உலகம் முழுவதும் ஏறக்குறைய 200 கோடி பயனாளர்களை கொண்டிருக்கும் சமூக வலைதளமாக, முகநூல் திகழ்கிறது.
தகவல் பரிமாற்றங்கள், சொந்தக் கருத்துகளைக் கட்டுப்பாடு ஏதுமின்றி வெளிப்படுத்துதல் போன்ற காரணங்களால், நாளுக்குநாள் முகநூல் பயனாளிகள் அதிகரித்து வருகின்றனர்.
மாறிவரும் காலநிலைக்கு ஏற்றபடி தரவுகளை முகநூல் வழங்கி வருகிறது.
சாமி கும்பிடுவது, ஆற்றில் நீந்துவது, ஹோட்டலில் சாப்பிடுவது என்று அவரவர் மகிழ்ச்சியை செல்போனில் படம்பிடிப்பது இயல்புதான். ஆனால், அதையே லைவ்-வீடியோவாக உலகம் முழுவதும் பார்க்கும் வகையில் பதிவேற்றம் செய்யவும் வழிகொடுத்திருப்பது முகநூல்தான்.
நல்ல விடயத்தில் கெட்டதும் கலப்பதுபோல லைவ்-வீடியோ பதிவில் கொலை, தற்கொலை போன்றவற்றையும் பதிவேற்றம் செய்கிற போக்கும் அதிகரித்துவருவது முகநூலின் மதிப்பைக் குறைப்பதுபோல ஆகிவிட்டது.
இதுகுறித்த புகார்கள் முகநூலின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க் கவனத்துக்குச் சென்றுள்ளது.
வருங்காலங்களில், இப்படிப்பட்ட பதிவேற்றங்களை முழுமையாகக் கட்டுப்படுத்தவும், தேவைப்பட்டால் அவைகளை முகநூலில் இருந்து நீக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்தப் பணியை மேற்கொள்ள மட்டுமே 3000 பணியாளர்கள், திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட உள்ளனர் என்று மார்க் சக்கர்பெர்க் அறிவித்துள்ளார்.
முகநூலில் இனி நல்ல முகங்களை, நல்ல தகவல்களை மட்டுமே பதியலாம் பார்க்கலாம் என்பது நல்ல விடயம்தான்.
வவுனியா பொலிசார் பக்கச்சார்பாக செயற்படுவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தும் தமக்கு பாதுக்காப்பு கோரி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் தாயும், மகனும் அடைக்கலம் புகுந்த சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட தாயார் தெரிவிக்கையில்..
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வசிக்கும் ஒருவர் அந்தப் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி வைப்பது வழக்கம். இதனால் அந்த ஒழுங்கையில் வேறு வாகனங்கள் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அவ் ஒழுங்கையில் வசித்த பலரும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.
இதனையடுத்து அவ் ஒழுங்கையில் வசிக்கும் பலர் கடிதம் ஒன்றினை எழுதி வவுனியா நகரசபை, பிரதேச செயலாளர், போக்குவரத்துப் பொலிசார் ஆகியோருக்கு வழங்கியிருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த குறித்த வாகன உரிமையாளரும் அவரது குழுவினரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த பகுதியில் உள்ள எமது வீட்டில் புகுந்து அங்கு நின்ற எனது மகன் மீது தாக்குதல் நடத்தியியுள்ளதுடன், தடுக்க சென்ற என்மீதும் தாக்குதல் நடாத்தினர். இதன்போது வீட்டில் நின்ற மோட்டர் சைக்கிளும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், மகன் அணிந்திருந்த சங்கிலியும் அறுக்கப்பட்டுள்ளது.
காமடைந்த மகன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், உடனடியாகவே நான் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்தேன். ஆனால் பொலிசார் குறித்த பகுதிக்கு வரவில்லை.
இதனையடுத்து பொலிசாரின் 119 அவசர தொலைபேசி இலக்கத்திற்கும் முறைப்பாடு செய்தோம். பின்னர் இரவு 8 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். தாக்குதலாளிகளினது புகைப்படங்களை வழங்கியபோதும் பொலிசார் அவர்களை நேற்று மாலை வரை கைது செய்யவில்லை.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகனை வீட்டிற்குச் செல்லுமாறும் வலியுறுத்தியுள்ளனர். நேற்று மாலை வைத்தியசாலையில் இருந்து தாக்குதலுக்குள்ளான மகனை வீட்டிற்கு செல்லுமாறு கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யாமையால் தாம் வீட்டிற்கு செல்ல முடியாது அங்கு செல்ல அச்சமாக இருப்பதாக மகனும் நானும் வைத்தியசாலை பொலிசாருக்கு தெரியப்படுத்தினோம். ஊடகவியலாளரக்கும் குறித்த விடயம் தொடர்பில் தெரியப்படுத்தினோம்.
வைத்தியசாலைக்கு வந்த ஊடகவியலாளர்கள் எங்களது பிரச்சனைகள் தொடர்பில் கேட்டறிந்து குறித்த விடயம் தொடர்பில் வவுனியா பொலிசார் மற்றும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலக அவசர தொலைபேசி இலக்கம் என்பவற்றுக்கும் தெரியப்படுத்தியிருந்தனர்.
ஆனால் அவர்கள் இது குறித்து கவனம் செலுத்தவில்லை. இதனால் நானும், எனது மகனும் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இரவு 9 மணியளவில் சென்று பொலிசாரின் அசமந்த செயற்பாடு மற்றும் எமது அச்ச நிலை தொடர்பாகவும் அங்கு கடமையில் நின்ற அதிகாரியிடம் முறையிட்டோம் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வவுனியா பொலிசார் வரவழைக்கப்பட்டு அவர்களது முறைப்பாடு தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் குறித்த இளைஞனையையும், தாயாரையும் பொலிசாரின் வாகனத்தில் ஏற்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், இரவு அவர்களது வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. தாக்குதல் சம்பவம் தொடர்பான சந்தேகநபர்களை பொலிசார் தற்போது தேடி வருகின்றனர்.
இலங்கையில் பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அனைவரும் கைகோர்ப்போம் என்று மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் கனமழை பெய்து வருகிறது. இயற்கை சீற்றத்தால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை மீட்பு படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கின்றனர்.
லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர், ஏராளமானோர் காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சார்பில் உதவி கோரி பல்வேறு நாடுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா கடற்கரையில் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.
அதில் இலங்கைக்கு உதவ அனைவரும் கைகோர்ப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். நீண்ட கைகளை உருவாக்கி, அதில் கண்ணீர் வடிக்கும் கண்களுடன் கோரிக்கை வாசகத்தை பதிவிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கு வாழ் மலையக மக்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கி வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் ஒன்றியம் நேற்று வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
அத்தோடு வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் சவால்கள் குறித்து ஆராயும் மாநாடும் இடம்பெற்றது.
வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்கள மண்டபத்தில் இன்று காலை ஒன்பது மணிக்கு இடம்பெற்ற மாநாட்டினை தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பும் இடம்பெற்றது.
இதன்போது, பத்திரிகையாளர்களுக்கு கருத்து தெரிவித்த வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் இணைப்பாளர்களில் ஒருவரான வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் என்.பி. நடராஜா,
இந்த அமைப்பு ஒரு அரசியல் கட்சி அல்ல, ஆனால் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்களின் நலன்சார்ந்து அரசியல் ரீதியாக தீர்மானங்களை மேற்கொள்கின்ற அமைப்பாக செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு, வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மலையக மக்களின் நலன்களையும் , அவர்களின் உரிமைகளையும் பேணுகின்ற அதேவேளை, அவர்களின் மீது காட்டப்படுகின்ற பாரபட்சங்கள், ஓரங்கட்டுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் ஒரு அமைப்பாகவே செயற்பாடுகளை முன்னெடுக்கும்,
தமிழ்த்தேசியத்தோடு பயணிக்கின்ற எமது அமைப்பு தமிழ் மக்கள் பிரதேச, வேறுபாடுகளை கடந்து தமிழ் பேசுகின்ற மக்கள் எனும் அடிப்படையில் ஒற்றுமையாக செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்துவதோடு, அரசியலிலும் வடக்கு கிழக்கு மலையக மக்கள் சார்ந்து தீர்மானங்களை மேற்கொள்கின்ற அமைப்பாக செயற்படும் எனவும் தெரிவித்தார்.
இந்த மாநாட்டில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த மலையக மக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தெற்கு இலங்கையில் பெருவெள்ளம் ஏற்பட்டு பெரும் அழிவுக்குட்பட்ட இலங்கை மக்களுகக்கான அத்தியாசியமான உணவுப் பொருட்கள் நாளை முதல் வவுனியா வர்த்தக சங்கத்தினால் சேகரிக்கப்படவுள்ளதாக வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
தென்னிலைங்கையில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக பலர் தமது வாழ்விடங்களை இழந்து அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்களின் அத்தியாவசியத் தேவைக்கான உணவுப் பொருட்களை வவுனியா வர்தகர்களிடமிருந்து பெற்று புதன்கிழமை வவுனியா மாவட்ட செயலாளரூடாக அனுப்பிவைக்கப்படவுள்ளது.
எனவே அனைத்து வர்த்தகர்களும் தமது ஆதரவினை வழங்கி தென்னிலங்கை மக்களின் வாழ்வாதராத்தினை மேம்படுத்த ஒன்றிணையுமாறு மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 109 பேர் வரையின் காயமடைந்துள்ளதாகவும், 109 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்த நிலையை அடுத்து 151,392 குடும்பங்களை சேர்ந்த 557,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 484 வீடுகள் முழுமையாகவும், 5227 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக எட்டு மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்கள் அனர்த்தம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா பூந்தோட்டம் நகசிங்கர் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (28.05) இரவு ஆலயத்திற்குள் சென்ற திருடர்கள் அங்கிருந்த மூன்று உண்டியல்களை எடுத்து வெளியே கொண்டு சென்று அதிலிருந்த பெருமளவான பணத்தினை திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் ஆலயத்திற்கு பாதுகாப்பு கடமையிலிருந்த ஊழியரையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆலயத்தில் பல தடவைகள் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்ட இயற்கையின் சீற்றம் காரணமாக பலர் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் அடித்துச் செல்லப்பட்ட கடும் வெள்ளத்தில் போராடி, எட்டு உயிர்களை காப்பாற்றிய இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பெலியத்த தம்முல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 8 பேரின் உயிரை இளைஞர் தனி நபராக காப்பாற்றியுள்ளார். கட்டுக்கடங்காத வெள்ளம் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
எட்டுப் பேரின் உயிரை காப்பாற்றிய போதும், அதே வெள்ளத்தில் அவர் உயிர் பிரிந்தமை அந்த பகுதி மக்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பதற்கு முன்னர் 8 உயிர்களை காப்பாற்றிய அவரே உண்மையான வீரர் என பலரால் பாராட்டப்பட்டு வருகிறார்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 151 பேர் உயிரிழந்ததுடன் 112 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இரவு நெடு நேரம் தூக்கத்தை தவிர்ப்பதால் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு உடல் உபாதைகள் தோன்றக் கூடும் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ஒரு மனிதன் 6 முதல் 8 மணி நேரம் தூங்கினால் போதும். அதாவது, இரவு 2 மணிக்கு படுத்து காலை 9 மணிக்கு எழுந்தால் தூங்கும் நேரத்தை சமன் செய்து விடலாம் என தவறான கருத்து ஒன்று சமூகத்தில் நிலவுகிறது.
நமது உடலமைப்பின்படி, இரவு 11 மணிக்கு முன்னதாக நிச்சயம் தூங்கிவிட வேண்டும். ஏனெனில், சூரியன் உதிக்கும்போது உள்ள வெப்பத்தில், நமது உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும்.
அதேபோல் இரவு நேரத்தில் சில ஹார்மோன்கள் நமது உடலில் சுரக்கும். இது மனிதன் வளர்ச்சி அடைந்த சுமார் 40 லட்சம் ஆண்டுகளாக நமது உடலில் நடைபெற்று வரும் இயற்கையான சுழற்சி ஆகும்.
முக்கியமாக, மெலோட்டலின் என்கிற ஹார்மோன் இரவில் தூங்கும்போது மட்டும், அதுவும் அறையில் வெளிச்சம் இல்லாமல் தூங்கும்போது மட்டுமே சுரக்கும்.
இந்த மெலோட்டலின் ஹார்மோனை, செயற்கையாக எந்த மாத்திரை சாப்பிட்டும் சுரக்க வைக்க முடியாது. தற்போது இரவு நேரத்தில் பணிபுரிபவர்கள், இரவில் நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பார்ப்பவர்கள், தூங்காமல் தொலைக்காட்சி அல்லது புத்தகம் படிப்பவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரக்க வாய்ப்புகள் மிக மிக குறைவு.
இந்த மெலோட்டலின் ஹார்மோன் சுரக்காமல் இருப்பதால் உண்டாகும் பாதிப்பு இளம்வயதினருக்கு உடனடியாக தெரிந்து விடாது. ஆனால், உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு 27 முதல் 30 வயதிற்குள் தான் உடல் உபாதைகள் தொடங்கும்.
முதலில் செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை என தொடங்கி 35 வயதிற்கு பிறகு இது முற்றிய நிலையில் 40 வயதிற்கு மேல் புற்றுநோயாக மாற வாய்ப்புள்ளது. எனவே இரவு தூக்கம் மிக மிக முக்கியமானதாகும்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் முதல் தர போட்டியில் Essex அணிக்கு எதிராக 200 ஓட்டங்கள் குவித்த Surrey அணியின் வீரர் சங்கக்கார தொடர்ச்சியாக 5 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் Surrey அணியும், Essex அணியும் மோதின.
Surrey அணி சார்பாக விளையாடிய இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்கக்கார அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார்.
இதன் மூலம் தொடர்ச்சியாக கவுண்டி கிரிக்கெட்டில் 5 சதங்கள் அடித்த 8வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் Surrey அணி சார்பில் இந்த சாதனையை செய்த முதல் வீரர் சங்கக்கார தான்.
இதற்கு முன்னர் நடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளில் முறையே 136, 105, 114 மற்றும் 116* என்ற ஓட்டங்களை அவர் குவித்துள்ளார்.
39 வயதான சங்கக்கார விரைவில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், உள்ளூர் முதல் தர போட்டியிலிருந்து வரும் செப்டம்பர் மாதம் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகளவில் கிரிக்கெட் விளையாட்டுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் வீரர்களில் பலர் கோடிக்கணக்கான ரூபாயை வருமானமாக ஈட்டுகிறார்கள்.
அப்படி, உலக அளவில் 2017 கணக்கின் படி வருடத்துக்கு அதிக வருமானம் ஈட்டும் டாப் 10 கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்
M.S.dhoni – $28.7 மில்லியன்
Virat Kohli – $24.9 மில்லியன்
Chris Gayle – $7.5 மில்லியன்
Virender Sehwag – $25.8 மில்லியன்
Shane Watson – $5.5 மில்லியன்
Shahid Afridi – $5.3 மில்லியன்
Gautam Gambhir – $5 மில்லியன்
Yuvraj Singh – $3.8 மில்லியன்
AB De Villiers – $3.5 மில்லியன்
Michael Clarke – $2.9 மில்லியன்
ஜப்பான் கடற்பகுதி நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஒன்றை வடகொரியா சோதனை செய்துள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.
குறித்த ஏவுகணை சோதனையானது வட கொரியாவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வொன்ஸான் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து தென் கொரிய ஜனாதிபதி Moon Jae-in உடனடியாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கையை ஆராயவும் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜப்பான் கடற்பகுதியில் விழுவதற்கு முன்னர் குறித்த ஏவுகணையானது 450 கி.மீ தூரம் கடந்திருக்கலாம் என தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது
மட்டுமின்றி ஜப்பான் அரசும் குறித்த சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் இச்செயல் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களுக்கு எதிரானதாகும் என ஜப்பான் அமைச்சரவை செயலர் Yoshihide Suga காட்டமாக பதிலளித்துள்ளார்.
வடகொரியாவின் தொடர் அத்துமீறல்களை ஜப்பான் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது எனவும், இது கண்டனத்துக்குரிய செயல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் இச்செயலால் கொரியா தீபகற்பத்தில் மீண்டும் பதற்றமான சூழல் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் துணை ஷெரீப் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள லிங்கன் கவுண்டி பகுதியில் உள்ள மூன்று வீடுகளில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மாவட்ட முதன்மை அதிகாரியான துணை ஷெரீப் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக மிசிசிப்பி புலனாய்வு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன் விரோதம் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் 35 வயதுள்ள ஒருவரை கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலுக்கு உண்டான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்காக அப்பகுதி மக்கள் பிராத்தனை மேற்கொண்டனர்.
தமிழ்நாட்டில் புதுப்பெண் கண்முன்னே அவரது கணவர் ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டின் கோவில்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 26), ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், ஆனந்தி என்ற பெண்ணுக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஆனந்தி தன் கணவர் செந்தில்குமார் மற்றும் நாத்தனார் ராதாவுடன் அப்பா வீட்டுக்கு வந்துள்ளார்.
நேற்றைய தினம் மூவரும் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழப்பகுதிக்கு சென்ற ராதா மற்றும் செந்தில்குமாரால் மீண்டு வரமுடியவில்லை.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் வந்து மீட்டு இருவரையும் தென்திருப்பேரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கே முதலுதவி அளித்த போதிலும் சிகிச்சை பலனளிக்காமல் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்ச நாட்களுக்கு பிறகு உட்காரத்தொடங்கி, பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும்.
ஆனால் டெல்லியில் பிறந்த குழந்தை ஒன்று பிறந்து சில மணிநேரங்களிலேயே செவிலியரின் உதவியுடன் நடக்கப்பழகியுள்ளது.
செவிலியர் ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை நடக்க பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகின்றது.