷேட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
குறிப்பிட்ட விஜயத்தின்போது பிரதம நீதிஅரசரின் பணிப்புரைக்கு அமைவாக இன்று (12.07.2017) மாலை வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிகளுடன் எமர்ஷன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கலந்துரையாடலில் தற்கால நீதிமன்ற சூழ்நிலைகள், மற்றும் சட்டம் தொடர்பில் விஷேடமாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி. எல். ஏ.மனாப் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிகளுடன் வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் இன்று (12.07.2017) மாலை 5.30 மணியளவில் தற்கால நீதிமன்ற சூழ்நிலைகள், மற்றும் சட்டம் தொடர்பிலாக விஷேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
மாலை 6 மணியளவில் கலந்துரையாடல் முடிவடைந்து பின்னர் A9 வீதியூடாகச் சென்ற ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் வவுனியா மத்திய தபால் நிலையத்திற்கு அருகே சுழற்சி முறையிலான கவனயீர்ப்பு போராட்டத்தில் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்ட இடத்திற்கு முன்னால் வாகனத்தினை தரித்து நிறுத்தினார்.
அதனையடுத்து வீதியில் நின்ற ணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வாகனம் நின்ற இடத்திற்கு ஓடிய போதும் அவரின் பிரதிநிதிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் தற்போது சந்திக்க நேரமில்லை என தெரிவித்துச் சென்றுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அமரிக்காவின் கொடியினை கட்டி தமது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் நயினாதீவில் அருளாட்சி புரியும் நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா, கடந்த 08.07.2017 (சனிக்கிழமை) நடைபெற்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் புலம்பெயர் தேசங்களில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இத் தேர் திருவிழாவில் கலந்துகொண்டு, வடம் பிடித்து தேரிழுத்தனர்.
கடந்த மாதம் 25ஆம் திகதி ஆரம்பமான நயினை நாகபூசனி அம்மன் ஆலய மகோற்சவத்தில் தொடர்ந்தும், சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்று, அம்மனும் முருகனும் பிள்ளையாரும் உள் வீதி உலா வந்தனர். 14ஆம் நாளான இன்று காலை 5 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து கொடிக்கம்பத்திற்கு பூஜை நடைபெற்றது.
தொடர்ந்து, காலை 7 மணிக்கு நயினை அம்மன், பிள்ளையார், முருகன் ஆகியோருக்கு வசந்த மண்டப பூஜை நடைபெற்று, உள்வீதி உலா இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்று கடவுளரும் தேரில் ஏற்றப்பட்டு ஆயிரக்கணக்கான பக்தர்களின் அரோகஹரா சப்தத்துடன் முத்தேர்களும் வடமிழுக்கப்பட்டன. யாழ். தவில் வித்துவான் பாலமுருகன் குழுவினரின் நாதஸ்வர மற்றும் தவில் வாத்திய கச்சேரியுடன், முத்தேரும் வலம் வந்தமை குறிப்பிடத்தக்கது.
பழங்களில் விட்டமின், நார்ச்சத்து மற்றும் இயற்கையான சர்க்கரைச்சத்துகள் இருப்பதால் எவ்வித பக்கவிளைகளையும் ஏற்படுத்தாமல் விரைவில் உடல் எடையை குறைக்க உதவும்.
நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், டயட் என்கிற பெயரில் உங்கள் உடலநலன்களை கெடுத்துக்கொள்ளாமல், ஆரோக்கியமான பாதையில், வேகமாக உடல் எடையை குறைப்பதற்கு சிலவகை பழங்கள் உதவுகிறது.
அவகேடா
ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்துள்ள அவகேடாவில், உயர் அளவில் மோனோசாட்சுரேட் ஒலிக் ஆசிட்(Monounsaturated oleic acid) மற்றும் தண்ணீர் நிறைந்துள்ளது.
மேலும் டெஸ்ட்ரோஸ்டிரான்(Testosterone) ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது, இந்த ஹார்மோன் கொழுப்பினை குறைக்க உதவுகிறது.
தர்பூசணி
தர்பூசணியில், மலச்சிக்கல், தோல் நோய்கள் மற்றும் எடை குறைத்தல் போன்றவற்றிற்கு உதவுகிறது, ஏனெனில் இதில் தண்ணீர் மற்றும் இயற்கை முறையிலேயே குறைவான கலோரி உள்ளது.
தினமும் தர்பூசணி பழம் சாப்பிட்டால், ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் தசைகளில் ஏற்படும வேதனைகளை குறைக்கிறது.
பேரிக்காய்
பேரிக்காயில் நிறைந்துள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் பசியின்மை பிரச்சனைக்கு தீர்வு தருவதோடு மட்டுமல்லாமல், செரிமானம் சிறந்த முறையில் நடைபெறும், மேலும் எவ்வித உணவுகள் எடுத்தாலும், இதனை சாப்பிடுவதன் மூலம் ஒட்டுமொத்த செரிமானத்திற்கும் உதவுகிறது.
பீச் பழம்
குடலினை சுத்தப்படும் பணியினை செய்யும் பீச் பழத்தில் உள்ள phenolic வயிற்றில் சதைபோடுவதை தடுக்க உதவுகிறது.
ஸ்ரோபரி
ஸ்ட்ராபெரி பழம் லெப்டின் மற்றும் adiponectin ஹார்மோன் உற்பத்திற்கு உதவுகிறது, இந்த இரு ஹார்மோன்களும் வளர்சிதை மாற்றத்தை அதிகப்பதோடு மட்டுமல்லாமல் கொழுப்பினையும் எரிக்க உதவுகிறது.
மேலும், இதில் உள்ள anti-inflammatory என்சைம், நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது திசுக்கள் சேதமடைந்துவிட்டால், அதனை குணப்படுத்த உதவுகிறது, மேலும் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது.
எலுமிச்சை
எலுமிச்சை பழத்தில் விட்டமின சி மற்றும் சிட்ரிக் ஆசிட் மற்றும் நார்ச்சத்து நிறைந்து உள்ளது, இது மலச்சிக்கல், அஜீரணக்கோளாறு மற்றும் உடல் பருமன் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
ஆப்ரிகாட்
ஆப்ரிகாட் பழத்தில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால், அது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
மாதுளம்பழம்
மாதுளம்பழத்தில் ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவுகிறது.
ப்ளாக்பெரிஸ்
இதில் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி உள்ளது, இந்த பழத்தினை சாப்பிடுவதால், ஆற்றல் கிடைப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானப்பிரச்சனைகளுக்கும் தீர்வு தருகிறது.
ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி உள்ளது, மேலும் இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், இதில் உள்ள புரதம் இளமை தோற்றத்தை தடுக்கிறது.
மேலும், நீர்ச்சத்து, நார்ச்சத்து மற்றும் விட்டமின் சத்துக்கள் உள்ளதால், சருமத்தைன மென்மையாக்குவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் தடுக்கும்.
ஜப்பானில் ஆண்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும் தீவுக்கு உலக பாரம்பரிய சின்னம் என்ற அந்தஸ்தினை யுனெஸ்கோ அளித்துள்ளது.
ஜப்பான் கிழக்கு கடலின் ஒகினோஷிமா பகுதியில் அமைந்துள்ள இந்த தீவுக்கு குறிப்பிட்ட அளவிலான ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இங்கு பெண்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் ஆண் பார்வையாளர்கள் முதலில் அங்குள்ள கடலில் நிர்வாணமாகக் குளிக்க வேண்டும் என்பதை விதியாகவே கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் பகுதியை ஷிண்டோ குரு ஒருவர் நிர்வகிக்கிறார். தீவின் பெண் கடவுளை அவர் வழிபடுவார்.
மேலும் கோயிலுக்குச் செல்பவர்கள் ஆண்களாக இருக்க வேண்டும், அத்துடன் நிர்வாணமாகக் கடலில் குளித்து, தங்களை புனிதப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு 200 நபர்களுக்கு மட்டுமே குறித்த தீவில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. குறிப்பாக இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதியும் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் தீவுக்கு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்ன விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கு பார்வையாளர்கள் வருகைக்குத் தடை விதிக்க கோயில் நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமானால், அது தீவையே அழித்துவிடும் என்று எண்ணுவதால் இந்த நடவடிக்கை என்று கூறப்படுகிறது.
குறித்த நடவடிக்கை அமுலானால் இனி கோயில் குருக்கள் மட்டுமே தீவுக்குச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகை கிருத்திகா சவுத்ரி கடந்த மாதம் மர்மமான முறையில் இறந்த நிலையில், 6 ஆயிரம் ரூபாயால் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் கூறியுள்ளனர்.
இந்தி தொலைகாட்சி தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கிருத்திகா சவுத்ரி. சில திரைப்படங்களிலும் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 12ஆம் திகதி கிருத்திகா மர்மமான முறையில் அவரது மும்பை வீட்டில் இறந்து கிடந்தார்.
அழுகிய நிலையில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் போதை மருத்து கும்பலுடன் கிருத்திகாவுக்கு தொடர்பு இருந்ததும், கும்பலை சேர்ந்த இருவர் அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து சென்றதும் தெரியவந்தது.
மேலும், இருவரும் பணம் தொடர்பாக அடிக்கடி கிருத்திகாவுடன் தகராறில் ஈடுபடுவார்கள் என அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளார்கள்.
இதையடுத்து போதை கும்பலை சேர்ந்த ஷகீல் நசீம் கான், பாட்ஷா மக்மலால் ஆகிய இருவரை பொலிசார் கைது செய்தார்கள்.
6 ஆயிரம் ரூபாய் பிரச்சனையில் கிருத்திகாவை அவர்கள் கொன்றதாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி கூறியுள்ள கிருத்திகாவின் சகோதரர் தீபக், கிருத்திகாவின் 2 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
தோழி ஒருவருக்கு 50 ஆயிரம் கடன் கொடுத்த கிருத்திகா அதை திருப்பி கூட கேட்டதில்லை.
இப்படியிருக்கையில், 6 ஆயிரம் பிரச்சனையில் கொலை நடந்ததாக கூறுவது நம்பும்படி இல்லை. பொலிசார் எதையோ மறைக்க நினைக்கிறார்கள் என கூறியுள்ளார்.
போரினால் அழிவடைந்த பிரதேசங்களின் அபிவிருத்தியை முன்னெடுக்கும் வகையிலும், பயணிகள் போக்குவரத்தில் எதிர் கொள்ளும் இடர்களை இலகு படுத்தும் முகமாகவும் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மல்லாவி நகரத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான வேலைகள் 10.07.2017 திங்கள் கிழமை அன்று வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் வட மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் கணபதிப்பிள்ளை வல்லிபுரம் கமலேஸ்வரனால் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த பிரதேச மக்களின் நலனையும் மாவட்டத்தின் அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு வட மாகாண போக்குவரத்து அமைச்சின் 2017 ம் ஆண்டிற்கான அபிவிருத்தி நன்கொடை நிதி ஊடாக 4.5 மில்லியன் ரூபா செலவில் புதிய பேருந்து நிலையம் அமையவுள்ளது.
குறித்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் நீண்ட நாட்களாக பயணிகள் பேருந்து நிலையம் இல்லாது மக்கள் எதிர் கொண்ட பல்வேறு அசௌகரியங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்பட்டது. மேற்படி நிகழ்வில் பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர், கிராம சேவையாளர், தனியார் பேருந்து சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் தாபனத்தின் விஷேட பிரதிநிதி பென் எமர்ஷன் அவர்கள் யூலை 10 தொடக்கம் 14ம் திகதிவரை இலங்கையில் விஷேட சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
குறிப்பிட்ட விஜயத்தின்போது பிரதம நீதிஅரசரின் பணிப்புரைக்கு அமைவாக இன்று (12) வவுனியா மேல் நீதிமன்ற கேட்போர் கூடத்தில் மாலை 5 மணியளவில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ரி.எல்.ஏ.மனாப் மற்றும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிகளுடன் எமர்ஷன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
குறிப்பிட்ட சந்திப்பிலே தற்கால நீதிமன்ற சூழ்நிலைகள், மற்றும் சட்டம் தொடர்பில் விஷேடமாக கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிறந்தவுடன் குழந்தைகளை குப்பையில் வீசும் தாய்களை கொண்ட இந்த யுகத்தில் தனது இனத்திற்கு சொந்தமற்ற தாய் இல்லாத பூனைக்கு நாய் ஒன்று தாயாகியுள்ளது. இந்த நாய், பூனைக்கு பால் கொடுத்து வளர்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய் பாசத்திற்கு ஏங்கும் பூனை இந்த நாயிடம் பால் குடிக்கும் காட்சி பார்ப்பவர்களின் கண்களுக்கு கண்ணீரை வரவைக்கும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கத்தேகம பகுதியை சேர்ந்த சீதா வாசலகே என்பவரின் வீட்டிலேயே இந்த காட்சியை காண முடிந்துள்ளது.
லண்டனில் வாகனம் ஒன்றில் தீடிரென தீ பரவியுள்ளதுடன், இதில் இருந்த இலங்கை தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் இரவு இடம்பெற்றதுடன், இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த லண்டன் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த போதும் வாகனத்தின் உள்ளே இருந்த நபரை காப்பாற்ற முடியவில்லை என கூறப்படுகின்றது.
அத்துடன், தீ விபத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ் என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உலகின் பட்டரி இல்லா முதல் செல்போனை அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.
ஸ்மார்ட்போன் உலகில் பெரும் சவாலாக இருப்பது பட்டரி சார்ஜ்தான், அந்தப் பிரச்னையைச் சரிசெய்ய பட்டரிகளே இல்லாத செல்போன்களை வடிவமைக்கும் முயற்சியில் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.
அந்த முயற்சியில் தற்போது வெற்றி கிட்டியுள்ளது, சுற்றுப்புறத்தில் உள்ள ரேடியோ சிக்னல்கள் மற்றும் ஒளி ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்று இயங்கும் வகையிலான புதிய செல்போன் ஒன்றை வடிவமைத்து ஆய்வாளர்கள் புதிய சாதனை படைத்துள்ளனர்.
அந்த செல்போனைப் பயன்படுத்தி ஸ்கைப் மூலம் வீடியோ கோல் பேசியும் அவர்கள் அசத்தியுள்ளனர். இதுதொடர்பாக பேசிய ஆய்வுக்குழுவைச் சேர்ந்த ஷ்யாம், மிகக் குறைவிலான ஆற்றலைப் பயன்படுத்தும் செல்போன்களை எங்களது குழுவினர் வடிவமைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் அத்தியாவசியத் தேவையாகிவிட்ட செல்போன்களுக்குத் தேவையான ஆற்றலை சுற்றுப்புறங்களில் இருந்து பெற்றுக் கொள்ளும் வகையில் இந்த புதிய செல்போன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
ரேடியோ அலைகளில் இருந்து ஆற்றலைப் பெறும் வகையில் செல்போன்களில் சிறிய அளவிலான அண்டெனாக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.
இந்த அலைகளைப் பயன்படுத்தி குரல் பதிவுகளை பரிமாறிக் கொள்ளும் வகையில் செல்போனின் செயல்பாடு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
வணிகரீதியில் இந்த செல்போன் பயன்பாட்டுக்கு வரும்பொழுது வைபை அல்லது செல்போன் சேவைக்காக பயன்படுத்தப்படும் அலைவரிசை ஆகியவற்றில் இருந்து ஆற்றலைப் பெற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும் ஆய்வுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே மிகச்சிறிய இராச்சியமான தவோலாராவில் 11 பிரஜைகளுக்கு அரசர் ஒருவர் உள்ளார்.
சாதாரண காற்சட்டை அணிந்து, ரப்பர் காலணியுடன் உணவு விடுதியொன்றை நடத்தி வரும் மிக எளிமையான அரசரின் ஆட்சிக்கு உட்பட்ட இராச்சியமே தவோலாரா தீவு.
இத்தாலியின் சர்டினியா பிராந்தியத்தின் அருகில் மத்திய தரைக்கடல் பகுதியில் இந்த குட்டித்தீவு அமைந்துள்ளது.
இத்தாலியால் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்ட இந்தத் தீவின் ஒட்டுமொத்த பரப்பளவே 5 சதுர கிலோமீட்டர் தான்.
அரசரின் பெயர் அந்தோனியோ பர்த்லியோனி. தவோலாராவிற்கு சென்றால் அரசரைப் பார்க்க அரசவைக்குச் செல்லவேண்டாம். எந்தவித முன்னனுமதியும் இன்றி அரசரை சுலபமாகவே பார்த்துவிடலாம்.
ஆடம்பரமில்லாமல் இயல்பாகத் தோற்றமளிக்கும் அரசரே தீவில் உள்ள ஒரேயொரு உணவு விடுதிக்கும் உரிமையாளர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு படகுச் சவாரி ஓட்டுபவரும் அவரே.
180 ஆவது நிறுவன தினத்தைக் கொண்டாடும் தவோலாரா இராச்சியம் மிகச் சிறிய தீவாக இருப்பதால், அதை நாடு என்று சொல்வது வேடிக்கையானதாகத் தோன்றலாம். ஆனால், அரசர் அந்தோனியோ பர்த்லியோனி தனது இராச்சியத்தைப் பற்றி பெருமைப்படுகிறார்.
19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டன் மகாராணி விக்டோரியா, உலக அரசர்கள் அனைவரின் புகைப்படங்களையும் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதற்காக உலகம் முழுவதும் பயணித்த கப்பல், தாவோலாராவிற்கும் சென்று அரசரின் புகைப்படத்தைப் பெற்றது. அன்று முதல் இன்று வரை இங்கிலாந்தின் பக்கிம்ஹாம் அரண்மனையை அலங்கரிக்கும் புகைப்படங்களில் தவோலாரா அரசரின் புகைப்படமும் ஒன்று.
உலகின் எந்தவொரு நாடும் தவோலாராவை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ளவில்லை. தவோலாராவின் அரசர் அந்தோனியோவும் அவரது குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து இந்த தீவுக்கு படகு சேவைகளை வழங்குகின்றனர்.
உலகில் இங்கு மட்டுமே காணக்கிடைக்கும் தனிச்சிறப்புத்தன்மை கொண்ட ஆடுகளையும், அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு கழுகு இனத்தையும் பார்க்க பெருமளவிலான மக்கள் இங்கு ஆவலுடன் சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர்.
”சிறிய நாடாக இருந்தாலும், எங்கள் முன் விரிந்திருக்கிறது மிகப்பெரிய கடல்” என்கிறார் தவோலாரா இராச்சியத்தின் அரசர்.
பிரான்ஸில் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் அணு உலைகள் பலவற்றை மூட அந்நாடு திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸின் மொத்த மின்சாரத் தேவையில் அணு சக்தி மூலம் பெறும் அளவை தற்போதைய 75 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகக் குறைக்க கடந்த 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இதனையடுத்தே அணு உலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், பிரான்ஸில் அரசாங்கத்திற்கு சொந்தமாக 58 அணு உலைகள் செயற்பாட்டில் உள்ளன.
உள்நாட்டுத் தேவை போக மிஞ்சும் மின்சாரத்தை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் பிரான்ஸிற்கு ஆண்டுக்கு 340 கோடி டொலர்கள் வருமானம் கிடைத்து வருகின்றது.
இருப்பினும், மூன்றில் ஒரு பங்கு அணு உலைகளை மூட எடுக்கப்பட்ட முடிவில் தாம் உறுதியாக உள்ளதாகவும் அதன்படி, 17 அணு உலைகளை மூடுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் பிரான்ஸின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் நிக்கோலஸ் ஹுலோட் தெரிவித்துள்ளா