பேஸ்புக் உட்பட சில சமூக வலைத்தளங்கள் பல விடயங்களுக்கு தடையாக உள்ளதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு பேஸ்புக் போன்றவைகள் தடையாக உள்ளதென ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
நுவரெலியா பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி மின்சார சபை ஊழியர்களின் எதிர்ப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அரசாங்க மின்சார சபை ஊழியர்களுக்கு மாத்திரம் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கீழ் வகுப்பு ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையினால் அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
மேலும் சைட்டம் எதிர்ப்பினை கடந்த அரசாங்கமே உருவாக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.
பாடசாலை சென்று கொண்டிருந்த வித்தியாவை வழிமறித்த சந்திரகாசனும் பெரியதம்பியும் அவளை பாழடைந்த வீட்டிற்குள் தூக்கிச் சென்று பெரியதம்பி, சந்திரகாசன், செந்தில், ரவி ஆகிய நான்கு பேரும் சுமார் ஒன்றேகால் மணி நேரமாக மாறி மாறி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டனர்.
அப்போது படுத்த நிலையில் இருந்த அவள் சத்தம் எதுவும் போடவில்லை. அவளது கையையும், காலையும் பெரியதம்பியும் சந்திரகாசனும் பிடித்திருந்தார்கள்.
அதன் பின்னர் அவளை கைப்பந்தமாக தூக்கிச் சென்று அலரி மரத்துடன் கட்டிப் போட்டார்கள். அவளை வன்புணர்வு செய்யும் போது அதனை பெரிய டச் மொடல் போனில் சந்திரகாசனும் பெரியதம்பியும் மாறி மாறி படம் எடுத்தார்கள்.
இவ்வாறு புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் முக்கிய சாட்சிகளில் ஒருவராகவும் கண்கண்ட சாட்சியாளராகவுமுள்ள நடராசா குகனேசன் (மாப்பிள்ளை) ட்ரயல் அட்பார் நீதிமன்றில் நேற்றைய தினம் சாட்சியமளிக்கையில் தெரிவித்தார்.
குறித்த வித்தியாவின் படுகொலை வழக்கானது யாழ் மேல்நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூன்று தமிழ் நீதியரசர் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் தொடர் விசாரணையாக இடம்பெற்று வருகின்றது.
நேற்று வியாழக்கிழமை 2வது நாள் விசாரணைக்காக மன்று கூடியிருந்த போது நடராசா குகனேசன் என்பரின் சாட்சியப் பதிவுகள் ஆரம்பமாகியிருந்தன.
இதன்போது சட்டமா அதிபர் திணைக்கள பிரதி சொலிசிட்டர் குமார்ரட்னம் ஜெனரலுடைய வினாக்களுக்கு பதிலளித்த சாட்சியாளரான குகனேசன் தெரிவித்த சாட்சியத்தின் பதிவுகள் வருமாறு,
12ம் திகதி எனது வீட்டிற்கு வந்த சந்திரகாசனும் பெரியதம்பியும் வித்தியாவுடன் திருமணம் தொடர்பாக பேச வேண்டும் எனக்கூறி என்னைக் கூட்டிச் சென்றார்கள். ஆனால் அன்று வித்தியாவுடன் இன்னுமொருவர் வந்ததால் பேசவில்லை.
மீண்டும் மறுநாள் 13ம் திகதி வித்தியா பாடசாலை செல்லும் வீதியான சின்னாலடி பகுதிக்குச் சென்றோம். அவர்கள் என்னை பற்றைக்குள் மறைந்திருந்து பார்க்குமாறு கூறினார்கள்.
அப்போது அவ்விடத்திற்கு ரவியும் தவக்குமாரும் வந்தார்கள். சைக்கிளில் வந்த வித்தியாவை சந்திரகாசனும் பெரியதம்பியும் வழிமறித்து பற்றைக்குள் கொண்டு சென்று உடைகளைக் கழற்றினார்கள்.
அச்சமயத்தில் வித்தியா அணிந்திருந்த கண்ணாடியை கழற்றிய பெரியதம்பி வித்தியாவைப் பார்த்து நான் உன்னைக் காதலிக்கிறேன், உனக்கு விருப்பமில்லையா? எனக் கேட்டான்.
அப்போது அவள் குழறினாள். உடனே அவளது வாயைப் பொத்தி தூக்கிச் சென்று பெரியதம்பியும் சந்திரகாசனும் அவளை மாறிமாறி வன்புணர்வு மேற்கொண்டார்கள். சுரேஷ் வித்தியாவின் சைக்கிளை தூக்கிச் சென்றான்.
செந்தில், ரவி, சந்திரகாசன், பெரியதம்பி ஆகியோர் வித்தியாவை பாழடைந்த வீட்டிற்குள் தூக்கிச் சென்றார்கள். அப்போது நான் குழுறிக் கொண்டு வெளியே வந்தேன். பெரியதம்பி கத்தியைக் காட்டி என்னை மிரட்டினான்.
அவள் அணிந்திருந்து ஆடைகள், சப்பாத்து அனைத்தும் வெள்ளை நிறத்திலானவை. பாடசாலைப் பிள்ளையடா அவளை விடுங்கோடா என கேட்டேன். ஆனால் அவர்கள் நான்கு பேரும் அவளை வன்புணர்ந்தார்கள்.
அவள் அப்போது படுத்த நிலையிலேயே இருந்தாள். சத்தம் எதுவும் போடவில்லை. கை, கால்களை பெரியதம்பி, சந்திரகாசன் ஆகியோர் பிடித்திருந்தார்கள். முதலில் பெரியதம்பியும், அடுத்து சந்திரகாசன், அதற்கடுத்து செந்திலும் வன்புணர்ந்தார்கள் அப்போது அவள் மயங்கிப்போனாள். சந்திரகாசனும் பெரியதம்பியும் அவளை வீடியோ படம் எடுத்தார்கள்.
அப்போது எடுத்த வீடியோப் படத்தை சுவிஸ்குமார் சுவிஸ் நாட்டிற்கு கொண்டு போகப் போவதாக கதைத்தார். அதன் பின்பு அவளை கைப்பந்தமாக தூக்கிச் சென்று 50 மீற். தூரத்தில் உள்ள அலரி மரத்தில் கட்டினார்கள்.
அதன்பின்னர் நான் 08.30 மணிபோல் சீவல் தொழிலுக்கு சென்றுவிட்டேன். 915 மணியளவில் பெரியதம்பியும் சந்திரகாசனும் சுரேசும் எனது வீட்டிற்கு வந்து கள் வாங்கிக் குடித்தார்கள். பின்னர் மாலையும் வந்து கள் கேட்டார்கள். நான் சீவப் போகவில்லை என்பதால் கள் இல்லை என்றேன்.
இச்சம்பவம் தொடர்பாக நான் அச்சம் காரணமாக நான் கூறவில்லை. ஏனெனில் பெரியதம்பி மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் பணபலம் மிக்கவர்கள் பொலிஸில் செல்வாக்குள்ளவர்கள் என்பதனால் பயந்து நான் இதுவிடயத்தை கூறாது மறைத்தேன்.
இச்சம்பவம் நடந்தது புதன்கிழமை, மறுநாள் நான் வித்தியா இறந்து கிடந்த இடத்திற்கு நான் சென்றேன். அங்கே பொலிஸாரும் சம்பந்தப்பட்டவர்களும் அங்கு நின்றிருந்தார்கள்.
சுவிஸ்குமாரை எனக்கு தெரியாது, சுரேஸ்கரனே எனக்கு அறிமுகப்படுத்தினார். பெரியதம்பியும் சுவிஸ்குமாரும் மைத்துனர் உறவுமுறையில் உள்ளவர்கள். பெரியதம்பி எடுத்த வீடியோ படத்தை சுவிஸ்குமாரிடம் கொடுத்ததாக என்னிடம் சொன்னார்.
Save the Children அமைப்பு, Concern worldwide மற்றும் Action Against Hunger இணைந்து நடத்திய புதிய ஆய்வு ஒன்றில், சோமாலியாவில் 20,000 இற்கும் அதிகமான குழந்தைகள் பட்டினியால் இறக்கும் அபாயத்தில் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சோமாலியாவின் ஒன்பது மாவட்டங்களில், கடுமையான பஞ்சத்தின் காரணமாக மக்கள் இறக்கும் அபாயத்தில் இருப்பதாகவும், சர்வதேச நாடுகள் உயிர் காக்கும் உதவிகளை சோமாலியாவிற்கு வழங்மாறு Save the Children அமைப்பு கோரியுள்ளது.
Save the Children அமைப்பின் சோமாலிய நாட்டின் இயக்குனரான ஹசன் நூர் சாதி இது குறித்து கூறும்போது, “உணவுப் பஞ்சமும், ஊட்டச்சத்தற்ற குழந்தைகளின் நிலையும் பெரும் கவலையளிக்கிறது.
சர்வதேச சமூகம் சோமாலியாவிற்கு உயிர்காக்கும் உதவிகளை வழங்க வேண்டும். இல்லையென்றால் 2011 இல் 2,50,000 மக்களை இழந்ததைப்போலவே, இம்முறையும் நிகழும் அபாயம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அதிக ரசிகர்களைப் பெறுவதற்காக பெண் ஒருவர், தனது ஆண் நண்பரை விளையாட்டாக சுட முயன்று அது விபரீதமாக முடிந்துள்ளது.
அமெரிக்காவின் மின்னெசோட்டாவைச் சேர்ந்த மோனாலிஸா பெரெஸ் என்ற 19 வயதுப் பெண், அவரது ஆண் நண்பரான பெட்ரோ ரூயிஸ் என்பவரை சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
சமூக ஊடகம் ஒன்றுக்காக செய்யப்பட்ட நிகழ்வு தவறாகப் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோ ரூயிஸ் தனது மார்பை புத்தகம் ஒன்றை வைத்து மறைத்துக்கொள்ள, அவர் மீது சுட்டால், குண்டு புத்தகத்தைத் தாண்டித் துளைக்காது என்று தவறாக அவர்கள் எண்ணியிருந்தனராம்.
இந்த நிகழ்வை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்றுவதே இவர்களது திட்டமாக இருந்துள்ளது.
பெட்ரோ ரூயிஸின் மார்பில் மோனாலிஸா துப்பாக்கியால் சுட்டு அவரைக் கொன்ற அந்த தருணத்தை அவர்களது 3 வயது குழந்தையும், சுமார் 30 பார்வையாளர்களும் நேரில் கண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் தங்களைப் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இதில் ஈடுபட்டதாக ரூயிஸின் உறவினர் தெரிவித்துள்ளார்.
கர்ப்பமாக இருக்கும் மோனாலிஸா பெரெஸ் தற்போது இரண்டாம் நிலை திட்டமிடாத ஆட்கொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டு வருகிறார். எதிர்வரும் புதன்கிழமையன்று வழக்கு விசாரணைக்காக முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார்.
இந்த நிகழ்வு ரூயிஸின் யோசனை என்றும், இதனை செய்ய ரூயிஸ் தன்னை இணங்க வைத்தார் என்றும் மோனாலிஸா பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்பு சமூக ஊடகமான ட்விட்டரில் தான் எடுக்கப்போகும் இந்த முயற்சி பற்றி மோனாலிஸா வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண்கள் உலக கிண்ண கிரிக்கெட்டில் பிரிஸ்டனில் நேற்று நடந்த ஒரு லீக் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவுடன், இலங்கை அணி மோதியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனைகள் இருவரும் ஒற்றை இலக்கில் நடையை கட்ட, 2வது விக்கெட்டுக்கு இறங்கிய சமாரி அட்டப்பட்டு வியப்பூட்டும் வகையில் மட்டையை சுழட்டி அசத்தினார்.
ஒரு பக்கத்தில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டே இருந்தாலும் இன்னொரு புறம் தனிநபராக நிலைத்து நின்று ஓட்ட மழை பொழிந்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 257 ஓட்டங்கள் சேர்த்தது. சமாரி அட்டப்பட்டு 178 ஓட்டங்கள் (143 பந்து, 22 பவுண்டரி, 6 சிக்சர்) குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் 3-வது தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. முதல் இரு இடங்களில் அவுஸ்திரேலியாவின் பெலின்டா கிளார்க் (229 ஓட்டங்கள், டென்மார்க்குக்கு எதிராக), இந்தியாவின் தீப்தி ஷர்மா (188 ஓட்டங்கள், அயர்லாந்துக்கு எதிராக) உள்ளனர். சமாரிக்கு இது 3-வது சதமாகும். இலங்கை வீராங்கனைகளில் சதம் அடித்த ஒரே நபர் இவர் தான். பவுண்டரி, சிக்சராக மட்டும் 124 ஓட்டங்கள் திரட்டினார்.
ஒரு இன்னிங்சில் இந்த வகையில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் இவர் தான். மேலும் அணியின் ஸ்கோரில் இவரது பங்களிப்பு 69.26 சதவீதமாகும். முழுமை பெற்ற ஒரு இன்னிங்சில் அணியின் மொத்த ஓட்டங்களில் அதிக பங்களிப்பை அளித்தவர் என்ற பெருமையையும் 27 வயதான சமாரி பெற்றார். ஆனால் அவரது செஞ்சுரிக்கு பலன் கிட்டவில்லை.
தொடர்ந்து விளையாடிய அவுஸ்திரேலியா 43.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 262 ஓட்டங்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது வெற்றியை பதிவு செய்தது. தலைவர் மெக் லேனிங் 152 ஓட்டங்களும் (135 பந்து, 19 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிகோல் பால்டன் 60 ஓட்டங்களும் விளாசினர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அந்த பெரிய நம்பர் நடிகை. இவர் கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளன. அனைவருக்கும் சரியாக ஒத்துழைப்பு கொடுத்து படத்தை நடித்துக் கொடுத்து நல்ல பெயரை சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், அவர் நடுரோட்டுக்கு சென்றுவிட்டதாக வெளிவந்த செய்தியை கேட்டு யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்.
அவர் ஒரு படத்தின் காட்சிக்காக அந்த நடிகையை நடுரோட்டில் நடந்துவரச் சொன்னார்களாம். நடிகையும் பொதுமக்கள் கடந்து செல்லும் முக்கிய சாலையில் நடக்கத் தொடங்கியுள்ளார். ஆரம்பத்தில் அவரை கண்டுகொள்ளாத பொதுமக்கள் நடிகையை கண்டுகொண்ட பிறகு அவரை மொய்க்க ஆரம்பித்துவிட்டார்களாம்.
காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து படக்குழுவினரை கடுமையாக திட்டி தீர்த்துவிட்டதாம். உடனே படப்பிடிப்பை நிறுத்தச் சொல்லி படக்குழுவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்களாம். நடிகையையும் பத்திரமாக மீட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்தார்களாம்.
தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதன் விளைவாக கடந்த சில நாட்களாக தொடர்ந்த போராட்டத்தை அஞ்சல் ஊழியர்கள் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க சம்மேளன முன்னணியின் இணைப்பாளர் எச்.கே.காரியவசம் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்;ட உபகுழுவுடன் நேற்று மாலை நடந்த கலந்துரையாடலின் போது தமது நியாயமான பதில் கிட்டியதாக தொற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அஞ்சல் சேவையில் இணைத்துக் கொள்வது தொடர்பில் தாக்கம் செலுத்தும் 6ஃ2006 சுற்றுநிரூபத்தின் பரிந்துரைக்கள் அதன்படியே முன்வைக்கப்படும் எனவும், அந்தவிடயம் எதிர்காலத்தில் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளதாக காரியவசம் தெரிவித்தார்.
உத்தேச காலி – கோட்டை, கண்டி, நுவரெலியா அஞ்சல் நிலையங்கள் சுவீகரிக்கப்படும் விடயம் தொடர்பில் தொழி;ற்சங்க சம்மேளனங்களுடன் கலந்துரையாடி இருதரப்பு இணக்கப்பாட்டுடன் இறுதி தீர்வு எட்டப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கினிகத்தேனை களவால்தெனிய பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி ஓடையில் குடைசாய்ந்ததில் சாரதி உயிரிழந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து நேற்று (29.06) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களவால்தெனிய சிறிய மின் உற்பத்தி நிலையத்தின் அருகாமையில் கட்டிட வேலைக்காக மணலை ஏற்றிச் சென்ற குறித்த உழவு இயந்திரம் வீதியில் முன்னோக்கி செல்லும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி இழுத்து சென்றதனால் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திலிருந்து சாரதியை உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் சாரதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உயிரிழந்தவர் களவால்தெனிய சிறிய மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றும் உத்தியோகரான பாணந்துறை பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை சமந்த பெரேரா (வயது – 44) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலை முதல் அபிசேக மூர்த்தியான நடராஜபெருமானுக்கு ஆனிஉத்தரத்தினை முன்னிட்டு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று பின் நடராஜப்பெருமான் பார்வதி சமேதராய் ஆடியாடி வீதிவலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.
புளிக்கண்டவர்க்குப் புனலுறுமாப்போற்
கனிக்குந் திருக்கூத்துக்கண்டவர்க்கு எல்லாந்
துளிக்குந் கண்ணீருடன் சோரு நெஞ்சத்திருள்
ஒளிக்கும் ஆனந்த அமுது ஊறும் உள்ளத்தே” –திருமந்திரம்
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் இன்று (29.06.2017) மாலை 4.30 மணியவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
வவுனியா மன்னார் வீதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் பெற்றோரை இழந்த 11 வயதுச் சிறுமியொருவர் அடைக்கலம் புகுந்து வசித்து வந்துள்ளார். இன்று (29.06.2017) காலை பாடசாலைக்கு சென்றுவிட்டு மதியம் இல்லத்திற்கு திரும்பிய சிறுமி மாலை 4.30 மணியளவில் அன்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பிரேத பரிசோதனைகளுக்காக குறித்த சிறுமியின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் அதேபாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் பதினைந்து வயதுடைய மாணவி ஒருவரை கடந்த வியாழக்கிழமை (22.06.2017) அன்று பாடசாலையின் புத்தக அறை ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக தெரியவருகிறது.
இச்சம்பவம் குறித்த விசாரணைகளை வவுனியா வலயக்கல்வி பணிமனை முன்னெடுத்துள்ளதாகவும் பாலியல் துஸ்பிரயோகம் சம்பந்தமாக குறித்த மாணவியின் உறவினர்கள் ஆசிரியர் தரப்பினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பிட்ட ஆசிரியரின் பாலியல் துஸ்பிரயோகம் சம்பவத்தை மூடி மறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஆசிரியரின் உறவினர் அரசியல்வாதியாக இருப்பதால் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு இன்று (29.06) வியாழக்கிழமை முறைப்பாடு ஒன்றுகிடைக்கப்பெற்றுள்ளதையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா மாவட்ட சமூகசேவை அலுவலகம் மற்றும் சீட் நிறுவனத்துடன் இணைந்து மூத்தோர்களுக்கான ஆத்மீக சுற்றுலா பயணம் ஒன்றை இன்று (29.06) ஏற்பாடு செய்துள்ளது.
தரணிக்குளம், ஈச்சங்குளம், கோதண்டநொச்சிக்குளம், மறவன்குளம், கிடாச்சூரி, கருவேப்பங்குளம், தவசியார்குளம், அம்மி வைத்தான் குளம் கிராமங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மூத்தோர்கள் இந்த ஆத்மீக சுற்றுலாவில் பங்குகொண்டனர்.
ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் ஆலயம், மாமடு பௌத்த விகாரை, கல்வாரி தேவாலயம், சிவன் முதியோர் இல்லம், வவுனியா நகர சபை பூங்கா எனப் பல இடங்களுக்கும் இவர்கள் சென்று வழிபாடுகளிலும் சகோதர இனத்தவர்களுடனான கலந்துரையாடலிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபட்டனர்.
இச்சுற்றுலா தொடர்பாக கருத்து தெரிவித்த மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன்..
எமது முதியோர்கள் அவசர உலகில் பிள்ளைகளின் அன்பு, அரவணைப்பு, அவர்களுடனான பொழுது போக்குகளை மேற்கொள்ளல் என்பன அருகிவரும் நிலையில் வடமாகாண சமூகசேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் முதியோர்களை இவ்வாறான சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்வது வழமையாக மாறிவிட்டது. இது முதியோர் நலனுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக உள்ளது என தெரிவித்தார்.
இந்த சுற்றுலாவில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் உள்ளூராட்சித்திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர் விஸ்வலிங்கம் ஜெயசோதி மாவட்ட அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எஸ்.கே.வஸந்தன், செல்வி தி.கலைவாணி சீட் நிறுவன உத்தியோகத்தர்கள் செல்வி சுமதி திருமதி வனிதா, செந்துஜன், சுதர்சன் திருமதி சுஜாதா, டிலானி, தனுஜன் ஆகியோரும் இச்சுற்றுலாவில் கலந்துகொண்டுள்ளனர்.
ஆனி மகம் மாணிக்கவாசகரின் குரு பூசை தினம். சமய குரவர்களின் வாழ்வியலை தமது வாழ்வுக்கு வழிகாட்டியாக பயன்படுத்தும் மூத்தோர்கள் அதிகம் உள்ள இல்லத்தில் நேற்று (28.06) மாவட்ட சமூகசேவை அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இங்கு இடம்பெற்றது.
‘யார்கொலோ சதுரர்’ என்ற தலைப்பில் மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் இன்தமிழ் இனியன் எஸ்.எஸ்.வாஸன் மாணிக்கவாசகரின் வாழ்வியல் சாதனைகள் பற்றி சிறப்புரை நிகழ்த்தினர் .
திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் எனும் கோட்பாட்டிற்கமைய பல பெரியவர்கள் அதன் பெருமைபற்றி தொடர்ச்சியாக பல கருத்துக்களை எடுத்து விளக்கினர் .நிகழ்வில் மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.கே.வஸந்தன் புன்னகை அமைப்பின் சார்பில் முதியோர் இல்ல முகாமையாளர் செல்வி பா.அகிலேஸ்வரி செல்வி மாருதி ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இல்லம் சார்ந்த பல முதியவர்களும் மணிவாசகரின் திருவாசகத்தை பாடி மன அமைதி கண்டனர் .
நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதனை புன்னகை அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.செல்லம்மா ஜெகநாதன் அவர்களின் 65 ஆவது பிறந்த தினத்தையொட்டி அவரது மகன் சுஜன் ஜெகநாதன் இதற்கான நிதி உதவியை வழங்கி இருந்தார் . இறுதியில் நன்றியுரையை வசந்தன் வழங்கினார் .
இந்திய மாநிலம் அசாமில் 7 வயது சிறுவன் ஒருவன் அரிதான நோயின் காரணமாக வயிறு பானை போல் வீங்கி இருப்பதால், கடும் அவதியுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.
அசாமில் பர்பெட்டா பகுதியில் வசிக்கும் ஷாஹனுர் அலம் என்ற ஏழு வயது சிறுவன், அரிதான நோய் காரணமாக வயிறு பானை போல் வீங்கி இருப்பதால் கடும் அவதிப்பட்டு வருகிறார்.
கிட்டதட்ட இரண்டு புட் பால் அளவு வீங்கியுள்ள தன்னுடைய வயிறு காரணமாக, சரிவர நடக்க முடியாமலும், உணவு அருந்த முடியாமலும் படுத்த படுக்கையாகவே உள்ளார் அலம்.
அலம் 7 மாத குழந்தையாக இருக்கும்போது ஷமிளா – சலிம் உதின் தம்பதியின் மூலம் தத்தெடுக்கப்பட்டுள்ளார். 5 வயது வரை ஆரோக்கியமாக வளர்ந்த சிறுவன் 2 ஆண்டுகளுக்கு முன்பு வயிற்று வலி காரணமாக கடும் அவதிபட்டுள்ளார்.
ஆரம்பத்தில், சாதாரண பிரச்சனையாக இருக்கும் என கருதிய பெற்றோர், சிறுவனின் வயிறு தொடர்ந்து வீங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பித்த நீர் சுரக்கும் நாளங்களில் ஏற்பட்ட பிரச்சனையில் சிறுவனுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். வறுமையில் தவிக்கும் சிறுவனின் பெற்றோர், அவரது சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வருகின்றனர்.
சிறுவனின் சிகிச்சைக்காக சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு பெற்றோர்கள் வறுமையில் வாடிவருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய 2 லட்சம் ரூபாய் தேவைப்படும் என்றும், விரைவில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ஷாஹனுர் உயிர் வாழ்வது சந்தேகம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் அறுவை சிகிச்சைக்காக அரசு தரப்பிலும் உதவி வேண்டி அவரின் பெற்றோர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் 100 பெண்களை காதலிப்பது போல் ஏமாற்றி அவர்களிடம் நகை மற்றும் பணத்தை அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவைச் சேர்ந்தவர் சதாக் முஷ்தக்(28). இவர் பெங்களூரில் பல பெண்களிடம் உயர்பதவியில் இருப்பது போல் காட்டிக் கொண்டு, நட்பாக பழகி, அதன் பின் அவர்களை காதலிப்பது போல் நாடகமாடி, அவர்கள் மனதில் இடம்பிடித்து, அவசரத் தேவைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி, அப்பெண்களிடம் இருக்கும் பணம் மற்றும் நகைகளை வாங்கிக் கொண்டு மாயமாகிவிடுவார்.
ஆனால் இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் சதாக் முஷ்தக் மீது புகார் கொடுக்காதிருந்த நிலையில், பெங்களூருவின் பகலூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை சதாக் முஷ்தக் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின்னர் சதாக் முஷ்தாக்கை பிடித்து பொலிசார் விசாரணை செய்த போது, அவன் இது போன்று 75 முதல் 100 பெண்களிடம் காதலிப்பது போல் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை அபகரித்துச் சென்றுள்ளான் என்பது தெரியவந்தது.
இதில் சில பெண்களை அவன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். பெண்களை ஏமாற்றும் இந்த திட்டத்தை அவன் 2007-ஆம் ஆண்டில் இருந்தே ஆரம்பித்துள்ளான் என்றும் தெரியவந்துள்ளது.
கண்டியிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என காலி துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார் என காலி துறைமுக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், விபத்தில் உயிரிழந்தவர் காலி, கொடுகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவரென விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பில் காலி துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.