சூதாட்டத்தில் 5 மனைவிகளை அடமானம் வைத்த இளவரசர்: ஏலத்தில் விடப்படும் அபாயம்?

சூதாட்டத்தில் தோற்ற சவுதி இளவசர் தனது மனைவிகளை பணத்திற்கு பதிலாக அடமானம் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் இளவரசர் மஜீட் பின் அப்துல்லா சூதாட்ட மோகத்திற்கு ஆளாகி உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். அண்மையில் எகிப்து சென்ற அவர் அங்குள்ள சினாய் கிராண்ட் கேசினோ சூதாட்ட விடுதியில் ஆறு மணி நேரம் சூதாட்டம் ஆடி தோற்றுள்ளார்.

அதுவும் மில்லியன் கணக்கில் பணத்தை பந்தையம் கட்டி விளையாடியுள்ளார். இதனால், பந்தய பணமான 350 பில்லியன் டொலர் பணத்தை கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவரிடம் போதிய பணம் இல்லாததால், 25 மில்லியன் டொலர் தொகை கடன் வந்துள்ளது.

அதைக் கொடுக்க முடியாத நிலையில், தனது 5 மனைவிகளை அந்த விடுதியிலேயே அடமானம் வைத்துவிட்டு சவுதிக்கு தனியே வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அவரது மனைவிமாரின் நிலை கேள்விக்குறி ஆகிவிட்டது. சவுதி அரச குடும்பத்தினர் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கிறதா என்பதும் தெரியவில்லை.

பணம் கொடுக்காத பட்சத்தில் அவர்களை விரைவில் ஏலத்தில் விற்றுவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

பாடசாலை மாணவிக்கு பிறந்த குழந்தை : அவரே குழந்தையை கொன்ற கொடூரம்!!

தமிழ்நாட்டில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவி தனக்கு பிறந்த குழந்தையை வீட்டின் கூரையில் வீசி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னை நகரில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது வீட்டின் கூரையில் பிறந்த குழந்தை ஒன்று அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.

பின்னர், குழந்தை இறந்தது குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சரவணனின் மகள் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ரவி என்பவருக்கும் தவறான உறவு ஏற்பட்டு அதன் மூலம் மாணவி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவிக்கு கடந்த 28ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்ததாகவும், அந்த குழந்தையை மாணவி தனது வீட்டின் கூரையில் தூக்கி வீசி கொன்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மாணவி மற்றும் அவர் குடும்பத்தாரிடம் பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கட்டார் நெருக்கடியின் பின்னணியில் ரஷ்ய ஹெக்கர்கள் : இலக்கு வைக்கப்படும் அமெரிக்கா!!

கட்டாரின் அரசு செய்தி இணையத்தளத்திற்குள் ஊடுறுவி பொய்யான தகவல்களை வெளியிட்டவர்கள் ரஷ்யாவின் ஹெக்கர்ஸ்களாக இருக்கலாம் என்று அமெரிக்கா சந்தேகம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு நெருக்கமான மத்திய கிழக்கு நாடுகளிடையே நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக ஹெக்கர்கள் போலி செய்தி அறிக்கையை வெளியிட்டிருக்கலாம் என அமெரிக்க விசாரணை அதிகாரிகள் நம்புகின்றனர்.

ஊடுறுவல் சம்பவம் தொடர்பில் கட்டார் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளுக்கு உதவுவதற்காக சமீபத்தில் அமெரிக்க FBI குழு ஒன்று டோஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அமெரிக்க அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளால் சேகரிக்கப்பட்ட புலனாய்வு தகவல்களுக்கமைய இரு வாரங்களுக்கு முன்னர் கட்டார் அரசாங்கத்தால் முதலில் பதிவு செய்யப்பட்ட ஊடுருவலுக்கு பின்னால் ரஷ்ய ஹெக்கர்கள் இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

பிராந்தியத்தின் மிகப் பெரிய அமெரிக்க இராணுவ தளங்களில் ஒன்றை கட்டார் இயக்கி வருகின்றது.

ரஷ்ய ஹெக்கர்களின் ஈடுபாடு அமெரிக்க உளவுத்துறை மற்றும் சட்ட அமுலாக்க நிறுவனங்களின் கவலைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

அமெரிக்க நட்பு நாடுகளில் இதே இணைய- ஊடுறுவல் நடவடிக்கைகளை ரஷ்யா தொடர்வதாகவும், 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களிலும் இந்த ஹெக்கர்கள் தலையிட்டிருக்கலாம் என உளவுத்துறை நிறுவனங்கள் நம்புகின்றன.

அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் இடையே பிளவுகளை ஏற்படுத்துவதே ரஷ்யாவின் இலக்கு என தோன்றுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய மாதங்களில், ரஷ்ய சைபர் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக மாறியுள்ள நிலையில், பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிற நாடுகளின் தேர்தல்களில் உட்பட போலி செய்தி வெளியிட ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முன்னதாக கட்டாரின் அரசு செய்தி இணையத்தளத்திற்குள் சவுதி அரேபியாவுக்கு எதிரான தகவல்கள் வெளியாகி இருந்தன. இதுவே கட்டார் பிரச்சினைக்கு பிரதான காரணமாக இருக்கலாம் நம்பப்படுகிறது.

இதனையடுத்து மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த 5 நாடுகள் கட்டாருடான ராஜதந்திர உறவுகளை துண்டித்திருந்தன. இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

அனைத்து நில, கடல் மற்றும் விமான எல்லைகளையும் மூடி, கட்டார் பயங்கரவாதக் குழுக்களுக்கும் ஈரானுடனான அதன் உறவுகளுக்கும் ஆதரவு கொடுத்ததாக குறித்த நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

சமீபத்திய இராஜதந்திர நெருக்கடியைப் பற்றி தவறான செய்திகள் வெளியிடப்படுவதாக கட்டார் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுமார் 30000 மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு!!

2016-2017ம் கல்வியாண்டுக்காக சுமார் 30000 மாணவ, மாணவியர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையிலான இசட் புள்ளிகள், இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நேற்று வெளியிடப்பட்டது.

இந்த இசட் புள்ளிகள் அடிப்படையில் இந்தக் கல்வியாண்டுக்காக 29696 மாணவ, மாணவியர் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்பட உள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது 2093 மாணவ மாணவியர் மேலதிகமாக பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளப்பட உள்ளனர்.

பல்கலைக்கழக அனுமதிக்காக 71106 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் விண்ணப்பம் செய்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விபரங்களை 1919 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும்.

கட்டாரில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

கட்டாரில் வசித்து வரும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் நாடு திரும்ப முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.

கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினால், அங்குள்ள இலங்கையர்கள் எவரேனும் நாடு திரும்ப வேண்டுமென விரும்பினால் கால தாமதமின்றி அவர்கள் நாடு திரும்ப முடியும் என அமைச்சர் அதுகோரல கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கட்டாரில் வசித்து வரும் இலங்கையர்கள் நிலைமை தொடர்பில், குறித்த கொழும்பு ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்பினால் கட்டாருக்கான இலங்கை தூதரகத்திற்கு சென்று அதன் ஊடாக நாடு திரும்ப தேவையான வசதிகளை செய்து கொள்ள முடியும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாரில் சுமார் ஒருலட்சத்து நாற்பதாயிரம் இலங்கையர்கள் பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார்.

கட்டாரில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையினால் இலங்கையர்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது எனவும், சிலர் அச்சம் காரணமாக உணவு, குடிநீர் போன்றவற்றை சேகரித்து கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்தல விமான நிலையத்தில் தரையிறங்கிய உலகின் மிக பெரிய விமானம்!!

உலகின் மிக பெரிய விமானம் ஒன்று மத்தல ராஜபக்ச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொருட்களை கொண்டு செல்லும் உலகின் மிக பெரிய விமானங்களின் ஒன்றான Antonov 124 விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.

நேற்று காலை சிங்கபூரில் இருந்து மத்தல விமான நிலையத்திற்கு இந்த விமானம் வருகை தந்துள்ளது.

எரிபொருள் நிரப்புவதற்காகவும், ஊழியர்கள் ஓய்வு எடுப்பதற்காக மத்தல விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சினிமா என்னை சிதைத்துவிட்டது : சன்னி லியோன்!!

நடி­கை­யாக ஜெயித்­தி­ருந்­தாலும் நிஜத்தில் நிறைய தோல்வியடைந்­துள்­ள­தாக சன்னி லியோன் தெரிவித்­துள்ளார். வெளி­நாட்டில் ஆபாச படங்­களில் நடித்து வந்த சன்னி லியோன் தற்­போது மும்பையில் செட்டில் ஆகி பொலிவூட் படங்­களில் நடித்து வரு­கிறார்.

கவர்ச்சி கதா­பாத்­தி­ரங்­களே அவரை தேடி வரு­கின்­றது. இந்­நி­லையில் சினிமா பற்றி அவர் கூறும்போது,  இன்று நான் பெரிய நடி­கை­யாக நட்­சத்­திர அந்­தஸ்தை பெற்­றி­ருக்­கலாம். ஆனால், நான் நிஜ வாழ்க்­கையில் நிறைய தோல்­வி­களை சந்­தித்­து­விட்டேன். நட்­சத்­திர அந்­தஸ்தை பெற நான் நிறைய இழந்­தி­ருக்­கிறேன். அந்த இழப்பு இன்றும் கூட தொடர்­கி­றது.

நடிக்க வாய்ப்பு வேண்­டு­மானால் தயா­ரிப்­பா­ள­ருடன் ஒரு இரவு படுக்­கையை பகிர வேண்டும் என்றார்கள். நீ முடி­யாது என்றால் வேறு ஒரு­வ­ருக்கு இந்த வாய்ப்பு என்­றார்கள். இதை கேட்டு பாதி மன­தோடு பதில் சொல்­வ­தற்குள் உயிரே போய்­விட்­டது. இப்­படி உயிரை விட்டே சினி­மா­வுக்கு வந்தேன்.

நான் முதலில் கூச்ச சுபாவம் உள்­ள­வ­ளாக இருந்தேன். அங்கம் தெரி­யா­த­படி உடை அணிந்தேன். தற்போது அந்த வெட்கம், பயம் எல்லாம் எங்கே என்று தெரி­ய­வில்லை.

சினிமா நட்­சத்­திர அந்­தஸ்தை பெற நிறைய இழந்­து­விட்டேன். சினிமா என்னை சிதைத்­து­விட்­டது. விருப்­பமே இல்­லாமல் பட வாய்ப்­புக்­காக ஒரு­வ­ருடன் இருப்­பது கொடுமை. நான் இப்படி பளிச்சென்று பேசுவதால் சிலர் என்னை திட்டுகிறார்கள், சிலர் பாராட்டுகிறார்கள் என்கிறார் சன்னி லியோன்.

வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் : அனுஷ்கா எச்சரிக்கை!!

தமிழ், தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. பிரபாஸ் உடன் அவர் இணைந்து நடித்த பாகுபலி படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில், பாகுபலி படத்தில் நடிக்கும் போதே பிரபாசுக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டன.

இதுகுறித்து கடந்த வாரம் அனுஷ்கா தெரிவித்த போது, நானும் பிரபாசும் படத்தில் பொருத்தமான ஜோடி தான். ஆனால், உண்மையில் நாங்கள் நல்ல நண்பர்கள் என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, நல்ல நண்பர்கள் என்றாலும் காதலர்கள் என்று தான் அர்த்தம் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இதனால் கோபமடைந்த அனுஷ்கா தன்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பினால் அவர்களை சட்டத்தின் மூலமாக சந்திப்பேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக, இருவரும் காதலிப்பதாக வதந்தி பரப்பியமைக்காக அனுஷ்கா தனது உதவியாளர் ஒருவரை வேலையில் இருந்து நீக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா தற்போது பாக்மதி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். பாகுபலி-2 படத்தை அடுத்து பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்திலும் அவருக்கு அனுஷ்காவே ஜோடியாக ஒப்பந்தமாகியுள்ளார்.

பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி!!(வீடியோ)

அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிய போது தனது வீட்டின் சமையலறை குப்பையாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

திருடர்கள் வீட்டினுள் நுழைந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கக்கூடும் என பொலிஸில் முறைப்பாடு செய்தார்.

வீட்டிற்கு வந்து சோதனையிட்ட பொலிஸார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவை சோதனை செய்ததில், அந்த திருடன் கரடி என தெரியவந்துள்ளது.

வீட்டின் வெளி அறையில் ஜாலியாக உலாவிய கரடி, அங்கிருந்த பியானோவில் கையை வைத்து வாசித்துள்ளது. அதன் பின்னர் அங்கிருந்த சமையலறைக்கு சென்று, அவற்றையெல்லாம் சூறையாடியுள்ளது.

இவை அனைத்தும் சிசிடிவி கெமராவில் பதிவாகியிருந்துள்ளது.

சமையலறையில் உள்ள ஜன்னல் பெரியதாக இருந்ததால், அதன் வழியாக கரடி நுழைந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் இருந்து குதித்து தப்பியோடிய பயணிகளால் பதற்றம்!!

அவுஸ்திரேலியாவில்  உள்ள விமான நிலயத்தில் உயிர் பயத்தில் பயணிகள் விமானத்தில் இருந்து குதித்து தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலியா நாட்டின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள விமான நிலயத்தில் நேற்று சிறிய ரக விமானம் ஒன்று சுமார் 40 பயணிகளுடன் தரையிறங்கியது. அப்போது, அந்த விமானத்தின் கழிப்பறைக்கு சென்ற ஒரு பயணி, அங்கு கிடந்த ஒரு மர்ம கடிதத்தை படித்துப் பார்த்து பதற்றம் அடைந்தார்.

விமானம் ஓடுபாதையில் மெதுவாக ஊர்ந்து சென்று கொண்டிருந்த வேளையில் கழிப்பறையில் இருந்து வெளியே ஓடிவந்த அவர், விமானத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக, பெட்டி, படுக்கைகளை எல்லாம் விட்டுவிட்டு, உயிரை காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடுங்கள் என்று கூச்சலிட்டார்.

இதையடுத்து, நகரும் படிக்கட்டை பொருத்துவதற்கு வசதியாக திறந்திருந்த விமானத்தின் கதவு வழியாக பலர் கீழே குதித்து, பீதியால் அலறிவாறு தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர்.

உடனடியாக அந்த விமானத்தின் அருகே விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் துல்லியமாக சோதனையிட்டபோது, உள்ளே வெடிப்பொருள் ஏதும் கிடைக்கவில்லை. மேற்கண்ட மிரட்டல் கடிதத்தை எழுதியவர் என்ற சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

லிங்கத்தை தேடி நடுவீதியை தோண்டிய பிரதேச மக்கள்!!

தெலுங்கானா மாநிலத்தில், போலி சாமியார் ஒருவரின் பேச்சை கேட்டு, சிவலிங்கத்தை தேடி, தேசிய நெடுஞ்சாலையை தோண்டி நாசப்படுத்தி உள்ளனர்.

ஜான்கான் மாவட்டம் பெம்பார்தி கிராம் பகுதியில் ஐதராபாத்- வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் பூமிக்கு அடியில் சிவ லிங்கம் மண்ணிற்குள் புதைந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த சிவ பக்தர் லாகான் மனோஜ் (வயது 30) கூறிஉள்ளார்.

கனவில் கடவுள் சிவன் வந்து அப்பகுதியில் லிங்கம் புதைந்து கிடப்பதாகவும், அதனை எடுத்து கோவில் கட்டி வழிபடுமாறும் கூறியதாக லாகான் மனோஜ் கூறிஉள்ளார்.

இதனையடுத்து குறிப்பிட்ட அப்பகுதியில் ஐதராபாத்- வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் பூஜை செய்து தோண்டும் பணி நடைபெற்று உள்ளது.

கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகளும் அவருடைய பேச்சுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. இதனால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த பொலிசார், போலி சாமியார் மனோஜ், கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர்.

இன்று முதல் சீனியின் விலை அதிகரிப்பு!!

இறக்குமதி செய்யப்படுகின்ற சீனிக்கான விஷேட பண்ட வரி இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோகிராம் சீனிக்காக 10 ரூபா விஷேட பண்ட வரி அறவிடப்படும் என்று நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதான பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதம்!!

பிரதான பாதையிலான ரயில் போக்குவரத்து தாமதமடைந்துள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கனேமுல்லை ரயில் நிலையத்தில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறே இதற்குக் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வவுனியாவிலிருந்து தெற்கின் தெய்வேந்திர முனை நோக்கிய மனிதாபிமான ரயில் பயணம்!!

 
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட தென்பகுதிக்கு உதவும் நோக்குடன் மனிதாபிமான ரயில் பயணமொன்றை வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு ‘மக்கள் தொடர்பாடல்’ என்ற இந்த செயற்திட்டத்தை மொபிடெல் மற்றும் புகையிரத திணைக்களத்தின் அனுசரணையுடனும் ரூபவாகினி வலையமைப்பின் ஊடக அனுசரணையுடனும் செயற்படுத்தப்படவுள்ளது.

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மிக மோசமாக பாதிக்கபட்ட மாத்தறை பிட்டபத்தர டட்லி சேனாநாயக்க மகா வித்தியாலயத்தினை சுத்தப்படுத்தி பாடசாலை சமூகத்திற்கு மீள கையளிக்கவும் அம்மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் தேவையான அத்தியாவசிப் பொருட்கள் மற்றும் மருத்துவ, உளவள ஆலோசனைகளை வழங்குவதற்கும், இரத்தினபுரி, களுத்துறை, காலி, மாத்தறை மாவட்ட மக்களுக்கு வழங்க முடிந்தளவு உதவிகளை வழங்குவதற்குமாக இந்த மனிதாபிமான ரயில் பயணமானது எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு வடக்கின் காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

மக்களிடம் இருந்து பாடசாலை உபகரணங்கள் மற்றும் அப்பியாசக் கொப்பி, புத்தகங்கள், தலையணை, மெத்தை, நுளம்பு வலை, சவர்க்காரம், பற்பசை, சுத்தப்படுத்தும் உபகரணங்கள், கட்டில் விரிப்புக்கள், துவாய், பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான ஆடைகள், பாடசாலை சீருடைகள், புத்தகப் பைகள், சப்பாத்துக்கள், செருப்புக்கள் மற்றும் சமயலறை உபகரணங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

குறித்த மனிதாபிமான ரயில் பயணமானது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மதவாச்சி, அனுராதபுரம், மாஹோ, கணேவத்த, குருணாகல், பொல்காவல, அலவ்வ, அம்பேபுஸ்ஸ, மீரிகம, வெயங்கொட, கணேமுல்ல, கம்பஹா, ராகம, களனி, ஹுணுப்பிட்டிய, தெமட்டகொட, மருதானை, கொழும்பு கோட்டை, கல்கிசை, மொரட்டுவ, பாணந்துறை ஆகிய ரயில் நிலையங்களில் உதவிப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நிறுத்தப்படவுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை மனிதாபிமான ரயிலானது ரயில் நிலையத்திற்கு வரும்வரை மேற்குறிப்பிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களில் உங்கள் உதவிப் பொருட்களை கையளிக்க முடியும்.

இந்த புகையிரத்தில் மாத்தறைக்கு பயணித்து மனிதாபிமான உதவிகளை தொண்டரடிப்படையில் மேற்கொள்ள ஆர்வமுள்ளோர் 0771910630 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும், தங்குமிடம், உணவு மற்றும் மீள் திரும்புவதற்கான பயண வசதிகள் இலவசமாக ஏற்படுத்தி கொடுக்கப்படுமெனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப் பாடசாலையில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுஸ்டிப்பு!!

 
வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பாடசாலையில் உலக சுற்றுச் சூழல் தினம் நேற்று (06.06.2017) காலை 8.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் தி.யுவராஜா தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாக உயிரியல் பிரிவு தலைவர் அனந்தினி நந்தகுமார், சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சுற்றாடல் ஆலோசகர் இ.மாதவன், களக்கற்கை நிலைய முகாமையாளர் அ.ஜெய்கீசன், சுற்றாடல் உத்தியோகத்தர் விஜயகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலை மாணவர்களின் வரவேற்பு நடனம், விழிப்புணர்வு நாடகங்கள், பேச்சு, சுற்றாடல் உறுதி மொழி என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

மாகாணக் கல்விப் பணிப்பாளரினதும் கல்வி அமைச்சினதும் 15.05.2017ம் திகதி சுற்று நிருபத்தின் செயற்படுத்தப்படும் வகையில் அமைந்த வேலைத்திட்டமானது இப் பாடசாலையில் 2017ம் ஆண்டு தைமாதத்திலிருந்து வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது..

குறிப்பாக பயிற்சிப் புத்தகங்கள், புத்தகங்கள், அலுவலக ஆவணங்கள், ஆசிரியர் பதிவேடுகள், இடாப்புக்கள் என்பற்றிற்கும் துணியுடனான உறையிடல் முறை , திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளில் பிளாஸ்ரிக் பொருட்களின் மீள் பாவனை, வீட்டுத்தோட்டம், அழகுபடுத்தல் செயற்பாடுகள் போன்றவையும் இப் பாடசாலையில் வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மார்போடு அணைத்துக் கொன்றேன் : பெற்ற பிள்ளைகளை கொன்ற வழக்கில் தாய் வாக்குமூலம்!!

நாகர்கோவில் அருகே இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற தாயை பொலிசார் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் ஈத்தாமொழியை சேர்ந்த தம்பதி கண்ணன்- திவ்யா. இவர்களுக்கு ஏற்கனவே அனிஷ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 22ம் திகதி திவ்யாவுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. பிரசவத்துக்கு பின்னர் திவ்யா குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2ம் திகதி திடீரென இரண்டு குழந்தைகளும் இறந்து போயின, குழந்தைகளை கண்ணன் வீட்டு வளாகத்தில் புதைத்துள்ளனர். பால் அருந்தும் போது இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து புகார்கள் வந்ததால் வழக்கு பதிவு செய்த பொலிசார் குழந்தைகளின் சடலத்தை எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

அதில் குழந்தைகள் இருவரும் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால் இரட்டை குழந்தைகளை கொன்றதை திவ்யா ஒப்புக் கொண்டுள்ளார்.

பொலிசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், என்னுடைய கணவர் கண்ணனுடன் பிறந்தவர்கள் நான்கு அண்ணன் தம்பிகள். இவர்களில் மூன்று பேருக்கு திருமணமாகிவிட்டது, மூன்று பேருக்குமே பெண் குழந்தைகள் தான்.

எனவே எனக்கு ஆண் வாரிசு பிறக்கும் என எதிர்பார்த்தனர், ஆனால் பெண்ணாக பிறந்தது. இரண்டாவது பிரசவத்திலும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது, இதனால் கணவர் வீட்டிலிருந்து யாரும் பேசவில்லை.

என்னுடைய கணவர்கூட சரியாக பேசவில்லை, குழந்தைகளை கூட வந்து பார்க்கவில்லை. இதனால் எனக்கு பயம் வந்துவிட்டது, எனவே பாலூட்டும் போது மார்போடு அணைத்து குழந்தைகளை கொன்று விட்டேன்.

தாய்ப்பால் கொடுக்கும் போது புரைக்கேறி இறந்துவிட்டதாக தெரிவித்தேன், குடும்பத்தினரும் நம்பிவிட்டனர் என தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து திவ்யா கைது செய்யப்பட்டுள்ளார்.