2016 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து மொத்தமாக 118 கைதிகள் தப்பிச் சென்றிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவது,
வெலிக்கடையிலிருந்து 27 பேரும், வெளியிடங்களில் சிரமதானம் மற்றும் ஏனைய வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்தபோது 43 பேரும், சிறைச்சாலை சுவர்களுக்கு மேலாக தாண்டிக் குதித்து 13 பேரும், வைத்தியசாலைகளிலிருந்து இரண்டு பேரும் நீதிமன்றங்களிலிருந்து இருவரும், முகாம்களில் பணியாற்றியபோது 31 பேரும் தப்பியுள்ளனர்.
தப்பியோடியவர்களில் 77 பேர் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இலங்கை முழுவதிலும் உள்ள சிறைகளில் மொத்தமாக 1,18,935 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 2016 இல் சிறைச்சாலைகளுக்குள் தடைசெய்யப்பட்டுள்ள ஹெரோயின், கொக்கெய்ன் போன்ற போதைவஸ்துகளும் ஏனைய பொருட்களும் சிறையதிகாரிகள் மேற்கொண்ட 117 சோதனைகளின் போது பிடிபட்டன என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மீதான விசாரணைக்கு, சட்டரீதியான சுதந்திரமான தெரிவுக்குழு அமைத்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதற்காக அச்சப்படுகின்றார் தயங்குகின்றார்?” என வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து ஊடகம் ஒன்றிக்கு அவர் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் மற்றும் வடக்கு மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் இருவரையும் கட்டாய விடுப்பில் இருக்க முதலமைச்சர் தெரிவித்ததைத் தொடர்ந்து, வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.
இதனால் மாகாண சபையில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருந்தது. இந்த விவகாரம் இணக்கத்துக்கு வரும்போது, வடக்கு மாகாண சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சர்கள் மீதான விசாரணை, சட்டரீதியான சுதந்திரமானதாக இருக்கும் என்று முதலமைச்சரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், முன்னைய விசாரணைக்குழுவைப் போன்று இரு அமைச்சர்கள் மீதும் விசாரணை நடத்த புதிய விசாரணைக்குழுவை நியமித்துள்ளார்.
இந்த விசாரணைக்குழு முன்பாக முன்னிலையாகுவீர்களா என்று வடக்கு மாகாண போக்குவரத்து மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரனிடம் கேட்டபோது,
“சட்டரீதியான சுதந்திரமான விசாரணைக்கே முகங்கொடுப்பேன். அவ்வாறில்லாத எந்தவொரு விசாரணையையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். மாகாண சபை தெரிவுக்குழுவே, சட்டரீதியான சுதந்திரமான விசாரணைப் பொறிமுறை.
அதனை நியமிக்க முதலமைச்சர் ஏன் பயப்படுகின்றார்? தயங்குகின்றார்? தெரிவுக்குழு விசாரணை தவிர்ந்த ஏனைய விசாரணைக்குழு முன்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னிலையாக மாட்டேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டே சைக்கிள் ஒன்றினை பரிசளித்துள்ளார்.
நரேந்திர மோடிக்கும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரட்டேவுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த சுவாரசியமான சம்பவம் நடைபெற்றுள்ளது.
அத்துடன், பருவநிலை மாற்ற ஒப்பந்தம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாடு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்தே நெதர்லாந்து பிரதமர் இந்திய பிரதமர் மோடிக்கு சைக்கிள் ஒன்றினை பரிசாக வழங்கியுள்ளார்.
மேலும், இந்த சைக்கிளினை பிரதமர் மோடி ஓட்டுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த ஆறு மாதங்களில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் சட்டத்தை மீறி ரயில் பாதை ஊடாக பயணித்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு இராணுவ அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் கடவை மூடியிருக்கும் போதும் வீதி ஊடாக பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சமிக்ஞை விளக்கு எரியும் போதும் ரயில் வீதி ஊடாக பயணித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரயில் சட்டதிட்டங்களை மீறி ரயில் வீதி ஊடாக பயணிக்கும் அனைவருக்கும் எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கைது செய்யப்படுபவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அமீர்கான் நடிப்பில் வெளிவந்த தங்கல் படம் .2000 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.
அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் வெளியான ‘தங்கல்’ படம் 800 கோடியை வசூலித்திருந்தது.
இந்நிலையில், இப்படம் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு கடந்த மே மாதம் சீனாவில் வெளியிடப்பட்டது, சீனாவில் இப்படம் எதிர்பார்த்ததைவிட வசூலில் மிகப்பெரிய சாதனையை படைத்தது.
சீனாவில் வெளியான இரண்டு வாரத்தில் அப்படம் 550 கோடி வசூல் செய்து 1000 கோடியை தாண்டியது, தொடர்ந்து சீன மக்கள் கொடுத்த வரவேற்பால் அப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.
இந்நிலையில், இப்படம் தற்போது 2000 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்திய திரைப்படங்களில் 2000 கோடி வசூலை எட்டிய முதல் படம் என்ற பெருமையை ‘தங்கல்’ பெற்றுள்ளது.
இப்படத்திற்கு அடுத்த இடத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
‘தங்கல்’ படத்தை நித்தேஷ் திவாரி என்பவர் இயக்கியிருந்தார், மல்யுத்தத்தை மையப்படுத்திய படம் என்பதால் இப்படத்திற்கு சீனாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவிலும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை இப்படம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துகளில் சிக்கி 1261 பேர் உயிரிழந்துள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான தேசிய சபை தெரிவித்துள்ளது.
முச்சக்கர வண்டி விபத்தில் சிக்கியே அதிகளவானவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வேகம் மற்றும் போதையில் வாகனத்தை செலுத்தியமையே விபத்துக்கள் சம்பவித்தமைக்கான பிரதான காரணம் என வீதிப் பாதுகாப்புத் தொடர்பிலான பாதுகாப்பு சபையின் தலைவர் வைத்தியர் சிசிர கொதாகொட தெரிவித்துள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தில் விபத்துக்களின் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக முச்சக்கரவண்டி ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களுக்கு மூன்று நாள் செயலமர்வை அடுத்த மாதம் முதல் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பிலான பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலைத்தேய நாடுகளில் வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பில் அன்றாடம் பல செய்திகள் வெளிவருகின்றன. ஆயினும் இலங்கையில் அவ்வாறான செய்திகள் வருவது இல்லை. எனினும் இலங்கையிலும் வேற்றுக் கிரகவாசிகளுக்கு பெயர்பெற்ற இடங்கள் பல காணப்படுகின்றன. அவ்வாறான இடங்கள் அறியப்படாத இரகசியங்களாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இவ்வாறான இடங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதில்லை. ஆனாலும் ஆய்வுகள் மட்டும் நடத்தப்பட்டவாறே இருக்கின்றன.
மேற்கு நாடுகளுக்கு சமமான அமானுஷ்ய இடங்கள் இலங்கையிலும் இருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வாறான ஓர் இடமே மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள நாலந்த சிலை மண்டபம். இது ஓர் வித்தியாசமான, அமானுஷ்ய இடமாக கூறப்படுகின்றது.
இந்த மண்டபமானது சூரியனின் ஒளிக்கற்றைகளில் இருந்து வரும் சக்தியை உறுஞ்சும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் கட்டட அமைப்பு இந்தியாவின் கட்டடக் கலையோடு பொருந்துவதாகவும் கூறப்படுகின்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
அடுத்ததாக லகேகல எனும் மலை. இது கண்டி மாத்தளை எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. ஊர்மக்களும் ஆய்வாளர்களும் இதனை ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
இந்த மலைக்கு மேல் குறிப்பிட்ட சில தினங்கள் பிரகாசமான ஒளிகள் தோன்றுவது பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இந்த மலை உச்சியில் பறக்கும் தட்டுகள் அவதானிக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இதனால் குறித்த மலையை ஆய்வு செய்த ஆய்வாளர்களில் ஒருவரான மெரெண்டே ஒபே சேகர “இந்த மலையில் வேற்றுக்கிரகத்துடன் தொடர்பு கொள்ளும் வாயில் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், சிவப்பு நிறத்தில் நிலத்தை கொண்ட பிரதேசமாக உஸ்ஸங்கொட எனும் பகுதி அமைந்துள்ளது. நீண்ட காலங்களுக்கு முதல் இந்தப் பகுதியில் விண்கல் ஒன்று மோதியதாலேயே இவ்வாறு நிலம் நிறமாற்றத்தினை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆச்சரியம் அளிக்கும் வகையில் இந்தப் பகுதியில் எரிமலைக்குழம்பான லாவா எனப்படும் கனிமம் பாறைகளாக காணப்படுகின்றது. அத்துடன் உலோகக் கனிமங்கள் சிலவும் இதில் கலந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல பொலன்னறுவையில் அமைந்துள்ள திவங்க எனும் பௌத்த வழிபாட்டுத்தலம் இது வித்தியாசமானதோர் கட்டட அமைப்பினைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஆழமான அத்திவாரம் அற்ற ஓர் கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. அதேபோல இங்கு விண்வெளி உடை அணிந்த ஓர் வேற்றுக்கிரகவாசியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு பறக்கும் தட்டுகள் வருவதாகவும், அதில் இருந்து வரும் ஒளிக்கீற்றுகள் சிலையின் மீது படிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மர்மத்திற்கான விடைகள் கொடுக்கப்படவில்லை எனினும் சர்வதேச ஆய்வாளர்களும் இந்த இடம் குறித்து ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
பொலன்னறுவை பகுதியில் மலை உச்சியில் அமைக்கப்பட்டுள்ள திபுலாகம ரஜமஹா விகாரைக்கும் வேற்றுக்கிரகவாசிகளுக்கும் தொடர்பு உள்ளதாக இன்றுவரை நம்பப்படுகின்றது.
குறித்த வழிபாட்டுத்தலத்தின் மேல் பல வர்ணங்களில் ஒளிவட்டங்கள் தோன்றி மறைவது அவதானிக்கப்பட்டுள்ளது. சில சந்தர்ப்பங்களில் அங்கு பறக்கும் தட்டுகளும் அவதானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று இலங்கையில் வேற்றுக்கிரகவாசிகள் குறித்து அதிகம் பேசப்படும் ஓர் இடமே தானிகல மலை ஆகும்.
பார்வைக்கும் இது மிகவும் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்ட இடமாக உள்ளது. ஓர் தளம் போன்றே இந்த மலையானது காணப்படுகின்றது.
மேலும் இந்தப்பகுதி ஏலியன் மலை என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த இடத்திற்கு மேல் பலரும் பறக்கும் தட்டுகளையும் அவதானித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
இதன் காரணமாக இலங்கையும் கூட வேற்றுக்கிரவாசிகளுக்கும், பறக்கும் தட்டுகளுக்கும் பெயர் பெற்ற இடமாகவே கூறப்படுகின்றது. எனினும் இலங்கையர்கள் இது குறித்த தேடல்களில் அதிகம் ஈடுபடாத காரணத்தினால் இவை பொய்களாகவும் மதத்தோடும் ஒப்பிடப்பட்டும் வருகின்றது எனவும் கூறப்படுகின்றது.
இன்றைய டிஜிட்டல் வாழ்க்கையில் ATM இயந்திரங்கள் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகி விட்டன.
வங்கிகளுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று நேரத்தைப் போக்க இன்று யாரும் தயாராக இல்லை, தேவைப்படும்போது ATM இல் பணம் எடுத்துக் கொள்ளலாம் என்பதால் பலரும் வங்கிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த ATM இயந்திரங்கள் யாரால், எப்போது கண்டுபிடிக்கப்பட்டது என தெரியுமா?
வடக்கு லண்டனில் அமைந்துள்ள பார்க்லேஸ் வங்கியின் என்பீல்ட் கிளை சார்பில் முதல் முதலாக ATM இயந்திரம் அமைக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை அப்போதைய தொலைக்காட்சி நடிகர் ரெஜ் வார்னி தொடங்கி வைத்து பணம் எடுத்தார்.
அந்த ATM இயந்திரத்தின் 50 ஆம் ஆண்டு விழா நேற்று முன்தினம் (27) கொண்டாடப்பட்டது.
ATM இயந்திரத்தை வடிவமைத்தவர் ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஷெப்பர்ட்பேரென், இவர் வடிவமைத்த ATM இயந்திரம் தான் 1967 ஆம் ஆண்டில் ஜூன் 27 ஆம் திகதி அன்று வடக்கு லண்டனில் திறக்கப்பட்டது.
முதலில் ஆறு இலக்க குறியீட்டை இட்டனர், அதன்பின், ஆறு இலக்கம் என்பது நான்காக குறைக்கப்பட்டது.
இன்று உலகம் முழுதும் 3 மில்லியன் ATM இயந்திரங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது, முதன் முதலாக அமைக்கப்பட்ட லண்டனில் இன்று சுமார் 70,000 இற்கும் மேற்பட்ட ATM இயந்திரகள் உள்ளன.
இன்றைய தினத்தை நினைவுபடுத்தும் விதமாக பார்க்லேஸ் வங்கி தனது முதல் ATM அமைந்திருந்த என்பீல்ட் கிளையை தங்கத் தகடுகளால் சிறப்பாக அலங்காரம் செய்திருந்தது.
மேலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சிவப்புக் கம்பளம் விரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முதலையை மிக அருகாமையில் படம் பிடிக்க முயற்சி செய்த நபரின் தலையில் இணைக்கப்பட்ட கெமராவை கடித்த முதலையின் காணொளி தற்போது இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மைக்கேல் வோமர் என்ற நபர் முதலையின் வாய் பகுதியினை மிக அருகாமையில் புகைப்படம் எடுக்க தலையில் கெமராவை இணைத்து கொண்டு முதலையின் அருகாமையில் சென்றார்.
யாரும் எதிர்பாரத விதமாக முதலை கெமராவை கடித்தது. கெமரா தலையில் இணைக்கப்பட்டு இருந்தமையால் மைக்கேல் வோமரின் உயிர் முதலையிடமிருந்து தப்பியது.
கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரின் நாடு கடத்தலை தடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனது மனைவியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சிவலோகநாதன் தனபாலசிங்கத்திற்கு எதிரான வழக்கு கனேடிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.
இந்த வழக்கின் கடந்த விசாரணையின் போது தான் நாடு கடத்தலை விரும்புவதாக சிவலோகநாதன் தனபாலசிங்கம் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் Quebec Crown வழக்கறிஞர்கள், சிவலோகநாதனின் நாடு கடத்தலை தடுக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் தனபாலசிங்கம் தாமாகவே நாடு கடத்தலை ஏற்று கொண்டார்.
தனபாலசிங்கம் ஐந்து வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த நிலையில் நீண்ட காலத்தின் பின்னர் அவரது வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி Alexandre Boucher தீர்மானித்தார்.
கடுமையான குற்றச்சாட்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் 30 மாதங்களுக்கு வழக்கை ஒத்தி வைக்க முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் விமான நிலையத்தில் , மூடநம்பிக்கை கொண்ட ஒரு வயதான பயணி அதிர்ஷ்டத்திற்காக, தான் பயணம் செய்யவிருந்த விமானத்தின் இயந்திரம் மீது காசுகளை வீசியதை அடுத்து, அந்த விமானம் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது என்று அந்த சீன விமான நிறுவனம் கூறியது.
`சைனீஸ் சதர்ன் ஏர்லைன்ஸ்` விமானத்தை சென்றடையும் வழியில், அந்த 80 வயதான அந்த பெண்மணி தன்னிடம் இருந்த நாணயங்களை விமானம் மீது வீசினார்.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், தனது “பாதுகாப்புக்காக பிரார்த்தனை” செய்வதற்காக அவர் நாணயங்களை வீசியதாக காவல்துறை அதிகாரிகளிடம் அவர் தெரிவித்தார்.
ஒன்பது நாணயங்களை வீசியதில், ஒரே ஒரு நாணயம் அவர் இலக்கு வைத்தபடி இயந்திரத்தின் மீது பட்டது.
ஆனால் பல மணிநேரங்களுக்கு 150 பயணிகளை வெளியேற்றுவதற்கு இது போதுமானதாக இருந்தது.
இந்த பெண்மணி `பாதுகாப்பான விமானப் பயணத்துக்காக `நாணயங்களை வீசும் விநோதமான நடத்தையை கவனித்த ஒரு பயணி, உடனடியாக அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்ததை அடுத்து, ஷாங்காய் புடோங் சர்வதேச விமான நிலையத்திற்கு காவல்துறை அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
தனது கணவர், மகள் மற்றும் மருமகளுடன் பயணம் செய்த அந்தப் பெண்மணி விசாரணைக்காக அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக, சைனா சதர்ன் நிறுவனத்தின் பராமரிப்பு பிரிவு, விமானத்தின் இயந்திரத்தை முழுமையான பரிசோதித்துள்ளது,” என சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வளைதலமான வெய்போவில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் (Weibo)தெரிவித்துள்ளது.
கியு என்ற பெயர் கொண்ட, இந்த பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பயணியிடம் விசாரணை நடத்தப்பட்டபிறகு, அவர் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாக கூறினார்.
தங்களது கண்டுபிடிப்பைப் பகிர்ந்து கொண்ட காவல்துறையினர், இது 1.7 யுவானுடைய மதிப்பைக் கொண்ட ஒரு நாணயத்திற்கு ஒப்பானது என்று கூறினர்.
கியுவின் நண்பர் ஒருவர், கியு புத்த மதத்தில் நம்பிக்கை உள்ளவர் என்று கூறினார்,´´ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விமானம் இறுதியாக சோதனைகளுக்குப் பிறகு எல்லாம் நல்ல முறையில் இருப்பதாக சான்று அளிக்கப்பட்டு, 5 மணி நேரம் தாமதமாக கிளம்பியது.
சீனாவின் தெற்கு ஏர்லைன்ஸ் நிர்வாகம், பின்னர் பயணிகளை, உள்நாட்டு விமானச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கொட்டாச்சி (வயது 40). இவர் பத்ரி, பெண்ணின் மனதை தொட்டு, பாளையத்து அம்மன், யூத், தூள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை நடிகராகவும், பல படங்களில் நடிகர் விவேக்கிற்கு உதவியாளராகவும் நடித்துள்ளார். தற்போது திருப்பூர் அருகே ‘வயக்காட்டு மாப்பிள்ளை’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது.
இந்த படத்தில் நடிகர் கொட்டாச்சியும் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை செல்ல திட்டமிட்டார். அதற்காக திருப்பூரில் இருந்து பஸ் மூலம் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்தார். அங்கிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் சென்னை செல்ல நினைத்தார்.
அந்த வேளையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொட்டாச்சியை வழிமறித்து, “சார்… எங்கே போகவேண்டும். ஆட்டோ தயாராக உள்ளது” என்றார். அதற்கு அவர், தனியார் டிராவல்ஸ் மூலம் சென்னை செல்ல வேண்டும் என்றும், அந்த பஸ் நிற்கும் இடத்திற்கு போகவேண்டும் எனவும் தெரிவித்தார்.
சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு எதிரிலேயே அந்த தனியார் பஸ் டிராவல்ஸ் அலுவலகம் இருந்தும், ஆட்டோ டிரைவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் ஆட்டோவில் நடிகர் கொட்டாச்சியை ஏற்றிக்கொண்டு சற்று தொலைவில் உள்ள நரசோதிப்பட்டிக்கு அழைத்துச் சென்றனர்.
தவறான இடத்திற்கு செல்வதை அறிந்த கொட்டாச்சி, ஆட்டோவை நிறுத்தச் சொல்லி தகராறு செய்தார். தனது செல்போனில் உதவிக்காக சேலத்தை சேர்ந்த நடிகர் பெஞ்சமினுக்கு போன் செய்தார். அவர் அயர்ந்து தூங்கியதால் போனை எடுக்கவில்லை.
அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர், கொட்டாச்சியின் செல்போனை பறித்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். வலி தாங்காமல், “என்னை அடிக்காதீங்க… நான் நடிகர் கொட்டாச்சி.. என்னை விட்டுவிடுங்கள்” என அவர் கதறினார்.
‘உன்னைப் பார்த்தால் நடிகர்போல தெரியவில்லையே’ எனக்கூறிய மூவரும், கொட்டாச்சி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, 2,500 பணம், செல்போன், ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். நரசோதிப்பட்டியில் நேற்று அதிகாலை கொட்டாச்சி தனியாக தவித்தபடி நின்றிருந்தார்.
அப்போது அந்த வழியாக சென்ற 2 இளைஞர்களிடம், நடந்த விவரத்தை கொட்டாச்சி தெரிவித்தார். பின்னர் நடிகர் பெஞ்சமினை மீண்டும் தொடர்புகொண்டு பேசி அவரது வீட்டிற்கு சென்று தங்கினார்.
சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று பகலில் இதுதொடர்பாக புகார் செய்தார். போலீசார் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சேலம் பஸ் நிலையத்தில் இரவு வேளையில் சவாரிக்கு நின்ற ஆட்டோ டிரைவர்கள் யார், யார்? என்றும் விசாரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து நடிகர் கொட்டாச்சி கூறுகையில், ‘இன்று (அதாவது நேற்று) எனது பிறந்தநாள். பிறந்தநாள் அன்று இந்த சம்பவம் நடந்தது வேதனையாக உள்ளது. இன்றைய தினம் எனது மனைவி எனக்கு கார் பரிசளிக்க நினைத்திருந்தார். அதற்குள் இப்படி நடந்துவிட்டது’ என்றார்.
அரச ஈட்டு முதலீட்டு வங்கி சகல வசதிகளுடனும் நவீனமயமாக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா – கண்டி வீதியில் இன்று (28.06) காலை அரச ஈட்டு முதலீட்டு வங்கியின் பொது முகாமையாளர் டபியூ. எம்.தயாசிங்கவினால் இது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வாடிக்கையாளருக்கான கணக்கினையும் சிறுவர்களுக்கான கணக்கு இலக்கத்தினையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்த நிகழ்வில் சர்வமதத்தலைவர்கள், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்க உறுப்பினர்கள், வவுனியா கிளையின் முகாமையாளர், உத்தியோகத்தர்கள், அரச தனியார் வங்கி முகாமையாளர்கள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
டெங்கு நோயினால் பலியான இளம் யுவதி ஒருவரின் மரணம் தொடர்பில் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த ரொமாலி டி சில்வா என்ற பெண் கொழும்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
இரு மாதங்களுக்கு முன்னர் மரணம் ஏற்பட்ட போதும், தற்போது ஊடகங்கள் வாயிலாக தகவல் வெளியாகி உள்ளது.
ரொமாலி, ப்ரென்டிக்ஸ் என்ற நிறுவனத்தின் நிறைவேற்று பதவியில் செயற்பட்டுள்ளார். அவர் உயிரிழக்கும் போது அவரது வயது 25 ஆகும்.
பிரித்தானியாவில் உள்ள Nottingham பல்கலைக்கழகத்தில் உளவியல் மற்றும் முகாமைத்துவ கற்கை நெறி தொடர்பான பட்டத்தை பெற்ற ரொமாலி, சந்தைப்படுத்தல் கற்கை நெறியின் இறுதி பகுதியை நிறைவு செய்துள்ளார்.
காய்ச்சலில் பாதிக்கப்பட்ட ரொமாலியை குறித்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரது உடல் நிலை ஆபத்தான நிலைமையில் இல்லை என கூறியமையினாலும், அவருக்கு விசேட வைத்தியரினால் முழுமையாமையான பரிசோதனை மேற்கொள்ளப்படும் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக ரொமாலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் அவர் கட்டாயமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டும் என வைத்தியர்கள் அவரின் பெற்றோரிடம் உறுதியாக தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வைத்தியசாலையின் கட்டணத்தை ஏற்க கூடியவர்கள் என அறிந்தமையினால் ரொமாலிக்கு சொகுசு அறை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
ரொமாலியின் மூக்கில் இருந்து இரத்தம் வர ஆரம்பித்துள்ளது. இதன்போது அவர் டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டதாகவும், டெங்கு நோயின் போது மூக்கில் இருந்து இரத்தம் வருவது சாதாரண ஒரு விடயம் எனவும் பயப்பட வேண்டாம் எனவும் அவரது பெற்றோரிடம் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படியிருப்பினும் வைத்தியசாலையில் அதிக எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும், ஏனெனில் நோயாளிக்கு இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதனால் அது தீவிர நிலைமையாகவே காணப்பட்டதென வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறு இரத்த கசிவு ஏற்பட்டுள்ள போதிலும் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரும் அழைக்கப்படவில்லை.
உயிரிழப்பதற்கு முதல் நாள் இரவு அவர் கடுமையான வயிற்று வலியில் இருந்தார் என வைத்தியர்களிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது இரப்பை அழற்சியினால் (Gastritis) அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையில் குறிப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் Gaviscon என்ற மருத்து வழக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து கடுமையான கை வருத்தம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது திடீர் மாரடைப்பிற்கான அறிகுறிகளாகும்.
அதுவரையிலும் அது தசை வலி என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் போது வைத்தியர்கள் தோள்பட்டையை மசாஜ் செய்துள்ளனர். எனினும் அவர் அதற்கு அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.
எப்படியிருப்பினும் 7 நாட்கள் முழுவதும் ரொமாலிக்கு மேற்கொள்ளப்பட்ட வைத்திய சிகிச்சைக்காக 780000 ரூபாய் பட்டியல் ஒன்றை பெற்றோரிடம் வைத்தியர்கள் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தினால் இன்னமும் அதிர்ச்சியிலுள்ள பெற்றோர் இது தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.