ரவி கரு­ணா­நா­யக்­கவிடம் கேள்வி எழுப்பிய மோடி!!

இந்­தி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்த புதிய வெளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை புது­டில்­லியில் சந்­தித்து பேச்சு நடத்­திய இந்­தியபிர­தமர் நரேந்­திரமோடி இலங்­கையின் அர­சியல் நிலைமை மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்க விட­யங்கள் குறித்து கேட்­ட­றிந்­து­கொண்டார்.

அத்­துடன் இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடை­யி­லான உறவை அடுத்­த­கட்­டத்­துக்கு கொண்டு செல்தல், பொரு­ளா­தார வர்த்­தக தொடர்­பு­களை கட்­டி­யெ­ழுப்­புதல், முத­லீ­டு­க­ளுக்­கான வாய்ப்­புக்கள் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்தும் வெ ளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவும் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியும் விரி­வாக பேச்சு நடத்­தி­யுள்­ளனர்.

இத­னி­டையே கடந்த ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு நல்­லாட்சி அர­சாங்கம் உறு­தி­யுடன் இருப்­ப­தாக அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க இந்­திய பிர­த­ம­ரிடம் எடுத்­துக்­கூ­றி­யுள்ளார்.

வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக பொறுப்­பேற்ற ரவி கரு­ணா­நா­யக்க முத­லா­வது வெ ளிநாட்டு விஜ­ய­மாக நேற்று முன்­தினம் இந்­தி­யா­வுக்கு சென்­றி­ருந்தார். இதன்­போது நேற்று முன்­தினம் மாலை இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி இந்­திய வெ ளியு­றவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்­திய வெ ளியு­றவு செயலர் ஜெய்­சங்கர் மற்றும் இந்­திய நிதி­ய­மைச்சர் அருண் ஜெட்லி ஆகி­யோரை சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.

இந்­திய தலை­வர்­க­ளு­ட­னான இந்த சந்­திப்­புக்­க­ளின்­போது இலங்­கைக்கும் இந்­தி­யா­வுக்கும் இடையில் காணப்­ப­டு­கின்ற சமூக பொரு­ளா­தார அர­சியல் கலா­சார உறவு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் குறித்து கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது.

குறிப்­பாக இந்­திய அர­சாங்­கத்தின் உத­வி­யுடன் இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி திட்­டங்கள் மற்றும் இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான முத­லீட்டு செயற்­பா­டுகள் தொடர்­பா­கவும் இதன்­போது விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவ­ரா­ஜு­ட­னான சந்­திப்­பின்­போது இலங்கை இந்­திய மீனவர் விவ­கா­ரத்­துக்கு தீர்வு காண்­பது தொடர்­பா­கவும் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்பு தொடர்பில் புது­டில்­லி­யி­லி­ருந்து வெ ளிவி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க கேச­ரிக்கு தகவல் தரு­கையில்

இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி­யு­ட­னான சந்­திப்பு மிகவும் பய­னுள்­ள­தாக அமைந்­தது. வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நான் முத­லா­வ­தாக இந்­தி­யா­வுக்கு விஜயம் செய்­தமை தொடர்பில் தான் மகிழ்ச்­சி­ய­டை­வ­தாக இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி என்­னிடம் தெரி­வித்தார். அதே­போன்று என்னை இந்­தி­யா­வுக்கு அழைத்­த­மைக்­காக நான் அவ­ருக்கு நன்றி தெரி­வித்தேன்.

இந்த சந்­திப்­பின்­போது இலங்கை மற்றும் இந்­தி­யா­வுக்கு இடை­யி­லான பொரு­ளா­தார அர­சியல் சமூக கலா­சார உறவு தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­பட்­டது. இரண்டு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான உறவை அடுத்த கட்­டத்­துக்கு கொண்டு செல்­ல­வேண்டும் என்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

கடந்த இரண்டு வரு­டங்­களில் இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடை­யி­லான உறவு சிறந்த நெருக்க நிலையை அடைந்­துள்­ளது. அந்த நிலையை மேலும் மேம்­ப­டுத்­த­வேண்டும் என இதன்­போது பேசப்­பட்­டது. குறிப்­பாக இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யி­லான வர்த்­தக பொரு­ளா­தார உறவு தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது. இலங்­கை­யி­லான முத­லீ­டுகள் குறித்து பேச்சு நடத்­தப்­பட்­டது.

இதே­வேளை இலங்­கையின் அர­சியல் நிலைமை தொடர்­பா­கவும் இந்­திய பிர­தமர் மோடி என்­னிடம் கேட்­ட­றிந்­து­கொண்டார். இது சிறந்த சந்­திப்­பாக அமைந்­தது.

கேள்வி தமிழ் பேசும் மக்­க­ளுக்­கான அர­சியல் தீர்வு குறித்து பேசப்­பட்­டதா?

பதில் இலங்­கையில் அர­சியல் நிலை­மைகள் குறித்து இந்­திய பிர­தமர் கேட்­ட­றிந்­து­கொண்டார். அத்­துடன் அர­சியல் தீர்வு குறித்தும் அவர் கலந்துரையாடினார். குறிப்பாக உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் புதிய அரசியலமைப்பு தொடர்பாகவும் இந்திய பிரதமர் என்னிடம் விடயங்களை கேட்டறிந்துகொண்டார். அவரிடம் நான் ஒரு விடயத்தை தெ ளிவாக குறிப்பிட்டேன். அதாவது கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் உறுதியுடன் இருப்பதாக இந்திய பிரதமரிடம் நான் உறுதிபட தெரிவித்தேன் என்றார்.

மடி­க்க­­ணனியில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்கம் கடத்­தி­யவர் விமான நிலை­யத்தில் கைது!!

இலங்­கையில் இருந்து இந்­தி­யா­வுக்கு விமான மூலம் மடி­க­­ணனியில் 40 இலட் சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கத்தை கடத்திச் செல்ல முற்­பட்ட ஒரு­வர் பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில் வைத்து நேற்று அதி­காலை சுங்கப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­த­தாக விமா­ன­ நி­லைய பொலிஸார் தெரி­வித்­தனர்.

பண்­டா­ர­நா­யக்கா சர்­வ­தேச விமான நிலை­யத்தில் இருந்து நேற்று அதி­காலை இந்­தியாவின் மும்­பைக்கு செல்ல இருந்த விமா­னத்தில் பய­ணிக்க விமா­ன­ நி­லை­யத்­திற்கு வந்­த­டைந்­துள்ள மாவ­னெல்லைப் பிர­தே­சத்தைச் சேர்ந்த 40 வய­து­டைய குறித்த நபரின் மடிக் கண­னியை சுங்­கப்­பி­ரி­வினர் சோதனை செய்­த­போது அதில் மிக நுட்­ப­மான முறையில் 40 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்­கம் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­ததை கண்­டு­பி­டித்­தனர் .

இதனைத் தொடர்ந்து அவரை சுங்கப் பிரி­வினர் கைது செய்­த­துடன் விசா­ர­ணைகள் இடம் பெற்­று­வ­ரு­வ­துடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை!!

ஸ்ருதிஹாசன் சமீபத்தில் சங்கமித்ரா படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து சபாஷ்நாயுடு படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் இந்தியில் நடித்துள்ள பெஹன் ஹோகி தேரி படம் 9ம் திகதி வெளியாகிறது.

இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் அவரை விமர்சித்தனர்.
இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ருதிஹாசன்,

“என் உடம்பு, என் முகம், என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை. சமூக வலைத்தளங்களில் யார் என்னைப்பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை” என்று கூறியுள்ளார்.

ஸ்ருதிஹாசன் எடையை அதிகரித்துவிட்டதாக வலைத்தளங்களில் சிலர் கூறி உள்ளனர். இதற்கு பதில் கொடுத்துள்ள ஸ்ருதி, ‘பெஹன் ஹோகி தேரி’ படத்துக்காக எடை அதிகரித்தேன். ஒரு நடிகை எப்போதுமே ஒல்லியாக இருக்க முடியாது. நாங்களும் மனிதர்கள்தான். படத்துக்காக வெயிட்டை அதிகரிப்போம். குறைப்போம். சில நேரங்களில் அது இயற்கையாகவே நடக்கும்” என்று தெரிவித்து இருக்கிறார்.

என் திருமண முறிவுக்கு நான் தான் காரணம்!!

இந்தி நடிகை மனிஷா கொய்ராலாவுக்கும், நேபாள தொழில் அதிபர் சாம்ராட் தஹாலுக்கும் 2010ம் ஆண்டு காட்மாண்டுவில் திருமணம் நடந்தது. ஆனால் 2012ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இதுபற்றி கூறியுள்ள மனிஷா…

“திருமணம் பற்றி ஏதேதோ கனவு கண்டேன். ஆனால் எங்கள் உறவு மோசமான நிலையில் இருந்தது. எனவே, திருமண பந்தத்தில் இருந்து வெளியேறுவது நல்லது என்று கருதினேன். அதில் எந்த வருத்தமும் இல்லை. அவசரப்பட்டு திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு இது எனக்கு ஒத்து வராது என்பதை புரிந்து கொண் டேன். எனவே, பிரிந்தேன். இதில் யார் தவறும் இல்லை. இதற்கு நானே முழு பொறுப்பையும் ஏற்கிறேன். இது என் தப்புதான்.

என் வாழ்க்கை, என் வேலை நிம்மதியாக இருக்கிறது. இப்படியே வாழ்ந்து விட நினைக்கிறேன். இனி என் வாழ்வில் காதல் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. பிறகு பார்க்கலாம்.
நான் புற்று நோயுடன் போராடிய போது எனக்கு நெருக்கமானவர்கள் என்னை கண்டு கொள்ளவில்லை. நோயுடன் நான் போராடியதை பார்க்க விரும்பாததால் அவர்கள் வரவில்லை என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளுக்கான விமான சேவைகளில் சிக்கலில்லை!!

நான்கு நாடுகள் தவிர்த்து, ஏனைய நாடுகளுக்கான விமான சேவைகள் அனைத்தையும் கட்டார் எயார்வேஸ் நிறுவனம் வழமை போன்று எந்தத் தடையும் இன்றி மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மேலும், நான்கு நாடுகளுக்கான விமான சேவைகள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது.

தீவிரவாதிகளுக்கு உதவுவதாக குற்றம்சாட்டி, சவுதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட மத்திய கிழக்கின் நாடுகள் சில கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்தன.

மேலும், சில நாடுகள் கட்டாருடனான போக்குவரத்துக்களுக்கும் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் விரும்பினால் இலங்கை வரலாம்; வௌிவிவகாகர அமைச்சர் அழைப்பு!!

வௌிவிவகார அமைச்சராக பதவியேற்ற பின்னர் ரவி கருணாநாயக்க, தனது முதல் பயணமாக இந்தியா சென்றுள்ளார்.

அவரது இந்த விஜயத்தின் போது இந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கைக்கு வருவதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாணயாக தெரிவித்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஜினிகாந்த் விரும்பினால் இலங்கை வரலாம் எனவு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில் இலங்கை தமிழர்களுக்கு வீடுகளை வழங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வர இருந்த நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் ரஜினி இலங்கைக்கு செல்லக் கூடாது என்று வலியுறுத்தியதை அடுத்து, ரஜினி தனது இலங்கை பயணத்தை ரத்து செய்தார்.

மேலும் தான் ஒரு நடிகன். எனது முடிவுகளை, பயணங்களை அரசியலாக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாணயாக ரஜினி விரும்பினால் இலங்கை வரலாம் என அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ரஜினிகாந்த் பிரபலமானவரே என்று குறிப்பிட்டுள்ள ரவி கருணாணயாக, இலங்கையில் ரஜினிக்கு அதிகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றார்.

இலங்கை தரப்பில் அவருக்கு எதிராக எந்த எதிர்ப்பும் கிடையாது, ரஜினி ஆசைப்பட்டால் இலங்கை வரலாம் என்று அமைச்சர் ரவி கருணாணயாக தெரிவித்துள்ளதாக இந்திய ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கைகலப்பால் பதற்றம் : இருவர் வைத்தியசாலையில்!!

 
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (08.06.2017) காலை 10.15 மணியளவில் தனியார் மற்றும் இ.போ.ச ஊழியர்களுக்கிடையே ஏற்ப்பட்ட மோதலில் காயமடைந்த இருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

முதலாம்குருக்கு வீதியில் நின்ற தனியார் பேரூந்தின் ஊழியர் வவுனியா மத்திய பேரூந்து நிலையத்திற்குள் வந்து அங்கு பணியில் இருந்த இ.போ.ச நேரக்கணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் இ.போ.ச ஊழியரும், தனியார் பேரூந்தின் ஊழியரும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இலங்கையில் அறிமுகமாகும் நவீன கார்!!

மலேசியாவின் Perodua நிறுவனத்தினால் தயாரிக்கப்படுகின்ற “Bezza” சேடான் ரக கார்கள் நேற்று இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பிரதிநிதியான யுனைட்டட் மோட்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான யுனிமோ என்டர்பிரைஸஸ் லிமிட்டட் நிறுவனம் இந்த காரை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

இது Peroduaவின் முதலாவது சேடான் ரக வாகனமாகும். 2016 ஆம் ஆண்டின் சிறந்த மலேசிய மோட்டர் வாகனமாக இந்த கார் விருது பெற்றுள்ளது.

இந்த மோட்டார் வாகனம் 1000 CC VVT-i இயந்திர திறனை கொண்டுள்ள நிலையில், Dual Air Bag, ABS, EBD போன்ற பாதுகாப்பு விடயங்கள் இந்த வாகனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் வாகனம் 3690,000/= என்ற விசேட விலையில் இலங்கையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

116 பேருடன் மாயமானது மியான்மர் இராணுவ விமானம்!!

மியான்மரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் இராணுவ தளபதி இந்த செய்தியை உறுதிப்படுத்தி உள்ளார்.

116 பேருடன் சென்ற மியான்மர் இராணுவ விமானம் மாயமானதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மியான்மரின் மையிக் மற்றும் யாங்கூன் இடையே இந்த விமானம் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்ற போது விமானம் ராடார் சிக்னலில் இருந்து மறைந்தது. தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தில் இருந்து விமானிகளை தொடர்பு கொள்ள முடியாததால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாக இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் 1.35 மணிக்கு தாவே நகருக்கு மேற்கே 20 மைல்கள் தொலைவில் சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாகவும், விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் இராணுவ தலைமை தளபதி அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.

காணாமல் போன விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்ததாக விமானநிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் வறுமைக் கோட்டின் கீழுள்ள மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!!

 
வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட 5 மாணவர்களுக்கு இன்று (07.06.2017) பிற்பகல் லண்டன் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதிப்பங்களிப்பினூடாக தமிழ் விருட்சம் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் எஸ். சந்திரகுமார் கண்ணன் தலைமையில் பாடசாலை கற்றலை மேற்கொள்வதற்கு துவிச்சக்கரவண்டிகள் 5 வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய செயலாளர் செல்லப்பா இராமச்சந்திரன், திருமதி மஹாலட்சுமி இராமச்சந்திரன், மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.எஸ்.ஸ்ரீனிவாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் செயலாளர் மாணிக்கம் ஜெகன், மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டதுடன் நிகழ்வில் இறுதியில் ஸ்ரீ கனகதுர்க்கை ஆலய உறுப்பினர்களுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினால் கௌரவிப்பு வழங்கிவைக்கப்பட்டது.

வவுனியாவில் அடைக்கப்பட்ட குடிநீர் போத்தலினுள் பிளாஸ்டிக் துண்டுகள்!!

வவுனியாவில் குடிநீர் போத்தலினுள் பிளாஸ்டிக் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை தொடர்பில் வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

வவுனியா நகரில் விற்பனை நிலையமொன்றில் கொள்வனவு செய்யப்பட்டுள்ள குடிநீர் போத்தலினுள் இந்த பிளாஸ்டிக் துண்டுகள் இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதனை கொள்வனவு செய்த நுகர்வோர் குறித்த நிறுவனத்திற்கு இது தொடர்பில் தொலைபேசி ஊடாக அறிவித்த போது, தன்னை அந்த நிறுவனத்தின் பிரதானியொருவர் திட்டியதாக குறித்த நுகர்வோர் தெரிவித்துள்ளார்.

எனினும் சம்பவம் தொடர்பில் எழுத்து மூலம் முறைப்பாடு செய்யுமாறு வவுனியா பொது சுகாதார பரிசோதனை அலுவலகம், அந்த நபருக்கு அறிவித்துள்ளது.

இதனுடன் அந்த குடிநீர் போத்தலை விற்பனை செய்த வர்த்தக நிலையம் மற்றும் அந்த குடிநீர் போத்தலையும் முன்னிலைப்படுத்துமாறு அவருக்கு மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மரக்காலையில் திருட்டு : இருவர் கைது!!

 
வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியிலுள்ள மரக்காலை ஒன்றில் கடந்த திங்கட்கிழமை மாலை திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மரக்காலை ஒன்றில் வேலை செய்த இருவர் உரிமையாளர் வெளியில் சென்ற தருணம் பார்த்து பணம் வைக்கும் பெட்டகத்தினை உடைத்து 110 000 ரூபாவை திருடியுள்ளனர்.

உரிமையாளர் மீண்டும் வந்து பார்த்த போது பெட்டகம் உடைக்கப்பட்டிருந்தது. இவ் விடயம் தொடர்பாக செவ்வாய் கிழமை வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த மரக்காலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கருவியை (CCTV) பரிசீலித்த பொலிசார் அங்கு பணி புரியும் இருவரை சோதனை செய்த போது 99000 ரூபா பணம் வைத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

பின்னர் இருவரை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளைகளின் பின்னர் இன்றைய தினம் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

வைத்தியர்களின் தவறால் இரண்டு பிள்ளைகளின் தந்தை மரணம்!!

வைத்தியர்களின் கவன குறைவு காரணமாக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கையில் ஏற்பட்ட விரைப்பு தன்மைக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியர்களின் கவன குறைவு காரணமாக இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இரத்தினபுரி கொடிகமுவ பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான கே.ஆர் பாலித என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில காலமாக கையில் ஏற்பட்ட விரைப்பு தன்மைக்கு சிகிச்சை செய்வதற்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விரைப்பு தன்மையை இல்லாமல் செய்வதற்காக கழுத்து பகுதியில் சத்திரசிகிச்சை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியர்கள் அவருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

சத்திர கிச்சையின் பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சத்திரசிகிச்சையின் பின்னர் நரம்பில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அதிக இரத்த போக்கு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மாணவன்!!

 
மட்டக்களப்பு – கல்லடி பாலத்தில் இருந்து குதித்து மாணவன் ஒருவன் தற்கொலை முயற்சி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், பாலத்திலிருந்து குதித்த மாணவனை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

நாகமுனை, அம்பிளாந்துறை பகுதியை சேர்ந்த 18 வயதான புவனுசன் மாணவனே இவ்வாறு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர் உயர் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியுடன் வெற்றிபெற திமிருடன் விளையாடுங்கள் : இலங்கை அணிக்கு சங்கக்கார அறிவுரை!!

இந்தியாவுக்கு எதிரான சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் இலங்கை வீரர்கள் கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

கடந்த 3ம் திகதி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இலங்கை 96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் 8ம் திகதி ஓவல் மைதானத்தில் இந்தியாவை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டுமானால் இளம் இலங்கை வீரர்கள் கர்வத்துடனும், திமிருடனும் விளையாட வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ஆக்ரோஷமான முறையில் விளையாடினால் மட்டுமே வெற்றி பெற முடியும். இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் வெற்றி பெற்ற இந்தியாவை தோற்கடிப்பது சுலபமில்லை.

அஞ்சலோ மத்யூஸ் மீண்டும் அணிக்கு திரும்ப வேண்டும், தரங்காவுக்கு இரண்டு போட்டிகளுக்கான தடையும் அணிக்கு பெரும் விரயமாகும் என தெரிவித்துள்ளார்.

சூதாட்டத்தில் 5 மனைவிகளை அடமானம் வைத்த இளவரசர்: ஏலத்தில் விடப்படும் அபாயம்?

சூதாட்டத்தில் தோற்ற சவுதி இளவசர் தனது மனைவிகளை பணத்திற்கு பதிலாக அடமானம் வைத்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் இளவரசர் மஜீட் பின் அப்துல்லா சூதாட்ட மோகத்திற்கு ஆளாகி உலகம் முழுவதும் புகழ் பெற்றவர். அண்மையில் எகிப்து சென்ற அவர் அங்குள்ள சினாய் கிராண்ட் கேசினோ சூதாட்ட விடுதியில் ஆறு மணி நேரம் சூதாட்டம் ஆடி தோற்றுள்ளார்.

அதுவும் மில்லியன் கணக்கில் பணத்தை பந்தையம் கட்டி விளையாடியுள்ளார். இதனால், பந்தய பணமான 350 பில்லியன் டொலர் பணத்தை கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவரிடம் போதிய பணம் இல்லாததால், 25 மில்லியன் டொலர் தொகை கடன் வந்துள்ளது.

அதைக் கொடுக்க முடியாத நிலையில், தனது 5 மனைவிகளை அந்த விடுதியிலேயே அடமானம் வைத்துவிட்டு சவுதிக்கு தனியே வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது அவரது மனைவிமாரின் நிலை கேள்விக்குறி ஆகிவிட்டது. சவுதி அரச குடும்பத்தினர் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கிறதா என்பதும் தெரியவில்லை.

பணம் கொடுக்காத பட்சத்தில் அவர்களை விரைவில் ஏலத்தில் விற்றுவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.