சோதனைகளையும் வேதனைகளையும் சாதனையாக மாற்றவேண்டும் : டெனீஸ்வரன்!!

வாழ்க்கை வட்டத்தில் சோதனைகளும் வேதனைகளும் மாறி மாறி வருவது தவிர்க்க முடியாத ஒன்று, இவை வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று, இவ்வாறு சோதனைகள் வருகின்ற போது மாணவர்கள் துவண்டுவிடக்கூடாது மாறாக மன உறுதியோடு செயற்படுதல் வேண்டும் என வடக்கு மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மன்னார் பற்றிமா மத்திய மகா வித்தியாலயத்தில் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த சாதாரணத் தரப் பரீட்சையில் அதிகூடிய சித்திகளைப்பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் அருட்சகோதரர் ஜே.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக அருட்சகோதரி பவளராணி கலந்து கொண்டார். மேலும் குறித்த 10 மாணவர்களையும் பாடசாலைச் சமூகம் ஒன்று சேர்ந்து பேசாலை நகரப்பகுதியில் இருந்து ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

தனக்கு கல்வி பயிற்றுவித்த அருட்சகோதரர் ஸ்டானிஸ்லாஸ் அவர்களே இப்பாடசாலையின் தற்போதைய அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

அவர் செல்கின்ற பாடசாலைகளில் மிகுந்த அர்ப்பணிப்போடு சேவையாற்றி அதனை முன்னிலைக்கு கொண்டுவருகின்ற ஒரு நபர். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே இந்த சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு அமைந்திருக்கின்றது.

இன்னும் ஒருசில வருடங்களில் ஏனைய பெரிய பாடசாலைகள் மதிக்கின்ற அளவிற்கு இப்பாடசாலையை உயர்வுக்கு கொண்டு வருவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

மேலும் வாழ்க்கை வட்டத்தில் சோதனைகளும், வேதனைகளும் சந்தோசங்களும் மாறிமாறி வருவது தவிர்க்க முடியாத ஒன்று, இவை வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாத அம்சங்களாக இருக்கின்றது.

இவ்வாறு சோதனைகளும், வேதனைகளும் இல்லாத வாழ்க்கை எவருக்கும் இல்லை. சோதனைகள் வருகின்றபோது மாணவர்கள் துவண்டுவிடாது மன உறுதியோடு செயற்பட்டு அந்த சோதனைகளை படிக்கட்டுக்களாக மாற்றி அதனூடாக சிகரத்தை அடைந்து சாதனை படைக்கின்ற மாணவர்களாக நீங்கள் அனைவரும் மாறவேண்டும்.

மேலும் ஒருவிடயத்தினை மேற்கொள்ளும் முன்னர் அது படிப்பாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும், பரீட்சைக்கு ஆயத்தப்படுத்துவதாக இருந்தாலும் அல்லது எத்தகைய செயற்பாடுகளாக இருந்தாலும் அது சரிதானா என்பதனை ஒருதடவைக்கு இருதடவை நன்கு சிந்தித்ததன் பின்னர் செயற்படுங்கள்.

அவ்வாறு செயற்படும்போது நிச்சயமாக சரியான விடயங்களை சரியாக இனங்கண்டு அதனூடாக நாம் வெற்றியடைய முடியும் என்பதோடு மட்டுமல்லாது நம்மை சூழவுள்ளவர்களுக்கும் அது நன்மையாக அமையும்.

தீய செயல்களிலிருந்தும் நாம் விலகியிருக்க முடியுமென்றும். அத்தோடு ஒரு பாடசாலையின் அபிவிருத்தி, வளர்ச்சி என்பது வெறுமனே அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் கைகளில் மாத்திரம் இல்லை.

பாடசாலை சமூகம் பக்க பலமாக இருந்தால் மட்டுமே பாடசாலையின் வளர்ச்சியோடு கூடிய சந்தோசத்தினையும் அனுபவிக்க முடியுமென்றும், அந்தவகையில் பாடசாலை அபிவிருத்திக் குழு, பெற்றோர் மற்றும் பழைய மாணவர்கள் அதிபர், ஆசிரியர்களுக்கு உந்து சக்தியாக செயற்பட வேண்டும்.

இறுதியாக இவ்வருடம் சாதனை படைத்த மாணவர்களை கௌரவித்து வாழ்த்துகின்றேன்.

அத்தோடு எதிர்வருகின்ற வருடங்களில் இதனைவிட பலமடங்கு மாணவர்கள் சாதனையாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையோடு கூடிய வாழ்த்துக்களை கூறியதோடு அதற்காக இறைவனை பிரார்த்திக்கின்றேன் என அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பொது இடத்தில் சிறுநீர் கழித்த அமைச்சர் : வைரலாகும் புகைப்படம்!!

தூய்மை இந்தியா என மத்திய அரசு ஒருபுறம் சொல்லிக் கொண்டிருக்க மத்திய அமைச்சர் ஒருவரே பொது இடத்தில் சிறுநீர் கழித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், இவர் பீகார் மாநிலம் மோதிஹரி என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு காரில் இருந்து இறங்கி பொது இடத்தில் உள்ள சுவரில் சிறுநீர் கழித்துள்ளார்.

ராதாமோகன் சிறுநீர் கழிக்கும் போது பொலிசாரும் பாதுகாப்பில் இருந்துள்ளனர். அவர் இவ்வாறு செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.

தூய்மை இந்தியா பேசும் அரசின் அமைச்சரே இவ்வாறு செய்வதா? என்று இணையதள பயன்பாட்டாளர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

பஸ் விபத்தில் ஐவர் காயம்!!

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை கந்தேகெதர பிரதான வீதியில் தியனாகொட ஆலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்று (30) மதியம் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்தவர்களில் 5 பேர் படுகாயமடைந்து பதுளை மற்றும் கந்தேகெதர ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்துக்கான காரணங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

50 வயதில் 5 வயது பிள்ளையின் தோற்றம்: அதிசயமான குள்ள மனிதர்!!

 
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வறிய கிராமம் ஒன்றில் 5 வயது பிள்ளையின் தோற்றத்தில் 50 வயதான குள்ள மனிதர் வாழ்ந்து வருகிறார்.

29 அங்குலம் உயரமான பாசோர் லால் என்ற இந்த நபரின் உடல் வளர்ச்சியடையா விட்டாலும் அவர் தேக ஆரோக்கியத்துடன் இருப்பதாக கிராம மருத்துவர் கூறியுள்ளார்.

லாலின் உடல் வளர்ச்சி குன்றிய போது, அவரை விசேட மருத்துவ நிபுணரிடம் காட்டும் அளவுக்கு குடும்பத்தினருக்கு வசதி இருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

பாசோர் லாலின் பெற்றோர் உயிருடன் இல்லை, அவரது சகோதரரான கோபி என்பவரும் அவரது மனைவியும் அவரை பராமரித்து வருகின்றனர்.

தமது குடும்பத்தில் எவரும் இந்த அளவுக்கு குள்ளமாக இருக்கவில்லை என பாசோர் லாலின் சகோதரான கோபி கூறியுள்ளார்.

இந்த குள்ள மனிதரை பார்க்க இந்தியாவில் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் அவரது கிராமத்திற்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தான் குள்ளமாக இருப்பதை எண்ணி ஆரம்பத்தில் கவலையடைந்தாலும் தற்போது அந்த கவலை தனக்கில்லை எனவும் தானும் மற்றவர்களை போல் குடித்து, சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பதாகவும் பாசோர் லால் கூறியுள்ளார்.

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா : தென்னிந்திய பிரபலங்கள் வவுனியா வருகை!!

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடார்ந்த பொங்கல் இன்று (01.07.2017) சனிக்கிழமை நடைபெறுகின்றது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 9 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடையவுள்ளன. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படும்.

இன்று இரவு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகள், கரகாட்டம், வானவேடிக்கைகள் என்பன இடம்பெறும்.

அத்தோடு சிறப்பு நிகழ்வாக, தென்னிந்திய பின்னணிப் பாடகர்கள் ஹரிஹரசுதன் ( ஊதா கலர் ரிப்பன் பாடல் புகழ்), மற்றும் ஸ்வாகதா சுந்தர், கலக்கப்போவது யாரு புகழ் அமுதவாணன், இவர்களுடன் இலங்கையின் முன்னணிக் கலைஞர்களுடன் இலங்கையில் முதல்தர இசைக்குழுக்களில் ஒன்றான ஸ்ருதிலயா இசைக்குழுவின் இசையில் மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுகள் அனைத்தையும் இணையத்தளம் மூலமாக நாள் முழுவதும் HD தொழில்நுட்பத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளாக இவ் ஆலயத்தின் பொங்கல் விழா நிகழ்வுகளை வெற்றிகரமாக நேரடியாக ஒளிபரப்பிய வவுனியா நெற் இணையத்தளம் இம்முறை நவீன ஒலி, ஒளி சாதனங்களுடன் மிகத் துல்லியமான FULL HD தரத்துடன் நேரடி ஒளிபரப்பினை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

 

2020க்குள் குளோனிங் மனிதன் : அசத்தப் போகும் விஞ்ஞானிகள்!!

 
கலவியில்லா இனப்பெருக்கம் (Asexual Reproduction) என்பது தான் குளோனிங் முறையின் அடிப்படை விடயமாகும். உலகளவில் குளோனிங் குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

செம்மறி ஆடு, பூனை, மான், நாய் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு மிருகங்களை விஞ்ஞானிகள் இதுவரை குளோனிங் முறையில் உருவாக்கியிருக்கிறார்கள்.

குளோனிங், ஜீன் குளோனிங் (Gene Cloning), இனப்பெருக்க குளோனிங் (Reproductive Cloning) மற்றும் சிகிச்சைமுறை குளோனிங் (Therapeutic Cloning) ஆகிய மூன்று வகைகளில் செய்யப்படுகிறது.

இனப்பெருக்கத்திற்காக குளோனிங் செய்யப்பட வேண்டிய மிருகத்திலிருந்து முதிர்ந்த சீமாடிக் உயிரணு (Matured Somatic Cell) மற்றும் DNA கூறுகள் நீக்கப்பட்ட முட்டை செல் (DNA removed Egg Cell) ஆகிய இரு செல்களை எடுப்பார்கள்.

இப்படி மிருகங்களை வைத்து செய்யப்படும் ஆராய்ச்சியை அடுத்து அறிவியலின் உச்சமாக மனிதர்களை குளோனிங் செய்வதும் எட்டிவிடும் தூரத்தில் தான் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

தற்போது சிகிச்சை முறை குளோனிங்கில், மரபணு நோய்கள், வயதானால் வரும் தீவிர பிரச்னைகள் போன்றவற்றை சரி செய்கிறார்கள்.

குளோனிங் குறித்த இதே முக்கியத்துவமான ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் தொடரும் பட்சத்தில், 2020ம் ஆண்டுக்குள் குளோனிங் மனிதன் என்பது சாத்தியம் என விஞ்ஞானிகள் அடித்து கூறுகிறார்கள்.

இது நடந்தால் குழந்தையின்மை போன்ற குறைகள் முழுவதுமாக இல்லாமல் போவதுடன் ஒரு குழந்தைக்கு ஒன்றிலிருந்து மூன்று பெற்றோர்கள் வரை இருக்கும் என்ற நிலை கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கோவிலில் பிச்சையெடுத்த பிரபலம் : மறுவாழ்வு அளித்த வில்லன்!!

காதல் படத்தில் “நடிச்சா ஹீரோ தான் சார்” என்ற ஒரே டயலாக்கின் மூலம் பிரபலமானவர் விருச்சகாந்த். இவரது ஒரிஜினல் பெயர் பாபு, பல்லு பாபு என்றே அழைக்கின்றனர்.

சமீபத்தில் இவர் சூளையில் உள்ள கோவில் ஒன்றில் பிச்சையெடுத்து சாப்பிடுவது போன்ற புகைப்படங்கள், தகவல்கள் வெளியாகின.

தாய், தந்தை இறந்துவிடவே சில காலம் சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். தற்போது தனியாக சாலையோரத்திலும், ஆட்டோ ஸ்டாண்டிலும் படுத்துறங்கி வாழ்க்கை கடத்தி வருகிறார்.

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிச் சிறுவனின் சாதனை!!

இங்கிலாந்தில் வசிக்கும் இந்திய வம்சாவளிச் சிறுவனின் IQ அளவு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவை விட அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு இங்கிலாந்தில் வசிக்கும் அர்னவ் சர்மா என்ற 11 வயது சிறுவனின் IQ அளவு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவைவிட இரண்டு புள்ளிகள் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

“Mensa test” என்னும் IQ அளவை சோதிக்கும் தேர்வு கடந்த வாரமளவில் நடைபெற்றுள்ளது.

குறித்த தேர்வில் அர்னவ் சர்மா எதுவும் படிக்காமல் கடினமான இந்த IQ தேர்வுக்கு முகம்கொடுத்துள்ளார்.தொடர்ந்து, இந்தத் தேர்வில் அர்னவ் வெற்றி பெற்றுள்ளார்..

இந்த முறை நடத்தப்பட்ட IQ தேர்வில் அர்னவ் 162 புள்ளிகள் பெற்று மென்சா புத்திசாலிகள் க்ளப்பில் உறுப்பினராகி உள்ளார் .

இந்த புள்ளிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கின் IQ அளவை விட இரண்டு புள்ளிகள் அதிகம் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

அனைத்துக்கும் நான் : நான் இல்லாத இடமில்லை!!

சமகாலத்தில் நாட்டில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்திற்கும் பொறுப்பு கூற வேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தம்மீது குற்றம்சுமத்துவதற்கு சிலர் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

காலி பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

தாம் நேற்று செய்திகளை அவதானித்துக் கொண்டிருந்த போது குப்பை மேட்டு சரிவுக்கு தாமே காரணம் என கூறப்பட்டதாகவும், சயிட்டம் பிரச்சினைக்கும் தாமே காரண கர்த்தா எனவும் குற்றம்சுமத்தப்பட்டதாக தெரிவித்தார்.

உமா ஓயா திட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தாமே பொறுப்பு எனவும் கூறப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்த விடயங்களை அவதானிக்கும் போது தாம் இல்லாத இடமே இல்லை என்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியினதும், சிறிலங்கா சுதந்திர கட்சியினதும் பந்தம் தற்போது வலுவிலந்து விட்டது. இந்த இயலா நிலைமையை தம்மீது சுமத்துவதாக அவர் தெரிவித்தார்.

ஆசிரியரால் கர்ப்பமான மாணவி : வெளியாகின பல அதிர்ச்சித் தகவல்கள்!!

பாடசாலை மாணவிகளை அழைத்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறைகளை வழங்கிய ஹோட்டல் முகாமையாளர் நேற்று முன்தின இரவு களுத்துறை பிரதேச சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை, நாகொடையில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் சேவை புரியும் 20 வயதுடைய முகாமையாளர் பாடசாலை மாணவிகளை அழைத்து செல்லும் ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அறைகளை வழங்கி வந்துள்ளார்.

குறித்த நடவடிக்கையினால் ஆசிரியர் ஒருவரால் கர்ப்பமான 15 வயதுடைய மாணவியால், பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட இளைஞர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக தமிழ் திரைப்பட நடிகர் கைது!!

மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக நடிகர் சிவமணியை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அவரிடம் இருந்து லொறி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் மணல் கொள்ளை நடப்பதாகவும், அதில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் மாவட்ட காவல் துறை அதிகாரி விஜயகுமார் எச்சரித்திருந்தார்.

மணல் கொள்ளை குறித்து அதிகளவில் புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், விசாரணை நடத்திய பொலிசார் இதில் ஈடுபட்ட ஏரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிவமணி என்பவரை கைது செய்துள்ளனர்.

சிவமணி, மணல் கொள்ளையில் சம்பாதித்த பணத்தை வைத்து திட்டமிட்டபடி என்ற தலைப்பில் திரைப்படம் ஒன்றை தயாரித்து, அதில் தானே கதாநாயகனாக நடித்து வந்தராம்.

திட்டமிட்டபடி திரைப்படத்தில் மேகா ரத்னாகரன் என்பவர் கதாநாயகியாக நடித்தார் எனவும் தெரிகிறது.

2 ரூபாய்க்காக திருமணங்களில் நடனம் ஆடிய பிரபல நடிகர்!!

பொலிவுட் சினிமாவில் கொடுத்த வேடத்தை அப்படியே நடித்துக் கொடுப்பவர் நவாஸுதீன் சித்திக். இவர் அண்மையில் ஒரு பேட்டியில் இரண்டு ரூபாய்க்காக திருமண வீடுகளில் நடனம் ஆடியதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர், சிறுவனாக இருந்தபோது நான் என் நண்பர்களுடன் சேர்ந்து திருமண நிகழ்ச்சிகளில் நடனம் ஆடியுள்ளேன். எங்கள் பகுதியில் நடக்கும் திருமணங்களுக்கு போய் நடனம் ஆடினால் இரண்டு அல்லது மூன்று ரூபாய் கிடைக்கும். அப்போது இது பெரிய தொகை என்றார்.

தனக்கு நடனம் ஆட வராது என்று கூறியும் முன்னா மைக்கேல் படத்தின் இயக்குனர் படத்தில் தன்னை நடனம் ஆட வலியுறுத்தியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் வடமாகாண சுகாதார அமைச்சரின் காரியாலயத்தை முற்றுகையிட்ட சுகாதாரத் தொண்டர்கள்!!

 
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனம் தொடர்பாக நேற்றைய தினம் (29.06) மத்திய சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பிரகாரம் சுகாதாரத் தொண்டர்களுக்கு சாதகமான பதில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இன்று (30.06) அமைச்சரின் காரியாலயத்திற்கு வருகை தந்துள்ளதாக சுகாதாரத் தொண்டர்கள் தெரிவித்தனர்.

இருந்தபோதும் நேற்றையதினம் அவ்வாறானதொரு கலந்துரையாடல் நடைபெறவில்லை என வடமாகாண சுகாதார அமைச்சரால் சுகாதார தொண்டர்களுக்கு சொல்லப்பட்டதாக தெரிவித்தனர்.

நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கடந்த 04.05.2017 தொடக்கம் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கொட்டகை அமைத்து வவுனியா சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள கவனயீர்ப்பு போராட்டமானது இன்றுடன் (30.06..2017) 58 வது நாளாக தொடரும் நிலையில் வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம்.

அரசாங்கத்தின் குறைந்த தகுதியாக தரம் பத்தில் நான்கு பாடங்கள் சித்தியடைந்திருந்தால் மாத்திரமே உள்வாங்கப்பட முடியும். அந்தவகையில் வடக்கு சுகாதாரத் தொண்டர்களில் 910 பேரில் 150 சுகாதாரத் தொண்டர்கள் மாத்திரமே தகுதி பெற்றுள்ளதாகவும், ஆகவே ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவிருந்த கூட்டத்தில் விசேட அமைச்சரவையின் அங்கிகாரத்தினூடாக அல்லது ஜனாதிபதியின் நேரடி கட்டளையினூடாக அனைத்து தொண்டர்களையும் உள்வாங்குவதற்கும் உத்தேசித்துள்ள நிலையில் கூட்டம் நடைபெறாமையினால் முடிவுகள் எட்டப்படவில்லை என தெரிவித்தார்.

வவுனியா சிறுமியின் தற்கொலைக்கு அன்பகத்தில் நடந்த துன்புறுத்தல்களே காரணம் : கடிதம் அம்பலம்!!

வவுனியா வேப்பங்குளம் சிறுவர் இல்லத்தில் இருந்த சிறுமியின் மரணத்திற்கு பாடசாலை காரணமல்ல, சிறுவர் இல்லத்தில் துன்புறுத்தல்கள் நடந்ததை பகிரங்கப்படுத்தும் மரணித்த மாணவியின் கடிதம் அம்பலமாகியுள்ளது.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அன்பகம் சிறுவர் இல்ல சிறுமி நேற்று மாலை 4.30 மணியவில் தான் தங்கியுள்ள அன்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இச் சிறுமியின் மரணத்திற்கும்பாடசாலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி அதிபர் பி.கமலேஸ்வரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள அன்பகத்தில் இருந்து எமது பாடசாலைக்கு வந்து கல்வி கற்கும் மாணவர்களில் தரம் 6 மாணவி ஒருவரும் இருந்தார்.

றொக்சிகா என்ற குறித்த மாணவி வியாழக்கிழமை மாலை அன்பகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்திற்கு எமது பாடசாலை ஆசிரியர் ஒருவர் அந்த மாணவியை பேசியமையால் தான் அவர் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்கள் சிலவற்றில் செய்திகள் வெளியாகி இருந்தன.

ஆனால் அவை திட்டமிட்டு எமது பாடசாலைக்கு எதிராக புனையப்பட்ட கதை. அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் எமது பாடசாலையில் நடைபெறவில்லை.

குறித்த மாணவி அன்றைய தினமும் வழமை போல் பாடசாலைக்கு வருகை தந்து பரீட்சை எழுதியிருந்தார். ஆசிரியர்களுடனும் சக மாணவர்களுடனும் வழமை போல் அன்பாக நடந்து கொண்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த மாணவி அன்பகம் சிறுவர் இல்லத்தில் தனக்கு இருக்க விருப்பம் இல்லை எனவும், அங்கு துன்புறுத்துவதாகவும் கடிதம் மூலம் எம்மிடம் முறையிட்டு இருந்தார்.

இது தொடர்பில் நாம் மாணவியிடம் கேட்டறிந்து ஆலோசனைகளையும் வழங்கியிருந்தோம். வேறு ஒரு மாணவியும் அன்பகம் தொடர்பில் எம்மிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

நாம் உடனடியாகவே சிறுவர் உரிமைமேம்பாட்டு அதிகாரியிடம் குறித்த விடயத்தை தெரியப்படுத்தியிருந்தோம். இவ்வாறான நிலையில் குறித்த மாணவியின் மரணம் நிகழ்ந்துள்ளது. இந்தமரணத்திற்கும் பாடசாலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.

அந்த மாணவியின் இழப்பால் பாடசாலை சமூகம் சோகத்தில் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த மாணவியால் எழுத்தப்பட்ட கடிதம் வவுனியா பொலிசாரால் பாடசாலையில் இருந்து பெறப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் சிறுவர் இல்லத்தில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை : பொலிசார் தீவிர விசாரணை!!

வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்றம் !(படங்கள் )

வவுனியா குடியிருப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின்  வருடாந்த  மகோற்சவம் இன்று(30.06.2017 ) காலை  கொடிஏற்றதுடன்  ஆரம்பமானது .

பத்து நாட்கள் இடம்பெறும் மகோற்சவத்தில் எதிர்வரும்
07.07.2017  சப்பர திருவிழாவும்
 08.07.2017  தேர்த்திருவிழாவும்
09.07.2017  தீர்த்த திருவிழாவும்  இடம்பெறும்.

 

வவுனியாவில் மாணவர் உட்பட ஐவரை காணவில்லை : மூவர் பொலிஸாரால் மீட்பு!!

வவுனியா ஈச்சங்குளம் பகுதி பொலிஸ் நிலையத்தில் நேற்றைய தினம்(29.06) மூன்று முறைப்பாடுகள் பதியப் பட்டுள்ளன. இதில் பிரபல பாடசாலையில் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மூன்று மாணவர்கள் பாடசாலை சென்று வீடு திரும்பவில்லை என பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை தரணிக்குளம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய ஈஸ்வரன் தர்சா என்பவர் வீட்டில் கடிதம் எழுதிவைத்து விட்டு காணாமல் போயுள்ளார் என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவரையும் காணவில்லை என ஈச்சங்குளம் பொலிஸாரிடம் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இம் மாணவி தொடர்பான விசாரனைகளை ஈச்சங்குளம் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இன்று மூவர் மீட்பு

இதேவேளை நேற்றைய தினம் காணாமல் போனதாக முறைப்பாடிடப்பட்ட மூன்று பாடசாலை மாணவர்களும் இன்று திருகோணமலை கடற்கரை பகுதியில் வைத்து திருகோணமலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தாமாகவே யாருக்கும் தெரியாமல் திருகோணமலைக்கு சென்றுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தரணிக்குளம், கட்டையர்குளம் மற்றும் சாஸ்திரிகூழாங்குளம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய ஜீவசங்கர், வினித், அட்சயன் எனும் மூன்று மாணவர்களே குறிப்பிட்ட மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.