வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தண்டுவானிலிருந்து நெடுங்கேணிக்குச் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் வற்றாப்பளை கோவிலிலிருந்து வவுனியா நோக்கி வந்த வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தின் போது தண்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதினையுடைய நல்லையா சகுந்தலாதேவி என்பவர் உயிரிழந்ததோடு 32 வயதுடைய கனகலிங்கம் ஜனார்த்தன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் குறித்த காயங்களுக்கு உள்ளான நபர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் நெடுங்கேணி மற்றும் ஒட்டுச்சுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் தங்களை சேர்ந்த பெண்கள் தங்களுக்கே உரித்தானவர்கள் என்று கருதுவதும் தங்கள் மனைவியர் மற்றும் மகள்களுக்கு சில கட்டுப்பாடுகைளையும் விதிப்பார்கள்.
ஊரில் உள்ள பெண்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் ஏற்றுக்கொள்ளும் அவர்கள், நம்முடைய பெண்கள் மட்டும் இப்படி ஒரு செயலை செய்துவிடக்கூடாது என்பதே அவர்களின் நோக்கம் ஆகும்.
அதிலும், குறிப்பாக குடும்ப வாழ்க்கையில் தனக்கு ஒரு நியதி என்றால் தங்களது மனைவியருக்கு என்று சில நியதிகளை வகுத்துக்கொள்வார்கள்,
மனைவியருடன் நண்பர்களுடன் தான் பேசலாம், ஆனால் தனது நண்பர்கள் முன்னிலையில் தனது மனைவி 5 நிமிடத்திற்கு மேல் நிற்க கூடாது.
தனது நண்பர்களுடன் சேர்ந்து சினிமாவிற்கு செல்லும் ஆண்கள், தங்களது மனைவியரை தங்களோடு அழைத்து செல்வார்களே தவிர, அவர்களை சினிமாவிற்கு நண்பர்களோடு அனுப்புவதில்லை
தன் மனைவி பேஸ்புக் பாவிப்பதை எதிர்க்கிறார்கள். ஆனால் உலகில் உள்ள பெண்களுக்கெல்லாம் ரிக்வஸ்ட் அனுப்புகிறார்கள்.
வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியில் செல்லும் பெண் அடக்க ஒடுக்கமாக நடந்து கொள்ள வேண்டும், ஒழுங்காக ஆடை அணிந்து செல்ல வேண்டும் என வற்புறுத்தும் ஆண்கள், தாங்கள் தெருவில் நடந்து செல்லும் போது பார்வையை தாழ்த்த வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.
தனது பிள்ளைகளுக்கு கற்பிக்க நல்ல ஆசிரியையைத் தேடுகிறார்கள். ஆனால் பெண்கள் தொழில் செய்ய வந்தால் வேறு அர்த்தம் கற்பிக்கிறார்கள்
சில இடங்களில் பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள், ஆனால் பெண்ணையே கடவுளாகவும் வணங்குகிறார்கள்.
மொத்தத்தில் பெண்களால் சமூகத்துக்கு நடக்கவேண்டிய அத்தனை நல்ல சேவைகளும் சரியாக நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள், சேவைகளையும் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்த சமுதாயத்திற்கு சேவை நடக்க வேண்டும், நமக்கும் சேவை கிடைக்கு வேண்டும் என்று விரும்பும் ஆண்கள் அவை அனைத்தும் வேறு ஒருவருக்கு சொந்தமான பெண்கள் செய்தால் போதும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
எனது கார்த்திக் இறந்துவிடவில்லை என்னோடு தான் இருக்கிறார் என தனது திருமண நாளின் நினைவுகளோடு தனது வாழ்க்கையை பகிர்ந்து கொண்டார் மைனா நந்தினி.
கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி மைனா நந்தினியின் கணவர் கார்த்திக்கேயன் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பிற்கு காரணமாக நந்தியினின் தந்தை மற்றும் நந்தினி தான் காரணம் என பல தகவல்கள் வெளியாகின.
வருகிற ஜூன் 6 ஆம் திகதி தான் நந்தினி மற்றும் கார்த்திக்கின் முதலாவது திருமண நாள். அந்த திருமண நாளின் நினைவுகளோடு தனது காதல் கணவர் குறித்து நந்தினி கூறியதாவது, பொதுவாக, கார்த்திக்கு வீட்ல சும்மா இருக்கிறது பிடிக்காது. நாங்க இரண்டு பேருமே பிஸியாக இருக்கணும்னுதான் சொல்லிட்டிருப்பான்.
வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கிறது தப்புனு சொல்லுவான், அவனுக்குப் பிடிச்ச மாதிரி வாழணும்ங்கிறதுதான் என் ஆசையும். காதலிக்கும்போதும் சரி, கல்யாணமான பிறகும் சரி எனக்குனு ஆசையா ஒரு பொருள்கூட கார்த்தி வாங்கித் தந்ததில்லை.
ஒரு பொண்ணுக்கு இருக்கிற ஆசைகளைக்கூட நான் அனுபவிச்சது கிடையாது. ஆனா, அதற்கு ஈடான பாசத்தைக் காட்டினான்.
இப்பவும் கார்த்தி எங்கேயும் போயிடலை, என்னோடுதான் இருக்கான், ஒவ்வொரு நிமிஷமும் அவன் நினைவு எனக்குள் ஓடிட்டிருக்கு என்று கூறியுள்ளார்.
வட்ஸ் அப் சமூகவலைதளம் வரும் ஜூன் 30ஆம் திகதி முதல் குறிப்பிட்ட கைத்தொலைபேசி மொடல்களில் செயல்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உலகளவில் அதிக மக்கள் உபயோகப்படுத்தும் வட்ஸ் அப் செயலி வரும் 30ஆம் திகதி முதல் பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி ஓ.எஸ்., நோக்கியா S40, நோக்கியா S60 உள்ளிட்ட செல்போன்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது கடந்த ஆண்டே அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனால் பிளாக்பெர்ரி நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என கூறப்பட்டதால் ஜூன் 2017 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
பழைய ஓ.எஸ்-களை கொண்ட செல்போன்கள் எதிர்காலத்தில் தங்கள் பயன்பாட்டின் அம்சங்களை விரிவாக்குவதற்கு தேவையான திறன்களை வழங்காது என்பதால் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மிகவும் மட்டமான களத்தடுப்பு காரணமாகவே சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் அரையிறுதி வாய்ப்பை தவற விட்டதாக இலங்கை அணித்தலைவர் மத்யூஸ் விளக்கமளித்துள்ளார்.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்கள் அரையிறுதிக்கு முன்னேறுவர் என்ற சூழ்நிலை நிலவியதால் இரு நாட்டு ரசிகர்களுக்கிடையே பரபரப்பு தொற்றிக் கொண்டது.
இதையடுத்து, இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, 236 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. பின்னர் 237 என்ற இலக்கை பாகிஸ்தான் தட்டுத்தடுமாறி கடந்தது.
இலங்கையின் இந்தத் தோல்விக்கு முக்கிய காரணமாக பலரால் சொல்லப்பட்டது, அவர்களின் களத்தடுப்பு முறைதான். கிட்டத்தட்ட மூன்று சுலபமான பிடிகளை விட்டு, பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடர்ந்து விளையாட வழிகோலியதே கடைசியில் இலங்கை அணியின் தோல்விக்கு வித்திட்டது.
இந்த சூழ்நிலையில்தான் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்யூஸ், ‘இன்று நடந்த போட்டியை திரும்பிப் பார்க்கும்போது, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என்பது தெரிகிறது.
அதுவும் எங்கள் களத்தடுப்பு மிகவும் மட்டமானதாக இருந்தது. நாங்கள் மட்டும் எங்களுக்கு வந்த பிடிகளை எடுத்திருந்தால், இன்று வேறொரு கதையைப் பற்றி பேசியிருப்போம்.
ஆனால், ஆட்டத்தின் முக்கியமான நேரங்களில் பிடிகளை நாங்கள் தொடர்ச்சியாக நழுவவிட்டோம்.’ என்று வருத்தமாக பேசியுள்ளார்.
கனடாவில் விபத்தில் உயிரிழந்த மனைவியின் கல்லறைக்கு சென்ற கணவரும் விபத்தில் சிக்கி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியாவில் உள்ள கல்கேரி நகரில் Ahmed Nourani Shalloo மற்றும் Maryam Rashidi Ashtiani என்ற தம்பதி வசித்து வந்துள்ளனர். மனைவி ஒரு பெட்ரோல் நிலையத்திலும், கணவன் தனியார் நிறுவனம் ஒன்றிலும் பணி புரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பெட்ரோல் நிரப்ப வந்த நபர் ஒருவர் நிலையத்தில் இருந்த பணத்தை கொள்ளையடித்து தப்ப முயன்றுள்ளார்.
இதனை பார்த்த மர்யம் அவனை பிடிக்க சாலையில் இறங்கி ஓடியுள்ளார். அப்போது, வேகமாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு சென்றுள்ளது. இவ்விபத்தில் மர்யம் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மனைவி உயிரிழந்ததும் அஹ்மத் தனது பிள்ளைகளுடன் வான்கூவர் நகரில் குடியேறியுள்ளார்.
இந்நிலையில், மனைவியின் கல்லறையை பார்ப்பதற்காக நேற்று கல்கேரி நகருக்கு காரில் புறப்பட்டுள்ளார். அப்போது, துரதிஷ்டவசமாக சாலையில் நிகழ்ந்த விபத்தில் அஹ்மத் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் பேசியபோது ‘படங்கள் மற்றும் கதைகளில் தான் இதுபோன்ற சோகமான சம்பவங்கள் நிகழும். ஆனா, உண்மையிலேயே இரண்டு வெவ்வேறு சாலை விபத்துகளில் மனைவியும் கணவனும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக’ தெரிவித்துள்ளனர்.
சென்னையில் தன்னுணர்வு அற்று படுத்து கிடந்த முதியவரின் உடலில் தீயினை வைத்து எரித்த இளைஞர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் முதியவர் ஒருவர் தன்னுணர்வு அற்று படுத்துகிடக்கிறார். அப்போது இளைஞர்கள் சேர்ந்து அந்த முதியவரின் உடலில் தீயினை வைத்து எரிக்கின்றனர்.
அதில், இருந்து தப்பித்துக்கொள்வதற்காக அந்த முதியவர் எழுந்திருக்க முடியாமல் நகர்ந்து செல்கிறார், இதனைப்பார்த்து அந்த இளைஞர்கள் சிரிக்கிறார்கள்.
இறுதியில் அந்த முதியவர் மெதுவாக தரையில் நகர்ந்து சென்று தீயை அணைத்துக்கொள்கிறார். இந்த வீடியோ பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகை ராதாவுக்கு சொந்தமான தோட்டத்தில் மேய்ந்த ஆடுகள் விஷம் வைத்து கொல்லப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள தளவாய்புரம் கிராமத்தில் நடிகை ராதாவுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.
இந்த தோட்டத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ரவி(வயது 53) என்பவர் தங்கி இருந்து காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் தோட்டத்தில் வாழைகளையும் பயிர் செய்து வந்தார்.
மலை அடிவாரத்தில் உள்ளதால் காட்டுப்பன்றிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆடு மாடுகள் அடிக்கடி தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை நாசம் செய்து வந்தன.
தோட்டத்துக்குள் காட்டுப்பன்றிகள், ஆடுகள் புகுந்து வாழைகளை நாசம் செய்வதை கண்டு ஆத்திரம் அடைந்த ரவி, காட்டுப்பன்றிகள், ஆடுகளுக்கு விஷம் வைத்ததாக கூறப்படுகிறது.
அங்கு வைக்கப்பட்டு இருந்த விஷத்தை அறியாத ஆடுகள் வாழையை சாப்பிட்டவுடன் , சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக செத்து விழுந்தன. இப்படியாக 10 ஆடுகள் தோட்டத்திலேயே செத்து விழுந்தன.
இது தொடர்பாக ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் ஏர்வாடி பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை விஷம் வைத்து சாகடித்ததாக தோட்டத்து காவலாளி ரவியை கைது செய்தனர்.
அமெரிக்காவில் உலகிலேயே மிக நீளமான பீட்சா தயாரிக்கப்பட்டு தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள Fontana நகரில் கடந்த சனிக்கிழமை அன்று இச்சாதனை நிகழ்த்தப்பட்டது.
2,540 கிலோ எடையுள்ள சாஸ் மற்றும் 1,540 கிலோ எடையுள்ள சீஸ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி பீட்சா மிதமான சூட்டில் தயாரிக்கப்பட்டது.
ஆரம்பத்தில் சுமார் 2.1 கி.மீ நீளம் வரை தயாரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. ஆனால் முந்தைய கின்னஸ் சாதனை பீட்சாவின் நீளம் 1.8 கி.மீ என்பதால் இதனை 1.93 கி.மீ நீளம் வரை தயாரித்துள்ளனர். இதன் ஒட்டுமொத்த எடை 7,711 கிலோ ஆகும்.
உலகின் மிக நீளமான பீட்சா என்ற பட்டியலில் இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும், பீட்சா தயாரிப்பு பணி முடிவடைந்ததும் இதனை ஏழைகளுக்கும் வீடு இல்லாதவர்களுக்கும் இலவசமாக பிரித்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மஹியங்கனை, பூஜாநகர பிரதேசத்தில் புகைப்பட்டிருந்த நிலையில் குழந்தையின் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளது.
சந்தேகநபரான பெண்ணின் வீட்டு தோட்டத்தில் குழந்தை புகைப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வீட்டில் வளர்கப்பட்ட நாய் குழந்தையை உடலை புதைத்த இடத்திலிருந்து கொண்டு வந்துள்ளது.
இதனையடுத்து பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
குழந்தையின் உடல் உயிருடன் புகைப்பட்டதா அல்லது உயிரிழந்த நிலையில் புதைக்கப்பட்டதா என்பது தொடர்பில் நீதவான் விசாரணையின் பின்னர் ஆராயப்படவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மஹியங்கனை பொலிஸ் தலைமையக பொலிஸ் அதிகாரிகள் உட்பட குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கி மோசடியில் நாட்டை விட்டு தப்பியோடிய தொழிலதிபர் மல்லையா மீதான வழக்கு அந்நாட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதில் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வரும் வழக்கும் இன்று விசாரணைக்கு வருகிறது. 9000 கோடி வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் லண்டன் தப்பியோடினார் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா.
லண்டன் மெட்ரோ பொலிட்டன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ஏப்ரலில் பிணையில் விடுதலையானார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் மல்லையாவை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முயற்சித்து வருகிறது.
அதற்கான போதுமான ஆவணங்களை மான்செஸ்டர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வரும் போது மல்லையாவை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவிடுமா என்பது தெரியவரும்.
இது குறித்து இந்திய அதிகாரிகள் கூறுகையில், இந்தியா-பிரிட்டன் இடையே 1993ம் ஆண்டு கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் தான் குஜராத் கலவரத்தில் குற்றம்சாட்டப்பட்ட சமீர்பாய் வினுபாய் பட்டேல் என்பரை லண்டனில் இருந்து நாடு கடத்தி கொண்டு வந்தோம். அதன்படி மல்லையாவையும் இந்தியா கொண்டு வருவோம் என்றனர்.
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு விசேட ஆணைக்குழுவொன்றை அமைக்குமாறு இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கையொன்றை முன்வைக்கவுள்ளார்.
இந்தத் தகவலை உறுதிப்படுத்திய அமைச்சின் அதிகாரியொருவர், இதற்கான கோரிக்கை கடிதம் தயாராகி வருகின்றது எனவும் தெரிவித்தார்.
வடக்கு, வடமத்திய உட்பட சில மாகாண சபைகளில் நிதிப் பயன்பாடு பங்கீடுகளின் போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தனிநபர்களும், அமைப்புகளின் பிரதிநிதிகளும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
மாகாண சபைகள் இவ்வாறு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தினாலும் மத்திய அரசு மீதே மக்கள் விரக்தியடைகின்றனர். இது தேசிய அரசுக்கு எதிர்காலத்தில் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவேதான் நிதி மோசடி பற்றி விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. எனினும், நெருக்கடியான சூழ்நிலைகளின்போது மத்திய அரசின் பிரதானிக்கு அதில் தலையிடுவதற்குரிய அதிகாரம் இருக்கின்றது. ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவே மாகாண ஆளுநர்கள் செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது செல்லிடத் தொலைபேசியை உற்றுப்பார்த்தவாறு நடந்துகொண்டிருந்த பெண்ணொருவர், 6 அடி பள்ளத்தில் வீழ்ந்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
நியூ ஜேர்ஸி மாநிலத்தின் பிளெய்ன்பீல்ட் நகரிலுள்ள வீதியின் நடைபாதையில் 67 வயதான பெண் ணொருவர் தனது செல்லிடத் தொலை பேசிக்கு வந்த தகவலை வாசித்தவாறு நடந்துகொண்டிருந்தார்.
அந்த நடைபாதைக்கு குறுக்காக கட்டடமொன்றின் கீழ் தளத்துக்காக அமைக்கப்பட்டிருந்த திறந்த கதவை அப்பெண் அவதானிக்கவில்லை.
இதனால், அக்கதவில் எதிர்பாராதவிதமாக மோதிய அப்பெண் 6அடி பள்ளத்தில் வீழ்ந்தார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண், ஆபத்தான நிலையில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் பொதுமக்கள் பாதுகாப்புப் பணிப்பாளர் கார்ல்ட் ரீலி இது தொடர்பாக கூறுகையில், “வாகனம் செலுத்தும் போது தொலைபேசி ஊடாக தகவல்களை பரிமாறுவது நல்லதல்ல என எண்ணியிருந்தேன். இப்போது, நடந்துகொண்டு இவ்வாறு தகவல்களை பரிமாறுவதும் நல்லதல்ல” என்றார்.
அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இலங்கை கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு நூதனசாலையொன்றை ஆரம்பித்துள்ளார்.
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரான ஜூலியா விஜேசிங்க என்ற 18 வயதுடைய யுவதியொருவரே நூதனசாலையை அங்குள்ள மக்கள் பாவனைக்காக திறந்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நூதனசாலை தொடர்பில் ஜூலியா விஜேசிங்க குறிப்பிடுகையில், இலங்கையின் அனுராதபுரம், பொலநறுவை ஆகிய பிரதேசங்களில் காணப்படுவதைப்போன்று பல கலாச்சார அம்சங்களை சேகரித்து இதனை உருவாக்கியுள்ளேன்.
உண்மையில் சொல்லப்போனால் இது குறித்து நான் பெருமையடைகின்றேன். இவ்வாறானதொரு செயற்பாட்டை எனது அம்மா, அப்பா இல்லாம் செய்ய முடியாது.
நான் இவ்வாறு செய்வதற்கு முயற்சியெடுத்த பெற்றோர்களிடம் கேட்கும் போது நான் வயதில் சிறியவள். இருப்பினும் எனது பெற்றோர் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தனர் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, குறித்த நூதனசாலையில் இலங்கையின் சாப்பாட்டு வகைகளையும் அங்கு உண்டு மகிழக்கூடியதாகவுள்ளமை விசேட அம்சமாகும்.